உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989)

globe trotting 2

Written by London swaminathan

Date:20 July 2016

Post No. 2989

Time uploaded in London :–21-21

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம். ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன்  மயில் மீது வலம் வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.

 

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:–

 

பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச

சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே

 

தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும், பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.

 

இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.

 

Xxx

babay, mother

 

 

தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை

 

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:–

“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”

 

பொருள்:–

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை

தாய்க்கு  மிஞ்சிய தெய்வமில்லை.

 

Xxx

 

 

மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்

 

பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்; அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;  ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.

 

–மனு ஸ்மிருதி 2-145

 

–SUBHAM–

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–

 

கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை (Post No.2983)

sarojini

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2983

Time uploaded in London :– 14-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sarojini book

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் இது:-

 

அவர் எப்படி கவிதை எழுதத் துவங்கினேன் என்று சொல்லுகிறார்:-

 

“எனக்கு அப்போது வயது 11. ஒரு அல்ஜீப்ரா கணக்கு போட வேண்டியிருந்தது. விடை தெரியவில்லை;  மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். அந்த போராட்டம் ஒரு கவிதையாக கொப்புளித்தது. உடனே அவசரம், அவசரமாக அதை எழுதி வைத்தேன். அப்போதிலிருந்து கவிதை என்பது சுலபமாக வர ஆரம்பித்தது”.

 

இலக்கியத்தி ல்பெண்கள் சிறப்படைந்தது  இது  முதல் தடவை அல்ல. குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி, கணவனின் படையெடுப்பின்போது, மதுரை மாநகர மீனாட்சி கோவில் வரை வந்து, மதுரா விஜயம் என்ற காவியத்தைப் படைத்தார்.

 

ரிக் வேதத்தில் , சங்கத் தமிழ் இலக்கியத்தில், பிராக்ருத நூலான காதா சப்த சதியில் நிறைய பெண்புலவர்களைக் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும், அவ்வையாரும் நிறைய கவிதைகளைப்ப்ழிந்தனர்.  பொழிந்தனர். அவுரரங்க சீப்பின் மகள் ஜெப் உன்னிசாவும்  ஒரு எழுத்தாளர்.

 

உலகின் பல நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் உண்டு. ஆயினும் பழங்கால நாகரீகங்களில் சுமார் நூறு இலக்கியகர்த்தாக்களை கிரேக்க நாட்டிலோ, எகிப்திலோ, சுமேரியாவிலோ, ரோமானிய சாம்ரஜ்யத்திலோ, காண முடியாது. எபிரேய மொழியிலோ சீன மொழியிலோ காணக்கிடைக்காது. அவை எல்லாம் ஆண் ஆதிக்கம் மிக்க சமூகங்கள்.

 

 

ரிக் வேத காலத்தில் 20 பெண்மணிகள் கவிதைகளை எழுதி உபநிஷத காலத்தில் பொதுச் சபை விவாதத்துக்கு — பட்டி மன்றத்துக்கு — வந்த கார்க்கி போன்ற பெண்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. இவர்களுக்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வ்வையார், நப்பசலை, நச்செள்ளை போன்ற பல சங்க இலக்கிய பெண்மணிகளைக் காண்கிறோம்.

 

sarojini 3

நான் காற்று வாங்கப் போனேன்

 

“நான் காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்  — என்று பாடினார் கண்ணதாசன்.

 

தமிழில் கவிதை புனையும் ஆற்றல், சரோஜினிக்கு இருந்திருந்தால்,

 

நான் கணக்குப்போடப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்;

 

அதைக் கேட்டு சொக்கிப் போனார்கள்

ஒரு கவிஞனாகி விட்டேன்.

 

என்று பாடியிருப்பார்.

