அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7 (Post No.2886)

buddha like vishnu

Article written by S.NAGARAJAN

 

Date: 11 June 2016

 

Post No. 2886

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 7

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 63. யாருமே அணுக  முடியாத மலை உச்சியில் குடிசை ஒன்றை போட்டுக் கொண்டு அவரது தவ வாழ்க்கை தொடர்ந்தது.

 

ஆனால் அவரைக் காணாத சக துறவிகள் அவரது காலடித் த்டங்களை அடையாளம் கண்டு அவரது குடிசையை அடைந்து அவரை ஆச்சரியப்படுத்தினர்.

 

 

குடிசையின் சுற்றுப் புறங்களிலும், வாயிலிலும் புலி நடமாடிய காலடித் த்டங்கள் இருந்தன. ஆனால் புலிகளோ அவரை தொந்தரவு செய்யவே இல்லை.

குடிசையில் நுழைந்த அவர்கள் அவரை சமாதி நிலையிலிருந்து எழுப்பினர்.

 

 

“சாப்பிட்டீர்களா?”, என்று ஸூ யுன்னை அவர்கள் கேட்க, “சாதம் இந்நேரம் வெந்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

பானையைத் திறந்து பார்த்தால் அதில் புழுக்கள் தாம் நெளிந்தன.

சுமார் பதினைந்து நாட்களாவது அவர் சமாதி நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று சக துற்விகள் அநுமானித்தனர்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பல்வேறு இடங்களுக்கும், மலைகளுக்கும் சென்று பின்னர் எமெல் மற்றும் ஜியாஜிங் மாவட்ட்ங்களை அவர் அடைந்தார்.

 

 

இன்-சுன் என்று ஒரு கிராமம். அதையொட்டி ஊஷா நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. ந்தியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. காலையிலிருந்து மதியம் வரை அவர் காத்திருந்தார். படகும் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கினர்.

கூட இருந்த மாஸ்டர் ஜியா – ஹென்னை முதலில் படகில் ஏறுமாறு கூறிய அவர் தன் பயண மூட்டையையும் அவரிடம் தந்தார்

 

 

படகில் ஏறப் போகும் தருணம். நதியின் வேகம் அதிகரிக்க படகு ஆடியது. கரையுடன் இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுந்தது. ஆனால் நல்ல வேளையாக ப்டகின் விளிம்பைப் பிடித்துக் கொண்டார் ஸூ யுன்.

 

படகு கட்டவிழ்ந்து வேகமாக நதிப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

 

thanga buddha, SL

படகில் ஏறவோ வழியில்லை. படகோட்டி படகைச் செலுத்தலானான.

மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் படகு கரையில் ஒதுங்கியது.  ஸு யுன்னை அனைவரும் நதியிலிருந்து தூக்கினர்.

கால் பாதங்களிலெல்லாம் பாறைகளின் மீது மோதிய்தால் ஏற்பட்ட வெட்டுக் காயங்கள். ஆடை அல்ங்கோலமாகக் கிழிந்து கிடந்தது.

 

 

மழை வேறு சோவென்று பெய்து கொண்டிருந்தது. தாங்க முடியாத குளிர் வேறு.

 

ஷாஜிங் சுங்கச் சாவடிக்கு அருகில் இருந்த ஒரு சத்திரத்திற்குச் சென்று அவர்கள் தங்குவதற்கு இடம் கேட்டனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அருகிலிருந்த ஒரு கோவிலில் தங்க அனுமதி கேட்டனர். ஆனால் கோவிலில் இருந்த துறவியோ அவர்களை உள்ளே தங்கக் கூடாது என்று சொல்லி வெளியில் இருந்த ஒரு மேடையில் இருக்குமாறு கூறி விட்டார்.

 

 

சிறிது பணத்தைக் கொடுத்து. “வைக்கோலையாவது தாருங்கள். அதை எரித்து குளிரைப் போக்கிக் கொள்கிறோம்”..என்று வேண்டினார் ஸு யுன். இரண்டு  கட்டு வைக்கோல் வந்து சேர்ந்தது. சொத சொதவென்று ஈரத்தில் நனைந்தவை.

போதாக்குறைக்கு அதை மூட்டிய புகை வேறு சேர்ந்தது.

அனைத்துத் துன்பங்களையும் ஸு யுன்னும் அவரது நண்பரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டனர்.

 

 

சிறிது பழங்களை உண்டு தங்கள் யாத்திரையைத் தொடங்கினர். பல்வேறு இடங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

கடைசியில் அவர்கள் அவலோகிதேஸ்வரரின் புனித ஆலயத்தை வந்து அடைந்தனர்.

 

பிறகு காக்-ஃபுட் மலையில் உள்ள மரத்தடியை அடைந்தனர்.

முன்பு ஒரு  முறை கேட்ட அதே மணி ஒலி இப்போது இரண்டாவது முறையாக கல் கதவின் பின்னாலிலிருந்து அதிசயமாக ஒலித்தது!

