அபிராமி அந்தாதி- கண்ணதாசன் விளக்கவுரை! (Post No.4732)

Date:12 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-21 am

 

WRITTEN by S Nagarajan

 

Post No. 4732

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

அருமையான அந்தாதி

அபிராமி அந்தாதியும் கண்ணதாசனின் விளக்கவுரையும்!

 

ச.நாகராஜன்

1

அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியை பல்லாயிரக் கணக்கானோர் தினமும் சொல்லி வழிபடுவது கண்கூடு.

தேர்ந்தெடுத்த தெய்வீ கச் சொற்களால் அன்னையைப் போற்றும் இந்த அந்தாதி நூறு பாடல்களைக் கொண்டது.

அபிராமி பட்டரை அன்னை ஆட்கொண்ட திருவிளையாடல் அனைவரும் அறிந்ததே!

சோழ நாட்டில் புகழ்பெற்ற தலமான திருக்கடையூரில்  அபிராமி பட்டர் என்னும் ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார்.

திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டுள்ள அன்னை அபிராமவல்லியை அவர் வழிபட்டு வந்தார்.

பித்தன் போன்ற அவரது உயரிய நிலையை ஏனையோரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது பெருமையை உலகினர் அறியச் செய்ய அன்னை திருவுளங் கொண்டாள்.

அந்தக் காலத்தில் முதலாம் சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்டு வந்தார். (கி.பி.1675-1728).

ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராடி விட்டு திருக்கடையூர் வந்த மன்னர் அபிராமி பட்டரை பித்தன் என்ற நிலையில் கண்டு, ‘இவர் யார்’ எனக் கேட்டார்.

‘இவர் ஒரு தேவி பக்தர்.பித்தர்’ என பதில் கிடைக்க அவர் அபிராமி பட்டரின் நிலையை அறிய வேண்டி, அவரிடம், “இன்று என்ன திதி?” என்று கேட்க அவரோ, ‘இன்று பௌர்ணமி’ என்றார்.

அந்தப் பதிலைக் கேட்ட அரசர் அங்கிருந்து சென்றார்.

தன் நிலைக்கு வந்த பட்டர் அரசன் வந்ததையும் தான் கூறியதையும் அறிந்து மனம் மிக நொந்தார்.

அம்பிகை முன் ஒரு குழியை வெட்டி அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளால் ஆன உறியைக் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டு, “அம்பிகை எனக்கு நேர்ந்த இந்தப் பழியை நீக்கி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு அபிராமி அந்தாதியைப் பாடலானார்.

ஒரு பாடலுக்கு ஒரு கயிறு வீதம் அறுத்துக் கொண்டே வந்த அவர் 79ஆம் பாடலைப் பாடத் தொடங்கினார்.

‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலைப் பாடத் தொடங்கியவுடன் மனமிரங்கிய அன்னை அபிராமி அவருக்குக் காட்சி அளித்து தன் தாடங்கத்தை வானில் காட்ட அது ஜொலித்து பௌர்ணமி நிலவெனக் காட்சி அளித்தது.

நடந்ததை அறிந்த மன்னர் பட்டரின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றினார்.

‘உதிக்கின்ற’ என்று ஆரம்பித்த அந்தாதி அதே வார்த்தையான ‘உதிக்கின்ற’ என்ற வார்த்தையுடன் முடிவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

 

2

வழிவழியாக அன்பர்கள் இந்த அந்தாதியை ஓதி அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.

இந்த அந்தாதிக்குக் கண்ணதாசன் ஒரு மிக எளிய உரையை இனிய தமிழில் வழங்கியுள்ளார்.

சில பாடல்களையும் அவரது உரையையும் கீழே பார்க்கலாம்:

பாடல் 1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்

பாடல் 7

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!

பாடல்கள் 10,11,12,13

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். – எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்துநான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!

பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

 

 

பாடல் 24

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.

பாடல் 28

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.

 

 

பாடல் 36

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.

பாடல் 37

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!

 

பாடல் 56

 ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.

 

பாடல் 61

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.–
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!

 

பாடல் 69

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.

பாடல் 79

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).

 

பாடல் 86

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டுகதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.

பாடல் 87

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,–விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)

பாடல் 94

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.

 

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்

3

அமிர்தமாக வர்ஷிக்கும் அபிராமி அந்தாதியில் 18 பாடல்களைப் பார்த்தோம்.

அதற்கு அருமையான உரையை அன்னையின் அருளால் கண்ணதாசன் தந்த பாங்கினையும் மேலே பார்த்தோம்.

நூறு பாடல்களுக்குமான அவரது உரையைப் படிக்கும் போது சிந்தை தெளிவுடன் பக்தி மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.

 

முழு நூலையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பும் அன்பர்கள் www.projectmadurai.org  என்ற இணையதளத்தை நாடலாம்.

இந்தத் தளம் தமிழுக்கும் தெய்வீகத்திற்கும் ஆற்றி வரும் தொண்டு மிகவும் போற்றற்குரியது.

நன்றி: www.projectmadurai.org   

***

பாரதி போற்றி ஆயிரம் – 49 (Post No.4731)

Isaikkavi Ramanan as Bharati, picture by Manion cgs

DATE – 12 FEBRUARY 2018
Time uploaded in London- 5-52 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4731

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 318 முதல் 326

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

எதிர்பாரா இன்னல், அமரமேற்றல் மற்றும் மக்கள் துயர்  ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்

எதிர்பாரா இன்னல்

தினமும் கோவில் யானைக்கு – பிரசா

   தத்தை அளிப்பது வழக்கமாகும்!

கனன்று ஒருநாள் வெறிகொண்டு – யானை

   குணமும் மாறுப டநின்றதுகாண்!

வினயம் அறியா பாரதியார் – பழமுடன்

   உடைத்த தேங்காய் அதற்கிட்டார்!

மனவெறி கொண்டு பாரதியை – யானை

   மிடுக்குறப் பற்றித் தூக்கியதே!

 

தூக்கிப் பற்றி பாரதியை – வெடுக்கெனத்

   தரையில் போட்டது யானையுமே!

கூக்குர லிட்டுப் பாரதியார் – யானையின்

   கால்களுக்கிடையே விழுந்தார்காண்

தாக்கிய யானையின் செயலறிந்து – பதறி

   குவளைக் கண்ணன் ஓடிவந்தார்!

ஊக்கிய உள்ளத் துடிப்புடனே – விரைந்து

   இறுகப் பற்றினார் பாரதியை

 

பாரதி உடலை ஒருங்குப்பற்றி – அலாக்காய்ப்

   பிடித்து வந்து கிடத்தினார்காண்

தீரன் கிருட்டின மாச்சாரி – திறத்தால்

   துயரம் தீர்த்தார் பாரதியார்

பாரதி அருளைப் பெற்றவராம் – பாரதி

   பாரதப் புரட்சிக் கவிஞராவர்

இராயப்பேட்டை மருத்துவத்தில் – பாரதி

   உடல்நல சிகிச்சை ஏற்றார்காண்!

