Hindu Baby Names and Astrology! (Post No.2968)

babay, mother

Compiled by London swaminathan

Date:13 July 2016

Post No. 2968

Time uploaded in London :– 17-01

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Following piece is an interesting excerpt from a 100-year-old book written by a Muslim scholar: –

 

“It is a Girl! Girl! Cries the nurse. As she is not a boy you will be prepared to learn that the same sort of rejoicings does not usher her into this world of sunshine and storm as would greet the arrival of a boy. Why is this? Does that mean that the birth of a girl is supposed to be a calamity perhaps, speaking only of the unregenerate, unimaginative classes, it may be so; but you must not on that account put down the Hindus as an ungallant race, insensible to the charms of the gentler sex.

 

In their mythology there is the story of the churning of the ocean by gods and demons; and of the fourteen gems they produced, none was more valuable, none more dazzling, than the bright, smiling, tender-eyed Sri – Sri, the lotus-born Goddess of Fortune, wealth and beauty, the type of Indian womanhood. On the other hand, we must remember that a on implies much more in Hindu ideas and Hindu law than he does in other social systems. A son in Hindu parlance is often called the giver of immortality. The idea is that the parent never attains to the higher life after he completes his life in this world, unless he has left a son who can perform his funeral obsequies and give offerings to the gods, which alone give him admission amongst the immortals. Thus it will be understood that the advent of a son means something that affects the whole of the immortal life of a man after he finishes his worldly existence.

 

The advent of a girl to a certain extent also means that, but it means for other people; because the girl when she is married goes into another family, and all her virtues and all her greatness are, as it were imputed to that other family of which she becomes a member. Therefore, to the ordinary Hindu family, the birth of a girl, irrespective of how much they may in their frailty have wished for a girl, is not an event off the same importance, or an occasion for the same rejoicings, as would usher in the birth of a boy.

After the sweets are distributed and the congratulations have been tendered to the boy-husband and his parents, there is a horde of dependents whose claims have to be satisfied in hard cash. There is another set of people who have the privilege of looking at the child’s face- at the price of some gifts to the nurse and members of the family. He law of compensation is so strong in Indian social life. Wherever gifts have to be offered, gifts are received to a nearly equal amount. The successful social leader is the one who contrives that balance of gifts is always in his or her own favour.

Planets2013.svg

Hindus – Astrological Race!

The Hindus are an extremely astrological race. They can do nothing in life without consulting the stars. Perhaps this partly accounts for the want of punctuality noted as a glaring defect in Indian character. There is an old story of a stately Raja who was invited to a party on a certain day and arrived two days afterwards. It was not that he had missed the train, for he travelled with a train of chariots, horses, and elephants. The fact was that at the time when he should have started, the ruling planet was unfavourable and he had to wait until the wicked planet had got out of his way and a luckier planet had come to rule.

 

The Sun, Mars and Saturn, are unlucky planets (the sun being a planet in Hindu astronomy), while Venus, the Moon, Mercury and Jupiter are lucky planets.

The Hindu almanac shows for each day of the week minute sub divisions of time which have different astrological characters. One ‘ghari’ is good for business, another is mortal, for it will kill you if you challenge it. A third is fraught with a happy issue to all you undertake, and a fourth with affliction. There are some gharis which are neutral; you may do things if you are compelled to do them, but not if you are free. Hence in some circumstances compulsion is welcomed; for the compulsion converts the ill luck into luck for the person compelled – but woe betide the person who compels, for doubles his own sorrow!

 

Such being the ideas that affect life, it is most important that the precise time of girl’s birth should be carefully noted, for on it will depend her name, her marriage, and her whole future destiny. Her horoscope is made out and ruling planet and the cast of the stars carefully determined and recorded. Not only must the favourable planet be known, as pointing out her gifts and virtues, but the star in opposition is equally important, because on that would depend her conduct towards those whom she has any reason to suspect as enemies. Then a number of minor stars and asterisms will have to be noted as they aid or warp the influence of the guiding stars and planets. When the configuration of the heavens at the moment of birth is completely and accurately recorded, the Brahma or the Pandit will be able to construct exactly the history of that child from the moment of its birth to the it will have to be called away. Is such history true?

 

That reminds me the story of a man who was to have died at forty. In his forty fifth year he was still alive, and suspecting that there was something untoward in the heavens, he sent for the learned Pandit who had read the horoscope and asked him to account for the discrepancy. The Pandit was a cynic and answered by a question, “What did you pay for your horoscope?”

 

Fortune-telling apart, the horoscope has important practical results. No name can be given to the child until the horoscope has been scanned and studied.

 

azaki with metal pot

What is in a name?- why the whole history of a Hindu woman.

Just as the stars dictate her destiny they also dictate her name. it is true that a name is often informally given which is a pet name, and in fact most of the Hindu women have two sets of names. One name is the name by which they are vulgarly called, but the other name, the true name, is the astrological name, the name which you must know before you are able to reason about her qualities or about her destinies, either In this world or in the next. This ordinary name is the apparently important name, but the ‘rash’i name does not figure in actual life because it is too sacred to be defiled by daily use. The ‘rashi’ name is known to the parents, of course, and the priest, but not to the child itself until she is grown up sufficiently to understand it and sometimes not at all.

 

The giving of a name is attended with ceremonies, religious and social and the exact time when it must be given is determined by astrological rules the auspicious moment having been chosen, the girl grows and thrives – not only as the child of the family, but as the child of the whole neighbourhood. The children are gregarious in India, and except for very small babies, who ride astride the mother’s wats, the office of motherhood is usually in commission”.

 

Source : Life and Labour of the People of India by Abdullah Yusuf Ali, Barrister at Law, London, 1907

–subham–

 

வீடியோ விளையாட்டுகள் ஆபத்தானதா? (Post No.2967)

Girl playing video games

Article Written S NAGARAJAN

Date: 13 July 2016

Post No. 2967

Time uploaded in London :– 5-42 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

15-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
குழந்தைகள் விளையாடும் வீடியோ மூளை விளையாட்டு ஆபத்தானதா?
ச.நாகராஜன்

“வீடியோ விளையாட்டுக்களின் முக்கிய குறிக்கோள், மக்களுக்கு புதிய அனுபவங்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி அவர்களுக்கு மன மகிழ்ச்சியை ஊட்டுவது தான்! – ஷிகெரு மியாமோடோ

உலகில் தற்போதுள்ள குழந்தைகளில் ‘வீடியோ கேம்ஸ்’ விளையாடாத குழந்தைகளே இல்லை. கணினியிலும் ஐ-பாடிலும் ‘மைன் க்ராஃப்ட்’ உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடும் குழந்தைகளை அதிலிருந்து மீட்டு சாப்பிடவோ, படிக்கவோ வைக்க எந்தத் தாய்மர்களாலும் லேசில் முடிவதில்லை.
இப்படி விளையாடினால் குழந்தைகள் கதி என்ன ஆகுமோ என்ற கவலை அவர்களுக்கு உண்டு.
அவர்களுக்கு ஒரு நற்செய்தி!
குழந்தைகள் விளையாடும் மூளை விளையாட்டுக்கள் ஆபத்தை விளைவிக்காது என்கிறது அறிவியல் சோதனை. ஜூலை 2016 ஸயிண்டிபிக் அமெரிகன் இதழில் உளவியல் விஞ்ஞானிகளான டப்னி பவேலியர் மற்றும் சி, ஷான் க்ரீன் (Daphne Bavelier & C.Shawn Green) ஆகியோர் இந்த வீடியோ கேம்கள் பற்றித் தரும் ஆய்வறிக்கைத் தகவல்கள் சுவையானவை.
துரித விளையாட்டுக்கள் என்று சொல்ல்ப்படும் ஷீட்டிங் விளையாட்டுக்களில் சிறுவர்கள் அபாரமான ஈடுபாட்டைக் காண்பிக்கின்றனர். இந்த விளையாட்டு மூளையில் சில பகுதிகளை நன்கு செயல்படச் செய்கின்றன என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
இந்த விளையாட்டுக்களினால் கவனம் சிதறாமல் குவிக்கப்படும் தன்மை வளர்கிறது. ஒரு விளைவு ஏற்படும் போது அதற்கான எதிர் விளைவுக்குத் தயார் செய்து கொள்வதை இது வளர்க்கிறது. அத்தோடு ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு உடனே மாறும் அபாரமான திறமையை வளர்க்கிறது.