 

–SUBHAM–

 

யமன் பயன்படுத்தும் அளவுகோல்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No 2979)

padi

Compiled by London swaminathan

Date:17 July 2016

Post No. 2979

Time uploaded in London :– 9-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

reading-jug-large

நாலடியார் என்னும் நூலில் ஒரு அருமையான பாடல் வருகிறது. இது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

 

யமன், ஒரு அளவு கோல் வைத்திருக்கிறானாம். நாம் படி, அல்லது லிட்டர் என்ற அளவுகளை பயன்படுத்துவது போல அவன் தினமும் சூரியன் உதிப்பதை ‘நாழி’ என்னும் அளவாகப் பயன்படுத்தி தினமும் நம் வாழ்நாளை அளந்து கொண்டிருக்கிறானாம். இதைப் படித்தும் கூட நம் வாழ்நாள் தினமும் கழிந்துகொண்டிருப்பதை பலரும் உணருவதில்லை.

 

இதோ அந்தப் பாடல்:-

 

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற

அறஞ்செய் தருடையீஇர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

பொருள்:–

எமன் ஒளிமிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாளை நாள் தோறும் அளந்து, ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராக ஆகுங்கள்! அப்படி ஆகாதவர்கள் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே ஆவர்!

 

நாலடியாரில் இன்னொரு பாட்டில்,

 

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

 

பொருள்:-

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.

 

 

ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

 

 

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

(திருக்குறள் 336)

 

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

 

 

முந்தைய கட்டுரைகள்

 

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? (10 ணொவெம்பெர் 2013)

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969), Date:14 July 2016

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876), Date: 7 June 2016

 

–Subham–

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969)

stony-beach-resized

Written by London swaminathan

Date:14 July 2016

Post No. 2969

Time uploaded in London :– 6-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழில் ஒரு அருமையான பழமொழி இருக்கிறது. கடல் ஓய்ந்த பின்னர் சமுத்திரக்குளியலா? என்று.

 

நம்மில் பலரும் “திரு நாளைப்ப் போவார்” போல வாழ்கிறோம். நல்ல செயல்களை எல்லாம் ஒத்திப் போடுகிறோம். நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறோம். நாளை நம்முடைய முறையோ நமனுடைய (யமனுடைய) முறையோ என்பதை நாம் அறியோம்.

 

நாலடியார் என்னும் புத்தகம் பதினெண் கீழ்க்கணக்கு (18) நூல்களில் ஒன்று. அதில் ஒரு பாடல் இதோ:–

 

பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்த பின் ஆடுதும் என்றாற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு  – நாலடியார்

 

இல் செய் குறவினை நீக்கி – குடும்பத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்துவிட்டு,

 

மற்று அறவினை அறிவாம் என்றிருப்பார் மாண்பு – பின்னர் தர்ம காரியங்களைச் செய்வோம் என்று இருப்போரின் தன்மை,

 

பெருங்கடல் ஆடிய சென்றார்- கடலில் குளிக்கப்போனவன்

ஓசை ஒருங்கு உடன்  அவிந்த பின் ஆடுதும்  என்று அற்று – இந்தக் கடல் அலை ஓசை எல்லாம் நின்றபின் ஆடுவோம் என்று காதிருப்பவனைப் போன்றது..

 

ஒன்றே செய்க, அதுவும் இன்றே செய்க! , அதுவும் நன்றே செய்க!

bengali-blow

முந்தைய கட்டுரை:–

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com

மனைவி சொத்தில் வாழலாமா? (Post No. 2965)

kalai3

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2965

Time uploaded in London :– 14-19

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி சொத்தில் வாழலாமா? மனைவி மூலம் கிடைத்த பணத்தில் வாழவே கூடாது. அது மிக மிக கடைத்தரமானது. அப்படியே கிடைத்தாலும், அதை விஞ்சும் அளவு ஒரு ஆண்மகன் சம்பாதித்துக் காட்டவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே செல்வம்.

 

குந்தித் தின்றால் குன்றும் கரையும்; ஒருவன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவானால், அந்தச் செல்வம் மலை போல இருந்தாலும் கரைந்து போகும் என்பது சான்றோர் வாக்கு.

