WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,947
Date uploaded in London – 5 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (63 – 1) பிரம்மா மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரைக் கொடுத்து வரங்களை அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் முப்பதாவது ஸர்க்கமாக அமைவது ‘மேகநாதன் இந்திரஜித் என்ற பெயர் பெற்றது’ என்ற ஸர்க்கமாகும்.
ராவணனது புத்திரனான மேகநாதனால் எல்லா தேவர்களும் அடிமைப்படுத்தப்பட்டனர். அனைத்து தேவர்களும் பிரம்மாவைச் சந்தித்து எங்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று வேண்டினர்.
உடனே பிரம்மா ராவணனிடம் சென்று, “உனது புதல்வனது பராக்ரமத்தால் நான் சந்தோஷம் அடைகிறேன். அவன் இந்திரஜித்து என்று விளங்குவான்” என்றார்.
அயம் ச புத்ரோதிபலஸ்தவ ராவண வீர்யவான்| ஜகதீந்திரஜிதித்யேவ பரிக்யாதோ பவிஷ்யதி ||
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 9
ராவண – ராவண தவ – உனது புத்ர: – புதல்வன் அதிபல: – ஒப்புயர்வில்லாத போர்வீரனாகவும் வீர்யவான் – மகா சாமர்த்தியசாலியாகவும் பரிக்யாத: – பிரசித்தி பெற்று விட்டான் ஜகதி – உலகில் அயம் ச – இவன் இந்த்ரஜித் – இந்த்ரஜித் என்று விளங்குவான்
பிரம்மா இப்படிக் கூறி தேவர்களை சுதந்திரமாக விடக் கூறினார். உடனே, அங்கிருந்த மேகநாதன் என்னும் இந்த்ரஜித், அவரிடம் “அமரத்வமஹம் தேவ விருணே யத்யேஷ முச்யதே| – தேவ, – தேவ இவர்கள் சுதந்திரம் பெற வேண்டியது என்கிற பட்சத்தில் என்றைக்கும் மரணமில்லாமை ஒன்றையே நான் வரமாக பிரார்த்திக்கிறேன் “ என்று விண்ணப்பம் செய்தான்.
உடனே பிரம்மா,
“நாஸ்தி சர்வாமரத்வம் இ கஸ்யசித்ப்ராணிநோ புவி | சதுஷ்பத: பக்ஷியஸ்ச பூதானாம் வா மஹௌஜஸாம்” என்றார்.
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 13
புவி – பூமியில் சதுஷ்பத – நாற்கால் பிராணிகளுக்கும் பக்ஷிஸ்ச – பறவைகளுக்கும் ப்ராணின ச – மனிதனுக்கும் மஹௌஜஸாம் – மஹா கீர்த்தி பெற்ற பூதானாம் வா – அடியார்களுக்கும் கூட கஸ்யசித் ஹி – ஏதொன்றுக்குமே சர்வாமரத்வம் – எப்போதுமே மரணமின்மை என்பது ந அஸ்தி – கிடையாது
ச்ருத்வா பிதாமஹேனோக்தமிந்த்ரஜித்ப்ரமுணாவ்யயம் | அதாப்ரவீத்ச தத்ரஸ்தம் மேகநாதோ மஹாபல: ||
ஸ்ரூயதாம் வா பவேத்சித்தி: ஷதக்ரதுவிமொக்ஷணே ||
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 16
ச: – அந்த மஹாபல: – மஹாபலிஷ்டனாகிய இந்த்ரஜித் – இந்திரனை ஜெயித்த மேகநாத: – மேகநாதன் ப்ரமுணா – ஸர்வேஸ்வரராகிய பிதாமஹ – பிரம்மதேவரால் உக்தம் – திருவாய்மலர்ந்து அருளியதை ச்ருத்வா -கேட்டு தத்ரஸ்தம் – பிரத்யக்ஷமாயிருக்கின்ற அவ்யயம் – அமோகங்களான வரங்களைத் தருபவராகிய அவரைப் பார்த்து அய – இப்பொழுது இப்படி அப்ரவீத் – விண்ணப்பம் செய்தான்: ஷதக்ருது விமோக்ஷணே – “இந்திரனை விட்டுவிடும் விஷயத்தில் சித்தி: – காரியசித்தி பவேத் வா – விளைய வேண்டுமென்றால் ஸ்ரூயதாம் – என் வேண்டுகோளுக்குத் திருச்செவி சாய்ப்பீராக
