புனர்ஜென்மம் (Rebirth) உண்டா?- Part 1 (Post No.9253)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9253

Date uploaded in London – –12 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.

IF YOU WANT TO LISTEN TO THE TALK , PLEASE  GO TO FACEBOOK.COM/ GNANAMAYAM

புனர்ஜென்மம் உண்டா?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

புனர் ஜென்மம் உண்டா என்பதைத் தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆவல் உண்டு. ஹிந்துமதக் கொள்கையின் படி புனர்ஜென்மம் உண்டு. இதை ஜைனம் மற்றும் பௌத்தமும் வலியுறுத்துகின்றன. ஆனால் செமிடிக் மதங்கள் எனப்படும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் இதை ஒப்புக் கொள்வதில்லை.

புனர்ஜென்மம் உண்டா என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

இப்போது கூறப்போகும் பலருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?

காஞ்சி மஹா பெரியவாள், சிருங்கேரி ஆசாரியாள், பிளேட்டோ, பித்தகோரஸ், மஹாத்மா காந்திஜி, லியனார்டோ டா வின்சி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், கவிஞர் ஷெல்லி, எமர்ஸன், மாஜினி, தோரோ, தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு, கார்ல் ஜங் – என்ன, சம்பந்தமே இல்லாமல் நாடு, மதம், தொழில் என்பதைத் தாண்டி இவர்கள் அனைவருக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா? இவர்கள் அனைவருமே மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களே!

கர்ம பலனை சனாதன தர்மமான ஹிந்து மதம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.

பகவான் கிருஷ்ணர் கீதையில் நைந்து போன உடைகளைக் களைவது போல பழைய சரீரங்களை உதறி விட்டு புதிய சரீரங்களை ஆன்மா எடுக்கிறது என உபதேசிக்கிறார்.

முன் பிறப்பில் தம் சிஷ்யர்களாக இருந்தவர்களைத் தம்மிடம் ஈர்ப்பதை ‘ருணானுபந்தம்’ என்று ஷீர்டி சாயி பாபா கூறுவார்.

ஒருமுறை அவர் வழிநடையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாம்பு, தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதையும் தவளை தப்பிக்கப் போராடுவதையும் பார்த்து விட்டு, “என்ன, இன்னுமா உங்கள் சண்டை முடியவில்லை?” என்று உரக்கக் கூவினார். உடனே பாம்பும் தவளையும் வெவ்வேறு பாதையில் விலகி ஓடின. அருகிலிருந்தோர் ஆச்சரியத்துடன் பாபாவிடம், என்ன நடந்தது என்று விவரிக்குமாறு வேண்ட, அவர் கூறினார் இப்படி: “போன ஜென்மத்தில் விரோதிகளாக இருந்த இவர்களின் விரோதம் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. நான் அவர்களைக் கூப்பிட்டவுடன் முன் ஜென்ம நினைவு வந்து வெட்கப்பட்டு ஓடிவிட்டனர்” இப்படிச் சொன்னார் பாபா!

இது போன்ற முன் ஜென்மம் பற்றிய சம்பவங்களை பல மகான்களும் சொல்லி இருப்பதை அவர்கள் வரலாறு கூறும்.

நம்முடைய இதிஹாஸ புராணங்கள் இறைவனது அவதாரங்களுக்கும் கூட பூர்வ ஜென்மம் இருப்பதை விளக்குகின்றன. மஹாபாரதம் அதில் வரும் வீரர்கள் முன் ஜென்மத்தில் யாராக இருந்தார்கள் என்பதை மிக விரிவாகவே விளக்குகிறது. ஹிரண்யகசிபுவே சிசுபாலன் என்றும் பிரகலாதனின் தம்பியான சம்ஹ்லாதனே சல்லியன் என்றும் இப்படி ஒவ்வொருவரின் முன் பிறப்பையும் சம்பவ பர்வம் விளக்குகிறது!

பர்மாவில் முன் ஜென்மங்களை விவரிக்கும் குழந்தைகளை ‘வின்ஜா’ என்று அழைக்கின்றனர்.

 இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க தளபதியாக இருந்த பிரபலமான ஜெனரல் பாட்டன் (George S Patton) தனது முந்தைய ஜென்மங்களின் விவரங்களை உள்ளுணர்வு மூலம் அறிய முடிகிறது என்று கூறி இருக்கிறார்.

வரலாற்று முந்தைய கால போர்வீரனான சைரஸ் மன்னனுக்கு எதிராகப் போரிட்ட கிரேக்க படைவீரன், ஜூலியஸ் சீசரின் படை தளகர்த்தன், அலெக்ஸாண்டர் படையில் ஒரு போர்வீரன், க்ரேஸி யுத்தத்தில் ஆங்கிலப் படையின் போர்வீரன், நெப்போலியனின் படையில் ஒரு தளகர்த்தன் என்று இப்படி தனது முந்தைய ஜென்மங்களை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

 மறுபிறப்பு என்ற கொள்கையை நம்பாதவர்கள் பல கேள்விகளை எழுப்புவர். இந்தக் கேள்விகளை ஆராய்ந்து தர்க்க ரீதியாக அன்னிபெஸண்ட் அம்மையார் தனது ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற நூலில் பதில் தருகிறார்.

    இந்தக் கேள்விகளுள் முதல் கேள்வி : – போன ஜென்மத்தைப் பற்றிய ஞாபகம் ஏன் அனைவருக்கும் இல்லை? இதற்கு அவர் தரும் பதில் :- “மூளையில் உள்ள உணர்வு முழுதுமானதில்லை. இதற்கு அப்பாற்பட்ட முழு உணர்வு ஒன்று இருக்கிறது. அதை ஒருவன் உணரும் போது அவன் எடுத்த அனைத்து ஜென்மங்களைப் பற்றியும் அவனால் கூற முடியும்”.

     அடுத்த கேள்வி:- “உலக ஜனத்தொகை அதிகமாகி வருகிறது. அதிகப்படியான உயிர்கள் எப்படி எங்கிருந்து வந்தன?”