 
இந்த விளையாட்டுக்களில் துப்பாக்கியை வைத்துச் சுடும் வன்முறைகள் உள்ளனவே, அவற்றால் குழந்தைகள் கெட்டுப் போக மாட்டார்களா என்ற கேள்வி எழுவதைச் சுட்டிக் காட்டும் அவர்கள், “அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம், அப்படிப்பட்ட துப்பாக்கி சுடுவது இல்லாத விளையாட்டுக்கள் ஏராளமாக உள்ளன. இனிமேலும் அது போல வன்முறையற்ற அதி சுவாரசியமான விளையாட்டுக்கள் குழந்தைகளுக்காகத் தோன்றும் வகையில் இந்த விளையாட்டுக்கள் ஒரு மேம்பாட்டிற்கு வழி வகுத்து விட்டன” என்கின்றனர்.

2 Girls playing video game
ல்யூமாஸிடி, காக்மெட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற மூளை விளையாட்டுக்களை சுமார் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கின்றன. இந்த விளையாட்டுக்கள் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகளாலேயே உருவாக்கப்பட்டதாக அவை கூறுகின்றன. இவற்றை விளையாடுவதால் நினைவாற்றல் கூடும், எதையும் வெகு சீக்கிரமாக கிரகித்து செயல்படலாம், பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி மேம்படுகிறது, ஏன், சில வயதானவர்க்ள் இந்த விளையாட்டை விளையாடினால் அவர்களது மறதி நோய் எனப்படும் அல்ஜெமிர் நோயே தீர்கிறது என்கின்றன அந்த நிறுவனங்கள்!.
இந்த விளையாட்டுக்களை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நியூரோ-ஸயிண்டிஸ்டுகளே உருவாக்கியுள்ளதாகவும் அவைக்ள் தெரிவிக்கின்றன.
வீடியோ விளையாட்டுக்களைப் பற்றி ஏராளமான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
‘ஸ்டார் க்ராஃப்ட்’ என்று ஒரு விளையாட்டு உள்ளது. இதை விளையாடினால் மூளையின் செயலாற்றல் கூடுகிறது என்பதை லண்டனில் உள்ள க்வீன் மேரீஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் சோதனைகளில், இந்த விளையாட்டை விளையாடுவோர் மிக சுலபமாக, மிகுந்த வேகத்துடன் துல்லியமாக அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதை ஆய்வாளர்கள் கண்டனர்.
வயதானவர்கள் இதை விளையாடும் போது என்ன நிகழ்கிறது?

 

50 வ்யதுக்கு மேற்பட்ட 681 பேரிடம் பத்து மணி நேரம் மூளை விளையாட்டை விளையாடுமாறு சொல்லப்பட்டது. அவர்களது மூப்படையும் தன்மை நிறுத்தப்பட்டதைக் கண்டு ஆய்வை நடத்தியவர்கள் அசந்து போனார்கள். அவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவினர் குறுக்கெழுத்துப் போட்டியை மேற்கொள்ள இன்னொரு பிரிவினர், ‘ரோட் டூர்’ என்ற கணினி விளையாட்டை மேற்கொண்டனர். வாகனங்களின் பாகங்களின் வெட்டப்பட்ட படங்களை அவர்கள் செல்லுகின்ற வழிகளில் உள்ள சாலை குறியீட்டு அடையாளங்களுடன் இணைத்து மிக சிக்கலான பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை ஒழுங்குபடுத்துவதே விளையாட்டு. ஒரு டிரைவருக்கு நெடுஞ்சாலையில் ஏற்படும் பிரச்சினைகளை, இந்த விளையாட்டு சிக்கலுடன் எடுத்துக் காட்டுகிறது. இதை விளையாடுபவர்கள் மூளை ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அவர்களது ஆற்றல் கூடியது.
இத்தாலியில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று மூளை விளையாட்டை விளையாடிய படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் பின்னர் படிப்பதில் ஆர்வம் கொண்டதை எடுத்துக் காட்டியது.
2010ஆம் ஆண்டு அமெரிக்கன் பெய்ன் சொஸைடி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவோருக்கு வலி குறைவதைக் கண்டறிந்தது. மிக அதிக வலியைத் தரும் கீமோதெராபி, தீக்காயங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் இந்த விளையாட்டால் வலி குறைந்து நிவாரணம் அடைந்தனர்.
ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் விசித்திரமான ஒரு ஆய்வை மேற்கொண்டது. ‘கால் ஆஃப் டியூடி’ என்று ஒரு விளையாட்டு. இதில் எதிரிகள் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதோடு திடீர் திடீரென்று தோன்றுவர். அவர்களைக் கண்டு பிடித்து வெல்ல வேண்டும். இதை விளையாடிவர்களின் கண் பார்வை மேம்பட்டதை ஆய்வு எடுத்துக் காட்டியது!
டெல் அவி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று பக்கவாதத்தால் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டோர் மூளை விளையாட்டை மேற்கொண்டவுடன் பேச முடிந்ததை எடுத்துக் காட்டியது.
ஆக சிறுவர்கள் முதல் முதியோர் வரை இந்த மூளை விளையாட்டுக்களால் நல்ல பயன்களையே பெறுகின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்து வருகின்றன.
என்றாலும் அளவுக்கு மீறினால் எதுவும் ஆபத்தே என்ற பழைய மொழியுடன் புதிய அறிவியல் முடிவுகளையும் இணைத்துக் கொண்டு இவற்றை விளையாடி ‘புத்திசாலிகள்’ ஆகலாம் என்பதே உண்மை!.

 

stanley_wendell

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
வைரஸ் என்றாலே அனைவரும் பயந்து ஓடுவார்கள். வாழ்நாள் முழுவதும் வைரஸ்களுடனேயே இருந்து அவற்றை ஆராய வேண்டும் என்றால் எவ்வளவு தைரியம் வேண்டும்! அந்த தைரியத்தைக் கொண்டு வைரஸ் பற்றி ஆராய்ந்து இரசாயனத்திற்கான நோபல் பரிசை 1946 ஆம் ஆண்டு பெற்ற மேதை தான் வெண்டெல் ஸ்டான்லி. (Wendell Stanley) (தோற்றம்: 16-8-1904 மறைவு :15-6-1971)
வைரஸ் பற்றிய எந்த சந்தேக்ம் என்றாலும், நிபுணர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நாடும் ஒரே அமெரிக்கர் இவர் தான்! வைரஸ்கள் பற்றி 150க்கும் மேலான அற்புதமான ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். இவரது கெமிஸ்ட்ரி : ஏ ஃபியூடிஃபுல் திங்” என்ற நூல் பிரபலமானது.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த சமயம். ஒரு நாள் கலிபோர்னியா பல்கலை கழகத் தலைவர் ராபர்ட் ஸ்ப்ரௌல் (Robert Sproul) விமானம் ஒன்றில் அமெரிக்காவில் பயணித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் ஸ்டான்லியும் இன்னொரு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஏற்பட்ட பனிப்புயல் ஒன்றினால் இரு விமானங்களும் ஓரிடத்தில் தரை இறங்கின. தற்செயலாக இருவரும் அங்கே சந்திக்க நேர்ந்தது. பயோகெமிஸ்ட்ரிக்கென தனியாக ஒரு பிரிவு வேண்டும் என்பது ஸ்டான்லியின் ஆசை. இருவரும் பேசிக் கொண்டிருந்த போது அதை ஸ்டான்லி சொல்ல, ‘அதெற்கென்ன, உடனே வாருங்கள், ஆரம்பித்து விடலாம்” என்றார் ராபர்ட்.
உடனே பெர்க்லி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவரானார் ஸ்டான்லி.
அங்கு படிக்க வரும் அனைவருக்கும் தவறாமல் இந்த சம்பவம் சொல்லப்படுமாம். இதைக் கேட்டு மகிழாத ஆராய்ச்சியாளரே பெர்க்லியில் இல்லையாம்!
ஒரு பனிப்புயல் சந்திப்பு பெரிய ஒரு பிரிவை ஆரம்பிக்கக் காரணமானது. பெர்க்லியில் இரசாயன அறிஞர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடுவது வழக்கமானது!
சிறிய நிகழ்வுகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது உண்மையே!
**********
 