 

உத்தமம் ஸ்வ ஆர்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம்

அதமம் சேவகாவித்தம் ஸ்த்ரீ வித்தம் அதமாதமம்

 

 

ஸ்வ ஆர்ஜிதம்உத்தமம் – சுயமாக சம்பாதிப்பது மிகச் சிறந்தது

 

பிதுரார்ஜிதம் மத்யமம் – அப்பா விட்டுச் சென்ற சொத்தைப் பெறுவது மத்தியமம் – இடைநிலைப்பட்டது.

 

சேவகாவித்தம் அதமம் – பிறரிடம் உழைத்துச் சம்பாதிப்பது கடைநிலைப்பட்டது ( அதமம்)

 

ஸ்த்ரீ வித்தம் அதமாதமம் – பெண்கள் (மனைவி) மூலம் கிடைத்த சொத்து மிகவும் கீழ்த்தரமானது. அதமத்திலும் அதமம்!

 

பெண்கள் வருமானத்தில் பெற்றோர்கள் வாழ்வதும் கூட பல பிரச்சினைகளை உண்டாக்குவதைக் காண்கிறோம்.

 

பெண்கள், திருமணமாகிப் போனால், தங்களுக்கு வருமானம் நின்று, வாழ்வு இருண்டுவிடுமே என்று கருதி, தி ருமணத்தைப் பல சாக்குகள் சொல்லி தள்ளிப்போட்டு,  சொந்தப் பெண்களின் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறார்கள்.

kalai23

மற்றொரு புறம் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கத் துவங்கிவிட்டால், அவர்கள் ஆட்டம்போடுவது அதிகரிப்பதையும் காண்கிறோம். இஷடப் பட்ட இடத்துக்கு இஷ்டப்பட்ட ஆட்களோடு போய்விட்டு,  இஷட்ப்பட்ட நேரத்துக்கு நள்ளிரவில் வீட்டுக்கு வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேடுகளையும் காண்கிறோம்.

 

மனு ஸ்ம்ருதி சொல்வது போல பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்த முந்தைய சமுதாயம் ஒழுங்குக் கட்டுப்பாடுகளுடன் இருந்தது. பெண்களை மனமகிழ்ச்சியோடு வைக்காத வீடு அடியோடு அழிந்துவிடும், பெண்கள் மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் மட்டுமே தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் என்றும் மனு ஸ்மருதி சொல்லுகிறது. அப்படி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துவிட்டால் பின்னர், அவர்களுக்க் சம்பாதிக்கும் தேவையும் இல்லையே.

 

இன்ன பிற காரணங்களால்தான் மேற் சொன்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் பெண்களின் பணத்தில் வாழ்வது அதமாதமம் என்று சொன்னதுபோலும்!!!

 

–Subham–

 

 

குருவைப் போற்றினால், தூற்றினால் என்ன கிடைக்கும்? (Post No.2964)

vyasa-2

Picture of Veda Vyasa, Guru of the Gurus

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2964

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

குரூன் அப்யர்ச்ய வர்தந்தே ஆயுஷா யசஸா ஸ்ரீயா

ப்ராணினோ ய: அவமன்யன்தே பவந்தி இஹ ச ராக்ஷசா:

–சல்ய பர்வம், மஹா பாரதம்

 

குருவிற்கு பணிவிடை செய்பவனுக்கு ஆயுள், புகழ், செல்வம் ஆகியன வளரும். அவரை மதிக்காத ஜீவன்கள், ராட்சசர் ஆகிறார்கள்.

 

Xxxxx

 

கௌரவிக்கத்தக்கவை எவை?

 

வித்தம் பந்து: வய: கர்ம வித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மான்யஸ்தானானி கரீயோ யத் யத் உத்தரம்

வித்தம்- பணம், பந்து:- உறவு, வய: – வயது, கர்ம: – நல்ல செயல், வித்யா – கல்வி; இந்த ஐந்தும் கௌரவிக்கத்தக்கவை. ஒவ்வொன்றும் ஒன்றைவிட ஒன்று மதிப்புமிக்கவை. அதாவது கல்விக்கே அதிக மதிப்பு.

