I HAVE WRITTEN THREE ARTCILES ON SAMUDRIKA LAKSHANA FROM 2012. PLEASE SEE THE LINKS AT THE END OF THIS ARTICLE
Samudrika lakshana is the study of body features of a man or woman and interpret his /her characteristics, behaviour etc. on the basis of the features. It is a Hindu science practised by Hindus for thousands of years. 2000 year old Kamasutra of Vatsyayana lists this science as one of the 64 arts. The proof for it lies in the Valmiki Ramayana and Mahabharata. Whenever they describe a heroic type of man the poets will use the Sanskrit words Aajaanu Baahu; the meaning is one who is blessed with long arms which touch one’s knees. Rama is described Aaajaanu Baahu by Valmiki. Tamils also followed it in Kambaramayana and other books. If we look at the scientific background, before weapons made of iron were made men were using bow and arrow. Naturally if a man who practises archery more , his arms grow longer and longer generation after generation. It can be interpreted from another angle as well. One who has longer arms will easily excel in shooting arrows; naturally he becomes a hero.
In Tamil Thiruvilaiyadal Purana we have more information about excellent body parts.
What is Thiruvilaiyadal Purana?
It is a Tamil book written by atleast 300 years ago by Paranjothi Munivar. It tells us the story of Lord Shiva’s miracles in Madurai, the temple town of Tamil Nadu. Most famous Meenakshi Sundareswarar temple is located in Madurai and the 64 leelas/ playings of Lord Siva are in this Purana. They are enacted even today as temple festivals in Madurai. There is an earlier book with the same name written by Perumpatrappuliyurar. Both deal with the same subject
In the chapter about Ukkira Kumara Pandya, there is a good description of commendable or admirable body features. Ukkira kumara was the son of Somasundara Pandya (Lord of Madurai temple). He is said to have 32
Exceptional body features (Samudrika Lakshana).
One will become an Indra (like Vedic hero Indra) if the following 6 body parts are prominent: stomach, shoulder, forehead, nose, chest, palm.
Following 5 parts should be longer: eyes, head, hand, nose, chest.
Life span will increase if the following 5 parts are smaller: hair, body, finger nodes, nail, tooth.
Wealth will increase if the following 4 parts are narrower: tongue, back, ankle, genital part
More pleasure will be obtained if the following 7 parts are reddish: sole, palm, eyes, lips, palate, tongue, nail.
It will be good if head and forehead are broad.
If belly button, ikalvali (meaning is not found for this Tamil word) and Voice are deeper that person will be in the forefront.
OLD ARTICLES
Scientific proof for Samudrika Lakshana – Tamil and Vedas
19 Jan 2020 — It is the study of body parts and their connection to a person’s behaviour and character. It is one of the 64 arts listed in Vatsyayana’s Kama …
सः राघवः அந்த ராமன்/ராகவன் , अभिक्रान्ताम् அவளிடம் வந்த போது , मातरम् அன்னையை , उपसंगृह्य மரியாதையுடன் வணங்கினான் , बाहुभ्याम् (அவள்) இரு கைகளாலும் , परिष्वक्तः கட்டி அனைத்து , मूर्धनि உச்சம் தலையில் , उपाघ्रातश्च முத்தம் கொடுத்தாள்.
xxxx
கடும் தவத்தினாலேயே ராமன் போன்ற ஒரு குழந்தை பிறக்க முடியும் என்றும் வால்மீகி காட்டுகிறார் 2-20-48
उपवासैश्च योगैश्च बहुभिश्च परिश्रमैः।
दुःखं संवर्धितो मोघं त्वं हि दुर्गतया मया।।2.20.48।।
உபவாஸைஸ்ச யோகைஸ்ச பஹு பி ஸ்ச பரிச்ரமைஹி
துக்கம் ஸம் வர்த்திதோ மோகம் த்வம் ஹி துர்கதயா மயா
त्वम् நீ , दुर्गतया मया துரதிருஷ்டம் மிக்க என்னால் , उपवासैश्च நோன் பிருந்தும் , योगैश्च யோகத்தைப் பின்பற்றியும் , बहुभिः பல , परिश्रमैश्च முயற்சிகள் செய்தும் , दुःखम् கஷ்டப்பட்டு , मोघम् வீணாகிப் போய்விட்டதே , संवर्धितः வளர்த்ததெல்லாம்
நோன்பு, தவம் மூலம் பெற்று உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல போய்விட்டது என் துர்பாக்கியம்தான் (கெளசல்யாவின் புலம்பல்)
இதையே வள்ளுவனும் எதிரொலிக்கிறான்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல் 70
மகனுடைய குண நலன்களைக் கண்டவர்கள் இவன் தந்தை எந்த அளவுக்கு நோன்பு இருந்து — தவம் செய்து — இவனைப் பெற்று இருக்கவேண்டுமென வியப்பர்.
xxx
பெண் சந்யாசிகள்
ஆண்களைப் போலவே பெண்களும் துறவற வாழ்க்கை வாழ்ந்ததையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். அவர்களை பிக்ஷுணி , தபஸ்வினி ,ப்ரவ்ரஜிதா என்ற சொற்களால் அழைக்கிறார் .
அத்தகைய சன்யாசினிகள் நடுக்காட்டில் ஆஸ்ரமத்தில் வசித்தனர். அவர்களுக்கும் முறையான குரு உண்டு. சபரி போன்ற தவசியர் இலை-தழை உடைகளையும் மான்தோலையும் அணிந்து வாழ்ந்தனர் பம்பா நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்த சபரியின் குரு மாதங்க முனிவர்
पितुः தந்தையினுடைய गेहे வீட்டில் कन्यया நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது , मया என்னால் , मम मातुःஎன்னுடைய தாயார் , अग्रतः முன்பாகவே, साधुवृत्तायाः சாதுவாக வாழும் , भिक्षिण्या ஒரு பெண் சந்நியாசி , इह இந்த உலகில் वनवासः காட்டில்தான் வாழமுடியும் என்று சொன்னதைக் , श्रुतः கேட்டேன் .
பெண் சன்யாசிகளும் காட்டில் வாழ்ந்ததை இது காட்டுகிறது.
xxxx
पश्य मेघघनप्रख्यं मृगपक्षिसमाकुलम्।
मतङ्गवनमित्येव विश्रुतं रघुनन्दन।।।3.74.21।।
பஸ்ய மேக கண ப்ரக்யம் ம்ருக பக்ஷி ஸமாகுலம்
மதங்க வனம் இத்யேவ விஸ்ருதம் ரகுநந்தன
रघुनन्दन ரகு குலத்தில் உதித்தவனே , मेघघनप्रख्यम् கரிய மேகம் போல இருண்டு கிடக்கும் , मृगपक्षिसमाकुलम् fபிராணிகளும் பறவைகளும் நிறைந்த இந்த இடம் , मतङ्गवनमित्येव மதங்க முனிவரின் வனம் /காடு , विश्रुतम् என்ற புகழ் பெற்றது , पश्य அதைக் காண்பாயாகுக.
அடர்ந்த காடு ; கரிய மேகக் கூட்டம் போல இருண்டு கிடக்கும் காட்டில் மிருகங்களும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இதுதான் மதங்க முனிவரின் வனம் /காடு என்று புகழ்பெற்றுள்ளது
இதிலிருந்து மதங்க முனிவரின் கீழ், அவரைக் குருவாக ஏற்று பெண் சன்யாசினியாகிய சபரி வசித்தது புலனாகிறது
महावने இந்தப் பெரிய காட்டில் , भावितात्मानः நமக்கு மேலுள்ளவனை நினைந்து ते அவர்கள் मे गुरुवः என்னுடைய குருமார்களான , इह இங்கே , मन्त्रवत् மந்திரங்களினாலும் , मन्त्रपूजितम् அந்த மந்திரங்கள் மூலம் , तीर्थम् புனித நீரோடு , जुहवाञ्चक्रिरे யாக்கங்களைத் செய்தனர் .
