முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 1 (Post.15,899)

Written by London Swaminathan

Post No. 15,889

Date uploaded in London –19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(English version  posted separately)

1

இந்த பிரபஞ்சத்தில் அசையும் மற்றும் அசையாத ஒவ்வொரு பொருளிலும் இறைவன் (ஈசன்) நீக்கமற நிறைந்துள்ளார்”

ईशा वास्यमिथम् सर्वम् यथकिन्च्च जकथ्याम् जगथ् !

तेन त्यक्तेन भुन्चिच्था मा ग्रुध कस्य स्विद् ध्नम्  !!

ஈஸா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச  ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதா  மா க்ருத:  கஸ்ய ஸ்வித்தனம்

ஈசாவாஸ்யோபநிஷதம்  

  ஜகத்தில் மாறி மாறி அமைகின்ற  யாவும் ஈசனால் வியாபிக்கப்பெற வேண்டும் . இத்தகைய தியாகத்தின் மூலம் உன்னை போஷித்துக்கொள் ; யாருடைய செல்வதடையும் அபகரிக்காதே .– சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு.

OM

 Ishaa Vaasyam Idam Sarvam

Yat Kincha Jagatyaam Jagat Tena

Tyaktena Bhunjeethaa

Maa Grudhah Kasya-svit Dhanam.

****

2

தஹ்ரம் விபாபம் பரமேஸ்ப பூதம்

யத் புண்டரீகம் புர மத்ய ஸம்ஸ்தம்

தத்ராபி தஹ்ரே  தகனம் விசோகம்

தஸ்மின் யதந்தஸ்  ததுபா ஸி தவ்யம் 

மஹா நாராயணோபநிஷதம் 12-16

பரம்பொருளுக்கு உறைவிடமாக உடலின் மத்தியில்  சிறிய தூய ஹிருதய கமலம் இருக்கிறது. இந்த தஹராலயத்தில்  சோகமில்லாத –  துயரற்ற — வெட்டவெளி  உள்ளது ; அது உபாசிப்பதற்குரியது – வழிபட வேண்டியது .

dahraṁ vipāpaṁ varaveśmabhūtaṁ yat puṇḍarīkaṁ puramadhya saṁstham |tatrāpi dahre gaganaṁ viśokaṁ tasmin yadantastadupasitavyam ||

द॒ह्रं॒-विँ॒पा॒प-म्प॒रमे᳚श्म भूतं॒-यँ-त्पु॑ण्डरी॒क-म्पु॒रम॑द्ध्य स॒ग्ग्॒स्थम् ।

त॒त्रा॒पि॒ द॒ह्र-ङ्ग॒गनं॑-विँशोक॒-स्तस्मि॑न्. यद॒न्तस्त-दुपा॑सित॒व्यम् ॥

****

3

யோவேத  நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன்

ஸமஸ்னுதே  ஸர்வான் காமான்  ஸ:

தைத்ரீயோபநிஷத்   2-1

பரம ஆகாசமாகிய ஹிருதய குகையில்  வீற்றிருக்கும் பிரம்மத்தை யார் அறிகிறானோ  அவன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவன் ஆகிறான்.

: இரண்டு புள்ளி இருந்தால் ஹ என்று உச்சரிக்கவும் )

yō vēda̠ nihi̍ta̠-ṅguhā̍yā-mpara̠mē vyō̍mann । sō̎-‘śnu̠tē sarvā̠nkāmā̎n​thsa̠ha

यो वेद॒ निहि॑त॒-ङ्गुहा॑या-म्पर॒मे व्यो॑मन्न् । सो᳚-ऽश्नु॒ते सर्वा॒न्कामा᳚न्​थ्स॒ह ।

****

4

ஏகோ தேவ : ஸர்வ பூதேஷு கூட :   ஸர்வ வ்யாபி

ஸர்வ பூதந்தராத்மா

கர்மாத்யக்ஷ:  ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீ

சேதா கேவலோ   நிர்குணஸ் ச

— ஸ்வேதாஸ்வதரோபநிஷதம் 6-11

கடவுள் ஒருவரே ; அவர் எல்லார் உள்ளத்திலும் மறைந்திருக்கிறார் . அவர் எங்கும் உள்ளார். எல்லோரிடத்திலும் ஊடுருவியிருப்பவர். எல்லாச் செயல்களையும் அவர் கண்காணிக்கிறார். உயிர்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடம். சாட்சியாகவும் சுத்த சைதன்யமாகவும் குணரகிதராகவும் அவர் இருக்கிறார்-.– சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு.

एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा।
कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी चेता केवलो निर्गुणश्च॥

—Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)

eko devah sarvabhuteshu gudhah sarvavyapi sarvabhutantarathma I

karmadhyakshah sarvabhutadhivasah sakshi cheta kevalo nirgunascha II 6.11 II

–Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)

****

5

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

–மஹாநாராயண உபநிஷதம் 56-1Rig Veda (Mandala 7, Hymn 59).

இது முதலில்  யஜுர்வேத ருத்ரத்தில் வருகிறது

பொருள்

நறுமணத்தோடு கூடியவரும் போஷித்து வளர்ப்பவருமாகிய முக்கண்ணனைப் போற்றுவோம் . வெள்ளரிப்பழம் தன கொடிக்கம்பினின்று விலக்கிக்கொள்வது போன்று நாம் மரணத்தினின்று  விடுபட்டு மோக்ஷம் அடைவோமாக; அமிதா சொரூபமாகிய  சிவனாரிடமிருந்து நாம் விலகாமல் இருப்போமாக . 

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् ॥

Aum Tryambakam yajaamahe sugandhim pushtivardhanam |Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||

-Rig Veda (Mandala 7, Hymn 59). YAJUR VEDA RUDRAM, MAHA NARAYANA UPANISHAD 56-1

****

6

அஸூர்யா நாம தி லோகோ  அந்தேன தமஸா வ்ருதாஹா

தாம்ஸ்தே ப்ரேத்யாபி கச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனாஹா

ஈஸா வாஸ்ய உபநிஷத் –3

அசுரப்பிறவிகள் அஞ்ஞான இருளில் மூடப்பட்டுள்ளன . யாரெல்லாம் ஆத்மீகத்தைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இறந்த பின்  அந்த அசுரலோகத்தை அடைகின்றனர் .

असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥

Asuryā nāma te lokā andhena tamasāvṛtāḥ,Tāṃste pretyābhigacchanti ye ke cātmahano janāḥ.

****

7

நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹுனா ஸ்ருதேன 

யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ

ஆத்மா  விவ்ருணுதே தனூம் ஸ்வாம்   

கடோபநிஷத் 1-2-23

இந்த ஆத்மனை வேதம் கற்பதால் அடைய முடியாது; புத்தி கூர்மையாலோ , ஏராளமான சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அடைய முடியாது; யாரை இது ஆட்கொள்கிறதோ அவனால் இது அடையப்படுகிறது ; அவனிடத்தே இந்த ஆத்மன் தனது சொரூபத்தில் விளங்குகிறது. 

नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।

यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूँ स्वाम् ॥ २३ ॥

nāyamātmā pravacanena labhyo na medhayā na bahunā śrutena |

yamevaiṣa vṛṇute tena labhyastasyaiṣa ātmā vivṛṇute tanūm̐ svām || 1-2-23 ||

****

8

ந தத்ர ஸூர்யோ பாதி  ந சந்த்ரதாரகம் நேமா

வித்யுதோ பாந்தி குதோ யமக்னி:

தமேவ பாந்தமானுபாதி  ஸர்வம் தஸ்ய

பாஸா ஸர்வமிதம் விபாதி — கடோபநிஷதம் 5-15

சூரியன் அங்கு பிரகாசிப்பதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் மின்னலும் அங்கு ஒளிர்வதில்லை ; இனி இந்த நெருப்பு  (நாம் காட்டும் சிறிய தீபம்) எப்படி பிரகாசிக்கும் ? பிரம்மத்தைச் சார்ந்து யாவும் பிரகாசிக்கின்றன . அதன் பிராகாசத்திலிருந்து எல்லாவற்றுக்கும் பிரகாசம் வருகிறது. Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥

—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

Na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ |
Tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti ||

—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

To be continued………………………

Tags-முக்கிய உபநிஷத மந்திரங்கள்,  Part 1,

Leave a comment

Leave a comment