இதற்கு அவர் தரும் பதில் :- “பிறக்க வேண்டிய உயிர்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்தோடு அவைகள் மறு ஜென்மம் எடுக்கும் கால இடைவெளி முறை வேறுபடுகிறது. தேவைக்கு ஏற்றபடி உயிர்கள் பிறக்கவே, ஜனத்தொகை கூடலாம் அல்லது குறையலாம். அது தவிர உலகத்தின் ஜனத்தொகையை அவ்வப்பொழுது எடுப்பது என்பது இயலாத காரியம். ஆகவே இந்த வாதம் சரியல்ல.”

  மறுபிறவி ஜென்மம் பற்றி விவாதிக்க ஒரு மேலை நாட்டுப் பெண்மணி காஞ்சி பரமாசார்யாளை – மஹா பெரியவாளை- பார்க்க வந்தார். தன்னைப் பார்க்க வந்த அவரை மஹா பெரியவாள், முதலில் அவர் உள்ளூர் பிரசவ ஆஸ்பத்திரிக்குச் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்த்து அங்கு இருப்பதை நுணுக்கமாக அறிந்து வருமாறு கூறினார். அவரும் அப்படியே ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று எல்லாவற்றையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அறிந்து வந்தார். பரமசார்யாள் அவரை நோக்கி, “என்னவெல்லாம் பார்த்தாய்?” என்று கேட்டார்.

ஒரு குழந்தை சிவப்பு, இன்னொரு குழந்தை கறுப்பு, ஒருவர் பக்கத்தில் ஏராளமான உறவினர் சூழ்ந்து குதூகலமாக இருக்கின்றனர், இன்னொரு குழந்தையோ தாயுடன் மட்டும் இருக்கிறது என்று இப்படி தான் கண்ட விதவிதமான பல வேறுபாடுகளை விலாவாரியாக உற்சாகமாக விவரித்துக் கொண்டே வந்தார். திடீரென்று அவருக்குப் பொறி தட்டியது. மறுஜென்மம் பற்றி தான் விவாதிக்க வந்து பதிலைப் பெறுவதற்குப் பதிலாக அதற்குத் தானே விளக்கமாக பதில் அளித்துக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

பரமாசார்யாள் பின்னர் விளக்கினார். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும் பல வேறுபாடுகளும் கூடவே வருகின்றன. இந்த வேறுபாடுகளுக்கு முன் வினையே காரணம்! அதாவது கர்ம பலனே காரணம்!

இதை உணர்ந்து கொண்ட அவர் விக்கித்துப் போனார்!

   மறுபிறவியை இப்படி காரண காரியத்துடன் மதங்கள் விளக்கும் போது அறிவியல் ரீதியாக அதை அணுகி ஆராய பலரும் முயன்றுள்ளனர். இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் இயான் ஸ்டீவன்ஸன்.

வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவன்ஸன் 1040 கேஸ்களை நேரடியாக ஆராய்ந்தார்.1974ஆம் ஆண்டு வெளி வந்த ட்வெண்டி கேஸஸ் சஜெஸ்டிவ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்” (Twenty Cases Suggestive of Re incarnation) மற்றும் 1975இல் வெளிவந்த ‘கேஸஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன் டைப்’ (Cases of Reincarnation type) ஆகிய அவரது இரு நூல்கள்  உலகையே பரபரப்புள்ளாக்கின. தான் ஆராய்ந்த இருபது கேஸ்களை விளக்கமாக விவரித்த  ஸ்டீவன்ஸன் மறு ஜென்மத்தை மறுக்க இயலவில்லை என்று கூறினார்.

1937இல் இந்தியாவையே பரபரப்புள்ளாக்கிய சாந்தி தேவி கேஸும் இந்த இருபது கேஸ்களில் ஒன்று.

TO BE CONTINUED………………………………………….

 TAGS — புனர்ஜென்மம் ,Rebirth,  உண்டா, 

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 35 (Post.9252)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9252

Date uploaded in London – –11 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -35

3-4-45

Upamane…….

UPA becomes UVA in Tamil

P= V

UVA mai is used by Tolkappiar, Valluvar and other Sangam Tamil poets

Tolkappiam even has a chapter titled Uvamai Iyal

இது முக்கியமான பாணினி சூத்திரம். உபமா என்ற சொல்லினை இந்த சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே காண்கிறோம்.

தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் ஒரு இயலுக்கே இந்த ஸம்ஸ்க்ருதப் பெயரை சூட்டியுள்ளார். உவமை இயல் – வள்ளுவர் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லலைக் கையாளுகிறார் சங்கப்  புலவர்களும் இதைப்  பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் ‘ப’ என்ற எழுத்தை ‘வ’ என்று மாற்றியதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

Xxx

3-4-47

Muula in Tamil is Mullangi

மூல என்ற காய்கறி தமிழில் முள்ளங்கி ஆனது

Seen already.

Xxx

3-4-48

Commentators use Danda for punishment

‘தண்டம்’ என்றால் அபராதம், ‘தண்டி’ என்றால் அவனுக்கு ‘தண்டனை’ கொடு

இவை அனைத்தும் தமிழர்கள் இன்றும் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்

Tamils use Dandam for fine.

Dandi as a verb for punish

Xxx

3-4-49

Saptamyam for seven

சப்தமி – ஏழாம் நாள், ஏழாம் வேற்றுமை.

‘சப்த’ ஆங்கிலத்தில் செப்டம்பர் என்ற மாதமாக இன்றும் பயன்படுத்துகின்றனர். காலண்டர் மாற்றப்பட்டவுடன் அது ஒன்பதாவது மாதமானது

In the month of September, originally Seventh month

Sapta = seven

Xxxx

3-4-51

Pramaanam

Maana for measure is in Tirukkural

பிரமாண

என்பதிலுள்ள மாண என்பதற்கு  அளவு என்று பொருள். சுமேரியர்கள் மான =அளவு பயன்படுத்தினர். வள்ளுவர் மாணப் பெரிது என்பார் . மணங்கு என்பது தமிழில் ஒரு எடை

In Sumer it is (mana) used

Xxx

3-4-54

Commentators use

Kathyathi for spoke

Valmiki also used it

Sri Lankan Tamils use it until today

கதைக்கிறார்கள் – பாஷ்யக்காரர்கள் ‘கதயதி’ = பேசுகிறான் என்ற உதாரணம் தந்துள்ளனர். வால்மீகி ராமாயணத்தில் இந்த வினைச் சொல்லைக் காணலாம்.