என்னுடைய குருமார்கள் இந்த பெரிய வனத்தில் பெரிய கடவுளைப் போற்றி மந்திரங்கள் சொல்லி யாக யக்ஞங்கள் செய்தனர்.புனித நீர் கொணர்ந்து யாக திரவியங்களால் பூஜித்தனர்
நடுக்காட்டில் அவர்கள் செய்த யாக யக்ஞங்களை இந்த ஸ்லோகம் வருணிக்கிறது. அது மட்டுமல்ல; ராமாயண காலத்தில் பெண்துறவிகளும் அத்தகைய இருண்ட காட்டில் வசித்தனர் என்பதையும் சொல்கிறது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அறிவியல் அறிஞர் வாழ்வில் … 8
ச.நாகராஜன்
14
ஆவாகாட்ரோவின் மறுக்கப்பட்ட விதி!
பிரபல விஞ்ஞானியாக இன்று கொண்டாடப்படும் ஆவாகாட்ரோ (Amedeo Avogadro 1776-1856) அவர் வாழ்நாளில் சரியாக மதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம். சிறந்த கனவானாகத் திகழ்ந்த அவர் ஒரு வக்கீல். பின்னர் பள்ளி ஆசிரியர். பின்னால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஆனார்.
அவர் விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். வெவ்வேறு வாயுக்கள் ஒரே கன அளவைக் கொண்டிருந்தால், உஷ்ணநிலையும் அழுத்தமும் ஒரே அளவாகவும் அவை கொண்டிருந்தால், அவை சமமாக ஒரே எண்ணிக்கையில் அணுத்துகளைக் கொண்டிருக்கும் என்று (Equal volumes of different gages contains an equal number of molecules provided they are at the same temperature and pressure.) அவர் கூறினார்.
ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் பலரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதை அவர்கள் நிராகரித்து விட்டனர்.
ஆனால் அவர் மறைந்த பிறகு 1870ஆம் ஆண்டு தான் இது சரி தான் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
இப்போது அவரது விதி ஆவாகாட்ரோஸ் லா (Avogadro’s Law) என்று அழைக்கப்படுகிறது.
விஞ்ஞானத்தில் மரபணுக் கொள்கையை முதலில் கண்டுபிடித்தவர் க்ரெகர் மென்டெல். (காலம் :20-7-1822- 6-1 18841884). இவர் ஒரு உயிரியல் வல்லுநர். காலநிலை பற்றிய அறிவியல் நிபுணர். ஒரு கணித மேதையும் கூட.
இவர் ஒரு துறவி. வம்ச பரம்பரை பற்றிய சரியான விதிகளை இவர் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார். இந்த விதிகளே பரம்பரை பரம்பரையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் உயிரினங்களில் மரபணு அம்சங்களைப் பின் தொடரச் செய்கிறது என்று கண்டுபிடித்தார் அவர்.
ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இது அறியப்படவில்லை. அவர் மறைந்து 16 ஆண்டுகள் ஆன பின்னரே, 1900ஆம் ஆண்டு வாக்கில் தான் இது சிறப்பாகக் கொண்டாடப்பட ஆரம்பித்தது. அவர் தனது ஆய்வை மறைவதற்கு 34 ஆண்டுகளுக்கு முன்பேயே, 1866ஆம் ஆண்டே, பிரசுரித்தார்; உலகிற்கு அறிவித்தார்.
இதை அறிவித்த ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர் தனது மடத்தின் மடாதிபதியாக ஆனார். தனது வாழ்நாள் முழுவதும் மடத்தை நிர்வகித்து வந்தார்.
16
கொண்டாடு என்பதை பிரம்மசாரியாக இரு என்று மாற்றிய கதை!
ஒரு ஆவணத்தை காபி செய்வதில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உயிரியல் விஞ்ஞானிகளின் மாநாடு ஒன்றில் ஒரு விஞ்ஞானி கூறிய ஜோக் இது:
ஒரு மடாலயத்தில் துறவி ஒருவர் புதிதாகச் சேர்ந்தார். அவர் அங்குள்ள துறவிகள் அனைவரும் அங்குள்ள பழைய புத்தகங்களில் அவரவருக்குப் பிடித்த ஏதோ ஒரு புத்தகத்தைக் காபி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.
புதிய துறவி மடாலயத்தில் கீழே இருந்த நிலவறைக்குச் செல்ல ஆரம்பித்தார்.
ஏன் அங்கு போகிறீர்கள் என்று அவரைக் கேட்ட போது புத்தகத்தின் ஒரிஜினல் கையெழுத்துப் பிரதியை நான் பார்க்க விரும்புகிறேன். அதனால் அங்கு போய் அதை எடுத்துப் பார்த்து காபி செய்யப் போகிறேன் என்றா.
சிறிது நேரத்தில் நிலவறையிலிருந்து ‘ஓ’ என்ற கூக்குரலும் அழுகுரலும் கேட்டது.
அனைவரும் அங்கு ஓடிப் போய்ப் பார்த்தனர். புதிய துறவி அலறிக் கொண்டிருந்தார்.
என்ன விஷயம் என்று கேட்ட போது ஒரிஜினல் புத்தகத்தைக் காண்பித்து அவர் கூறினார் : நீங்கள் காபி அடித்து அனைவருக்கும் விநியோகம் செய்வது தவறு. ‘பிரம்மசாரியாக இரு’ என்று சொல்லவில்லை புத்தகம். ‘கொண்டாடு’ என்று அல்லவா சொல்லி இருக்கிறது என்றார். (The Word is CELEBRATE, not CELIBATE)
காபி அடித்த புத்தகத்தைப் பார்த்து பிரம்மசாரிகளாக இருந்த அனைவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.
இதைச் சொன்னவர் உயிரியல் அறிவியலில் பேராசிரியரான மார்க் பாகல் (Professor of biological Sciences, Mark Pages, University of Reading)
ஆகவே, ஆவணத்தைப் படி எடுப்பவர்கள் சரியாக உன்னிப்பாகக் கவனித்து படி எடுக்க வேண்டும்!
உலகின் பழம் பெரும் மொழியாகிய தெய்வத் தமிழ் இறைவனிடமிருந்து தோன்றிய மொழி என்பதை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்டவை தெள்ளத் தெளிவாக விளக்குவதை அனைவரும் அறிவர்.
காலம் காலமாக பல்லாயிரக் கணக்கில் கவிதை மழை பொழிந்து வந்துள்ளனர் தமிழ் வளர்த்த புலவர்கள்.
இவர்கள் ஆங்காங்கே உடனுக்குடன் இயற்றிய தனிப் பாடலகள் பல்லாயிரமாகும்.
அவற்றைத் தொகுத்து வெளியிடும் பல முயற்சிகளும் நடந்துள்ளன.
குறிப்பாக திரு மு,இராகவையங்காரின் பெருந்தொகை, திரு உ.வே.சாமிநாதையரின் தனிப்பாடற்றிரட்டு, திரு மு.ரா. கந்தசாமி கவிராயர் தொகுத்த தனிச் செய்யுட் சிந்தாமணி ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.
இவற்றிலுள்ள சில பாடல்களைப் பற்றி அவ்வப்பொழுது www.tamilandvedas.com இணைய தளத்தில் எழுதி வந்தேன்.
அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இதை நூலாக அழகுற வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு சமயோசித ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தத் தனிப்பாடல்கள் அனைவருக்கும் அளவில்லா தமிழ் இன்பத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
இதை விரும்பி வரவேற்றுப் பாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
வாருங்கள் கவிதை உலகில் நுழைவோம்.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
26-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
ஒரு மனைவியின் கடமை, வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை செய்வதே என்று வால்மீகி கருதுகிறார்
கணவர் என்பவர் நகரத்தில் இருந்தாலும் , காட்டில் இருந்தாலும், பாவியாக இருந்தாலும் , குணவானாக இருந்தாலும், கணவரிடத்தில் அன்பாக இருப்பவர் சிறந்த மேலுலகங்களுக்குச் செல்வார்கள்
यासाम् எந்தப் , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும் वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).
आर्यस्वभावानाम् ஆர்ய/பண்புள்ள பாவனை கொண்ட , स्त्रीणाम् பெண்களுக்கு , दुश्शीलः கெட்ட குணமுள்ள , कामवृत्तो वा or அல்லது கெட்ட நடத்தையுள்ள , धनैः பணமுடைய , परिवर्जितो वा or devoid of அல்லது பணமில்லாத , पतिः கணவன் , परमम्உயர்ந்த , दैवतम् தெய்வமே .
பண்பாடுமிக்க பெண்களுக்கு , கணவன் ஒழுக்கம் குறைந்தவன் ஆனாலும் , கெட்டவன் ஆனாலும், பணமிருந்தாலும் ,பணமில்லாதவன் ஆனாலும், கணவனே கண்கண்ட/உயர்ந்த தெய்வம்
xxxx. .
नातो विशिष्टं पश्यामि बान्धवं विमृशन्त्यहम्।
सर्वत्र योग्यं वैदेहि तपः कृतमिवाव्ययम्।।2.117.24।।
நாதோ விசிஷ்டம் பஸ்யாமி பாந்தம் விம்ருசந்த்யஹம்
ஸர்வத்ர யோக்யம் வைதேஹி தபஹ க்ருதமிவாவ்யயம்
वैदेहि வைதேஹி , अहम् Iநான் , सर्वत्र எல்லாவிதத்தி லும் , विमृशन्ती சிந்தித்துப் பார்த்ததால்,, कृतम् செய்யப்பட்ட , अव्ययम् அழியாத , योग्यम् தகுந்த , तपः इव lதவம் போன்றதே , अतः அப்படிப்பட்ட கணவனைவிட , विशिष्टम् சிறந்த , बान्धवम् உறவினை , न पश्यामि நான் பார்த்ததில்லை .
ஓ ஸீதா ? யோசித்துப்பார்த்தால் ஒரு கணவனை விட நல்ல நன்பண் யாரும் எனக்குத் தென்படவில்லை.அவர் அழியாத முடியாத தவ வலிமை போன்றவர்.
xxx
கணவனின் அச்சுதான் மனைவிக்குப் பிறக்கும் ஆன் குழந்தை என்ற நம்பிக்கையும் இருந்தது.அதனால்தான் அவளுக்கு ‘ஜாயா’ என்று பெயர் என மனு (9-8) செப்புகிறார்
அதில் ஒன்று : மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! – என்பதாகும்.
இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.
அது இதோ:
குட்டி ஆமை ஒன்று மலை மீதும், சமவெளி மீதும், அதில் அருகில் பாய்கின்ற நதியிலும் விளையாடுவது வழக்கம்.
நல்ல புத்திசாலி ஆமை அது.
ஒரு நாள் அந்த ஆமை மலையிலிருந்து கீழே வந்த போது யானை ஒன்று எதிர்த்தாற் போல வந்தது.
ஆமையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த யானை, “குட்டி ஆமையே, வழியிலே வராதே. என் காலில் அகப்பட்டால் நீ மிதிபட்டுச் சாவாய்” என்று கூறியது.
“ஊம். உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு” என்று கூறியது ஆமை.
யானை சிரித்தது. “போ, போ” என்று கூறி விட்டுத் தன் வழியே சென்றது.
அடுத்த நாளும் யானை வந்தது. ஆமையைப் பார்த்தது. பரிதாப்பப்படு தான் முந்தைய நாள் சொன்னதையே திருப்பிச் சொன்னது.
ஆமையும் பதிலுக்கும். “நானும் உன் அளவு வலிமை பெற்றவன் தான்.
சந்தேகம் இருந்தால் நாளைக்கு இதே நேரம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். அப்போது உனக்குத் தெரியும், எனது வலிமை பற்றி” என்றது.
யானை சிரித்தது. போட்டிக்கு மறு நாள் வர ஒத்துக் கொண்டது.
யானை அங்கிருந்து தன் வழியே சென்றதும் ஆமை ஒரு நீளமான கயிறைத் தயார் செய்தது.
அருகிலிருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. அதிலிருந்த நீர் யானை அலறியது.
“என் கிட்டே வராதே! நசுங்கிச் சாவாய்” என்றது அது.
ஆமை உடனே, “உனக்கு எவ்வளவு பலம் உண்டோ அவ்வளவு பலம் எனக்கும் உண்டு. வேண்டுமானால் நாளைக்கு ஒரு போட்டி வைத்துக் கொள்ளலாம். இதோ பார், ஒரு கயிறு! இதை உன் வாயில் வைத்துக் கொள். நான் ரெடி என்று சொன்னவுடன் நீ இழு! அப்போது என் வலிமை உனக்குத் தெரியும்” என்றது.
நீர் யானை சிரித்தது.
“சரி, நாளை பார்ப்போம். நான் ரெடி” என்றது.
மறு நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு யானை வந்தது. அதை மலைக்கு மேலே தன் இருப்பிடத்திற்கு வருமாறு ஆமை அழைத்தது.
யானை மலை உச்சிக்கு ஆமை இருந்த இடத்திற்குச் சென்றது.
ஆமை கயிறின் ஒரு முனையை யானையிடம் கொடுத்து, “நான் ரெடி என்று சொன்னவுடன், நீ கயிறை இழு! யார் வலிமை என்பது தெரியும்” என்றது.
யானை தன் மனதில் இந்த ஆமைக்கு எவ்வளவு தைரியம் என்று நினைத்துக் கொண்டே கயிறை வாங்கித் தன் வாயில் வைத்துக் கொண்டது.
குடுகுடுவென்று மலையை விட்டு இறங்கிய ஆமை நதிக்குள் சென்று அங்கு காத்துக் கொண்டிருந்த நீர் யானையிடன் கயிறின் இன்னொரு
முனையைக் கொடுத்தது.
சரியாக யானைக்கும் நீர் யானைக்கும் சமதூரத்தில் வந்து நின்ற ஆமை, “ரெடி! இழுக்கலாம்!” என்றது.
யானை இழுக்க, நீர் யானை இழுக்க இரண்டினாலும் நகரவே முடியவில்லை.
சமபலம் கொண்டிருந்ததால் நெடு நேரம் இழுத்தது தான் மிச்சம்.
“போதும்” என்று கூவிய ஆமை நீர் யானையைப் பார்த்து, “என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது.
நீர் யானை வியப்புடன் தலையை ஆட்டி விட்டு நதிக்குள் சென்று மறைந்தது.
மலை மேலிருந்து அப்போது இறங்கி வந்த யானை கயிறின் இன்னொரு முனையை வாயில் கவ்விக் கொண்டிருந்த ஆமையை வியப்புடன் பார்த்தது.
“என்ன, என் பலம் புரிந்ததா?” என்றது ஆமை.
வியப்புடன் ஆமையைப் பார்த்த யானை, “ஆஹா! நீ சொல்வது உண்மை தான்! என்னளவு பலம், ஏன், என்னை விட கூடவே பலம் வாய்ந்தவன் நீ” என்று பாராட்டி விட்டுத் தன் வழியே சென்றது.
