தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post 12,587)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,587

Date uploaded in London – –  –  14 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1கிழக்கு இலங்கையில் உள்ள சிவன் தலம் இயற்கைத் துறைமுகம் ,

 5.பெரிய தத்துவ அறிஞர், 5 இடங்களில் மடங்களை நிறுவினார்

7.பாக்கு மரத்தின் மற்றும் ஒரு பெயர் ,

8.மூன்று அடி என்பதை இப்படியும் சொல்லுவர்.

9.மரத்தை அறுக்க உதவும்அதிகம் பேசினால் நண்பர்கள் நமக்கு  சூட்டும்பெயர் ,

Xxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

 1.கந்த புராணத்தின் சர்ச்சைக்குரிய முதல் அடி.

3.மலைக்கொடி  உடையவன்  ,  

2.பாய்ண்ட் கலீமியர் என்றும் சொல்லுவர் 

4.கழுத்தில் போடலாம் (Go up) , 

4.இந்த நாளில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பகோணம் ஜன சமுத்திரம் ஆகிவிடும்.,

6.மேடைஸ்டேஜ் என்று பொருள்  

1 2 3 
     4
      
5  6  
      
7  8  
9     

விடைகள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1திருகோணமலை , 5.சங்கர 7.கமுகு, 8.கஜம், 9.ரம்பம்

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.திகடசக்கர ;3.மலையத்வஜன் ,  2.கோடிக்கரை, 4.மாலை (Go Up), 4.மாசிமகம்,  6.ரங்கம்

தி1ருகோ2ம3லை
 டி லைமா4
 க் சி
ச5ங்ர6த்
க் ரைங்
க7முகுக8ம்
ர9ம்ம்ன் 

 —-subham—–

வரதராஜ பெருமாள் கோவில்கள்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……. Part 27 (Post No.12,586)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,586

Date uploaded in London – –  –  14 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 27

யாழ்ப்பாணத்தில் இரண்டு புகழ்பெற்ற விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. அவைகளை இன்று தரிசிப்போம் ; அதற்கு முன்பாக, நேற்று   — அழிந்து போன சிவாலயங்கள்– பற்றிக் கண்டோம் ; மேலும் சில செய்திகளைக் காண்போம் .

இலங்கையில் சோழர் ஆட்சி 1017 முதல் 1070 வரை நடந்தது. அதாவது இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பொலன்னறுவை , திருகோணமலை, யாழ்ப்பாண பகுதிகளை தீவிர சைவர்களான பிற்காலச்  சோழர்கள் ஆண்டார்கள்.அப்போது அவர்களுக்கு மாதோட்டம் (மாந்தை) என்னும் துறைமுகம் மிகவும் பயன்பட்டது. இது பற்றிய தகவல்களை திருக்கேதீஸ்வரக் கல்வெட்டுகள் நமக்கு அளிக்கின்றன. தென்னிந்திய சாசனங்கள்  தொகுதியில் 1412, 1414 கஅந்தக் கல்வெட்டுகள் ராரராஜேஸ்வரம், திருவீரமீஸ்வரம் ஆகிய இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றன. மாதோட்டத்தில் இருந்த இந்தக் கோவில்கள் திருக்கேதீஸ்வரம் என்று இன்று அழைக்கப்படும் கோவில்களாக இருக்கலாம். சோழநாட்டிலிருந்து வந்த தளிக்குமரன்  என்பான்  கோவில்களுக்கு  செய்த தானம் பற்றி இந்தக் கல்வெட்டு கூறுகிறது . இரண்டாவது கல்வெட்டு திரு வீ ராமீஸ்வரம் கோவிலுக்கு 4 தங்கக் காசுகள் தானம் செய்யப்பட்டதை அறிவிக்கிறது. கோவிலில் விளக்கு எரி ப்பதற்கான  செலவுக்கு இரண்டு தனித்தனி ஆட்களிடமிந்த 4 நாணயங்களும் ஒப்படைக்கப்பட்டன. ராமீஸ்வரம் என்ற பெயர் இந்தியாவின் கரையிலுள்ள ராமேஸ்வரம்  கோவிலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் முழுதும் காணப்படும் ராம  பிரான் பெயர் இதில் இருக்கிறது.

நுவரெலியா சீதை கோவிலிலிருந்து , திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று வரைக்கும், மாதோட்டம் / மாந்தை  ராமீஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாண வில்லூன்றித் தீர்த்தம் வரைக்கும் (இந்தியாவில் ராமேஸ்வரம் அருகிலும் இதே பேரில் தீர்த்தம் இருக்கிறது) , அதற்கப்பால் சிலாவம் (முன்னேஸ்வரம்) சிவலிங்கம் வரைக்கும் எங்கும் ராம நாமமே கேட்கிறது

கல்வெட்டுகளில் கூறப்படும் இரண்டு கோவில்களில் ஒன்று இன்றைய திருக்கேதீஸ்வரம் என்று கொண்டாலும் ராமீ ஸ்வரம் கோவில் எது என்ற கேள்வி எழுகிறது . இது மறைந்து போன, அழிந்த போன கோவில் என்றே ஊகிக்கப்படுகிறது . இதற்கு ஆதாரம் அரசாங்க ஏஜண்ட் வில்லியம் ட்வீனம் William Twynam 1887 மே 22ம் தேதி எழுதிய டைரி குறிப்பில் உள்ளது . அவர் பழைய மாந்தை ரெஸ்ட் ஹவுஸ் பகுதியில் கோவில் இருந்திருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார் .

இது தவிர முல்லைத்த தீவிலிருந்து  15 மைல் தொலைவில் பழங்கால சிவன் கோவில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன கற்சிலை மடுவில் தேசீய வீரன் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் அருகில், இந்த இடிபாடுகள் இருக்கின்றன வெளிநாட்டிலுந்து வந்த பறங்கியர் எல்லோரையும் பண்டார வன்னியன் எதிர்த்ததால் இலங்கை அரசும் அவனை  தேசீய வீரனாக அங்கீகரித்தது.  கோவில் பற்றிய மேல்விவரங்கள் கிடைக்கவில்லை

xxx

55. வரதராஜ வேங்கடேச பெருமாள் கோவில் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண நகரில் ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருவது வண்ணை ஸ்ரீ வரதராஜ வெங்கடேச பெருமாள் கோவில் ஆகும்.

