அரையர் சேவை- ஒரு சுவையான சம்பவம் (Post No.7433)

Written by London Swaminathan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7433

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

முன்னடிக்காரரும் பின்னடிக்காரரும்

இராப்பத்து, பகல் பத்து காலங்களில் பெருமாள் கோவில் களில் நடக்கும் அலங்காரமும் பெருமாள் புறப்பாடும் அரையர் சேவையும் காணக் கண் கோடி வேண்டும். பக்தர்கள் அல்லது அரையர் ஆகியோர் மாறி மாறிப் பாடுவர். முதல் இரண்டு அடிகளை ஒரு வரிசையில் உள்ளோர் பாட, மறறொரு வரிசையில் உள்ளோர் பின்னிரண்டு அடிகளை பாடுவார்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. மதுரை வடக்கு மாசிவீதி யாதவர் தெரு. அங்கே ஒரு கிருஷ்ணன் கோவில் மிகவும் புகழ் படைத்தது. மதுரை மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக உற்சவ நாள் அனைத்திலும் நாலு மாசி வீதிகளில் சுவாமி/  பெருமாள் வலம் வருவது இந்தக் கோவில் ஒன்றே. கூடல் அழகர் பெருமாள் கோவில் 2000 ஆண்டுப் பெருமை பெற்ற இருந்தையூர் என்றாலும் நாலு மாசிவீதிகள் வழியாக  ஊர்வலம் வராது . அப்போது நாங்கள அண்ணன் ,தம்பிகள் அனைவரும் பெருமாளுக்கு இருபுறமும் நின்று சாமரம் விசிறி வீசுவோம். எதற்காக?? அரை அணா காசுக்காக.! எங்கள் நெற்றியில் விபூதி பட்டை இருந்தாலும் அய்யர் வீட்டுப் பிள்ளை என்பதால் எங்களை யாதவ மானேஜர் விசிறி ,, சாமரம் போட அனுமதிப்பார். மேலும் ஐயங்கார் பையன் களும் போட்டிக்கு வரவில்லை. அப்போது ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை முதலிய இடங்களில் இருந்து பக்தி சிரத்தையான தென்கலைப் பிரிவினர் –அய்யங்கார் குடும்பத்தினர் — எங்கள் வீட்டில் தங்குவர். நாங்கள் ஐயர்கள் என்பதால் என் தாயார் சமைப்பதை அந்த வீட்டுப் பெண்மணிகள் சாப்பிட மாட்டார்கள்.

என் அம்மாவும் அவர்களுக்கு சகல உபசாரம் செய்து ஒரு த னி  குமுட்டி அடுப்பு கொடுத்து ஒரு மூலையில் சாணியால் மெழுகி அங்கே சமைத்துக்கொள்ள உதவி செய்வார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு முறை இரவு  அரட்டை துவங்கியது. அவர்களுடன் வந்த இளைஞன் மதுரை ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் பயில்பவன். பேச்சு வாக்கில் தனக்கு நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தில் 4000 பாடல்களும் மனப்பாடமாகத் தெரியும் என்று சொன்னான். நாங்கள் அண்ணன், தம்பி அனைவரும் சேர்ந்து அது முடியவே முடியாது என்றோம் .என் தந்தை ‘காத்ரேஜ் பீரோ’ முழுதும் 6000 புஸ்தகம் வாங்கி வைத்திருந்ததால் திவ்யப் பிரபந்தத்தை எடுத்து சவால் விட்டோம்.

வடக்கு மாசி வீதியிலுள்ள எங்கள் வீட்டு முதல் அறைக்கு பகுத்தறிவுப் பாசறை என்று பெயர். எப்போதும் ஒரு அரட்டைக் கச்சேரி கும்பல் இருக்கும். பகல் நேரமானால் எல்லோருக்கும் ‘ஓசி’க் காப்பியும் கொடுப்போம்.