இலங்கைத் தமிழர்கள் நாள்தோறும் பேச்சு வழக்கில் ‘கதைக்கிறான்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.!!!

Xxx

3-4-58

Panini used naama

நாம என்ற சொல்லை பாணினி பயன்படுத்துகிறார். ஆங்கிலத்தில் அது நேம் name என்றும் பிராமண தமிழில் அது நாமதேயம் என்றும் ஆனது

Naama is name

Xxx

3-4-71

Panini used aadhi

ஆதி அந்தம் = துவக்கம் முடிவு என்பது இந்திய முழுதும் உளது.

In the beginning is Aaadhi

Used in Tamil

Xxx

3-4-73

Dasa

தாச என்றால் கொடு

இந்த வினைச் சொல் ‘தா’ என்பதில் உளது . அதிலிருந்து தானம், டொனேஷன் donation முதலிய சொற்கள் பிறந்தன

Give

In Tamil ‘thaa’ is to give

Xxx

இத்துடன் டாக்டர்  கு. மீனாட்சி மொழிபெயர்த்த பாணினியின் அஷ்டாத்யாயியின் முதல் பகுதி முடிவடைந்தது. அவர் தமிழில் மொழிபெயர்த்த பாணினி இலக்கணத்தில் மொத்தம் மூன்று பாகங்கள் உள . அவரது மொழிபெயர்ப்பில் கிடைத்த சொற்கள் மீது எனது கருத்தை இதுவரை எழுதினேன்

-தொடரும்

tags- Tamil in Panini 35

திரைப்படங்களில் பாரதியார்! – 2 (Post No.9251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9251

Date uploaded in London – –11 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.

திரைப்படங்களில் பாரதியார்! – 2

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதியார் பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றதைப் பற்றி முந்தைய எனது உரையில் சிறிது பார்த்தோம். இதோ அதைத் தொடர்வோம்.

ஏ.வி.எம்.செட்டியார் அவர்கள் நாம் இருவர் படத்தைத் தொடர்ந்து 1948இல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வேதாள உலகம் என்ற படத்தை வெளியிட்டார். இதிலும் மஹாகவி பாரதியாரின் பாடல்கள் இடம் பெற்றன. ஓடி விளையாடு பாப்பா, தீராத விளையாட்டுப் பிள்ளை, விடுதலை விடுதலை, கொட்டுமுரசே ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

‘ஓர் இரவு’ படத்திலும் பாரதியார் பாடல் இடம் பெற்றது. வாழிய செந்தமிழ் பாடல் மூலம் இந்தத் தொடரைச் சொல்லி கூட்டத்தைத் தொடங்குவது, முடிப்பது போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.

பராசக்தி படம் 1952இல் வெளியானது. அதில் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடலை அற்புதமாகப் பாடினார். இந்தக் கால கட்டத்தில் பாரதியார் தமிழ்க் கவிஞர் என்ற நிலையிலிருந்து இந்தியாவின் எழுச்சி மிகு கவிஞர் என்ற நிலைக்கு ஏற்றம் பெற்று பின் உலக மஹா கவிகளுடன் ஒப்பிடப்பட்டு திறனாய்வு செய்யப்படலானார்.

‘சுவை புதிது, நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மா கவிதை’ என்ற சொல்லுக்கு இணங்க அவரது கவிதைகள் உலக அளவில் உலா வரலாயின.

நல்ல பல தமிழ்ப் படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறலாயின. குறிப்பாகக் கப்பலோட்டிய தமிழனில் மறக்க முடியாத பாடல்கள் இடம் பெற்றன. ஜி.ராமநாதன் இசை அமைப்பில் திருச்சி லோகநாதன் பாடிய என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது.

பி.பி. சீனிவாஸ், பி.சுசீலா பாடிய காற்று வெளியிடைக் கண்ணமா பாடலுக்கு ஜி.ராமநாதன் அமைத்த இசை அமைப்பைப் போற்றாதவர் இல்லை.

‘உயிர் தீயினிலே வளர் ஜோதியே’, ‘எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்’, ‘துயர் போயின போயின துன்பங்கள்’ போன்ற சொற்றொடர்கள் எத்தனை முறை சொன்னாலும், கேட்டாலும் இன்பம் பயப்பவை.

பி.சுசீலா மற்றும் பி.பி. சீனிவாஸ் தங்கள் அமுதக் குரலில் இதை உணர்ச்சியுடன் பாடக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் பட்டியலில் முதலிடத்தில் இதைச் சேர்ப்பது வழக்கமாயிற்று.

பாரதியாரின் உண்மையான கவித்துவத்தின் மகத்துவம் பிரகாசிக்க பிரகாசிக்க தமிழ் உலகம் அவரைப் போற்றிப் போற்றிப் பெருமைப்படலாயிற்று, தமிழ்த் திரையுலகமும் அவரது பாடல்களை பல்வேறு விதமாகப் பயன்படுத்திப் பலன் அடைந்தது.பெருமை பெற்றது.

‘படிக்காத மேதையாக’ நடித்து நடிப்பின் சிகரத்தில் ஏறிய சிவாஜி கணேசனையும் அவருக்கு ஈடு கொடுத்து அற்புதமாக நடித்த எஸ்.வி. ரங்காராவையும் தமிழ்த் திரைச் சரித்திரம் மறக்காது. அவர்களின் உறவை அற்புதமாகச் சித்தரிக்க பாரதியாரின் ஒர் பாடல் துணை நின்று ‘படிக்காத மேதை’ படத்தின் கதையையே சுருக்கமாகச் சொல்லி விட்டது.

