வேதத்தில் 107 மூலிகைகள்

susrutha statue in Haridwar

Picture of Susrutha statue in Haridwar.

உலகிலேயே மிகவும் பழைய நூல் வேதங்கள். அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. எப்படி சங்கத் தமிழ் பாடல்கள் பழைய செந்தமிழில் உள்ளதோ அப்படியே வேதங்களும் பழைய வைதீக சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றன. எப்படி உரைகாரர்களின் உரை இல்லாமல் சங்கத் தமிழ் பாடல்களைப் புரிந்துகொள்ளமுடியாதோ அப்படியே, சாயனர் போன்றோரின் உரை இல்லாமல் வேதங்களையும் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் இலக்கியத்தை விட 1500 ஆண்டுகள் பழமை உடையவை வேதங்கள் என்பதால் சாயனர் உரை கூட முழு அர்த்தெத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் வேதத்தை விளக்கவந்த இதிஹாச புராணங்களும், தேவார திருவாசக திவ்விய பிரபந்தங்களும  அவைகளின் உள்ளார்ந்த கருத்துக்களை நமக்கு புலப்படுத்துகின்றன.

 

 

மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சரகர், சுஸ்ருதர் போன்ற பெரியோர்கள் வடமொழியில் எழுதிய நூல்கள் வேத கால அறிவை அறிய ஓரளவுக்குத் துணை செய்கின்றன. ரிக், யஜூர், சாம ,அதர்வணம் –ஆகிய நான்கு வேதங்களில் மிகவும் பயனுடைய வேதம் அதர்வண வேதம் ஆகும். மனிதன் பிறந்து, வளர்ந்து, மணம் புரிந்து, இறக்கும் வரை உள்ள சடங்குகளுக்கு அதில் பல மந்திரங்கள் உள்ளன.

 

 

உலகிலேயே பழைய சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் 97ஆவது பாடல் முழுதும் மூலிகைகளின் பெருமையைப் பேசுகிறது. உலகிலேயே மிகப் பழைய மூலிகைப் பாடல் இதுதான். இரசாயன ஆயுதத்தால் தாக்குண்ட லெட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் மூலிகை மலையையே எடுத்து வந்ததை ராமாயணம் மூலம் நாம் அறிவோம். உலகின் முதல் மூலிகை மருத்துவன் அனுமன் தான். இதற்குப் பின்னும் முன்னும் அயுர்வேதம் என்ற மிகப் பழைய மருத்துவ முறை இருந்ததை அறிய ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிஹாசங்கள் உதவுகின்றன.

 

charaka

107 மூலிகைகள்

ரிக் வேதப் பாடல் 107 மூலிகைகள் பற்றிப் பாடுகிறது. துரதிருஷ்டவசமாக நாம் அந்த 107 மூலிகைகள் என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் ஆயுர்வேத நூல்கள், வேறு நூற்றுக் கணக்கான மூலிகைகள் பற்றி நமக்கு அறிவுறுத்துகின்றன. பிராமணர்கள் யாக யக்ஞங்கள் செய்ய மிகவும் பயன்படுத்துவது அரச மரமே. இதை ரிக்வேதம் பகழ்கிறது. சிந்து –சரஸ்வதி நாகரீகத்திலும் மிகவும் அதிகமாகக் கானப்படுவது இந்த அரச மரமே.

 

ரிக் வேதம் விளக்காத விஷயங்களை அதர்வண வேதம் விளக்குகிறது. அபூர்வமான பல தாவர தாயத்துக்கள் பற்றிப் பாடுகிறது. இவை வேத கால மக்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. வேதகால மக்கள் மூலிகைகளின் மருத்துவப் பலன்களோடு அவைகளை தெய்வீக குணம் உடையவை என்று நம்பினர். அவைகளின் மாய, தந்திர குணங்களிலும் நம்பிக்கை வைத்தனர். அவைகளுக்கும் சந்திரனுக்கும், சோம பான மூலிகைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினர். மூலிகை தாயத்துக்களால் கணவன் மனைவி உறவு பலப்படும் என்றும் நம்பினார்கள்.

 

வேத காலத்தில் தாவரவியல் அறிவு, புறச்சூழல் அறிவு பரவி இருந்தது. நூற்றுக் கணக்கான மூலிகை, மரம் செடி, கொடிகளின் பெயர்களை சம்ஸ்கிருத இலக்கியத்தில் காணுகிறோம்.

 

 

அதர்வ வேத அற்புதங்கள்

நாலாவது வேதமான அதர்வண வேதத்தில் குஸ்ட, ஷிலாச்சி முதலிய தாவரங்கள் பற்றியும், ஜங்கிட மணி, பர்ண மணி முதலிய தாயத்துக்கள் பற்றியும் அபூர்வ விஷயங்கள் காணக்கிடக்கின்றன. பர்ண மணி பலாச மர இலைகளால் செய்யப்பட்டது. இன்று வரை யாகத்தில் பயன்படுத்தப்படும் கரண்டிகள் பலாச மரத்தால்தான் செய்யப்படுகின்றன. இப்போதைய அறிவைக்கொண்டு இவை என்னென்ன என்பதை அறிய இயலாவிட்டாலும் அந்தக் காலத்தில் இருந்த அபூர்வ மூலிகை மணிகளை நாம் அறிய முடிகிறது.

 

 

தாயத்து மூலம் கணவனின் அன்பைப் பெற ஒரு மனைவி முயற்சிக்கும் பாடலும், விஷ அம்பிலிருந்து உடலில் பாய்ந்த விஷத்தை வெளியே ஏற்றும் பாடலும்,ஜங்கித மணி—பர்ண மணியின் அபூர்வ குணங்களைக் கூறும் பாடலும், பல மரங்களின் பெயர்களும் படித்து இன்புறத்தக்கவை. நீண்ட முடி வளர உதவும் ரேவதி என்ற மூலிகையும் பாடப்படுகிறது. அருந்ததி, அகத்தி என்று ரிஷிகளின், ரிஷிபத்தினிகளின் பெயர்களும் மூலிகைகளுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

மனிதர்களுக்கு மட்டுமின்றி இரண்டு கால், நான்கு கால் பிராணிகளுக்கும் நன்மை வேண்டும் பாடல் அதர்வ வேத முனிவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும். வேதங்களே மிகப் பழையவை. அவை மூலிகை பாற்றிப் பாடுகையில் “புராதனமான” என்ற சொல்லைப் பயபடுத்துவதைக் காண்கையில் இந்த அறிவு பல்லயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பது தெள்ளிதின் விளங்குகிறது.

 

 

(இந்த விஷயம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரையில்– 107 Miracle Herbs in the Hindu Vedas– பாடல் எண்கள், முழு வாசகங்கள் ஆகியனவற்றைக் காணலாம்).

இந்திய கலாசாரம் பற்றி 650 கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே  கிடைக்கும் படித்து மகிழ்க.

Contact swami_48@yahoo.com

 

3.தேரவாதம், மஹாயானம் தோன்றிய வரலாறு!

Buddha's_statue_near_Belum_Caves_Andhra_Pradesh_India

S.நாகராஜன்

அகாலிகம்  

புத்தரின் போதனைகள் எளிமையானவை. ஞானோதயம் பெற்ற மஹா உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனித குலம் உய்க்க வேண்டும் என்ற பெரும் அருள் நோக்கில் அருளப்பட்டவை. அவர் அருளியவற்றை அகாலிகம் என்பர். அதாவது அ-காலிகம் – காலத்தை வென்றவை என்று பொருள். எந்தக் காலத்திற்கும் பொருந்துபவற்றை அப்படித் தானே சொல்ல முடியும்!

 

தான, சீல, பாவனா 

புத்தரின் தத்துவம் ஒரு வறட்டு போதனை அல்ல, வாழ்ந்து காட்டிய ஒரு வழி முறை! அந்த வழி முறையை பாலி மொழியில் எளிய மூன்று சொற்களில் கூறி விடுவர்.

தானம். சீலம். பாவனை – இவையே அந்த மூன்று சொற்கள். கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் சேர்க்கும் மனப்பான்மையோ திருடும் மனப்பான்மையோ வராது. அதாவது ஆசைகள் அழியும்.

இரண்டாவது சீலம். வாழ்வாங்கு வாழ உண்டான அற நெறிகளே சீலம். கொல்லாமை, சத்யம். தயை உள்ளிட்ட அடிப்படையான அறப்பண்புகள்.

 

மூன்றாவது பாவனை. அதாவது தியானம். மனதைக் கட்டுப்படுத்தும் அற்புத சாதனை.மன சாந்தியை அனைவருக்கும் அளித்து துன்பமயமான உலகத்தை ஸ்வர்ண லோகமாக மாற்றும் வழி மனதைச் செம்மைப்படுத்துவதே!