13ம் நூற்றாண்டிலிருந்து 16 ம் நூற்றாண்டு வரை 300 ஆண்டுகளுக்கு யாழ்ப்பாணத்தை தீவிர இந்துக்களான ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டார்கள். . இவர்களில் குண பூஷண சிங்கை ஆரியன் , ஜகராஜ சேகரம் என்ற பெயரில் ஆண்டான்.

தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்கள் மாறன்சடையன் என்ற பெயரில் அடுத்தடுத்து ஆள்வார்கள் மாறன் மகன் சடையன், சடையன் மகன் மாறன் என்று மாறி மாறி வரும். அது போலவே ஆரிய சக்ரவர்த்திகளும் செக / ஜக ராஜ சேகரம்பரராஜ சேகரம் என்ற பெயரில் அடுத்தடுத்து ஆட்சிபுரிந்து வந்தனர். குண பூஷணன் என்னும் மன்னன் தீவிர பக்தன்; வெற்றி வாகை சூடியவன்; அது மட்டுமல்ல ; நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவன்.; அவன் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்திலிருந்து பட்டு நூல் நெசவாளர்களை குடியமர்த்தி இலங்கையில் நெசவுத் தொழிலை வளர்த்தான். அவ்வாறு குடியேறியவர்களில் ஒருவன் பரம பாகவதன் ; அதாவது விஷ்ணு பக்தன். அவன் விஷ்ணு பக்தியைப் பரப்பி ஒரு மரத்துக்கு அடியில் வழிபாட்டினை நடத்திவந்தான் ; நிறைய பக்தர்களும் குழுமினர். வெறும் மரத்தடி வழிபாடு என்பதால் போர்ச்சுக்கீசிய , டச்சுக்கார மத வெறியர்களும் அதை அழி.க்க முடியவில்லை.காலப்போக்கிகல் அது கோவிலாக  மாறி கட்டிடங்கள் படிப்படியாக வளர்ந்தன . கோவிலுக்குள் ஸ்ரீ ராமர், லெட்சுமி, ஆண்டாள் கோபாலன் என்று சந்நிதிகள் தோன்றின.

கோபுரம் உயரவே அதில் புராண இதிஹாஸக் காட்சிகள் பொம்மைகளாக இடம்பெற்றன தற்காலத்தில் முறையான பூஜைகளும் செப்டம்பர்- அக்டோ பரில்  திருவிழாவும் நடக்கின்றன .

XXXX

56.பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில், தொல்புரம் , யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் பொன்னாலைக் கிராமத்தில் கோவில் இருக்கிறது. .இந்தக் கோவில் பற்றிய விவரங்கள் தட்சிண கைலாச மான்மியத்தில் கிடைக்கிறது முன்னொரு காலத்தில் அருகிலுள்ள கடலில் மீன் பிடிக்கச் சென்றபொழுது , வலையில் பெரிய ஆமை ஒன்று சிக்கியது. அது மிகவும் கனத்ததால் பல மீனவர் உதவியுடன் அதைக் கரைக்கு கொண்டுவந்தார். ஆனால் அது கல்லாகி மாறிவிட்டது ; அப்போது  வானில் அதிசய ஒளி தோன்றியது. அது மஹாலெட்சுமியின் அருள் என்று எண்ணி பெருமாளுக்கு ஒரு கோவிலை எழுப்பினர். இன்றும் கல் ஆமை கோவிலுக்குள் இருக்கிறது

விஷ்ணுவின் கூர்ம / ஆமை அவதாரத்தில் இது போல ஒரு கதை  உண்டு. துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரன், மீனவனாகப் பிறந்தான். எப்போது தனக்கு சாப விமோசனம் என்று முனிவரிடம் கெஞ்சியபோது, இறைவனே ஆமை உருவத்தில் வருவான். அவனை நீ பிடிக்கும்போது உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார் துர்வாச முனிவர் . சாப விமோசனத்தின் போது விஷ்ணு காலடி வைத்த இடம் திரு அடி நிலையம் ஆயிற்று. இந்திரனின் தங்கத் தேர் வந்து இறங்கிய இடம் பொன் / ஸ்வர்ணம்/ தங்கம் ஆகியது. அதை நினைவு கூறும் வகையில் இங்கு எழுந்த ஆலயமும் பொன் +ஆலயம் = பொன்னாலை  ஆயிற்று .

இதில் அதிசயம் என்னவென்றால் இங்கும் சிவன் ஒளி பாத மலையிலும் பாதங்கள் (Foot prints) இருந்ததை இலங்கைக்கு யாத்திரை வந்த வட ஆப்பிரிக்க அராபிய யாத்ரீகர் இபின் படூடாவும் (Ibn Batuta Abu Abdullah Muhammad ibn Battutah commonly known as Ibn Battuta,  1304-1369) எழுதிவைத்துள்ளான்.

ஆனால் இப்போது விஷ்ணு பாதம் தொல்புரத்தில் இல்லை; கடலுக்குள் சென்றுவிட்டது ; ஊரின் பெயரே இந்த இடத்தின் பழமையை  விளக்கும்

போர்ச்சு கீசிய மதவெறியர்கள் இந்தக் கோவிலை தரை மட்டம் ஆக்குவதற்கு முன்னர், இந்த ஆலயத்தின் பெயர்க்கு ஏற்றவாறு, பல பிரகார கல் கட்டிட கோபுரத்துடப்பின் தங்க விமானமமும் இருந்ததை சிங்கள மொழி கவிதை சந்தேசய குறிப்பிடுகிறது . போர்ச்சிகீசிய அரக்கர்கள், கோவில் கற்களை மானிப்பாய்க்கும் , காரைத் தீவுக்கும்  எடுத்துச் சென்று கட்டிடங்களை எழுப்பினார்கள்..