சரி, கதையின் நீதி என்ன?
மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்!
இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!
இது ஜைரியன் நீதிக் கதைகளுள் (Zairean Fables) ஒன்று.
‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)
Get others to do the work for you, but always take the credit! இது தான் அவர் கூறும் ஏழாவது விதி!
‘இது தான் இந்தியா’ என்ற எனது நூலை அடுத்து பொன்னொளிர் பாரதம் என்ற இந்த நூல் வெளியாகிறது.
இந்தியாவின் அறப்பண்புகளையும், சிறப்பு அம்சங்களையும் நாம் தெரிந்து கொண்ட வேளையில் ஒரு முக்கியமான சந்தேகம் எழுவது இயல்பு.
இப்படிப்பட்ட அரும் தேசம் எதனால் பல நூற்றாண்டுகள் அன்னியர் பலரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதே அது. கலைகளில்
சிறந்தது, அறப் பண்புகளில் சிறந்தது, வீரத்தில் சிறந்தது ஏன் வீழ்ந்து பட்டிருக்க வேண்டும்?
இதற்கான பல காரணங்களில் தலையாய காரணங்களாக நம் முன் இரண்டு காரணங்கள் அறியப்படுகின்றன.
ஒன்று நம்மிடையே ஒற்றுமை இல்லை.
இரண்டாவது வீரத்தையும் பொறுமையையும் பிரிக்கும் எல்லைக் கோட்டை அறிந்து கொள்ளத் தவறி, அறப்பண்புகளையே முற்றிலுமாகக் கடைப்பிடித்து எல்லையற்ற சகிப்புத்தன்மையை மேற்கொண்டது தான்!
இந்த சகிப்புத்தன்மையை ஆக்கிரமிப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டதோடு தங்களது அரக்க குணங்களுக்கேற்ப பிரித்தாளும் சூழ்ச்சி, சிரித்துப் பேசியவாறே முதுகில் குத்தச் செய்வது, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட எண்ணற்ற வழிகளைக் கையாண்டு நம்மை அடிமைப் படுத்தினர்; சுரண்டினர். என்றாலும் கூட அறப்பண்புகள் ஒரு நாளும் அதைக் கடைப்பிடித்தோரை கை விடாது என்பதை அறிவிக்கும் வண்ணம் நம் நாடு சுதந்திரம் பெற்றது; இப்போது வலிமையான நாடாக, உலகிற்கு பண்டைய காலம் போல வழி காட்டும் தேசமாக ஆகி வருகிறது.
கடந்த பல நூற்றாண்டுகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல.
அவற்றில் முக்கியமானவை ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் சகிப்புத்தன்மையை எல்லை மீறி கடைப்பிடித்து நம்மை கோழைகளாக வெளி உலகம் கருதும் அளவு நடப்பது கூடாது என்பவையே அவை கடந்த காலத்தில் ஆங்காங்கே தேசம் முழுவதும் ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. ஆகவே மறக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை வெளிக் கொணர்ந்து அதிலிருந்து உத்வேகத்தை நமது நாட்டு இளம் தலைமுறையினர் பெற வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியில் ஒரு சிறு துளியே இந்த நூலாக அமைகிறது.
இதில் நமது வீரர்களின் வீரம், ஆக்கிரமிப்பாளர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது.
இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுரைகள் வெளி வந்து அவை ஒரு கலைக் களஞ்சியமாகத் தொகுக்கப்பட வேண்டும்.
பொன்னொளிர் பாரதத்தின் உண்மையான வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டும்.
இந்தக் கட்டுரைகளில் சில கட்டுரைகள், ஞான ஆலயம், ஶ்ரீ ஜோஸியம் பத்திரிகைகள் மற்றும் www.tamilandvedas.com ப்ளாக்கில் பிரசுரிக்கப்பட்டவை. இதை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக,
கட்டுரைகளில் பெரும்பாலானவை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழான ட்ரூத் இதழில் ஆங்கிலத்தில் வெளி வந்தவை.
அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தேன்.
ட்ரூத்(TRUTH – www.sdpsorg.com இதழ் சாஸ்திர தர்ம பிரசார சபாவினால் கடந்த 90 ஆண்டுகளாக வாரம் தோறும் தவறாமல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதில் வெளியாகும் அருமையான கட்டுரைகள் நமக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பவை.
அதன் ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் அவர்கள் எனது உற்ற நண்பர். எனது இந்தப் பணியில் ஊக்கம் தருபவர்.
அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோச. நாகராஜன்
5-9-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
As usual thousands of devotees took part in the Jagannath ratha yatra in central London today 4-9-2022. It took nearly two hours to cover the distance between Hyde Park Corner to Trafalgar Square in London. Volunteers maintained the traffic without any disturbance to the general public Thousands of general public took videos and photos and had free food at the square. Many from other religions joined the devotees and danced all along the route. It covered main stations like Green Park, Piccadilly Circus, and Charing Cross. Young and old danced to the tune of Hare Rama, Hare Krishna chorus for hours. At the Trafalgar Square along with the tasty food entertainment was also provided. Book shops were selling Bhagavata and Bhagavad Gita books. It was a memorable scene.
Some pictures are given below; over 100 pictures and three short videosare posted in Facebook from 4th September onwards:-
ராமனை விட சீதை உயர்ந்து நிற்கும் காட்சிகள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன. ராமன், ஒரு அரசன் போல நடந்து கொள்கிறான். ஆனால் சீதையோ ராமனிடத்தில் ஒரு பணிவான பெண்ணாக, அடங்கிய மனைவியாக நடந்து கொள்கிறாள்.
சத்தியவான் சாவித்திரி கதையில் கணவனுக்குப் பணிவிடை செய்து சாவித்திரி சொர்க்கம் ஏகினாள் அதே படியில் நீயும் சென்று கணவனுக்கு சேவை செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் – என்று அயோத்தியா காண் டத்திலேயே காண்கிறோம்
पतिशुश्रूषाम् கணவனுக்கு சேவை , कृत्वा செய்ததன் வாயிலாக , सावित्री சாவித்திரி , स्वर्गे சொர்க்கத்தில் , महीयते கவுரவிக்கப்பட்டாள் , तथावृत्ति: அதே பாதையைப் பின்பற்றி , त्वं च நீயும் , पतिशुश्रूषया கணவனுக்கு சேவை செய்து , दिवम् tசொர்க்கத்துக்கு , याता போவாய் ஆகுக
xxx
ராம- ராவண யுத்தம் முடிந்தது. எல்லோரும் சீதை- ராமன் சந்திப்பை — 14 ஆண்டுக்குப் பின்னர் நாட்டைபெறப் போகும் சந்திப்பை — ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். தற்காலமானால் ஆயிரம் போட்டோகிராபர்களும், நூறு டெலிவிஷன் சானல் வீடியோ ஆட்களும் அ ங்கே வந்திருப்பார்கள். அப்போது சீதையைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் . நீ ஏன் நடந்து வரவில்லை என்று கேட்கிறார் ஆனால் சீதை ஒரு எதிவார்த்தையும் சொல்லவில்லை. அதே போல ஓரு சலவைத் தொழிலாளி சீதையின் கற்பு நெறி பற்றிக் கேள்வி கேட்டவுடன் , சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புகிறான் . அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை; அதாவது ராமனைத் திட்டவில்லை.
இதே போல வாழ்ந்த சிலப்பதிகாரக் கண்ணகியையும் ஒப்பிடலாம். திருமணமான பின்னரும் வேறு ஒரு ஆடல் அழகியான மாதவியிடம் போய்விட்டுத் திரும்பியபோதும் கண்ணகி ஒரு எதிர்ப்பு பேச்சும் பேசவில்லை.