 

மனைவி சொத்தில் வாழலாமா? (Post No. 2965)

kalai3

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2965

Time uploaded in London :– 14-19

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி சொத்தில் வாழலாமா? மனைவி மூலம் கிடைத்த பணத்தில் வாழவே கூடாது. அது மிக மிக கடைத்தரமானது. அப்படியே கிடைத்தாலும், அதை விஞ்சும் அளவு ஒரு ஆண்மகன் சம்பாதித்துக் காட்டவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே செல்வம்.

 

குந்தித் தின்றால் குன்றும் கரையும்; ஒருவன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவானால், அந்தச் செல்வம் மலை போல இருந்தாலும் கரைந்து போகும் என்பது சான்றோர் வாக்கு.

 

உத்தமம் ஸ்வ ஆர்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம்

அதமம் சேவகாவித்தம் ஸ்த்ரீ வித்தம் அதமாதமம்

 

 

ஸ்வ ஆர்ஜிதம்உத்தமம் – சுயமாக சம்பாதிப்பது மிகச் சிறந்தது

 

பிதுரார்ஜிதம் மத்யமம் – அப்பா விட்டுச் சென்ற சொத்தைப் பெறுவது மத்தியமம் – இடைநிலைப்பட்டது.

 

சேவகாவித்தம் அதமம் – பிறரிடம் உழைத்துச் சம்பாதிப்பது கடைநிலைப்பட்டது ( அதமம்)

 

ஸ்த்ரீ வித்தம் அதமாதமம் – பெண்கள் (மனைவி) மூலம் கிடைத்த சொத்து மிகவும் கீழ்த்தரமானது. அதமத்திலும் அதமம்!

 

பெண்கள் வருமானத்தில் பெற்றோர்கள் வாழ்வதும் கூட பல பிரச்சினைகளை உண்டாக்குவதைக் காண்கிறோம்.

 

பெண்கள், திருமணமாகிப் போனால், தங்களுக்கு வருமானம் நின்று, வாழ்வு இருண்டுவிடுமே என்று கருதி, தி ருமணத்தைப் பல சாக்குகள் சொல்லி தள்ளிப்போட்டு,  சொந்தப் பெண்களின் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறார்கள்.

kalai23

மற்றொரு புறம் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கத் துவங்கிவிட்டால், அவர்கள் ஆட்டம்போடுவது அதிகரிப்பதையும் காண்கிறோம். இஷடப் பட்ட இடத்துக்கு இஷ்டப்பட்ட ஆட்களோடு போய்விட்டு,  இஷட்ப்பட்ட நேரத்துக்கு நள்ளிரவில் வீட்டுக்கு வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேடுகளையும் காண்கிறோம்.

 

மனு ஸ்ம்ருதி சொல்வது போல பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்த முந்தைய சமுதாயம் ஒழுங்குக் கட்டுப்பாடுகளுடன் இருந்தது. பெண்களை மனமகிழ்ச்சியோடு வைக்காத வீடு அடியோடு அழிந்துவிடும், பெண்கள் மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் மட்டுமே தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் என்றும் மனு ஸ்மருதி சொல்லுகிறது. அப்படி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துவிட்டால் பின்னர், அவர்களுக்க் சம்பாதிக்கும் தேவையும் இல்லையே.

 

இன்ன பிற காரணங்களால்தான் மேற் சொன்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் பெண்களின் பணத்தில் வாழ்வது அதமாதமம் என்று சொன்னதுபோலும்!!!

 

–Subham–

 

 

குருவைப் போற்றினால், தூற்றினால் என்ன கிடைக்கும்? (Post No.2964)

vyasa-2

Picture of Veda Vyasa, Guru of the Gurus

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2964

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

குரூன் அப்யர்ச்ய வர்தந்தே ஆயுஷா யசஸா ஸ்ரீயா

ப்ராணினோ ய: அவமன்யன்தே பவந்தி இஹ ச ராக்ஷசா:

–சல்ய பர்வம், மஹா பாரதம்

 

குருவிற்கு பணிவிடை செய்பவனுக்கு ஆயுள், புகழ், செல்வம் ஆகியன வளரும். அவரை மதிக்காத ஜீவன்கள், ராட்சசர் ஆகிறார்கள்.

 

Xxxxx

 

கௌரவிக்கத்தக்கவை எவை?

 

வித்தம் பந்து: வய: கர்ம வித்யா பவதி பஞ்சமீ

ஏதானி மான்யஸ்தானானி கரீயோ யத் யத் உத்தரம்

வித்தம்- பணம், பந்து:- உறவு, வய: – வயது, கர்ம: – நல்ல செயல், வித்யா – கல்வி; இந்த ஐந்தும் கௌரவிக்கத்தக்கவை. ஒவ்வொன்றும் ஒன்றைவிட ஒன்று மதிப்புமிக்கவை. அதாவது கல்விக்கே அதிக மதிப்பு.

 

Xxx

Planets2013.svg

தசா புத்தி ஆண்டு விவரம் (க்ரஹ தசா காலக்ரமங்கள்)

 

சூர்ய: ஷட் அப்த: சோமஸ்து தசவர்ஷ உதாஹ்ருத:

குஜஸ்து சப்தவர்ஷாணி ராஹுரஷ்டதச ஸ்ம்ருதா:

 

குரு: சோடஷ வர்ஷாணி சனிரேகோனவிம்சதி:

புதஸ்சப்தா தச அப்தானி கேதுஸ்சப்தாப்தக: ஸ்ம்ருத:

சுக்ரோ விம்சதி வர்ஷாணி தசவர்ஷா: ப்ரகீர்த்திதா:

 

சூரியன் – 6 ஆண்டுகள், சந்திரன் – 10, செவ்வாய் – 7, ராஹு- 18, குரு – 16, சனி -19, புதன் -17, கேது– 7, சுக்ரன் – 20  ஆண்டுகள் என்று அறிக.

 

மொத்தம் கூட்டினால் 120 ஆண்டுகள் வரும். இதுதான் மனிதனின் உமுழு ஆயுள். ஆனால் வேதங்களில் நூறு ஆண்டுகள் என்று சொல்லுவர். இந்துக்கள்தான் உலகிற்கு டெசிமல் சிஸ்டத்தைக் கற்பித்தார்கள். ஆகவே 100, 1000, லட்சம் என்று முழு நம்பராக (ரவுண்ட் நம்பர் ) சொல்லுவது வழக்கம். சஹஸ்ர நாமம் என்போம். ஆனால் உண்மையில் அஷ்ட உத்தர சஹஸ்ர நாமம் (8+1000), அஷ்ட உத்தர சத (8+100) 108 ஆகும்.

 

Xxxx Subham xxxx

 

 

கர்ம பலன்கள்: சித்திரகுப்தன் கணக்கு (Post No.2963)

laew of karma 2

 

Article Written S NAGARAJAN

Date: 12 July 2016

Post No. 2963

Time uploaded in London :– 6-25 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!