அறிவால் அறி

இதையும் அவர் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக அனைவருக்கும் புகட்ட முற்படவில்லை. வந்து பார். ஆராய்ந்து ஏற்றுக் கொள் என்பதே அவர் அறிவுரை. இந்தப் பகுத்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் வழிமுறையை அவர் உபதேசித்ததாலேயே விஞ்ஞானிகள் உள்ளிட்ட அறிவால் அறியும் மனப்பான்மை கொண்டோர் புத்தமதத்தின் பால் வெகுவாக ஈர்க்கப்படுகின்றனர்.

கடவுள் என்றேனும் இந்தப் பூவுலகில் வந்தார் என்றால் அது புத்தரே

 

பேரறிஞர் அனடோல் பிரான்ஸ் தனது சுய சரிதத்தில் இப்படி எழுதுகிறார்: 1890ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி அன்று பாரிஸில் உள்ள மியூசியத்திற்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆசிய கடவுளரின் மத்தியில் மோன மூர்த்தியாக எளிமையாக நின்று கொண்டிருந்த துன்புற்றலையும் மனித குலத்திற்கு புரிதலையும் தயையும் மேற்கொள்ள  வழிகாட்டும் புத்தரின் பால் என் பார்வை பதிந்தது. கடவுள் என்றேனும் இந்தப் பூவுலகில் நடந்திருந்தார் என்றால் அவர் இவரே என்று நான் உணர்கிறேன். கடவுளாக அவரைக் கொண்டு அவர் முன்னால் மண்டியிட்டு பிரார்த்திக்கத் தூண்டப்பட்டேன்.

 

புத்தர் எண்பது வயது வரை வாழ்ந்தார். தனது 35ஆம் வயதில் அவர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். தான் அறிந்த உண்மைகளை வெளிப்படையாக மன்னர்களுக்கும், ஆண்டிகளுக்கும், கற்றோருக்கும் மற்றோருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எளிய மொழியில் கூறினார். அவர் பேசியது புத்த வாஸனா. அதாவது புத்த வாக்கியங்கள் எனப்படும்.

buddha's_statue

ராஜக்ருஹத்தில் கூடிய முதல் சபை

அவர் மஹா நிர்வாணம் அடைந்த பின்னர் மூன்று மாதங்கள் கழித்து இப்போது பீஹார் மாநிலத்தில் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கீரில் கூடினர். பழைய மகத தேசத்தின் தலை நகராக இருந்த அதன் முந்தைய பெயர் ராஜக்ருஹம். பாலி மொழியில் இதை ராஜகஹா என்பர்.

 

இந்த முதல் சபைக் கூட்டத்தில் புத்தர் அருளிய தம்மா அதாவது தர்மமும் வினயமும் ஓதப்பட்டன. தர்மம் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் வினயம் பற்றிய விதிகளில் ஏதேனும் மாற்ற வேண்டுமா என்று ஆலோசனை செய்தனர்.புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தரிடம் சிறு விதிகளை தேவையெனில் மாற்றிக் கொள் என்று சொல்லி இருந்தார். ஆனால் புத்தர் தங்களை விட்டுப் பிரியப் போகிறாரே என்று கண்ணீர் விட்டுக் கலங்கிய ஆனந்தர் அந்த இறுதி நேரத்தில் எவை சிறிய விதிகள் (Minor Rules) என்று கேட்கவில்லை. ஆனால் இந்த விவாதத்தில் மன்னர் மஹா காஸ்யபர் குறுக்கிட்டு, “எதையும் மாற்ற வேண்டாம். அவர் மறைந்தவுடனேயே விதிகள் மாற்றப்பட்டன என்ற பழிப்பெயர் நமக்கு வேண்டாம்” என்றார். அனைவரும் அத ஏக மனதாக ஆமோதித்தனர்.

இரண்டாவது சபையில் தோன்றிய மஹா சங்கிகா

 அடுத்து நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது சபைக் கூட்டம் கூடியது. வினயத்தில் சில சிறு விதிகள் காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றலாமா என்று விவாதிக்கப்பட்ட து. சிலர் மாற்றலாம் என்றனர். சிலர் மாற்றக் கூடாது என்றனர். துறவிகளில் ஒரு பகுதியினர் தனியே பிரிந்து சென்று மஹா சங்கிகா- பெரும் சங்கம்- என்ற அமைப்பை உருவாக்கினர்.

அசோகர் காலத்தில் கூடிய மூன்றாவது சபை.

மூன்றாவது சபைக்கூட்டம் மாமன்னர் அசோகரின் காலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) கூடியது. இதில் தர்மம் பற்றியும் வினயம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. சபைக்குத் தலைமை வகித்த மொக்கலிபுத்த திஸ்ஸா, கதா வாத்து என்ற புத்தகத்தைத் தொகுத்தார்.

இது தேரா வாதம் என்ற பெயரைக் கொண்டது.அசோகரின் மகனான மஹிந்தா இந்த சபையில் ஓதப்பட்ட திரிபிடகா மற்றும் உரைகள் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸ்ரீலங்கா வந்தார். அந்த ஏட்டுப் பிரதிகள் அனைத்தும் அப்படியே மாறாமல் ஸ்ரீலங்காவில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 

மஹாயானம் உருவானது

 அடுத்த நானூறு ஆண்டுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. மஹாயானம் உருவானது. இதற்கு மாறுபட்டது ஹீன யானம் என்று ஆனது.

மிகப்பெரும் மேதையான நாகார்ஜுனர் தோன்றி  மஹாயான கொள்கைகளை சரியான விதத்தில் விளக்கும் மத்யாமிக காரிகா என்ற நூலை எழுதினார்.

ஆக புத்த மதம் தனது தாயகமான பாரதத்திலிருது கிளம்பி, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பர்மா, கம்போடியா,லாவோஸ், சீனா, ஜப்பான் என உலகெங்கும் பரவலாயிற்று.

 

இன்றோ அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் புத்த மதம் எதையெல்லாம் போற்றி வளர்த்ததோ அதையெல்லாம் கற்க ஆயிரக்கணக்கில் ஆர்வலர்கள் கூடுகின்றனர்.

அப்படி இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்? வரும் வாரங்களில் புத்த மதம் பற்றிய வரலாற்று அற்புதங்களைப் பார்ப்போம்.

சின்ன உண்மை

 1950ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் கூடிய பௌத்தர்களின் அமைப்பு ஹீனயானம் என்ற வார்த்தையை ஒட்டு மொத்தமாக நீக்கி விடலாம் என்று முடிவெடுத்தது. ஆக இன்று இருப்பது ஒரே புத்த மதம் தான்!

 

-தொடரும்

 

Please visit Dr R Nagasamy’s following blog to read research articles on Tamil and Sanskrit literature, History and archaeology.

 

http://www.tamilartsacademy.com/

2.சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர்

14 Main Image, at the Mahabodhi Temple, Bodhgaya

by ச.நாகராஜன்

இரண்டாம் உலக மகா யுத்தம்  

உலக சரித்திரத்திலேயே மிக பயங்கரமான ஒரு ஏடு இரண்டாம் உலக மகா யுத்தம். பழைய புராண கால ராட்சஸர்களை நினைவு படுத்துவது போலத் தோன்றிய ஹிட்லர் உலக மக்களை நடுநடுங்க வைத்தான். நாளை என்ன நடக்குமோ என்பது சாமான்யனின் கவலையாக ஆனது. பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தலைமை தாங்கி பிரிட்டிஷ் மக்களை தைரியத்துடன் இருக்குமாறு அறைகூவல் விடுத்தார். நேச நாட்டுப் படைகள் பெரும் வீரத்துடன் போரில் ஈடுபட்டன.

 

 

பங்கரில் அமைதி இழந்து இருந்த சர்ச்சில்

 

நாளாக நாளாக போர் உக்கிரமானது. சர்ச்சில் பங்கர் எனப்படும் பாதாள அறையிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கேயே படுத்து காலையில் எழுந்து யுத்த கள நிலவரங்களை பகுத்துப் பார்த்து அன்றாட உத்தரவுகளை பங்கரிலிருந்தே பிறப்பித்தார் அவர். மதியம் ஒரு குட்டித் தூக்கமும் அங்கே தான். பின்னர் தான் வெளியே வருவார்.

 

 

எல்லையற்ற மன அழுத்தத்தைத் தந்து அவரது முழு சக்தியையும் உறிஞ்சியது உலகப் போர். அமைதியிழந்த அவர் மனம் தவித்தது.

இந்த நிலையில் தான் அவருக்கு ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது,

 

bodhgaya in Bihar

Picture of Bodhgaya Temple in Bihar.

ஹாமில்டன் அனுப்பிய புத்தர் சிலை

 

ஜெனரல் ஐயான் ஹாமில்டன் பர்மாவில் சிதிலமடைந்த விஹாரத்திலிருந்து ஒரு புத்தர் சிலையைக் கண்டெடுத்தார். அதை சர்ச்சிலுக்கு அனுப்பி “ நீங்கள் கவலைப்படும் போதெல்லாம் சாந்தி தவழும் இந்த முகத்தைப் பாருங்கள். உங்கள் கவலைகளைப் பார்த்து சிரியுங்கள்” என்று எழுதியிருந்தார்.