 

அமரமேற்றல்

 

ஏற்றார் உடல்நலம் பாரதியார் – அனுதினம்

   அலுவல கம்போய்ப் பணிபுரிந்தார்!

ஆற்றல் பெற்றார் பாரதியார் – எனினும்

   அவதி வயிற்றுப் போக்கேற்றார்!

ஏற்புடைக் கடவுள் பரம்பொருளே! – அதனை

   இயல்பா யறிந்தார் பாரதியார்!

ஏற்புழி கட்டுரை எழுதினாரே! – அதுவே

   மனித னுக்கு  மரணமில்லை.

 

மரண மில்லா பெருவாழ்வு – ஏற்போன்

   மகிமை பரமருள் அமரமேற்பான்!

சிரமம் வயிற்றுப் போக்குடனே – பணியை

   செவ்வனே புரிந்தார் பாரதியார்!

இரக்கங் காட்டி பணியேற்றார் – மித்திரன்

   அரங்க சாமி ஐயங்கார்!

உரமிகு உடலைப் பெறுதற்கு – பாரதி

   ஏழு நாட்கள் விடுப்பேற்றார்.

 

விடுப்பு ஏற்ற பாரதியார் – வீட்டில்

   உடல்வ ளம்பெற ஓய்வெடுத்தார்!

தொடுத்த கோட்டு, தலைப்பாகை – அணிந்தே

   தேசத் தொண்டை நினைத்தார்காண்!

நடுக்க முற்று வாயொலிக்க – பாடலாம்

   நல்லதோர் வீணை இசைத்தாரே!

ஒடுங்கி மனமும் உடல்சோர – யாவரும்

   அலற இயற்கை எய்தினார்காண்!

 

மக்கள் துயர்

 

எய்த குறிக்கோள் பலவிருக்க – பாரதி

   அமரம் கண்டார் விதியாலே!

தொய்வு ஏற்று செல்லம்மாள் – மக்கள்

   சூழ்ந்து வெம்பித் தவித்தார்கள்!

வெய்துய ருற்ற விசுவநாதர் – இளவல்

   வேதனை யுற்றுக் கலங்கினாரே

செய்தி எங்கும் பரவியது – நாடே

   சோர்ந்து வெந்துயர் துய்த்தனர்காண்

 

துய்த்துக் கண்ணீர் சொரிந்தார்கள் – தேசத்

   தலைவர் பலரும் கலங்கினார்கள்!

எய்தவன் இருக்க அம்பைநோவ – நாமும்

   எடுத்தோம் பிறப்பு நன்றறிவோம்!

பெய்தான் உயிரை உடற்கூட்டில் – இறைவன்

   பெட்புறு செயலை யாமறிவோம்!

தெய்வம் எழுத்து எழுதுகோலும் – வாழ்வு

   தேசப் பற்றுமே பாரதியார்

 

பாரதி புவியில் வாழ்ந்தகாலம்  – முப்பத்

   தொன்பது ஆண்டுகள் என்றறிவோம்!

நீரதன் புதல்வர் என்றுநம்மை – பாரதத்

   தாயிடம் கூறிப் போற்றினார்காண்.

பூரண சுதந்திரம் பாடினாரே – எனினும்

   பாரத சுதந்திரம் கண்டிலரே!

பாரத விடுதலை வேண்டிநின்றார் – அமரராய்ப்

   பார்த்து மகிழ்ந்தார் பாரதியார்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’ (Post No.4729)

 

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-49

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4729

 

PICTURES ARE TAKEN from various sources

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

வெற்றி வேற்கையில் வரும் இந்த வாசகத்தின் பொருள்:

சுழியா= சுழித்துக் கொண்டு

வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்

இழியாது = இறங்காது

ஒழிவது = நீங்க வேண்டும்.

 

 

தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.

ஆசை யாரை விட்டது?

 

ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.

திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!

 

உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.

 

கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.

 

திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.

ராமப்பன் கரையில் திருதிருவென  முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.

 

ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;

 

ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்.

 

–சுபம்–

Stories based on two Tamil Proverbs (Post No.4730)

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 15-47

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4730

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

In a town in South India there was a wealthy Brahmin lady who was living alone. In those days, robbers enter the town and loot the houses. But they followed certain rules. They will only rob rich people, that too only after informing them!

 

One day this Brahmin lady also received a note saying on such and such day the house will be robbed. This lady was a clever lady. She knew that she can’t prevent them and any attempt to stop them will result in bloodshed. So she prepared the best food on the day for the robbers. The flavour of the food items travelled far away in the air in the streets. Since the town people knew about the robbers’ visit all of them shut the doors and switched off the lights.

 

This lonely lady left the door slightly open. The robbers came beating big drums and entered the house. This lady welcomed them with a smile and asked them to eat first and then continue their work. They couldn’t say no because of the excellent smell of the food. They ate to their full stomach. Before they finished eating this clever lady spread a silk saree on the floor and placed all her jewels and silk sarees on it signalling to them to take them. The juniors in the group were waiting for the orders from the chief of the robbers. When he kept quiet the junior robbers asked him whether they can lay their hands on them.

 

No, he said firmly.

There are proverbs in Tamil that you should never harm a house where you ate. They say that you should ever think about the people who gave you salt ( food). Never ever steal in the house wo gave you food. So don’t touch anything; let us go.

 

He not only left the house intact, later he gave his plundered property to that family. This is a true story, but the author who wrote it in 1916 in a bout about Bhartruhari’s Niti Sataka, did not give the place and the name of the person.

 

Black Bag floating in the River!

River Godavari in South India was in floods. Two friends Ramappan and Thimmappan went to see the floods. They were enjoying watching lot of furniture, house hold utensils and trees and animals that were washed away and floating. Suddelny Ramappan noticed a big black bag floating in the middle of the river. He pointed it out to Thinnappan and said,

“Thinnappa, go and get that black bag. It is big. It must contain something valuable; Let us share it”.

 

Thinnappan jumped into the floods without hesitating and swam towards the black bag. He grabbed it and pulled it towards him. But the bag was not a bag; it was a bear washed away by the flood. That was struggling to get a grip and so it caught hold of him. Thinnappan tried to get out but couldn’t.

 

Ramappan still thought that the floating bag was a treasure and his friend was trying hard. But at one stage he shouted to Thinnappan,

“Please come back if you can’t get hold of the bag. Come back safe”

 

Thinnappan said: No Ramappan; it is not a bag; it is a bear.