ச,நாகராஜன்
ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யா பெரும் காயத்ரி உபாசகர். அவர் ஏராளமான அற்புத நூல்களை எழுதியுள்ளார். அனைத்தும் பொக்கிஷம். அவற்றைப் படித்தவர்கள் பாக்கியவான்கள்.
இயற்கை மர்மத்தை ஹிந்து மதம் விளக்குவதை அவர் நூல்கள் தெளிவுற இன்றைய உலகிற்கு ஏற்றாற் போல விளக்கும்.
கர்ம பலன்களை எப்படி சித்திரகுப்தன் செயல்படுத்துகிறான் என்பதை அவர் விளக்கும் விதமே அலாதி!
ஒரு சிறிய விளக்கத்தைப் பார்ப்போம்.
மனித மனம் அக மனம் புற மனம் என இரு வகையாகச் செயல் படுகின்றன. புற மனம் புற உலகிற்கு ஏற்றாற் போல பகுத்தறிந்து செயல் படுகிறது. உள் மனமோ சின்னக் குழந்தை போல. கள்ளம் கபடம் அறியாதது. அது இறைத்தன்மையோடு இருப்பது. என்ன தான் சமாதானம் கூறிப் பல்வேறு செய்கைகளை ஒருவர் செய்தாலும் அது கண்டு கொள்ளாது. அதன் விதிகள் தனி. இறை விதிகள் அவை.
அந்த அக மனத்தின் கணக்கு அவ்வப்பொழுது எழுதி விடப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கணக்கு!
நல்லவை, அல்லாதவை அனைத்தும் அங்கே துல்லியமாக எழுதப் படுகின்றன.
இந்த மறைமுகக் கணக்கிற்கு – இரகசிய கணக்கிற்கு – குப்த கணக்கிற்கு – சித்திரகுப்தன் என்ற தெய்வம் அதிபதி.
சித்திரகுப்தனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் கிடையாது.
பாரபட்சமற்ற கணக்கன்!
உதாரணத்திற்கு இக உலக செயல்பாட்டிற்கு வருவோம்.
ஒருவன் குற்றம் இழைக்கிறான். அதை போலீஸ் – காவல் துறை கண்காணித்துக் கண்டு பிடித்து அவன் செய்த குற்றம், அதற்கான சாட்சியங்கள் ஆகியவற்றைத் தொகுத்து நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்கிறது. அங்கே நீதிபதி அனைத்தையும் பரிசீலித்து வாத பிரதிவாதங்களைக் கேட்டு முடிவை எடுக்கிறார்.
உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
மூன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர் தீவிரமாக விசாரிக்கிறார். மூன்று பேர்களும் ஒருவரைக் கொலை செய்தவர்கள் தான்!
முதல்வரை அவர் விடுதலை செய்து விடுகிறார்.அடுத்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறார். மூன்றாமவருக்கோ தூக்கு தண்டனை விதிக்கிறார்.
இவர்களது செயல்களால் தனித் தனியே ஒருவர் உயிர் இழந்திருக்கிறார்.
ஆனால் தண்டனை இப்படி பாரபட்சமாக இருக்கலாமா?
அவர் ஏன் அப்படித் தண்டனை கொடுத்தார்.
ஆராயலாம்.
முதலாமவர் ஒரு கட்டிட கொத்தனார். ஒரு பெரிய அடுக்கு மாடி வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த போது அகஸ்மாத்தாக ஒரு செங்கல்லை அவர் தவற விடுகிறார். அப்போது அந்த வழியே சென்று கொண்டிருந்த ஒருவரின் தலை மீது விழ ஆள் காலி.
நடந்த விபத்தே அப்புறம் தான் கொத்தனாருக்குத் தெரியும். அவரும் சேர்ந்து இறந்தவருக்காகத் துக்கப்படுகிறார்.
தெரியாமல் செய்த குற்றம். அவரை நீதிபதி விடுதலை செய்கிறார்.
அடுத்தவர் ஒரு விவசாயி. கஷ்டப்பட்டு விதை விதைத்து, நீர் பாய்ச்சி, காவல் காத்து நெற்பயிரை வளர்த்து அறுவடை செய்யும் நாள் வரப் போகிறது. முதல் நாள் இரவு காவலுக்கென தன் நிலத்தில் படுத்திருக்கிறார். திடீரென சப்தம் கேட்டு எழுந்த அவர் பார்த்த காட்சி. திருவன் ஒருவன் பாடுபட்டு அவர் வளர்த்த பயிரை அறுத்துக் கொண்டு போவதைப் பார்க்கிறார். அடங்காத கோபம் வருகிறது. அவனை விரட்டிச் சென்று அரிவாளால் ஒரு போடு போடுகிறார். திருடன் காலி.
நீதிபதி இனி இப்படி அதிகமாகக் கோபம் கொள்ளக் கூடாது என்று அவரை எச்சரித்து ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கிறார்.
திருடன் செய்தது குற்றம் தான் என்றாலும் அது அவன் உயிரைப் பறிக்கக் கூடிய அளவு கொடிதானதல்ல. ஆகவே விவசாயிக்கு சிறை தண்டனை.
மூன்றாமவர் ஒரு பக்காத் திருடன். வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரைக் கொலை செய்து அவர் வைத்திருந்த நகைகளை அபகரித்துச் சென்றிருக்கிறான் அவன்.
திட்டமிட்டு ஒன்றும் அறியாத ஒரு அப்பாவியைக் கொலை செய்த அவனுக்கு தூக்குத் தண்டனையை விதிக்கிறார் நீதிபதி.
செய்தது கொலை’ ஒருவர் உயிர் நீக்கப்பட்டது. என்றாலும் அதற்கான நோக்கம், குற்றம் நடந்த விதம் அனைத்தையும் ஆராய்ந்து தண்டனையைத் தருகிறார் நீதிபதி.
இனி சித்திரகுப்தன் செயலுக்கு வருவோம்.

 

law-of-karma
சித்திரகுப்தனுக்கு போலீஸ், நீதிபதி ஆகிய துறைகள் கிடையாது. எல்லாவற்றையும் அவர் ஒருவரே பார்த்துக் கொள்வார். என்ன நோக்கம் ஏன் செய்யப்பட்டது என்பதை அவரது ரிகார்டுகள் துல்லியமாகக் காட்டும். இக உலகில் ஒரு வேளை நீதிபதி தவறான தண்டனையைக் கொடுத்து விடலாம்.
ஆனால் சித்திரகுப்தன் கணக்கில் மதிப்பீடு செய்பவர் அந்தச் செயலைச் செய்தவரின் அக மனமே. அது அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு, நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அது தன் கணக்கையும் முடிவையும் எழுதி வைத்துக் கொள்கிறது.
செயலைச் செய்தவனே ‘ப்ளாக் பாக்ஸ்’ போல நடந்ததைக் காட்டும் அதிசயமே சித்திரகுப்தன் கணக்கு.
எப்படி, சுவாரசியமாக இருக்கிறது இல்லையா, விளக்கம்!
ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யரின் ‘ தி அப்ஸொல்யூட் லா ஆஃப் கர்மா’ (The Absolute Law of Karma) என்ற நூலில் மேற் கண்ட விளக்கம் அற்புதமாகத் தரப்படுகிறது.
இந்த நூலை நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

*********

புஸ்தகம், வனிதா, வித்தம் -கதம்!கதம்!! (Post No.2961)

klai add2

Article Written by London swaminathan
Date: 11 July 2016
Post No. 2961
Time uploaded in London :– 8-40 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஒரு அருமையான சம்ஸ்கிருத பாடல்/ஸ்லோகம்
கொடுக்கக்கூடாதவை
புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்த கதம் கதம்
அதவா புனராகச்ச ஜீர்ணம் ப்ரஷ்டா ச கண்டச:
புஸ்தகம் -நூல்
வனிதா –பெண்மணி
வித்தம் –பணம்
பரஹஸ்த –பிறர்கைக்கு
கதம் கதம் போனால் போனதுதான்!
அதவா புனராகச்ச -அல்லது திரும்பி வந்தால்
ஜீர்ணம் – திரும்பி வந்தால்
ப்ரஷ்டா ச கண்டச: — விலக்கப்படவேண்டியது, துண்டாக்கப்பட்டது (நன்கு பயன்படுத்தப்பட்டது)
இந்தப் பாடலுக்கு விளக்கமும் வேண்டுமோ!!
xxx

 

flame-of-the-forest-palasa

வாசனை இல்லாத கல்யாண முருங்கைப் பூ

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத்தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

இஹ்தே போல சம்ஸ்கிருத்தத்திலும் ஒரு பாடல் உண்டு

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:
வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:

xxx

field green,fb

எதைக் கைவிடலாம்?
இந்தப் பாடலை முன்னரே கொடுத்துள்ளேன்:-
தன்னுடைய குலத்துக்காக ஒருவரை தியாகம் செய்யலாம்; (த்யஜேத் – விட்டுவிடு)

ஒரு கிராமத்தையே காப்பாற்ற ஒரு குலத்தையே விட்டுவிடலாம்

ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தையே விடலாம்;
தன்னைக் காப்பாற்ற உலகையே விடலாம் (தனது ஆன்மீக முன்னேற்றத்துக்காக உலகத்தையே துறக்கலாம்).