பிற்காலத்தில் இந்துமத பேரழுச்சி ஏற்பட்ட காலத்தில் கோவில் கட்டப்பட்டது 1971ம் ஆண்டில் அ னந்த சயனப் பெருமாள் பிரதிஷ்டை நடந்தது ; அத்தகு முன்னரும் கோவில் இருந்தது. தற்போது நித்திய பூஜைகளுடன் உற்சவமும்  நடத்தப்படுகின்றன.

Xxx

நூலகம் இணையதளம் கூறும் தகவல் இதோ

ஆலய கருவறையில் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். இவ் ஆலயத்தில் அமையப்பெற்ற 108 அடி உயரமான இராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதி உயர் கோபுரமாக விளங்குகின்றது. வருடம் தோறும் ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 21  நாட்களும், மார்கழியில் பரமபதவாயில் ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் இரண்டு மஹோற்சவங்கள் இடம்பெறுகின்றது.

To be continued………………………

இலங்கை, 108 புகழ் பெற்ற,  இந்து ஆலயங்கள் ,  Part 27, வரதராஜ , பெருமாள், கோவில்,         பொன்னாலை , வண்ணை

இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை! (Post No.12,585)

Hindu Protest in Chennimalai against renaming the place.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,585

Date uploaded in London –  14 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை!

ச.நாகராஜன்

என்ன, தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம்.

இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையினர். ஆனால் அவர்களுக்கு உரிமைகளோ சிறுபான்மையினர் அனுபவிப்பதை விட குறைவு.

ஆகவே அவர்கள், ‘இந்தியாவில் இந்துக்களான எங்களுக்கு சம உரிமைகள் தேவை’ என்று போர்க்கொடி உயர்த்த வேண்டிய அவசியத்திற்கு – கட்டாயத்திற்கு  -உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அப்படி என்ன சம உரிமை இல்லை என்று கேட்டால்… இதோ பார்க்கலாம்.

இந்திய அரசியல் சட்டத்தின் 25வது பிரிவை எடுத்துப் பார்ப்போம்.

அதில் மத சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மதத்தை பரப்பும் உரிமை அதில் உள்ளது.

Right to propagate one’s religion – இது கிறிஸ்தவ, இஸ்லாமிய மத மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

ஹிந்துக்களுக்கோ மதம் மாற்றுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.

இதனால் ஹிந்து கோவில்களிந்ன் உள்ளேயும் அருகிலேயும் இஸ்லாமியர்கள் பூஜைப் பொருள்களை விற்பதைப் பார்க்கலாம்.

மைனாரிடியினர் என்ற அடிப்படையில் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தங்கள் தங்கள் நிலங்களை நிதிகளைத் தாமே நிர்வகிக்கலாம். அரசு அதில் தலையிட முடியாது.

ஆனால் ஹிந்துக் கோவில்களோ அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.

இதனால் பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக நாத்திகர்களும் ஹிந்து விரோதிகளும் ஆக்கிரமித்து அதில் தங்கள் தங்கள் கட்டிடங்களைக் கட்டிக் கொள்கின்றனர்.

இதில் சர்ச், மசூதியும் அடங்கும்.

சற்று யோசித்துப் பார்ப்போம். வாடிகனில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய முடியுமா? போப் ஆண்டவர் முன்னிலை வகிப்பாரா?

மெக்காவில் விஷ்ணு கோவிலை உருவாக்க முடியுமா?

ஆனால் இங்கேயோ கோவில் நிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் சர்ச்சுகளைக் கட்ட முடியும். குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோவில் நிலத்தை லயோலா கல்லூரி திருப்பித் தராமல் தகிடுதத்த வேலையில் ஈடுபட்டு கல்வி நிலையத்தை மூடப் பார்க்கிறார்கள் என்று பசப்பு ஓலம் இட முடியும். நமது நீதிமன்றங்களில் காலத்திற்கும் அப்பாற்பட்ட ‘வாய்தாக்களை’ வாங்கி காலத்தையே ஏமாற்ற முடியும்!!

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கல்வி நிலையங்களை அரசு எடுக்க முடியாது. ஆனால் ஹிந்து கல்வி நிலையங்களை அரசு எடுத்துக் கொண்டு நடத்த முடியும். எடுத்து நடத்துகிறது.

அடுத்து அரசியல் பிரிவு ARTICLE 30ஐ எடுத்துக் கொள்வோம்.

இது ஹிந்துக்களிடையே பிரிவை உருவாக்க வகை செய்யும் ஒன்று.

இதன் படி ராமகிருஷ்ண மடத்தை வங்காளத்தில் அரசு செய்த கம்யூனிஸ்ட் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைந்தது.

அலறிப் போன ராமகிருஷ்ண மடம் தாங்கள் ஹிந்து பிரிவு அல்ல தனிப் பிரிவு என்று கூறியது.

ஹிந்துக்களே ஒன்றிணைந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அது சொல்லவில்லை. ஹிந்துக்கள் ஓரணியில் திரளுவது என்பது கஷ்டம் என்பதனால் தான் இப்படி அது நடந்ததா?

கடைசியில் கோர்ட் விவேகானந்தர் ஒரு ஹிந்து; அவர் தனி மதம் எதையும் ஸ்தாபிக்கவில்லை என்று தனது முடிவை அறிவித்தது.

ஆனால் கர்நாடகத்திலோ லிங்காயத் தாங்கள் தனி பிரிவு என்று அறிவிக்க முடிந்தது.

இப்படி ஆங்காங்கே பலரும் ஹிந்து மதம் அல்ல; தனிப் பிரிவு என்று சொல்லிக் கொள்ள வகை செய்வது இந்த 30ஆம் பிரிவு.

ஆனால் இஸ்லாத்திலோ அல்லது கிறிஸ்தவத்திலோ இப்படி எதையும் அரசியல் சட்டம் செய்ய முடியாது.