மஹாபாரதத்தில் திரவுபதி மட்டும் உரிமைக்கு குரல் எழுப்புவதைப் பார்க்கிறோம்.
30. tasmaat= ஆகவேதான் ; upasarpatu= அவள் வரட்டும் ; padbhyaameva= கால் நடையாகவே ; utsR^ijya= விட்டுவிட்டு shibikaam= பல்லக்கினை ; vanaukasaH= இந்த வானரங்கள் ; pashyantu= பார்க்கட்டும் ; vaidehiim= சீதையை mama samiipe= iஎன் முன்னிலையில்
Xxx
சந்திர பாபு போன்ற நடிகர்கள் ‘உனக்காக, எல்லாம் உனக்காக; இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக’ என்று திரைப்படங்களில் பாடியிருப்பதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் ராமனோ உனக்காக நான் இதைச் செய்யவில்லை ரகு குலத்தின் பெயரை நிலை நாட்டவே செய் தேன் என்று சொல்லி சீதையை மட்டம்தட்டுகிறான் . அப்போதும் அவள் வாய்திறக்காமல் உத்தமியாகவே காட்சி தருகிறாள்
இந்த யுத்தம் , என்னுடைய நண்பர்கள் உதவி மூலம் ,வெற்றிகரமாக முடிந்துவிட்டது ; ஆனால் இதை உனக்காக நான் செய்யவில்லை நீ வளமோடு வாழ்க! இது எதற்காக செய்யப்பட்டது என்பதை எல்லோரும் அறியட்டும்.என்னைப்பற்றியும், என்னுடைய குலத்தின் பெருமைக்கு இழுக்கு உண்டாகும்படியும் குறைகூறுவோருக்காக (பதில் தரும்படி) நான் இந்த யுத்தத்தை செய்தேன் –என்கிறான் இராமபிரான்.
viditashchaastu bhadraM te yo.ayaM raNaparishramaH |
15-16. viditaH astu= நீ அறிவாயாக ; ayam yuddhaparishramaH= யுத்தம் என்ற பெயரில் நான் செய்த இது ; sutiirNaH= வெற்றிகரமாக முடிந்தது ; viiryaat=பலத்தினால் suhR^idaam= என்னுடைய நண்பர்கள் ; na kR^itaH= செய்யயப்படவில்லை ; tvadartham= உனக்காக ; te bhadram astu= நீ மகிழ்ச்சியோடு வாழ்வாயாக !; mayaa=என்னால் இது செய்யப்பட்டது ; rakShataa= எதற்காகவென்றால் ; vR^itam=என்னு டைய நன்னடத்தையை நிரூபிக்கவும் ; parimaarjitaa= துடைப்பதற்காக = அவதூறு சொல்லும் ; sarvataH= பலரையும் ; nyaNgam= குறைகூறும் பலரும் ; prakhyaatasya aatmavamshasya= என்னுடைய குலத்தைப் பற்றி
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மானேஜ்மெண்ட் வழிகள்!
கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!
ச.நாகராஜன்
நவீன மேலாண்மை நிர்வாகம் பல யுக்திகளைக் கொண்டது.
அதில் ஒன்று : கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்! என்பதாகும்.
இதை விளக்க ஒரு குட்டிக் கதை உண்டு.
அது இதோ:
ஒரு ஊரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். செல்வத்தை இன்னும் மிகுதியாகச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு வந்தது. ஆகவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்து பணத்தைச் சம்பாதிக்கலாம் என்று அவன் நினைத்தான்.
கூடவே சூக்ஷ்மமான அவன் எச்சரிக்கை புத்தி அவனை ஒரு கேள்வி கேட்டது.
“ஒரு வேளை வணிகமே செய்யமுடியாமல் போய் பணம் சம்பாதிக்க முடியாமல் நஷ்டம் அடைந்து விட்டால்? வெளி நாட்டில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?” அவன் யோசித்தான்.
“ஒரு வேளை வெளிநாட்டு வணிகத்தில் நஷ்டம் அடைந்து விட்டால் இங்கு திரும்பி வந்து விடலாம். திருப்பி இங்கேயே வணிகத்தைச் செழிக்கச் செய்யலாம். அதற்கு முதலீடாக ஒரு பெருமளவு பணத்திற்கு இங்கேயே இப்போதே வழி செய்து விட்டுப் புறப்படலாம்.”
இந்த எண்ணம் அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.
அவன் ஒரு இரும்பு வியாபாரி.
நல்ல உயர்தர இரும்புத் தண்டுகளில் 100 டன் இரும்பை எடுத்தான்.
அவற்றைத் தனது நண்பனிடம் சென்று கொடுத்து, “நண்பா! நான் வெளிநாடு செல்கிறேன். வரும் வரை இதை பத்திரமாக வைத்திரு” என்றான்.
அந்த நண்பன் ஆவலுடன் அவற்றை வாங்கிக் கொண்டு, “சரி” என்றான்.
மாதங்கள் சில கழிந்தன. வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் வரவில்லை.
உள்ள பண்டமும் போய் நஷ்டத்தில் முடிந்தது.
வருத்தத்துடன் தன் சொந்த நாடு திரும்பினான் வணிகன்.
ஆனால் அவனுக்கு ஒரு ஆறுதல், ‘100 டன் விலை உயர்ந்த இரும்புத் தண்டுகள் உள்ளனவே, அவற்றை வைத்து நல்ல நிலையை அடைந்து விடலாம்’ என்று அவன் எண்ணினான்.
நேராக நண்பனிடம் சென்று தனது வணிகம் நினைத்தபடி நன்றாக நடக்கவில்லை என்று கூறி, “உன்னிடம் கொடுத்தேனே, இரும்புத் தண்டுகள் அவற்றைக் கொடு” என்றான்.
பேராசைக்காரனான அவனது நண்பன் திடுக்கிட்டான்.
“ஐயோ! அந்தக் கதையை ஏன் கேட்கிறாய்! அவை அனைத்தையும் பத்திரமாக என் ஷெட்டில் வைத்திருந்தேன். ஆனால் எலி வந்து அவற்றைத் தின்று விட்டது. நான் என்ன செய்வேன்?” என்றான் நண்பன்.
நண்பனின் மோசடி வணிகனுக்குப் புரிந்தது.
சற்று யோசித்து விட்டு சொன்னான்; “ஆமாம், ஆமாம், பொல்லாத எலி பற்றி எனக்குத் தெரியாதா என்ன?”
நண்பனுக்கு ஒரே குஷி. அப்படியே தான் சொல்வதை அவன் நம்பி விட்டான், சண்டையும் போடவில்லை!
இருந்தாலும் தான் மிகவும் நல்லவன் என்று அவன் நம்பவேண்டும் என்று நினைத்த நண்பன் வணிகனிடம் மறுநாள் அவனுக்கு விசேஷ விருந்து ஒன்று தரப்போவதாகச் சொல்லி அவனை அழைத்தான்.
“சரி, நாளை வருகிறேன்” என்று சொல்லி விட்டு வணிகன் கிளம்பினான்.
செல்லும் வழியில் மார்கெட்டில் நண்பனின் குழந்தைகளில் ஒன்றைக் கண்டான். அந்தக் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று தன் வீட்டு அறை ஒன்றில் பத்திரமாகப் பூட்டினான்.
மறுநாள் குறித்த நேரத்தில் நண்பனின் வீட்டுக்கு வந்தான். அங்கே நண்பன் மிக்க வருத்தத்துடன் சோகமாக இருந்தான்.