He shouted back: Leave it and come back.

I am ready to come back. But it wouldn’t allow me. I have left the bear; but the bear is not ready to leave me”.

Both of them went along the floods; Ramappan was helpless.

 

Desire is like the bear; once you catch hold of it, even if you want to get out, it wouldn’t leave you. So strong is the grip of desire!

There are lot of proverbs in Indian languages about desire.

–subham–

 

 

 

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? பழமொழிக் கதை (Post No.4728)

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-42 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4728

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா? பழமொழிக் கதை

 

இது ஒரு உண்மைக் கதை –பர்த்ருஹரி நீதிசதகம் பற்றி 1916ல்  கோபாலாச்சாரியார் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளதைப் புதுக்கி வரைகிறேன்

 

தென்னாட்டில் ஒரு ஊரில் ஒரு பணக்கார பார்ப்பனி வாழ்ந்து வந்தாள்; அவள் கணவன் இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தாள்; நிறைய செல்வத்துக்கு அதிபதி அந்தப் பிராஹ்மணப் பெண்மணி.

 

அந்தக் காலத்தில் கொள்ளையர்கள் இந்த வீட்டில் இன்ன நாளன்று திருடப் போகிறோம் என்று அறிவித்துவிட்டு வந்து திருடுவார்கள். இதனால் அனாவசிய வன்முறை தவிர்க்கப்படும்; கொள்ளையர்களும் எந்த சேதமும் இன்றி பணம், நகைகள் முதலியவற்றை எடுத்துச்செல்வர்.

 

பணக்கார பார்ப்பனிக்கும் கடிதம் வந்தது; அவளுக்கோ ஆண் துணை கிடையாது. வெறும் வேலையாட்கள் மட்டுமே; அவளுக்கு ஒரு யோஜனை பிறந்தது.கொள்ளையர்கள் கெடு வைத்த நாளன்று அறுசுவை உண்டி சமைத்தாள்; வடை பாயசம், அப்பளம் பொறியல் கூட்டு, லட்டு என கல்யாண சமையல் சாதம்! வாசனை தெரு முழுதும் பரவியது.

 

கொள்ளையர்களும் குறித்த நேரத்தில் தீவட்டி சஹிதம், தாரை தம்பட்டைகளை முழக்கிக் கொண்டு கும்பலாக வந்தனர். எல்லோரும் அவரவர் வீட்டைத் தாழிட்டுக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு ‘கம்’ என்று இருந்தனர். இந்தப் பிராஹ்மணப் பெண்மட்டும் கொள்ளையர்களுக்காக கதவை லேஸாகத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.

 

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அறு சுவை உணவின் வாசனை மூக்கைத் துளைத்தது. நாக்கில் ஜலம் ஊறியது. இந்த அம்மாளும் வாருங்கள், முதலில் சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்த காரியத்தைச் செய்யுங்கள் என்று தலை வாழை இலை விரித்துப் பரிமாறினாள்.

 

அவர்கள் சாப்பிட்டு எழுவதற்கு முன்னார், ஒரு புடவையை தரையில் விரித்து நகை நட்டுகளைக் கழட்டி வைத்தாள்; வீட்டிலுள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவை, பட்டு வஸ்திரங்களையும் சமப்பித்தாள். கொள்ளையர்களுக்கு ஒரே ஆச்சர்யம்; அட, வந்த வேலை இவ்வளவு சுலபமாக முடிந்து விட்டதே என்று கீழ்மட்டக் கொள்ளையர்கள் நினைத்தனர்.

 

தலைவா! உத்தரவிடுங்கள்; கைவரிசையைக் காட்டுகிறோம் என்று அவர்கள் தலைவனை நோக்கினர். அவனோ, ”சீ, சீ, விலகிப் போங்கள். அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாகாது என்பதை அறியீரோ; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது; உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றெல்லாம் தமிழில்    சொல்வார்களே. அப்படி இருக்க நாம் இந்த அம்மணிக்கு ஒரு தீங்கும் செய்யலாகாது வாருங்கள் என்று அந்த அம்மையாருக்கு வந்தனம் கூறி விடை பெற்றனர்.

 

பின்னர் அவன் தன் கொள்ளைச் சொத்துகளை அந்த அம்மையார் பெயருக்கே  எழுதி வைத்தானாம்.

 

இந்தக் கதையை 1916ல் வெளியிட்ட கோபாலாச்சாரியார்,  இன்றும் அந்தக் குடும்பத்தினர் அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர் என்று அடிக்குறிப்பு கொடுத்துள்ளார். ஆனால் பெயரோ ஊரோ குறிப்பிடவில்லை.

அன்னதானத்தின் மஹிமை அவ்வளவு பெரியது; திருடர்களையும் மனம் மாற வைத்துவிடும்; அது மட்டுமல்ல; ‘’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ — என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, அந்த அம்மையாரின் அன்பான உபசரிப்பும் அவர்களை நெகிழவைத்துவிட்டது எனலாம்!

 

 

கன்னம் இடல்:- வீட்டின் சுவரில்   ஓட்டை போடுதல்;  அதிலும் திருடர்கள் வெவ்வேறு வடிவத்தில் ஓட்டை போட்டு தன் கலைத் திறமையை வெளிப்படுத்துவர். சூத்ரகர் எழுதிய ‘ம்ருச்ச கடிகம்’ நாடகத்தில் இதன் விளக்கங்களைக் காணலாம்.

 

இரண்டகம் :— உண்ட வீட்டில் பிளவு ஏறபடுத்தல்; கருத்துப் பிளவு அல்லது வீட்டை உடைக்கும் பிளவு — இரண்டு அகம் = இரண்டு வீடுகள்/ துண்டுகள் ஆக்குதல்

 

–சுபம்–

நிலவில் முதல் மனிதன்: சுவைமிகு தகவல்கள்! (Post No.4727)

DATE – 11 FEBRUARY 2018
Time uploaded in London- 6-56 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4727

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

9-2-2018 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 51வது) கட்டுரை!

 

நிலவில் நடந்த முதல் மனிதன்: சுவாரசியமான தகவல்கள்!

ச.நாகராஜன்

“ஆராய்ச்சி புதிய அறிவை உருவாக்குகிறது” – நீல் ஆர்ம்ஸ்ட்ராங்

1969ஆம் ஆண்டு, ஜூலை 20ஆம் நாள்.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் நடந்து சாதனை படைத்தார்.

மிகச் சிறந்த பைலட்டான அவர் 1966இல் ஜெமினி -8 இல் பறந்த அனுபவசாலி. 1971ஆம் ஆண்டு நாஸாவிலிருந்து ஓய்வு பெற்ற அவர் விண்வெளி சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் செயலூக்கத்துடன் ஈடுபாடு காட்டி வந்தார்.

