Coins of Yaudheyas
Coin of Kumara Gupta
Written by London Swaminathan
Post No. 15,899
Date uploaded in London –21 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Research Article
உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் யாதேயர் குடியரசினைக் குறிப்பிட்டுள்ளார் ; அவர்கள் யுத்தத்தினால் வாழ்ந்தவர்கள் என்பதால் யாதேயர்கள்
(யுத்தம் =போர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஆறு தலைகளைக் கொண்ட ஆறுமுகன் உருவம் உள்ளது அந்த நாணயங்கள் 2000 ஆண்டுப் பழமையானவை .
பண்டைய இந்தியாவில், தற்கால பஞ்சாப்,ஹரியானா (சப்த சிந்து) மற்றும் ராஜஸ்தான் பகுதிகளை மையமாகக் கொண்டு கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்த ஒரு சுதந்திரமான போர்வீரர் குடியரசு (Ganasangha) ஆகும்.
‘யோதா’ (Yodha) என்றால் போர்வீரன் என்று பொருள். மகாபாரதத்தில் நகுலனால் வெல்லப்பட்ட பகுதியான ‘பஹுதன்யகா’ (Bahudhanyaka) என்பது யாதேயர்களின் நிலப்பரப்பைக் குறிப்பதாகும்.
அக்கால மன்னராட்சிகளுக்கு மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பழங்குடி தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட குடியரசு முறையைக் கொண்டிருந்தனர்.
2-ஆம் நூற்றாண்டு ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் (ருத்ரதாமன் கல்வெட்டு), யாதேயர்கள் “அனைத்து க்ஷத்திரியர்களிலும் வீரர்கள்” என்றும், எளிதில் அடிபணியாதவர்கள் என்றும் புகழப்பட்டுள்ளனர்.
இவர்களின் கடவுள் முருகன் (கார்த்திகேயன்) ஆவார். ரோதக் (Rohtak) பகுதி இவர்களின் நாணயங்களை அச்சடிக்கும் மையமாகத் திகழ்ந்தது. இவர்களின் நாணயங்களில் “யாதேய கணஸ்ய ஜய” (யாதேயர்களின் வெற்றி) என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
***

திருமுருகாற்றுப்படை என்னும் சங்க கால நூல் முருகனின் முழு வரலாற்றினைக் கூறுகிறது அதை நக்கீரன் என்ற பிராமணன் எழுதினான் . சாமி பற்றி எழுதியதால் இது பிற்கால நூல் என்று சில திராவிட அசடுகள் – அரை வேக்காடுகள் -எழுதின ; ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே யாதேயர்கள் (Yaudheyas) ஆறுமுகன் வடிவத்தை நாணயத்தில் பொறித்தார்கள்; இது நக்கீரரின் வருணனையை நிரூபிக்கிறது . ஆயினும் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பழங்காலச் சிலைகளோ பழைய ஓவியங்களோ, காசுகளோ நமக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே; வேல்போன்ற ஈட்டிகள் மட்டுமே கிடைத்தன ; அது உலகில் இல்லாத இடமே இல்லை.
மேலும் பாணினியின் அஷ்டாத்யாயீ இலக்கண நூலுக்கு உலகம் வியக்கும் உரையை 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பதஞ்சலி முனிவரும் அவருடைய மகா பாஷ்ய நூலில் ஸ்கந்த, விசாகர் சிலைகள் விற்பனை பற்றிக் குறிப்பிலிட்டுள்ளார் ; இதுவும் நக்கீரர் நூலை சங்க கால நூல் என்பதைக் காட்டுகிறது .
****.
இந்தியாவின் பொற்காலம் எனப் புகழப்படும் குப்தர்காலத்தில் மன்னர்கள் ஸ்கந்த குப்தன், குமார குப்தன்(CE 415-450)
என்று பெயர் வைத்துக் கொண்டனர். இவ்வளவுக்கும் குப்தர்கள் வைஷ்ணவர்கள் ; பரம பாகவதர்கள் ! இதற்குக் காரணம் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய குமார சம்பவம் நூலாகும். அவர் முருகனின் புகழைத் திக்கெட்டும் பரப்பினார் ; அதற்குப் பின்னர் புத்தசதரித்ததை முதல் முதலில் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய புத்த கோஷரும் கூட புத்தரை முருகனுடன் ஒப்பிட்டார் அந்த அளவுக்கு காளிதாசன் முருகன் புகழைப் பரப்பினார் ; அது மட்டுமல்ல குமார சம்பவத்தில் முதல் பத்து சுலோகங்களில் அவர் இமய மலையைப் புகழ்ந்த இயற்கை வருணனையை சங்க காலப் புலவர்கள் அப்படியே தமிழ்ச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தினார்கள்.