“என்ன விஷயம்?” என்று கேட்டான் வணிகன்.
“மார்கெட்டிற்கு போன என் மகனை நேற்றிலிருந்து காணோம்!” என்று புலம்பினான் நண்பன்.
“ஓ! அது உன் மகனா? நேற்று திரும்பும் போது மார்கெட் வழியாகத் தான் சென்றேன். அங்கு குருவி ஒன்று ஒரு பையனை தூக்கிக் கொண்டு பறந்தது. என் கண்ணால் அதை நான் பார்த்தேன்? என்றான் வணிகன்.
நண்பன், “ என்ன உளறுகிறாய். குட்டிப் பறவை குருவி! அது என் மகனை – வளர்ந்தவனை- தூக்கிக் கொண்டு போனதாகச் சொல்கிறாய்! உன் மூளை கெட்டு விட்டதா, என்ன?” என்றான்.
“நண்பா! காலம் மாறி விட்டது இப்போது, உனக்கே தெரியும்! எலியானது நூறு டன் இரும்பைத் தின்னுகின்ற காலம் இது! ஒரு சிட்டுக்குருவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்து போகாதா, என்ன?” என்றான்.
நண்பனுக்கு இப்போது புரிந்து விட்டது, என்ன நடந்தது என்று.
உண்மையை வணிகனிடம் ஒப்புக் கொண்டான். 100 டன் இரும்பையும் திருப்பித் தந்தான்.
வணிகனும் அவனது மகனை பத்திரமாக அவனிடம் ஒப்படைத்தான்.
சரி, கதையின் நீதி என்ன?
கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்!
இது தான் இன்றைய மானேஜ்மெண்ட் யுக்தி!
உனது எதிரிகள் உனக்கு என்ன செய்கிறார்களோ அதை அப்படியே கண்ணாடி பிரதிபலிப்பது போல அவர்களுச் செய்து விடு! அவர்களுக்குப் புரிந்த பாஷையில் நீ சொல்ல வேண்டியதைச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்! அவர்கள் உனக்குக் கையாண்ட அதே முறையை திருப்பி விடு – கண்ணாடி பிரதிபலிப்பது போல!
உனக்கு வெற்றி நிச்சயம்
இது இந்தியாவின் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நீதிக் கதைகளுள் (Indian Fables) ஒன்று.
‘THE 48 LAWS OF POWER’ என்ற தனது புத்தகத்தில் Robert Greene இதை ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார்! (464 பக்கங்கள்)
Disarm and infuriate with the Mirror Effect! இது தான் அவர் கூறும் நாற்பத்தி நான்காவது விதி!
இந்தியா பூவுலகின் புண்ய பூமி. உலகின் தாயகம். இது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட தேசம் என்பதை சம்ஸ்கிருத சுபாஷிதம் ஒன்று இப்படித் தெரிவிக்கிறது:
ஹிமாலயம் சமாரம்ய யாவத் இந்து சரோவரம் | தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே ||
இமய மலையில் ஆரம்பித்து இந்து மாகடல் வரை எது எல்லையைக் கொண்டுள்ளதோ அது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட ஹிந்துஸ்தானம் என்று அறியப்படுவதாகும். புவியில் வாழும் அனைவரும் பாரத தேசத்தின் ரிஷிகளிடமிருந்து எப்படி வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைக் கற்க வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி.
இந்தப் பூமியில் வசிக்கும் அனைவரும் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றியும் நல்லொழுக்கம் கொள்வது பற்றியும் இந்த தேசத்தின் (பாரதத்தின்) புராதன ரிஷிகள், மகான்கள் ஆகியோரிடமிருந்து கற்க வேண்டும் – (மனு ஸ்மிருதி)
எல்லையற்ற இதன் பெருமையை பல்லாயிரக் கணக்கான சம்பவங்கள் அன்றிலிருந்து இன்று வரை நிரூபித்துள்ளன; நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
கடல் போன்ற அந்த சம்பவங்களில் ஒரு சில திவலைகளைக் கட்டுரைகளாகப் படைத்து வந்தேன்.
இந்தியாவின் மேன்மையைச் சுட்டிக் காட்டும் கட்டுரைகள் இப்போது பல பத்திரிகைகளிலும் ப்ளாக்குகளிலும் வெளியாகி வருகின்றன.
அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து அவ்வப்பொழுது ஆங்கிலத்தில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் வார இதழான ‘ட்ரூத்’ – TRUTH வெளியிட்டு வருகிறது. அவற்றில் பலவற்றை அவ்வப்பொழுது தமிழாக்கம் செய்து தமிழ் வாசகர்களுக்கு அளித்து வந்தேன்.
இது போன்ற நல்ல கட்டுரைகளை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் https://sdpsorg.com/truth இணைய தளத்தில் படிக்கலாம்.
‘ட்ரூத்’ ஆசிரியர் டாக்டர் திரு ஷிப் நாராயண் சென் (Dr. Shib Narayan Sen) உற்ற நண்பராக இருந்து எனக்கு அவ்வப்பொழுது ஊக்கமும் உற்சாகமும் தந்து வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.
இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச. நாகராஜன் 31-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியிடப்பட்டது .
இந்து மதம் ஒன்றில்தான் பெண்ணுக்கு சம உரிமை அளிக்கப்படுகிறது. இதை அர்த்த நாரீஸ்வரர் சிற்பம் விளக்குகிறது (சிவன் பாதி, உமை பாதி உருவம்). மனைவிக்கு வேதத்தில் அர்த்தாங்கினி என்று பெயர். இதை இன்று ஆங் கிலத்தில் தி அதர் ஹாப் THE OTHER HALF என்கின்றனர். இந்து மதத்தில் வாம/ இடது பாகத்தைப் பெண்களுக்கு அளித்தனர். இதை கிறிஸ்தவர்கள் அப்படியே எடுத்துக் கொண்டனர். பைபிளின் முதல் அதிகாரத்திலேயே ஆணின் இடது விலா எலும்பை எடுத்து இறைவன் பெண்ணை உருவாக்கினான் என்று கிறிஸ்தவர்கள் எழுதிவைத்தனர். அர்த்த நாரீஸ்வரர் சிலையில் இடது பக்கம் உமை /பார்வதி இருப்பதைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்டனர். பெண்களுக்கு தர்ம பத்தினி என்று இந்து மதத்தில் பெயர்; அதாவது அவள் இல்லாமல் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது; செய்ய முடியாது. பிற மதங்களில் பெண்களுக்கு இந்த பங்கு, பணி விதிக்கப்படவில்லை. யாக யக்ஞங்களில் அவர்கள் அருகில் நிற்பதோடு அவர்கள் ஒரு தர்ப்பைப் புல்லின் மூலம் கணவனின் தோளைத் தொட்டுக்கொண்டு நிற்பார்கள். அதாவது அவர்கள்தான் BATTERY பாட்டரி; அவர்கள் மூலம் கரண்ட் பாய்ச்சப்பட்டவுடன்தான் கணவர் சக்தி பெறுகிறார். நான் இல்லாமல் நீ இல்லை என்று சொல்லுவது போன்றது இது.
XXX
இவைகளை வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா .)காண்போம்
சீதையை காட்டுக்கு வரவேண்டாம் ஏனெனில் சிங்கம், புலி உலவும்; காலில் முள் குத்தும்; மேலும் சந்நியாசி (No sex; celibate life) வாழ்க்கை என்று எச்சரிக்கிறான்; சீதையோ கணவன் இருக்கும் இடமே சொர்க்கம்; ராமன் இருக்கும் இடமே அயோத்தி ; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை! சாமியே ராமப்பா என்கிறாள் .