மனிதர் மிக எளிமையானவர். தன்னை மட்டும் முன்னிலைப் படுத்த அவர் விரும்பியதே இல்லை; இத்தனைக்கும் உலகின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேட்டி காண்பதற்கு வந்த வண்ணம் இருந்தன.

“எங்கள் அனைவரையும் நீங்கள் பாராட்டுங்கள். ஒரே ஒரு வாண வேடிக்கை நிகழ்த்தியதற்காக அல்ல; ஆனால் நாங்கள் செய்யும் தினசரி பணிக்காக!” என்றார் அவர்! சி.பி.எஸ்ஸின் 60 நிமிட ஒளிபரப்பில் அவர் கூறிய இந்த வார்த்தைகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் படம் பிடித்துக் காட்டியது.

இன்னொரு பேட்டியில் அவரிடம், ‘இன்னும் பல்லாயிரம் வருடங்களுக்கு அவரது காலடிகள் சந்திரனில் இருப்பது பற்றி அவர் என்ன எண்ணுகிறார்’ என்று கேட்கப்பட்டபோது அவர் கூறினார்: “ இன்னும் யாரேனும் ஒருவர் அங்கே சென்று அந்த காலடித் தடங்களை நீக்கிச் சுத்தம் செய்வார் என்றே நம்புகிறேன்”.

அமெரிக்காவில் ஓஹையோவில் ஆகஸ்ட் 5, 1930 இல் பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொரியப் போரில் அமெரிக்க கடற்படையில் 1949 முதல் 1952 வரை பணி புரிந்தார்..

ஜெட், க்ளைடர், ஹெலிகாப்டர் உள்ளிட்ட 200 வகையான  வானில் பறக்கும் வாகனங்களில் அவர் பறந்துள்ளார் என்பது ஒரு அதிசயிக்க வைக்கும் செய்தி!

 

1962இல் சந்திரனுக்குச் செல்ல தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு வீரர்களில் அவரும் ஒருவர்.

1968இல் மே மாதம் அவர் சந்திரனில் இறங்கும் ஒரு ஆய்வு வாகனத்தை ஓட்டிப் பார்க்கையில் அதில் எரிபொருள் இல்லாமல் வெடிக்கும் நிலைக்கு வந்த போது சில விநாடிகள் முன்பாக அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.

அபல்லோ 11இல் பறக்க இருக்கும் வீரர்கள் யார் யார் என்பதை நிர்ணயிக்க ஜனவரி 1969இல் நாஸாவின் ஆய்வுக் குழு கூடியது. அதில் ஆர்ம்ஸ்ட்ராங் இந்தப் பணிக்கான தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

ஆல்ட்ரினுடன் அவர் சந்திரனில் இறங்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.

அபல்லோ 11 விண்கலம் ஃப்ளோரிடா கேப் கார்னிவல் தளத்திலிருந்து விண்ணை நோக்கி 1969, ஜூலை 16ஆம் நாள் பறந்தது. நான்கு நாட்கள் பயணத்திற்குப் பின்னர் ஜூலை 20 ஆம் தேதி சந்திரனில் இறங்கி சாதனை படைத்தது

கலத்தை தானே இறக்குவதென்று ஆர்ம்ஸ்ட்ராங் தீர்மானித்தார். சரியாக மாலை 4.̀14கு சந்திரனில் அது இறங்கியது. இன்னும் 25 விநாடிகளே இயங்குவதற்கான எரிபொருள் அதில் இருந்தது.

விண்கலம் சந்திரனில் இறங்கியவுடன் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி நேரடியாக உல்கெங்கும் ஒளிபரப்பப்பட்டது. “ஹூஸ்டன், டிரான்க்விலிடி பேஸ் ஹியர். தி  ஈகிள் ஹாஸ் லேண்டட்” (Housten, Tranqulity Base here. The Eagle has landed) என்ற வாசகங்களை அவர் சொன்னவுடன் உலகமே பரபரப்புக்குள்ளாகியது.

இரவு 10.56க்கு அவர் சந்திரனில் தனது காலடிகளைப் பதித்தார். இடது காலை முதலில் வைத்து, “That is one small step for a man, one giant leap for mankind” என்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற வார்த்தைகளை அவர் கூறிய போது உலகமே ஆரவாரித்தது!

இரண்டு மணி நேரம் 36 நிமிடங்கள் அவர் சந்திரனில் இருந்தார். 22 கிலோகிராம் எடையுள்ள பொருள்களை (50 சந்திரக் கற்கள் உட்பட) அவர் சேகரித்தார். ஜூலை 24ஆம் தேதி வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார்.

1992 முடிய விண்வெளி சம்பந்தமாக, அவர் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

17 நாடுகள் அவரை விசேஷமாகக் கௌரவித்துக் கொண்டாடின. உலகெங்குமுள்ள பல நாடுகள் அவர் உருவத்தைத் தபால்தலையில் பொறித்து கௌரவித்தன!

2012 ஆகஸ்ட் 7ஆம் தேதி அவருக்கு 82 வயது ஆகி இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. அவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அந்த பை பாஸ் சர்ஜரியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. ஆகஸ்ட் 25ஆம் தேதி அவர் மறைந்தார்.

அவரது இறுதிச் சடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, “1969ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் தனது குழுவோடு அபல்லோ 11இல் விண்ணில் ஏகிய போது ஒரு தேசத்தின் பெருத்த எதிர்பார்ப்பையும் தன்னுடன் சுமந்து சென்றார். கற்பனைக்கும் அப்பாற்பட்டவற்றை சரியான ஊக்கத்துடனும், அறிவுடனும் செய்தால் எதுவுமே சாதிக்கப்படக்கூடியது தான் என்ற அமெரிக்காவின் லட்சியத்தை அவர்கள் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட்டனர்” என்று கூறி புகழாரம் சூட்டினார்.

ஆர்ம்ஸ்ட்ராங் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் அவரது அஸ்தி 2012, செப்டம்பர் 14ஆம் தேதியன்று பிலிப்பைன் கடலில் கலக்கப்பட்டது.

அன்று அவரை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவின் தேசீயக் கொடியை அமெரிக்கா எங்கும் அரைக்கம்பத்தில் பறக்குமாறு ஒபாமா ஆணையிட்டார்.

2015ஆம் ஆண்டு ஆர்ம்ஸ்ட்ராங் வைத்திருந்த ஒரு பை பற்றிய தகவல் வெளியுலகிறகுக் கிடைத்தது. அந்தப் பையில் சந்திரனில் தான் சேகரித்தவற்றை நினைவுப் பொருளாக அவர் பத்திரமாக பாதுகாத்து வந்தார்.

