பாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள் (Post No. 4979)

Written by London Swaminathan 

 

Date: 5 May 2018

 

Time uploaded in London – 5-36 am (British Summer Time)

 

Post No. 4979

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

முன்னொரு காலத்தில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக இருந்தவர் இல. கணேசன்; அவர் இப்பொழுது பாரதீய ஜனதா எம்.பி. இந்திரா காந்தி  (Emergency) எமர்ஜென்ஸி பிரகடனம் செய்த காலத்தில் நாங்கள் எல்லோரும் தலைமறைவு இயக்கத்தில் வேலை செய்தோம். எமர்ஜென்ஸிக்கு முன்னரும் பின்னரும் மதுரையில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அவர் தஞ்சாவூர்காரர். ஆகையால் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும். அவர் என்ன சொன்னாலும் நான் தலை அசைப்பேன்

‘நான் இப்பொழுது என்ன சொன்னேன் தெரியுமா? உங்களை ஒரு குரங்கு என்று சொன்னேன் அதற்கும் தலை அசைத்து ஆமாம், ஆமாம் என்கிறீர்களே’ என்பார்.

 

ஜீ!  நீங்கள் சொன்னால் எல்லாம் சரிதான் என்று சொல்லி நான் சிரித்து (அசடு வழிய) மழுப்பி விடுவேன்.

 

வீட்டிற்கு சாப்பிட வந்த போது, வழக்கமாக பிராமணர்கள் சொல்லுவது போல, அவரிடம் என் அம்மாவும்

“சங்கோஜப்படாமல் சாப்பிடுங்கள்” என்றார்.

கணேஷ்ஜி, தடால் அடியாக ஒரு போடு போட்டார்.

“நான் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவேன்; நீங்கள் சங்கோஜம் இல்லாமல் தாராளமாகப் போடுங்கள்” என்றார்.

 

என் அப்பா, அம்மா எல்லோரும் தஞ்சை ஜில்லாக்காரர்கள்தான். ஆகவே அவர் ‘ஜோக்’கைப் புரிந்து கொண்டு சிரித்தார்கள்.

xxxx

 

தமிழ்நாட்டு எம்.பிக்கள் வழக்கம் போல பார்லிமெண்டில் கூட்டம் நடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது காரசார விவாதத்தில் வடக்கத்திய எம்.பி.க்கள் “எங்களுக்கு இரண்டு வேண்டும், மூன்று வேண்டும்; அந்த மாநிலத்துக்கு எங்கள் மாநிலம் என்ன இளைத்தவர்களா?” என்று சண்டை போட்டனராம்.

 

திடீரென விழித்துக் கொண்ட தமிழ் நாட்டு எம்.பிக்கள், “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் ‘ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. எங்களுக்கும் மூன்று வேண்டும்” என்று கூச்சல் போட்டார்களாம்.

அது சரி, நீங்கள் எந்த மிருகக் காட்சிசாலைக்காக கேட்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்; சபைக் குறிப்பேட்டில் அது பதிவாகட்டும் என்றார் அவைத்  தலைவர்.

 

தமிழ்நாட்டு எம்.பிக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக நின்றனராம்.

 

கரசாரமாக விவாதித்தது வெளி நாட்டில் இருந்து வந்த குரங்குகளை எங்கு அனுப்புவது என்பதாகும்; குரங்கு பற்றிய விவாதம் என்பதே புரியாமல் இவர்கள் எங்களுக்கும் “மூன்று தா” என்று கூச்சல் போட்டனராம்!! அது போல நான் சொன்னது என்ன என்றே தெரியாமல் நீங்களும் ஆமாம் என்றீர்களே என்று என்னை இடித்துரைப்பார்.

 

xxx

 

என் மனைவி ஒரு செவிடு!

எங்கள் வீட்டுக்கு நிறைய உபந்யாசகர்கள், சாமியார்கள், சாது, சந்யாஸிகள் சாப்பிட வருவர். என் தந்தை வெ.சந்தானம்  திருக்கருகாவூர்க்காரர். தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும்—- ஒரு முறை ஒரு சொற்பொழிவாளர் சாப்பிடுகையில் ஏதோ கேட்டார். என் அம்மா வேறு வேலை செய்து கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதாமக அதைக் கொண்டு வந்தார்.

 

என் அப்பா சொன்னார்,

“என் பெண்டாட்டி ஒரு செவிடு; கொஞ்சம் பொறுங்கள்; நான் சொல்கிறேன்” என்று ஜோக் அடித்தார்.

அதற்குள் அவர் கேட்ட பொருளும் வந்தது.

 

அடுத்த முறை அவருக்கு மோர் தேவைப்பட்டது. சமையல் ரூம் முழுக்க எதிரொலிக்குமாறு உரத்த குரலில் மோர் கொண்டு வாருங்கள் என்று இடி முழக்கம் செய்தார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை; பெரிதாகச் சிரித்து விட்டோம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

பின்னர் எங்கள் சஹோதரர்களில் ஒருவர் “அம்மாவுக்குக் காது கேட்கும்; அப்பா ஜோக் அடித்தார்; அதை நீங்கள் உண்மை என்று நம்பிவிட்டீர்களே” என்றார்.அவருக்கு தர்ம சங்கடமாகிப்போனது.

 

விருந்தாளியின் முகம் வாடக்கூடாதே என்பதற்காக நாங்கள் பேச்சை மாற்றி, அவருடைய முந்திய நாள் உபந்யாசத்தைப் புகழ்ந்தோம்.

 

xxxx

சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் மதுரைக்கு வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார். பெரிய வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையை மனப்பாடம் செய்து (அத்யயனம் செய்து) காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை, பசு மாடு, ஒரு வீடு ஆகியன பெற்றவர்.

 

எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், எங்கள் தாயார் உங்களுக்கு இது வேண்டுமா. அது வேண்டுமா என்று கேட்டுப் பரிமாறுவார். அவரோ இன்னும் கொஞ்சம் ரஸம் வேண்டுமா? என்று கேட்டால்” நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக (நன்றாக) இருக்க வேண்டும்” என்பார். இன்னும் கொஞ்சம் பாயஸம் வேண்டுமா? என்று கேட்டாலும் ‘நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்பார். அவ்வளவு நல்ல உள்ளம்; சதா ஸர்வ காலமும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பவர்; நன்றி பாராட்டுவர். “அன்ன தாதா ஸுகீ பவ” என்று ஆஸீர்வதிப்பவர்.

 

அதிலிருந்து அவர் சொன்ன வாசகம் எங்கள் வீட்டில் ஒரு IDIOM AND PHRASE ‘இடியம் அண்ட் ப்ரேஸாக’ மாறிவிட்டது. எங்கள் அம்மா ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ வேறு யாராவது ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்போம். சிரித்து மகிழ்வதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் விடலாமா?

ஆனால் அந்தப் பெரியவர் வந்தால் வழக்கம் போல நமஸ்கரித்து ஆஸி பெறுவோம். ‘ஜோக்’ வேறு; மரியாதை வேறு.

 

xxxx Subham xxxxx

சங்க காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை! (Post N.4978)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 5 MAY 2018

 

Time uploaded in London –  5-08 AM   (British Summer Time)

 

Post No. 4978

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

சங்க இலக்கிய காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

திராவிடம் என்று மார் தட்டும் தம்பிகள் அகநானூறையும் புறநானூறையும் முன்னிறுத்தி அகநானூற்றுத் தம்பியே ஆர்ப்பரித்து வா; புறநானூற்றுப் போர்வீரனே பொங்கி எழு என்றெல்லாம் போலி வசனம் பேசிய காலத்தில் அதனால் ஏமாந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதற்கான பலனை இப்போது அனுபவித்து தமிழகத்தை இழிநிலைக்கு உள்ளாக்கி மோசமான நிலையில் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

பார்ப்பன எதிர்ப்பு; பார்ப்பன காழ்ப்பு என்ற அடிப்படை வெறுப்பில் உருவாகிய திராவிடக் கட்சிகள் அதனால் சொந்தக் குடும்பங்களுக்கு ஆதாயம் சேர்த்தது தான் மிச்சம்.

ஆனால் அந்தக் கொடிய செயலே அந்தக் குடும்பங்களுக்குள் குழப்பம் விளைவித்திருப்பது தர்மத்தின் வழி முறை தானே!

