கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —

டார்வினை எதிர்த்த பெண்மணி! (Post No.4448)

Written by S.NAGARAJAN

 

 

Date: 1 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

 

 

Post No. 4448

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 1-12-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 41வது) கட்டுரை

டார்வினை எதிர்த்த பெண்மணி!

ச.நாகராஜன்

“ஒருவன் உண்மையை அறிய முடியுமென்றால் அது கடவுளின் புத்தகத்திலிருந்து வருகிறதா அல்லது மனிதனிடமிருந்து வருகிறதா என்பது ஒரு பொருட்டே இல்லை – ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல்

பரிணாமக் கொள்கையை உலகிற்கு அளித்துப் பெரும் புகழ் பெற்ற டார்வினுக்கு 1869ஆம் ஆண்டு ஒரு புத்தகம் வந்தது. புததகத்தை எழுதியவர் ஒரு பெண்மணி. அவர் பெயர் ஆண்டாய்னெட் ப்ரௌன் ப்ளாக்வெல் ((Antoinette Brown Blackwell).

அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து பதில் எழுதிய டார்வின் தனது பதிலில், ‘புத்தகத்தைப் படிக்கும் போது அதில் எனது பல குறிப்புகள் காணப்படுகின்றன. இவை பொது மக்கள் அதிகம் அறியாதவை’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் செய்த ஒரே தவறு அதன் ஆரம்ப வார்த்தைகள் தான்! டியர் சார் என்று அந்தப் பெண்மணிக்கு எழுதிய கடிதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்!

அடுத்து ஆறு வருடம் கழித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் அவர் டார்வினை ஒரு பிடி பிடித்திருந்தார். டார்வின் எந்தக் கொள்கைகளை முன் வைத்தாரோ அவை தவறு என்று போர்க்கொடி உயர்த்தினார். அத்துடன மட்டுமின்றி புகழ்பெற்ற விஞ்ஞானியான ஹெர்பர்ட் ஸபென்ஸரையும் துணிச்சலாக எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டார்.

தி செக்ஸஸ் த்ரூ அவுட் நேச்சர் (The Sexes throughout Nature) என்ற அவரது புத்தகம் பல கட்டுரைகளின் தொகுப்பு.

டார்வின் தனது புத்தகமான ‘தி டெஸண்ட் ஆஃப் மேன் (The Descent of Man) என்ற நூலில் பரிணாமம் பெண்ணை விட ஆணை சுபீரியராக – மிக மேலாக- ஆக்கியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸரோ தனது நூலில் ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் – வலியது வாழும் – என்ற கொள்கையை முன் வைத்திருந்தார்.

இந்த இரண்டையும் எதிர்த்தார் ப்ளாக்வெல்.

“கலை, கவிதை, ஓவியம், சிற்பம், இசை ஆகியவற்றில் திறம்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றிய ஒரு பட்டியலை எடுத்தால் அது ஒப்பிடவே தக்கதல்ல என்று ஆகி விடும்” என்றார் டார்வின் தனது நூலில்.

ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் ஒரு படி மேலே போய், ‘மனித இனம் மேம்பட வேண்டுமெனில் பெண்கள் கருத்தரித்து இனவிருத்தி செய்வதை மட்டும் கொண்டிருந்தால் போதும்’ என்று கூறி இருந்தார்.

பெண்களுக்கு சம உரிமை கேட்டுப் போராடி வந்த 44 வயதே ஆன ப்ளாக்வெல்லுக்கு வந்தது கோபம்

டார்வினை நன்கு விமரிசித்து அவர் கொள்கைகள் தவறு என்று வாதித்து டார்வினை எதிர்த்த முதல் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். டார்வின் கூறிய அனைத்தும் அறிவியலுக்குப் புறம்பானவை என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

அமெரிக்காவில் ஓஹையோவில் அவரது சகோதரர் இறையியல் படிப்பு படித்துத் தேறியிருந்தார். அதே இறையியல் படிப்பைத் தானும் படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர். தொழில்துறை ரீதியில் மத பிரசாரகராக – வுமன் மினிஸ்டராக ஆக வேண்டும் என்பது அவரது ஆசை.

ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு பெண்மணியை பாதிரியாக – இறையியல் பரப்புநராக அதுவரை நியமித்ததே இல்லை. இறையியல் பிரிவில் பெண்கள் படிக்க அனுமதியே கிடையாது.

சண்டை போட ஆரம்பித்தார் ப்ளாக்வெல். அவரது தீவிரத்தைக் கண்ட நிர்வாகம் அவர் படிக்க அனுமதி அளிப்பதாக ஒப்புக் கொண்டது – ஒரு நிபந்தனையுடன். அதாவது அவரது படிப்பு முடித்த பின்னர் அவருக்கு டிகிரி – பட்டம் – வழங்கப்பட மாட்டாது என்பதே நிபந்தனை!

பெண்கள் மத போதனை செய்யும் வேலையில் ஈடுபடக் கூடாது என்பதை எதிர்த்த அவர் ரகசிய சங்கம் ஆரம்பித்து பெண்களை நன்கு பேசப் பயிற்றுவித்தார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் மறையியல் பரப்புநர் வேலை எங்கு கிடைக்கும் என்று அமெரிக்கா முழுவதும் சுற்ற ஆரம்பித்தார்.

இதில் அவர் பட்ட இன்னல்கள் ஏராளம். ஒரு சமயம் பனிப்புயலில் சிக்கி சுமார் ஏழரை மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

1850ஆம் ஆண்டு முதல் பெண்ணுரிமை மாநாடு மசாசூசெட்ஸில் நடந்தது. அதில் பேசிய அவர் பைபிளில் பெண்கள் செய்யக்கூடாது என்று சொல்லிய அனைத்தையும தாக்கிப் பேசினார்.

1853இல் நியூயார்க்கில் முதல் அமெரிக்க பெண் பாதிரியாக -வுமன் மினிஸ்டராக அவர் ஆனார். அதே சமயம் டைனோசர் பற்றிய படிமப் பாறைகள் கிடைத்தன. அவை மனிதன் தோன்றியதாக பைபிள் கூறும் கருத்துக்களுக்கு எதிரான அறிவியல் நோக்கை முன் வைத்தது.

டார்வினும் ஹெர்பர்ட் ஸ்பென்ஸரும் ப்ளாக்வெல் அறிவியல் சம்பந்தமான கொள்கைகளை எதிர்ப்பதில் பயனில்லை என்று வலியுறுத்தினர்.

தான் ஒரு முறையான விஞ்ஞானி இல்லை என்றாலும் பெண்களுக்கு இழைக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க ஒரு பெரிய தகுதி தன்னிடம் இருக்கிறது என்று முழங்கிய ப்ளாக்வெல், அந்த தகுதி, ‘நான் ஒரு பெண் என்பது தான்’, என்றார்.

ஆண்கள் ஆண்களாக இருப்பதால்யே அவர்கள் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார்கள் என்று கூறிய அவர், “அதனால் தான் அவர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் கூட ஒரு தலைப்பட்சமாக (ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதாக) இருக்கிறது” என்று கூறினார்.

டார்வின் தந்த புள்ளிவிவரங்களில் ஆண் எவ்வளவு பெண் எவ்வளவு என்பது இல்லை என்று கூறிய ப்ளாக்வெல் தானே களத்தில் இறங்கினார். உயிரின வகைகளில் உள்ள இனங்களில் ஆண் தாவரம், பெண் தாவரம். ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகள், மீன் வகைகளில் ஆண், பெண், கடல் வாழ் உயிரினங்களில் ஆண், பெண் இனம், பறவை, மனிதர் என்று இப்படி அனைத்திலும் புள்ளிவிவரங்களைச் சேகரித்தார்.