 

 

சர்ச்சில் அதைத் தன் படுக்கை அறையிலேயே யுத்த காலம் முழுவதும் வைத்திருந்தார். கவலைப்படும் போதெல்லாம் அந்த அற்புத புத்தர் அவருக்கு ஆறுதல் தந்தார்.போரை பிரமாதமாக வழி நடத்தி வெற்றிக்கு வழி வகுத்தார்.அஹிம்சையை வலியுறுத்தி கொலையை அறவே ஒதுக்கிய புத்தபிரான் உலகளாவிய கொலைகளை விரும்பாமல் சர்ச்சிலை தெளிவுற சிந்திக்க வைத்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் என்றே எண்ண வைக்கிறது இந்தச் சம்பவம்!

 

 

புத்தரின் உருவத்தைப் பற்றி பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு,”அவரது கண்கள் மூடி உள்ளன. என்றாலும் ஏதோ ஒரு சக்தி அதிலிருந்து வெளிப்படுகிறது. ஒரு அபார சக்தி அந்த சிலை முழுவதும் இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் கூட புத்தர் ஏனோ தொலைவில் இருப்பது போலவே தோன்றவில்லை.அவரது குரல் நம்  காதுகளில் முணுமுணுத்து, “போராட்டத்திலிருந்து ஓடாதே! அமைதி பொழியும் கண்களுடன் எதிர்த்து நில்! வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான பிரம்மாண்டமான வாய்ப்புகளை வாழ்க்கையில் பார் என்று சொல்கிறது” என்கிறார்.

 

 

உண்மை தான், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புத்தரின் விக்ரஹங்கள் லட்சக்கணக்கானோரை கணம் தோறும் ஊக்குவித்து வருகின்றன.

 

 

உயிருடன் இருக்கும் போது சிலை அமைக்கலாமா?

 

புத்தரின் பிரதம சீடரான ஆனந்தர் புத்தரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: “நீங்கள் உயிருடன் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பகோடா அமைத்து (கோவில் கட்டி சிலை வைத்து அதை) வணங்கலாமா”

 

 

புத்தர் பதிலளித்தார் இப்படி : “ஆனந்தா! அது கூடாது. உயிருடன் இருக்கும் போது சிலை வைக்கக் கூடாது. நான் மறைந்த பிறகு வழிபடும் தலத்தை அமைக்கலாம்”

 

garlands in bodhgaya

பாஹியான் தரும் சுவையான வரலாறு

 

புத்தரின் முதல் விக்ரஹம் அமைந்தது பற்றி சீன யாத்ரீகரான பாஹியான் தனது நூலில் ஒரு சம்பவத்தைச் சித்தரித்துள்ளார்.

ஒரு சமயம் புத்தர் சுவர்க்கத்திற்கு மூன்று மாதம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரைப் பார்க்காமல் யாராலும் இருக்க முடியவில்லை. துடித்துப் போயினர். இதை அவரது பிரதான சீடரான சரிபுத்தர் புத்தரிடம் சொன்னார்.

 

 

அதைக் கேட்ட புத்தர்,” சரி, என்னைப் போலவே அசலாக ஒரு சிலையை அமைத்து அவர்களிடம் காண்பி” என்றார். இதனால் மனம் மகிழ்ந்த சரிபுத்தர் அரசனிடம் வந்து நடந்ததைச் சொல்லி. தகுந்த நபர் ஒருவரை  ஏற்பாடு செய்ய வேண்டினார். அரசனும் ஒரு அருமையான சிற்பியை இதற்கென நியமித்தார். அந்த சிற்பி புத்தரின் உருவத்தை சந்தன மரத்தில் செதுக்கினார்.

 

 

அனைவரும் அதைப் பார்த்து ஆனந்தப்பட்டனர். இப்படித் தான் முதல் புத்த விக்ரஹம் உருவானது! நாளடைவில் உலகெங்கும்  பிரம்மாண்டமான சிலைகளோடு புத்த விஹாரங்கள் கட்டப்பட்டன.

புத்த மதம் பிறந்த தாயகமான பாரதத்தைப் போலவே சீனா, தாய்லாந்து, ஜப்பான், பர்மா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் புத்த விஹாரங்கள் பெரிய அளவில் கட்டப்பட்டன.

 

great_buddha_statue

ஸ்வாமி விவேகானந்தர் பார்க்க விரும்பிய புத்த விஹாரம்

 

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. ஒரு முறை சீனாவில் காண்டன் நகருக்குச் சென்றிருந்த விவேகானந்தர் அங்குள்ள புத்த விஹாரம் ஒன்றைப் பார்க்க விரும்பினார். ஆனால் புத்த மதத்தினரைத் தவிர வேறு யாரும் அதற்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கூறிய மொழிபெயர்ப்பாளர் அவரை அங்கு செல்லக் கூடாது என்று கூறினார்.

ஆனால் விவேகானந்தரோ அவரைத் தன்னுடன் வருமாறு கூறி, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறினார்.

 

 

புத்த விஹாரத்திற்குள் இருவரும் (கூட சில ஜெர்மானியப் பயணிகளும் வேறு) நுழைய இருந்த போது தூரத்தில் இருந்த புத்த பிக்ஷுக்கள் அதைப் பார்த்து தமது குண்டாந்தடியை ஆட்டியவாறே வேகமாக ஓடி வந்தனர். இதைப் பார்த்த மொழிபெயர்ப்பாளர் தனது உயிருக்கு பயந்து ஓடலானார். அவர் கையைப் பற்றிய ஸ்வாமிஜி அவரிடம் “ இந்தியாவிலிருந்து வந்த யோகி என்பதற்கான சீன மொழி வார்த்தைகளைச் சொல்லி விட்டு ஓடிப் போகலாம்” என்றார்.

அதைச் சொல்லிவிட்டு ஓடிய அவர் சற்று தூரத்தில் நின்று என்ன நடக்கிறது என்று பார்க்கலானார்.

 

 

தடியைச் சுழற்றியவாறே வந்த புத்த பிக்ஷுக்கள் அருகில் வந்தவுடன் தான் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் யோகி என்பதை ஸ்வாமிஜி உரக்கச் சொன்னார்.

 

 

அவ்வளவு தான், அவர்கள்  அவரை நமஸ்கரித்து ‘கபச்’ (கவசம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையின் திரிபு – தாயத்து என்று பொருள்)தருமாறு வேண்டினர். ஸ்வாமிஜி சில துண்டுப் பேப்பர்களில் ஓம் என்று எழுதி அவர்களிடம் தந்தார். அவர்கள் ஸ்வாமிஜியை மகிழ்வுடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

இதைப் பார்த்த மொழிபெயர்ப்பாளர் பிரமித்துப் போனார்.

இந்த சம்பவத்தை ஸ்வாமிஜி அளசிங்கருக்கு 10-7-1893 தேதியிட்ட கடிதத்தில் விரிவாக விளக்குகிறார்.

 

இந்திய யோகிகளுக்கும் சீனத் துறவிகளுக்கும் காலம் காலமாக இருந்த ஆன்மீகப் பிணைப்பை இந்தச் சம்பவம் நன்கு விளக்குகிறது.

புத்தரின் சிலைகளில் அவரது குணநலன்கள் அனைத்தையும் காண்பிக்கும் சிற்பக்கலையின் நேர்த்தியை இன்றும் கூடக் காணலாம். அதில் உத்வேகம் பெறலாம்.

 

 

சின்ன உண்மை

 48 மீட்டர் (சுமார் 156 அடி) உயரமுள்ள உலகின் மிக உயரமான புத்தரின் சிலை கிழக்கு சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தில் 1610 லட்சம் டாலர் செலவில் வெண்கலத்தில் அமைக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

 

-தொடரும்

This is the second article on The Buddha by Santanam Nagarajan which is publsed in nilacharal.com recently: London Swaminathan. Contact:- swami_48@yahoo.com

புராணங்களின் காலம் என்ன?

puranas (1)

வேத, இதிஹாச புராணங்களைப் படித்த வெள்ளைகாரர்கள் அவைகளுக்கு மனம் போன போக்கில் காலத்தை நிர்ணயித்துவிட்டனர். வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் இருந்ததால் அப்போதைய இந்து அறிஞர்களும் அவர்களைப் பின்பற்றி எழுதத்துவங்கினர். பர்ஜிட்டர் என்பவர் மட்டும் இதில் வரலாறு இருக்கிறது என்று எண்ணி 1913ல் ஒரு புத்தகம் எழுதினார். அதற்குப் பின் புராணங்களில் வரலாறு, பூகோளம், தத்துவம், கதைகள் எனப் பல நூல்கள் வெளியானபோதும் இன்னும் சரியான ஆராய்ச்சி நடைபெற்ற திருப்தி ஏற்படவில்லை. இதற்குக் காரணம் 18 புராணங்கள் சுமார் நாலு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டவை. எட்டு லட்சம் வரிகள்—40 லட்சம் சொற்களைக் கொண்டவை! உலகில் இந்து மத நூல்கள் அளவுக்கு எந்த மதத்திலும் நூல்கள் இல்லை. தமிழ், வடமொழி சமய நூல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் மற்ற மதங்கள் கொசு, இந்துமதம் இமய மலை!