த்யஜேத் குலார்த்தே புருஷம் க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹ்யாத்மனார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்
-ஸபா பர்வம், மஹாபாரதம்

–SUBHAM–

பழைய கால நூல் தற்காலத்துக்குப் பொருந்துமா? (Post No.2960)

YogaVasishta_front_cover

Article Written S NAGARAJAN

Date: 11 July 2016

Post No. 2960

Time uploaded in London :– 6-25 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5

பழைய கால நூல் தற்காலத்திற்குப் பொருந்துமா?

ச.நாகராஜன்

யோக வாசிஷ்டம் என்னும் நூலோ பழைய காலத்தில் இயற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் வசிஷ்ட முனிவர் பழைய யுகம் ஒன்றில் ராமருக்கு உபதேசித்த நூல் அது.
இன்றைய நவீன இண்டர்நெட் யுகத்திற்கு அது பொருந்துமா?
எத்தனை தொழில்நுட்பங்கள்! எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள்!!
இந்தக் காலத்திற்கு அந்த நூல் பத்தாம்பசலித்தனமான நூல் அல்லவா? பகுத்தறிவுக்கு ஒத்த நூலாகுமா?
இப்படி கேள்விகளைப் பகுத்தறிவாளர்கள் கிளப்பினால் சாதாரண மனங்களே குழம்பி விடும்! விடையைப் பார்க்கலாம்.
முதலில் விஞ்ஞான முன்னேற்றம் புறவுலகை அளப்பதில் தான் இருக்கிறது. விண்வெளியில் விண்கலங்கள் சுழல்கின்றன. நெட் உலகில் தகவல் பரிமாற்றம் நன்கு நடைபெறுகிறது. உண்மை தான்!
ஆனால் அகவுலகைப் பொருத்த வரையில் விஞ்ஞானம் திகைக்கவே செய்கிறது! உயிர் என்பது என்ன? அது எப்படி கருவில் எப்போது வந்து சேர்கிறது? உடலை விட்டு உயிர் எப்போது எப்படி நீங்குகிறது? மனம் என்பது என்ன? பிரக்ஞை என்பது என்ன” – என்றெல்லாம் கேட்கப் போனால் விஞ்ஞானம் விலகி ஓடுகிறது.

YogaVasishta_large
ஆகவே விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாமல் திகைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரே நூல் யோக வாசிஷ்டம் தான்! ஒருவேளை விஞ்ஞானமும் மனம், பிரக்ஞை, உயிர் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருந்தால் அப்போது மட்டுமே நாம் ‘பகுத்தறிவாளர் நம்மைக் குழப்புகின்ற’ மேலே கூறியுள்ள கேள்விகளைக் கேட்கலாம்.
அப்படி விஞ்ஞானம் விளக்காத நிலையில் அப்படிப்பட்ட கேள்விகளே தவறு என்று சொல்லி விடலாம்.
சரி, இன்றைய யுகத்திற்கு யோக வாசிஷ்டம் பொருந்துவது எப்படி என்பதற்குப் பதில் உண்டா?
உண்டு!
உண்மையில் யோக வாசிஷ்டம் தான் அறிவியல் ரீதியிலான நூல். எதையும் ஆராய்ந்து பார் என்று அது கூறுகிறது. விசாரம் என்ற சம்ஸ்கிருத பதம் இதற்காக உபயோகப்படுத்தப் படுகிறது.
ஸந்தோஷம், ஸத் ஸங்கம், ஸத் விசாரம், ஸமஸ்தம் என்ற நான்கு வழிகளே மனிதனின் இக வுலக மற்றும் மறு உலக வெற்றிக்கான வழிகள். (விசாரத்துடன் ஒரு ஸத் சேர்க்கப்பட்டுள்ளதன் காரணம் நான்கு ‘ஸ’காரங்களை சுலபமாக நினைவில் இருத்திக் கொள்ளலாம் என்ற காரணத்திற்காகவே!)

இவற்றில் எந்த ஒன்றைப் பயின்றாலும் மற்ற மூன்றையும் எய்தி வெற்றியைப் பெறலாம் என்கிறது யோக வாசிஷ்டம்.
ஸத் விசாரம் என்பது நல்லதைப் பற்றிய ஆராய்ச்சி. இதை ஆங்கிலத்தில் Rational investigation என்று கூறலாம்,
உலக வாழ்க்கையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள். சோதனைகள் ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கான ஒரே மருந்து விசாரம் தான் என்று வசிஷ்டர் அறிவுறுத்துகிறார்.
ஆசைகள் மற்றும் விருப்பங்களினாலேயே வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள், ஏற்படுகின்றன.
ஆகவே பகுத்தறிவு ஆய்வு மற்றும் அமைதியான சிந்தனை ஆகியவற்றின் மூலமாகவே துன்பங்களை வெல்ல முடியும்.
நமது திறமைகள் ஒரு பக்கம். சமுதாய சூழ்நிலை ஒரு பக்கம் நம்முடைய உடல் தகுதி இன்னொரு பக்கம் இப்படி மூன்றினுக்கும் இடையே அகப்பட்டுள்ள நாம் இவற்றிற்கு உட்பட்டுத் தான் நமது ஆசைகளை நிறைவேற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. நமது ஆசைகள் இவற்றிற்கு இசைய அமைந்தால் அப்போது நமது முயற்சிகள் பலனை அளிக்கின்றன.
இல்லையேல் வலியும் ஏமாற்றமுமே மிஞ்சும்.
இவற்றிற்கெல்லாம் மேலே மோகம் என்னும் மாயை இருக்கிறது.
இந்த மாயைக்கு நாம் வசப்பட்டு நமது திறமைகளை அதிகமாக மதிப்பீடு செய்து கொள்கிறோம். நமது ஆசைகள் நமது திறமைகளை தகுதிக்கு அதிகமாக எண்ண வைத்து பிரத்யட்ச நிலை பற்றித் தெரியாமல் நம்மை குருடாக ஆக்கி விடுகிறது.

Yoga-Vasishta-Maha-Ramayana-free-pdf-ebook-185x300

Free e book
ஆகவே நமக்குத் தேவையானது விசாரமும் விவேகமும் தான்.
இதற்கு வசிஷ்டர் வெளிச்சத்தை உதாரணமாகத் தருகிறார்.

