இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும் (Post.15,882)

Written by London Swaminathan

Post No. 15,882

Date uploaded in London –17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும்!

வாத்ஸ்யாயன மஹரிஷி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய புஸ்தகம்தான் உலகில் எழுந்த முதலாவது Sex செக்ஸ் புஸ்தகம்; காமம்  என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக சேர்த்தது இந்துக்கள் மட்டுமே; ஏனையோர் இது ஆகாததுகூடாதது என்று கருதிய காலையில் தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பதை — அறம், பொருள், இன்பம், வீடு என்பதை – வாழ்க்கையில் நான்கு லட்சியங்களாக இந்துக்கள் சேர்த்தனர் ; சங்க காலத் தமிழர்கள் பக்கா இந்துக்கள் என்பதால் புறநானூற்றிலும்,  தொல்காப்பியத்திலும் , திருக்குறளிலும் செப்பி இந்துத்துவாவை உறுதிப்படுத்தினர்  ; வள்ளுவன் அதி பயங்கர இந்து என்பதால் நூலுக்கே முப்பால் – அறம்- பொருள்- இன்பம் என்று பெயரிட்டான் ; ஆரம்ப காலத்தில்  வெள்ளைக்கார்கள் காமத்துப் பாலைத் தொட அஞ்சினர்; பின்னர் ரெவரெண்ட் ஜி யு போப், துணிந்து காமத்தையும் இயம்பினார் .சம்ஸ்க்ருதத்தில் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காமசூத்திரம் ஆழமான செக்ஸ் / பாலியல் தகவல்களை பகர்ந்தாலும் கணவன் இல்லாதபோது பெண்கள் எப்படி டிரஸ் Dress செய்ய வேண்டும், எதை அணிய வேண்டும், எங்கு தூங்க வேண்டும் என்று கூட எழுதிவைத்தார் .

முதலில் அவர் சொல்லும் ஆபரண அணிகலன்களைக் காண்போம் :

ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதை தமிழர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் ; இதை முதலில் உலகிற்குச் செப்பியவர் வாத்ஸ்யாயன மகரிஷி ; அவர் சம்ஸ்க்ருதத்தில் 64 கலைகளையும் பட்டியலிட்டு இவைகளை பெண்களை கற்க வேண்டும் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே !

அதுதான் உலகில் பெண்களுக்கான முதல் Syllabus சிலபஸ் – பாட திட்டம்- இந்துக்கள் அந்த அளவுக்கு அபார முன்னேற்றம் அடைந்திருந்தார்கள் என்பதை வேதமும் காளிதாசனின் ஏழு நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன ; சங்கத் தமிழ் இலக்கியத்தில் வந்த ஆபரணங்களை முன்னரே கண்டோம்; அவைகளில் பல நகைகளின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் அப்படியே உள்ளதையும் முந்தைய கட்டுரையில் கண்டோம்; மாலை செய்தல், உடை அணிதல்,  கிரீடங்கள் -தலைப் பாகைகள் செய்தல் முதலியவற்றையும் அவர் சேர்த்துள்ளார் ;

வாத்ஸ்யாயனர் சொல்லும் 64 கலைகளில் கீழ்கண்ட நான்கும் அடக்கம்:

1

கிரீடங்களும் தலை அணிகளும்

தலையில் வட்டமாக மலர் அணிதல் நாகரீக — அதாவது நகர் வாழ் – மக்களின் பண்பு; அவை பல வண்ணத்தில் இருக்க வேண்டும்  ( சங்க காலத் தமிழர்களும் இவ்வாறு தலையிலும் காதிலும் பூச்சூடியதை சங்கப்புலவர்களும் பாடி வைத்துள்ளனர் ; இப்போது யாராவது அதைச் செய்தால் பட்டிக்காட்டான் என்பார்கள் !

2

ஆடைகளை அணிதல்

இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப ஆடைகளை அணிய வேண்டும்; (இதற்கான விவரங்களையும் அவர் ஸ்லோகம் ஸ்லோகமாக எழுதியுள்ளார்)

3

தந்தம் மற்றும் முத்துக்களாலால் ஆன ஆபரணங்கள்

4

வாசனைப் பூச்சுகள் Perfumes

கஸ்தூரி, புனுகு, சந்தனம், பூக்கள் முதலியவற்றைக்கொண்டு வாசனைப் பூச்சு Perfume செய்வதையும் அவர் புகல்கிறார் 

5

நகைகள் , அணிகலன்கள்

இவைகளை இரண்டு வகை என்று சொல்லி 1.கழுத்தில் அணிபவை 2.  இடுப்பில் அணிபவை என்று வகைப்படுத்துகிறார்.

மாலை நேரத்தில் நடனமாதர்களும் பாடகர்களும் வாத்தியக் கலைஞர்களும் உள்ள அறையில் ஒரு நாகரீக மனிதன் நுழையும்போது படாடோபமாக உடை அணிய வேண்டும்;படாடோபம் என்பதில் நகைகளும் ஆடைகளும் அடக்கம் ; பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு வகையான ஆடைகளைக் குறிப்பிடுகிறார்.

தாவரங்களினால் ஆன ஆடை – சணல், இலை,தழைகள் மற்றும் மரவுரி ஆடைகள்,

பருத்தி ஆடைகள் ,

பட்டு ஆடைகள்,

கம்பளி ஆடைகள் .

இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப ஆடைகளை அணிந்து நகைகளைப் பூண வேண்டும் .