 

கிரேக்கர்கள் புத்தகம் எழுதத் துவங்குவதற்கு முன்னர் இந்துமதத்தில் பிரம்மாண்டமான அளவுக்கு வேதங்கள், பிராமணங்கள், உபநிஷத்துகள் வந்துவிட்டன. இதிஹாசங்களான ராமாயண, மஹாபாரதமும் 18 புராணங்களும் இதற்குப் பின் வந்தவை என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. உண்மையில் புராணக் கதைகள் எல்லாவற்றுக்கும் முந்தையவை. அவைகளைக் கடைசியாக எழுத்தில் வடித்த காலச் சான்றுகளைக் கொண்டு அவைகளுக்கு தவறாகக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

 

உபநிஷத்துக்களில் பழையது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அதில் கூட இதிஹாச புராணக் குறிப்புகள் இருக்கிறது:

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்

மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம

வேத சுதர்வாங்கிரச இதிஹாச

புராணம் வித்யா உபநிஷத் —என்று

பிருஹதாரண்யம் கூறுகிறது. இதை 2800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பொருள்: இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

puranas

 

இந்த ஒருகுறிப்பு மட்டுமல்ல. இதுபோல வேத இதிஹாசங்களில் பல குறிப்புகள் வருகின்றன.

புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள். அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது. மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பாடுகையில் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்’ என்று புகழ்வார். அது புராணத்துக்கும் பொருந்தும்

 

புராணம் என்பது பூதக் கண்ணாடி

‘’புராணம் என்பது வேதத்துக்கு பூதக் கண்ணாடி. வேதத்தில் உள்ளது உத்திரவுகளாக இருக்கும்—ஸத்யம் வட=உண்மை பேசு என்று வேதம் சொல்லுகிறது அது நமக்கு நினைவுக்கு வராது. பல அத்தியாயங்களாகச் செய்யப்பட்ட அரிச்சந்திர புராணததை வாசித்தாதான் அது நினைவுக்கு வருகிறது. வாஸ்தவமான சரித்திரம் தான் புராணம். வேதம் கட்டளை இடுகிறது. அது பிரபு சம்மிதம். புராணம் சுஹ்ருத் சம்மிதம். நண்பனைப் போன்றது. காவியங்கள் காந்த சம்மிதம்.கற்பனை என்னும் காவிய ரசத்துடன் சேர்ந்தது’’—- காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 24-101932 சென்னை உபந்யாசம்

புராணங்களில் ஐந்து பகுதிகள் இருக்கவேண்டும் என்பது மரபு:

1.சர்கம்: பிரபஞ்சத்தின் தோற்றம்

2.பிரதி சர்கம்: மற்ற உயிர்களின் தோற்றமும் மறைவும்

3.வம்சம்: ரிஷிகள், தேவர்களின் சரிதம்

4.மன்வந்தரம்: 14 மனுக்களின் காலம்

5.வம்சானுசரிதம்: சூரிய, சந்திர குல அரசர்களின் வரலாறு

 

புராணங்கள் சுகர், பராசரர் முதலியோரால் கூறப்பட்டவை. மஹாபாரத்தில் எல்லாக் கதைகளும் சுருக்கமாக உள்ளன. ஆகவே புராணம் என்பது மிகப் பழையது. அதில் பல ராஜ வம்சங்கள் போகப்போக சேர்க்கப்பட்டன. இதனால் அவைகளின் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

 

பழையகாலத்தில் ஒவ்வொரு குழுக்களும் வாழ்ந்த இடம் அவர்கள் பெயரால் அழைக்கப்பட்டன. இதுவும் வெள்ளைக்காரர் ம்மனதில் குழப்பத்தை விளைவித்தது. காம்போஜ இனம் வாழ்ந்த இடம் காம்போஜம் என்று அழைக்கப்படது. ஆனால் காலப்போக்கில் யவனர்கள், ஹூணர்கள், சகரர்கள், காம்போஜர்கள் இடம் பெயர்ந்தவுடன் அவர்கள் நாடுகளும் ‘’நகரத்துவங்கின’’.

 

காஞ்சி பராமாசார்ய சுவாமிகள் கூறியதுபோல இதில் நல்ல ஆராய்ச்சிசெய்து உண்மை வரலாற்றை அறிவது நமது கடமை. புராண, ஸ்தல புராண ஆராய்ச்சிக கழகத்தை நிறுவி விரிவான ஆய்வு செய்வது உடனடித் தேவை.

Pictures are taken from other sites;thanks

இசை தரும் நோயற்ற வாழ்வு! – 6

25FR-TYAGARAJA2_1340661g

பாக்யா 12-10-2012 இதழில் 86ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இறுதிப் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்

                                                                  ச.நாகராஜன்

மேளகர்த்தா ராகங்கள் எனப்படும் அடிப்படை ராகங்கள் 72.

“அவை உடலில் உள்ள 72 முக்கிய நாடிகளைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட ராகத்தின் லக்ஷணத்தை உணர்ந்து அனுபவித்துப் பாடுபவர் அதற்குரிய நாடியைக் கட்டுப்படுத்துவார்” என்று பழைய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீக்ஷிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்கள் இசையின் ஆற்றலை உணர்த்துபவை.

 

ஜோதிஸ்வரூபிணி என்ற ராகத்தை இசைத்து குத்துவிளக்கை நெருப்புக்குச்சியின் உதவியின்றி தியாகராஜ ஸ்வாமிகள் ஏற்றி அருகிலிருந்தோரை வியக்க வைத்தார். ராகத்தின் ஸ்வரங்களுக்கு ஏற்ப எரியும் சுடர் ஓங்கியும்  மங்கியும் எரிந்ததையும் அனைவரும் பார்த்து அதிசயித்தனராம். பிலஹரி ராகத்தில் அமைந்த அவரது நா ஜீவ தாரா என்ற கீர்த்தனை இறந்தவனை எழுப்பிய சம்பவமும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. முத்துசாமி தீக்ஷிதரின் நவகிரக கீர்த்தனைகளைப் பாடினால் வயிற்று வலி நீங்கும் (குறிப்பாக ப்ருஹஸ்பதே என்று தொடங்கும் குரு பகவானைப் பற்றிய கீர்த்தனை) என்பதும் சியாமா சாஸ்திரிகளின்  துரு சுகு கீர்த்தனை ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும் என்பதும் இசை விற்பன்னர்களின் நம்பிக்கை.

 

ரத்தக் கொதிப்பை நீக்க அசாவேரி, தலைவலி போக சாரங்கா, தர்பாரி

மற்றும் ஜய்ஜயவந்தி காச நோய் போக மேகமல்ஹார் நெஞ்சு வலி நீங்க தர்பாரி, கோபமும் படபடப்பும் போக ஜய்ஜயவந்தி புன்னாகவராளி, ஸஹானா, மனச்சோர்வை நீக்க நடநாராயணி, தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்க அசாவேரி, வயிற்று வாயு நீங்க ஜோன்புரி பக்கவாதம் நீங்க பைரவி மற்றும் ஆஹிர்பைரவி பசியுணர்வு இல்லாமல் இருப்பதைப் போக்க தீபக் இதய சம்பந்தமான நோய்களைத் தீர்க்க கல்யாணி., சங்கராபரணம் மற்றும் சாருகேசி என்று நோய் தீர்க்கும் ராகங்களின் பட்டியல் நீளுகிறது.

 

குறிப்பிட்ட ஒரு இசையைக் கேட்டவுன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்டார்பின், கார்டிஸால் ஏசிடிஹெச்  இண்டர்ல்யூகின்-1 இம்யூனோக்ளோபிலுன்-ஏ போன்ற பயோகெமிக்கல்கள் இசையைக் கேட்டவுடன் பெரும் மாறுதலை அடைகின்றனவாம். எண்டார்பின்கள் சிக்கலான  மூளை அமைப்பில் உணர்வுகளைத் தூண்டுகின்றனவாம். நல்லதொரு இசையைக் கேட்டால் இவை நமது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பலவற்றை சீராக ஆக்குகின்றனவாம்.இவை அறிவியல் ஆராய்ச்சிகள் தரும் தகவல்கள்!

 

அமெரிக்க மருத்துவமனைகளில் சிலவற்றில் கோரக் கல்யாண் ராகம் ஹைபர்டென்ஷன் நோயைத் தீர்ப்பதற்கு இசைக்கப்படுகிறது! ராக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஓஜே.ஷ்லெர் எலும்பு மஜ்ஜை பதியம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு வலியைக் குறைக்கவும் புதிய மஜ்ஜைகள் ரத்த செல்களை உருவாக்கவும் இசையின் உதவியை நாடுகிறார்.

 

மேளகர்த்தா ராகங்களான 72ஐத் தவிர்த்து ஜன்ய ராகங்கள் எனப்படும் ராகங்கள்  எண்ணிக்கையில் அடங்காதவை. ஆக ராகங்கள் சங்கீதத்தை ஒரு சாகரமாக ஆக்குகின்றன.