இருட்டில் இருக்கும் ஒருவன் பயப்படுகிறான்.அவனால் நகரக் கூட முடியவில்லை. ஒரு விளக்கு ஏற்றப்பட்டு வெளிச்சம் வந்து விட்டால். எல்லாமே தெளிவாக ஆகி விடுகிறது.
அது போல துன்பம் வரும் போது கோபமோ அல்லது பயத்தையோ அடையாமல் விசாரம் செய்ய ஆரம்பித்தால் தெளிவு பிறக்கும். விசாரம் என்ற வெளிச்சம் துன்பம் என்ற இருளை நீக்கும்.
இதுவே உலகியல் வாழ்க்கையில் வெற்றி பெற வழி!
******

 

 

Don’t lend Books, Money and Woman! (Post No.2959)

IMG_4530

Article Written by London swaminathan

Date: 10 July 2016

Post No. 2959

Time uploaded in London :– 18-39

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Wisdom literature in Sanskrit is great. If a person is well versed in Sanskrit he will be using hundreds of Subhasitams (Golden sayings) in his daily conversation. It is a great pleasure to listen to such people. Tamils cant speak without using a proverb. Villagers use Tamil proverbs more than the city dwellers. They may illiterate but they will use apt proverb at the right place at the right time.

Here are some Sanskrit couplets which anyone will enjoy:–

 

Pustakam, Vanita Vittam parahastam gatam gatam!

Athavaa punaraagacceet jeernam brashtaa sa khandasah

 

 

If book, money and woman go to another hand that is gone for ever.

Or If it comes back they are spent, spoiled or torn

 

This couplet needs no explanation.

books, BL

Xxx

What can you sacrifice

Tyajet kulaarthe purusam graamasyaarthe kulam tyajet

Graamam janapadasyaarthe hyaatmanaarthe pruthviim tyajet

–Sabaaparvam, Mahabharatam

 

One can sacrifice a man for the sake of his clan

To save the entire village, a clan may be sacrificed

To save the country a village may be sacrificed

But for the sake of the Self, the entire may be sacrificed.

 

The meaning is that you can leave everything to attain spiritual benefits.

Xxx

 

Ruupa yauvana sampannaa visaalakulasambavaah

Vidyaahiinaa na sobante nirgandhaa iva kimsukaah

 

Even if one is born in a good family with beauty and youth, one would not shine in life without education/learning. He will look like the bright coloured Kimsuka flower sans fragrance.

 

Tamil poets Tiruvalluvar also use a similar simile:–

Those who are unable to elucidate their learning are like the cluster of blossoms without fragrance – Kural 650

 

–Subham–

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 (Post No.2958)

tribe-1khampti

காம்ப்டி பழங்குடி மக்கள்

Research Article Written by London swaminathan

Date: 10 July 2016

Post No. 2958

Time uploaded in London :– 9-09 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(காம்ப்டி இனமக்கள் பர்மாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும் வாழ்கின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். வடகிழக்கு வாழ் மக்களில் மிகவும் புத்திசாலிகள் இவர்கள்தான். மிகவும் உழைப்பாளிகள்; எப்பொழுதும் துணிமணிகளை நெய்து சாயமேற்றி, பூவேலைப்பாடு செய்வர்.)

 

நான் ஆங்கிலத்தில் எழுதிவரும் பழங்குடி மக்கள் பற்றிய கட்டுரைகளை தமிழிலும் வெளியிடும்படி பலர் எழுதினர். ஆகையால் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் சாராம்சத்தை, பகுதி பகுதியாக தமிழிலும் வெளியிடுகிறேன்.

இந்தியாவை ஆக்ரமிக்கவந்த வெளிநாட்டினர், இந்திய மக்களை ஆரியர்கள், திராவிடர்கள் என்று பிரித்து கட்டுரைகளை எழுதினர். மலைகளில் வாழும் பழங்குடி மக்களைப் பார்த்தபோது இந்த வாதம் சரிப்பட்டு வரவில்லை. உடனே கொஞ்சம் மாற்றி ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று பிதற்றினர். அப்படியும் வாதம், உளுத்த வாதமாக இருந்தவுடன் ஆரியர், திராவிடர், முண்டா, மங்கோலியர், பூர்வ குடியினர் என்று பிரித்தனர். அப்படியும் அவர்கள் வாதம் உளறல் என்று பலர் கண்டு பிடித்தனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் மனிதர்களைப் பிடித்து உண்ணும் ஜாரவாஸ், இலங்கையிலுள்ள வெட்டா முதலிய இனங்களைப் பார்த்தவுடன் நீக்ரோ இன மக்கள் என்ற ஒன்றையும் சேர்த்தனர்!!

 

வியப்பிலும் வியப்பு என்ன என்றால், அதிசயத்திலும் அதிசயம் என்னவென்றால், சங்கத் தமிழ் இலக்கியத்திலும் அதற்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இனம் பற்றியோ ஆரிய, திராவிடர் இனவாதம் பற்றியோ ஒன்றுமே இல்லை. உலகிலுள்ள எல்லா இலக்கியங்களையும் விடப் பழமையானது சம்ஸ்கிருத-தமிழ் இலக்கியம்; அளவிலும் மஹத்தானது. அதில் ஒரு வரி கூட இல்லை! அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன் சொன்னதற்கு நேர் மாறாக வேறு, நமது இலக்கியங்கள் செப்புகின்றன.

 

காமாலைக் கண் படைத்த, கோணல் புத்தியுடைய, பிரித்தாளும் சூழ்ச்சியில் நரிகளையும் மிஞ்சும் வெள்ளைக்காரன் கூ,ட உபநிஷத்துகளில் பழமையானது பிருஹத் ஆரண்யக உபநிஷத் (பெருங் காட்டு உபநிஷத்) என்றும் அது புத்தருக்கெல்லாம் மிகவும் முன்னதாக, கிரேக்கர்கள் எல்லாம் இலக்கியம் படைப்பதற்கு  முன்னதாக எழுந்தது என்றும் எழுதிவைத்தான். அதிலேயே தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் மூவரும் தவம் செய்து ஒரே கடவுளிடம் சென்று உபதேசம் கேட்டபோது வானம் “த, த, த” என்று ஒலி செய்தது. உடனே மூவரும் அதற்கு வெவ்வேறு பொருள் கண்டனர்  என்று எழுதியுள்ளது.

(த, த, த கதையை முன்னரே எழுதியுள்ளேன்). இதிஹாசம், புராணம் முழுதும், அசுரர், தேவர் எல்லோரும் ஒரே கடவுளைக் கும்பிட்டு வரங்கள் பெற்றதும் நூற்றுக்கணக்கான கதைகளில் வருகிறது. அது மட்டுமல்ல. அவர்கள் ஒருதாய் வயிற்றுப் புதல்வர்கள், குணத்தினால் மட்டும் வேறுபட்டவர்கள் என்றும் நமது இலக்கியங்கள் பகர்கின்றன.

 

இந்துக்கள் எல்லாரையும் தேவர், அசுரர், கந்தர்வர், வித்யாதரர், நாகர், கின்னரர் முதலிய 18 குழுக்களாகப் பிரித்தனர்

 

பழங்குடி மக்களைப் பார்க்கும் போதும், அவர்கள் பற்றிப் படிக்கும்போதும் நம் மனதில் எழும் கேள்விகள்:–

இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? ஏன் இப்படி “நாகரீகமற்ற” வாழ்க்கை வாழ்கின்றனர்? என்ற கேள்விகள் தோன்றும்.

 

வெள்ளைக்காரன் பின்னிவிட்ட, ஜோடனை செய்த கதைகளில் வருவது போல இவர்கள் சிந்து சமவெளியில்ருந்து ஆரியர்களால் விரட்டப்பட்டவர்களாக இருந்தால், இவர்கள் பல மொழிகளைப் பேசுவது எப்படி? உருவத்தில் பலவண்ணம் இருப்பது எங்கனம்? பல நூறுவிதமான நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது எப்படி? ஒருவரை ஒருவர் கல்யாணம்கூடச் செய்யாமல் தனித்து வாழ்வது ஏன்? நீலகிரி, கேரள மலைப்பகுதிகளில் அருகருகே பல வகையான பழங்குடிகள் இருப்பது எப்படி முடியும்?

tribe-3chulikata

சுலிகாடா பழங்குடி மக்கள்

இது சுலிகாடா பெண்ணின் படம். வடகிழக்கு வாழ் மக்களில் மிகவும் ஆக்ரோஷமான இனம் இது . அவர்கள் திபெத் மக்களுடன் வணிகம் செய்வர். தலை  முடியை கிராப் செய்வதால் சுலிகாடா என்று பெயர். இவ்விஷயத்தில் அருகிலுள்ள மிஷ்மி, அபார் இன மக்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். ஆண்களும், பெண்களும் முடி அலங்காரம் செய்வது குறிப்பிடத்தக்கது.