சொத்து யாருக்கு என்பதில் – அதாவது சொத்தை ஒரு டிரஸ்டாக ஆக்கினாலும் அதை ஆள்வது யார் என்பதில் – நடக்கும் போர் அவர்களை அழித்து விடும் என்பதைக் காலம் காட்டும்.

சங்க இலக்கியத்தை நன்கு படிக்காமலேயே இவர்கள் விட்ட கட்டுக் கதைகள் அந்தக் கால (ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் வாழ்ந்த) தமிழர்களை ஏமாற்றி நாசமுறச் செய்தது.

இதனால் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது போல ஒரு திருடர் கூட்டம் தான் உருவானது.

நிற்க, சங்க இலக்கியத்திற்குத் திரும்புவோம்.

அங்கு ஜாதி பேதமே இல்லை; பார்ப்பன வெறுப்போ, பார்ப்பன காழ்ப்புணர்ச்சியோ இல்லை.

தமிழ் படித்த யார் வேண்டுமானாலும் அவர் நன்கு இலக்கியம் படித்து கற்பனை வளத்தில் ஊறி அருமையான கருத்து வளம் சொல் வளம், நன்னெறி போதிக்கும் திறமை, உவமைகளைக் கையாளுவது போன்றவற்றில் திறம்பட்டு இருந்தால் அவர் புலவராகலாம்.

 

ஆணியம் பெண்ணியம் என்ற பால் வேறுபாடும் அந்தக் காலத்தில் இல்லை என்பது வியப்பூட்டும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்!

இப்படி புகழுடனும் பெருமையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் உலக நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் மனப்பானமையுடனும் வாழ்ந்த தமிழர்களை நாம் மறந்து விட்டோம்.

நமது முன்னோர்களை கொச்சைப் படுத்தி பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன் என்றெல்லாம் வகை வகையாக வேறுபடுத்தி பல்வேறு சண்டைகளை மூட்டி அரசியல் ஆதாயம் பார்க்கும் தலைவர்களின் கீழ் வாழ்கிறோம். என்ன கொடுமை இது!

சில குறிப்புகளைக் கீழே பார்த்தால் சங்க இலக்கியப் புலவர்கள் பற்றி நன்கு அறியலாம்:

புலவர்களில் அந்தணர்

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

புலவர்களில் அரசர்கள்

அண்டர்மகன் குறுவழுதியர்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்த்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலைபாடிய பெருங்கடுங்கோ

மருதம்பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

புலவர்களில் இடையர்கள்

இடைக் காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோள் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

 

புலவர்களில் எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

புலவர்களில் கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

புலவர்களில் தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரைப் பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

புலவர்களில் மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

புலவர்களில் வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

புலவர்களில் வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

 

புலவர்களில் வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர் கிழார்மகனார் நெய்தற்றத்தனார்

செல்லூர் கிழார்மகனார் பெரும்பூதங் கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்கிழார்

நொச்சிநியமங்கிழார்

பெருங்குன்றூர் கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப்புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங் கொற்றனார்

வடமோதங்கிழார்

புலவர்களில் பெண்பாற் புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர்மாசாத்தியார்

ஔவையார்

கழார்க்கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப்பசலையார்

மதுரைநல்வெள்ளியார்

முள்ளியூர்ப்பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடிய காமக்கணியார்.

 

மேலே கண்ட புலவர்களின் பெயரே பெரிய வரலாறைச் சொல்லும். தமிழர்கள் இன்றைய திராவிடக் கட்சிகள் கூறும் பொய்களை நம்பாமல் உண்மையான சங்க இலக்கியத்தைத் தாமே படித்து ஆராய்வது தான் உண்மையைத் தெரிந்து கொள்ள சரியான வழியாகும்.

மேலே கண்ட பட்டியல் முழுதுமான பட்டியல் அல்ல; ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சின்னப் பட்டியலே.

அன்புத் தமிழர்கள் உண்மை அறியும் ஆர்வத்துடன் பரந்த சங்க கால நெறியுடன் இந்தக் கால நவீன தொழில்நுட்பத்தையும் ஏற்று வாழ்ந்தால் புதிய பொன்னான வரலாறைப் படைக்க முடியும்!

***

சாப்பாட்டு ராமன் கதைகள் (Post No.4976)

Written by London Swaminathan 

 

Date: 4 May 2018

 

Time uploaded in London – 5-56 am (British Summer Time)

 

Post No. 4976

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

புகழ் பெற்ற ஆபரா பாடகி (Opera singer) மேடம் எமெஸ்டின் ஷூமான் ஹைங்க், நியூயார்க்கில் ஒரு உணவு விடுதியில் உட்காந்திருந்தார். அது மெட்ரோ பாலிடன் ஆபரா மண்டபம் (Metropolitan Opera House) அருகில் இருந்தது. அவருக்கு முன்னால் ஒரு பிளேட்டில் பெரிய மாமிசத் துண்டு இருந்தது.

அந்த நேரத்தில் புகழ் பெற்ற ஆண் பாடகர் என்ரிகோ கருஸோ  (Enrico Caruso) அங்கே வந்து சேர்ந்தார். இந்தப் பெண்மணியின் தட்டில் பெரிய மாமிசத் துண்டு இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். உடனே மனம் திறந்து பேசியும் விட்டார்.

நீங்கள் தனியாக சாப்பிடப் போகிறீர்களா? (You are not going to eat that alone?) என்று கிண்டலாக கேட்டார்.

 

அவர் உடனே சொன்னார்,

இல்லை, இல்லை, உருளைக் கிழங்குக் கறிக்கும் ஆர்டர் கொடுத்துள்ளேன்; அத்துடன்தான் சாப்பிடுவேன்!

 

(என்ரிகோ கேட்டது, வேறு யாராவது வரப்போகிறார்களா என்ற தொனியில்;  இது அந்த அம்மையாருக்கும் புரிந்தது. ஆயினும் தன் விஷயத்தில் வேறு ஒருவர் தலையிடுவதை விரும்பாத அவர் கிண்டலாக, இப்படி மூக்கை உடைக்கும் பதிலைத் தந்தார்)

xxxxxxxxxxxx

ஸ்பூன், போஃர்க், கரண்டி சாப்பிடாதீர்கள்!!!

பிரிட்டனில் வாழ்ந்த புகழ் பெற்ற டாக்டர்களில் ஒருவர் ரிச்சர்ட் ஜெப். அவர மூக்குப் பிடிக்க சாப்பிடும் நல்ல சாப்பாட்டு ராமன்; அவருக்கு யாராவது என்ன சாப்பிடுவது? என்று கேட்டால் பிடிக்காது.

 

வரும் நோயாளி ஒவ்வொருவரும் வழக்கமாகக் கேட்கும் கேள்வி:

 

டாக்டர் ஸார், நான் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது? என்று கேட்பர்.

அவர் சிரிக்காமல் அழாமல் மிகவும் ஸீரிஸாகப் பதில் கொடுப்பார்:

ஸ்பூன், போஃர்க், கரண்டி எதையும் சாப்பிட்டு விடாதீர்கள்; வயிற்றுக்கு மிகவும் கெடுதி; ஜீரணமும் ஆகாது; வாயு வேறு வரும்’ என்பார்.

ஏண்டா கேட்டோ,ம் என்று நினைத்துக் கொண்டு நோயாளிகள் ஓடி விடுவர்.

xxxxxxxxxxxxxxxx

மெல்பா டோஸ்ட்

விபத்துகளே ( தவறுகளே ) புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றன (Great Inventions are the products of Accidents) என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. மெல்பா டோஸ்ட் (Melba Toast) என்பது உருவான கதை இதோ!

 

லண்டனில் புகழ்பெற்ற ஹோட்டல் ஸவாய் (Savoy) ஹோட்டல். ஸவாய் ஹோட்டல் மிகவும் பிரஸித்தமானது; அதி பயங்கர விலை!

அதில் பிரபல ஆபரா பாடகி நெல்லி மெல்பா (Nellie Melba) தங்கி இருந்தார். அப்போது தலைமைச் சமையல்காரர் பிரான்ஸைச் சேர்ந்த எஸ்கோப்பியே.