இப்படி விண்வெளிவீரர்கள் தங்கள் நினைவுப்பொருளாகக் கொண்டு வருவனவற்றை சட்டபூர்வமாக அங்கீகரித்து அதை அவர்களுடைய சொந்தப் பொருளாக ஆக்கி ஒபாமா உத்தரவிட்டார்.

ஆர்ம்ஸ்ட்ராங்கைப் பற்றிய ஒரு அருமையான திரைப்படம் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. ஜேம்ஸ். ஆர். ஹான்ஸன் எழுதியுள்ள “ஃபர்ஸ்ட் மேன்: நீல்  ஏ.ஆர்ம்ஸ்ட்ராங்” என்ற நூலின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ரையான் கோஸ்லிங் நடிக்கிறார்.

2018இல் திரையிடப்படவிருக்கும் இந்தத் திரைப்படத்தைக் காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சென்ற நூற்றாண்டில் உருவான வானவியல் உத்தி ஒன்று காலக்ஸிக்களுக்கு இடையே உள்ள தூரத்தைச் சரியான படி கணிக்க உதவியது. அந்த உத்தி மூலம் தொடர்ந்து காலக்ஸிகளின் தூரத்தை அளந்து கொண்டே இருந்ததால் தான், இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது என்ற அரிய உண்மை தெரிய வந்தது.

இப்போது அந்த உத்தியின் மூலமாகத் தான் மில்கி வே காலக்ஸியின் வரலாறு கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.

1908ஆம் ஆண்டு ஹென்ரியட்டா ஸ்வான் லீவிட் (Henrietta Swan Leavitt)  என்ற பெண்மணி ஹார்வர்டில் பணியாற்றும் போது வானத்தைப் படம் பிடித்த போட்டோ பிளேட்டுகளை ஆய்வு செய்து வந்தார். அதில் தான் அவர் பூமியிலிருந்து ஒரு நட்சத்திரம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அதன் பிரகாசம் உள்ளிட்டவற்றை வைத்து ஒரு உத்தியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு தான் நூறாண்டுகள் கழிந்த பிறகு, இன்றும் கூட வானவியல் விஞ்ஞானிகளுக்கு தூரங்களை அளக்க உதவுகிறது. இதற்கு லீவிட் விதி என்று பெயர்

நூறு ஆண்டுகள் கழித்து இப்போது வானவியலில் ஆய்வு நடத்தும் பட்டதாரியான கேட் ஹார்ட்மேன் என்ற பெண்மணி அதே லீவிட் விதியை வைத்து இன்னும் பல உண்மைகளைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைக்கிறார். லீவிட் விதி உண்மை என்பதோடு அது இன்னும் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்தோடு இந்த கண்டுபிடிப்பில் நூறாண்டுகள் இடைவெளியில் இரு பெண்மணிகள் ஈடுபட்டு இதைக் கண்டுபிடித்திருப்பது இன்னும் அதிக ஆச்சரியத்தை அறிவியல் உலகில் ஏற்படுத்தி உள்ளது.

காலக்ஸிகளின் தூரங்களையே அளக்கும் பெண்மணிகளின் கூரிய திருஷ்டி சாதாரணமானதா என்ன? சும்மாவா சொன்னார்கள், பெண்களின் பார்வை எதையும் துல்லியமாக அளக்கும் என்று!

***

கடலோர நகரங்கள் அழியும் அபாயம் (Post No.4726)

DATE – 11 FEBRUARY 2018

Time uploaded in London- 6-16 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4726

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஆறாவது உரை

 

  1. கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழியும் அபாயம்! ச.நாகராஜன்

 

உலகில் உள்ள கடல் மட்டம் உயராமல் இருப்பதற்கான காரணம் அண்டார்டிகாவில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளே.          இந்த பிரம்மாண்டமான ஐஸ்பாறைகள் உருகாமல்            இருப்பதாலேயே கடல் மட்டம் ஒருஅளவுக்குள் கட்டுப்பட்டு     இருக்கிறதுகடலோர நகரங்கள் கடல்நீர் மட்டம் உயர்ந்து நீரில் மூழ்காமல் இருக்க  இந்த அற்புதமான் ஐஸ்பாறைகளே காரணம்!

 

 இன்று விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் லார்ஸன் சி என்ற   இடத்தில் ஏற்படும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளின்       நிலையைக் கூர்ந்து கவனித்துவருகின்றனர்லார்ஸன் சி என்பதுஸ்காட்லாந்தை விட பரப்பளவில் சிறியதுஅங்குள்ள          பிரம்மாண்டமான பனிப் படலத்தில் ஒரு விரிசல் சிறிதாக      ஏற்பட்டது.

இன்று அது 70 மைல் நீள விரிசலாக ஆகியதோடு 300 அடி   அகலமாக ஆகி விட்டது

இது பெரிதானால் மிக பிரம்மாண்டமான  விளைவு ஏற்படும்முதலில் 2015இல் 20 மைல் நீளமே இருந்த விரிசல் 2016இல்  இன்னும் 15 மைல் அதிகமானது.         

 

இப்போதோ பிரம்மாண்டமான பிளவாக 70 மைல் நீளத்திற்கு  விரிந்து விட்டதுஇதனால் நீர் மட்டம் உயரும்.                அண்டார்டிகாவில் இப்படி ஒருபெரிய பரப்பு பிளந்து நீர் நீர் உருக ஆரம்பித்தால் உலகிற்கே வந்து  விடும் அபாயம்!

 

 

   மிக மோசமான நிலையில் 7 மீட்டர் அளவு கடலில் நீர் மட்டஅளவு உயரும்ஒரு மீட்டர் உயர்ந்தாலேயே ஏராளமான      நாடுகளில் கடல் ஓர நகரங்கள் மூழ்கி விடும் என்ற          விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை யாரும் மறந்திருக்க முடியாது.

     பத்து நாடுகள் முற்றிலுமாகவோ அல்லது அவற்றின் பல       முக்கியப் பகுதிகளோ அழியும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள்அஞ்சுகின்றனர்.

இந்தப் பத்து நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வீடியோ    வாயிலாக அனைவரும் பார்க்கும்படி கூறி விளக்குகின்றனர்.

 

பத்து நாடுகளின் பட்டியல் 1) சீனா 2) வியட்நாம் 3) இந்தியா 4) இந்தோனேஷியா 5) பங்களாதேஷ் 6) ஜப்பான் 7) அமெரிக்கா  8) எகிபது 9)பிரேஜில் 10) நெதர்லாந்து

அருமையான பல கடற்கரை நகரங்கள் அழியும் அபாயத்தைச்   சுட்டிக் காட்டும் வீடியோ ஒரு ஆறுதலான செய்தியையும்      தருகிறதுஇன்னும் நிலைமை மோசமாகவில்லைஉடனடியாக மேலேசொல்லப்பட்ட நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடு         புகையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து பூமி வெப்பமயமாதலைத் தடுத்தால் ஐஸ் படலம் உருகாமல்        பனிப்பாறையாகவே நிலைத்திருக்க வாய்ப்பு உண்டு, விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

அழிவதும் நீடித்து வாழ்வதும் நமது கையில் என்று முடிகிறது   வீடியோ.