ஹிந்துக்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் ஒரு நீதி.

வாழ்வில் முக்கியமான இரு அம்சங்கள் கல்வியும், ஆன்மீகமும்.

கல்விக் கூடங்களிலும் கைவைப்பு, கோவிலிலும் ஆக்கிரமிப்பு – இது தான் ஹிந்துக்களின் இன்றைய பரிதாபகரமான நிலை.

சொந்த நாட்டில், ஹிந்து நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமை குறைவு; பாதுகாப்பில்லை.

ஆனால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு அதிக உரிமைகள்; அதிக பாதுகாப்பு.

ஒருவரின் வீடு பல நூறு தலைமுறைகளாக அவருக்குச் சொந்தம்; சிலர் அங்கு தங்க வருகின்றனர். திடீரென்று அரசு வந்து தங்கியவருக்கு அந்த வீட்டைச் சொந்தம் என்று சொல்லலாம் என்றால் அது நியாயமா?

யோசனை செய்ய வேண்டும். ஆகவே தான் சொந்த நாட்டில் எங்களுக்கு அதிக உரிமை இல்லாவிட்டாலும் சம உரிமையாவது வேண்டும் என்று ஹிந்துக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

வரவேற்க வேண்டிய பேச்சு இது.

இந்த வகையில் 2020இல் செப்டம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஹிந்துக்களில் பலர் ஒன்று கூடி இதைப் பற்றிப் பேசினர்.

இது இயக்கமாக மாறி வலுத்து வருகிறது.

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைந்து சம உரிமை கோரி சட்டத்தைத் திருத்த வேண்டும்.

கோவில்கள் ஹிந்துக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் ஹிந்துக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அரசுக்கு அங்கு என்ன வேலை?

சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறும் விஷமிகளையும் நாத்திகர்களையும் இனம் கண்டு ஒதுக்கி என்றுமுள்ள சனாதனமான ஹிந்து மதத்தை வாழ வைக்க கச்சை கட்டிக் கொண்டு ஹிந்துக்கள் முன்வர வேண்டும்.

புல்லட் வேண்டாம்; பாலட் பாக்ஸ் இருக்கிறது. அது போதும் நல்ல பாதையில் தேசத்தைத் திருப்ப!

***

Hindu Architecture: Q and A (Post No.12, 584)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,584

Date uploaded in London – –  –  13 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

K R. 

To:swami_48@yahoo.com

Wed, Sep 6 at 6:56 AM

.

Namaskaram sir. 

Can you oppose these statements with proofs and evidences. 

1.there is no Hindu architecture in India before Sanchi stupa built by Ashoka.

2.there is a temple in India in Kanchi ,Badri etc before (they were) Jain temples and Buddhist temples.

3.in Siva Kanchi, boundary wall of temple has Buddhist idols .

xxx

Reply to the Question by London Swaminathan

First, the person who asks a question must have some basic knowledge in the subject. I explained it in detail yesterday. So, I am not going to repeat it.

Sanchi Stupi is not Hindu, but Buddhist. It is NOT a place of worship. All Buddhist Stupis have some body parts of Buddha. So it is not like Hindu Garbhagrihas  where we have idols or statues for worship.

Sanchi Stupi which is 2300 year old is dome shaped and not temple (Pyramidal/ Cone shape) shaped.

xxx

Is there any religious structure like that before Sanchi Stupi? Perhaps the answer is ‘No’. We don’t see anything elaborate or big like that before 2300  years. But we read about Temples in Mahabharata and Ramayana. Krishna kidnapped Rukmini from a temple. So, temples were there, may be built out of rocks or bricks in smaller size.; In Indian climate, nothing would survive for a long period.

It is amazing to see Sanchi Stupi (India) and Anuradhapura Stupi (Sri Lanka) survived until this day. Perhaps their massiveness, special dome like structure saved them for 2300 years.

xxx

Indus-Saraswati River Civilization

In the Indus civilization we see Mother Goddess, Swastika emblem, so called Pasupati seal and unknown Tigress goddesses All scholars agree that Hinduism originated there at least 3000 years ago.

All temples including the Toda Tribe temple are in Triangular/pyramidal shape. But all ancient Buddhist structures  are dome shaped. Even the Ziggurat of the Middle East was similar to current Hindu temples in shape. Even the word Ziggurat came from the Sanskrit word Sikhara (mountain top, temple top).

This shows such structures existed but vanished in course of time. India is a country which witnessed more wars than any other country. Most of the structures were razed to ground by foreign invaders. Just 400 years ago Portuguese Christian invaders destroyed all the 500 temples in Jaffna, Sri Lanka.

So, the simple answer is some sort of architecture existed but extinct today.

One other comparison is writing. We see it in Indus- Saraswati area around 2000 BCE. Then we see Brahmi writing in Asoka time. There is a gap of at least 1700 years. Writing was there but Hindus wrote on decayable materials and only Asoka started using rocks for writing.

Xxx

The second part of the question is Buddhist symbols or statues in Hindu temples like  Kanchipuram. We need someone at the stature of Dr Nagaswami to answer such questions. Unfortunately ,the great historian is no more.

Like I said earlier, Buddhists did not have place of worship. Buddha never spoke about God or ritual worship. Bhikshus went against what Buddha said and started new rituals of worshipping ash and bone. Their dome shape structure is also their own innovation. In course of time they might have placed their symbols in our temples to get status and respect. The biggest proof for such an assumption come from their theft of Hindu materials.

They stole all our Panchatantra , Ramayana and Mahabhaata stories and created new Jataka stories. It shows them as the thieves; literary pirates. Like they stole our stories , they might have stolen our temples as well. Jataka Storis in Pali came about 2300 years ago.

Regarding the Kanchi temple and Buddhist statues , only archaeologists can say which came first.