நெல்லி மெல்பா மிக ஸீரியஸாக பத்தியம் இருந்தார்; எடை குறைய வேண்டும் என்பதற்காக ரொட்டித் துண்டு மட்டுமே (டோஸ்ட்) சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் மாஸ்டர், வேறு ஏதோ வேலையில் இருந்ததால் வேறு ஒருவர் டோஸ்ட் செய்து கொண்டு போனார். அது காய்ந்து போன கருவாடு போலக் காட்சி தந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த   ஹோட்டல் தலைவர் (Ritz) ரிட்ஸ் பதறிப்போனார். மன்னிப்புக் கேட்க ஓடி வந்தார். அவர் வாயைத் திறப்பதற்கு முன்னால், நெல்லி மெல்பா,

“என்ன அருமையான, சுவையான டோஸ்ட்; என் வாழ்நாளில் இப்படி ஒரு சுவையான டோஸ்ட் சாப்பிட்டதே இல்லை. எஸ்கோப்பியே மிகவும் திறமையான சமையல்கார என்றார். ரிட்ஸ் சத்தம் போடாமல் திரும்பி வந்தார்.

அது முதல் மெல்பா டோஸ்ட் என்ற பெயரில் எல்லோரும் , அதே போலச் செய்து விற்கத் துவங்கி விட்டனர்.

 

xxxxx SUBHAM xxxxx

 

கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

Guru Puja by Good Students

கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

 

Written by London Swaminathan 

 

Date: 2 May 2018

 

Time uploaded in London – 21-49 (British Summer Time)

 

Post No. 4971

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 16 (Post No 4972)

 

மநு தர்ம ஸ்ம்ருதியின் இரண்டாவது பாகத் தொடர்ச்சி……

 

குரு பக்தி (Chapter Two)

Guru Puja by Vedic Pundits

 

2-175 குரு குல வாசத்தில் புலனடக்கி மறுமைப் பயன்களை அடைய பின்வரும் நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

 

2-176.அதி கலையில் எழுந்திருக்க வேண்டும்; குளித்துவிட்டு காலையிலும் மாலையிலும் ஹோமம் வளர்க்கவேண்டும். முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்த வேண்டும்; இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்

 

177,178,179. குருகுல வாசத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை: தேன், சந்தனம், பூ, இனிப்பு, தயிர், பால், நெய், மோர், எண்ணை தேய்த்துக் குளித்தல், கண்ணுக்கு மை இடல், செருப்பு, குடை, காமம், கோபம், கூத்து, பாட்டு, சூதாட்டம், வம்பளத்தல், கோள் சொல்லுதல், பெண்களை காமத்துடன் பார்த்தல், பொய் சொல்லுதல்,துரோகம் செய்தல், கொலை,  (இவை அனைத்தும் தவிர்க்கப்ப டவேண்டியவை. யாரையும் அடிக்கக் கூடாது; வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது

 

2-180. நோன்புக் காலத்தில் காம இச்சையால் விந்துவை வெளியேற்றக் கூடாது. பிரம்மசர்யத்தைக் காத்தல் வேண்டும்.தனியாகப் படுத்துறங்க வேண்டும்.

2-181.காம எண்ணம் இல்லாமலேயே விந்து வெளியேறினால் அதிகாலையில் குளித்துவிட்டு மூன்று முறை சூரியனை நோக்கி, எனக்கு என் புலன்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் வரச் செய் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

2-182.குருவுக்குத் தேவையான நீர், தருப்பை, சாணம், மலர் ஆகியவற்றைக் கொண்டு தரவேண்டும்; பிக்ஷை எடுத்து உண்ண வேண்டும்.

 

2-183.வேதம், ஹோமம், சந்தியாவந்தனம் செய்யும் கிரஹஸ்தன் வீட்டில் பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.

 

2-184.குருவின் இல்லத்திலோ அவரது உறவினர் இல்லங்களிலோ பிக்ஷை எடுக்கக் கூடாது. வேறு எவரும் இல்லாத காலத்தே குரு அல்லது தாயாதி அல்லது அவரது உறவினர் இல்லங்களில் பிக்ஷை  எடுக்கலாம்

 

2-185. நல்ல அற ஒழுக்கம் இல்லாத ஊர்களில் மௌனமாகத் திரிந்து, பெரும் பாவிகள் அல்லாத அந்தணர் வீடுகளில் பிக்ஷை எடுக்கலாம்.

 

2-186.காட்டில் தேடிக் கொணர்ந்த சமித்துக் குச்சிக்ளை வெயிலில் அல்லது வீட்டுத் தாழ்வாரத்தில் உலர்த்தி சமிதாதானம் செய்ய வேண்டும்.

2-187.நோய் காரணமாக ஏழு நாட்கள் சமிதாதானம் முதலியவற்றைச் செய்ய முடியாவிட்டால்,  பிக்ஷை எடுக்க முடியாவிட்டால், நோன்பு முறிந்ததாக அர்த்தம்; அத்தகையோர் 11-ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அவகீர்ணி நோன்பை நோற்க வேண்டும்.

 Salute to Gurus by good students

  1. பிக்ஷை எடுக்காமல் பிரம்மச்சாரிகள் பிறருடைய உணவை உண்ணக்கூடாது; அது நோன்பை முறிப்பதாகும்.

189.வேள்வி, திவசம் ஆகியவற்றுக்கு அழைத்தால் கள், மாமிசம் தவிர்த்த உணவுகளை முனிவர்கள் போல சாப்பிடலாம். அது நோன்பை முறித்ததாகாது.

 

  1. பிரம்மசாரிகள் தவிர வேறு யாருக்கும் இப்படிச் செய்ய அனுமதி இல்லை.

 

191.குரு கட்டளை இட்டாலும் இடாவிட்டாலும் வேதம் ஓதுதலும், குருவை வணங்குதலும் பிரம்மச்சாரிகளின் கடமை ஆகும்.

 

192.குருவை நோக்கி கை கூப்பி நிற்க வேண்டும்; அப்போது மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

193.மேலாடைக்கு வெளியே வலக்கரம் தெரியுமாறு மேலாடை அணிய வேண்டும். குரு கட்டளையிட்டால் ம றைக்க வேண்டிய உறுப்புகளை மறைத்து அடக்கத்துடன் அமர வேண்டும்.

 

  1. குருகுல வாசத்தில் சுவையான உணவை நாடி ஓடக்கூடாது. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. குருவுக்குப் பின் தூங்கி முன் எழுதல் வேண்டும்.

 

195.குருவின் கட்டளைகளை நடந்து கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ,  கவனக் குறைவாகவோ கேட்கக் கூடாது. பதில் பேசக் கூடாது.

196.குரு உட்கார்ந்து இருக்கையில் மாணவன் நின்று கொண்டும், அவர் நிற்கும் போது அருகில் நின்றும்,   அவர் அருகில் வந்தால் அவரை நோக்கியும், அவர் நடந்தால் அவர் பின்னால் ஓடியும்,

  1. அவர் வேறு சிந்தனையில் இருந்தால் அவர் அருகில் சென்றும், அவர் படுத்துக் கொண்டிருந்தால் அவரை வணங்கி நின்றும், தொலைவில் இருந்து பேசினால் அருகே சென்றும் கட்டளையைக் கேட்டு பதில் தர வேண்டும்.

Guru’s Blessings

198.குருவின் படுக்கை, ஆசனம் ஆகியவற்றை விடத் தாழ்வாக இருக்குமாறு அமர வேண்டும். அவர் பார்வையில் படுமாறு விருப்பப்படி உட்காரக்  கூடாது.

199.அவர் இல்லாத போது அவர் பெயரை சொல்லுதலோ, மரியாதைக்கான அடைமொழி இன்றி வாத்தியார் என்று இளப்பமாகவும் பேசுதல் கூடாது; அவரைப் போல நடந்தும் பேசியும் பரிஹாசம் செய்யக் கூடாது.

200.குருவைக் கண்டிக்கும் இடத்திலும் குறை கூறும் இடத்திலும் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது அவ்விடத்தில் இருந்து அகல வேண்டும்.

201.குருவிடம் உண்மையாகவே பிழை இருந்தாலும் அதை விமர்சித்துக் கண்டிப்பவன் கழுதையாகவும், வேண்டுமென்றே தவறு கற்பிப்பவன் நாயாகவும், குருவின் உடமைகளை அனுபவிப்பவன் புழுவாகவும், அவர்  மீது பொறாமைப்படுபவன் பூச்சியாகவும் பிறப்பான்.