***
பிற்கால முருகன் நாணயங்கள் —
கனிஷ்கருக்குப் பிறகு ஆட்சி செய்த ஹுவிஸ்கா, எல்லா இந்து தெய்வங்களுக்கும் நாணயங்கள் வெளியிட்டார். அவர் முதல் நூற்றாண்டினைச் சேர்ந்தவர் சிவா – உமா நாணயங்கள் வெளியிட்டார் அவர்க்கு முன்னர் கனிஷ்கார் சிவ பெருமான் நாணயங்கள் வெளியிட்டார்.
இவர்கள் சொல்லும் பெயர்கள் விநோதமானவை
சிவா – ஓசோ ; உமா – ஓம் மோ
ஹுவிஸ்கா அச்சடித்த நாணயங்களில் மாசேன = மஹாசேன, ஸ்கந்த குமாரோ- விசாகா – ஸ்கந்த குமார, விசாகன் என்ற எழுத்துக்கள் உள. மேலும் அவர்கள் ஒரு மேடை மீது ஆபரணங்களைப் பூண்டு நிற்கிறார்கள்; காலில் கைகளில் வளையங்கள், கழுத்தில் மாலை, தலைப்பாகை, இவற்றுடன் மெல்லிய ஆடைகளை அணிந்துள்ளனர்; முருகனின் ஒரு கை இடுப்பிலும் இன்னொரு கை, திரிசூலத்தை ஏந்திய வண்ணமும் உள்ளன ; சில நாணயங்களில் இடுப்பில் வாள், கதை காணப்படுகிறது ; ஈட்டியும் உளது; அதை நாம் வேல் என்று சொல்கிறோம்
யாதேயர்கள் மயிலையும் காட்டியுள்ளனர் .
யாதேயர்களைப் போல ஒளதும்பரர்களும் முருகன் நாணயங்கள் வெளியிட்டார்கள் ; குப்தர் கால தங்க நாணயங்களில்தான் அழகான முருகன் காணப்படுகிறார் ; மஹேந்திர குமார என்ற எழுத்துக்களை பொறித்துள்ளார்கள் ; முருகன் இந்திரன் படைகளுக்கு COMMANDER-IN-CHIEF கமாண்டர் இன் சீப் – சேனாபதி– என்பதும் இந்திரன் புதல்வி தெய்வானையை – தேவசேனா — மணந்தவர் என்பதும் புராணக்கதை .
பாதாமியை- வாதாபியைத் – தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் விக்ரமாதித்யன் (சாளுக்கிய விக்ரமாதித்ய – CE 655-681) வெளியிட்ட தங்க நாணயத்தில் முருகன் பாம்பு, மயில் தோகையுடன் காட்சி தருகிறார் ; பிற்கால கர்நாடக அரசர் கல்வெட்டுகளில் இந்த தங்க நாணயத்தை மயூர கத்யான என்று குறிப்பிட்டுள்ளார்கள்
பதினேழாம் நூற்றாண்டு ரகுநாத நாயக்கர் காசில் மயி டன் முருகன் உள்ளார் .
மைசூர் நரசராஜா உடையார் – 1638-1656 CE வரை முருகன், மயில் நாணயங்களை பார்க்க முடிகிறது . மயிலை வளர்த்தவர்களை அரசன் ஆக்கி நந்த வம்சத்தை அடியோடு அழித்தான் சாணக்கியன் என்ற பிராமணன் ;இந்த மயிலை சந்திர குப்த மெளரியன் காலம் முதல் PUNCH MARKED COINS /முத்திரைக் காசுகளில் காண்கிறோம்; மயிலை இந்திய தேசீயப் பறவையாக அறிவித்ததன் மூலம் இந்தியாவின் தேசீயக் கடவுள் முருகன்தான் என்றும் சொல்லலாம் !
—SUBHAM—
TAGS- பழைய, முருகன், கந்தன், ஷண்முகன், நாணயம், யாதேயர்கள், ஆறுமுகன்