Generally speaking, Buddha took everything from Hinduism. The word Nirvana , Biksha etc are in Upanishads.  In the later days, our people might have re installed the original Hindu statues. It happened in Ayodhya, Varanasi and several Indian places s well. Moghuls took our Hindu temples and we are slowly reconverting them.

Like Gnanvapi – Kasi temple,  Mathura Temple with mosque  , Ayodhya Ram Temple,  Saraswati temple inside mosque in Dhar (M.P), we have to take each case separately and probe them to see who installed the statue first.

Look at Tibetan Buddhist sculptures; They took all the Hindu Gods and Goddesses and put 10 heads and 20 hands and named them differently. It shows they stole our Gods and Words (literature) . So, I  would like to conclude that they stole our temples too.

In Sri Lanka Buddhists are replacing Shiva and Ganesh with Buddha; Following Hindu complaints many projects are stopped, and enquiry ordered. I had been to Kanniya Hot Springs in Trincomalee last month and the driver told me Shiva and Ganesh disappeared there suddenly. That area is cordoned off.

(Hope I understood your question and gave appropriate reply).

— subham—

Tags- Buddhism, literary piracy, stealing gods, temples, Sanchi

மறைந்து போன சிவன் கோவில்கள்: இலங்கைத் தீவின் ……..26 (Post No.12,583)

Thia is NOT Sri Lanka; only representative picture.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,583

Date uploaded in London – –  –  13 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 26

54.மறைந்து போன சிவன் கோவில்கள்

இலங்கைத் தீவில் மறைந்துபோன, அழிந்துபோன, காணாமற் போன சிவன் கோவில்கள் பற்றிய விவரங்கள் பிள்ளையாய் கல்வெட்டுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் கிடைக்கின்றன. மேலும் பல இடங்களில் சிவன் தொடர்பான சின்னங்கள் கிடைக்கின்றன. சிதைந்து போன ஆவுடையார், கோவில் தூண்கள் ஆகியன பற்றி பல இடங்களிலிருந்த்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

புத்த மதம், ஒரு மதம் மாற்றும் மதம்.( proselytizing religion);  அதாவது இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முன்னரே தங்கள் மதத்திற்க்கு வாருங்கள் என்று இந்துக்களை அழைத்த மதம்.. அது மட்டுமல்ல ராமாயண மஹாபாரத , பஞ்ச  தந்திரக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதகக்கதைகளில் இணைத்து ஒவ்வொன்றிலும் போதிசத்துவர் என்னும் கதா பாத்திரத்தை நுழைத்த மதம் ; அதாவது புத்தர்,  முன் ஜென்மத்தில்,  போதிசத்துவராக இருந்தார் என்று சொல்லி இந்து மதத்தைக் கபளீகரம் செய்ய புத்த சந்யாசிகள்/ பிட்சுக்கள் முயற்சி செய்தனர். புத்தருக்கும் இந்த வேலைகளுக்கும் சம்பந்த மில்லை. அவர் இறந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இதெல்லாம் நடந்தது.

அசோகரும் இந்த வேலையில் இறங்கி தன்னுடைய மகள் சங்க மித்திரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரிஸ்ஸா (கலிங்கம்) மாநிலத்தில் வசித்த ஜெயதேவர் , புத்த பிட்சுக்கள் செய்ததையே செய்து பவுத்த மதத்தை சுவாஹா செய்தார். அதாவது புத்தரும் விஷ் ணுவின் அவதாரம் என்று சொல்லி கீத கோவிந்தம் என்னும் நூலில் பாடிவைத்தார். இன்றும் கூட தமிழ் நாட்டில் எல்லா பஜனைகளிலும் பாடும் அஷ்டபதியில் இதைக் கேட்கிறோம். அத்தோடு தென் இந்தியாவில் புத்த மதத்துக்கு முடிவு கட்டப்பட்டது .

இப்போது கிறிஸ்த மதத்தினரும் கர்நாடக சங்கீதப் பாடகிக ளுக்கு காசு கொடுத்து மும்மூர்த்திகள் எழுதிய கிருதிகளில் ஏசுவின் பெயரை நுழைத்ததையும் அதை இந்துக்கள் கடுமையாக எதிர்த்ததையும் பத்திரிகைகளில் படிக்கிறோம். அந்த பாடகிகளுக்கும் தமிழர்கள் முடிவு கட்டிவிடனர். இந்த வேலையை முதலில் துவக்கியது, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதகக்கதைகளை எழுகிய புத்த பிட்சுக்கள்தான்.560 ஜாதகக்கதைகள் நமக்கு பாலி மொழியில் கிடைத்துள்ளன.. இப்படிக் கதை எழுதியவர்கள், ஒரு பகுதியில் மதம் மாறியவர்கள் அதிகமானவுடன் பழைய இந்துக்கோவில்களில் புத்தர் சிலையை வைத்தனர். பெரும்பாலும் பக்தர்கள் இல்லாததால் தாமாகவே பாழடைந்து போயின. இதற்குப் பின்னர் போர்ச்சுகல் , ஹாலந்து நாட்டிலிருந்து வந்த மத வெறியர்கள் கோவில்களைத் தரைமட்டமாக்கி சர்ச் CHURCH  கட்டியதை அவர்களே எழுதி வைத்த நூல்களிலிருந்து அறிகிறோம்.

இது தவிர தமிழர்களே கோவில்களை அழித்த வரலாறும் உண்டு . உலக சரித்திரத்தைப் படிப்போருக்கு ஒரு அதிசய உண்மை கிடைக்கும். தமிழினம்தான் உலகில் நீண்ட காலத்துக்கு ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு செத்த இனம். அதாவது 1500 ஆண்டுகளுக்கு சேர சோழ பாண்டியர்கள் ஒருவனை ஒருவன் அடித்து, அழித்த செய்திகளை சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் காண்கிறோம். அந்தக் காலத்தில் கோவில்கள் என்பது இன்று காணப்படும் பிரம்மாண்ட கோபுரங்கள் உடையவை அல்ல. அப்பர் தேவாரத்தில் 7 வகைகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார்.. ஒரு தலை நகரை வென்று, அந்த ஊரை தீக்கிரையாக்கி கழுதையைக் கொண்டு உழுதனர் என்பதை புறநானூற்றுப்  பாடலிலும் ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா குகைக் கல்வெட்டுகளிலும் படிக்கிறோம். அது கி.மு 130ல் ஆண்ட காரவேலனின் கல்வெட்டு. அவன் பாண்டிய நாடு வரை படையெடுத்து வந்து பாண்டியனிடம் முத்துக்களைக் கப்பமாகப் பெற்றான் . இவை எல்லாம் போக,  பெரிய மழை , வெள்ளத்திலும் பல கோவில்கள் அழிந்தன.