202.தான் ஒதுங்கிக்கொண்டு பிறரை ஏவி குருவுக்குப் பணிவிடை செய்யப் பணித்தல் கூடாது. தான் வாஹனத்தில் இருந்தால் இறங்கி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர் மனைவியுடன் இருந்தால் அவரை அணுகக்கூடாது; தனக்கு கோபம் இருந்தால் குருவை அணுகக் கூடாது

 

எதிர்க் காற்றிலோ பின்னால் இருந்து வரும் காற்றிலோ குருவுக்கு முன்னர்  அமரக் கூடாது. அவர் கேளாத விஷயங்களை எடுத்துச் சொல்லக் கூடாது.

204.மாடு, குதிரை, பூட்டிய வண்டிகள், ஒட்டகம், படகு ஆகியவற்றில் செல்லுகையில் குருவுடன் அமரலாம்.

  1. குருவுக்கும் குருவானவர் வருகையில் அவரையும் குருபோலக் கருதல் வேண்டும்

தாய் தந்தையரே வந்தாலும் குருவின் அனுமதியின்றி பெற்றோர்களை வணங்குதல்  கூடாது.

 

Great Guru Swami Vivekananda

எனது கருத்து:

 

கழுதை, நாய், புழு, பூச்சியாகப் பிறப்பவன் யார்?

 

குருகுலத்தில் வசிக்கையில்  என்ன செய்யக்கூடாது?

 

குருவிடம் எவ்வளவு மரியாதை, பணிவு காட்ட வேண்டும்?

 

என்பன உலகில் வேறெங்கும் காணாத விஷயங்கள் ஆகும்.

 

திருப்பாவையில் நோன்புக் காலத்தில் பெண்கள் என்ன செய்ய மாட்டார்களோ அதை ஆண் மாணவர்களுக்கும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Vedic Guru and Sishyas (disciples)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 2

 

அந்தக்காலத்தில் மாணவர்களும் அலங்காரப் பிரியர்களாக இருந்தது கண்ணுக்கு மை இட்டுக்கொண்டது, சென்ட், perfume ‘பெர்ப்யும்’ பயன்படுத்தியது தெரிகிறது

தொடரும்……………

 

–Subham–

 

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

 

Written by London Swaminathan 

 

Date: 30 APRIL 2018

 

Time uploaded in London – 16-00  (British Summer Time)

 

Post No. 4963

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! (Post No.4963)

கம்பன் இயற்றிய ராமாயண காவியத்தில் நிறைய அறிவியல் செய்திகள் உள்ளன. நமது பூவுலத்தைத் தவிர நிறைய உலகங்கள் உள்ளன; அங்கேயும் உயிரினங்கள் உள்ளன என்பதெல்லாம் மிகவும் தெரிந்த விஷயங்கள் போல போகிற போக்கில் அனாயாசாமாகச் சொல்கிறான் கம்பன்; உண்மைதான்; மஹாபரதத்திலேயே அர்ஜுனன் மேலுலகம் சென்று திரும்பி வந்த விஷயம் உள்ளது;  வால்மீகி ராமாயணத்திலேயே விமானம் பற்றிய செய்திகள் உள்ளன. இதே போல அணு விஞ்ஞானம் அவ்வையார் பாடல்களிலும் திருமூலர் பாடல்களிலும் கம்பன் பாடல்களிலும் காணப்படுகின்றன. இது பற்றிய முந்தைய எனது கட்டுரைகளின் இணைப்பை கீழே காட்டுவதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை. கம்பன் பாடல்களை மட்டும் தருகிறேன்.

 

இந்த பூமியும் கோள்களும் பிரபஞ்சமும் வட்ட வடிவானமவை. இதை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே அறிந்த இந்து மத விஞ்ஞானிகள் இதை அண்டம் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லால் குறித்தனர். அண்டம் என்றால் முட்டை; அந்த வடிவில் வானத்தில் இருக்கும் எல்லா  கிரஹங்களும் நட்சத்திரங்களும் தென்படுவதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவர்

கம்பன் எழுதிய காவியம் சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. ஆனால் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களோ பல்லாயிரம் ஆண்டுப் பழமையுடைத்து. வேதங்களிலும் இந்தக் கருத்து உளது.

மாணிக்கவாசகர் முதல் பாரதியார் வரை பல்லாயிரம் அண்டங்கள் இருப்பதைப் பாடிப் பரவியுள்ளனர்.

 

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும்

கற்றை அஞ்சடைக்கடவுளும் காத்து அழிக்கும்

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன்புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்

 

பொருள்

மேலும் அந்த இரணியன் (ஹிரண்யகஸிபு), எந்தக் காலத்தும் அழியாமல் இருப்பவன் என்று வேதங்கள் சொல்லும் திருமாலும், நான்முகனும் அழகிய சடையுடைய திருமாலும் முறையே காத்து அழிக்கும்  அண்டத்தின் எல்லை மட்டுமா? இந்த அண்ட கோளத்திற்கு அப்பாலுள்ள  மற்ற அண்டங்களில் உள்ள எல்லாரும் தன் பெயரையே சொல்லித் துதிக்குமாறு வாழ்ந்தனன்.

 

ஏனைய அண்ட கோளங்கள் இருப்பதும் அங்கே வசிப்பவர்கள் பேச முடியும் என்பதும் நம்மவர்களுக்குத் தெரிந்த மிக சாதாரண விஷயம் என்பதை இந்தப் பாட்டு காட்டுகிறது.

 

அண்டம் என்பது முட்டை வடிவினதே என்று அறுதியிட்டுக் கூறுகிறான் கம்பன்:

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்

பயிற்றிய பருவமொத்த……………………………………..

 

திருமாலால் படைக்கப்பட்ட அண்ட கோளங்கள் குஞ்சு பொரிக்காத நிலையில் உள்ள முட்டைகள் போல விளங்க……………….

 

இதில் அண்டம் என்பது முட்டை வடிவமே என்று தமிழ்ப்படுத்திக் காட்டுகிறான் கம்பன்.

 

கால நேரம் பற்றிய அற்புத அறிவு

 

ஒரு நொடியை ஆயிரம் கூறாகப் போடுவது குறித்து பாடல் பாடுவதால் அக்கால மக்களுக்கு இவை எல்லாம் அத்துபடி என்பது சொல்லாமலேயே விளங்கும்:-

அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி

உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்

 

பொருள்:-

ஒரு இமைப் பொழுதை நுட்பமாக ஆயிரம் கூறாகப் பிளந்து, அந்த பகுப்புகளுள் ஒரு பகுப்பான சிறிது பொழுதிலே, உன் தந்தையை அவன் செய்த குற்றத்துக்காக யான் சினந்து அவன் உடலை நகங்களால் பிளந்து வருத்தியதைக் கண்ணெதிரே கண்டும் உள்ளம் கலங்காத மனநிலைக் கொண்ட நினக்கு யாம் இப்பொழுது என்ன கைம்மாறு செய்வோம் என்று பிரஹலாதனை நரசிம்மன் வடிவெடுத்த  விஷ்ணு கேட்கிறான்.

 

 

இன்று நம்மிடையே கம்ப்யூட்டர்கள் இருப்பதால்  ஒரு வினாடியை ஆயிரத்தால் வகுத்து,விண்கலங்களை விண்ணில் செலுத்த முடிகிறது. அந்தக் காலத்தில் இப்படி ஒரு நொடியை ஆயிரமாகப் பிரிக்கும் விஷயங்களை வெளிநாட்டார் சிந்திக்கவும் இல்லை; சிந்திக்கவும் முடியாது. ஏனெனில் கணிதமும் ‘டெஸிமல் சிஸ்டமும்’ (தசாம்ஸ முறை) எண்களும் பூஜ்யமும் உலகிற்கு நாம் கற்றுக் கொடுத்த விஷயங்களாகும்!!!