 

மறு நாள் ஜிங்-டிங் என்ற மலையின் உச்சியில் அவர்கள் ஏறினர். அங்கு இருந்த புனித ஆலயம் சிதிலமாகி சிதைந்து கிடந்ததைப் பார்த்து அவர் வருந்தினார்.

 

 

அதைப் புனருத்தாரணம் செய்ய அவர் விழைந்தார். ஆனால் ஆலயங்கள் தனியார் பராமரிப்பில் இருந்ததால் அவரை புனருத்தாரணம் செய்ய ஆலயத்தின் உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை.

 

பிறகு கீழே இறங்கி நடைப் பயணம் மேற்கொண்டு குந்மிங் என்ற இடத்திற்கு ஸு யுன் வந்து சேர அங்கு இருந்த ‘தர்ம- மேற்காப்பாளர்’ அவரைத் தம்முடன் இருக்குமாறு வேண்டினார்.

புதிய ஆண்டு வரப் போகிறது. ஸு யுன் தனிமையில் தன் தவத்தை மீளவும் தொடர்ந்தார்.

 

-தொடரும்

பூமியைத் தாங்கி நிற்பது எது? (Post No.2884)

atlas

Article written by London swaminathan

 

Date: 10 June 2016

 

Post No. 2884

 

Time uploaded in London :– 14-12

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

750px-Solar_sys

அறிவியல் முறையில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ஈர்ப்புவிசை என்று சொல்லவேண்டும். சூரியனின் ஈர்ப்புவிசையும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்களின் ஈர்ப்புவிசையும் ஒன்றயொன்று இழுக்க அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.அதில் பூமியும் ஒன்று.

 

பூமியைத் தாங்கி நிறுத்துவது எது? என்று கேட்டால் இந்துக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்லுவார்கள்.

கிரேக்கர்கள் அட்லஸ் என்ற அரக்கனே வானத்தையும் பூமியையும் தூக்கி நிறுத்திகிறான் என்று சொல்லுவர். இது பழைய புராணக்கதை. அட்லாண்டிஸ் என்ற தீவின் மன்னனான ப்ரொமேதயஸின் சகோதரனான அட்லஸ், ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்காக வானத்தையும் பூமியையும் சுமக்கும் தண்டனை பெற்றான்.

 

சீனர்கள் ஒரு கடல் ஆமையின் முதுகில் இந்த பூமி நிற்பதாகவும், இன்னும் சில கதைகளில் பூமியின் நான்கு திசைகளில் உள்ள மரங்களின் மீது இந்த ‘சதுர’ பூமி நிற்பதாகவும் எழுதியுள்ளனர்.

myth-1-21

இந்து மத புராணங்களில் ஆதி சேஷன் என்ற பாம்புதான் உலகைத் தாங்கி நிற்கிறது என்பர். அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகைத் தாங்கி நிற்பதாகவும் பகர்வர்.

 

ஆனால் ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-

 

கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:

அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ

பொருள்:–

பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.

 

பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

lead_deskew=0 checksum=2e0f339cc42d8ab0fcbb3871de675d79

புறநானூற்றுப் பாடல்182

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:–

இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.

 

உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்

தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;

துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,

புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்னமாட்சி அனையராகித்

தமக்கென முயலா நோன் தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே

–புறம் 182

–சுபம்–

உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் ! – 2 (Post No.2880)

Yoga_vasistha_of_valmiki_medium

Article written by S.NAGARAJAN

 

Date: 9 June 2016

 

Post No. 2880

 

Time uploaded in London :–  5-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

யோக வாசிஷ்டத்தில் சிக்கலான கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் உள்ளன என்பதை எப்படி நம்புவது என்று ஒருவர் கேள்வி கேட்டால் அது நியாயமான கேள்வி தான்.

ஏனெனில் அதீதமாகப் புகழ்வது என்ற வரிசையில் இந்த மொழி உரைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது சொல்பவரின் கடமை அல்லவா?

 

 

இதற்கு இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் – ஒரு பானை சோறுக்கு ஒரு பதம் என்பது போல.

 

முதலாவது யோகவாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள அபூர்வமான விஷயங்கள்.

 

இவற்றை அறிவியல் கண்டுபிடித்து நிரூபிக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்!

 

இரண்டாவது யோக வாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை உலகின்  மாபெரும் மேதைகள் என்று கருதப்படுபவர்கள் அப்படியே எடுத்துரைப்பது தான்.

இப்படிப்பட்ட மேதைகள் தனித்தனியே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு நாட்டில் வலியுறுத்திக் கூறியிருப்பதை ஒரே நூலில் அழகாக, கோர்வையாக படிக்க முடிகிறது என்றால் அந்த நூலின் மகிமையை வேறு எப்படிச் சொல்ல முடியும்.

 

 Six Major Sections of Yoga Vasis

அது சந்தேகமில்லாமல் அதிசய நூல் தானே!

எந்தெந்த மேதைகள் எந்தெந்த கருத்துக்களைக் கூறியுள்ளார் என்று ஆராயப் புகுந்தால் அது ஒரு பெரிய புத்தகமாக மிளிரும்.