 

சென்ற நூற்றாண்டில் திரைப்படத் துறை உருவானவுடன் புதிய இசைப் புரட்சி ஒன்று உருவானது. ராக சாகரத்தில் முத்துக் குளித்து நூற்றுக்கணக்கான திரைப்பட இசையமைப்பாளர்கள் பல்லாயிரக்கணகான பாடல்களுக்கு இசையை அமைக்க ஆரம்பித்தனர். திரைப்படங்கள்  ஜன ரஞ்சகமாய் ஆகவே திரைப்படப் பாடல்கள் மெல்லிசையாக மலர்ந்து கோடிக் கணக்கானோரைப் பரவசப்படுத்த ஆரம்பித்தன.இவற்றில் அநேகமாக பிரபலமான ராகங்கள் அனைத்தும் கையாளப்பட்டு விட்டன!

 

தமக்குப் பிடித்த ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட

பாடல்களையும் அட்டவணைப்படுத்திக் கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்ந்து உடல்நலத்தை யார் வேண்டுமானாலும் மேம்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு உரிய நிபுணர்களை அணுகி வியாதியைப் போக்கிக் கொள்ள அறிவுரைகளைக் கேட்டு சிகிச்சை பெற்று பூரண குணத்தையும் அடையலாம்.

 

இந்த வகையில் உதாரண முயற்சியாக சில ராகங்களும் அவற்றில் அமைக்கப்பட்ட சில திரைப்படப் பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன. இது சிறிய “மாதிரி அட்டவணை” தான் என்பதால் இதைப் பார்த்து ஏராளமான ராகங்களையும் அவற்றில் அமைக்கப்பட்ட பாடல்களையும் வாசகர்களே அமைத்துக் கொள்ளலாம்; இசை தரும் நோயற்ற வாழ்வைப் பெற்று மகிழலாம்!

========================================================================

ராகம்                   பாடல்                            படம்

========================================================================

மோஹனம்         ஆஹா இன்ப நிலாவினிலே       மாயாபஜார்

சுபபந்துவராளி      ஆயிரம் தாமரை மொட்டுக்களே      அலைகள்

ஓய்வதில்லை

சிந்துபைரவி       அன்னக்கிளி உன்னைத் தேடுதே     அன்னக்கிளி

ப்ருந்தாவன சாரங்கா சிங்காரக் கண்ணே  வீரபாண்டிய கட்டபொம்மன்

சுத்த தன்யாசி     சிறு பொன்மணி                 கல்லுக்குள் ஈரம்

கமாஸ்            சித்திரம் பேசுதடி                    சபாஷ் மீனா

ஹிந்தோளம்     அழைக்காதே    மணாளனே மங்கையின் பாக்கியம்

கௌரி மனோஹரி கவிதை அரங்கேறும் நேரம்     அந்த 7 நாட்கள்

புன்னாகவராளி     நாதர் முடி மேலிருக்கும்      திருவருட்செல்வர்

கானடா            பொன் என்பேன்            போலீஸ்காரன் மகள்

—————————————————————————————————————————–

 

அறிவியலும் பாரம்பரிய அனுபவமும் ஒன்று சேர்ந்து  அபூர்வமான பலன்களை ஒரேமனதாக அறிவிக்கும் துறை இசை தான் என்பது எவ்வளவு வியப்பான விஷயம்!! இசை மூலம் ஆல்பா நிலையை அனைவரும் எய்தலாமே!

 Last in the series written by Santanam nagarajan; for 600 more English and Tamil articles, please browse through the blog; swami_48@yahoo.com

*********

 

ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்

B_Id_406817_kawadiyan,delhi haridwar

Kavadi towards Ganges in Delhi-Haridwar national High way.

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும், ஆரிய ஹல்வாவும் திராவிட சர்க்கரைப் பொங்கலும், ஆரிய லட்டும் திராவிட புட்டும், ஆரிய ரங்கோலியும் திராவிட கோலமும், ஆரிய கஜலும், திராவிட தெருக்கூத்தும், ஆரிய ஹிந்துஸ்தானி சங்கீதமும் திராவிட கர்நாடக இசையும், ஆரிய சம்ஸ்கிருதமும் திராவிட தமிழும்— இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம்.. இப்படிச் சொல்லித்தான் வெளிநாட்டுக் காரன் நம்மைப் பிரித்தான். அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, கூலிக்கு மாரடிக்கும் ஒரு சிறிய எட்டப்பன் கும்பல் அவர்களுக்கு இன்று வரை ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது. உலகில் எல்லா நாட்டிலும் கருத்து வேறுபாடுகள், கலாசார வித்தியாசங்கள், சிறிய மோதல்கள் உண்டு. அங்கெல்லாம் இனம் பற்றியே பேசாத ‘’அறிஞர்கள்’’ இந்தியாவில எதைப்பர்த்தாலும் ஆரிய திராவிட இனச் சாயம் பூசி விஷ(ம) சாம்பிராணி போட்டு வருகிறார்கள். காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்!!

 

இதே கொள்கையை பாப்புவா நியூகினி என்னும் தீவுக்கும் பயன் படுத்தினால், அங்கே 700 இனங்களைக் காட்ட வேண்டியிருக்கும். ஏனெனில் அங்கே 700க்கும் மேலான மொழிகளைப் பேசும் மக்கள் இருக்கிறார்கள்.

 

ஆரிய இனவெறிக் கொள்கையை ஐரோப்பாவில் பரப்பிய வெள்ளைதோல் அறிஞர்களுக்கு செமை அடி கிடைத்தது. ஹிட்லர் தான் ஒரு தூய ஆரியன் என்று சொல்லிக் கொண்டு சிந்து சமவெளியில் காணப்படும் இந்துமத ஸ்வஸ்திகா முத்திரையை ஜெர்மனியின் கொடியிலும் தபால்தலையிலும் போட்டுக்கொண்டு ஆறு கோடிப் பேர்களைக் கொன்றான். இப்படி செமை அடி வாங்கியதும் வெள்ளைத்தோல் அறிஞர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு, ஆரிய இன வெறிக் கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டனர். ஆனால் இந்தியாவைத் துண்டாடவும் இந்துமதத்தை அடியோடு ஒழிக்கவும் இது பயன்படும் என்பதால் இந்தியாவில் மட்டும் இதற்கு ‘’சூட தீபாராதனை காட்டி’’ ஜாகிரதையாக ஆராதித்து வருகின்றனர்.

 

பைபிளிலும் குரானிலும் ஆதிக்கிரந்தத்திலும், செண்டவஸ்தாவிலும் இன வேறுபாடு காணாதவர்கள் ரிக்வேதத்திலும் இந்துமதக் கடவுளரான முருகன், சிவன், கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஆரிய –திராவிட இன வேற்றுமையைப் புகுத்தியதை இந்துக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

 

யாருக்காவது வரலாறு சம்பந்தமான ஜோக்குகள் தேவைப்பட்டால் வெளிநாட்டுக்காரன் எழுதிய வரலாறு, சமூகவியல், மானுடவியல் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு ஹைலைட்ட்ர் பேனாவையும் வைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் ஆரிய திராவிட என்ற சொற்கள் வருகிறதோ அதை எல்லாம் ஹைலைட் செய்யுங்கள் அல்லது கலர் பேனாவால் அடிக்கோடு இடுங்கள். பத்துப் புத்தகம் படிப்பதற்குள் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

 

உதாரணத்துக்கு கால்டுவெல் பாதிரியார் எழுதிய புத்தகம் ஒன்று போதும்! தமிழனை மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து ஓடிவந்தவனாகவும், நாகரீகம் அடையாதவனாகவும், சிங்களவர்களை விரட்டி அடித்த வனாகவும்— இப்படிப் பல ஜோக்குகள் கிடைக்கும். இது பற்றி தனியாக பல கட்டுரைகள் வரும்.

 

இந்தியா போன்ற பெருநிலப் பரப்பில் காலநிலை (பருவ நிலை), நிலவியல் மாறுபாடுகள் முதலியவற்றால் இடத்துக்கு இடம் சில விஷயங்கள் மாறுபடும். கோவில் பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி பெட்டி வெல்லம், மதுரை சேலைகள், காஞ்சீபுரம் பட்டு, மணப்பாறை முறுக்கு, –என்று பல சிறப்புகள் இருக்கும் இதனால் ஒருவர் ஆரியர் என்றும் மற்றொருவர் திராவிடர் என்றும் சொன்னால் எவ்வளவு அறியாமையோ அவ்வளவு அறியாமை ஆரிய திராவிட வாதத்திலும் உண்டு.