MY OLD ARTICLES ON EXTRA TERRESTRIALS AND CONCEPT OF TIME

 

வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/

2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் … இந்துக்களின் வெளி உலகவாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் …

 

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது …

https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…

22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண …

 

 

science and religion | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/science-and-religion/

15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, பிரம்மாவுக்கு வேறு ஒரு காலக் கணக்கு ஆகியன வெளி உலகங்கள் (Extra Terrestrial Civilization) இருப்பதைக் காட்டும். வெளி உலக கிரக வாசிகள் (ET) கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் இப்படிப்பட்ட காலச் சுழற்சி உடைய இடத்தில் …

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய …

https://tamilandvedas.com/…/வெளி-உலகவாசிகள்-… – Translate this page

2 Jul 2017 – … ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது. 5.அவர்கள் மானசீகமாக எங்கும்பயணம் செய்யலாம். 6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே. ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான் இங்கு …

 

காலப் பயணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காலப்-பயணம்/

Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் …

 

விண்வெளி அறிவியல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/விண்வெளி-அறிவிய…

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு … காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) …

தமிழர்கள் கணித மேதைகள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தமிழர்கள்-கணித-மேத…

ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974. சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் …

Tamil and Vedas | A blog exploring themes in Tamil and vedic …

https://tamilandvedas.com/page/10/?ca – Translate this page

21 Sep 2017 – திருமந்திரம். கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை. மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில். தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி. சிங்கார மான ….tamilandvedas.com/tag/ka. Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this .. –சுபம்–. Leave a comment.

 

Science & Religion | Tamil and Vedas | Page 14

https://tamilandvedas.com/category/science…:/tamilandvedas…/14/

17 Dec 2012 – அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப்பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) …

 

–சுபம்–

குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!(Post No.4962)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 30 April 2018

 

Time uploaded in London –  5-45 AM  (British Summer Time)

 

Post No. 4962

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்குமண்டல

கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!

 

ச.நாகராஜன்

 

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை உரைக்கும் கொங்கு மண்டல சதகம் என்ற நூலில் உள்ள நூறு பாடல்களில் சிலவற்றை அவ்வப்பொழுது பார்த்து வந்திருக்கிறோம்.

 

இப்போது இன்னும் ஒரு அருமையான சம்பவத்தைக் கூறும் பாடலைப் பார்ப்போம். 89வது பாடலாக அமையும் பாடல் இது:

 

கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு

மெரியா முடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்

பரிபா லனஞ்செய மட்பாவை யிற்குறி பார்த்துச்சுட

மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே

 

இப்பாடலின் பொருள் ; கரிகாலச் சோழன் மகளுக்கு வந்து நேர்ந்த பெரிய வலிப்பு நோயை, ஒரு குலாலன் மட்பாவை செய்து அதை நோக்கிக் குறி பார்த்துச் சுட, அவ்வலிப்பு நோய் தீர்ந்ததும் கொங்கு மண்டலம் என்பதாம்.

 

வரலாறு : பாடலின் அடிப்படையாக அமைந்ந்த வரலாறு இது தான் :

கரிகாலன் என்ற சோழனின்  மகளுக்கு பெரிய வலிப்பு நோய் வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தம்மால் இயன்ற வைத்தியம் செய்து பார்த்தார்கள். நோய் தீரவில்லை.

கொங்கு நாட்டில் இருக்கும் ஒரு குயவன் இந்நோயை வெகு விரைவில் நீக்கி விடுவான் என்று பலர் சொல்லக் கேட்டான் கரிகாலன். அவனை வரவழைத்தான்.

 

“நீ சூடு போட்டு நோயை நீக்கி விடுவாய் என்று கேள்விப் படுகிறேன். ஆனால்  என் இளம் குழந்தை சூட்டைப் பொறுக்க மாட்டாளே” என்று வருத்தத்துடன் கூறினான்.

 

அதற்கு அந்தக் குயவன், “மன்னா! கவலைப்பட வேண்டாம். ராஜகுமாரியின் மேனியில் படாது சூடு போட்டு வலியைப் போக்குகிறேன்” என்றான்.

 

வியப்புற்ற மன்னன் அதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

குயவன் குழந்தை போலவே ஒரு பாவையை மண்ணினால் செய்தான். ராஜகுமாரிக்கு வலி எங்கிருக்கிறது என்பதைக் கேட்டு அறிந்து கொண்டான். அந்த இடத்தைக் குறி பார்த்து நெருப்பிற் காய்ந்த இரும்புக் கோலால் அந்த மண் பாவையில் சுட்டான். உடனே அரசிளங்குமரிக்கு வலிப்பு நோய் தீர்ந்தது.

 

குறிப்பிட்ட பொருளில் உருவம் செய்து அப்பாவையின் உறுப்பில் ஊசி முதலியவற்றைக் குத்தல், குறிப்பிட்ட இடத்தில் சுட்டு வியாதியைப் போக்கல், இல்லாத வியாதியை உண்டாக்கல் ஆகியவற்றை சல்லியம் என்னும்  மந்திர சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

 

அதன் படி ராஜகுமாரியின் நோய் நீங்கிற்று.

இந்த வரலாறைச் சற்று மாற்றியும் சொல்லும் ஒரு சுவடி உள்ளது.

 

அதன் படி மேற்கண்ட நோய் தீர்ந்தது விக்கிரம சோழன் மகள் என்றும், பொன்கலூர் நாட்டு வானவன் சேரி என்னும் ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்றும்  குறுப்பி நாடு கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவன் அங்கு வந்து குறி சுட்டான் என்றும் தெரிய வருகிறது.

 

குயவர்களிடம் உள்ள ஒரு பழைய சுவடி இதனைத் தெரிவிக்கிறது!

***

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

கம்ப ராமாயண யுத்த காண்டப் பொன்மொழிகள் (POST No.4956)

 

மே 2018 நற்சிந்தனை காலண்டர்

 

 

COMPILED by London Swaminathan 

 

Date: 28 APRIL 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 4956

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

மே 2018 காலண்டர்

(2018 சித்திரைவைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்;

விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் – 28-  வைகாசி விசாகம்; அக்னி நட்சத்திரம் ஆரம்பம் -4 முடிவு– 28; 10-ஹனுமான் ஜயந்தி (தெலுங்கு தேசம்); பாங்கு விடுமுறை திங்கள்-7 AND 28. 

பௌர்ணமி– – 29; அமாவாசை– –  15; ஏகாதஸி விரதம்—11, 15

சுப முகூர்த்த தினங்கள்:- 2, 4, 6, 7, 13, 20, 25, 27

 

 

 

 

மே 1 செவ்வாய்க்கிழமை

 

ஒன்றெ என்னின் ஒன்றேயாம்

பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம்

ஆமே என்னின் ஆமேயாம் (கடவுள் பற்றி கம்பன்)

 

மே 2 புதன்கிழமை

கங்குல் பொழுதும் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான் ( இரவிலும் கூட தூங்காத ராமன் கடலைக் கண்டான்.)

 

மே 3 வியாழக்கிழமை

முழுப்பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் (படைப்புக் கடவுளான பிரம்மா பற்றி கம்பன்)

 

மே 4 வெள்ளிக்கிழமை

பண்டிதர் பழையவர் கிழவர் பண்பினர்

தண்டலில் மந்திரத் தலைவர் சார்க (அறிஞர், நீண்ட நாள் பழகியவர், சுற்றத்தார், பண்புடையோர், நல்ல ஆலோசனை கூறும் அமைச்சர்கள் வருக என ராவணன் ஆணையிட்டான்)

 

 

மே 5 சனிக்கிழமை

உலங்கும் நம்மேல் வரின் ஒழிக்கற்பாலதோ (எதிரிகளை ஒழிக்காவிட்டால் கொசு வந்தால் கூட நம்மால் அதை விரட்ட முடியாது)

 

மே 6 ஞாயிற்றுக் கிழமை

வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு (சிவன் பற்றிக் கம்பன்; வெள்ளிமலை- கயிலை, விடை-ரிஷப வாஹனம்)

 

மே 7 திங்கட்கிழமை

மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றவும்

உண்ணிய மைந்தன உணவுக்கு (மனிதர்கள், குரங்கு, ஏனைய விலங்குகள் எல்லாம் நாம் சாப்பிட அல்லவா படைக்கப்பட்டுள்ளது; அரக்கர் சொல்லுவது)

 

மே 8 செவ்வாய்க்கிழமை

 

நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்

ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறிவு அமைந்தாய்

(ராவணா! நீ பிராமணன்; பிரம்மன் முதல் தோன்றிய நம் குலத்தில் நீ ஒப்பற்றவன்; ஆயிரம் கிளைகள் (ஷாகா) கொண்ட சாம வேதத்தை அறிந்தவன்)

 

மே 9 புதன்கிழமை

ஆசில் பரதாரம் அவை அம் சிறை அடைப்பேம்

மாசில்புகழ் காதலுறுவேம் வளமை கூரப்

பேசுவது மானம் இடை பேணுவதும் காமம்

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்

(மாற்றான் மனைவியை சிறை வைப்போம்; புகழை விரும்புவோம்;வீ ரம் பேசுவோம்; காமத்துடன் உலவுவோம்; ஆனால் வலிமை அற்ற மனிதரைக் கண்டு பயப்படுகிறோம்!நன்றாக இருக்கிறதப்பா!)