‘எங்கிருந்தோ வந்தான்     இடைச்சாதி நான் என்றான்

ஈங்கிவனை யான் பெறவே    என்ன தவம் செய்து விட்டேன்

கே.வி.மஹாதேவன் இசை அமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடலுக்கு பாரதியாரின் பாடல் வரிகளை கவியரசர் கண்ணதாசன் படத்திற்கு ஏற்ப அமைத்துக் கொடுத்தார்.

திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்களைச் சொல்வதென்றால் ஒரு பெரிய பட்டியலையே சொல்ல நேரிடும். அதைப் பார்ப்போம். இந்தப் பாடல்கள் அனைத்தையும் இன்று யூ டியூபில் காணொளிக் காட்சியாகவே காண முடிகிறது. படத்தின் பெயரையும் பாடலின் முதல் வரியையும் பதிவு செய்தால் காணொளிக் காட்சியைக் கண்டு மகிழலாம்.

 பாடல்களின் பட்டியல் இதோ:-.

மலர்களே மலருங்கள் படத்தில் கங்கை அமரன் இசை அமைக்க பி.சுசீலா பாடிய ‘சுட்டும் விழிச் சுடர் தான்’ பாடல்.

‘ஏழாவது மனிதன்’ படத்தில் எஸ்.வைத்யநாதன் இசை அமைப்பில் கெ.ஜே. யேசுதாஸ் பாடிய ‘எந்த நேரமும்’, ராஜ்குமார் பாரதி பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ மற்றும் ‘காக்கைச் சிறகினிலே’ பாடல்கள்.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ மற்றும் தீர்த்தக் கரையினிலே பாடல்கள்.

‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் இளையராஜா இசை அமைப்பில் ‘சின்னஞ் சிறு கிளியே’ பாடல்.

‘கண்ணே கனியமுதே’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ‘நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி; என்ற பாடல்.

‘சிந்து பைரவி’ படத்தில் இளையராஜா இசை அமைப்பில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடல்.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ‘நெஞ்சில் உரமுமின்றி’, ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘வந்தே மாதரம் என்போம்’ உள்ளிட்ட பாடல்கள்.

‘கௌரி கல்யாணம்’ படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் சூலமங்கலம் ராஜலெக்ஷ்மி பாடிய ‘வெள்ளைக் கமலத்திலே’ பாடல்.

இது ஒரு நீண்ட பட்டியல். இப்பாடல்களில் எல்லாம் சிகரம் வைத்தது போல மஹாகவியின் ஒரு பாடல் ‘பாவை விளக்கு’ படத்தில் இடம் பெற்றது. இந்தப் படத்தில் அருமையாக சிவாஜி கணேசன் நடிக்க சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் மங்கியதோர் நிலவினிலே என்ற பாரதியாரின் பாடலை அற்புதமாகப் பாடிப் படத்தின் புகழைக் கூட்டினார்.

‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகமும்

புன்னகையின் புதுநிலவும் போற்றவரும் தோற்றம்

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து

தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்

அங்கதனில் கண் விழித்தேன்; அடடாவோ அடடா

அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்”

அற்புதமான் இந்த வரிகள் காலத்தால் அழியாத இசைவடிவமாகவும் ஆனது தமிழர்களின் தவப் பயனே.

சிதம்பரம் ஜெயராமன் இதைப் பாடும் முன்னரே தேவநாராயணன் தன் மயக்கும் குரலில் பாடி இருந்தார். இந்தப் பாடல் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் மதிய நேரத்தில் அவ்வப்பொழுது ஒலிபரப்பாகும். இதைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டம் தயாராகக் காத்திருக்கும். அடடாவோ அடடா என்று ஒரு ஹம்மிங்குடன் தேவநாராயணன் பாடலை முடிக்கிறார். அந்த தேவ கானத்தை எத்தனை  முறை கேட்டாலும் அலுக்காது! இன்றும் என்றும்!! தேவநாராயணன் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார் என்றாலும் இந்தப் பாடல் பாடியதன் மூலம் காலத்தை வென்று அவர் நிலை நிற்கிறார்.

மங்கியதோர்  நிலவினிலே பாடலுக்கு மூவர் இசை அமைத்துள்ளனர். வெவ்வேறு விதத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடல்கள் அனைத்தையும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்போது வேண்டுமானாலும் யூ டியூபில் கேட்கலாம். இவற்றை நாமே பதிவு செய்து கொண்டும் அவ்வப்பொழுது கேட்டு மகிழலாம்.

பாரதியாரின் பாடல்கள் ஒருபுறமிருக்க அவரைப் பற்றிய முழுநீளத் திரைப்படம் ஒன்று வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதை பூர்த்தி செய்யும் வண்ணம் 2000ம் ஆண்டில் பாரதி திரைப்படம் வந்தது. அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்ப்போம். நன்றி வணக்கம்.

இப்போது தேவநாராயணன் அவர்கள் பாடிய மங்கியதோர் நிலவினிலே பாட்டைக் கேட்டு மகிழ்வோம்!

***

tags- மங்கியதோர்  நிலவினிலே,

ORIGIN OF ‘BHAKTI’ IN RIG VEDA; 15 TYPES OF PRAYER! (Post.9250)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9250

Date uploaded in London – –10 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(IF YOU NEED THE ARTICLE IN WORD FORMAT PLEASE WRITE TO US)

ORIGIN OF ‘BHAKTI’ IN RIG VEDA; 15 TYPES OF PRAYER! (Post.9250)

BHAKTI (devotion to God) MOVEMENT HAS ITS SEEDS IN THE RIG VEDA. NARADA BHAKTI SUTRAM DESRCIBED THE STAGES IN BHAKTI, I.E. DEVOTION TO GOD.  GREAT TAMIL SAINT APPAR ALIAS TIRU NAVUKKARASAR REPEATED IT IN HIS TEVARAM IN 600 CE. HE WAS CONTEMPORARY OF ANOTHER GREAT TAMIL SAINT TIRU JNANA SAMBANDAR. BOTH OF THEM CHANGED THE PICTURE OF TAMIL NADU BY WALIKNG THROUGH THE LENGTH AND BREADTH OF TAMIL NADU WIPING OUT BUDDISM AND JAINISM FROM TAMIL SPEAKING WORLD.