உதாரணமாக சிங்கங்களில் ஆண் சிங்கம் உருவத்தில் பெரிதாகவும் வலிமையானதாகவும் இருந்தாலும் கூட பெண் சிங்கங்கள் தனித்துவம் மிக்க உடல் அமைப்பைக் கொண்டு இன விருத்தி செய்து தன் குட்டிகளுக்கு உணவு தருவது உட்பட்ட சிக்கலான இயக்கங்களையும் வேலைகளையும் செய்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தனது ஆராய்ச்சியின் இறுதி முத்தாய்ப்பாக அவர் பரிணாமம் சுட்டிக் காட்டுவது ஆணும் பெண்ணும் சமம் என்பதையே என்று ஓங்கிய குரலில் கூறி முடித்தார்.

ப்ளாக்வெல்லை இன்றும் கூட ஒரு விஞ்ஞானியாக அறிவியல் சமூகம் அங்கீகரிக்கவில்லை. என்றாலும் கூட பெண்களின் உரிமையை ஓங்கிய குரலில் சுட்டிக் காட்டி அதற்கெனப் பாடுபட்டவராகவும், இறையியலில் பெண்களும் போதகராக வரலாம் என்பதற்கு வழி வகுத்தவராகவும், டார்வினைத் தட்டிக் கேட்ட முதல் பெண்மணியாகவும், பெண் விஞ்ஞானிகள் வளர வழி வகுத்த முதல் பெண்மணியாகவும் உலகம் இன்று போற்றுகிறது.

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

கிரேக்க புராணங்களில் மாஜிக் எனப்படும் மாயாஜாலத்தின் அதி தேவதையாக சித்தரிக்கப்படும் தேவதை கிர்க் (CIRCE).இந்த தேவதையைப் பற்றி ஏராளமான கதைகள் உண்டு.

மூலிகைகளின் இரகசியங்களைப் பற்றி அனைத்தும் அறிந்த தேவதை இது. யுலிஸிஸின் தோழர்களை மயங்க வைத்ததும் இது தான். தன் எதிரிகளை மிருகங்களாக மாற்றி விடுமாம் கிர்க். கையில் எப்போதும் ஒரு மந்திரக்கோலை இது வைத்திருக்கும். ஹோமரின் ஒடிஸி உள்ளிட்ட காவியங்களில் இடம் பெறும் பிரபலமான தேவதை இது.

இதைப் பற்றி விஞ்ஞானிகளில் பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் வில்லியம் ஜெங்ஸ் (William Jencks தோற்றம் 15-8-1927 மறைவு 3-1-2007) என்னும் அமெரிக்க உயிரியல் மற்றும் என்ஜைம் பற்றிய நிபுணராவார்.

தனது ஆய்வுகளின் மூலமாக கிர்க் பற்றிய பல கதைகளுக்கு விளக்கம் அளிக்க முடியும் என்று நம்பி அதில் அவர் தீவிரமாக முனைந்தார்.

என்ஜைம்களிள் எதிர்வினைகளைப் பற்றி ஆராய்ந்த அவர் தனது ஆய்வு ஒன்றுக்கு ‘கிர்க் எபெக்ட்’ என்றே பெயர் தந்து விட்டார்.

ஆக பிரபலமாக இன்றளவும் உலகினரால் சொல்லப்பட்டு வரும் இந்த தேவதை அறிவியலிலும் புகுந்து நிரந்தரமாகத் தன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

****

 

 

sex கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி (Post No.4436)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-28 am

 

 

 

Post No. 4436

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கியம் : பெண்களின் நுட்பமான அறிவு

 

மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!

 

ச.நாகராஜன்

 

1

நள தமயந்தியின் சரித்திரம் பாரதம் முழுவதும் தெரிந்த அற்புதமான ஒரு சரித்திரம். இதை வெண்பா பாக்களினால் தமிழில் புகழேந்திப் புலவர் அற்புதமாகப் பாடியிருக்கிறார்.

வடமொழியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் நைஷதம் என்ற மஹாகாவியத்தை இயற்றியுள்ளார். இது ஐந்து பெருங்காவியங்களுள் ஒன்றாகக் கருதப் படுகிறது.

இந்தக் காவியத்தின் அழகில் ஈடுபட்டான் தமிழ் மன்னன் ஒருவன்.

 

 

அவர் பெயர் அதிவீர ராம பாண்டியர்; பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர். கொற்கையிலிருந்து அரசாண்டதாகத் தெரிகிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பெரும் கவிஞர். வடமொழியில் விற்பன்னர். சிற்றின்பப் பிரியர். தமிழில் கொக்கோகத்தை எழுதியவரும் இவரே.

 

இவரது மனைவியாரும் சிறந்த தமிழ் அறிஞர்.

 

வடமொழிப் புலமையால் அதில் இருந்த நூல்களில் புலமை கொண்ட அதிவீர ராம பாண்டியன் நைஷத காவியத்தில் மனதைப் பறி  கொடுத்து அதைத் தமிழில் இயற்றினார். இதில் 1172 செய்யுள்கள் உள்ளன.

 

இதை அரங்கேற்றம் செய்த போது நடந்த ஒரு சம்பவத்தை இங்குக் காணலாம்

2

நைடத காவியம் அரங்கேற்றம் ஆரம்பமானது. புலவர்கள், ரஸிகர்கள் அவையில் கூடினர். அதிவீர ராம பாண்டியன் தன் காவியத்தை அரங்கேற்றும் செய்யும் விதமாகச் செய்யுள்களைப் படித்து அதை அறிஞர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

 

முதல் படலமான நாட்டுப் படலம் முடிந்தது. அடுத்து நகரப் படலம் ஆரம்பமானது.

அதில் தான் இயற்றிய செய்யுளைப் படிக்கலானார் அதி வீர ராம பாண்டியன்.

 

வாய்ந்த மின்னைம டந்தைய ராக்கிவிண்

பேர்ந்தி டாமலன்  றோமலர்ப் புங்கவன்

சாந்த ணிந்தத மனியக் குன்றென

ஏந்து வெம்முலைப் பாரமி யற்றினான்

 

 

நகரத்தை வர்ணிக்க வந்த போது அமைந்த பாடல் இது.

இதன் பொருள் :-  தாமரைப் பூவில் இருக்கின்ற  நான்முகக் கடவுள் (புங்கவன்) மேகத்தின் கண் பொருந்திய மின்னற் கொடிகளை மங்கையராக்கி மீண்டும் அம்மேகத்தினிடத்தே போகாமல் இருத்தற்கன்றோ  சந்தனத்தைப் பூசி அமைக்கப்படுகின்ற, விருப்பம் செய்கின்ற, பாரமாகிய பொன்மலையைப் போல (தமனியக் குன்று)  அந்த நன்முலைகளை (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்) அந்த மங்கையருக்கு  உண்டாக்கினான்.

 

பிரம்மா மங்கையருக்கு ஏன் முலைகளை அமைத்தான் என்பதைக் கற்பனை நயம் படப் பாண்டியன் கூறி முடித்தார்.

இதைப் பாண்டியன் கூறி முடித்தவுடன் அவையிலிருந்த புலவர் ஒருவர் எழுந்தார்.

 

“அரசே! மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம்? இது பொருத்தமற்றதாக அல்லவா உள்ளது. இதை விளக்க வேண்டும்” என்றார்.

 

மங்கையரின் கொங்கைகளை ஏன் பிரமன் அமைத்தான் என்பதைச் சொல்லப் போய் வம்பில் மாட்டிக் கொண்டோமே என்று நினைத்த பாண்டியன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். அந்தச் செய்யுளுடன் அன்றைய அரங்கேற்றத்தை முடித்து, “நாளை இதைத் தொடருவோம்” என்றான்.

 

 

அரண்மனைக்கு மீண்ட மன்னன் ஓயாத சிந்தனையில் ஆழ்ந்தான். இந்தப் பாடலுக்கு எப்படிப் பொருள் சொல்வது. மேகத்தில் தோன்றி மறையும் மின்னலுக்கும் மலைக்கும் எப்படி ஒரு சம்பந்தத்தை உருவாக்குவது என்ற கவலையில் ஆழ்ந்தான்.