 

Xxx

Planets2013.svg

தசா புத்தி ஆண்டு விவரம் (க்ரஹ தசா காலக்ரமங்கள்)

 

சூர்ய: ஷட் அப்த: சோமஸ்து தசவர்ஷ உதாஹ்ருத:

குஜஸ்து சப்தவர்ஷாணி ராஹுரஷ்டதச ஸ்ம்ருதா:

 

குரு: சோடஷ வர்ஷாணி சனிரேகோனவிம்சதி:

புதஸ்சப்தா தச அப்தானி கேதுஸ்சப்தாப்தக: ஸ்ம்ருத:

சுக்ரோ விம்சதி வர்ஷாணி தசவர்ஷா: ப்ரகீர்த்திதா:

 

சூரியன் – 6 ஆண்டுகள், சந்திரன் – 10, செவ்வாய் – 7, ராஹு- 18, குரு – 16, சனி -19, புதன் -17, கேது– 7, சுக்ரன் – 20  ஆண்டுகள் என்று அறிக.

 

மொத்தம் கூட்டினால் 120 ஆண்டுகள் வரும். இதுதான் மனிதனின் உமுழு ஆயுள். ஆனால் வேதங்களில் நூறு ஆண்டுகள் என்று சொல்லுவர். இந்துக்கள்தான் உலகிற்கு டெசிமல் சிஸ்டத்தைக் கற்பித்தார்கள். ஆகவே 100, 1000, லட்சம் என்று முழு நம்பராக (ரவுண்ட் நம்பர் ) சொல்லுவது வழக்கம். சஹஸ்ர நாமம் என்போம். ஆனால் உண்மையில் அஷ்ட உத்தர சஹஸ்ர நாமம் (8+1000), அஷ்ட உத்தர சத (8+100) 108 ஆகும்.

 

Xxxx Subham xxxx

 

 

புஸ்தகம், வனிதா, வித்தம் -கதம்!கதம்!! (Post No.2961)

klai add2

Article Written by London swaminathan
Date: 11 July 2016
Post No. 2961
Time uploaded in London :– 8-40 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு அருமையான சம்ஸ்கிருத பாடல்/ஸ்லோகம்
கொடுக்கக்கூடாதவை
புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்த கதம் கதம்
அதவா புனராகச்ச ஜீர்ணம் ப்ரஷ்டா ச கண்டச:
புஸ்தகம் -நூல்
வனிதா –பெண்மணி
வித்தம் –பணம்
பரஹஸ்த –பிறர்கைக்கு
கதம் கதம் போனால் போனதுதான்!
அதவா புனராகச்ச -அல்லது திரும்பி வந்தால்
ஜீர்ணம் – திரும்பி வந்தால்
ப்ரஷ்டா ச கண்டச: — விலக்கப்படவேண்டியது, துண்டாக்கப்பட்டது (நன்கு பயன்படுத்தப்பட்டது)
இந்தப் பாடலுக்கு விளக்கமும் வேண்டுமோ!!
xxx

 

flame-of-the-forest-palasa

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத்தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

இஹ்தே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:
வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:

xxx

field green,fb

எதைக் கைவிடலாம்?
இந்தப் பாடலை முன்னரே கொடுத்துள்ளேன்:-
தன்னுடைய குலத்துக்காக ஒருவரை தியாகம் செய்யலாம்; (த்யஜேத் – விட்டுவிடு)

ஒரு கிராமத்தையே காப்பாற்ற ஒரு குலத்தையே விட்டுவிடலாம்

ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தையே விடலாம்;
தன்னைக் காப்பாற்ற உலகையே விடலாம் (தனது ஆன்மீக முன்னேற்றத்துக்காக உலகத்தையே துறக்கலாம்).