இதற்கும் மேலாக வறட்சி ஏற்பட்டால் ஊரே காலியாகி மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். தமிழ் , சம்ஸ்க்ருத இலக்கியம் முழுவதிலும் அடிக்கடி வரும் வாசகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி ஆகும். இதை 12 ஆண்டு நீண்ட வறட்சி என்றும் சொல்லலாம். அப்படி ஏற்படும்போது மக்கள் வெளியேறியதால் கோவில்கள் பாழடைந்து போயின.

இன்ன பல காரண ங்களால்  இலங்கைத் தீவில் அழிந்த கோவில்களின் பட்டியல் நமக்கு கிடைக்கிறது .

மறைந்துபோன சிவன் கோவில்களில் மிக முக்கிய மானது பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் ஆகும்

தொண்டீஸ்வரம்

இலங்கைத் தீவில் வந்து குடியேறிய விஜயன் தீவிர சைவன். அவனுக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னரே புத்த மதம் இலங்கையில் காலெடுத்துவைத்தது. விஜயன் இலங்கைத் தீவின் நால் திசைகளையும் காக்க 4 சிவ கோவில்களை கட்டினான் ஆயினும் தொண்டீஸ்வரம் என்ற ஐந்தாவது இடத்தை யாழ்ப்பாண வைபவ மாலை  மற்றும்  இலங்கை வரலாற்றறை எழுதிய பால்  பியரிஸ் குறிப்பிடுகின்றனர் . இன்று வரை தொண்டீஸ்வரம் பற்றி ஊகங்களே உள்ளன . புகழ்பெற்ற அந்த சிவாலயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்துக்களில் ஒரு இன்டியானா ஜோன்ஸ் INDIANA JONES  தோன்றினாதான் அதைக் கண்டு பிடிக்க முடியும்!

ஜம்புகோளம், சம்புத்துறை,சம்பேஸ்வரம்

தமிழில் கோவளம் கோவலம் என்று ஒரு சொல் உண்டு .இதற்கு 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி தரும் பொருள் கடலுக்குள் நீண்ட தரைப் பகுதிகடலில் முனையில் இருக்கும் பட்டினம் என்பதாகும். தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலும், கேரளத்தில்  திருவந்தபுரத்துக்கு அருகிலும் யாழ்ப்பாணத்தில் குறைந்தது மூன்று இடங்களிலும் கடற்கரைப் பகுதிகளில் கோவளம்  இருப்பதை நாம் அறிவோம். பருத்தித்துறை அருகில் கல் கோவளம், கீரிமலைக்கு மேற்கே சம்பு கோவளம் , காரை நகரில் ஒரு கோவளம் என்று பட்டியல் நீளும்.

இலங்கையில் இப்போது ஜம்புகோளம் என்ற்  இடம் உள்ளது; இதுவும் கோவளம் என்பதன் திரிபே. இந்தியாவுக்கு நாவலந்தீவு / ஜம்புத் வீபம் என்றும் பெயர். இதன் அருகில் இருந்ததால் ஜம்புகோளம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் அல்லது நாவல் மரம் நிறைந்த கடலில் நீண்டிருக்கும் முனை என்றும் பொருள் இருந்திருக்கலாம். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில்தான் அசோக மாமன்னனின் மகள் சங்க மித்ரா, பெரிய, புனித அரச மரத்தின் கிளையுடன் வந்து இறங்கினாள்.

இந்த இடத்துக்கு சிலர்,  வேறு விளக்கமும் தருவார்கள். சம்பு என்பது சிவனின் பெயர். சிவன் சிலை வந்து இறங்கிய பட்டினம் இது என்பது அந்த விளக்கம் .

இங்கு சம்புவுக்கு / சிவ பெருமானுக்கு ஒரு கோவில் இருந்தது . இந்த சம்பந் துறையைத்தான் சிங்கள . பாலி நூல்கள் ஜம்புகோளம், என்று குறிப்பிடுவதாக சி. எஸ். நவரத்தினம்  1964ல் எழுதிய நூலில் குறிப்பிட்டிடுகிறார் ஆயினும் இவை ஒரே இடமா அல்லது வேறு இடங்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே .

டச்சுக்காரர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய பறாளை விநாயகர் பள்ளு நூலில் சம்பேஸ்வரத்தில் இருந்த சிவன் கோவில் பற்றி பாடியுள்ளார் ஷம்பு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வரங்களை அருளுவோன், வரம்தருவார் என்று பொருள்.

Ref . A SHORT HISTORY OF HINDUISM IN  CEYLON , C.S.NAVARATNAM, 1964

XXX

  சிவன் கோவில் இடிபாடுகள், துணுக்காய்

இலங்கையின் வடபகுதியில் முல்லைத்தீவில் வவுனிக்குளத்துக்கு அருகில் உடைந்த சிவலிங்கத்தையும் கோவில் இடிபாடுகளையும் கண்டதாக முல்லைத்தீவு துணை ஏஜென்ட் ஹுஜ் நெவில் HUGH NEVILLE 1889ம் ஆண்டு டைரி குறிப்பில் எழுதி  வைத்துள்ளார் .