அந்தப்புரம் வந்த மன்னன் படுக்கையில் உறக்கமின்றி முகம் வாடிப் படுத்தான்.

 

மஹாராணியார் பெரும் புலமை வாய்ந்தவர். நல்ல கவிஞர். அவர் மன்னனின் முக வாட்டத்தைப் பார்த்து காலையில் நடந்த அரங்கேற்ற சம்பவத்தையும் நினைத்து அவனது முகம் வாடி இருக்கும் காரணத்தை அறிந்தாள்.

 

மெல்ல மன்னரிடம் பேச்சை ஆரம்பித்தாள். “நீங்கள் பாடிய பாடல் மிக அருமை” என்றாள்.

 

மன்னனோ, “அது எப்படி? மின்னலுக்கும் மலைக்கும் என்ன சம்பந்தம் கூறுவது?” என்றான்.

 

“அது சுலபம். அது இயல்பாய் அமைந்த ஒன்று தானே” என்றாள் சர்வ சாதாரணமாக ராணி.

 

ஆர்வம் மேலோங்க, “எங்கே, அர்த்தம் சொல்லேன்” என்றான் பாண்டியன்.

 

ராணி விளக்கலானாள் : “ மின்னலுக்கும் மலைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டால் கூட இயைபு உண்டாக்கவன்றோ சூசுகமாகிய இருப்பு ஆணியை விதியோன் அடித்தான்” என்றாள் ராணி.

மன்னன் முகம் மலர்ந்தது. ராணி என்ன சொன்னாள் என்பதை கண நேரத்தில் அவன் புரிந்து கொண்டான்.

 

அதாவது மின்னல் போன்ற ஒடிந்த இடையை உடைய மங்கையருக்குக் கணத்தில் மறைகின்ற தன்மையை உடைய மின்னல் மறையாது இருக்க, அம்மலை முலைகள் மீது, ‘முலைக் கண்களாகிய’ இருப்பு ஆணிகளை பிரமன் அடித்தான் என்றாள் ராணி.

 

மறு நாள் அவை கூடியது. பாண்டியன் பெருமிதம் பொங்க (ராணியாரின்) விளக்கத்தைக் கூற அனைவரும் அதைச் சிறப்பான விளக்கம் என்று பாராட்டி ஏற்றுக் கொண்டனர்.

காவியம் தொடர்ந்தது.

 

பாண்டியன் தன் மஹராணியை எப்படிப் போற்றி இருப்பான் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை, அல்லவா!

3

பாரதம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இது போல ஆணுக்குச் சமமாக அறிவில் பெண்கள் ஓங்கி இருந்த வரலாறுகள் ஏராளம் உண்டு. தொகுப்பின் பெருகும். அத்தோடு மட்டுமின்றி செக்ஸ் எனப்படும் பாலியலில் – தாம்பத்ய உறவில் – அவர்களின் அறிவு மிகவும் நுட்பமாக இருந்தது என்பதையும் அறிய முடியும்.

 

சம்ஸ்கிருதச் செல்வம்: பேரழகியின் வர்ணனை! (Post No.4421)

Written by S.NAGARAJAN

 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

 

Post No. 4421

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

சங்கிலிருந்து எழும் கலாநிதி மண்டலம் : பேரழகியின் வர்ணனை!

 

 

ச.நாகராஜன்

 

ஒரு பேரழகி. அவளை எப்படி வர்ணிப்பது.கவிஞர் ஒருவர் முயன்று பார்க்கிறார். அதன் விளைவாக அவர் நாவிலிருந்து உதிக்கிறது ஒரு பாடல்.

அது இது தான்:

 

உதயதி தடிச்சித்ரம் மித்ரம் ரதே: கமலத்வயி

குஸுமிதநவஸ்தம்பே ரம்பே விதாய தனோரத: I

தடிதி வலதி வ்யோம வ்யோமாஸ்ரயம் ச கிரித்வயம்

கிரிபரிசிரே கம்பு: கம்பௌ கலாநிதிமண்டலம் II

 

 

சூக்தி முக்தாவளி என்ற நூலில் காணப்படும் இந்தப் பாடல் ஹரிணி சந்தத்தில் அமைந்துள்ளது.

 

 

பாடலின் பொருள்:-

இதோ எழுகிறது ஒரு புதிய மின்னல் (கால்கள்), காதலின் தோழி, மேலும் இரு தாமரை (பாதங்கள்) மலரும் புதிய இரு வாழைத்தண்டுகளுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளன (தொடைகள்), மின்னலைச் சுற்றி (கைகள்) வட்டமான ஆகாயம் உள்ளது (மெல்லிய இடை), இதைத் தாங்குகின்ற வானத்தில் இரு மலைகள் உள்ளன (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்), மேலும் மலைகளின் அருகேயே ஒரு சங்கும் (கழுத்து) அந்த சங்கிலிருந்து எழுகிறது வட்டமான சந்திரன். (அழகியின் முகம்)

 

இதை ஆங்கிலத்தில் அழகுறத் தருகிறார் திரு ஏ.ஏ.ராமநாதன் இப்படி:-

Here rises a novel lightning (legs), the friend of love, and two lotuses (feet), being placed below two plantain stems (thighs) that are fresh and flowering, and encircling is the flash of lightning (hands) round the sky (thins waist), supported by the sky are two hills (breasts) and a conch (neck) in the vicinity of the hills and the round orb of the moon (the face of the damsel) rises from the conch. (Translation by A.A.R)

 

 

இன்னொரு வர்ணனைப் பாடல்:

 

உத்க்ருஹா வோடோக்ரதனம் நதம்ரூர்

ஆச்சாத்ய வக்ஷ:ஸ்தலமஞ்சலேன I

உத்தாரயந்தி நிவிடம் நிசோலம்

மனோபவஸ்யாபி மனோ மினோதி II

 

வேணிதத்தரின் பத்யவேணி என்ற நூலில் வரும் பாடல் இது.

 

உபஜாதி சந்தத்தில் அமைந்துள்ள பாடல் இது. (இந்த்ரவ்ரஜம் மற்றும் உபேந்த்ரவஜ்ரம் இணைந்த சந்தம்)

இதன் பொருள்:-

 

அழகிய புருவத்தை உடைய அந்த அழகி, தனது மார்புக் கச்சை உயர்த்தி, தனது ஆடையின் நுனியால் மார்பகங்களை மூடிக் கொண்டு, தனது முகத்திரையைச் சற்றே உயர்த்தி, மனதிலே பிறந்த காதல் கடவுளின் மனதைக் கூடச் சலனப்படுத்துகிறாள்!

 

Holding high the knot of her bodice, the charming-browed one, having covered her bosom with the end of her garment, and raising her thick veil, she measures (agitates) the mind of even the mind-born (god) of love.

(Translation by A.A.R)

 

இப்படி ஆயிரக் கணக்கில் அழகிகள் பற்றிய வர்ணனைகளைக் கொண்ட அற்புதமான பாடல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

தெய்வ மொழி சம்ஸ்கிருதம் என்பர் சிலர்.

காதல் மொழி சம்ஸ்கிருதம் என்பர் சிலர்.

இரண்டுமே சரி தான்!

 

பாடல்களைப் படியுங்கள். காதலையும் பக்தியையும் போற்றி கவிஞர்கள் பாடிய அழகை ரஸியுங்கள்!

***

பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்! (Post No.4381)

Written by London Swaminathan 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-25

 

 

Post No. 4381

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப்  படிப்போர் அறிவர்.

உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.

 

இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:

வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)

 

பொருள்

இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்

குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

கண்களில் தீ

இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.

 

அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?

 

அவன் சொன்னான்,

“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”

 

அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

xxxx

 

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.

ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று  — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

 

இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்

அவர் சொன்னார்,  “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.