மொழிகளில் ஏன் ஒற்றுமை இல்லை? சிந்து சமவெளியில் நாகரீகமாக வாழ்ந்தவர்கள், அதை மறந்து களிமண் குடிசைகளில் வாழ்வது எப்படி? அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே?

 

அவர்கள் கடவுள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்களாக இருப்பது எப்படி? இந்துமத நம்பிக்கைகள் பல அவர்கள் பழக்க வழக்கங்களில் இருப்பது ஏன்? அவர்கள் ஒரே கடவுளைக் கும்பிடாமல் பல கடவுள்களைக் கும்பிடுவது ஏன்? ஒவ்வொருவரும் தங்கள் குடி எப்படித் தோன்றியது என்பதில் பல நூறுவிதமாகச் சொல்லுவது ஏன்?

 

வெவ்வேறு மூதாதையர்கள், சின்னங்கள், திருமண முறைகள், இறந்தோரை அப்புறப்படுத்தும் முறைகள், சில விஷயாங்கள் குறித்த பயங்கள், விநோத நம்பிக்கைகள் இருப்பது ஏன்?

 

“சிந்து சமவெளி திராவிட மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள்” ஆகியவற்றுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாதது ஏன்? (சிந்துவெளியில் திராவிட மண்டை ஓடுகள் எதுவும் கிடைக்கவில்லை)

 

சிந்து சம்வெளியில் ஆரிய மண்டை ஓடுகள் மட்டும் கிடைப்பது ஏன்? (இப்போது அப்பகுதிகளில் வாழும் பஞ்சாபியர், சிந்து இன மக்கள் போன்ற எலும்புக்கூடுகளே கிடைத்திருக்கின்றன)

 

 

உண்மை என்ன வென்றால்………….

பழங்குடி மக்கள் எப்பொழுதுமே இந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்திலும், அதற்கு முந்தைய வேத, இதிஹாச காலத்திலும் அவர்கள் இருந்துள்ளனர். இன்று நகர நாகரீகம் நிலவும்போது எப்படி அவர்கள் மலைகளில் தனிப்பட்ட வாழ்வு வாழ்கின்றனரோ அதுபோல அப்போதும் அவர்கள் வாழ்ந்தனர்.

 

நான் எழுதிய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்ட் இன மக்கள் காண்டவ வன மக்கள் என்றும் அவர்களுக்கும் அர்ஜுன-கிருஷ்ணன் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் தென் அமெரிக்க நாடுகளில் குடியேறி மாயா, அஸ்டெக் நாகரீகங்களைத் தாபித்தது பற்றியும் எழுதியுள்ளேன்.

tribe-6digharu

திகரு/ தைன்பழங்குடி மக்கள்

 

பிம்பேட்கா குகைப்பகுதிகளில் உள்ள ஓவியங்கள், மத்தியப் பிரதேசத்தின்  அடர்ந்த காட்டுப்பகுதிகளில் 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. அதாவது வேத கால, சிந்து சமவெளிகாலத்திலும் அதற்கு முன்னரும் கூட அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

 

நான் பிலோ இருதயநாத் முதலிய எழுத்தாளர்கள் தினமணிச் சுடர், மஞ்சரி முதலிய பத்திரிக்கைகளில் எழுதிய விஷயங்களை 45 ஆண்டுகளாகப் படித்தும் சேகரித்தும் வருகிறேன். அண்மையில் “இந்திய மக்கள்” என்ற தலைப்பில் ஹெர்பர்ட் ரிஸ்லி எழுதிய புத்தகத்தைப் படித்தேன். அதிலுள்ள 30 பழைய படங்களும் வருணனைகளும் இக்கட்டுரைத் தொடரை எழுதத் தூண்டின. நான் வெளியிடும் விஷயங்களைப் படித்தபின்னர் நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்.

 

முதல் கட்டுரையில் வடகிழக்கு இந்திய பழங்குடி மக்களின் படங்கள் உள்ளன. இதில் காம்டி இன மக்கள் தங்கள் தலைமுடியை அலங்கரிக்கும் பாணியிலிருந்தே திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று வேறுபடுத்திக் காட்டுகின்றனர். வடகிழக்கில் மட்டும் ஒரே ஒரு குடியில் இந்த வழக்கம் உளது. இது வேறு எங்கும் காண முடியாத புதுமை. இப்பொழுது இந்துக்கள் காலில் மெட்டி, கழுத்தில் தாலி, தலைமயிர் வகிட்டில் குங்குமம், மடிசாரைப் புடவை முதலியவற்றின் மூலம் திருமணம் ஆனவர் என்பதைக் காட்டுகின்றனர்.

 

இப்படி நகை, உடை, முடி அலங்காரம், நம்பிக்கைகள் முதலியவற்றில் வியப்பான வித்தியாசங்களைக் காட்டுகிறேன்.

 

பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் வாழும் திகரு, தைன் மக்கள் மிகவும் சாதுவான மக்கள். வெள்ளி நகைகளை அணிவர்.

 

tribe-10female digaru

திகரு/ தைன்பழங்குடி மக்கள்

 

இந்த இன மக்களிடையே ஏன் இவ்வளவு வேறுபாடு? சிந்தியுங்கள்.

 

–அடுத்த கட்டுரையில் மேலும் சில இனங்களைக் காண்போம்

 

 

 

சீனாவின் விண்கலம் விழப்போகும் விபரீதம்! (Post No.2957)

tiangong space station

Article Written S NAGARAJAN

Date: 10 July 2016

Post No. 2957

Time uploaded in London :– 5-29 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 8-7-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
சீனாவின் விண்கலம் விழப்போகும் விபரீதம்!
ச.நாகராஜன்

“விண்வெளியில் 1071 சாடலைட்டுகள் சுற்றி வருகின்றன” –
– யுனிவர்ஸ் டுடே பத்திரிகை 24-10-2013இல் வெளியிட்ட செய்தி

ஆட்டம் போடும் சீனாவின் விண்வெளி ஆசைக்கு ஒரு எல்லை இல்லாமல் போய் விட்டது. நமது எல்லைப் புறத்தில் படையை அனுப்பி நம்மை சீண்டுவது போதாது என்று விண்வெளியையே ஆக்கிரமிக்க நினைக்கும் அதன் விண்கலம் ஒன்று தள்ளாட்டம் போடுகிறது! ஹெவன்லி பாலஸ் என்று சீனா அழைக்கும் அந்த ‘சுவர்க்க அரண்மனை’ எந்த நாட்டில் எப்போது விழுந்து எத்தனை பேரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறதோ என்ற கவ்லை உலக மக்களுக்கு இப்போது தோன்றி இருக்கிறது!
ஏழாயிரத்திமுன்னூறு கிலோ எடையுள்ள இந்த விண்கலத்தின் பெயர் டியாங்காங் 1 (Tiangong – 1). டியாங்காங் என்றால் சீன மொழியில் சுவர்க்க அரண்மனை என்று பொருள்!

சீனா இப்படி தன் விண்கலம் தள்ளாட்டம் போடுவதை இதுவரை ஒப்புக்கொள்ளவும் இல்லை; உலகிற்கு அறிவிக்கத் தயாராகவும் இல்லை.
தாமஸ் டோர்மேன் என்பவர் வானில் பறக்கும் அனைத்து விண்கலங்களையும் டெலஸ்கோப், பைனாகுலர், வீடியோ மற்றும் இதர காமராக்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து குறிப்புகளை எடுத்து வரும் நிபுணர்.
“நான் கணிப்பது சரியென்றால் சீனா கடைசி நிமிடம் வரை காத்திருந்து வேறு வழி இல்லை என்ற நிலையில் உலகிற்கு இதை அறிவிக்கும்“என்று கூறுகிறார் அவர்.