த்யஜேத் குலார்த்தே புருஷம் க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹ்யாத்மனார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்
-ஸபா பர்வம், மஹாபாரதம்

–SUBHAM–

தமிழா! மரம் நடு! குளம் தொடு!! (Post No.2955)

tree planting, fb

Written by London swaminathan

Date: 9 July 2016

Post No. 2955

Time uploaded in London :– 10-00 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இன்று மரம் நடுதல், நீர்நிலைகளை உருவாக்கல் (ஏரி தூறு எடுத்தல், கிணறு வெட்டுதல்) முதலியவற்றைப் பெரும் விளம்பரத்தோடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த புறச் சூழல் விழிப்புணர்வும் இயற்கைப் பாதுகாப்பும் நம் நாட்டில் இருந்தது. குறிப்பாகத் தமிழர்கள் இது பற்றிப் பாடி வைத்துள்ளனர். அதற்கு முன்னர் உலக மஹா கவிஞன்  காளிதாசனும் இதைப் பாடிவைத்துள்ளான்.

 

காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்

கலை வளர்ப்போம்; கொல்லர் உலை வளர்ப்போம்

ஓவியம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்;

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்

 

என்று காடு வளர்ப்பு பற்றி பாரதி பாடும் முன்னரே, வேறு பல கவிஞர்களும் பாடிவைத்தனர்.

tree planting 2

குளம்தொட்டுக் கோடுபதித்து வழிசீது

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி — வளம்தொட்டுப்

பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது.

 

–சிறுபஞ்சமூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்

 

1)நீர்நிலைகலை உருவாக்கி,

2)அவைகளைச் சுற்றி மரக்கிளைகளை நட்டு,

3)மக்கள நடக்கும் வழியை உண்டாக்கி,

4)தரிசான நிலத்தில் உள்ள இடத்தைச் செம்மைப் படுத்தி வயலாக ஆக்கி  வளப்படுத்தி,

5)சுற்றுப்சுறுபுறத்தில் சுவர்களுடன் கிணற்றைத் தோண்டி உதவுபவன் — இந்த ஐந்தையும் செய்பவன் — சுவர்க்க லோகம் புகுவான்.

 

இன்னும் ஒரு பாடல்

 

நீரறம் நன்று நிழல் நன்று தன்னில்லுள்

பாரறம் நன்றுபார்த்து உண்பானேல் — பேரறம்

நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்

ஒன்றுமாம் சாலவுடன்.

tree planting

நீர் அளிக்கும் அறம் நன்று (அப்பூதி அடிகள், 1400 ஆண்டுகளுக்கு முன்அ, ப்பர் பெயரில் தண்ணீர்ப்பந்தல் வைத்தது போல)

 

தன் வீட்டில் மற்றவர் தங்க இடம் கொடுத்து உதவும் தர்மமும் நல்லது;

மற்ற உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்பானால் அதுவும் நன்று (பஞ்ச யக்ஞம்– ஐவேள்வி — என்பது, இந்துக்கள் தினமும் செய்வது, காண்க குறள் -43);

 

கோயிலுடன், மரங்கள் அர்டர்ந்த சாலையை அழியாதபடி நிலைபெறச் செய்வது மிக நல்ல தர்மம்;

 

இந்த ஐந்தையும் செய்தால் பேரின்பம் ஏற்படும் (பேரின்பம் = பிரம்மானந்தம்).

 

காளிதாசன் சொன்னது:–

திலீபன் என்னும் மன்னன் கிராமப்புறம் வழியாகப் பயணம் செய்தான்; அரசன் வருவதை அறிந்த வயதான இடைக்குலப் பெரியோர்கள், அரசனை வெறும் கையோடு பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்லுவதால், புத்துருக்கு நெய்யோடு (புதிதாகக் காய்ச்சி உருக்கப்பட்ட நெய்) அவனைச் சந்தித்தார்கள். அரசனோ மஹா அறிவாளி. இடைச் சேரிக்கிழவர்களுடன் என்ன பேசுவது? அவர்களோடு பேசுவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டுமல்லவா? ஆகையால் மரங்களின் பெயர்களை எல்லாம் விசாரித்தானாம். —காளிதாசனின் ரகுவம்சம் 1-45

 

(என்னைவிட உங்களுக்கு இதில் அறிவு அதிகம் என்று மன்னனே ஒத்துக்கொண்டதால் இடையர்கள் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பர். மன்னனுக்கு மரங்கள் பற்றிக்கூட அறிந்துகொள்ளும் வழக்கம் அக்கலத்தில் இருந்தது).