 

அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே  சிலை போல நின்றுவிட்டாள்.

 

பெண்களின் அழகிற்கு ஆண்கள் அடிமை!

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

 

xxxx

 

ஒரு பெண் பேச்சில் கில்லாடி; அழகிலோ லம்பாடி!

அவளைப் பற்றி புகழ்பெற்ற ஒரு அறிஞர் சொன்னார்:

ஓ, அவளா! பேசிப் பேசியே அழகை உருப்பெறச் செய்துவிடுவாளே!

-என்று

xxxx

 

ஆப்ரஹாம் லிங்கனின் அழகு!!!

 

ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.

 

ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.

 

 

இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது  மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.

 

லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:

அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!

 

பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.

 

xxxx

 

டேய்! போண்டா மூக்கு!

ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.

 

அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.

“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!

நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.

பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!

 

TAGS:— மூக்கு, கண், அழகு, கண்களில் தீ, லிங்கன் அழகு, குப்பைக்காரன்

—சுபம், சுபம்–

 

ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன் (Post No.4366)

Written by London Swaminathan

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-48

 

 

Post No. 4366

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாடகங்களில் விதூஷகன் என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதிய காளிதாசனின் படைப்புகளிலும் அதற்கு முன்னரும் பின்னரும் விதூஷகன் இல்லாத நாடகம் கிடையாது. இப்போது திரைப்படங்களில் வரும்  நகைச் சுவைக் காட்சிக்கு மூலமே சம்ஸ்கிருத நாடகங்கள்தான். எகிப்து, கிரேக்கம் போன்ற பழைய நாகரீகங்களிலும் கூத்து உண்டு. ந்தக் காலத்தில் நாடகம் என் றாலே சங்கீத அல்லது நாட்டிய நாடகம்தான். இதன் மூலம் வசனங்களை எளிதில் நினைவு வைத்துக் கொள்வதும் மக்களைக் கவர்ந்திழுப்பதும் எளிதாகும்.

ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் முதலியோர் ரிக் வேதத்துக்குக் கற்பித்த தேதிகளைக் கணக்கிற்கொண்டால் எகிப்திய நாடகங்களுக்கும் முன்னோடி நாம்தான்.

ரிக் வேதம் பாரத நாட்டின் கலைக்களஞ்சியம்; அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அண்மையில் பழைய மலர் ஒன்றைப் படித்தேன். அதில் ரிக் வேதத்தில் கோமாளி பற்றிய குறிப்பு கூட இருப்பதை ஒருவர் எழுதியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகத்தின் தோற்றம் பற்றிய கட்டுரையில் ரிக் வேதத்திலுள்ள உரையாடல்களில் நாடக மூலக்குறுகளைக் காணலாம்.

உலகின் மிகப் பழைய நூலான– கவிதைத் தொகுப்பான — ரிக் வேதத்தின்  உரையாடல்கள் பத்தாவது மண்டலத்தில் உள்ளன:–
RV 10-51: அக்னி- வருணன்
RV 10-10 யமன்  – யமி

RV 1-179 அகஸ்தியர்– லோபாமுத்ரை

RV 10-95 புரூருவஸ்- ஊர்வஸி

RV 10-86 இந்திரன் — வ்ருஷகபி

மேலும் பல உரையாடல்கள் RV 10-135; 10-124; 4-26; 10-108; 10-28 உள்ளன.

புருஷமேத யாகத்தில் 200 பேருக்கு மேலாக “நரபலி கொடுக்கும்” பட்டியலில் காரி என்பவர் சிரிப்புக் கடவுளான ஹாசனுக்கு பலியிடப்படுவதாக உள்ளது. உலகில் சிரிப்புக்கும் ஒரு கடவுள் வேத கலத்திலேயே இருந்திருக்கிறது; (வாஜசநேயி சம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை;VS 30-6 and T S 3-41.)  நாடகத்தில் கோமாளி என்னும் கதாபத்திரம் இருந்தனர் என்றால் அவர்களுடைய கலை ரசனை, முன்னேற்றத்துக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

 

வண்டி இழுக்கும் குதிரை லேஸான பாரத்தை விரும்பும்; அது போல நகைச்சுவையுண்டாக்கும் கோமாளிகள் நல்ல சிரிப்பை உண்டாக்கும் லேஸான சொற்களை விரும்புவர்; காதலன் காதலியை நாடுவது போல; தவளைகள் உணவுக்காக ஏங்குவது போல –ரிக் வேதம் 9-112-4

 

சிலர் ரிக் வேதப் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்:–

சமயப் பாடல்கள்

தத்துவப் பாடல்கள்

சமயத் தொடர்பற்ற பொதுப் பாடல்கள்

 

சமயம் தொடர்பான துதிப் பாடல்கள்தான் இதில் அதிகம்; நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பிரபஞ்சத்தின் காரணம் என்ன? என்ற சில தத்துவப் பாடல்களும் உள்ளன.

 

சமயத் தொடர்பற்ற பாடல்கள் பல சுவையான விஷயங்க ளைச் சொல்லும்; இதில் திருமணப் பாடல்களும் ஈமக் கிரியை தொடர்பான பாடல்களும் அடக்கம்.

 

சூரியன்-  சந்திரன் திருமணம் தொடர்பான ஒரு துதி (10-85) சுவையான துதியாகும். கணவன்  – மனைவி இருவர் இடையே உள்ள உறவு சூரியன், சந்திரன் போல இருக்க வேண்டுமாம்:

 

காலையில் ஒன்றும் இரவில் ஒன்றும் வெளிச்சம் தருவது போல வேலைக ளைப் பகிர வேண்டும்

இரண்டும் பூமியில் உயிரினங்கள் தழைக்க உதவுகின்றன (உயிருடன் உள்ளவரின் ஆரோக்கியத்துக்கு சூரியன் உதவும்; தாவரங்கள் வளருவது சந்திரனால் என்பது இந்துக்களின் நம்பிக்கை

 

 

நான் இன்று உன் கையைப் பிடிக்கிறேன் (பாணிக் கிரஹணம்) (மணமகன் தனது வலது கையால், மணமகளின் வலது கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் மந்திரம்); உன்னுடைய கைகளைப் பற்றுவதால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும்; நாம் இருவரும் முதிய வயது வரை ஒன்றாக வாழ்வோம். என் வீட்டின் ராணியாக இருக்க உன்னை அர்யமன், பக, சவித்ரு, புரந்த்ரி ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

 

இந்த மந்திரத்தின் (10-85-36) கடைசி மந்திரம் முத்தாய்ப்பு வைத்ததாக இருக்கிறது:

 

என் வீட்டில் ஆட்சி செய்

கணவனின் பெற்றோர்கள்

சஹோதரன், சஹோதரி மீதும்தான்

எல்லோரும் உனக்குட் பட்டவர்களே10-85-46

திருமண துதிகளைப் படிக்கையில் பெண்களை எவ்வளவு உயர்த்தி வைத்து இருக்கிறார்கள், எவ்வளவு புகழ்கிறார்கள் என்று அறியலாம்.

 

சுபம், சுபம்–

பூமிக்கு பாரம் யார்? வேதப் பிரான்பட்டர் பதில் (Post No.4274)

Written by London Swaminathan

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 17-45

am

 

Post No. 4274

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பூமிக்குப் பாரம் யார்? இந்த பூமி சுமப்பதே வீண் என்று யாரைச் சொல்லலாம்?

 

5X 5 + 5 தெரியாதோர் இந்த உலகில் வாழ்வதே  பிரச்சினைதான்!

 

இது என்ன பிரமாதம்? விடை முப்பது 5X5+5=30!

 

வேதப் பிரான் பட்டர் சொல்லும் 30 அதுவல்ல.

வையம் புகழும் பாவைப் பாடல் முப்பதை அவர்  குறிப்பிடுகிறார்.