 

 

அப்படிப்பட்ட அரிய ஆராய்ச்சியை ஒருவர் செய்து புத்தகமாகவும் வெளியிட்டு விட்டார் என்பது அரிய ஒரு சுவையான செய்தி தானே!

 

 

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு பி.எல். ஆத்ரேயா யோகவாசிஷ்டா அண்ட் மாடர்ன் தாட் (Yoga Vasistha and Modern Thougtu by B.L.Atreya) என்ற அரிய ஒரு நூலை எழுதியுள்ளார். 1934ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த நூலைப் பாராட்டாதோர் கிடையாது; மேற்கோள் காட்டாத அறிஞர்கள் இல்லை.

 

 

இந்த நூலில் சுமார் 158 பேரறிஞர்களின் கருத்துக்களை யோக வாசிஷ்டக் கருத்துக்களுடன் பி. எல் ஆத்ரேயா ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

 

 

ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸண்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், பெர்சி கால்ஸன், வீட்லி கேரிங்டன்,எட்வர்ட் கார்பெண்டர், ஜாகுவஸ் கார்னோவா, ஈ.எஸ்.காங்க்ளின்,எஃப் .சி. கான்ஸ்டபிள்,   ஜெரால்டின் காஸ்டர், டேம்பியர் வேதம், சார்லஸ் ஜில்பெர்ட்  டேவின், ஷா டெஸ்மாண்ட், சர் ஆர்தர் எடிங்டன், எமர்ஸன்,எட்வ்ர்ட் டக்ளஸ் ஃபாசெட், ஜே.ஜி.     ஃபிட்ஸே, ஃபின்லே, சிக்மண்ட் ஃப்ராய்ட், ஹிக்கின்ஸன் ஆலிவர் லாட்ஜ். சி.ஈ.எம் ஜோட், ஆரிஸான் ஸ்வெட் மார்டன்,டபிள்யூ, மக்டொனால்ட் என்று இப்படி அறிஞர்களின் பட்டியல் நீளுகிறது.

 

 

43 அரிய தலைப்புகளில் ஆத்ரேயா, யோக வாசிஷ்ட கருத்துக்களையும் இந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஒப்பிடுகிறார். யோக வாசிஷ்டம் கூறும் சில கருத்துக்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இவற்றை விரிவாக இந்த நூலில் பார்க்கலாம்.

 

 

இந்த நூலை ஒரு தடவை படித்தாலும் போதும், யோக வாசிஷ்டம்  மிக அதிசயமான நூல் தான் என்று யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வர்.

 

 

சரி, யோக வாசிஷ்டம் கிடைக்குமா என்ற கேள்வி கேட்போருக்கு பதில் இது தான்:

 

யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம்; பெறலாம்.

அடுத்த கட்டுரையில் எங்கு பெறலாம எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம்!

 

                                                -தொடரும்

 

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்! (Post No 2852)

coins gold

Article written by S.NAGARAJAN

 

Date: 30 May 2016

 

Post No. 2852

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

வாழ்க்கை முன்னேற்றம்

 

பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!

 

.நாகராஜன்

 babay, mother

வாழ்க்கையில் எதிர்ப்படும் பல்வேறு இன்னல்களை எப்படிக் கடப்பது?

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே அருமருந்து!

 

என்றாலும் கூட மகான்களிடம் அணுகி ஆசி பெறுவோர் பல் வேறு இடர்களையும் கடப்பது உறுதி.

 

ஜோதிட ரீதியாக ஜோதிட வல்லுநர்களை அணுகினால் அவர்கள் பரிஹார யந்திரங்களை வைத்துக் கொள்ளுமாறு கூறுவர்.

காலம் காலமாக பலன் அளித்து வரும் சில பரிஹார யந்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

 

உரிய பிரச்சினைக்குத் தகுந்தவாறு இவற்றைத் தாமிரத் தகட்டில் எழுதி (பொறித்து) வைத்துக் கொண்டால் பிரச்சினைகள் தீரும்.

 

சத்ரு நாசனம்

 

15 22 2 7
6 3 19 18
21 16 8 1
4 5 17 20

 

 

பரீட்சையில் தேறுதல்

 

23 30 2 7
6 3 27 26
29 24 8 1
4 5 25 29

 

 

ரோக நாசனம் (வியாதிகள் தீர)

 

 

13 20 2 7
6 3 17 16
19 14 8 1
4 5 15 18

 

 

தன லாபம்

 

 

44 51 2 7
6 3 48 47
50 45 8 1
4 5 46 49

 

புத்ர ஜனனம்

 

 

42 49 2 7
6 3 46 44
48 43 8 1
4 5 44 7

 

 

திருஷ்டி, செய்வினை தோஷம் விலக

 

 

3 10 2 7
4 3 7 6
9 4 8 1
4 5 5 8

 

பிரயத்தின காரிய ஜயம்

 

 

24 31 2 7
6 3 28 27
30 25 8 1
4 5 26 29

 

 

–Subham-

**********

 

ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814)

ராம சீதா

Written by london swaminathan

 

Date: 15 May 2016

 

Post No. 2814

Time uploaded in London :–  17-24

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ராமரும் லெட்சுமணரும் வனவாசத்துக்குப் புறப்பட்டனர். சீதையுடன் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் பஞ்சவடி என்ற இடத்தை அடைந்தனர். ஐந்து ஆலமரங்கள் அழகாக ஒரே இடத்தில் இருந்ததால் அந்த இடத்துக்கு சம்ஸ்கிருதத்தில் பஞ்சவடி ( தமிழில் 5 ஆலமரம்) என்று பெயர்.