    மக்கள் விழித்தெழ வேண்டும்தங்களால் இயன்ற வழியில்   எல்லாம் பூமியின் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் அனைத்து மாசையும் தடுக்க வேண்டும்இது ஒன்றே அழிவைத் தடுக்க வழி!

***

MUSLIM, CHRISTIAN SUPERSTITION ANECDOTES (Post No.4725)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-37 AM

 

Compiled by London swaminathan

 

Post No. 4725

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES SUCH AS FACEEBOOK, GOOGLE AND WEBSITES.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

Superstition Anecdotes 

Coleridge, when asked by a lady if he believed in ghosts, replied,

“No, madam, I have seen too many to believe in them”.

 

Xxx

How to serve Meals?

Carefully explaining the correct procedure in serving meals, the wealthy society lady ended her little lecture to the new maid by saying,

Now, Mary, don’t forget. You always serve from the left and take the plates from the right.

 

I won’t forget, Madam, answered the girl in a conciliating tone of voice, but what is the matter? Superstitious or something?

Xxx

Negros Superstition

 

Abraham Lincoln told this story

A balloon ascension occurred in New Orleans before the war, and after sailing in the air for several hours, the aeronaut who was arrayed in silks and spangles like a circus performer, descended in a cotton field where a gang of slaves were at work. The frightened negroes took to the woods ,all but one venerable darky, who was rheumatic and could not run, and who, as the resplendent aeronaut approached, having apparently just dropped from heaven, said,

Good morning. Massa Jesus; how is yo pa?

 

Xxx

Muslims object to Telephone

 

When the first line was put in for King Ibn Saud in Arabia, Moslem religious leaders protested against such innovations and works of the devil from the land of the Infidel. Ibn Saud listened to their complaint and gave judgement,

If the telephone is really the work of the Devil , the holy words of Koran will not pass over it,if the holy words do pass over it. It assuredly cannot be the work of the Devil. So we will appoint two mullahs, one to sit in the palace and one in the telephone exchange, and they are to take turns reading a passage from the Holy Book, and we will see. By this test the r religious leaders were convinced.

 

Xxxx

Key and Snake!

A snake having twined itself round a key, which was declared by the seers to be a portent, Leotychidas (Spartan Ruler 545 BCE) remarked

It would have been more of a portent if the key had twined itself round a snake.

Xxxx

No Boots!

General Emilio Mola, second in command with the Spanish fascists, was killed in an airplane crash. When the peasants picked him up they found he was in his stocking feet. A brother officer explained that a Gipsy had once told the General he would die with his boots on, and he therefore always took his shoes off when in an air plane.

 

Xxxx subham xxxxx

 

 

டெலிபோனுக்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு (Post No.4724)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-11 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4724

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

எந்த ஒரு புதுத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கும்பல் இருக்கும்; அதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.

 

சவூதி அரேபியாவில் டெலிபோன் அமைப்பது, ‘சாத்தான் வேலை’ என்று குரல் கொடுத்த முஸ்லீம் மதத் தலைவர்களை அந்த நாட்டு மன்னர் எப்படிச் சமாளித்தார் என்ற சுவையான சம்பவம் ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது.

 

அச்சுக்கூடங்களை கூடன்பர்க் நிறுவியவுடன் கிறிஸ்தவப் பாதிரிகள், இது ‘சாத்தான் வேலை’ என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள். ஏனெனில் அதுவரை பைபிள் கையினால் எழுதப்பட்டு விற்கப்பட்டது. அதில் பாதிரிகளுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்கள் அனுமதி இல்லாமல் பைபிளை யாரும் வாங்கவும் முடியாது; வைத்துக்கொள்ளவும் முடியாது — ஒரு போப்பாண்டவர் பைபிள் எந்த வீட்டிலும் இருக்கக்கூடாது. அது சர்ச்சில் மட்டுமே இருக்கலாம என்று தடையும் விதித்து இருந்தார்!

 

மதுரையில் நான் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் ( மார்கஸீய மூடர்கள்) யூனியன்கள் வங்கி (BANK) வாசலில், எல்.ஐ.சி (L.I.C) அலுவலக வாசலில் கூச்சல் போடுவார்கள்– கம்யூட்டர்களை எதிர்த்து! ——அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை லண்டனில் உள்ள அவர்களுடைய மகன்கள் (COMPUTER PERSONNEL) இப்போதும் சொல்கிறார்கள்.

சவூதி அரேபிய மன்னர் அரண்மனையில் புதிய டெலிபோன் அமைப்பு வேலைகள் துவங்கியவுடன் செய்தி காட்டுத் தீ போல பரவியது. உடனே முஸ்லீம் மதத் தலைவர்கள் ‘’ஹராம் ஹராம்! அபச்சாரம், அபச்சாரம்’’: சாத்தான்களை அரண்மனக்குள் நுழையவிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்பினர். மன்னரும் யோசித்தார்; இந்த மூடர்களுக்கு எப்படி அறிவு புகட்டுவது என்று ஆலோசித்தார். எல்லா மதத்திலும் சாணக்கியர் போன்ற அறிவாளிகள் உண்டு அல்லவா?

 

நல்ல யோஜனை பிறந்தது! மதத் தலைவர்களை சவூதி மன்னர் அழைத்தார். “அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே; காம்ரேட்களே!

ஒரு மௌல்வி டெலிபோனின் ஒரு புறத்தில் இருந்து குரானை ஓதட்டும். டெலிபோனின் மறு புறம் மற்றொரு மௌல்வி காது வைத்துக் குரானைக் கேட்கட்டும். அப்படியே பிழை இன்றிக் கேட்டால், புனித குரான் வந்த டெலிபோன் சாத்தானின் வேலையாக இருக்காதல்லவா?” என்றார். மௌல்விகள் பலமாக தலையை ஆட்டினர். அவ்வாறே குரானும் ஓதப்பட்டது; அது மறுபுறமும் ஒலித்தது. எல்லோருக்கும் பரம திருப்தி; பஹு சந்தோஷம்.

 

XXXXX

பேய்கள் இருக்கிறதா?

ஆங்கிலக் கவிஞர், தத்துவ வித்தகர், இலக்கிய விமர்சகர் காலரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE).

 

அவரிடம் ஒரு பெண்மணி வந்தார்.