அங்குள்ள பாளி ஆற்றின் குறுக்கேயுள்ள அணை,  துத்த காமினி காலத்துக்கும் முந்தியது என்று மஹாவம்சக குறிப்பை மேற்கோள் காட்டி ஹென்றி பார்க்கர் HENRY PARKER எழுதிவைத்துள்ளார்  இவை எல்லாம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சிக்குட்பட்ட இடம் என்பதால், சிவன் கோவில் இருந்ததை ஊகிக்க முடிகிறது .

கோவில் காடு என்னும் இடத்தில் உடைந்த ஆவுடையாரும் கண்டு பிடிக்கப்பட்டது.

செட்டிகுளம் சந்திர சேகரன் கோவில்

மதவாச்சி – மன்னார் சாலையில் மதவாச்சியிலிருந்து 15 மைல் தூரத்தில் விநாயகர் சிலை வழிபாட்டில் உள்ளது . சாலைக்கு அப்பால் குளமும், வவ்வாலை என்னும் இடமும் உள்ளன

மதுரை நகரைச் சேர்ந்த ஒரு செட்டியார் கப்பல் உடைந்துபோய், முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இவ்வூரில் கரை சேர்ந்தனர். இது நடந்தது.  கி  .பி. 247ம் ஆண்டில்.வீர நாராயண செட்டியார் என்ற பெயர் உடைய அவர் வவ்வாலையில் சந்திரசேகரனுக்கு கோவில் கட்டினார்.  என்று VANNI MANUAL, J P LEWIS வன்னி மானுவல் எழுதிய ஜெ.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்

தொடரும்…………………………………………….

  Tags சம்புத்துறை, சம்பேஸ்வரம் அழிந்த , மறைந்த , சிவன் கோவில்கள், கோவளம் , கோவலம்

மூதுரை,  நல்வழி கவின் மிகு சொற்றொடர்கள் (Post.12,582)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,582

Date uploaded in London –  13 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மூதுரை

(ஔவையார் இயற்றியது)

ச.நாகராஜன்

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 2

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் 30,

 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

    நோக்குண்டாம் (பாடல் எண் 1)

 2. நின்றி தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே

     தான் தருதலால் (2)

 3.  நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல் மேல் எழுத்துப் போல்  

   காணுமே (2)

 4. நீர் மேல் எழுத்துக்கு நேர் (3)

 5. அட்டாலும் பால் சுவையில் குன்றாது (4)

 6. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே (4)

 7. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் (4)

 8. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த

    கருமங்கள் ஆகா (5)

 9. நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் 

   நுண்ணறிவு (7)

10. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல்

   கேட்பதுவம் நன்றே (9)

11. தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும்

   தீதே (9)

12. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும்

   ஆங்கே பொசியுமாம் (10)

13. நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்

  மழை (10)

14. கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானுமதுவாகப்

   பாவித்து (14)

15. புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம் (15)

16. ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு (16)

17. சீரியர் கெட்டாலும் சீரியரே (18)

18. உடன்பிறந்தே கொல்லும் வியாதி (20)

19. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை (21)

20. கருதியவாறாமே கருமம் (22)

21. முற்பவத்தில் செய்த வினை (22)

22. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் (24)

23. மூர்க்கரை மூர்க்கரே  முகப்பர்

24. முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம் (24)

25. மன்னனில் கற்றோன் சிறப்புடையன் (26)

26. கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு (26)

27. கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் (27)

28. சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம்

   குறைபடாது (28)

 **

நல்வழி

(ஔவையார் இயற்றியது)

ச.நாகராஜன் 

கவின் மிகு சொற்றொடர்கள்

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 2

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் கடவுள் வாழ்த்து 1 பாடல்கள் 40 – மொத்தம் 41,

 1. நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா (கடவுள் வாழ்த்து)

 2. போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த

    பொருள் (பாடல் எண் 1)

 3. சாதி இரண்டொழிய வேறில்லை (2)

 4. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில்

    உள்ளபடி (2)

 5. இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு இதன்றே (3)

 6. கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் (4)

 7. ஆம் கமல நீர் போல் பிறிந்திருப்பார் (7)

 8. ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் (8)

 9. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார்

   வருவாரோ மாநிலத்தீர் (11)

10. இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அறிது (11)

11. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் (12)

12. சீச்சீ! வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர் விடுகை  

    சால உறும் (14)

13. சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும்

    இல்லை (15)

14. உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே

    மதியாய் விடும் (15)

15. கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி (16)

16. வெறும் பானை பொங்குமோ மேல்? (17)

17. வஞ்சமில்லார்க்கென்றும் தரும் சிவந்த தாமரையாள் தான் (21)

18. கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் (220

19. நீறில்லா நெற்றி பாழ் (24)

20. பாழே மடக்கொடி இல்லா மனை (24)

21. பத்தும் பசிவந்திடப் பறந்து போம் (26)

22. ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்

23. எண்பது கோடி நினைந்து எண்ணுவன (28)

24. சாந்துணையும் சஞ்சலமே தான் (28)

25. தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார் (30)

26. வெறுத்தாலும் போமோ விதி (30)

27. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று (31)

28. இல்லானை இல்லாளும் வேண்டாள் (34)

29. பூவாதே காய்க்கும் மரமுள (35)

30. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய

    நூலகத்தும் இல்லை (37)

31. தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி

    மொழியும் திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம்

    என்று உணர் (40)

***

Rare Pictures from 1931 German Book- Part 2 (Post No.12,581)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,581

Date uploaded in London – –  –  12 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Book Title – Indian Trip (Indicsh Reise)

Author – Frobenius

Publication – Berlin, 1931

–subham—

Tags- Rare Pictures, Germa, 1931

Sanskrit was never a Spoken Language? Q & A (Post No.12,580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,580

Date uploaded in London – –  –  12 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

COMMENT ON MY REPLY POSTED YESTERDAY

Balasubramanian Ammunni

  /  October 11, 2023  /  Edit

The one book I suggest to read about Hinduism is “Understanding HINDUISM -basic concepts explained by Dr.D.C.RAO”

Published by World Hindu council of America,P.O.Box600,Billerica,MA 01821. Cost is $10/-Pages 100. Excellent, concise,

Any VHP office in your area will have this book.