 

அங்கே பர்ணசாலை அமைக்க தீர்மானித்தனர் (இலைகளால் வேயப்படும் குடிசைக்கு பர்ணசாலை என்று சம்ஸ்கிருதத்தில் பெயர்). இங்கே பர்ணசாலை அமைக்க, இந்த இடத்துக்குச் சொந்தக்காரரைச் சந்தித்து அனுமதி பெற்று வா என்று லெட்சுமணனை ராமபிரான் அனுப்பினார்.

 

லெட்சுமணன், அந்த இடத்தின் சொந்தக்காரரைத் தேடிப்போகையில் ஒரு மரத்துக்கு அடியில் ஒரு சிறு உருவம் தோன்றியது. அவர்தான் அந்த இடத்தின் சொந்தக்காரர் என்று லெட்சுமணன் நினைத்தான். அவரிடம் அனுமதி பெறுவதற்காக அவன் அங்கே தியானத்தில் அமர்ந்தான். அவனது தியானத்தில் ஒரு உருவம் பற்றிய வருணனை மனக் கண்கள் முன்னால் வந்தது. அதாவது குணம் குறியுடையதாக ஒரு உருவம் கையால் நாக்கை இழுத்துப் பிடிப்பது போலும், மற்றொரு கையால் கௌபீனத்தை (கோமணத்தை) இழுத்துப் பிடிப்பது போலும் கண்டான். தியானம் முடிந்தவுடன் ராமனிடம் வந்து தான் கண்ட காட்சியைச்சொன்னான்.

RAMA ARCH

இராமன் உடனே நமக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. நாம் குடிசை அமைக்கும் பணியைத் துவக்கலாம் என்றான்.

எப்படி அண்ணா, உத்தரவுகிடைத்தது என்று நினைக்கிறாய்? என்று இளவல் (தம்பி) வினவினான்.

 

நாக்கை இழுத்துப் பிடிக்கும் காட்சி– எவனுக்கு சுவையையும், சொல்லையும் அடக்கி ஆளும் திறன் உண்டோ என்பதையும் கோமணத்தை இழுத்துப்பிடிக்கும் காட்சி— எவனுக்கு காமத்தை அடக்கி ஆளும் திறன் உண்டோ — அவனுக்கு எங்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதையே காட்டுகிறது என்று ராமன் விளக்கினான். நாம் அந்நெறியில் பிறழாது வாழ்வதால் நமக்கு உத்தரவாகிவிட்டது என்றான்.

 

இருவரும் குடில் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்தனர்.

‘யா காவாராயினும் நா காக்க’ – என்ற வள்ளுவன் சொல்லும், ‘இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்’ – என்ற பெரியோர் வாக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.

 

ஆனந்த ராமாயணம்

‘300 ராமாயணம்’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் நூல் எழுதினார். ஆனால் நான் பிரிட்டிஷ் லைப்ரரிக்கு போகும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தமிழ் ராமாயணம் கிடைத்து வருவதைப் பார்க்கையில் 3000 ராமாயணங்கள் இருக்கலாம் என்று எழுதினேன். சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்ற போது ராமஸ்வாமி அய்யர் என்பவர் பாடல் வடிவில் சில ராமாயண காண்டங்களை இயற்றி அதற்கு ‘ராமஸ்வாமீயம்’ என்று பெயர் கொடுத்திருப்பதைக் கண்டேன். அந்த நூலின் சில பக்கங்களையும் அட்டையையும் ‘பேஸ்புக்கில்’ வெளியிட்டேன்.

 

ஆனந்த ராமாயணம் என்பது வால்மீகி, கம்பன், துளசி ராமாயணம் அளவுக்குப் பிரசித்தமாகவில்லை. இதையும் வால்மீகி இயற்றினார் என்றே சொல்லுவர். இதில் ஒன்பது காண்டங்களும் 12,252 ஸ்லோகங்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. வால்மீகி ராமாயணத்தில் காணப்படாத பல விஷயங்களும் கதைகளும் இதில் இருக்கின்றன.

-சுபம்-

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்!- 4 (Post No.2794)

buddha gold

Written  BY S NAGARAJAN

Date: 9 May 2016

Post No. 2794

Time uploaded in London :–  5-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய நான்காவது கட்டுரை இது).

 

 

Third Part was posted on 28th April 2016.