“ஐயா, பேய்கள் இருக்கிறதா? உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை உண்டா?”

 

காலரிட்ஜ் செப்பினார்_

“அம்மணி! அதை ஏன் கேட்கிறீர்கள்; எங்கு  பார்த்தாலும், ஏராளமான பேய்களைப் பார்ப்பதால் எப்படி நம்புவது என்றே புரியவில்லை!”

 

xxxxxx

 

ஏசு கிறிஸ்து சக்தி வாய்ந்தவரா?

லூயிஸ் நெப்போலியன் (LOUIS LITTLE NAPOLEON)  சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இவர் நெப்போலியன் போனபர்ட்டின் வாரிசு. பிரான்ஸில் தேர்தலில் வெற்றி பெற்று முதல் ஜனாதிபதியாக இருந்தார்- அதுவும் மிகவும் இளம் வயதிலேயே!

 

பள்ளிக்கூடடத்தில் பாடம் நடந்தது. வாத்தியார் மிகவும் உருக்கமாக ஏசு கிறிஸ்துவின் துயரங்களை வருணித்தார். மக்களுக்காக உயிர் நீத்த மஹான் அவர் என்றார். அவர் பட்ட துன்பம் கொஞ்சமா, நஞ்சமா என்றார். அவர் ஏசு பிரானின் கஷ்டங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் சொன்னபோது எல்லா மாணவர் முகத்திலும் சோகமே ததும்பியது; சிலர் கண்களில் கண்ணீரும் உருண்டோடியது.

 

 

லூயிஸ் நெப்போலியனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார்; அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் இல்லை; அன்றலர்ந்த தாமரைபோல அவர் முகம் பிரஸன்ன வதனமாய் இருந்தது. என்ன லூயிஸ், நான் சொன்னதை கேட்டாயா? உனக்குக் கொஞ்சமும் வருத்தமே இல்லையா?

 

லூயிஸ் சொன்னான்:

அதானே கேட்டேன்! நீங்கள் சொல்லுவது போல ஏசு பிரான் சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?

 

வாத்தியார் ஐயா வாயடைத்துப் போனார். ‘’அம்மாடி! நாய் வாலை நிமிர்த்த முடியாது’’ என்று எண்ணினார்!

 

XXXXX

 

நாத்தீகம் பற்றிக் கதைப்போமா?

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவ ஞானி அறையில் அறிஞர்கள் குழுமி இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம், நாத்திகத்தை நோக்கித் திரும்பியது.

 

‘’சரி, நாத்திகம் பற்றி இப்போது கதைப்போம்’’ என்றனர்.

 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வால்டேர் திடீரெனப் பாய்ந்தார்; எல்லார் காதிலும் கிசுகிசுத்தார்.

 

‘’ஐயா வாயை மூடுங்கள்; என் வேலைக் காரர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்ம். அவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டால், உங்களை இங்கே அனுமதித்ததற்காக இன்றிரவு நான் தூங்கும் போது என் குரல்வளையை நெறித்து விடுவார்கள்! — என்று.

 

 

(பிரான்ஸில் அவ்வளவு மத நம்பிக்கை இருந்த காலம் அது!)

 

(இது ஆங்கிலத்திலும் பதிவு இடப்பட்டுள்ளது)

 

-சுபம்–

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1 (Post No.4723)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-37 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4723

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு இதழான ஹெல்த்கேர், பிப்ரவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 1

 

ச.நாகராஜன்

 

Kolkata Street from Deccan Herald

“நடைப் பயிற்சியே நல்ல மருந்து” – ஹிப்போக்ரேடஸ்!

 

 

1

ஓடலாமா?

குதித்துக் குதித்துப் போகலாமா?

தாவித் தாவிப் பார்க்கலாமா?

சைக்கிளை எடுத்து ஓட்டலாமா?

ஸ்கேடிங் செய்யலாமா?

ஆயிரம் யோசனைகள் -ஆரோக்கிய மேம்பாடு அடைய என்ன செய்யலாம் என்று.

இவை அனைத்தையும் விட எளிமையான வழி ஒன்று உண்டு.

அது தான் நடைப் பயிற்சி.

மேலே கூறிய எதுவும் தராத அருமையான பலன்களைத் தருவது

நடைப் பயிற்சியே!

அப்படி நடந்தால் – நடைப் பயிற்சியை மேற்கொண்டால் – நாம் அடையும் நன்மைகள் என்னென்ன?

 

 

2

‘ஜாக்கிங்’ (Jogging) செய்வதன் மூலம் எவ்வளவு கலோரிகளை உடலிலிருந்து செலவழிக்க –  எரிக்க – முடிகிறதோ அவ்வளவு கலோரி எரிப்பை நடைப் பயிற்சியே தருகிறது.

முதுகு வலியைப் போக்குகிறது.

இடையளவைக் குறைக்கிறது. (பார்க்க அழகு தான்!)

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் வலுவையும், ஆற்றலையும் கூட்டுகிறது.

மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் குறைக்கிறது.

சிந்தனை ஆற்றலைக் கூட்டுகிறது.

தசைகளை மேம்படுத்துகிறது.

மூட்டுகளை வலுவாக்குகிறது.

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

ஏரோபிக் (Aerobic capacity) திறனை அதிகப்படுத்துகிறது.

சிறிது சிறிதான அளவில், அவ்வப்பொழுது நேரம் கொடுத்து நமது சௌகரியத்திற்கேற்ப செய்ய முடியக்கூடியது.

Osteoporosis bone loss – எலும்பு மெலிதலால் ஏற்படும் எலும்பு அடர்த்திக் குறைவைத் தவிர்க்கிறது.

அவ்வப்பொழுது பயணம் மேற்கொள்வோராலும் கூட, எங்கிருந்தாலும் சிறிது நேரத்தை ஒதுக்கிச் செய்ய முடிவது.

இவ்வளவு நன்மை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இருக்கிறது இன்னும் பல நன்மைகள்.

 

 

3

பாதுகாப்பானது!

நடைப் பயிற்சியைப் போல பாதுகாப்பானது எதுவுமே இல்லை.

இதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

பயிற்சியாளரின் உதவியும் தேவையில்லை.

இப்படிப்பட்ட உடல் தகுதிகள் தேவை என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை.

உடல் வலி மற்றும் இதர உபாதைகளோ அல்லது பக்க விளைவுகள் எதுவுமோ இல்லை.

எந்த சாதனத்தின் உதவியும் தேவை இல்லை.

செலவே இல்லை.

ஓடுவது, தாண்டுவது, குதிப்பது, புரள்வது போன்ற எந்த வித செய்கையையும் எடுத்துப் பார்த்தால் அதை விட மிக எளிதானது.