BUT BEFORE THIS, WE SEE BHAKTI YOGAM CHAPTER IN THE BHAGAVAD GITA. IF WE GO BY ADI SHANKARA’S DATING BY KANCHI PARAMACHARYA SWAMIJI, THEN ADI SHANKARA STATRED BHAKTI MOVEMENT IN THE PRE CHRISTIAN ERA. BUT THE SEEDS ARE LAID IN THE RIG VEDA.

If one goes through the prayers in the Rig Veda, one would understand all the points raised by later Bhakti poets are already in the oldest book in the world- The Rig Veda

IN TAMIL AND SANSKRIT BOOKS


tags – Bhakti, Movement, Origin, Rig Veda, Bhakti Yogam, Narada, Appar

INDEX 49 FOR LONDON SWAMINATHAN’S DECEMBER 2016 ARTICLES (Post.9249 )

RADHA KRISHNA IN YAGA FIRE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9249

Date uploaded in London – –10  FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

XXX

INDEX 49 December 2016

ENGLISH POSTS IN DECEMBER 2016

Lamps in Tamil and Sanskrit Literature (Post No 3502); 31-12-2016

31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499; 30/12

THE STORY OF PARIJATA TREE (Post No.3495)29/12

Tulsi Leaf is heavier than Lord Krishna! (Post No. 3492)28/12

Nature’s Orchestra in the Forest: Sanskrit Tamil Poets’ Chorus (Post No. 3489)27/12

Churchill’s Moustache! More Rough and Ready Anecdotes (Post No. 3472)22/12

Rudeness Anecdotes (Post No.3469) 21/12

Truth, The Teacher (Post No. 3466)20/12

SWAMI VIVEKANANDA ON OMKARA! (Post No.3464)19/12

Pilgrim’s Lodge – The Inns of Old Tamil Nadu (Post No.3458)17/12

SNOBBISHNESS Anecdotes (Post No.3460) 18/12

Interesting Information about Indian WASHERMAN (DHOBY) (Post No.3454)16/12

Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda ( Post No.3452)15/12

Story behind Kammavar Naicker Proverb! (Post No.3444)13/12

Tamil’s Cruel Cock Fight! ( Post No.3442)12/12

Was Kalidasa a Poet cum Scientist? (Post No.3439)11/12

No Toilet, No Electric Light 150 year ago! What did they do? (Post No.3449)14/12,

Eaten but Fasting! Had Sex but Celibate Story! (Post No 3445)10/12

EMPEROR ASHOKA AND A PROSTITUTE STORY ! (Post No.3432)9/12

Kurathi- Tamil Soothsayer and Bull Fighting Floats in Tamil Procession (Post No.3430)8/12

Whales in Kalidasa’s work and Tamil Sangam Literature (Post No.3427)7/12

A BRIEF INTRODUCTION TO TAMIL DEVOTIONAL LITERATURE (Post No.3424)6/12

A Brief Introduction to Tamil (Post No.3420)5/12

A Fish Inspired Balamurali Krishna to compose a Krti (song)! (Post No.3417)4/12

Will Power, Worrying, Appearance Anecdotes (Post No.3416)4/12

Mirror Images in Hindu Literature (Post No.3413)3/12

Rapist on run gave up after being fed! Food + Kindness melt even Criminals! (Post No.3410)2/12

Amusing and Eccentric (Zanies) Anecdotes (Post No.3406)1 டிசம்பர் 2016

XXX

TAMIL POSTS IN DECEMBER 2016

ஓம் பற்றி உபநிஷத்துகளும், அபிதான சிந்தாமணியும் (Post No. 3501)31/12

ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்! (Post No.3498)30/12

நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை!! (Post No.3496)

துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி! (Post No.3494)29/12

அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)28/12

நடுக் காட்டில் கச்சேரி! கபிலன், கம்பன், காளிதாசன் தகவல் (Post No.3488)27/12

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post No. 3475)23/12

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)22/12

நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470)21/12

2 கதைகள்: ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ (Post No.3467)20/12

நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை (Post No.3463)19/12

பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை! (Post No.3455)16/12

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)17/12

தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை (Post No. 3461)18/12

ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! (Post No3451)15/12

ஆறுமுக நாவலர் – அருட்பிரகாச வள்ளலார் மோதல் (Post No3448)14/12

மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை (Post No.3447)14/12

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)13/12

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441)12/12

பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள் (Post No.3438)11/12

மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை! (Post No. 3436)10/12

மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433)9/12

தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்! (Post No.3429)8/12

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)7/12

மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’ (Post No.3423)6/12

ஜெயலலிதா சொன்ன யானைக் கதை(Post No.3422)6/12

கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம் (Post No.3419)5/12

அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)4/12

கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)3/12

அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர் (Post No.3409)2/12

குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)டிசம்பர் 1, 2016

S NAGARAJAN’S TAMIL ARTICLES WERE INDEXED AND PUBLISHED HERE SOMETIME AGO. 3500, 3497,3493, 3490, 3474, 3477, 3471, 3468, 3465, 3462, 3453,3459,3450, 3446,3443, 3440,3437, 3434, 3431, 3428,3425, 3418,3414, 3411, 3408,3405

–SUBHAM—

tags- index 49, london swaminathan, december 2016, index 49

நடந்தவை தான் நம்புங்கள் – 7 (Post No.9248)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9248

Date uploaded in London – –10 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 6 வெளியான தேதி 6-2-21 கட்டுரை எண் : 9235

நடந்தவை தான் நம்புங்கள் 7 (post 9248)

ச.நாகராஜன்

இது போலந்து ஸ்பெஷல்!