 

மே 10 வியாழக்கிழமை

யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்

தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ

கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ

 

யானை, தேர், குதிரைப்படையோ, ஆயுதங்களோ இல்லாமல் கூன்முது கொண்ட குரங்கின் மேல் ஏறி வரும் மனிதர்கள் நமக்கு உணவாக வேண்டியவர் ஆவர். இவர்கள் ஜெயிப்பார் என்று சொல்வது நல்ல அழகப்பா!!)

 

மே 11 வெள்ளிக்கிழமை

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்

சானகி எனும் பெயர் உலகின் தம்மனை

ஆனவள் கற்பினால் வெந்தது (ராவணா, குரங்கு சுட்டதால் இலங்கை தீப்பற்றியது என்று எண்ணாதே; சீதையின் கற்புதான் எரித்தது – வீடணன் கூற்று)

 

மே 11 வெள்ளிக்கிழமை

உயர்வு மீட்சியும்

பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்

மண்பொருட்டு அன்றியும் ,வரவும் வல்லவோ (பெண்ணினால் வீழ்ச்சி வராவிடில் மண்ணினால்  அழிவு வரும்; வேறு காரணம் உண்டா? வீடணன் கேள்வி))

 

மே 12 சனிக்கிழமை

 

நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்

கூல வான்குரங்கினால் குறுகும் கோள் அது

வாலிபால் கண்டனம் (நந்தி இட்ட சாபத்தால் குரங்கினால் உனக்கு அழிவு வரும் என்பதை வாலி யிட்ட சண்டையால்தால் அறிந்தாம்)

 

மே 13 ஞாயிற்றுக் கிழமை

தீயிடைக்குளித்தவத் தெய்வக் கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ (தீக்குளித்த வேதவதி இட்ட சாபத்தை தடுக்கும் வல்லமை நமக்கு உண்டா? வீடணன் கேள்வி))

 

 

மே 14 திங்கட்கிழமை

அடல்படைத்து அவனியை பெருவளம்தருக என்றருளினானும்

கடல்படைத்தவரொடும் கங்கை

தந்தவன் வழிக்கடவுள் மன்னன் ( பூமியை வென்று வளம் கொடு என்று கட்டளையிட்ட பிருதுவும், கடலை உண்டாக்கிய சகரரும், கங்கையைக் கொடுணர்ந்த பகீரதனும் உதித்த சூரிய குலத்தில் வந்தவன் தசரதன்)

 

 

மே 15 செவ்வாய்க்கிழமை

ஈசனின் பெறு படைக்கலம்

இமைப்பு அளவில் எவ்வுலகில் யாவும்

நாசம் உற்றிட நடப்பன

கொடுத்தன பிடித்துடையர் நம்ப ( நொடிப் பொழுதில் எல்லாவற்றையும் அழிக்கும் ஆயுதங்களைக் கோசிகன் சிவனிடம் இருந்து பெற்று அவர்களுக்கு  அளித்தான்.)

 

மே 16 புதன்கிழமை

தெறு சினத்தவர்கள் முப்புரம்

நெருப்புற உருத்து எய்த அம்பும்

குறுமுனிப்பெயரினான் நிறைதவர்க்கு

இறைதரக் கொண்டு நின்றார் (ராமன் கையில் உள்ள ஆயுதங்கள் சிவன் கொடுத்த அம்பு, திருமாலின் வில்;அகத்தியவர் கொடுத்தவை)

 

மே 17 வியாழக்கிழமை

குலத்த கால் வயநெடுங் குதிரையும்

அதிர் குரல் குன்றும் இன்று

வலத்த கால் முந்துறத் தந்து நம்

மனையிடைப் புகுவ மன்னோ (குதிரைகளும் யானைகளும் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருகின்றன; தீய சகுனம்; அதாவது வீரர்கள் கைவிட்ட மிருகங்கள் மட்டும் திரும்பி வருகின்றன)

 

மே 18 வெள்ளிக்கிழமை

அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி இதன் மேல்

விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (மாறாத கற்புடைய தெய்வப் பெண்ணாகிய சீதையை ராமனிடம் திருப்பி அனுப்பு; அதுவே வெற்றிதரும்– வீடணன் புத்திமதி)

 

மே 19 சனிக்கிழமை

 

வந்த போர்தொறும் துரந்த நாள் வானவர் உலகை

சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன் (ராமன் பற்றி ராவணன் கிண்டல்: இந்திரன், விஷ்ணு, தேவர்கள் ஆகியோரை ஒவ்வொரு போரிலும் ஓட ஓட விரட்டினேன்; அப்போதெல்லாம் நீ புகழும் ராமன் சின்னப் பயலாக இருந்தானோ?)

 

மே 20 ஞாயிற்றுக் கிழமை

 

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் (இரணியன் பெயர் இந்த அண்டத்தில் மட்டும் இன்றி பிற அண்டங்களிலும் பரவியது;தமிழர்களின் வானியல் அறிவினைக் காட்டும் பாடல்)

 

 

மே 21 திங்கட்கிழமை

வேதத்தின் உச்சியின் மெய்ப்பொருட் பெயரினை விரித்தான் (வேதத்தின் உச்சியான உபநிடதத்தில் கூறப்படும் உண்மைக் கடவுளின் பெயரினை (பிரகலாதன்) கூறினான்

 

 

மே 22 செவ்வாய்க்கிழமை

என்னை உய்வித்தேன் எந்தையை யுய்வித்தேன் இனைய

உன்னை உய்வித்து இவ்வுலகையும் உய்விப்பான் அமைந்து

முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் (ஆசிரியரிடம் பிரகலாதன் சொன்னது: என்னையும், என் தந்தையையும், உங்களையும் ,உலகில் உள்ள எல்லோரையும் ஈடேறச் செய்யும், ஓம் எனும் வேதத்தின் முதல் எழுத்து உணர்த்தும் ஒருவன் பெயரைத்தானே- ஓம் நமோ நாராயணாய- நான் சொன்னேன்; இது ஒரு குற்றமா? சொல்லுங்கள்)

 

மே 23 புதன்கிழமை

 

காடு பற்றியும் கனவரை பற்றியும் கலைத்தோல்

மூடி பற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால்

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்றுரைக்கும்

மாடு பெற்றெனென் மற்று இனி என் பெற வருந்தி (முனிவர் தோற்றம்: காடு,மலையில் வாழ்வர்-மான் தோல் அணிவர்-முடியை மழிப்பர், வளர்ப்பர்- மோட்சத்தை அடைவர்- அதைவிடப் பெரிய செல்வம் எனக்குக் கிடைத்தது-பிரகலாதன் செப்பியது)

 

மே 24 வியாழக்கிழமை

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்

சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய (கேட்டதை எல்லாம் கொடுப்பான்; அது அலுத்துப் போய் மோட்சம் வேண்டின் அதையும் தருவான்; யார் அவன்? சுவர்க்கம் போக ஹோமம் செய்யும்போது சொல்லும் பெயர் இருக்கிறதே! அதுதான்– நமோ நாராயணாய)

 

மே 25 வெள்ளிக்கிழமை

அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு

விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான்( பிரகலாதனிடம் இரணியன் விளம்பியது: பாம்பின் பெயரை எலி இடைவிடாது ஓதினால் அதற்கு என்ன நன்மை கிடைக்கும்? சொல்)

 

 