 

இன்னும் ஒரு பாடல்

 

மரத்தை மகன் போல வளர்த்த குறிப்பு மேகதூதத்தில் வருகிறது. மரத்தை சகோதரி போல நினைப்பது தமிழில் நற்றிணையில் வருகிறது.

well pazum kinaru, kodunkaal

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாமல் சகுந்தலை சாப்பிட மாட்டாள் என்று சாகுந்தலம் செப்பும்.

 

முல்லைக் கொடியில் எவனாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற உவமையை காளிதாசன் சாகுந்தலத்தில்கு பயன்படுத்துவான்.

விஷமரத்தையும் கூட வெட்டக்கூடாது என்று குமார சம்பவத்தில் பாடுகிறான்.

மரங்களை வெட்டாதே என்று காரிக்கண்ணனார் பாடுகிறார் (புறநானூறு 57)

 

–சுபம்–

 

 

 

கோபக்காரர்கள் நான்கு வகை! (Post No.2951)

angry-status

Article Written by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2951

Time uploaded in London :– 8-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

fight-scenes-290x300

நான்கு வகையான கோபக்காரர்கள் இருக்கிறார்கள். இதை ஒரு சம்ஸ்கிருதப் பாடல் அழகாக வருணிக்கிறது. உலகில் சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை.

 

பழங்கால மொழிகளில் சம்ஸ்கிருதத்துக்கு இணையான மொழி எதுவுமே இல்லை. கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரூ), சீனம், லத்தின், தமிழ் ஆகிய எல்லா மொழி வரலாறுகளையும் படித்த என் போன்றோருக்கு இது உள்ளங்கை நெல்லிக் கனி போலத் தெரியும். செக்ஸ், மருத்துவம், நாட்டியம், இசை, இலக்கணம், சட்டம், நாடகம், காப்பியம்,சமய இலக்கியம், தத்துவம், மொழி இயல், அகராதி இயல், இதிஹாச, புராணம் ஆகிய எல்லாவற்றிலும் உலக மொழிகளில் முதலிடம் வகிப்பது சம்ஸ்கிருதம். இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வருவது கிரேக்க மொழி மட்டுமே. ஆனல் அதில் கி.மு 800-க்கு முன் எதுவுமே கிடையாது. அதற்குப்பின்னர் ஓரளவு எல்லா விஷயங்களும் உள்ள மொழி. அதிலும் கூட பாணிணீய இலக்கணம், காமசூத்திரம், மனுதர்ம சாத்திரம், பரதம் போன்ற நூல்கள் இல்லை.

 

தமிழ் மொழியில் கி.மு. 300க்கு முன் எதுவும் இல்லை. அப்படிக்கிடைத்த விஷயங்களிலும் சம்ஸ்கிருதம் கலந்து இருக்கிறது.தமிழ்க் கல்வெட்டுகளும் இந்தக்காலத்துக்குப் பிந்தியவையே. ஆனால் சம்ஸ்கிருதச் சொற்களுடன் உள்ள கல்வெட்டுகள் கி.மு. 1400 லிருந்து நிறைய கிடைக்கின்றன.

young-angry-man-52068682

கோபக்கரரர்கள் நான்கு வகை

 

உத்தமே ச க்ஷணம் கோப: மத்யமே கடிகாத்வயம்

அதமே ஸ்யாத் அஹோராத்ரம் பாபிஷ்டே மரணாந்தக:

 

கடிகா என்றால் 24 நிமிடங்கள்

க்ஷணம் என்றால் ஒரு நொடி/வினாடி

 

முதல்தரமான மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதுதான் கோபம் நீடிக்கும். இதை வள்ளுவனும்

 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்தல் அரிது – குறள் 29

 

நொடி= க்ஷணம்= கணம்

 

குணக்குன்றாக விளங்கும் முதல்தர (உத்தம) மக்களிடையே கோபம், ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்துவிடும்.