***

நகைகள்

13 வகைப்படும் இரத்தின ஆபரணங்கள், ஒன்பது வகை தங்க ஆபரணங்கள் என்று வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதையில் பட்டியலிட்டுள்ளார் ; ரிக் வேதம் முதல் தங்க நகைகளைக் காண முடிகிறது.

வராஹமிஹிரர் கொடுத்த பட்டியல்

வைர / வஜ்ர,

முத்து /முக்த,

மாணிக்கம் /பத்மராக,

மரகத / மரகத/பச்சைக் கல் ,

நீலம் / இந்திர நீலம் ,

லபிஸ் லசூலி / வைடூர்ய,

புஷ்பராக / புஷ்பராக,

கருப்பு மணி ,

சாணைக்கல்?

ஓர்க்கோலை/புலக,

கார்னெட் /கருமாணிக்கல்,

அமெதிஸ்ட்/ பீஸ்ம

கிரிஸ்டல்/ ஸ்படிக,

ஓபல் / ப்ரவாள.

(இவைகளை மோதிரத்தில், பதக்கத்தில், இரத்தின மாலைகளில் பதிக்கலாம்).

***

நகைகள் நான்கு வகைப்படும் என்கிறது காம சூத்திர நூல்:

அவேத்ய – மூக்கு, காதுகளில் துளையிட்டு அணியும் ஆபரணங்கள்.

நிபந்தனிய– தோள்களில் பொருத்தப்படும் அணிகலன்கள் ;வேணி- தலையில் அணியும் பட்டை சூடாமணி.

பிரக்ஷேப்ய -விரல்களில் சொருகும் மோதிரம், விரல்நுனிகளில் சொருகும் அலங்காரம், காலில் அணியும் ஆபரண வகைகள் (சதங்கை, சிலம்பு , கொலுசு, கிண்கிணி ).

ஆரோப்ய – கழுத்தில்  அணியும் நகை வகைகள் , குறிப்பாக பல்வேறு வரிசை முத்து வடங்கள்; நக்ஷ்த்ரமாலிகா என்னும் 27 முத்துள்ள மாலை.

இதற்குப் பின்னர் Perfume பெர்ப்யும் என்னும் வாசனைப்பூச்சுகள் , களிம்புகள் , பூமாலை வகைகள் முதலியவற்றை விரிவாக விளம்புகிறார் .

***

பெண்களுக்கு புத்திமதிகள்

அடுத்ததாக குடும்பப் பெண்களுக்கு வேறு ஒரு அத்தியாயத்தில் புத்திமதிகள்  சொல்கிறார் :

உல்லாச/ சல்லாப இரவுகளில் பலவித பூக்களையும் நகைகளையும் ஆடம்பர உடைகளையும் அணிந்து தயாராக வேண்டும் .

வெளியே கேளிக்கைகளுக்குச் செல்கையில் (திருமணம், பார்ட்டிகள், நண்பர் வீடுகள்) தலையில் வெள்ளைப்பூ (மல்லிகை, முல்லை, பிச்சி, ஸம்பங்கி) சூடி, கொஞ்சம் நகைகளை அணிய வேண்டும்; படாடோப  உடைகள் அணியலாம். போகும் இடத்துக்கு ஏற்ற வாசனைப் பூச்சு பூசலாம் ; தனிமைப்படுத்திக் காட்டும் பள பள ஆடைகள் வேண்டாம்;

கணவர் பூஜை புனஸ்காரம் நோன்பு, விரதம் இருக்கும் நாட்களில் எளிமையான  ஆடைகளை அணிய வேண்டும் ” நாம் ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட்டவர்கள்நான் சுதந்தரப் பறவை அல்ல ” என்று அவரிடம் வாய் திறந்து சொல்ல வேண்டும் ; கணவர் செய்வதை பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும் .

கணவர் வெளிநாட்டுக்குச் சென்றால் ( அந்தக் காலத்தில் சேர சோழ, பாண்டிய நாட்டுக்கு வெளியே பயணம் செய்வதே அயல் நாடு) அவள் மங்கள சின்னங்களை அகற்றி நகைகளையும் அகற்றி நோன்பு இருக்கலாம்; கணவர் சொன்னபடி வீட்டைப் பராமரிக்க வேண்டும் ; கடவுள் வழிப்பாட்டில் ஈடுபடுவதோடு கணவன் கற்பித்த பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும் .

மாமனார் மாமியார் படுக்கை அறைகளுக்கு அருகில் உறங்க வேண்டும்

இவ்வாறு வாத்ஸ்யாயனர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார் ; அவர் புது மண தம்பதிகள் படிக்கக்கூடிய Adults Only  அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களை விளக்கி இருப்பது உண்மைதான்; ஆனால்  காம சூத்திரம் முழுதும் அப்பட்டமான செக்ஸ் என்று ஒதுக்கி விடாமல் அனைவரும் படிக்க வேண்டும் .

இந்துக்கள் அபாரமான நாகரீக முன்னேற்றம் அடைந்ததால் எந்த சப்ஜெக்டிலும் முதல் புஸ்தகம் இந்துக்கள் எழுதியதாகவே இருக்கும் !

To be continued……………………….

Tags- காமசூத்திரம், இந்துக்களின் பழங்கால நகைகள்- 5,  நகைகள்,  பெண்கள்,புத்திமதிகள்

Leave a comment

Leave a comment