 

திருப்பாவை தெரியாதோரை இந்த பூமி சுமப்பதே வீண்.

 

இதைச் சொல்வதையும் அழகாகப் பாடல் வடிவில் பகர்வார்

 

பாதகங்கள் தீர்க்கும்

பரமன் அடிகாட்டும்

வேதமனைத்துக்கும்

வித்தாகும்- கோதைத் தமிழ்

ஐயைந்து மைந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதூஉம் வம்பு!

 

–வேதப் பிரான் பட்டர், ஆண்டாள் வாழித் திருநாமம்

வம்பு

ஆனந்த விகடன் அகராதி (1937-ம் ஆண்டு) தரும் பொருள்:-

கயிறு, அசப்பியம் ( சபைக்கு அடாத சொல்), சண்டை, தீச் செயல், தீச் சொல், நிலையின்மை, புதுமை, மிடா (பானை), முலைக் கச்சு, வாசனை, வீம்பு.

xxxx

கிரியா அகராதி தரும் அர்த்தம்:–

Unnecessary trouble; issue leading to quarrel; gossip

 

 

சுமப்பது என்ற வினைச் சொல்லை பொறுக்கி எடுத்திருப்பது ஆழந்த சிந்தனைக்குரியது. ‘கழுதை பொதி சுமக்கும்’ என்று சொல்லுவோம். அது போல பாரம்தான் திருப்பாவை தெரியாத, படியாத, கேளாத அறிவிலிகள்!

 

அடுத்த படியாக ‘வம்பு’ என்ற சொல். இதற்குப் பல பொருள் உண்டு.

நான் யார் தெரியுமா?

‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையை விட மாட்டேன்’ என்று வீராப்பு பேசுவோம்.

 

‘அவள் ஊர் வம்புக்குக் கிடந்து அலைகிறாள்’ என்று சிலர் மீது புகார் சொல்வோம்.

 

‘வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்காதே’ என்றும் கேட்டிருப்போம்.

வேதப் பிரான் சொல்லும் ‘வம்பு’ எதுவோ?

ஊர் வம்பு பேசும் வெட்டிக் கும்பலில் ஒருவர்; சபைக்கு ஏற்றதல்லாத சொற்களைப் பேசும் ஆட்களில் ஒருவர் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம்.

 

ஆக திருப்பாவை என்பதும் ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி என்பதும் (143 பாடல்கள் ) பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு TEENAGE GIRL –டீன்  ஏஜ் கேர்ல்– பெண்– இப்படி ஊர்ப் பெண்களை (gossip) வம்பு பேசவிடாமல்- திருமாலின் பெருமைதனைப் பேச அழைத்திருப்பது அதிசயம்தானே. இவருக்கும் முன்னால் காரைக்கால் அம்மையாரைக் காண்கிறோம், மங்கையற்கரசியைக் காண்கிறோம், சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபது பெண் புலவர்களைக் காண்கிறோம்; அவர்களில் மாமணியாக விளங்கும் அவ்வையாரையும் அறிவோம். ஆனால் ஆண்டாள் போல இளம் வயதும் இல்லை; கோழி கூவுவதற்கு முன்னால் ஊர்மக்களை, பெருமாளின் பெருமையைச் சொல்லி அழைத்த ஆண்டாளின் திருப்பாவை 5X 5 +5 = 30 அறியாதோர் பூமிக்கு வம்பு, பாரம், குப்பை!

 

நாமும் ஆண்டாள் பெருமையைப் பாடுவோம்:–

 

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!

வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

 

 

 

–SUBHAM—

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை! (Post No.4261)

Written by London Swaminathan

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 1-08 pm

 

Post No. 4261

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்:

 

யம தர்ம ராஜன் பூமிக்கு வந்தார். அழகான ஒரு பிராமணப் பெண்ணைக் கண்டார்; காதல் கொண்டார்; அவள் பெயர் விஜயா.

 

ஓ பேரழகியே, உன் மீது காதல் கொண்டேன்; என்னைத் திருமணம் செய்து கொள்;  யம லோகம் போகலாம். இனிதே வாழலாம் என்றான்– யமதர்ம ராஜன்.

அடச் சீ, தள்ளி நில்; உன் மூஞ்சியும் முகரையும் பார்க்கச் சகிக்கவில்லை; வாஹனமோ உன்னை விடக் கருத்த எருமை- என்றாள் விஜயா.

யமதர்ம ராஜனோ விடவில்லை.

பெண்ணே! என் வீரப் பிரதாபங்களைக் கேள்; யுதிஷ்டிரன் எனப்படும் தர்மனுக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால் அதற்கும் முன்னதாகவே , என் ஒருவனுக்குத்தான் தர்மராஜன் என்று பெயர்; அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிப்பது என் கடமை; ‘ஆளைக் கண்டு ஏமாறாதே ஊது காமாலை’ என்ற பழமொழியை அறியாயோ? பேதையே1 பெண் மானே1 இளங்கிளியே; கருங்குயிலே; என் குணத்தைப் பார் –என்றான் யமன்.

அவளும் குணத்தில் மயங்கினாள்; கல்யாணத்துக்கு இணங்கினாள்.

 

இருவரும் யமலோகத்துக்கு ‘ஹனிமூன்’ போனார்கள்; இல்லற வாழ்வு இனிதே விளங்கியது.

 

பெண்ணே; ஒரே ஒரு கண்டிஷன்/ நிபந்தனை; இந்த ராஜ்யத்தில் தெற்கு திசைப் பக்கம் போய்விடாதே; எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்லி வைத்தேன்– என்றான் யமதர்மன்.

 

சந்தேகப் பேர்வழிகள்!

பெண்புத்தி வேறு வகையில் செல்லும்; ஆண்கள் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் வேறு ஒரு கணக்குப் போடுவர்; சந்தேகப் பேர்வழிகள்; வீட்டிற்குத் தாமதமாக வந்தால் வேறு ஒரு பெண் பின்னனியில் இருக்கிறாளோ? என்பர். தும்மல் போட்டால் இப்போது உம்மை யார் நினைத்தாள்? யார் அந்தப் பழைய காதலி? (காண்க திருக்குறள்) என்பர். உன்னை நான் இப்போது மறப்பேனா? என்று அவன் சொன்னால் ஏன் ‘எப்போதும்’ என்று சொல்லவில்லை என்று ஊடல் கொள்ளுவர் (காண்க காமத்துப்பால்-திருக்குறள்)

 

 

சம்சயாத்மா விநஸ்யதி= சந்தேகப் பேர்வழி அழிவான்– என்று கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்னதையும் உதறிவிட்டு தென் திசைக்குப் பயணமானாள் இளஞ் சிட்டு விஜயா- யமனின் புது மனைவி!

 

கோரமான காட்சி; ஐயோ அம்மா

என்று சத்தம்; அடி உதை, எத்து, குத்து, வெட்டு, தட்டு என்று யமகிங்கரர் முழக்கம். பாபாத்மாக்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறல்; ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது விஜயாவுக்கு; சரி திரும்பிப் போகலாம் என்று நினைத்த போது “மகளே! பார்த்த ஞாபகம் இல்லையா? நாந்தான் ம(க்)களைப் பெற்ற மகராசி!” என்று கூச்சல் போட்டாள் விஜயாவின் அம்மா!.

 

அன்றிரவு விஜயாவின் கதவைத் தட்டினான்; எமன்; ஒரு ‘பிராமிஸ்’ (Promise)  கொடுத்தால்தான் இன்றிரவு உமக்கு அனுமதி என்றாள் விஜயா.

அன்பே, ஆருயிரே! உனக்கு இல்லை என்று சொல்வேனா? என்றான் யமன். கதவும் திறந்தது.

 

மெதுவாக அவிழ்த்துவிட்டாள்! அம்மாவின் கதையை!

என் அம்மாவை சித்திரவதை நடை பெறும் தென் திசையிலிருந்து விடுவித்தால் என்னைத் தொடலாம்; படலாம் என்றாள்.