 

இதற்கு அடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் கோபம் இரண்டு கடிகை (48 நிமிடங்கள்) இருக்கும்.

 

கடைத்தரத்திலுள்ளோர் கோபம் ஒரு நாள் முழுவதும் — 24 மணி நேரம் — நீடிக்கும். இதை சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ரம் (பகல்+ இரவு) என்பர்.

 

ஆனால் பாபிகளுக்கோ வாழ்நாள் முழுவதும் கோபம் நீடிக்கும். அதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் மனதில் கரு வைத்திருப்பவன் மஹா பாவி.

 

இந்த நான்கு வகைகளில் நாம் முதல் வகையைச் சேர்ந்திருப்பது நல்லது.

 

முனிவு என்றாலும் கோபம். அந்த முனிவை வென்றவரே முனிவர் என்றும் ஒரு விளக்கம் உளது.

 

ரிஷி, முனிவர்களின் கோபம் பற்றி காளிதாசன் ரகுவம்சத்தில் (5-54) மிக அழகாகச் சொல்லுகிறான்:

 

” நான் அவர் (மதங்க முனிவர்)  பாதத்தில் வணங்கி அவருடைய கோபத்தை நீக்கினேன். அவர் சாந்த சுபாவத்தை அடைந்தார். நீரின் இயற்கைக் குணம் குளிர்ச்சியாகும்.  நெருப்பு, வெய்யில் இவைகளால்தான் அது சூடாகிறது. அது போல மஹரிஷிகளின் இயற்கைக் குணம் குளிர்ச்சிதான் (சாந்தம்). ஏதேனும் ஒரு தக்க காரணதால்தான் அது கோபம் அடையும்” (ரகு வம்சம் 5-54).

 

 

இதைத்தான் வள்ளுவனும் சொன்னான். வள்ளுவன் பயன்படுத்தும் கணம், குணம் முதலியன சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

 

மனு சொல்லுகிறார்; கோபத்தால் எட்டு தீய குணங்கள் வரும் என்று (7-48)

angry-woman

கோபத்தால் வருபவை எட்டு

 

பைசுனம் சாஹசம் த்ரோஹ ஈர்ஷ்யா அசூயா அர்த்ததூஷணம்

வாக்தண்டஜம் ச பாருஷ்யம் க்ரோத ஜனோபி கணோஷ்டக:

மனு 7-48

 

கோபத்திலிருந்து பிறக்கும் எட்டு தீய குணங்கள்:– அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.

வள்ளுவன் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் கோபம் பற்றி பத்து குறள்கள் பாடியிருப்பதை இவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்

 

 

கோபம் பற்றிய முந்தைய கட்டுரைகள்:–

தன்னையே அழிக்கும் கோபம் , சம்ஸ்கிருத செல்வம் , கட்டுரை 20, (எழுதியவர் நாகராஜன்), தேதி 28-1-2014

கோபக்காரர்களை வெல்வது எப்படி? (Article: Written by London swaminathan

Date: 14th September 2015)

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது! சீனக் கதை!! (Post No. 2405)

Date: 19 December 2015

 

Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568)

Compiled  by London Swaminathan, Date: 23 February 2016

 

When angry, count a hundred! (Post No 2565), Date: 22 February 2016

 

Conquer Evil Doers by Saintliness, Anger by peacefulness (Post No. 2839)

Date: 25 May 2016

Sringeri Acharya’s Advice on Anger Management! Compiled  by London Swaminathan,  Date: 22 September 2015

–Subham–