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -4

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னின் பயணம் தொடர்ந்தது. டா-டாங் என்ற இடத்தில் உள்ள டி-கேங் என்ற துறைமுகத்தை அவர் அடைந்து ஆற்றின் கரையோரமாக நடக்கலானார். ஆற்றைக் கடக்க அவர் விரும்பினார். ஆனால் ஆற்றின் நீர் மட்டமோ உயர்ந்து கொண்டே இருந்தது. படகோட்டி ஒருவனைச் சந்தித்தார். அவன் ஆறு நாணயங்கள் கேட்டான். ஆனால் ஸு யுன்னிடமோ ஒரு நாணயம் கூட இல்லை.

அவரை ஏற்றாமல் படகு நகர்ந்தது. கரையோரமாக நடக்க ஆரம்பித்த அவர் தண்ணீரில் அகஸ்மாத்தாக காலை வைக்கவே நீர் பிரவாகம் அவரை உள்ளே இழுத்தது.

 

 

நீரில் சிக்குண்ட அவர் ஒரு பகல் ஒரு இரவு மிதந்து கொண்டே பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.காய் –ஷி துறையை நோக்கி அவர் இழுத்துச் செல்லப்பட்டார். தற்செயலாக அவரது காவி உடையைக் கண்ட ஒரு மீனவன் அவரைத் தன் வலையை வீசி இழுத்தான். அவரது காவி உடையைப் பார்த்ததால் பாவோ ஜி ஆலயத்தில் இருந்த ஒரு துறவியை அவன் அழைத்தான். அந்த துறவி ஏற்கனவே      ஸு யுன்னைப் பார்த்திருந்ததால் நன்கு அடையாளம் தெரிந்து கொண்டார்.

 

 

ஒரு சமயம் இருவரும் ஜின் – ஷான் மடாலயத்தில் சேர்ந்து தங்கி இருந்தனர். ஸு யுன்னின் நிலையைக் கண்ட அவர், “ஆஹா! இவர் மாஸ்டர் டீ – குங் அல்லவா” என்று வியந்து கூவினார். ஸு யுன்னின் மடாலயப் பெயர் டீ – குங்! அருகிலிருந்த ஆலயத்திற்கு அவரைத் தூக்கிச் சென்றனர். தொடர்ந்து நீரில் இருந்ததால் அவரது மூக்கிலிருந்து ரத்தம்; வாயிலிருந்து ரத்தம் அந்தரங்க உறுப்பு, ஆசனவாய் என்று அனைத்து துவாரங்கள் வழியாகவும் ரத்தம்!

 

 

 

பாவோ ஜி ஆலயத்தில் சில நாட்கள் ஸு யுன்  தங்கினார். பின்னர் காவோ-மின்  மடாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைக் கண்ட மடாலய நிர்வாகி அவர் வெளுத்து இளைத்து இருப்பதைக் கண்டு உடல் நலம் சரியில்லையா என்று வினவ ஸு யுன்   ஆம் என்றார். தான் நீரில் விழுந்ததை அவர் சொல்லவில்லை.

 

 

அங்கு நடக்கவிருக்கும் தியான வகுப்பை கவனித்துக் கொள்ளும் வேலையைத்  தர முன் வந்தார் அந்த நிர்வாகி. ஆனால் ஸு யுன் அதை தாழ்மையாக மறுத்தார். ஒரு மடாலயத்தில் ஒரு பெரும் பணியைத் தரும் போது மறுப்பதென்பது பெரிய குற்றமாகப் பொதுவாகக் கருதப்படும்.

 

ஆகவே அவரைத் தடி கொண்டு அனைவரும் தாக்கினர். ஸு யுன்னோ அத்தனை அடிகளையும் பொறுமையுடன் ஏற்றார்! அவர் உடல்நிலை இன்னும் மோசமானது. சிறுநீருடன் விந்து வெளியேறும் மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் ஸு யுன்னோ மிக உற்சாகமாக தியான மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்தார்.

 

 

உடல் உணர்வே அவருக்குப் போய் விட்டது. இருபது நாட்கள் கழிந்தன. அவர் உடல் நிலை சீரானது.

அப்போது  காய் ஷி துறையிலிருந்து வந்த துறவி ஒருவர் ஸு யுன்னைக் கண்டு அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். அவர் நீரில் விழுந்ததைப் பற்றியும் கூறினார்.

 

buddha in SL

இப்போது ஸு யுன்னின் உடலோ தக தகவென ஜொலித்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும் தங்களை மன்னிக்குமாறு கூறி அவரை எந்த வேலையும் செய்ய வேண்டாமெனக் கூறினர்.

ஒரு நாள் தியானம் முடிந்த போது மிகவும் பிரகாச்மான ஒளி ஒன்றை அவர் கண்டார். பகல் நேரத்து சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம்!