*

போலந்து நாட்டின் ஒர்கர்ஸ் பார்டியின் தலைவருக்கு திடீரென்று ஒரு ஆசை தோன்றியது.தனது நாட்டு மக்கள் எப்படி வளமுடன் வாழ்கிறார்கள் என்று நேரடியாகப் பார்க்க அவருக்கு ஆசை! அவர் பெயர் வ்ளாடிஸ்லா கோமுல்கா! (Wladyslaw Gomulka). ஒரு சிறிய உணவு விடுதிக்கு அவர் சென்றார். அங்கு ஒரு டேபிளில் வயதான முதியவர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று உட்கார்ந்தார். அந்த முதியவர் மெனு கார்டில் இருந்த விலையுயர்ந்த உணவு வகைகளை ஆர்டர் செய்து கொண்டிருந்தார்.

(பாலிஷ் ரிமூவரை போலிஷ் ரிமூவர் என்று படித்து அர்த்தம் செய்து கொண்ட போலிஷ்காரர் ஜோக் பிரமாதம் தானே!)

tags – போலிஷ், நடந்தவை-7,  வ்ளாடிஸ்லா கோமுல்கா

HOW MANY POEMS ARE IN SANGAM TAMIL LITERATURE? (Post No.9247)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9247

Date uploaded in London – –9 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

If you need it in ordinary word format, please write to me

NUMBER OF TAMIL POEMS IN 18 SANGAM BOOKS (EIGHT ANTHOLOGIES AND TEN SONGS – 2381 POEMS.

OF THESE 103 POEMS WERE ANONYMOUS.

EIGHT ANTHOLOGIES – ETTUTH THOKAI

TEN LONG SONGS –  PATHTHUP PAATTU

XXX

HOW MANY POETS IN EACH BOOK?

BIRDS MISTOOK THE EAR ORNAMENTS LEFT BY BATHING GIRLS AS THEIR PREY AND LANDED ON THE YUPA PILLARS OF BRAHMINS DOING FIRE SACRIFICE. THOSE BIRDS LOOKD LIKE YAVANA LAMPS.

****

IN THE POST SANGAM EPICS SUCH AS SILAPPADIKARAM AND MANIMEKALAI THERE ARE MORE REFRENCES TO YAVANAS.

–SUBHAM–

tags – Sangam Tamil Poems, Number, Yavanas, Mauryas, Nandas, Ten Songs, Eight Anthology

மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை! (Post No.9246)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9246

Date uploaded in London – –9 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!

ச.நாகராஜன்

ஹேஹய வமிசத்தில் மிகுந்த பராக்கிரமம் கொண்ட ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றான். பெரிய மரங்களும் புதர்களுமாக மண்டியிருந்த காட்டில் அவன் அலைந்து திரிந்த போது தோலைப் போர்த்தி இருந்த ஒரு முனிவரைக் கண்டான். அவரை ஒரு மான் என்று நினைத்து அம்பினால் எய்ய அவர் இறந்து போனார். தான் செய்ததை நினைத்துத் திகைத்துப் போன அவன் உடனே தன்னுடைய பெரியோர்களை அடைந்து நடந்ததைச் சொல்லி வருந்தினான். அவர்களும் நடந்ததை எண்ணி வருந்தி அவனுடன் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி விரைந்தனர். அங்கு ஒரு ரிஷி அம்பினால் மாண்டு கிடப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அங்கிருந்தவர்களை அணுகி அவர் யார் என அவர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் மஹரிஷி காஸ்யபருடைய குமாரரான அரிஷ்டநேமி மஹரிஷியின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரை நமஸ்கரித்து வணங்கினர். முனிவரும் அவர்களை வருக என வரவேற்றார்.

முனிவரை நோக்கி அவர்கள், “நாங்கள் ஒரு பிராமணரைக் கொன்று விட்டோம்.” என்று கூறினர்.

“எந்த பிராமணர் எப்படி உங்களால் எங்கு கொல்லப்பட்டார்” என்று ரிஷி வினவவே அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.

பின்னர் அவர்கள் அனைவரும் ரிஷி மாண்டுகிடந்த இடத்தை அடைந்து சென்று அங்கு அவர் பிணமாகக் கிடந்த இடத்தில் அவரைக் காணாமல் திகைத்தனர். மதிமயக்கத்துடனும் வெட்கத்துடனும் அவர்கள் மீண்டும் அரிஷ்டநேமியிடம் வந்தனர்.

பிறகு தார்க்‌ஷியர் என்று சொல்லப்படும் அந்த முனிவர், “ஒ! அரசர்களே! நீங்கள் கொன்ற பிராமணர் இவர் தானா, இதோ பாருங்கள், இவர் யோகாப்பியாசத்தினால் அஷ்ட சித்திகளையும் அடைந்த எனது புத்திரன் ஆவார்” என்றார்.

என்ன ஆச்சரியம்! அவர்கள் கொன்றதாகச் சொன்ன முனிவர் அங்கு உயிருடன் இருந்தார். இறந்தவர் எவ்வாறு உயிருடன் திரும்பி வந்தார் என அவரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

முனிவரிடமே அவர்கள், “இவர் பிழைத்தது எப்படி, தர்மத்தின் பயனோ, தவத்தின் பயனோ, அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம்” என பயபக்தியுடன் வினவினர்.

அதற்கு மறுமொழியாக முனிவர் கூறிய பதில் இது:-

“யமன் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதன் காரணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்! நாங்கள் எங்களுக்கு ஏற்பட்ட புண்ணிய  கர்மங்களைத் தவறாது செய்து வருகிறோம்; ஆதலால் இறப்பைப் பற்றி எங்களுக்குப் பயமில்லை.