 

அடக் கடவுளே; தென் திசை செல்லக்கூடாது என்று சொன்னேனே! இந்து மதத்தில் ஒரு விதி உள்ளது அதுதான் வேதத்தில் முதல் மந்திரம்; சத்யம் வத= உண்மையே பேசு; உபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது சத்யமேவ ஜயதே நான்ருதம்= ‘’வாய்மையே வெல்லும் – பொய் அல்ல’’ என்று.– அதுதானே இந்திய அரசின் , நீ வாழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் சின்னம்; நானே கூட உண்மையை மீற முடியாது; உன் அம்மா செய்த பாவங்களுக்கு அவள் நரகத்தில் அனுபவிக்கிறாள். அதற்கு நான் என்ன செய்வேன்? கடவுளேகூட சாபமோ, வரமோ கொடுத்துவிட்டால் அதை அனுச ரித்தே ஆக வேண்டும்– நான் ‘தீர்க சுமங்கலி பவ:’ என்று சொல்லி சாவித்ரியிடம் சிக்கிய கதைதான் உலகப் பிரசித்தமே என்றான் யமன்

அவளோ கெஞ்சினாள்; மன்றாடினாள்; சரி இந்து மதத்தில் எல்லாப் பாவங்களுக்கும் விமோசனம் உண்டு; எல்லா சாபங்களுக்கும் ஒரு குறுக்கு வழியும் உண்டு. அதன்படி கொஞ்சம் தப்பிக்கலாம். உங்கள் அம்மாவின் பாவம் போவதற்குச் சமமான புண்ணிய கருமங்களை – யாக யக்ஞங்களை பூலோகத்தில் ஒருவர் செய்து கணக்குக் காட்ட வேண்டும்– எனது அக்கவுண்டண்டு (Accountant) சித்திர குப்தன் லாப-நஷ்டக் கணக்கில் மன்னன். அவன் ஓகே சொன்னால் உன் அம்மா    பிழைப்பாள் என்றான் யமன்

 

அவளும் பூலோகத்தில் உள்ள எல்லாப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்தாள்; மாற்று “கிட்னி” (Kidney) கேட்டு அல்ல; புண்ய கருமங்களைச் செய்ய ஒரு பெண் தேவை என்று. மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் கிடைத்தாள்

யாக  யஞங்களை முறையே செய்து, சித்திரகுப்தன் கணக்குகளைச் சரி பார்த்து யம தர்மனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுக்கவே விஜயாவின் அம்மா விடுதலை ஆனாள்

விஜயாவுக்கும் சந்தோஷம்; இல்லறம் இனிதே நடந்தது!

 

கதையில் சுவை கூட்ட கொஞ்சம் சொற்களை மட்டும் கூட்டினேன்; ஆனால் கருத்துப் பிழை எதுவுமிலை.

 

இந்தக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன?

1.தென் திசை பற்றி  திருக்குறளும் சங்கத் தமிழ் (புறநானூறு) பாடல்களும் சொன்னது வேதத்தில் உள்ள இந்து மதக் கருத்தே; ஆகையால் தமிழ் பண்பாடு, வடக்கத்திய பண்பாடு என்று எதுவுமிலை.

 

2.ஆரியர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்தனர்- மத்திய ஆசியாவில் இருந்து,  ஸ்டெப்பி புல் வெளியிலிருந்து வந்தனர் என்று உளறிக்கொட்டி கிளறி மூடும் மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தக் கதை. ஏனெனில் தென் திசை யமன் திசை என்பது இந்து மதக் கருத்து- தமிழர் கருத்து- திருவள்ளுவர் கருத்து– இது உலகில் வேறு எங்கும் இல்லை. ஆக இந்துக்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

3.இன்னும் ஒரு கருத்து; கடவுளே ஆனாலும் உண்மை என்னும் விதி முறையை- நியாயம், நீதி, நேர்மை என்ற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் சொந்தக்காரர்கள், வேண்டியவர்களுக்குச் சலுகை இல்லை; ஆனால் பாப விமோசனம் பெற வழிகள் உண்டு.

 

 

4.வில்லியம் ஜோன்ஸும் மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லூம் காட்டிய ஓரிரு ஒற்றுமைகளைவிட நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேற்றுமைகளே அதிகம். நம்முடைய கலாசாரத்தில் கொஞ்சம் மிச்சம் மீதி அவர்களுக்கு நினைவிருக்கிறது ஏனெனில் உலகம் முழுதும் இந்து மத சம்பிரதாயங்கள் இருந்ததன் மிச்சம் சொச்சம்தான் இவை என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) உரைகளில் மொழிந்துள்ளார்.

எகிப்து முதலிய கலாசாரங்களில் மேற்கு திசைதான் மரணதேவன் திசை!

 

5.யமனும் கூட நல்லவன்; நீதி நெறிப்படி– சட்டப் புத்தகப் படி- தண்டிப்பவனே. ஆனால் நசிகேதன், மார்கண்டேயன், சாவித்திரி போன்றவர்களிடம் ‘ஜகா’ வாங்கினார். காரணம்? ஒரு சொல் சொல்லிவிட்டால் அதை மாற்ற முடியாது; இறை அருள் இருந்தால்

பாரதி போல  “காலா என் காலருகே வாடா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்/ என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” எனலாம்.

 

வாழ்க புராணக் கதைகள்! வளர்க

அவை உணர்த்தும் நீதி நெறிகள்!!

 

–SUBHAM—

 

TAGS:

யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம்

 

வளையல் ஓசையால் வரவேற்கவில்லையா? (Post No.4257)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Post No. 4257

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வளையல் ஓசையால் உன்னை என் தலைவி வரவேற்கவில்லையா நளனே!

ச.நாகராஜன்

 

 

நள தமயந்தி கதை புராதனமான ஒன்று. வேதத்திலேயே நள- தமயந்தி கதை கூறப்படுகிறதென்றால் அதன் பழமை பற்றியும் பெருமை பற்றியும் அதிகம் பேசத் தேவையே இல்லை!

தேவர்களும் விரும்பிய ஒப்பற்ற அழகியின் அழகை எப்படித் தான் வர்ணிப்பது? முடியாத காரியம்.

 

அசோக வனத்தில் சீதை இருந்த போது நள தமயந்தியை நினைத்துப் பார்த்தது குறிப்பிடத் தகுந்தது.

அப்படி ஒரு ஆதர்ஸ தம்பதியாக நள- தமயந்தி திகழ்ந்தனர்.

 

நள-தமயந்தி சரிதத்தை பல்வேறு கவிஞர்கள் தங்கள் கவிதா சக்திக்குத் தக்கபடி அருமையாக தங்கள் தங்கள் மொழிகளில் பாடியுள்ளனர்.

நளவெண்பா தமிழில் அமைந்த அழகிய நூல்களுள் ஒன்று.வெண்பாப் பாடல்களால் அமையப பெற்ற இந்த நூலை இயற்றியவர் புகழேந்திப் புலவர்.

 

நள சம்பூ சம்ஸ்கிருதத்தில் அமைந்த அற்புதமான நூல்.

இதை திரிவிக்கிரம பட்டர் என்பவர் இயற்றியுள்ளார்.

சம்பு காவ்யம் என்றால் உரைநடையும் கவிதையும் இணைந்த ஒன்று.

 

 

நூலை உரைநடையாக அமைத்து அதில் முக்கியமான சாரத்தைக் கவிதையாகத் தந்தது பஞ்ச தந்திரக் கதை.

 

ஆனால் சம்பு இலக்கியமோ நூலைக் கவிதை வடிவில் தந்து சாரத்தை உரைநடையாகத் தந்து புது பாணியை வகுத்தது.

சம்பு என்ற இந்த ஒரு புதிய பாணியை சம்ஸ்க்ருத கவிதா இலக்கியத்தில் திரிவிக்கிரம பட்டர் ஆரம்பித்து வைத்தார்.