 

 

 

ஸு யுன்  கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம்! சுவர்களை ஊடுருவி அவரது பார்வை விரிந்தது. சுவர்களுக்கு அப்பால் உள்ள அனைத்தும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

ஊதுபத்தியை ஏத்தும் துறவி, கழிவறையில் அமர்ந்திருந்த துறவி, தூரத்தில் ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த படகுகள் – அனைத்துக் காட்சிகளையும் அருகிலிருந்து பார்ப்பது போல அவரால் பார்க்க முடிந்தது.

 

 

அவரது நடையோ பறப்பது போல அமைந்தது.

இது ஒரு தற்காலிக நிலை என்பதை ஸு யுன்  உணர்ந்தார்,

ஒரு நாள் அவரது உதவியாளர் அவருக்கு தேநீர் கோப்பையைத் தந்தார். அகஸ்மாத்தாக தேநீர் அவரது தலையில் கொட்ட கோப்பையை ஸு யுன்  கீழே தவற விட்டார்.

தடால் என ஒரு சத்தம்!

 

அவருக்கு திடீரென மனத்தின் மூலம் – வேர் பற்றிய ஞானம் உதித்தது!

ஆஹா! எந்த பெரும் நிலையை அடைய வேண்டித் தவம் இருந்தாரோ அந்த நிலை அவரை வந்து அடைந்து விட்டது.

ஒரு கணத்தில் அவருக்கு வீட்டிலிருந்து கிளம்பி அன்று வரை நடந்த காட்சிகள் மனதில் ஓடின!

அவருக்கு ஒரு ‘கதா’ உதித்தது. அவர் பாடினார் இப்படி:

 

 

“ஒரு கோப்பை தரையில் விழுந்தது!

அது விழுந்த சத்தமும் தெளிவாகக் கேட்டது!

வெளி (Space) பொடிப்பொடியானது!

பைத்தியக்கார மனம் ஒரு நிலைக்கு வந்து நின்றது!

கை பிடித்திருந்ததை விட்டு விட கோப்பை விழுந்து நொறுங்கியது!

குடும்பம் உடையும் போதோ ஒருவர் இறக்கும் போதோ பேசுவது கடினம்!

வசந்த காலம் மலர்ந்த மலர்களின் வாசத்துடன் வருகிறது!

மலைகள்,ஆறுகள், பெரிய பூமி அனைத்துமே ததாகதர் தவிர வேறொன்றில்லை!!”

 

பூரண ஞானம் பொலிந்த துறவியாகி விட்டார் ஸு யுன்!

**********    தொடரும்

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3 (Post No.2785)

meenakshi base view

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 6 May 2016

 

Post No. 2785

 

 

Time uploaded in London :–  5-51 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3

 

.நாகராஜன்

 

மூலம்மதுரை

மதுரை: தத்தன் என்னும் பாண்டியன் அரசாளுகையில் சமணர் அனுப்பிய நாகம் உமிழ்ந்த விஷத்தின் கொடுமை சிவபெருமானுடைய சடையில் இருந்த சந்திரனிடத்துள்ள அமுதத்துளியால் சமனதமுற்று மதுரமாயிற்று. அதனால் இந்தத் தலம் மதுரை என்ற பெயரைப் பெற்றது. திருவாலவாய், திரு நள்ளாறு, திரு முடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு மாடங்கள் கூடும் இடமாகையால் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது.சிவபெருமானின் அழகிய வடிவைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் சிவனுக்குச் சொக்கன் என்ற திருநாமம் சாத்தித் தொழுதான்.பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய திருவிளையாடல் உள்ளிட்ட 64 திருவிளையாடல்களின் அற்புதத் தலம்.

 

 

பூராடம்திருச்செந்தூர்

 

திருச்செந்தூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அமைந்த கடற்கரைத் தலம். வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம். சூரபத்மனை போரில் வென்ற தலமும் இதுவே. ஐப்பசி மாதம் நடக்கும் சூரசம்ஹாரத் திருவிழா பிரபலமான ஒன்று. நாழிக் கிணறு தீர்த்தம் கடலின் அருகே இருந்த போதும் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது விந்தைக்குரிய ஒன்று.

 murugan senthiandavan

 Tiruchendur Skanda

உத்திராடம்சஙகரநயினார் கோவில்

 

சங்கரநயினார் கோவில் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலம். இறைவன்: சங்கரலிங்க ஸ்வாமி இறைவி: கோமதி அம்மன் என்னும் ஆவுடையம்மன். உக்கிரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோவில். ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தவசு திருவிழா பிரபலமானது. அம்மன் சிவனை வேண்டி ஊசிமுனையின் மேலிருந்து தவம் புரியும் திருத்தலம். அம்மனின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்த திருத்தலம். உடம்பில் கட்டி உள்ளிட்ட நோய்களிலிருந்து காக்கும் அரும் தலம்.

திருவோணம் – அர்த்தோதயம், மகோதயம்

 

 

அவிட்டம், சதயம்காளஹஸ்தி, மல்லிகார்ஜுனம், கோகர்ணம் (சிவராத்திரி)

 

காளஹஸ்தி: இறைவன்: காளத்திநாதர் இறைவி: ஞானப் பூங்கோதை.கண்ணப்பர் அருள் பெற்ற தலம். சிலந்தி, பாம்பு, யானை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது சிறந்த ராகு- கேது க்ஷேத்திரமாகும்.