மனைவி என்பவள் பிறவிதோறும் தொடர்ந்து வருபவள்; இதற்கு சங்கத் தமிழ் நூல்களும் இயம்பும். எற்றறைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் (ஆண்டாள் திருப்பாவை 29) என்று சீதை கூறுகிறாள்:
“ராகவா! (ரகு வம்ச ஆண் மகனே), நீ இப்போதே காட்டுக்குப் புறப்பட்டால் , உனக்கு முன்னே நான் முட்களையும், புல்லையும் நசுக்கிக்கொண்டு நட ப்பேன் — என்று சீதை சொல்கிறாள். அதாவது உனக்கு மெத்தை போன்ற பாதையைப் போட்டுத் தருவேன்”.
राघव ராகவா , अद्यैव இப்போதே , त्वम् நீங்கள் , दुर्गम् ஊடுருவ முடியாத , वनम् காட்டுக்கு , प्रस्थितः यदि புறப்பட்டால் कुशकण्टकान् குச புற்கள், முட்கள் மீது , मृद्नन्ती நசுக்கி மெதுவாக்கிக்கொண்டு , ते अग्रतः iஉனக்கு முன்னால் , गमिष्यामि I நான் செல்வேன்
யதி த்வம் பிரஸ்திதோ துர்கம் வானம் அத்யைவ ராகவ
அக்ரதஸ்தே கமிஷ்யாமி ம்ருத்நந்தி குச கண்டகான்
தமிழில் காதலிக்குத்தான் காதலன் இதைச் செய்வதாகக் காண்கிறோம். ஆனால் வால்மீகியோ காதலி (சீதை இதைச் செய்வதாகக் கூறுகிறார்.
XXX
भर्तुर्भाग्यं तु भार्यैका प्राप्नोति पुरुषर्षभ।
अतश्चैवाहमादिष्टा वने वस्तव्यमित्यपि।।2.27.4।।
पुरुषर्षभ ஆண்களில் சிறந்தவனே , भर्तुर्भाग्यं tகணவனுக்கு எதுவோ , एका அதை மட்டுமே , भार्या மனைவி , प्राप्नोति அடைகிறாள் , अतश्च ஆகையால் , अहमपि நானும் கூட , वने காட்டில் t, वस्तव्यमिति வசிக்கவேண்டும் l, अदिष्टा एवஎன்பதே கட்டளை (உன்னுடைய சின்னம்மா போட்ட உத்தரவு உனக்கு மட்டுமல்ல; எனக்கும்தான். ஏனெனில் ஆணும் பெண்ணும் ஒன்னு ; அதை அறியாதவன் வாயில மண்ணு )– என்று சீதை செப்புகிறாள்
பர்த்து பாக்யம் து பார்யைகா ப்ராப்னோதி புருஷ ஷர்ப
அதஸ் சைவா ஹமாதிஷ்டா வனே வஸ்த்வயம் இதி அபி
XXX
சீதா தேவி, கணவனுக்கு ஆலோசகராகவும் காட்சி தருகிறாள் (வா.ரா. 3-9-3/4)
காமம் காரணாமாக 3 தீமைகள் ஏற்படுகின்றன.முதலில் பொய் சொல்லுவான், அதைவிடக் கொடுமையானது பிறர் மனைவி மீது ஆசைவைப்பான்;காரணமே இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவான் ; கடைசி இரண்டும் மிகவும் கொடுமையானவை — என்று சீதை உரைக்கிறாள்
त्रीण्येव व्यसनान्यत्र कामजानि भवन्त्युत।
मिथ्यावाक्यं परमकं तस्माद्गुरुतरावुभौ।।3.9.3।।
परदाराभिगमनं विना वैरं च रौद्रता।
अत्र இங்கே(இந்த சூழ்நிலையில் ), कामजानि காமத்தினால் ஏற்படும் , व्यसनानि தீயவை , त्रीण्येव மூன்று மட்டுமே , उत தான் , भवन्ति இருக்கின்றன , मिथ्यावाक्यम् பொய் சொல்லுதல் , परमकम् அதிலும் பெரிது , परदाराभिगमनम् மற்றவர் மனைவியுடன் கொள்ளும் தொடர்பு विना वैरम् விரோதமே இல்லாதபோது , रौद्रता வன்செயலில் ஈடுபடுதல் , उभौ இந்த இரண்டு तस्मात् ஆக , गुरुतरौ மோசமானவை .
த்ரீயமேவ வ்யஸனானி அத்ர காமஜானி பவந்த் யுத
மித்யாவாக்யம் தஸ்மாத் குரு தரா உபெள பரதாராபிகமனம்
வினா வைரம் ச ரெளத்ரதா
XXX
வாலியின் மனைவி தாரா மகனைவிட, கணவனை அதிகமாக நேசிக்கும் காட்சியையும் படம்பிடித்துக் காட்டுகிறார் புலவர் வால்மீகி: (வா.ரா. 4-19-18)
पुत्रेण मम किं कार्यं राज्येनच किमात्मना।
कपिसिंहे महाभागे तस्मिन्भर्तरि नश्यति4.19.18।।
புத்ரேண மம கிம் கார்யம் ராஜ்யேன ச கிம் ஆத்மனா
கபி ஸிம்ஹே மஹாபாகே தஸ்மின் பர்த்தாரே நஸ்யதி
कपिसिंहे வானர வம்சத்தில் சிங்கம் போன்ற , महाभागे மிகச்சிறந்த , तस्मिन् அவர் , नश्यति सति இறந்துகொண்டு இருக்கிறார் , मम எனக்கு पुत्रेण என்னுடைய மகனால் , किं कार्यम् என்ன பயன் राज्येन (अपि) च இந்த ராஜ்யம் கூட , आत्मना என் உயிரும் கூட , किम् இருந்து என்ன /பயன்??
சிங்கம் போன்ற என் கணவன் இறந்த பின்னர் என் மகனால், ராஜ் யத்தால் என்ன பயன் ? உயிர் வாழ்ந்து என்ன பயன் ? – இது வாலியின் மனைவியின் புலம்பல்/அழுகை
TO BE CONTINUED………………………………..
Tags- வால்மீகி , ராமாயணம், பெண்கள், பகுதி 2, தாரா, வாலி சீதை
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி முப்பத்தி ஒன்று!
ச.நாகராஜன்
1. மெஷின்களுக்கு நாம் மெஷின்கள் இல்லை என்று நிரூபிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம்!
We live in an age where we have to prove to machines that we are not machines!
2. வயதாக ஆக எனக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒத்துப் போகும் பல விஷயங்கள் உள்ளதைக் கண்டு கொண்டேன்.
இருவரும் நிறைய மெமரி, டிரைவுடன் ஆரம்பித்தோம். அப்புறம் இருவரும் அவுட் டேட் ஆகி விட்டோம். திடீரென்று இருவரும் எதிர்பாராத விதமாக க்ராஷ் ஆகி விட்டோம். இதன் விளைவாக இருவருமே பார்ட்ஸ்களை மாற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். – வயதான ஒரு பெண்மணியின் கண்டுபிடிப்பு
The older I get more I have in common with Computers.
We both start out with lots of memory and drive, then we become outdated, crash unexpectedly, and eventually have to have our parts replaced.
– An old woman’s findings
3. நான் உங்களது நவீன வசன கவிதை சிலவற்றைப் படித்தேன். அதை (கவிதையை கழட்டி விட்டு விட்டு) வசனமாக்கியது யார் என்று தான் ஆச்சரியப்படுகிறேன். – ஜான் பாரிமோர்
John Barrymore: I have read some of your modern free verse and wonder who set it free
4. வசன கவிதை எழுதுவது என்பது நெட்டை தலைகீழாக்கி டென்னிஸ் விளையாடுவது போலத் தான். – ராபர்ட் ஃப்ராஸ்ட்
Robert Frost: Writing free verse is like playing tennis with the net down.