மே 26 சனிக்கிழமை

வித்து இன்றி விளைவது ஒன்றில்லை வேந்த நின்

பித்து இன்றி உணர்தியேல் அளவைப் பெய்குவேன் (பிரகலாதன் மொழிவது: அரசனே, விதை இல்லாமல் மரம் முளைக்காது; நீ பைத்தியம் தெளிந்து கேட்பாயின் தத்துவப் பொருளை அறியும் வழியைச் சொல்வேன்)

 

மே 27 ஞாயிற்றுக் கிழமை

உபநிடதங்கள் ஓதுவ

கிளவிஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் ( உபநிடதச் சொற்களால் விளக்கமுடியாதவன்; அவன் தன்மையை யார் அறிவார்? யாரும் கண்டதில்லை)

மே 28 திங்கட்கிழமை

 

முந்தை ஓரெழுத்து என வந்து மும்முறைச்

சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான் (ஓம் அவன்; அ, உ, ம சந்தி அவன்)

மே 29 செவ்வாய்க்கிழமை

ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் தன்மையான் -(ஆலமரத்தையும் அதைத் தன் சிறிய விதைக்குள் அடக்கியது போல பிரபஞ்சத்தை அன்னுள் கொண்டவன்)

 

மே 30 புதன்கிழமை

ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்

ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் (ஓம் எனும் எழுத்தும், அதிலுள்ள அ,உ, ம, வில், அகார உயிராக உள்ளான்)

 

மே 31 வியாழக்கிழமை

கன்று புல்லிய கோள் அரிக்குழு எனக்

கனக்கின்ற தறுகண்ணார் ( குட்டி யானையை சிங்கக் கூட்டம் சூழ்ந்துகொண்டது போல, அரக்கர்கள் பிரகலாதனைச் சுற்றி வளைத்தனர்)

 

–SUBHAM–

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? (Post No.4954)

Research Article Written by London Swaminathan 

 

Date: 27 April 2018

 

Time uploaded in London – 15-33

 

 

Post No. 4954

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

உலகப் புகழ்பெற்ற காஷ்மீரப் புலவன் கல்ஹணனன் செப்புகிறான்

 

“The reputation of the great does not by any means conform to their birth place”. Rajatarangini 4-41

 

ஒருவர் பிறந்த இடத்தினால் பெரியோரின் புகழ் குறையாது; மங்காது.:

 

இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை சித்தர்களும் முனிவர்களும் ஞானிகளும் சாது சந்யாசிகளும் மஹான்களும் பிறக்கும் இடத்தைப் பட்டியலிட்டுப் பார்த்தால் விளங்கிவிடும்.

 

அவர்கள் எந்த இனத்திலும் எந்த நாட்டிலும், எந்த   இ டத்திலும், எவருக்கும் பிறப்பார்கள். உலகப் புகழ்பெற்ற இந்திய ஞானிகளில் பெரும்பாலோர் எவருக்கும் தெரியாத தொலைதூர கிராமங்களில் பிறக்கிறார்கள். கீழேயுள்ள சுவையான  பட்டியலைப் பாருங்கள்; நேரம், காலம், இடம் என்று தேர்ந்தெடுக்காமல் பிறப்பது தெரியும். அவர்களை யாரும் தனிச் சொத்தாகக்  கருதுவதில்லை

 

அவர்கள் உலகிற்கே சொந்தம்; கல்ஹணர் சொல்லுவது சரியே

 

கீழேயுள்ள பட்டியல் விரிவானது அல்ல. ஊருக்கு ஒரு ஞானி இருப்பதால் சேர்த்துக் கொண்டே போகலாம் இதோ ஒரு சின்னப்பட்டியல்:-

 

A

அருணகிரிநாதர்- திருவண்ணாமலை

ஆதிசங்கரர்- காலடி, கேரளம்

அன்னமாசார்யா- தல்லபாக, ஆந்திரம்

அரவிந்தர்- கல்கத்தா

ஆனந்தமயீ மா- கியோரா, வங்கதேசம்

ஆழ்வார்கள் 12

ஆண்டாள் – திருவில்லிப்புத்தூர்

பெரியாழ்வார்-திருவில்லிப்புத்தூர்

நம்மாழ்வார்- திருக்குருகூர்

பொய்கை ஆழ்வார்- திருவெஃகா

பேயாழ்வார்- மயிலை

பூதத்தாழ்வார்- மஹாபலிபுரம்

திருமழிசை ஆழ்வார்- திருமழிசை

தொண்டரடிப்பொடி ஆழ்வார்- மண்டன்குடி

மதுரகவி- திருக்கோளூர்

திருப்பாணாழ்வார்- உறையூர்

குலசேகராழ்வார்- திரு வஞ்சிக்களம்

திருமங் கை ஆழ்வார்- குறையலூர்

B

பாஸ்கராச்சார்யா- பீஜப்பூர்

பக்தி வேதந்த ப்ரபுபாத (ISKCON)- டாலிகஞ்ச்

புத்தர்- கபிலவஸ்து

 

E

ஏகநாத்- பைதான்,மஹாராஷ்டிரம்

 

G

குருநானக்- நான்கானா சாஹிப் (பாகிஸ்தான்)

கேசவ பலிராம் ஹெட்கேவார் (RSS)- நாகபுரி

 

J

ஞானதேவ்- அபேகான்  , மஹாராஷ்டிரம்

 

K

காஞ்சி மஹா ஸ்வாமிகள்- விழுப்புரம்

கபீர்தாஸ்- காசி

குழந்தையானந்த சுவாமிகள்- சமயபுரம், மதுரை

கனகதாசர்- பாட கிராமம், கர்நாடகம்

கம்பன் – தேரழுந்தூர்

 

M

மஹா வீரர்- குண்டக்ராம- பீஹார்

 

மாதவ ஸதாசிவ கோல்வல்கர்  (RSS)- ராம்டெக்

மஹாத்மா காந்தி- போர்பந்தர்- குஜராத்

மத்வர்- பாஜக ,உடுப்பி

முத்து ஸ்வாமி தீக்ஷிதர்- திருவாரூர்

மாணிக்கவாசகர்- திருவாதவூர்

 

மீராபாய்- சௌகரி, ராஜஸ்தான்

முக்தாபாய்- அபேகாவ்ன்

 

N

நாராயணகுரு – செம்பழந்தை, கேரளம்

 

நரசிம்ம மேதா- டாலஜ , குஜராத்

நாயன்மார் 63- பெரும்பாலோர் தமிழ்நாட்டு கிராமங்கள்

நிவ்ருத்தி- அபேகாவ்ன்

நாம்தேவ்- தண்ணீரில் மிதந்துவந்தார்

 

P

புரந்தரதாஸர்- தீர்த்தஹல்லி,கர்நாடகம்

பரமஹம்ச யோகானந்தர்- கோரக்பூர், உ.பி

R

ராமகிருஷ்ண பரமஹம்சர்- கமார்புகூர், மேற்கு வங்கம்

ரமண மஹரிஷி – திருச்சுழி

ராமனுஜர்- ஸ்ரீ பெரும்புதூர்

ராகவேந்திரர்- புவனகிரி, தமிழ்நாடு

சமர்த்த ராமதாஸர்- ஜாம்ப்

பத்ராஜலம் ராமதாஸர்- நலகொண்டபள்ளி

ராமதீர்த்தர்- முரளிவாலா, பஞ்சாப்

வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகள் – மருதூர்

 

ராம்தாஸ் சுவாமி- காஞ்சன்காடு, கேரளம்

ரவிதாஸர்- கோவத்தன்பூர், உ.பி.