கோகர்ணம்: வடநாட்டில் அமைந்துள்ள தலம். இறைவன்: மஹாபல நாதர் இறைவி: கோகர்ண நாயகி தீர்த்தம்  :கோடி தீர்த்தம்

 

 

பூரட்டாதி, உத்திரட்டாதி – திருவாரூர் (தேவதீர்த்தம்)

 

ரேவதி – திருக்கடையூர் (அமிருத தீர்த்தம், திருவாவடுதுறை  (மாஸம் பூர்வ பட்சத்தில் ஆரம்பமாகி அமரபட்சத்தில் தீர்த்தம் – அமரபட்சம்.

 

-தொடரும்

 

 

 

 

கந்தபுராணத்திருந்து ‘ரஸவாதி ஏமாற்றிய கதை’ (Post No 2777)

கந்தபுராணம் 1

Compiled by london swaminathan

 

Date: 3 May 2016

 

Post No. 2777

 

Time uploaded in London :– 10-41 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கந்தபுராணத்திலுள்ள ரசவாதி கதையைப் படித்தபோது சிறு வயதில் அம்புலிமாமா பத்திரிக்கையில் படித்த கதைகள் நிணைவுக்கு வந்தன. கந்த புராணத்திலும் இப்படி ஒரு கதை இருப்பது பிரிட்டிஷ் நூலகப் புத்தகத்திலிருந்துதான் தெரியவந்தது.

 

irandu1

 

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.

 

irandu22

 

irandu23

 

irandu24

 

irandu25

 

irandu26

 

irandu27

வடகலை, தென்கலை நாமம் பற்றிய சர்ச்சை! (Post No. 2763)

truman1

Compiled by london swaminathan

Date: 28 ஏப்ரல், 2016

 

Post No. 2763

 

Time uploaded in London :–  19-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

தங்க யானை நாமம், குடை

1945 ஆம் ஆண்டில் தினமணிப் பத்திரிக்கை வெளியிட்ட நூலிலிருந்து இக்கட்டுரையை எடுத்துள்ளேன். இதற்கு முன் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்த ஒரு பெரிய தொகுப்பில், யானைக்கு நாமம் போடுவது பற்றி எழுந்த கோர்ட் வழக்கு சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை பேஸ்புக்கில் வெளியிட்டேன்( சுமார் 20 பக்கங்களை மட்டும்). இது அக்காலத்தில் நடந்த பெரிய வழக்கு. பத்திரிக்கைகள் வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன. இந்துமதத்தை வசைபாடிய திராவிடக் கட்சிகளுக்கு அப்போது இந்த வழக்கு, ‘வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல்’ போல வந்து சேர்ந்தது.

இதோ கோயில் பூனைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்த நாமச் சண்டை:–

 

vatakalai, tenkalai

 

tiruman2

 

tiruman3

 

tiruman4

 

tiruman5

 

tiruman6

 

tiruman7

 

tiruman8

 

tiruman9

–சுபம்–

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! -3 (Post No.2762)

buddha polished

Written  BY S NAGARAJAN

Date: 28 April 2016

 

Post No. 2762

 

 

Time uploaded in London :–  5-44 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய  கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் பற்றிய மூன்றாவது கட்டுரை இது.)

 

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -3

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னின் தந்தைக்கு மகன் சங்கத்தில் சேர்ந்து புத்த தர்ம பிரசாரத்தில் ஈடுபட விரும்புவது நன்கு புரிந்து விட்டது.

வேங் என்ற ஆசிரியரை நியமித்து தாவோ புத்தகங்களைக் கற்பிக்கச் செய்தார்.

 

 

பதிநான்காம் வயதிலிருந்து மூன்று ஆண்டுகள் இந்தப் படிப்பு தொடர்ந்தது. ஆனால் ஸு யுன்னுக்கோ இதில் மனம் செல்லவில்லை.

 

 

17ஆம் வயதில் பாட்டி விரும்பியபடி இரண்டு பெண்களை அவருக்கு மணமுடித்தனர். கல்யாணம் ஆனதால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஸு யுன். ஆனால் அந்த இரு மனைவிகளிடமும் தாம்பத்திய உறவை அவர் மேற்கொள்ளவே இல்லை.

 

பத்தொன்பதாம் வயதில் உலகைத் துறக்க நிச்சயித்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதாவது அவ்ர் முழு துறவியாகி விட்டார்.

 

தந்தை அவரைத் தேட ஆட்களை அனுப்பினார். ஆனால் ஸு யுன்னோ வேலைக்காரர்களுக்குத் தெரியாதபடி ஒளிந்து கொண்டார்.

மவுண்ட் கு (Mount Gu) என்ற இடத்தில் ஆசார்யர் மியா லியான்    (Master Miao-lian) என்பவரிடம்  சீடராக இருந்து பயிற்சியைப் பெற்றார்.