அந்த இளைஞரிடம் ஒரு பாடலின் துவக்க வரியை வாசித்து சொல்லுங்கள் பார்ப்போம் என்றோம் . அரையர் கள் பாடுவதற்கே ஒரு ராகம் உண்டு. அதில் அழகாக இரண்டு அடிகளை ராகத்துடன் பாடி விட்டு நிறுத்தினார். எல்லோரும் நன்றாக இருக்கிறது; ம்…. ம்….. தொடருங்கள் என்று உற்சாகக் குரல் கொடுத்தோம்.அவர் பாடவில்லை. ஏன்? ஏன்? என்று எல்லோரும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தோம். நான் முன்னடிக்காரன் ; பின்னடிக்காரன் இங்கே இல்லையே; அவர் எங்கே? என்று கேட்டார். அதாவது 4 வரிப் பாடலில் முதல் இரண்டு அடிகளை ஒரு கோஷ்டியும் எதிர் வரிசையில் நிற்கும் மற்றொரு கோஷ்டி பின்னிரண்டு அடிகளையும் பாடுவது வழக்கமாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாங்கள் அனைவரும் வெடிச் சிரிப்பு சிரித்தோம். பாடல் தெரிந்தாலும் கூட பின்னடிக்காரர்கள் பாடாவிட்டால் அடுத்த  அடி ஞாபத்துக்கு வராது! எனவே எல்லோரும் இளம் வயது என்பதால் தமாஷ் அத்துடன் முடிந்தது. அறையர்கள் அவர்களுக்கே உரித்தான பட்டுத் தொப்பி / குல்லாய்களுடன் பாடும் பாசுரம் / பாட்டு – திருவாய்மொழி –இன்றும் மனக்கண் முன் நிற்கிறது. அந்த நாட்கள் பொன்னான நாட்கள்.! tamilandvedas.com, swamiindology.blogspot.com

Tags –  அரையர் சேவை,  சுவையான சம்பவம்

–subham–

அரையர் சேவை, சுவையான சம்பவம்

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 6 (Post No.7432)

Written by S Nagarajan

Uploaded in London on  – 8 JANUARY 2020

Post No.7432

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

அடுத்து அவர் அருளியுள்ள இன்னும் சில ஸ்தோத்திரங்களைப் பார்ப்போம்.

***

தொடரும்

பறக்கும் தட்டு மர்மம் நீடிக்கிறது! (Post No.7431)

written by London Swaminathan

Uploaded in London on  – 7 JANUARY 2020

Post No.7431

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

தினமணிப் பத்திரிக்கையில் 1992ம் ஆண்டு நான் எழுதிய பறக்கும் தட்டுச் செய்தியை இணைத்துள்ளேன்.

27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஒரு பறக்கும் தட்டையும் பிடிக்க முடியவில்லை. அகில் வரும் பிற கிரக மனிதர்களைப் பிடித்ததும் இல்லை. ஆயினும் அவ்வப்போது சில மனிதர்களைப்  பார்த்ததாக மட்டும் பத்திரிகைகள் செய்தி வெளியிடும்.

இதோ லேட்டஸ்ட் Latest பறக்கும் தட்டு UFO) நியூஸ்

UFO bombshell: US Senator vows to declassify UFO files if she wins US presidential race

UFO files will be declassified to the public in the event of Amy Klobuchar winning the race to the White House, the US Senator has announced.

பறக்கும் தட்டு பற்றி அமெரிக்க அரசாங்கம் இதுவரை சேகரித்து வைத்துள்ள ரகசிய பைல்களை அம்பலப்படுத்துவேன் என்று ஜனநாயகக்  கடசி வேட்பாளர் அமி நேற்று அறிவித்துள்ளார் . இவர் ஜன நாயகக் கடசி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதி ஆனால்……………………… இது நடக்கும்.

UFO sighting: ‘Strange lights’ and ‘creepy stuff’ over the UK spark an alien UFO frenzy

UFO sightings and reports peaked last week when a mysterious chain of moving lights cut across the night skies over parts of the UK, prompting some to speculate aliens had finally visited Earth.

By SEBASTIAN KETTLEY

PUBLISHED: 15:59, Tue, Dec 31, 2019 | UPDATED: 15:59, Tue, Dec 31, 2019

The UFOs or unidentified flying objects were seen over Wales and England earlier last week. Eyewitness accounts shared on social media reported a train of bright lights moving across the starlit sky.

வேல்ஸ், இங்கிலாந்து பிரதேசங்களுக்கு மேல் பறக்கும் தட்டுகள் சென்றதாக ஒரு செய்தி வெளியானது. இப்படி வாரம்தோறும்  செய்தி வருவதால் உண்மை எது, பொய் எது என்றே தெரிவித்தில்லை. கடந்த ஒரு வாரத்தில் லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை மட்டும் காட்டினேன்.

UFO-  UNIDENTIFIED  FLYING OBJECTS.

 உலக நாடுகள் தபால் தலைகளிலும் பறக்கும் தட்டுப் படங்களைப்  போட்டு மக்களின் ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன.