 

சேர சோழ பாண்டியர்கள் என்னும் மூவேந்தர்களும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் சண்டைபோட்டு ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள். உலகில் வேறு எந்த இனமும் இப்படிச் சண்டை போட்டதில்லை என்பதை சரித்திரம் படித்தோர் அறிவர். ஆயினும் கூட இவர்களை ஆரியர் திராவிடர் என்று இனம் பிரித்துப் பார்க்கவில்லை. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் அப்படியும் 1500 ஆண்டுகளுக்கு அடிதடி! வெள்ளைகாரன் நினைத்தால் இதிலும் ஆரிய திராவிட விஷத்தைத் தூவியிருப்பான்.

B_Id_406812_kawadiyan-pti

Kavadi in Ganges

காவடி, தமிழன் சின்னமா?

ஆரிய திராவிட இனவெறிக்கொள்கைக்குத் தூபம் போடும் நம்மவர்களுக்கும் கொஞ்சம் அறிவு ‘மட்டு’தான். சிந்து சமவெளி பற்றி எழுதும் அறிஞர்களுக்குக் கூட நுனிப்புல் மேயும் சிற்றறிவு தான். காவடி எடுக்கும் வழக்கத்தை நாம் எல்லோரும் அறிவோம். முருகனுக்கு காவடி எடுப்பதைப் பார்க்கிறோம். இதே போல காவடி பட எழுத்து சிந்து சமவெளி முத்திரையிலும் கிடைத்திருகிறது. உடனே இதை தமிழ் வழக்காகவும் ஆகையால் சிந்து சமவெளியினர் திராவிடரே என்றும் இனபேதம் காட்டி கட்டுரை எழுதிவிட்டார்கள். உண்மையில் இது பாரதம் முழுதும் உள்ள வழக்கம். சொல்லப்போனால் காவடி என்பது உலகம் முழுதும் இருக்கிறது.

 

நம் தமிழர்கள் ஆண்டுதோறும் முருகனுக்குக் காவடி எடுப்பதுபோலவே வடக்கேயுள்ள ஹிந்துக்கள் சிவபெருமானை வழிபட ஹரித்வாருக்கு லட்சக் கணக்கில் காவடி எடுக்கிறார்கள். ஹரித்வாரில் கங்கை நதியை வணங்கிவிட்டு இரு புறமும் தொங்கும் பானைகளில் கங்காஜலம் கொண்டு போகிறார்கள். இப்படி காவடியில் தண்ணீர் கொண்டு போகும் வழக்கம் இதாலி, மேரற்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளில் இருந்திருக்கிறது. சாலைப் போகுவரத்து மற்றும் வாஹன வசதிகள் இல்லாத இடங்களில் காவடி இருப்பது சகஜம். இதில் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை.

 

ஐயப்ப பக்தர்கள் கொண்டுபோகும் இரு முடியும் கூட காவடி போன்றதே. மலைபாங்கான பகுதிகளில் 40 நாட்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால் இப்படி சுருக்கமாக இரு முடி என்று வைத்தனர்.

indus_symbols

Indus Kavadi Symbols

அத்தை மகள், மாமன் மகள்—முறைப்பெண்

முறைப் பெண்களை மணப்பது தமிழர்களிடையே காணப்படுகிறது. இதை 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போதாயனர் என்பவர் எழுதிய தர்ம சாஸ்திரத்தில் இது தென்னாட்டில் காணப்படும் முறை என்று எழுதி இருக்கிறார். உடனே வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு— வெறும் வாயை மெண்டவர்களுக்கு அவல் கிடைத்தது போல ஆயிற்று. அடடா, தமிழன் திராவிடன், அதனால்தான் முறைப் பெண்ணைக் கட்டிக் கொண்டான். ஆரியர்களுக்கு இது பிடிக்காத விஷயம் என்று ‘’ஆராய்ச்சிக் கட்டுரைகளை’’ எழுதத் துவங்கி விட்டனர். அவர்களுக்கு எவ்வளவு ஞான சூன்யம் என்பது இப்போது விக்கிபீடியா படிப்பவர்களுக்குக் கூடத் தெரியும்.

அர்ஜுனன் கூட முறைப்பெண் சுபத்திரையைக் கல்யாணம் செய்துகொண்டான். அவன் என்ன திராவிடனா?

 

 

‘’கஸின் மேரியேஜ்’’ Cousin Marriage என்று அழைக்கப்படும் இந்த வழக்கம் குஜராத், ஒரிஸ்ஸா, மஹராஷ்டிரத்திலும் , மத்திய தரை கடல் நாட்டு முஸ்லீம்களிடமும், பாகிஸ்தான் முஸ்லீம்களிடமும் ஆஸ்திரேலிய,ப் பழங்குடி மக்களிடமும் கூட உண்டு. இதில் ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை.

chapati3

உலகம் முழுதும் உடை உணவு, உறைவிடம், ஆடல்,பாடல் ஆகிய எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு எங்களைப் போல ஐரோப்பாவில் வாழ்வோருக்கு பிரிட்டன் என்ற சிறிய நாட்டிலேயே நாலு முக்குகளில் நாலு கலாசாரம், நாலு மொழிகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இங்கெல்லாம் இனவெறிக் கொள்கைகளைக் காணாதவர்கள் இந்தியாவில் வடக்கிலும் தெற்கிலும் மட்டும் ஏன் இன வெறி போதனை செய்தார்கள் என்பதை தயவு செய்து அமைதியான இடத்தில் உட்கார்ந்து சிந்தித்துப் பாருங்கள். ‘’இளிச்சவாயனை கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடுமாம்’’. இது ஒரு தமிழ் பழமொழி. ‘’ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’’ என்பதும் தமிழ் பழமொழிதான். இந்துக்களுக்கு இவ்வளவு பழமொழிகளும் பொருந்தும் என்று நினைத்தார்கள் அறியாத– ‘’விளங்காத’’— அறிஞர்கள்!! இப்போது இந்தியர்கள் விழித்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.

 

அடுத்த கட்டுரையில் ரோகிணி நட்சத்திரத்தில் சங்கத் தமிழன் ஏன் கல்யாணம் செய்தான்? நிலவில் ஏன் முயலைப் பார்த்தான்? சிந்துவெளியில் இந்துக்கள் ஏன் அரச மரத்தை வைத்தார்கள்?, பேயை விரட்ட ஏன் ஐயவி புகைத்தார்கள்? என்பதையும் இவை ஆரியமா? திராவிடமா? என்பதையும் பார்ப்போம்.

dosa

Please read my (London Swaminathan) articles posted earlier:

1.Aryan Hitler and Hindu Swastika

2.Sibi Story in Old Tamil Literature

3.Were Moses and Jesus Aryans? (Two Parts)

4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)

5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)

6. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)

and 600 more articles on Indus Valley Civilization and Hinduism.

இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

026maruthi

 

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

(முதல் பகுதியைப் படித்துவிட்டு இப்பகுதியைப் படிக்க வேண்டுகிறேன்)

 

பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை

உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காஉ என்று எச்சரிக்கிறார்.

 

‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)

 

‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)

 

‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே  அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)

 

‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)

‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)

 

மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).

 

சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!

014maruthi

அருந்ததி காட்டல்

ஆரிய திராவிட இனவெறியர்களுக்கு செமையடி கொடுக்கும் சான்றுகள் சங்க இலக்கியத்தில் ஆயிரம் ஆயிரம் உண்டு. அதில் ‘’அருந்ததி காட்டல்’’ என்னும் சடங்கு மிக முக்கியமானது. அருந்ததி கீழ் ஜாதிப் பெண். ஆனால் பத்தினிப் பெண்களுக்கு உலக மஹா உதாரணமாகத் திகழும் உத்தமி. புது மணத் தம்பதிகள் முதல் இரவுக்கு முன் இந்த மஹா உத்தமியை நட்சத்திர வடிவில் தரிசித்துவிட்டுத் தான் படுக்கை அறையில் நுழையவேண்டும். இவளுடைய புகழ், சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது: புறம்.122; ஐங்குறு.442; பதிற்று.31-27; பெரும்பாண் 30;கலி.2-21;சிலப்.1-27

 

இமயம் முதல் குமரி வரை பின்பற்றப்பட்ட இவ்வழக்கை மனுவும் மறைமுகமாகக் குறிப்பிடுவார்: ‘’கீழ் ஜாதியில் பிறந்து வசிஷ்ட முனியுடன் சேர்ந்த அக்ஷமாலாவும்(அருந்ததி), மந்தபாலாவுடன் சேர்ந்த சாரங்கியும் மதிக்கப்படவேண்டியவர்கள்’’ (4-23)

 

சீதையின் மகத்தான சக்தி (சீதாதேவி சொன்னாள்; கண்ணகி செய்து காட்டினாள்)

‘’ அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் (கம்ப ராமாயணத்தில் சீதை)

 

 

பொருள்:- ஈரேழு (14) உலகங்களையும் என் சொல்லினால் (சாபத்தால்) சுடும் சக்தி எனக்கு உண்டு. என் கணவன் வில் ஆற்றலுக்கு பெருமை சேர்ப்பதற்காக காத்திருக்கிறேன். அவன் ஆற்றலுக்கு இழுக்கு வரக்கூடாது-

 