இவரது கவிதா சாமர்த்தியம் அபாரமானது. அழகிய ஒரு தனி நடையை இவர் கொண்டிருந்தார்.

 

 

கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் (Nausari Inscription of Rastrakuta Kind Indra III of 915 A.D.) காலத்திய நௌசாரி கல்வெட்டில் உள்ளதை எழுதியவர் இவரே.

பத்தாம் நூற்றாண்டில் பிரபலமான காவியமாக நள சம்பு திகழ்ந்தது.

 

அதில் ஒரு பாடல் இது:

 

கிஞ்சித்கம்பிதபாணிகங்கணரவை: ப்ருஷ்டம் நனு ஸ்வாகதம்

வ்ரீடானம்ரமுகாப்ஜயா சரணயோன்யர்ஸ்தே ச நேத்ரோத்பலே I

த்வாரஸ்தஸ்தனயுக்மமங்கலகடே தத்த: ப்ரவேஷோ ஹ்ருதி

ஸ்வாமின் கிம் ந தவாதிதே: சமுசித்தம் சக்யா நயானுஷ்டிதம் II

 

இந்த அருமையான பாடல் இது. சார்தூலவிக்ரிதா சந்தத்தில் அமைந்துள்ளது.

 

இதன் பொருளைப் பார்ப்போம்.

 

“எனது தலைவி தனது கையைச் சிறிதே அசைத்து தனது வளையோசையால் உன்னை வரவேற்கவில்லையா? வெட்கம் மீதூற தன் தலையைக் குனியச் செய்து அல்லி மலர் போன்ற தன் கண்களை உன் பாதங்களை நோக்கிச் செலுத்தவில்லையா? மார்பகம் என்ற இரண்டு புனிதமான கலசங்களைக் கொண்டு அலங்கரிக்கும்  தனது இதய வாயில் கதவை அவள் உனக்காகத் திறந்து வைக்கவில்லையா?

 

ஓ, அரசே! (நளனே)

 

மிகுந்த கௌரவம் பொருந்திய விருந்தாளியான உனக்கு எந்தப் பொருத்தமான ஒரு வரவேற்பு தான் அளிக்கப்படவில்லை, சொல் பார்ப்போம்!”

இதை அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஏ.ஏ,ராமநாதன்.

 

Has not my mistress (Damayanti) bidden you welcome by the jingle of her armlets, even as her hand shook a little? Has she not directed her lily-like eyes at your feet when she bent down her face, overcome by shyness? Has she not given entrance to you in her heart  which has furnished at its gate two auspicious pot in the form of her breasts? O, Master (Nala), what befitting welcome has not been offered by my friend to you, an honoured guest?

 

(Translation by A.A.Ramanathan A.A.R)

 

இந்த ஒரு கவிதையைப்  படித்தவுடன் முழு காவியத்தையும் படிக்கத் தோன்றுகிறதல்லவா?

 

அது தான் திரிவிக்கிரம பட்டரின்- நள சம்பு காவியத்தின் -வெற்றியாகும்!

***

பெண்கள் நட்சத்திரங்கள்! யஜுர் வேதம் முழக்கம்!! (Post No.4249)

Research article written by London Swaminathan

 

Date: 27 September 2017

 

Time uploaded in London- 7-03 am

 

 

Post No. 4249

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

நட்சத்திரங்கள் (stars) என்பன யாவை? அவைகள் என்ன? விஞ்ஞானம் சொல்கிறது- “அவை எல்லாம் சூரியன்கள்; சில நட்சத்திரங்கள் சூரியனை விட கோடி மடங்கு பெரியவை. அவற்றின் ஒளி பூமியை அடையவே பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் நாம் கருகாமல் இருக்கிறோம்; சூரியன் என்பது மஞ்சள் ( a mediocre yellow star) வகை நட்சத்திரம்; அதாவது நடுத்தர நட்சத்திரம்”. இது விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்தி.

 

ஆனால் சமய நூல்கள் என்ன சொல்கின்றன? நட்சத்திரங்கள் புண்யாத்மாக்களின் ஆவி, ஆன்மா; இறந்து போன மன்னர்கள் நட்சத்திரங்கள் ஆவதாக எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நம்பினர். மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, அமேசான் காடு வாழ் பழங்குடி மக்களும் இதையே சொல்லுவர். ஆனால் அவர்கள் எல்லோரும் கெட்ட, நல்ல மனிதர்கள் எல்லோரும் இறந்த பின்னர் இப்படி ஆவார்கள் என்று சொல்லுவர். இந்து மதமோ புண்ய ஆத்மாக்கள் மட்டும் நட்சத்திரங்கள் ஆவர் என்கிறது.

 

 

மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் (Inter Galactic Space Travel by Arjuna)பற்றிய சுவையான விஞ்ஞான விஷயம் வருகிறது. இதையே சாகுந்தலத்தில் காளிதாசனும் பேசுகிறான். மாதலி என்னும் விண்வெளி பைலட்டிடம் (விமானியிடம்) அர்ஜுனன் ஒரு கேள்வி கேட்கிறான்; அடக் கடவுளே! இது என்ன விண்கலத்திற்கு வெளியே நான், பறக்கும் ஒளிப் பிழம்புகளைக் காண்கின்றேனே! இவை எல்லாமென்ன?

 

மாதலி சொல்கிறான்: அர்ஜுனா! இவைகளைத்தான் மக்கள் பூமியில் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர். இவைகள் எல்லாம் இறந்து போன புண்ய ஆத்மாக்கள்”.

 

இது மிகவும் அபூர்வமான வருணனை. பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருந்து மற்ற ஒரு நட்சத்திர மண்டலத்துக்குப் போகும் வித்தையை இந்துக்கள் அறிந்திருந்தனர். ஐன்ஸ்டைன் (Einstein) முதலியோர் ஒளிதான் மிகவும் (Light is the fastest thing) வேகமான பொருள்; அதை மிஞ்சும் எதுவும் இல்லை. யாரும் ஒளியின் வேகத்தை நெருங்கக்கூட முடியாது. அப்படி பயணம் செய்தால் அவர்கள் நித்திய மார்கண்டேயர்கள்; அவர்கள் முதுமையே எய்த மாட்டார்கள் (Ever young, never die) என்று சொன்னார்கள். ஆனால் இந்துக்கள் மனோ வேகத்தில் செல்லும்– விண்வெளி பயணம் செய்யும் வித்தையை அறிந்து இருந்தனர். நாரதர் போன்றோர் திரி லோக சஞ்சாரி. நினைத்த மாத்திரத்தில் விண்வெளியில் (capable of Inter Galactic Travel) எங்கும் செல்லலாம்.

 

விஞ்ஞானிகளும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள்; நாம் எல்லோரும் (We were all star dust once) நட்சத்திரத் துகள்களே; 1500 கோடி வருடங்களுக்கு முன்னால் பிரபஞ்சம் மாபெரும் வெடிப்பில் (Big Bang) சிக்கியது. அப்போது பறந்த துகள்களே சூரிய மண்டலம், கிரஹங்கள்; அதில் தோன்றிய நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் பகுதியே”.

 

ஆயினும் இந்துக்கள் சொல்லுவது போல இறந்த ஆன்மாக்கள் என்பதற்கு அறிவியல் விளக்கம் கிடைக்கவில்லை. உலகில் இவ்விஷயத்தில் இந்துக்களே முன்னோடி. ஏனெனில் வடக்கு வாநத்தில் ஒளிரும் புகழ்மிகு, எழில் மிகு, நட்சத்திரக் கூட்டத்துக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயரிட்டு ஏழு ரிஷிகளின் பெயரைச் சொன்னார்கள். இன்றும் பிராமணர்கள் த்ரிகால சந்தியாவந்தனத்தில் தினமும் மூன்று முறை அந்த ஏழு ரிகளை வணங்குகின்றனர். அது மட்டுமல்ல. அதில் வசிஷ்டர் அருகில் இருக்கும் அருந்ததி நட்சத்திரத்தை எல்லாப் பெண்களும் கற்புக்கரசியாக வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.