A COURTESAN BECAME THE QUEEN OF MADURAI (Post No.7430)

Compiled  by London Swaminathan

Uploaded in London on  – 7 JANUARY 2020

Post No.7430

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

RANI MANGAMMAL RULED MADURAI NAYAK KINGDOM FOR FIFTEEN YEARS FROM 1689 T0 1704. SHE WAS A COURTESAN FROM TIRUVELLORE NEAR CHENNAI. HERE IS HER INTERESTING STORY.

A lampoon by a contemporary writer Chnna Venkanna, throws some light on Mangamma’s life. According to his account, she was the daughter of  Tupaakula Lingama Nayaka of Chandragiri and a courtesan of  Tiruvellore near  Chennai. Her name was Kanakaa. Beautiful and accomplished young Kanaka  migrated probably in search of a career to the court of Vijararaghava of Thanjavur, where talented women had the opportunity of  rising to prominence. Vijayaraghava was said to have intended to take her in to his harem, but she left Thanjavur for some reason or other and married Chokkanatha Nayaka of  Madurai, whose heart she captured by blandishments. The account, perhaps, distorted one, may contain a kernel of truth.

Mangamma alias Kanaka survived her husband and her son Rangakrishna Muthuveerappa Nayaka, and after the demise of the later in 1689 ruled the kingdom till 1707 as the regent during the minority of her grandson Vijayaranga  Chokkanatha  Nayaka.

The regency of Mangamma was a critical period in the history of  the Nayaka Kingdom of Madurai, which was threatened on one side by the Mughal forces of Aurangzeb and on the other side by the rulers of   Mysore, Thanjavur , Ramanathapuram and Travancore. Mangamma shrewdly decided that the only way of survival was to approve the supremacy of Mughal emperor. She agreed to pay him an annual tribute, and secured the goodwill of his officers and generals by suitable presents and bribes.

VEENA PLAYER

Towards her other enemies she adopted a policy of firmness and waged war upon them, on the whole successfully. Occasionally she had to buy off some of them with bribes, but that was only a temporary expedient. Later, when she felt she was strong enough, she overpowered the enemy and exacted compensation.   She had for her counsellor Narasappiah , great in strategy and administration and in private life a skilful player on the Veena (lute).

Mangamma’s name is almost a household name in south Tamil Nadu. There are still in existence numerous avenues  and cholutries, Dharmasalas built by her as well as the lofty piles like those that remain of the Nayaka Palaces within the fort area of Tiruchy.

Mangammal Choultry opposite Madurai railway station served thousands of pilgrims to Madurai and Rameswaram. All these are monuments to the greatness of her rule. Her benefactions to temples and gifts of Agraharams (Brahmin streets) to learned brahmins  were numerous, but she was equally liberal in her endowments to Christian churches and Muslim darghas. The dargah of Baba Nattar Auliya in Thiruchy was specially favoured and received grants of villages.

Manucci has paid a handsome tribute to her benevolence and large hearted tolerance .

Niccalao Manucci (1638- 1717) was an Italian traveller and writer, who spent his life in India during the Mughal period.

SAURASHTRAS BECAME BRAHMINS

There is an interesting account of a social enactment  in her reign. The Saurashtra weavers of Madurai claimed the privilege of observing some ceremonies peculiar to Brahmins (wearing sacred thread etc). Mangamma first opposed the claim, but later sanctioned it.

There are conflicting reports about the end of her reign. According to one account, power was forcibly wrested from her hands and transferred to her grandson, on his coming of age, and the queen perished in prison. Whatever may be the truth Mangamma’s place in history  as a capable, enlightened  and beneficent ruler is unchallengeable

Source – Great Women of India, Advaita Ashrama, Mayavati, Almora, Himalayas, year 1953

–SUBHAM-

ஏகாதசி கதை, ருக்மாங்கதன் கதை (Post No.7429)

Written by London Swaminathan

Uploaded in London on  – 7 JANUARY 2020

Post No.7429

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

இது தவிர கோபக்கார துர்வாச முனிவர் ஒரு நாள் ருக்மாங்கதனுடன் மோதிய கதையும் உண்டு. அவர் ஏகாதசியின் மறு நாளன்று பாரணைக்கு வந்து ‘மன்னரே கொஞ்சம் பொறுத்து இரும்; அடியேன் ஸ்னாநம் செய்து வருவேன்’ என்று கதைத்து நதிக்கரைக்குப் போனவர் உரியகாலத்தில் திரும்பவில்லை. மன்னனும் உரியகாலத்தில் விரதத்தை முடிக்க எண்ணி கொஞ்சம் நீர் அருந்தவே முன்கோபி துர்வாசர் அவருக்கு சாபம் தந்தாராம். ருக்மாங்கதனோ நாராயணனை வேண்ட அவருடைய சுதர்சன சக்கரம்