S

சாரதாதேவி- ஜய்ராம்பாடி, மேற்கு வங்கம்

சத்ய சாய்பாபா- புட்டபர்த்தி, ஆந்திரம்

ஷீர்டி சாய்பாபா- சீர்டிக்கு அருகில்

சேஷாத்ரி ஸ்மாமிகள் – திருவண்ணாமலை, ஊஞ்சலூர் தொடர்பு

ஷியாமா சாஸ்திரி- திருவாரூர்

 

சோபான-  அபேகாவ்ன்

சுப்ரமண்ய பாரதி- எட்டயபுரம்

சுவாமி சிவானந்தர்- பத்தமடை, தமிழ்நாடு

 

சுந்தரர்- திருநாவலூர்

ஸ்வாமிநாராயண்- சாபைய- உ.பி

சூர்தாஸ்- சிரி, டில்லிக்கு அருகில்

 

சித்தர் 18 – சமாதிகள் மட்டுமே பிரஸித்தம்

 

திருஞான சம்பந்தர்- சீர்காழி

திருமூலர்- காஷ்மீர்

திருவள்ளுவர்- மயிலை-சென்னை

துளசிதாசர்-சூகர் க்ஷேத்ர சோரன்

திருநாவுக்கரசர்–திருவாமூர்

தியாகராஜர்- திருவாரூர்

துக்காராம்- டேஹு

 

வல்லபாசார்யா- வாரணாசி/காசி

ஸ்ரீவல்லப- பீதாபுரம், ஆந்திரம்

ஸ்வாமி விவேகாநந்தர்- கல்கத்தா

வியாசர்- கங்கை நதித் தீவு

வால்மீகி- காட்டின் நடுவில்

இந்தப் பட்டியல் முழுப் பட்டியல் அல்ல- நேரம் கிடைக்கும்போது இரண்டாம் பட்டியலும் வரும்; மூன்றாம் பட்டியலும் வரலாம்!

 

–சுபம்–

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951)

 

Written by London Swaminathan 

 

Date: 26 April 2018

 

Time uploaded in London – 15-19

 

Post No. 4951

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Tamil Poets and Kalhana

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர். ஆயினும் அவைகளை      ஆராய்ச்சியளருக்கு விட்டு விட்டு, நாம் ஒப்பீட்டு இலக்கியத்தை மட்டும் நாம் காண்போம்.

 

GREAT MEN THINK ALIKE பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். கல்ஹணர் சொன்னதை தமிழ்ப் புலவர் பாடல்களுடன் ஒப்பிட்டால் அது உண்மையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

“தன் உடல் வருத்தத்தையும் மனக் களைப்பையும் பற்றிக் கவலை ப்படாதவர் அடைய முடியாததும் உண்டோ? அத்தகையோர் துணிகரச் செயல்களில் இறங்குவர் (வெற்றி அடைவர்) என்று கல்ஹணர் நுவல்வார்.

 

Achievement
What cannot be accomplished by anyone who disregard s his own limbs and mind?
Such a person is capable of bold enterprise. Rajatarangini 7-1328

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

 

XXX

“ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய மரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதைத் தொற்றிக்கொண்டு வளரும் பூங்கொடியும் அழியும் என்பதை சொல்லவும் வேண்டுமோ”- என்று மொழிகிறார் கல்ஹணர்.

இதைத் தமிழில் சேருவார் சேர்க்கையினால்– சஹவாச தோஷத்தால்– ஒருவன் கெட்டான் என் போம்.

Certainty
If a tree which protects a river bank collapses in a flood, the creeper which lives on it, will surely follow suit.8-3250

‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்’- என்று உலக நீதி உரைக்கிறது.

 

நீதி வெண்பா (எழுதியவர் யார் என்பது கிடைக்கவில்லை) சொல்கிறது:

புற்றுக்குப் பக்கத்தில் வைக்கோற் புரி கிடந்தாலும் அதைப் பாம்பு என்றே கருதுவர்; தீயோருடன் சேர்ந்த நல்லோரையும்   தீயவர்கள் என்று எண்ணி ஒதுங்குவர் என்று:

நல்லொழுக்க மிலா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும்

பாம்பெனவுன் னாரோ பழுதையே யானாலுந்

தூம்பமரும் புற்றடுத்தாற் சொல்

நல்லோருடன் சேராதோர் இப்படி அழிவர் என்று மற்றொரு பாடல் கூறும்.

 

சந்தனமரத்துக்குப் பக்கத்தில் நிற்கும் மற்ற செடி கொடிகளும் அந்த மரத்தின் மணத்தைப் பெறும். ஆனால் மூங்கில் மரத்துக்கு அருகில் நிற்கும் மரங்களோ அது உராய்ந்து உண்டாகும் தீயில் தான் அழிவதோடு பக்கத்தில் உள்ள மரங்களையும் அழித்துவிடும்.

 

சந்தனத்தைச் சார்தருவுந்  தக்க மணங்கமழும்

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற — அந்தவனந்

தானுமச் சந்தனமும் தன்னினமு மாய்வதன்றித்

தானுங் கெடச்சுடுமே தான்  (நீதி வெண்பா)

வேய்= மூங்கில்; தரு=மரம்

 

XXX

 

Defeat
Every great person finally meets with humiliating defeat just if he was a common man. Who then could proudly think I am great 8-335

 

“எல்லாப் பெரிய மனிதர்களும் இறுதியில் அவமானப்பட்டு தோல்வி அடைகின்றனர் ; சாதாரண மனிதனைப் போல ஆகின்றனர். இப்படி இருக்கையில் யார் நான்தான் பெரியவன் என்று நினைக்கமுடியும்?” என்று கல்ஹணர் கேட்கிறார்.
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவிலொரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இலையே

பட்டினத்தாரோ முடி மன்னர்களும் இறுதியில் பிடி சாம்பராய் சுடு காட்டில் சாதாரண மனிதன் எரிக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்படுவதைக் காட்டுகிறார். (இந்து மதத்தில் மன்னர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் ஒரே சுடுகாடுதான்)

xxx

 

Equanimity
The ocean is not warmed by the submarine fire nor does it cold by the snow s of the Himalayas when they enter it. Men of unruffled mind display equanimity either in dejection or exultation 8-2666
கடலுக்கு அடியிலுள்ள தீயினால் (வடமுகாக்னி= கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள்) கடல் சூடாவதும் இல்லை; இமயமலையில் இருந்து வரும் பனிக்கட்டி  ஆறுகள் கடலில் பாய்வதால் அது குளிர்வதும் இல்லை. அது ஒரே மாதிரிதான் இருக்கும்; அது போல பெரியோர்கள் போற்றினும் தூற்றினும் சம நிலை தவற மாட்டார்கள் –கல்ஹணர்

 

இதையே தமிழ்ப் புலவர்கள் பால், தங்கம், சந்தனம் அகில், சங்கு கடல் மூலம் மிக அழகாகச் சொல்லுகின்றனர்.

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்: 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

–சுபம்–

 

தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)

தெய்வத் தமிழ் QUIZ/ கேள்வி-பதில் (Post No.4938)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 22 April 2018

 

Time uploaded in London –  6-48 am (British Summer Time)

 

Post No. 4938

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

கீழ்கண்ட தெய்வீக வசனங்களை யார், எந்த நூலில் சொன்னார்கள்? விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பாராமல் பகருங்கள். உங்கள் அறிவினைச் சோதித்துக்கொள்ள அரியதோர் வாய்ப்பு!!!

1.பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீலமேனி நெடியோன் கோயிலும்

 

 

2.மாட்டுக்கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர்

ஆட்டுக்கோ நுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ

 

3.ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை

மாற்று அருங்கணிச்சி, மணிமிடற்றோனும்

கடல் வளர் புரி வளை புரையும் மேனி

அடல் வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்

 

4.பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்

பரவு புகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும் பல நூல்களிலே இசைத்த ஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம்

 

5.ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே

 

6.கற்றூணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவயவே

 

7.உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

 

8.உள்ளே உருகி நைவேனை

உளவோ இலளோ என்னாத

கொள்ளைகொள்ளிக் குறும்பனைக்

கோவர்த்தனனைக் கண்டக்கால்

கொள்ளும் பயன் ஒன்றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன் மார்பில்

எறிந்தென் அழலைத் தீர்வேனே

 

9.பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்

 

10.கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்

எங்கள் உள்ளம்!

 

11.தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய்.

 

12.கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்

 

விடைகள்

1.இளங்கோ, சிலப்பதிகாரம்

2.காளமேகம்,  தனிப்பாடல்கள்

3.புறநானூறு, நக்கீரனார் பாடல்

4.பாரதி, பாரதியார் பாடல்கள்

5.கம்பன், கம்ப ராமாயணம்

6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

7.திருமூலர் எழுதிய திருமந்திரம்

8.ஆண்டாள், நாச்சியார் திருமொழி

9.திருக்குறள், திருவள்ளுவர்

10.பாரதிதாசன்

11.மாணிக்கவாசகர், திருவாசகம்

  1. சேக்கிழார், பெரியபுராணம்

 

–SUBHAM–