அதிர்ச்சி விளைவு எனப்படும் Shock Impact ஐ எடுத்துக் கொண்டு பார்த்தால் அது ஓடுகின்ற போது ஓடுபவரின் எடையை விட 3 அல்லது நான்கு மடங்கு கூட இருக்கிறது.

ஆனால் நடப்பவருக்கோ இந்த அதிர்ச்சி விளைவு ஒன்றரை மடங்கு மட்டுமே இருக்கிறது.

பேஸ்கட் பால் போன்ற இதர விளையாட்டுக்கள் உடல் எடையைப் போல ஏழு மடங்கு அதிகமாக இந்த ஷாக் இம்பேக்டைத் தருகிறது.

 

 

4

நடைப் பயிற்சி உங்கள் உடலுக்கு உகந்தது. எளிமையானது.

ஓடினால் ஏற்படக்கூடிய அதே எடைக் குறைவை இதுவும் நல்குகிறது!

ஒரு மணி நேரத்திற்கு ஐந்து மைல் என்ற வேகத்தில் நீங்கள் ஓடுவதாக வைத்துக் கொண்டால், 30 நிமிடங்களில் நீங்கள் 285 கலோரிகளை எரிக்க முடியும்.

ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் என்ற வேகத்தில் நீங்கள் நடப்பதாக வைத்துக் கொண்டால், அதே 30 நிமிடங்களில் நீங்கள் சமமான தரையில் (தளத்தில்) நடந்தால் 165 கலோரிகளை எரிக்க முடியும். சற்று சாய்வான தளத்தில் – அதாவது 5 % சாய்வில் – 225 கலோரிகளை எரிக்க முடியும்.

பத்து % சாய்வான தளத்தில் 360 கலோரிகளை எரிக்க முடியும்!

 

5

விலை உயர்ந்த வீடியோ சாதனங்களை வாங்க வேண்டாம்.

கம்ப்யூட்டர் புரோகிராம் எதுவும் தேவையில்லை.

தனி இடம் தேவை இல்லை.

ஆப்ஸ் எதுவும் தேவை இல்லை.

வழிகாட்டி – கையேடு – எதுவும் தேவையில்லை.

இயற்கையாக நடக்கலாம்.

சந்தோஷத்துடன் நடக்கலாம்.

உங்கள் விருப்பப்படி நடக்கலாம்.

உங்களுக்கு உகந்த நேரத்தில் நடக்கலாம்.

நடைப் பயிற்சியில் உங்களுக்கு உதவ, நன்மைகளை அதிகம் அடைய சில எளிய – அனுபவக் குறிப்புகள் உள்ளன.

அவை யாவை? இதோ பார்ப்போம்.

 

6

நடைப் பயிற்சியின் முழுப் பலனையும் அடைய Posture எனப்படும் தோற்ற அமைவு மிக முக்கியமானது.

தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முதுகெலும்பை நேராக நிமிர்த்தி நடத்தல் வேண்டும்.

கைகளையும், தோளையும் சற்று தளர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நேராகப் பார்வையைச் செலுத்துங்கள்.

அதற்காக எங்காவது குழியில் விழுந்து விடாதீர்கள். நமது சாலைகளைப் பற்றியும் பிளாட்பாரங்களில் ஆங்காங்கே இருக்கும் குழிகளையும் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

பள்ளங்களில் மாட்டிக் கொண்டு மருத்துவ  மனைகளுக்குச் சென்று விடக் கூடாது.

ஆகவே அவ்வப்பொழுது சாலை அல்லது பிளாட்பாரத்தின் கோலத்தை அல்லது அலங்கோலத்தையும் மதிப்பீடு செய்யத் தவறாதீர்கள்.

இது தவிர ஆங்காங்கே இருக்கும் சாலைத் தடைகள் – Road Blocks – பற்றியும் கவனம் கொள்ளுங்கள்.

*

ஆழ்ந்த மூச்சை சீரான இடைவெளியில் விடுங்கள்.

நடவுங்கள், ஓடாதீர்கள். அதாவது சுறுசுறுப்பான காலடிகளை எடுத்து வைக்க வேண்டும், அவ்வளவு தான்! வேகமான அடிகளை அல்ல!!

நீங்கள் தினமும் நடக்க ஆரம்பித்தவுடன் உங்களுக்கே நீங்கள் எப்படி நடக்கலாம் என்பது தெரிய வரும்.

மூச்சு விட சற்று சிரமமாக இருந்தால் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள்.

 

*

உங்கள் உடல் தரும் செய்தியைக் கேளுங்கள்.

அட, பிரமாதமாக இருக்கிறதே, நடைப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு புதிய தென்பு, உற்சாகம் வந்து விட்டதே என்று நீங்கள் நினைத்தால் அது தான் நல்ல நடை!

சற்று வலியோ அல்லது அசதியோ அல்லது வசதிக் குறைவோ, உற்சாகமின்மையோ தோன்றினால் உங்கள் நடைப் பயிற்சியைச் சற்று மாற்றி அமையுங்கள்.

நீங்களே உங்களுக்கு நீதிபதி. அவ்வளவு தான்!

*

எப்படிப்பட்ட அடிகளை எடுத்து வைக்க வேண்டும்? சீரான, நீளமான காலடிகளை எடுத்து வையுங்கள். உங்கள் நடை பிரயத்தனமின்றி இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும்.

பகீரதப் பிரயத்னம் என்பது நடைப் பயிற்சியில் இல்லவே இல்லை.

கைகளை ஆட்டினால் அது உங்கள் உடல் பாலன்ஸை அனுசரித்து இருக்க வேண்டும்.

எதையும் வலியச் செய்ய வேண்டாம்.

 

அட, எளிய நடைப் பயிற்சியில் இவ்வளவு இருக்கிறதா, என்று நீங்கள் கேட்டால், இன்னும் நிறைய இருக்கிறது உபயோககரமான குறிப்புகள் என்ற பதில் தான் வரும்.

10000 காலடி நடைப் பயிற்சி என்று ஒன்று உண்டு.

பத்தாயிரம் காலடி நடைப் பயிற்சியா? அது என்ன?

அடுத்த இதழில் பார்க்கலாம்.

அது வரை, நடக்க ஆரம்பியுங்கள், குட் பை!

எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுரையின் ஆரம்ப வரி அற்புதமான ஒருவரின் அனுபவக் கூற்று.

ஆம், – ஹிப்போக்ரேடஸ் கூறியது அது: “நடைப் பயிற்சியே நல்ல மருந்து”

Rama walked for 14 years!

 

-தொடரும்

Address of Healthcare R.C.Raja, Editor  Healthcare, 10 Vaiyapuri nagar, Thirunelveli Town 627006 Yearly subscription Rs 120/