மமேஷ்டம் நித்யஷோ ஹவ்யைர்மந்த்ரை: சம்பூஜ்ய பாவகம் | சங்க்ராமமவதர்தும் ச சத்ருநிர்ஜயகாங்க்ஷிண: ||
அஸ்வயுக்தோ ரதோ மஹம்துமுத்திஷ்டேத்து விபாவஸோ: | தத்ஸ்தஸ்யாமரதா ஸ்யான்மே ஏஷ மே நிஸ்சயோ வர: ||
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 17
சத்ரு நிர்ஜய – சத்துருக்களை வெல்ல வேண்டியவனாய் சங்க்ராமே – போரை அவதர்தும் – ஆரம்பிப்பதற்காக பாவகம் – அக்னிபகவானை ஹவ்யை: – ஆஹுதிகளாலும் மந்த்ரை: – மந்திரங்களாலும் நித்யஷ: – இடையூறின்றி சம்பூஜ்ய – ஆராதித்துச் செய்யும் மம – எனது இஷ்டம் – வேள்வியில் அஸ்வயுக்த: – குதிரைகள் பூட்டிய ரத: – ஒரு ரதம் மஹ்யம் து – எனக்கென்றே உத்திஷ்டேத் – ஆவிர்பவிக்க வேண்டும் விபாவஸோ: – அக்னி பகவானுடையதாகிய தத்ஸ்தஸ்ய – அதில் வீற்றிருக்கின்ற மே – எனக்கு அமரதா – மரணமின்மை ஸ்யாத் – வேண்டும் ஏஷ ச: – இது தான் மே – என்னுடைய நிஸ்சய: – தீர்க்காலோசனை செய்து பிரார்த்திக்கப்பட்டதாகிய வர: – வரம்
தஸ்மின்யத்யஸமாப்தே ச ஜப்யஹோமே விபாவஸு | யுத்யேயம் தேவ சங்க்ராமே ததா மே ஸ்யாத்திநாஷனம் ||
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 18
தேவ – தேவரே விபாவஸௌ – அக்னிபகவானது தஸ்மின் – அந்த ஜப்யஹோமே ச அஸமாஸே – ஜபங்களும் ஆஹுதிகளும் அடங்கிய வேள்வி பரிபூர்ணமாகாதிருக்கையில் ததா – அந்த சந்தர்ப்பத்தில் சங்க்ராமே – போரில் யுத்தேயம் – போர் புரியத் தொடங்குவேன் யதி – ஆகில் மே – எனக்கு விநாஷனம் – விநாசம் ஸ்யாத் – உண்டாகட்டும்
சர்வோ ஹி தபஸா தேவ வ்ருணோத்யமரதாம் புமான் | விக்ரமேண மயா ததேதமரத்வம் ப்ரவர்திதம் ||
உத்தரகாண்டம் முப்பதாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 19
தேவ – தேவரே சர்வ: – ஒவ்வொரு புமான் – புருஷனும் தபஸா ஹி – தவ மஹிமையாலேயே அமரதாம் – அமரனாகுதலை வ்ருணோதி – வரமாய் வேண்டுகின்றான் மயா து – என்னாலோவென்றால் விக்ரமேண – பராக்கிரம விசேஷத்தால் ஏதத் – அப்படிப்பட்டதாகிய அமரத்வம் – மரணமின்மை ப்ரவர்திதம் – விஞ்ஞாபனம் செய்யப்பட்டிருக்கிறது
இப்படி இந்திரஜித் பிரம்மாவிடம் வரம் வேண்ட அவரும், ‘ஏவம் அஸ்து’ – ‘அப்படியே ஆகுக’ – என்று வரத்தை அளித்தார்.
இப்படியாக அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு இந்திரஜித் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றதைக் கூறினார்.
யுத்த காண்டத்தில் இந்திரஜித் போரைப் பற்றி வால்மீகி என்ன சொல்கிறார் என்பதை இனி பார்ப்போம்.
**