நாங்கள் பிராமணர்களைச் சிறப்பித்துப் பேசுகின்றோம். அவர்களைப் பற்றி எப்போது தூஷணமாகப் பேசுவதில்லை. ஆதலால் சாவு என்றால் எங்களுக்குப் பயமில்லை. எங்களிடம் வருகின்ற அதிதிகளுக்கு அன்னபானாதிகளைக் கொடுத்து உபசரித்து விட்டு, பின்னர் மிகுதியாய் இருப்பதை நாங்கள் உண்ணுகிறோம். ஆதலால் இறப்பதைப் பற்றி நாங்கள் பயப்படுவதில்லை. நாங்கள் சமாதான குணம் உள்ளவர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும், தானம் செய்பவர்களாகவும், பொறுமை உள்ளவர்களாகவும், புண்ணிய க்ஷேத்திரங்களிப் போய் தரிசிப்பதில் பிரியம் உள்ளவர்களாகவும் இருக்கின்றோம். புண்ணிய ஸ்தலங்களிலேயே நாங்கள் வசிக்கின்றோம். ஆகவே சாவைப் பற்றி நாங்கள் பயப்படுவதில்லை. மஹாத்மாக்கள் வசிக்கும் இடங்களிலேயே நாங்கள் வசிக்கின்றோம். ஆகவே மரணத்தைப் பற்றிய பயம் எங்களுக்கு இல்லை. நான் எல்லாவற்றையும் சுருக்கமாக உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே, உலக வாழ்க்கையின் பேரிலுள்ள வீண் பெருமைகளையெல்லாம் நீக்கி விட்டு, நீங்கள் உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். உங்களுக்குப் பாபம் வந்து விட்டதென்று பயப்பட வேண்டாம்”.


முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த மஹரிஷியை அனைவரும் வணங்கி விட்டுத் தங்களுடைய தேசத்துக்குத் திரும்பிச் சென்றனர்.

இந்த வரலாறு மஹாபாரதத்தில் வனபர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

யம பயம் யாருக்கு இருக்காது என்பதை இந்த மஹரிஷியின் உரை அனைவருக்கும் புரிய வைக்கிறது.

***

tags — மஹரிஷி, அரிஷ்டநேமி

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 34 (Post No.9245)

HINDUS CONSTRUCTED HUGE FIRE ALTARS FOR YAGAS WITH 10,008 BRICKS; THEY DID THEM  IN DIFFERENT SHAPES. THEY HELPED NAZCA (PERU) PEOPLE TO PREPARE BLUE PRINTS FOR HUGE , GIGANTIC DRAWINGS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9245

Date uploaded in London – –8 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -34

************

3-4-36

Panini used GRAHA in this sutra

Grah gives English words such as Grip, Grab etc.

All Hindus use it in PANI GRAHANAM= HOLDING HAND= MAARIAGE.

Also used with all planets GRAHA.

THE INTERESTING THING IS HINDUS KNEW ABOUT GRAVTY OF ALL OBJECTS IN HEAVEN AND SO THEY NAMED GRAHAS.

ONE WITH GRAVITY – GRAHA.

TAMILS USE GRAHA FOR PLANETS PARTICULARY IN ASTROLOGY.

பாணி கிரஹணம் , கிரஹம் , நவ கிரஹங்கள் , கிரகங்கள்,

கிராவிடி = ஈர்ப்பு சக்தியுடைய  விண்வெளி பொருட்கள்.

ஈர்ப்பு சக்தியால் கிரஹங்கள் அந்தரத்தில் தொங்குவதை அறிந்தே அதற்கு கிரகம் என்று பெயரிட்டனர்

யாரோ ஒருத்தன் தலையில் ஆப்பிள் விழுந்தவுடன் உலகம் ஈர்ப்பு  சக்தியைக் கண்டுபிடித்தது என்று மேலை நாட்டார் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்

XXX

3-4-38

Commentators give examples with the verb  PINASHTI= GRINDING

May be it is related to FINISH

பினஷ்டி என்றால் ‘அரை’ என்று பொருள்; ஒருவேளை பினிஷ் என்னும் ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம்???

Xxx

3-4-39

This sutra has HASTA FOR HAND

Hand is derived from hasta

Interesting thing is most of the body parts in Sanskrit are in Latin and Greek.

ஹஸ்த – ஹாண்ட்

Xxx

3-4-40

Panini uses SVA PSA/PUS

SVA is used in all Indian languages SVAYA

IN TAMIL IT BECOMES SUYA

ஸ்வ , புஸ்

ஸ்வ = சுய

PUS is used in POSHAAKKU/NUTRIOUS

புஸ் = போஷாக்கு ; ஆங்கிலத்தில் போஷன்

PUS gives the word POTION,  a liquid with healing or magical properties.

It is used for poison as well, but that comes from Sanskrit VISHA

Xxx

3-4-41 AND 3-4-42

ADHIKARANE BANDHAH AND SAMJNAAYAAM

POETRY IN PICTURE DRAWINGS

ON SUTRA 3-4-42 COMMENTATORS EXPLAING ABOUT POETRY DONE IN PITCURES.

IT IS VERY INTERESTING TO SEE CHITRA KAVIS/ PICTURE POETRY OR POETRY IN DRAWINGS IS GIVEN BY THE COMMENTATORS.

இது மிகவும் சுவையான விஷயம். தமிழில் சித்திரக் கவிகள் நிறைய உள்ளன . பாஷ்யக்காரர்கள் ‘கொக்கு பந்தம், மயில் பந்தம், அரண்மனை பந்தம்’ என்று மூன்று சித்திரக் கவிகளை உதாரணமாகச் சொல்லுவார்கள். தமிழில் மிகவும் பிறகாலத்தில் சித்திரக் கவிகள் தோன்றின.

KRAUNCHA BANDHAM- CRANE PICTURE WITH A POEM

MAYURIKA BANDHAM – PEACOCK PICTURE WITH A POEM

ATTAALIKAA BANDHAM – PALACE PICTURE WITH A POEM (ATTIKAI IN TAMIL IS USED FOR  NECKLACE-NECK ORNAMENT)

அட்டாலிகா என்றால் அரண்மனை. தமிழில் இதற்கு கழுத்து அணி , நெக்லஸ் என்றும் பொருள் இருப்பதால் மாலை பந்தம் என்னும் சித்திரக் கவி என்றும் கொள்ளலாம்

LATER DAY TAMIL POETS FOLLWED THIS AND DID RATHA, NAGA, CHAKRA BANDHAMS

MORE INTERESTING THING IS THE FINDING OF SUCH A NAGA BANDHAM – SWORD AND SNAKE – INSIDE A MOSQUE IN DHAR IN MADHYA PRADESH, WHICH IS 1000 YEAR OLD. IN MAHALALESWAR TEMPLE, UJJAIN WE SEE SIMILAR SNAKE-SWORD BANDHA WITH SANSKRIT LETTERS.