(தாயே என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் ராம பிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்ன அனுமனிடம் சீதை கூறியது இது)

032maruthi

இதோ வேத கால, சங்க கால புலவர் பட்டியல்:

வேத காலம்: அதிதி, அபலா, தக்ஷிணா, கோஷா, இந்திராணி, ஜுஹு, கத்ரு, லோபாமுத்திரை, ராத்ரி, ரோமச, சசி, சஸ்வதி, சிகண்டினி காஷ்யபி, ஸ்ரத்தா, சரமா,சிக்தா, சுதேவி, சூர்யா, சரஸ்வதி, உஷஸ், ஊர்வசி, விஸ்பலா, விஸ்ருஹா,விஸ்வவாரா, வாகம்பரிணி, வசுக்ரா மனைவி, வாக், யமி

சாம வேதம்: நோதா, அக்னிஷ்ட பாஷா, சிகந்தினி வாவரி, கன்பாயனா

 

சங்ககாலம்: (இந்தப் பெண் கவிஞர்களின் பெயர்கள் சில வியப்பான உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. பல ஆண் மற்றும் பெண் புலவர்களின் பெயர்களுக்கு முன்னால் ‘நல்’ என்ற விகுதி/முன்னொட்டு வருகிறது. இது சம்ஸ்கிருத மொழி வழக்கு. சு+கந்தி, சு+மதி, சு+வர்ணா, சு+சேதா என்பது போல நப்+பசலை, நச்+ செள்ளை என்று வருகிறது. இதே போல வெண் என்ற முன்னொட்டும் உண்டு. சிந்து சமவெளி எழுத்துக்கள் இப்படி வராது என்று சொன்ன அறிஞர்கள் இப்போதாவது தவற்றைத் திருத்திக் கொள்ளட்டும். ரிக்வேதத்தில் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர்கள் சொன்ன கருத்தை வைத்து செயற்கைப் பெயர்களை அளித்தார் வியாச மகரிஷி. இதே ‘டெக்னிக்’கை சங்க இலக்கியத்தைத் தொகுத்தோரும் பின்பற்றியுள்ளனர். பலருக்கு காரணப் பெயர்களைச் சூட்டியுள்ளனர். ஆகவே கீழ்கண்ட புலவர் பெயர்களில் சில செயற்கைப் பெயர்களாக இருக்கலாம்: எ.கா. காவற்பெண்டு, காக்கை பாடினியார்)

 

அவ்வையார், அஞ்சில்அஞ்சியார், ஆதிமந்தியார், ஊன் பித்தை, காவற்பெண்டு, காக்கை பாடினியார், கழார்க் கீரனெயிற்றியார், காமக்கணியார் (காமாக்ஷி), வெண்ணிக் குயத்தியார், வெள்ளிவீதியார், வெண்பூதியார், வெண்ணாகையார், வெள்ளெருக்கிலையார், வருமுலையாத்தி, நக்கணையார், நன்னாகையார், நல்வெள்ளையார், நப்பசலையார், நச்செள்ளையார், நன்முல்லையார், நெடும்பல்லியத்தை, பொன்மணியார், மாற்பித்தியார், பேய்மகள் இளவெயினி, மாசாத்தியார், குறமகள் குறியெயினி, பூங்கண் உத்திரையார், பெருங்கோப்பெண்டு.

 

(சிலர் தமிழன்பு காரணமாக இந்த எண்ணிக்கையைப் பெருக்கியும் காட்டுவர். சிறு ‘ஸ்பெல்லிங்’ மாறுதல் இருந்தாலும் அவரைத் தனிப் புலவராக காட்டுவோரும் உண்டு.)

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.).

 

படங்கள் ஆர்ட்டிஸ்ட்மாருதி. பிளாக்ஸ்பாட்.காம். இலிருந்து எடுக்கப்பட்டன.

Pictures are taken from artistmaruthi.blogspot.com; thanks.

swami_48@yahoo.com

 

இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

tamil kili

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியையும், அறிவு முதிர்ச்சியையும் அந்த நாட்டின் பெண்களை வைத்து எளிதில் கண்டு பிடித்து விடலாம். பழங்கால இந்தியாவின் பெண்கள் உலகிலேயே மிகப்பெரிய அறிவாளிகள். வேத காலத்தில் மட்டும் 27 பெண் கவிஞர்களும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னால் சங்கத் தமிழில் 27 க்கும் மேலான பெண் கவிஞர்களும் இருந்தனர். இதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. கிரேக்கம், சீனம், ஹீப்ரூ, லத்தீன் மொழிகளில் இப்படிப்பட்ட பெண் கவிஞர்கள் இல்லை. ஒன்றிரண்டு பெயருக்கு இருக்கிறார்கள். அவர்களும்  காலத்தால் பிற்பட்டவர்கள்.

 

1.கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞர் எழுதிய ‘இலியட்’டும் ‘ஆடிசி’யும்தான் முதல் நூல்கள். இதே காலத்தியது பிருஹத் ஆரண்யக உபநிஷத் (கி.மு.எட்டாம் நூற்றாண்டு). இதில் வரும் கார்க்கி வாசக்னவி என்ற பெண்தான் உலகின் முதல் தத்துவ ஞானி.. ஜனகன் என்ற மன்னன் உலக தத்துவ அறிஞர் மகாநாட்டைக் கூட்டினான். அதற்கு ஏராளமான தத்துவ வித்தகர்கள் நாடு முழுவதில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜனகன் ஒரு சில கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு விடை கூறுவோர்,  மாட்டின் கொம்பின் கட்டப்பட்டுள்ள ஆயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தான். எல்லோருக்கும் பயங்கர ஆசை. ஆனால் மிகப்பெரிய அறிவாளி யாக்ஞவல்கியர் தானே அறிவாளி என்று சொல்லி சிஷ்யர்களைப் பர்த்து பொற்காசுகளுடம் மாடுகளை ஓட்டிச் சொல்ல உத்தரவிட்டார்.

 

சபையில் ஒரே மௌனம். திடீரென்று ஒரு பெண் குரல், ‘’நிறுத்துங்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்’’ என்று தடுத்தாள், கேள்விக் கணைகளைத் தொடுத்தாள். யாக்ஞவல்கியரின் ஆசையைக் கெடுத்தாள். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அப்போதே ஒரு பெண் ‘அசெம்பிளி’க்கு (அறிஞர் குழாம்) வர முடிந்தது. கண்ணகி, திரவுபதி போல சபையில் கேள்வி கேட்கவும் முடிந்தது. உலகில் இந்தப் பெண்மணிக்கு ஈடு இணையானவர் இன்றுவரை இல்லை.

 

2.இதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தமிழ் நாட்டில் வாழ்ந்த அவ்வையாரும் இது போல மன்னர்களைக் கேள்வி கேட்கவும், தட்டிக்கழிக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார்.. மாபெரும் சக்திவாய்ந்த சோழ, சேர ,பாண்டிய மன்னர்கள் மூவரும் அதிசயமாக, ஒற்றுமையாக, ஒரு சேர இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு பெரு மகிழ்ச்சி. ராஜசூய யக்ஞம் செய்த பெருநற்கிள்ளியின் அவையில் இந்தக் காட்சியைக் கண்டார். பேரானந்ததம் கொண்டார். அதே அவ்வையார் இன்னொரு மன்னரின் அவைக்குப் போனபோது, ‘’அடே மன்னா! உன்னுடைய ஆயுதங்கள் அனைத்தும் பளபள என்று இருக்கின்றன. நீ சண்டை போடப் போகிறாயே அந்த மன்னனுடைய வாள், ஈட்டி முதலியன பழையதாக கூர் மழுங்கி இருக்கின்றன’’ என்றார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவனுக்கு அறிவுரை வழங்கினார். உனக்கோ போர் என்றால் என்ன என்றே தெரியாது, அனுபவம் இல்லாத பேர்வழி. அவனோ பல போர்க்களங்களைக் கண்டவன், ஜாக்கிரதை!!! என்று சொல்லாமல் சொன்னார்.

tamil aru

3.ஆதிகாலத்தில் வேதம் படிக்க பிராமணச் சிறுவர்கள் போனவுடன், குரு முதலில் கேட்கும் கேள்வி, உன் குலம் என்ன, கோத்திரம் என்ன? என்பதாகும். இப்போதும் கேட்கிறோம். வேறுவிதத்தில்; நர்சரி பள்ளிக்குப் போனவுடன், மனுவை நிரப்புவதும், நன்கொடை, கல்விக் கட்டணம் கட்டுவதும்தான் முதல் வேலை. பல பள்ளிக்கூடங்களில் தந்தை தாயாருக்கும் இன் டர்வியூ—எங்கள் லண்டனைப் போல!! வேத காலத்தில் ஒரு பையனுக்கு அப்பா யார் என்று தெரியாது. அவன் அம்மா அஞ்சவில்லை. பிள்ளைக்குப் படிக்க ஆசை இருக்கிறது. போனால் என்ன என்று அனுப்பிவிட்டாள்.