5. நீங்கள் கவிதை எழுத விரும்பினால் பிழைப்புக்கு வேறு ஏதேனும் ஒரு வழி இருக்க வேண்டும். – டி.எஸ். எலியட்
T S Eliot: If you want write poetry you must earn a living some other way.
6. மொழி என்பது எளிதாக்கப்பட்ட சமிக்ஞை. கவிதை என்பது எளிதாக்கப்பட்ட மொழி! – ஃப்ரான்ஸிஸ் ஸ்கார்ஃப்
Francis Scarfe: Language is simplified gesture and poetry is simplified language.
7. கவிதை என்பது குரலுடன் நடனமாடுவது போன்ற ஒன்று.
Poetry is a sort of dancing with the voice
8. வசன கவிதை: மீட்டரின் மீதான மனதின் வெற்றி!
Free verse: The triumph of mind over meter.
9. நான் ஒரு ஹாலிவுட் எழுத்தாளர். ஆகவே எனது மூளையைக் கழட்டி வைத்து விட்டு ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டிருக்கிறேன். – பென் ஹெஸ்ட்
Ben Hecht : I’m a Hollywood writer, so I put on a sports jacket and take off my brain.
10. காலம் ஒரு சர்க்கஸ், மூட்டை கட்டிக்கொண்டு நகர்ந்து கொண்டே இருக்கும்.
Time is a circus always packing up and moving away.
11. வார்த்தைகள் உங்களை ஒரு எண்ணத்தைச் சிந்திக்க வைக்கும். இசை உங்களை ஒரு உணர்வை உணர வைக்கும். பாட்டு உங்களை ஒரு எண்ணத்தை உணர வைக்கும். ஸாண்டிஸ்
ஈ.ஒய். ஹார்பர்க் மேற்கோள் (1896-1981 அமெரிக்காவின் பிரபலமான பாடலாசிரியர், இடதுசாரி சிந்தனையுள்ளவர்)
“Words make you think a thought. Music makes you feel a feeling. A song makes you feel a thought.” santiz
E. Y. Harburg quotes (1896-1981 american popular lyricist leftist views sympathizer)
12. கஞ்சனுக்கு எப்போதும் தேவை உண்டு!
The miser is always in want!
13. தொட்டிலை ஆட்டும் கையே உலகை ஆள்கிறது!
The hand that rocks the cradle rules the world!
14. போதை மருந்தைப் புகைப்பவன் எப்படியாவது போதை மருந்தைக் கண்டுபிடிப்பான்.
An opium smoker will always find opium.
15. கர்வமுள்ள ஒருவனின் மனமும் ஒரு பிச்சைக்காரனின் திருவோடும் என்றுமே ஒத்துப் போகாது.
A proud mind and a beggar’s purse agree not together.
16. நர்ஸ்கள் குழந்தைக்கு ஒரு துண்டு இனிப்பைக் கொடுத்து விட்டு அந்தச் சாக்கில் இரண்டு துண்டை தன் வாயில் போட்டுக் கொள்வர்.
Nurses put one bit in the child’s mouth and two in their own.
17. அவனை நான் ஏன் அடித்தேன் என்றால் அது உன்னை பயமுறுத்தத் தான்!
I beat him to frighten you!
18. ஒரு எதிரி என்பது மிகவும் அதிகம், நூறு நண்பர்கள் என்பது மிகவும் குறைவு!
One enemy is too many, a hundred friends too few.
19. வெப்பத்தைத் தாங்க சக்தி இல்லையெனில், சமையலறைக்குள் போகாதே!
If you can’t take the heat, stay out of the kitchen.
20. நடப்பது நடந்தே தீரும்!
What will be, will be!
21. துரோகம் செய்யும் நண்பனை விட வெளிப்படையாக உள்ள எதிரியே மேல்!
Better an open enemy than a false friend!
22. வறுமை வாசல் கதவைத் தட்டி விட்டு உள்ளே வரும் போது, காதல் ஜன்னல் வழியே வெளியே பறக்கும்!
When poverty comes in at the door, love flies out of the window!
23. நாற்பது வயதிலும் நீ முட்டாள் என்றால் நிஜமாகவே நீ ஒரு முட்டாள் தான்!
A fool at forty is a fool indeed!
24. அவன் போப்பை விட பெரிய கத்தோலிக்கன்!
More catholic than the Pope!
25. நாக்கே தலையைக் காக்கும்!
The tongue is the protector of the head!
26. தாடி, கத்தரிக்கோல்- இரண்டுமே உன்னிடம் தான் இருக்கிறது!
The beard and the scissors are both in your hand!
27. பள்ளத்திலிருந்து வெளியே வந்தவன் கிணற்றில் விழுந்தானாம்!
Came out of the ditch and fell into the well!
28. மதில் மேல் எலிகள் உண்டு, எலிகளுக்கு காதுகள் உண்டு!
There are mice in the wall, and mice have ears.
29. சாவைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு!
There is a remedy for everything but death!
30. தூக்கம் என்பது சாவின் சகோதரன்!
Sleep is the brother of death!
31. அவர்களை ஜெயிக்க முடியவில்லை என்றால், அவர்களோடு சேர்ந்து விடு!
If you can’t beat them, join them!
பல தேசங்களில் வழங்கும் பழமொழிகள் ஒரே மாதிரியாக இருப்பது அதிசயமே! எங்கு வாழ்ந்தாலும் மனிதர்கள், மனிதர்களே!!
அது ஒரு தத்துவம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று பலரும் புகழ்ந்து பாராட்டும் சனாதன தர்மத்தில் மனிதனின் வாழ்க்கையை உயர்த்திச் செல்லும் ஏராளமான இரகசியங்கள் உள்ளன.
பிறந்தது முதல் இறப்பது வரை கர்ம பலன்களை அனுபவிப்பது உறுதி என்ற தலையாய கொள்கையை இந்து மதம் தருகிறது.
அதே சமயம் உன் தலை விதியை நீயே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் அது வலியுறுத்துகிறது.
தர்ம, அர்த்த, காமம் இவற்றுடன் மோக்ஷத்திற்கான வழியையும் காண்பித்து வாழ்வாங்கு வாழ வழி வகுக்கிறது சனாதன தர்மம்!
அதாவது உன்னை நீயே உயர்த்திக் கொள் என்பது இந்து மதத்தின் சாரம்.
இதற்கான வழிமுறைகளை, இரகசியங்களை நமது வேதம், புராணம், இதிஹாஸம், உபநிடதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றில் காணலாம்.
இந்த வழிமுறையில் தோன்றிய ரிஷிகள், அருளாளர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஏராளமான துதிகளையும் இதர வழிமுறைகளையும் நாம் மேம்படுவதற்காக நமக்கு வழிகாட்டி அருளியுள்ளார்கள்.
அவற்றைச் சுட்டிக் காட்டி பல கட்டுரைகளை ஞான ஆலயம், மாலை மலர் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்துள்ளேன்.
அவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரைகள்.
இவற்றை அவ்வப்பொழுது வெளியிட்டு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த மாலைமலர் அதிபர் திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும், தமிழ் அண்ட் வேதாஸ் ப்ளாக்கைத் திறம்பட கடந்த பல வருடங்களாக நடத்தி வரும் லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.
இந்த நூலை அழகுற வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஸ்அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது வியக்கத்தக்க வகையில் எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இந்தக் கட்டுரைகள் காட்டும் நெறிகள் மூலம் ஒருவர் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் நெஞ்சங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச. நாகராஜன் 23-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.