IT IS VERY INTERESTING TO COMPARE IT WITH PHAISTOS DISC WITH UNDECIPHEREDSCRIPT IN MINOAN CRETE DATED 1500 BCE

இத்துடன் இன்னும் சில சுவையான விஷஜயங்களும் உண்டு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் போஜராஜன் உலக மஹா விஞ்ஞானியாக விளங்கினான். இத்தாலியின் லியார்னோ டா வின்சியை (Leonardo Da Vinci) விட , அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே, போஜராஜன் தொடாத விஷயம் இல்லை. மத்திய பிரதேசத்தில் தார் Dhar என்னும் பட்டணத்தில் ஒரு மசூதிக்குள் அவன் வரைந்த ஸம் ஸ்க்ருத  நாக பந்த சித்திரம் உள்ளது. போஜனின் ஆராய்ச் சிக் கூடத்தின் மேல் முஸ்லிம்கள் மசூதி கட்டிவிட்டனர். ஜோதிர்லிங்க ஸ்தலமான உஜ்ஜைனி மஹா காலேஸ்வர் சிவன் கோவிலிலும் இது போல நாக பந்தம் உள்ளது .

இதற்கெல்லாம் முன்னோடியாக கிரீட் தீவில் மினோவன் (Minoan civilization in Crete) நாகரீக களிமண் தகடு ஒன்று கிடைத்துள்ளது. அதில் சித்திர எழுத்துக்கள் வட்ட வடிவில் எழுதப்பட்டுள்ளது Phaisto பைஸ்டோ வில்லை என்று அதற்குப் பெயர். எழுத்துக்களை படிக்க முடியாவிட்டாலும் அந்த மினோவன் நாகரீக சம்பந்தப் பட்ட எல்லா பெயர்களும் தமிழ்- சம்ஸ்க்ருதமக இருக்கின்றன.

சில எடுத்துக் காட்டுகள்

மினோவன் = மீனவன் /பாண்டியன் நாகரீகம்

கிரீட் தீவு – கிரேக்க நாட்டின் கிரீடம் போல அமைந்த தீவு

அங்குள்ள கோட்டை பெயர் சண்டி; அதை அராபியர்கள் ஹ ண்டி (Handi= Sandi) என்று மாற்றி புதிய பொருள் சொல்ல துவங்கினர்

சண்டி என்றால் துர்கா; துர்கா என்றால் துர்க்காதேவி; துர்க்கையைப் போலப்பாதுகாப்புத் தரும் துர்க்/கோட்டை. சிவாஜி மகாராஜாவின் கோட்டைகள் பெயர் எல்லாம் துர்க், துர்கம் என்றே அழைக்கப்படுகின்றன

XXXX

. 3-4-43

THIS SUTRA GIVES TWO ENGLISH WORDS.

Panini used JEEVA and PERSON

Jeeva = live, life, Adam and EVE= atma and Jeevan

Purusha = Person

ஜீவ = உயிர் பெர்சன் – புருஷ/ஆள்

ஆத்மா/பரம – ஜீவ ஆத்மா என்பதை ஆடம் அண்ட் ஈவ் என்று பைபிள் சொல்லுவதை காஞ்சி பராமசர்ய சுவாமிகள் உரையில் காண்க

Xxx

3-4-44

Panini used puro

Puur, purrna = full

Pull changed to MUZU/MULU IN TAMIL.

P/B/F  = M

OTHER EXAMPLES

PANA = MONEY/ GREEDY ROBBERS = PAANI IN RV= PHOENICIANS OF CARTHAGE

BHADRA DESA = MADRA DESA IN PANINI

PANUAL IN TAMIL – MANUAL

PARI IN TAMIL /HORSE – MARE/FEMALE HORSE

பூர் , பூரண  என்பது ஆங்கிலத்தில் புல்Full ஆகிவிட்டது ஆர் = ல் ; அதாவது ர=ல .

இதே போல புல் , தமிழில் முழு ஆகிவிட்டது

ர=ல, ப=ம ஆகும் விதிகளுக்கு நிறைய உதாரணங்கள் உள . சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்

பண = மணி /ஆங்கிலத்தில்

கார்ஷா பண = காசு பணம்

பத்ர தேச = மாத்ர தேச

பனுவல் – ஆங்கிலத்தில் Manual மானுவல்

பரி /குதிரை – மேர் Mare (ஆங்கிலத்தில்)

–SUBHAM —

TAGS –  TAMIL IN PANINI-34

London Calling ( Hindus) 8-2-2021 (Post No.9244)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9244

Date uploaded in London – –8 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Following programmes were broadcast on eighth February 2021 by Gnanamayam Channel from London

GNANA MAYAM BROADCAST AT 1 PM LONDON TIME; 6-30 PM IST

8-2-21 MONDAY

GNANA MAYAM PROGRAMME

Announcement and Prayer – 5 MINUTES

Prayer by Mr and Mrs Balasubrahmanyam from Abuddhabi

CHENNAI MRS LAKSHMI RAMASWAMI’S  STUDENTS – THIRUPPUGAZ Vaathinai adarntha   6+++++

Bengaluru Mr Nagarajan speaks on EVIDENCE FOR REBIRTHS- 8 Mts

Dr Narayanan Kannan from Chennai talks ON ALVARS – 6

Mrs Daya Narayanan’s Ashtapathy – 7 minutes

MORE FROM CHENNAI MRS LAKSHMI RAMASWAMI’S  STUDENTS –  CARNATIC SONG Ninnarul………………  6+++++

Bengaluru Nagarajan on ‘Bharati in Film’ Songs –  8

London MRS HARINI RAGHU’S MANGALAM SONG –1MINUTE

60 MINUTES ++

STUDIO ENGINEER  MR B SRIDHAR, LONDON 

XXXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

APPR. 65 MINUTES (Programmes are subject to change; all timings approximate only ; this is a tentative agenda)

 tags- Londonhindus, Gnanamayam, Broadcast8-2-2021