 

 

காலப் போக்கில் அவரது இருபத்தைந்தாம் வயதில் அவர் தந்தையும் இறந்தார். அவருக்கு வீட்டுத் தொடர்பே அற்றுப்

போனது.

 

 

கடினமான தவ வாழ்க்கையை காட்டில் அவர் தொடங்கினார். அங்குள்ள ஓநாய்களோ அல்லது புலிகளோ ஒரு நாளும் அவரைத் துன்புறுத்தவில்லை. பாம்புகளும் அவரைத் தொந்தரவு செய்யவில்லை.

 

அவரது 31ஆம் வயதில் அவர் வென்ஸ்ஹோ (Wenzhou) என்ற மலைக்கு வந்தார். அங்கு ஹுவா டிங் என்ற சிகரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த குடிசை போன்ற ஆலயத்தின் கதவைத் தட்டினார். அதிலிருந்த ஆசார்யார் அவரிடம் உடலுடன் மனதைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லியதோடு பத்து ஆண்டுகளை வீணாகக் கழித்து விட்டாயே என்று கடிந்து கொண்டார்.

 

HUGE BUDDHA

பின்னர் மனமிரங்கி அவ்ரைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். இன்னும் கடினாமான பயிற்சிகள் தொடங்கின. ஆனால் ஆசார்யரே அவரின் தவத்தைக் கண்டு அவரை மெச்சினார்.

பிறகு மிக நீண்ட நெடிய பயணத்தை அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று மடாலயங்களைப் பார்த்தார். திபெத்தில் தலாய்லாமா அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்த பின்னர் இந்தியா வந்தார்.

காசியில் தரிசிக்க வேண்டிய இடங்களைத் தரிசித்த பின்னர் கல்கத்தா சென்றார். அங்கிருந்து சிலோன், பர்மா என்று பல நாடுகளில் உள்ள புத்த ஆலயங்களைத் தரிசித்து விட்டு பின்னர் சீனா திரும்பினார்.

 

 

மஹாகாஸ்யபரின் சமாதி உள்ள காக் ஃபுட் மலையில் ஏறினார்.

மஹாகாஸ்யபரின் குகைக் கோவிலின் வாயிலின் முன் வந்து நின்றார். அங்கு புத்தரின் சீடரான ஆனந்தர் வந்த போது அந்த குகைக் கதவுகள் தானாகத் திறந்து கொண்டதாம்.

 

அந்த வாயிலுக்குப் பெயர் ஹுவா  ஷூமென். அதன் பொருள் பூ  மலரும் வாயில்! அங்கு சென்ற ஸு யுன் ஊதுபத்திகளை ஏற்றியவுடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

 

அங்கிருந்த பெரிய மணி தானாக  மூன்று முறை ஒலித்தது. அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் அதிசயித்தனர்,

மிகப்பெரும் மஹா புருஷர் ஒருவர் வரும் போது தான் அது தானாக மூன்று முறை ஒலிக்குமாம்.

 

 

அனைவரும் ஸு யுன்னை பக்தியுடன் பார்த்து வணங்கினர்.

360 தவ சாலைகளும் 72 பெரும் கோவில்களும் இருந்த அந்த மலையில் இப்போது வெறும் பத்துக் கோவில்கள் கூட இல்லை!

அடுத்து தன் ப்யணத்தை தொடர்ந்த ஸு யுன் ஜி-கி என்ற  மலைத்தொடருக்கு விஜயம் செய்தார்.

அங்கு அவர் வந்தவுடன் அனைத்துப் பூக்களும் மலர்ந்தன.

அங்குள்ள அனைவரும் இந்த அதிசயத்தைப் பார்த்து மலைத்தனர்.

 

தலைமைத் துறவி வந்து ஸு யுன்னிடம்,” இங்குள்ள சுவடிகளின் படி இப்படி மலர்கள் மலர்வது இதற்கு முன்னர் சில சமயமே நடந்திருக்கிறது.இங்குள்ள மலர்ச் செடிகள் தெய்வீகத் தன்மை கொண்டவை. நல்ல ஒரு தவ புருஷர் இங்கு வந்தால் மட்டுமே அவை  மலரும்” என்று ஆனந்தத்துடன் சொல்லி அவரை வரவேற்றார். அவரது ஐம்பதாவது வயதில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. மேலும் அவர் பயணத்தைத் தொடங்கினார். பத்தாயிரம் லி (2000 லி என்பது 620 மைல்களுக்குச் சமம்) என்ற நெடுந்தூரத்தைக் கால்நடையாக நடந்து கடந்த அவர் தனது மனம் தூய்மையாக விளங்குவதை உணர்ந்தார்.

பத்தாயிரம் சாஸ்திர நூல்களைப் படித்த பின்னர் பத்தாயிரம் மைல் பயணத்தை மேற்  கொள் என்று பழைய கூற்று ஒன்று உண்டு.

 

 

ஸு யுன் தன் பயணத்தை விடாமல் தொடர்ந்தார்.

இப்போது அவருக்கு வயது 56.

 

– தொடரும்