 
தனது ஸ்பேஸ் ஸ்டேஷன் தள்ளாடித் தரையில் விழுவதை சீனா ஒப்புக் கொள்ளும் வரை உலகம் கவலைப்படாமல் காத்திருக்குமா? விண்கலம் வெடித்து துண்டு துண்டாகிச் சிதறி பல்வேறு இடங்களில் பூமி மீது மோதினால் என்ன ஆகும்? அதுவும் நெருக்கமாக ஜனத்தொகை உள்ள பெரிய நகரங்களில் அது விழுந்து விட்டால்…! நினைக்கவே பயமாய் இருக்கிறது என்கிறனர் விஞ்ஞானிகள்.
ஆனால் பொதுவாக விண்கலம் கடலிலோ அல்லது ஜனசந்தடி அற்ற இடங்களிலோ தான் இறங்கும்படி செய்வது வழக்கம் என்பதால் பயப்படாமல் இருக்கலாம்.
ஆனாலும் பழுதுபட்ட விண்கலம் எப்படி இயங்கி விழுமோ என்பதால் இதை மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டி இருக்கும் என்கின்றனர் அவர்கள்.
சீனா வெளிஉலகிற்கு இந்த விண்கலத்தின் உண்மை நிலையை இதுவரை தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் அது விண்கலத்தைத் தன் கட்டுப்பாட்டின் மூலமாகத் தரை இறக்க முடியும் என்று இன்னமும் நம்பி வருவது தான்!

 
2020இல் சீனா மிகப் பெரிய விண்வெளி நிலையம் அமைக்க எண்ணியுள்ளது. அதற்கான முன்னோடி விண்வெளி நிலையம் இது. ஒரு விண்கலத்தை இன்னொரு விண்கலத்தோடு பொருத்தும் முறைகளில் வெற்றி கொள்வதற்காக இது விண்வெளியில் ஏவப்பட்டது. 2011இல் ஷென்ஷோ 8 மற்றும் 2012இல் ஷென்ஷோ 9, 2013 இல் ஷென்ஷோ 10 ஆகிய கலங்களில் இந்த ‘டாக்கிங்’ (docking) பயிற்சிகளை அது செய்து முடித்தது. கடைசியாக ஷென்ஷோ 10 என்ற விண்கலம் 2013இல் பூமியில் இறங்கியது.
அத்துடன் இந்த சுவர்க்க அரண்மனையின் வேலை முடிந்தது போலத் தான்.
பூமியில் உள்ள தாது வளங்களைக் கண்டு பிடித்தல், காட்டு வளத்தைப் பற்றி அறிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இது ஏராளமான அறிவியல் தகவல்களைத் திரட்டியுள்ள்து.

tiangong 1
ஒரு விண்கலம் நிலை கெட்டுத் தடுமாறி பூமி மீது மோத வந்தால் என்ன நடக்கும் என்பதை உலகம் ஏற்கனவே ஒரு முறை பார்த்து விட்டது.
1979ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி உலகமே பயத்துடனும் வியப்புடனும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர். அமெரிக்கா விண்ணில் ஏவிய ஸ்கைலாப் பழுதான நிலையில் பூமியை நோக்கி விரைந்து கீழே வந்து கொண்டிருந்தது. அதன் எடையோ 77 டன்கள். பதறிப் போன அமெரிக்க விண்வெளி விஞ்ஞானிகள் பூஸ்டர் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி ஸ்கைலாப்பை கடலில் விழுமாறு செய்தனர். பெரும்பாலான துண்டுகள் கடலில் விழுந்தாலும் சில துண்டுகள் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் விழுந்தன. நல்ல வேளையாக, அது விழுந்த பகுதியில் மனித நடமாட்டமே இல்லை.
ஸ்கைலாப் விழப் போவதை அறிந்தவுடன் ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள நாடுகள் பரபரப்படைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன.
அமெரிக்க பத்திரிகைகள் ஸ்கைலாப் இன்ஷூரன்ஸ் திட்டம் என்ற தமாஷ் திட்டங்களை அறிவித்தன. ‘சான்ஃபிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர்’ என்ற பத்திரிகை ஒரு படி மேலே போய்,. யார் ஒருவர் ஸ்கைலாபின் ஒரு சிறிய துண்டையாவது எடுத்து 72 மணி நேரத்திற்குள் முதலில் தங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கிறார்களோ அவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது. நிச்சயம் ஸ்கைலாப் அமெரிக்காவில் விழாது என்ற கணிப்பில் அது இப்படி அறிவிப்பைச் செய்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் பதினேழே வயதான இளைஞன் ஸ்டான் தார்ண்டன் இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட பெரும் அதிர்ஷ்டசாலியாக இருந்தான். ஸ்கைலாப் அவன் இருந்த பகுதியில் விழவே ஒரு சிறிய துண்டை எடுத்துக் கொண்டு உடனடியாக ஒரு விமானத்தைப் பிடித்து குறித்த கால கெடுவான் 72 மணி நேரத்திற்குள் பத்திரிகை அலுவலகத்தில் கொண்டு வந்து அதைக் காண்பித்தான்.
அனைவரும் அதிசயித்துப் போனார்கள். பத்திரிகை நிறுவனமும் நல்ல மனதுட்ன் பத்தாயிரம் டாலரை அவனுக்கு வழங்கிக் கௌரவித்து தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டது.

ஆனால் சீன சுவர்க்க அரண்மனையைப் பொறுத்த வ்ரை இதெல்லாம் நடை பெறாது என்பதை அனைவரும் அறிவர். அது
எங்கு எப்போது விழும் என்பது சஸ்பென்ஸ் தான்!
இந்த சஸ்பென்ஸ் விரைவில் நீங்கும். அது வரை பொறுத்திருப்போம்!

 

sidney altman

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1989ஆம் ஆண்டு இரசாயனத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மேதை சிட்னி ஆல்ட்மேன் (Sidney Altman) (தோற்றம் : 7-5-1939)
அவர் மிகவும் கடினமான உழைப்பாளி. ஏழை அகதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். அவரது தாய் ஒரு பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். தந்தையோ ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார். இருவரும் சந்தித்து மணம் முடித்துக் கொண்டனர்.
மளிகைக் கடையில் தந்தை வேலை பார்ப்பதையும் தாய் பஞ்சாலையில் வேலை பார்ப்பதையும் கூர்மையாகக் கவனித்து வந்த அவர், கடின உழைப்பு சிறு சிறு கூறுகளாக இருந்தாலும் வெற்றியைத் தரும் என்று உணர்ந்தார். தன் வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தால் அனைவரையும் ஊக்குவிக்கும் ஏராளமான பொன்மொழிகளை அவர் வழங்கியுள்ளார்.
“1939ஆம் ஆண்டு மாண்ட்ரீலில் நான் ஏழை அகதிகளுக்கு மகனாகப் பிறந்தேன். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கிராஜுவேட் மாணவனாக இருந்தேன். 18 மாத காலம் ஒரு லாபரட்டரியில் வேலை செய்ய மாட்டாமோ என்று ஏங்கி இருந்தேன். வாய்ப்பு வந்தது. முன்னேறினேன்” என்று உருக்கமாகத் தான் முன்னேறிய விதத்தைப் பற்றி அவர் கூறுவதுண்டு. டி என் ஏ என்ற மரபணு போல ஆர் என் ஏ (ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்பதும் முக்கியமான ஒன்று. ஆர் என் ஏயில் ஊக்குவிக்கும் குணாதிசயங்களை அவர் கண்டு பிடித்து அதற்காக நோபல் பரிசை வென்றார். கடின உழைப்பு வெற்றியைத் தரும் என்பதற்கான உதாரணம் சிட்னி ஆல்ட்மேன்!
********