2200 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இயறிய புற நானூறும் அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் சப்தரிஷி மண்டலத்தையும் அருந்ததி நட்சத்திரத்தையும் விதந்து ஓதுகின்றன. ஆக, தமிழர்களுக்கும் இவ்விஷயம் தெரியும்

அது மட்டுமின்றி துருவ நட்சத்திரம், (Pole Star) தென் வானத்தில் உள்ள அகஸ்திய (Canopus) நட்சத்திரம், திரி சங்கு (Southern Cross) நட்சத்திரம், சந்திரனின் பாதையில் உள்ள 28 (27+ அபிஜித்= 28)  நட்சத்திரங்கள்

ஆகியவற்றுக்கும் புனித அந்தஸ்து வழங்கியது இந்து மதமே.

மற்ற எல்லா கலாசாரங்களும் சப்த ரிஷி மண்டலத்தை பெருங்கரடி (Ursa Major= Great Bear) என்றும் பறக்கும்  பட்டம் (kite) என்றும் மன்னரின் தேர் (Dipper, Chariot) என்றும் அழைத்தன. நாம் மட்டுமே புனித அந்தஸ்து கொடுத்தோம்.

இப்போது யஜூர் வேதம் சொல்லும் செய்தி இவை எல்லாவற்றையும் விடச் சுவையாக உள்ளது. யஜூர் வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு அதில் சுக்ல யஜூர் வேதத்தின் ஒரு பகுதியான சதபத பிராமணத்தில் இந்தச் செய்தி வருகிறது.

சதபத பிராமணம் ஒரு பெரிய என்சைக்ளோபீடியா; அது சொல்லாத  விஷயமே இல்லை. ஆனால் எல்லாம் வேடிக்கையாக இருக்கும்; வெள்ளைகாரர் களுக்கு அதைப் பார்த்து ஏக குஷி! இதுதாண்டா, உலகிலேயே மிகப்பெரிய உளறல் மூட்டை; இதை வைத்தே இந்துமதத்தை ஒழித்துவிடலாம் என்று 100 ஆண்டுகளுக்கு முன் கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் கொக்கரித்தனர். ஆனால் இந்துக்களுக்கோ இது மிகப் பெரிய புனித நூல்; இதில்தான் அஸ்வமேத, புருஷ மேத, ராஜ சூய யக்ஞங்கள் பற்றி உள்ளன. ரிக் வேதம் மூன்று நட்சத்திரம் பெயரையே சொல்லும்; ஆனால் யஜுர் வேதமோ 28 நட்சத்திரத்தின் பட்டியலைத் தரும். உலகில் வேறு எந்த நூலிலும் — எகிப்திய , பாபிலோனிய, மாயன், சீன — நூல்களில் விரிவான பட்டியல் இல்லை. சீனர்கள் நம்மிடம் இரவல் வாங்கியதாக வெள்ளைத்தோல் “அறிஞர்களும்” செப்புவர்.

 

பெண்கள் ஸ்டார்ஸ்!!!

 

“ஸ்த்ரீகள் நட்சத்திரங்கள். தேவலோகம் செல்லுபவர்களுக்கு நன்மை செய்வார்கள்; புருஷர்களுக்கு இவர்கள் நட்சத்திரங்கள் போலா வார்கள்”- 6-5-4-9

 

இது ஜம்புநாதன் அவர்களின் மொழி பெயர்ப்பு (யஜூர்வேதக் கதைகள், பக்கம் 78)

 

ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள விஷயத்தை நான் பகர்வேன்:-

 

“தெய்வீக கிழவிகள், வெட்டப்படாத இறக்கைகளுடன், கடவுளுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஆங்கிரஸ் போல, சட்டியில், பூமியின் மடியில், சுடுவார்கள்; இப்போது அவர்கள் உதவியுடன் புரோகிதர்கள் வறுக்கிறார்கள்;  ஆனால் இவைகள் எல்லாம் நிச்சயமாக நட்சத்திரங்கள்.- பெண்கள் உண்மையிலேயே நட்சத்திரங்கள். சொர்க லோகத்துக்குச் செல்லும் ஆண்களுக்கு இவர்களே ஒளிகாட்டும் விளக்குகள்; இந்த நட்சத்திரங்களைக் கொண்டே அவர்கள் சுடுகிறார்கள் (வறுத்து எடுப்பர்).

 

 

ஒருவர் இப்படி மேல் உலகங்களுக்குச் செல்லுகையில் –அதுதான் சிறந்த புகலிடம்; அதுதான் லட்சியம். அங்கே சுட்டெரிக்கும் சூரியனே, இறந்துபோன நல்லவர்கள். அங்குள்ள மிகப்பெரிய ஒளி பிரஜாபதி அல்லது சொர்கம். இப்படி மேல் உலகங்களுக்குப் போனால் அதுவே சிறந்த அடைக்கலம்; அவர்கள் லட்சியத்தை அடைந்துவிட்டனர்.

 

–சதபத பிராமணம் 1-9-3-10

தைத்ரீய பிராமணமும் (1-5-2-6) நட்சத்திரங்களை கடவுளரின் வீடுகள் என்று கூறும். யார் இதைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் அந்த வீட்டை அடைவார்கள்.

 

சதபத பிராமணத்தில் உள்ள விஷயங்களை அப்படியே அர்த்தம் செய்யக்கூடாது; அதன் மறைபொருளை பெரியோர் மூலம் அறியவேண்டும். வேத இலக்கியம் முழுதையும் கற்றோருக்கே அதன் பொருள் விளங்கும்; வெள்ளைகாரர்களுக்கு அர்த்தம் புரியாததால் இதை மொழி பெயர்த்து சிரி சிரி என்று சிரித்து விட்டனர். ஆனால் இதில்தான் எல்லா விஷயங்களும் இருப்பதால் அவர்களால் இதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. மொழி இயல், உளவியல், தாவரவியல், விலங்கியல், வானியல் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்லுகிறது சதபதம்; வெள்ளைக்கா ர்கள் கூட இதற்கு கி.மு 850 முத கி.மு 1000 வரை கால கணித்துள்ளனர். நாமோ  அனாதி காலம் தொட்டு வழங்கி வருவதாக நம்புகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சதபத பிராமணம் சொல்லிய வழியே சோழ மன்னன் பெருநற்கிள்ளியும், கரிகால் சோழனும் ராஜசூய யக்ஞமும், பருந்து வடிவ யாக குண்டமும் வைத்த செய்தி புற நானூற்றில் உள்ளது (எனது பழைய கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

 

ராஜ சூய யாகத்தைப் பார்த்த அவ்வையாருக்கு பேரானந்தம்; “அடப் பாவி மகன்களே! எப்போது பர்த்தாலும் சண்டை போட்டு ஒருவனை ஒருவன் வீரம்பேசி அழிந்தீர்களே; இன்று சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரே மேடையில் பார்க்கையில் எனக்கு வரும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை; இன்று போல நீங்கள் என்றும் ஒற்றுமையுடன் இருப்பீர்களாக” என்று அடி மன த்தின் ஆழத்திலிருந்து வாழ்த்திய செய்தியை புறநானூற்றில் காண்க.

 

வேதங்கள் புரிய வேண்டுமானால் புற நானூற்றையும், பதிற்றுபத்தையும், பரிபாடலையும் பயில வேண்டும்

சங்கத் தமிழ் நூல்களும், திருக்குறளும் உள்ளவரை இந்து மதம் வாழும்.

TAGS:– சதபத பிராமணம், பெண்கள் நட்சத்திரம், வனபர்வம், விண்வெளிப் பயணம்

–சுபம்–