முனிவரைத் துரத்தித்துரத்தி அடித்ததாம் ; கடைசியில் துர்வாசர் ருக்மாங்கதனின் காலில் விழவே தப்பிப் பிழைத்தாராம் . இத்தகைய கதைகள் அனைத்தும் தமிழ் என்சைக்ளோபீடியாவானன அபிதான சிந்தாமணியில் சிங்கரவேலு முதலியரால் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது . tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 5 (Post No.7428)

Written by S NAGARAJAN

Uploaded in London on  – 7 JANUARY 2020

Post No.7428

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி, நடிகை ஜேன் பாண்டா (Post No.7427)

ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி, நடிகை ஜேன் பாண்டா (Post No.7427)

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7427

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்  தினமணியில் எழுதிய மூன்று பழைய விஷயங்கள்

1.பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) – இன்னும் பதவியில் நீடிக்கிறார். விக்டோரியா மகாராணியின் 64 ஆண்டு ஆட்சி சாதனையை முறியடித்த பின்னர் பதவி விலகி இளவரசர் சார்லசுக்கு வழிவிடுவார் என்று நம்பப்பட்டது . ஆனால் இப்போது அவர் 67 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். தற்கால உலகில் நீண்ட காலம் ஆடசி செய்யும் ராணி இவர்தான்

XXXX

ஜேன் பாண்டா (Jane Fonda) வின் மணம் முறிந்தது.

மூன்றாவது கணவரான டெட்டுடன் 2001 வரை வாழ்ந்தார்.

பின்னர் நாலாவது கணவராக ரிசர்ட் பெறி வந்தார். அவர்கள் திருமண வாழ்வு 2009ல் துவங்கி 2017ல் முடிந்தது. இப்போது ஜேனுக்கு வயது 82.

XXX

ஷான் கானரி

ஷான் கானரிக்கு (Sean Connery) வயது 89. அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

TAGS —ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி , இரண்டாம் எலிசபெத்,நடிகை ஜேன் பாண்டா

–SUBHAM–

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7427

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்  தினமணியில் எழுதிய மூன்று பழைய விஷயங்கள்

1.பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) – இன்னும் பதவியில் நீடிக்கிறார். விக்டோரியா மகாராணியின் 64 ஆண்டு ஆட்சி சாதனையை முறியடித்த பின்னர் பதவி விலகி இளவரசர் சார்லசுக்கு வழிவிடுவார் என்று நம்பப்பட்டது . ஆனால் இப்போது அவர் 67 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். தற்கால உலகில் நீண்ட காலம் ஆடசி செய்யும் ராணி இவர்தான்

XXXX

ஜேன் பாண்டா (Jane Fonda) வின் மணம் முறிந்தது.

மூன்றாவது கணவரான டெட்டுடன் 2001 வரை வாழ்ந்தார்.

பின்னர் நாலாவது கணவராக ரிசர்ட் பெறி வந்தார். அவர்கள் திருமண வாழ்வு 2009ல் துவங்கி 2017ல் முடிந்தது. இப்போது ஜேனுக்கு வயது 82.

XXX

ஷான் கானரி

ஷான் கானரிக்கு (Sean Connery) வயது 89. அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

TAGS —ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி , இரண்டாம் எலிசபெத்,நடிகை ஜேன் பாண்டா

–SUBHAM–

வைகுண்ட ஏகாதசிக்கு ஏன் பெருமை அதிகம்? (Post No.7426)

By London swaminathan

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7426

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Tags முக்கோடி ,ருக்மாங்கதன் , வைகுண்ட ஏகாதசி,

agathi leaves
Hindu Board game- Paramapada Sopana Padam
Famous Vishnu Temple in Sri Rangam.

WHAT IS VAIKUNDA EKADASI? WHY DO HINDUS FAST ON THAT DAY? WHY IS IT CALLED MOKSHA EKADASI? (7425)

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7425

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Agathi leaves
Hindu Board Game- Snakes and Ladders

வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

Written by S Nagarajan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7424

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

11) ஸ்ரீ காமாசிகாஷ்டகம்

9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ காமாசிகாஷ்டகம்.

காமாசிகா என்பதை காம + ஆசிகா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தனது சொந்த விருப்பத்தின் பேரில் எழுந்தருளியிருப்பவன் என்ற பொருள் கொள்ள வைக்கும் இது.  