 

ஆசார்யர் ( ஆசிரியர்) கேட்ட முதல் கேள்வி, ‘’டேய், பையா, உன் குலம் என்ன கோத்திரம் என்ன, சொல்லு?

பையன் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் ‘’சார், அப்பா பெயர் எல்லாம் தெரியாது. அம்மா பெயர் ஜாபாலா. அதை மட்டும்தான் அம்மா சொல்லச் சொன்னாள்.’’

‘’அடடா! என்ன தைரியமாக உண்மை பேசுகிறாய். வேதம் படிப்பவனுக்கு சத்தியமே அடைக்கலம். இன்று முதல் நீ என் மாணவன். உன் பெயர் சத்யகாம ஜாபாலா’’ (உண்மை விரும்பி=சத்யகாமன்) என்றார் குரு. இதுவும் உபநிஷத்தில் உள்ள கதை. ஜாபாலாவின் அறிவுக்கும் துணிவுக்கும் நிகரான ஒரு பெண் எந்த நாட்டு இலக்கியத்திலும் இல்லை.

3.திரவுபதியின் புடவையை உருவி அவளை அவமானப்படுத்த துரியோதனன் தம்பி துச்சாதனன் இழுத்து வந்தபோது அந்த சபையில் அவள் எழுப்பிய கேள்விகளும் சட்டப் பிரச்சினைகளும் உலகில் எந்த நாட்டுப் பார்லிமெண்டிலும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட மஹா அறிவு, மஹா துணிச்சல்.

 

கண்ணகியும் மிக சக்தி வாய்ந்த பாண்டிய மன்னனைப் பார்த்து, ‘’தேரா மன்னா, செப்புவதுடையேல்’’ என்று விளிக்கிறாள். ‘’டேய், முட்டாள்’’ என்று சொல்லுவதற்குச் சமம் இது. பின்னர் தனது குலம் கோத்திரம் முதலியவற்றை உத்தரகுருவை ஆண்ட சிபியின் காலத்தில் இருந்து அக்கு வேறு ஆணி வேராகப் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டு, பிள்ளையார் கோவிலில் சதிர்த் தேங்காய் உடைப்பதைப் போல சிலம்பை மன்னன் முன்னால் போட்டு உடைக்கிறாள். உண்மை ‘’முத்து முத்தாக’’ வந்தது! இப்படி இந்தக் காலத்தில் செய்தால், முதல்வரோ, பிரதமரோ அவருடைய குண்டர்களோ (*ஸாரி, தொண்டர்கள்) என்ன செய்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை.

 

4.உலகின் முதல் இலக்கண ஆசிரியன் பாணினி. அவன் சம்ஸ்கிருதத்துக்கு எழுதிய பாணீணீயத்தைக் கண்டு கம்ப்யூட்டர் உலகமே வியக்கிறது. அப்படிப்பட்ட பாணிணி 2700 ஆண்டுகளுக்கு முன் பெண் ஆசிரியைகள் இருந்ததை நமக்குத் தெரிவிக்கிறான்.

 

5.வேதகால, சங்க கால பெண் புலவர்கள் சாமி, மன்னன் என்று மட்டும் அலையவில்லை. எல்லாப் பொருள் குறித்தும் பாடினர். சீதை, தமயந்தி, நளாயினி, அகல்யை, மண்டோதரி, திரவுபதி ஆகியோரின் வாழ்க்கைச் சரிதம் படிப்பவர்களுக்கு அவர்களின் அறிவின் வீச்சு தெரியும்.

tamil penkal

இரண்டாம் பகுதியில் வேத கால ,சங்க கால பெண் புலவர் பட்டியலுடன் பெண்கள் குறித்து மனு கொடுக்கும் எச்சரிக்கையும் வரும். படிக்கத் தவறாதீர்கள்—- தொடரும்…….

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from World Tamil Conference Souvenir,thanks.Contact swami_48@yahoo.com

 

தமிழில் யமன்!!

??????????????????????????

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

English version of this article is posted already.

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.

யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.

சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.

ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)

பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.

இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.

TIBET15_Yama, 16c

ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.

திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.

பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:

‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)

இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)

என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!

yama

இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?

மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.

திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.

மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான்.  தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே  ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம்  என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.

 

யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:

1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.

2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.

3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.

4.யமனுடைய மனைவியர்  பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.

5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.

6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.

7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.

8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.

யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!

9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.

10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.

ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com

நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2

el_010_moon_hare

 

(Hare on moon is in Sanskrit and Sangam Tamil literature; it is in Buddhist Jataka stories and Mayan culture.

(நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு Part -1 என்ற எனது முந்திய கட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்கவும்:லண்டன் சுவாமிநாதன்)

 

பிரிட்டிஷ் மஹாராணியின் பேரன் வில்லியத்துக்கு ஆண் குழந்தை பிறந்த (July, 2013) நாளன்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு செய்தி வெளியிட்டன. அது மேலை நாடுகளில் சந்திரன் பற்றிய நம்பிக்கை என்ன என்பதைக் காட்டுகிறது. பௌர்ணமியை ஒட்டி புதிய ராஜா பிறப்பார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று மகப்பேறு தாதிமார்கள் கூறினர்.

 

பிரிட்டனில் பிரசவ ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் தாதியர் இப்படி அலுத்துக் கொள்வார்களாம்: ‘’அடடா! இன்று பௌர்ணமி தினம்! நான் இன்று சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். இன்று மிகவும் வேலை வரும்”. அதாவது பௌர்ணமி என்றால் அதிகம் குழந்தைகள் பிறக்கும் என்பது மேலை நாட்டார் நம்பிக்கை. கடல் அலைகள் பௌர்ணமி அன்று பொங்கும், அது போல தாய்மார்களின் கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீரும் (பனிக்குடம்) பொங்கி குழந்தையை விரைவில் வெளியே தள்ளும் எனபது இதன் பொருள். ஆயினுமிது விஞ்ஞான உண்மையா எனபதை நிரூபிக்க போதுமான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.

 

பிராமணர்களும் பௌத்தர்களும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் படிப்பதை விட்டு உபவாசம் இருப்பதில் பொருள் இருப்பதை சமீபத்திய பத்திரிக்கை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி, சதுர்தசி நாட்களில் பிராமண வேத அத்தியயனம் இருக்காது. இதே போல பவுத்தர்கள் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களில் உபோசத் (உபவாசம்) இருப்பார்கள். இந்த நாட்களில் கடல் அலைகளின் சீற்ற்ம அதிகரிப்பதால் மீனவர்கள் கூட மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஆக கடலில் ஏற்படும் மாற்றம் உடலிலும் உண்டு என்பதை இந்துக்கள் அறிந்திருந்தார்கள். ‘’அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு’’ என்பது இந்துக்களின் கொள்கை.

pirai sudi

Hindu God Shiva with crescent moon ( in Tamil Pirai Soodi)

 

கடல் அலைகளில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அளந்து பார்த்ததில் பௌர்ணமி நாட்களில் இரு மடங்கு இருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பைத் தந்துள்ளது.( The level of bacteria in water varies with the lunar cycle and highest during a full and new moon, a study of California beaches found). கடலில் வளரும் பவளம் என்னும் பிரணிகளில் இருந்தே நமக்கு நவரத்தினக்களில் ஒன்றான பவளம் கிடைக்கிறது. இந்தப் பவளப்பூச்சிகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் முட்டைகளை வெளியிடுகின்றன.

பசிபிக் தீவுகளில் வாழும் நண்டுகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் குடியேற்றம் செய்கின்றன. ஆக முழு நிலவு எனபது பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது உயிரியல் விஞ்ஞானிகள் அறிந்ததே.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் முழு நிலவு (பௌர்ணமி) நாட்களில் நித்திரை/தூகம் கெடுவது உண்மையே. மக்களின் ஹார்மோன் அளவை அளந்து பார்த்ததில் ஹார்மோன் அளவு குறைவதும் இதனால் 20 நிமிடம் தூக்கம் குறைவதும் தெரியவந்துள்ளது. (Despite modern comforts, lunar cycles still alter our brain activity. Swiss researchers found hormones which regulate our sleep drop during a full moon, giving us 20 minutes less in the land of nod).

sikh with crescent moon

A Sikh with crescent moon

சிலருக்கு நிமிடக் கணக்கில் இல்லாமல் மணிக் கணக்கிலும் போகலாம். மொட்டை மாடியில் சந்திரனுக்கு நேரே தூங்கக்கூடாது என்று பாட்டிமார்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிச் செய்திகள் அனைத்தும் விஞ்ஞான பத்திரிக்கைகளில் வந்தவற்றின் சுருக்கம். மேலும் விவரம் வேண்டுவோர் New Scientist, Nature பத்திரிக்கைகளில் பெறலாம்.

தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.

ஏற்கனவே ஆங்கிலத்தில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

 

CylinderSealMoonGod

 

Moon was worshiped as Nanna in Mesopotamia. Pictures are taken from different websites; thanks.

contact swami_48@yahoo.com