இறைவன் அழகிய சிங்கர் எழுந்தருளி இருக்கும் இடம் காஞ்சிக்குத் தெற்கே உள்ள திருவேளுக்கை என்ற ஸ்தலமாகும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையுடன் இங்கு இருப்பதால் வேள் + இருக்கை = வேளிருக்கை என்ற பெயரை இந்த தலம் பெற்றது. காலப்போக்கில் இது வேளுக்கையாக மாறி விட்டது. பர்யங்க நிலையில் அதாவது கால்களை மடக்கி அமர்ந்து, யோக முத்திரையுடன் யோக நரசிம்மராகக் காட்சி அளிக்கும் இறைவனை வேதாந்த தேசிகர் ஒன்பது ஸ்லோகங்களால் துதிக்கிறார். ஒரு சிறப்பு அம்சம் இறைவன் மூன்று கண்களுடன் காட்சி தருகிறார் இங்கு.

இறுதி ஸ்லோகத்தில் இதைக் கூறுவோருக்கு இஷ்ட பலிதம் ஏற்படும் என அவர் அருள்கிறார்.

12) ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட துதி ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி.

காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தொலைவில் உள்ள தலம் திருப்புட்குழி. 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலமும் கூட. இராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைக்கு மோட்சமளித்து இறுதிச் சடங்குகளை ராமர் செய்த இடம் இது தான். ஆகவே திரு + புள் (பறவை) + குழி = திருப்புட்குழி என்ற பெயரைப் பெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயு சந்நிதி உள்ளது.

பரமார்த்தம் என்றால் மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்றாகும். அது ஸ்ரீ ராமரைக் குறிக்கிறது.

போரேறு என்று ஆழ்வார்கள் ராமரைக் குறிக்கையில் இந்த ஸ்துதியில் தேசிகர் ராமரை ரணபுங்கவன் என்றும் ஆஹவபுங்கவன் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது போரில் வெற்றி பெறும் மிகப் பெரும் வீரன் என்று பொருள் இதற்கு.

சரணாகதி அடைந்தவருக்கு அருள் புரிபவன் என ராமரை தேசிகர் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறார்.

13) ஸ்ரீ தேவநாயக பஞ்சாஷத்

53 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்துதியில் தேவநாதனைப் போற்றுகிறார் தேசிகர். அடியார்க்கு மெய்யன் என்ற பெயர் கொண்ட இறைவன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறான். (திருவஹிந்திபுரம் என்றும் அழைக்கப்படும்) இந்த தலத்தில் வேதாந்த தேசிகர் பல காலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை இங்கு காணலாம். தேசிகர் வெட்டிய கிணறும் இங்கு உள்ளது.

சாதாரணமாக பாதம் முதல் கேசம் வரை பாதாதி கேசம் என்ற மரபை மாற்றி தேசிகர் இதில் இறைவனை கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கிறார். மனிதர்களை மட்டுமே இப்படிப் பாடுவது மரபு என்பதால் இறைவனை தேசிகர் தனது நண்பராகக் கருதுவது புலப்படுகிறது. தேவநாதனை உபநிடதம் சத்யம் என்று குறிப்பிடுகிறது. அப்படிப்பட்டவனை தேசிகர் பாடியதால் அவர் சத்யவாதியாக ஒளிர்கிறார் என இறுதி ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

14) ஸ்ரீ அச்சுத சதகம்

101 சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீ அச்சுத சதகம் திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடும் நூலாகும். நாயிகா பாவத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல் இது. மதுர பக்தி பாவத்தை இதில் காணலாம்.

15) ஸ்ரீ மஹாவீர வைபவம்

உரைநடையிட்ட செய்யுள் நூலாக அமைந்திருக்கும் சம்ஸ்கிருத நூலான இதில் 96 உரைநடை வரிகள்  செய்யுளைக் காணலாம்.

பெரும் வீரனான ஸ்ரீ ராமரின் சரிதம் வால்மீகி ரிஷியால் ஏழு காண்டங்களில் ராமாயணமாகத் தரப்பட்டுள்ளது. அதைச் சுருக்கமாக கம்பீரமான வார்த்தைகளைத் தொடுத்து அழகுறத் தருகிறார் தேசிகர் இதில்.

இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது.

தனது இந்த சுருக்கமான ராமாயணத்தை அவரே கடோர- சுகுமார  நடையில் – கடினமான மற்றும் எளிய நடையில் இயற்றியிருப்பதாக இறுதி ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.

***