An exhaustive book by VHP (UK)is”Explaining HINDU DHARMA -A guide for Teachers Pages 204. Published in 1996. Still available with VHP.

MY REPLY

THANKS, BALASUBRAMANIAN FOR USEFUL INFORMATION

XXX

NOW TO THE NEXT QUESTION FROM A.S

Dear Sir,

I appreciate your blogs which I read regularly.

Now I think you can clear my doubt with the repertoire of knowledge you have accumulated over the years.

Some people claim Sanskrit was spoken by the masses (we know pundits always speak Sanskrit) in the previous yugas. 

My contention is that Sanskrit was never a spoken language though it was a lingua franca in the India of ancient times.

I request you to kindly furnish proofs to establish or repudiate the argument that Sanskrit was a spoken language.

Thanks and regards,

A. S

9445295455 Chennai 

XXXX

My Reply

There are two types of questions. First type is asked out of ignorance. The person wanted to know the truth.

Dad, Why are we going to temple? We worship the same God in our prayer room in the house .

Then his dad or her dad explains it in simple language. A genuine question.

His or her elder brother challenge his dad saying Why should we go to temple? It is waste of time, waste of energy. Stupid thing to do.

This question came out of ignorance and arrogance; perhaps the stupid boy has never read anything Hindu but only listened to his bad Dravidian friends.

Then the dad will politely tell him the benefits when the boy or girl is not angry. This will go deeper into his/her heart.

If a person says to me that Sanskrit was never a spoken language, I will ask him how much Sanskrit he knew. Whether he has read anything in Sanskrit? Or about Sanskrit?

Jawaharlal Nehru, first P M of India, known atheist, says in his book Discovery of India:-

Sanskrit Manuscripts of old plays are continuously being discovered. A list of these prepared by Professor Sylvain Levi contained 377 plays by 189 authors. A more recent list contains 650 plays.

Which idiots in the world write 650+++++ plays in a language that is not spoken?

Tamil has not a single play (drama). One half-baked person called Sundaram Pillai tried and failed miserably. He translated a foreign play and that was an utter failure.

From Bhasa’s second century BCE we have been producing Sanskrit plays continuously.

Xxx

Mathur Village in Karnataka has full of Sanskrit speakers. But it is a small population.

When I went to Sringeri Mutt a few years ago, I heard Shankaracharya is coming to a room where there is going to be discussion and debate in Sanskrit. I was wonder struck and with permission, I also sat in a corner of the room, though I know only the A  B C D of Sanskrit. But I could follow what they were discussing about. Shankaracharya cracked jokes in Sanskrit and 40 to 50 people in the room were laughing. Now and then one speaker challenged the other and the other replied with full force. I realised that Sanskrit is a living language

But it is true common people and women did not speak Sanskrit. They spoke Prakrit. Kalidasa used Prakrit for women, fishermen and workers and servants. He used Sanskrit for Kings and Ministers in his dramas. We do the same today.

When Sivaji Ganesan acts as Karna, he speaks Tamil; when he comes as a Fuel wood seller in Thiruvilayadal film, he speaks Prakrit, that is colloquial Tamil.

Till 18th century we had only Tamil and from 18th century we have Prakrit /Tamil in all weekly magazines and novels and stories. That is colloquial Tamil.

In short Sanskrit was spoken in Royal courts, literary debates.

Adi Shankara went all over India and defeated every one in debates. He used only Sanskrit from Kanyakumari to Kashmir. After him Ramanuja conquered many and he did not use Tamil, but only Sanskrit. All these scholars, philosophers wrote their voluminous commentaries only in Sanskrit. Why?

It was understood by the vast majority.

THE BIGGEST PROOF COMES FROM TAMIL EPIC SILAPPADIKARAM.

Every one of us knew THE STORY OF MONGOOSE AND THE HASTY BRAHMIN LADY.

This Panchatantra story is repeated in Tamil epic Silappadikaram as if it happened in Kovalan’s days. Her husband drove her out of the house with a Sanskrit manuscript (palm leaf) in her hand. She was weeping standing in the middle of the road. Kovalan got that Sanskrit manuscript from her and read it and consoled her.

How come Kovalan read Sanskrit? His name itself is Gopalan and in Tamil it is Kovalan ( B= V are interchangeable) Tolkappiam used the Sanskrit word UPAMA as UVAMAI ( B= V are interchangeable) It is a chapter heading. We see it in Avestan language as well.

So Sanskrit was widely used. I am an example. I do Sandhya vandanam every day using the 3000 year old Mantras. I say Seven Seers names in the same order as told by Panini 2700 years ago. MS Subbulakshmi sang in Sanskrit from United Nations and millions around the world listened to her with English Translation.

NO TAMIL CAN SPEAEK FOR EVEN TEN MINUTES WITHOUT A SANSKRIT WORD. THERE IS NO TAMIL DICTIONARY WITHOUT SANSKRIT WORDS. IN FAC,T MORE SANSKRIT WORDS ARE IN NIKANDU THAN TAMIL WORDS.

Recently I went to Sri Lanka and bought VEERA KESARI, a famous Tamil daily and stared underlining Sanskrit words .Same proportion of Sanskrit words like Tamil dailies of Tamil Nadu. The fact of the matter is since all our forefathers spoke Sanskrit we could not avoid until this day.

Suddenly a Dravidian Idiot may appear in front of you and say It is all happened because of Brahmins and that too in later centuries. Ask that Idiot why Varunan and Indran are praised as Tamil gods in Tolkappiam? Ask that idiot Why we have Damodaran, Kesavan, Brahmachari, Valmiki Kapilan, Paranan, Mahadevan, Vishnu dasan (Vinnanthayan), Kamakshi (Kaamakkani) and 20 names with  Nagan suffix – all Sanskrit names in Sangam literature. Why all chapters of Tirukkural, Tolkappiam and Silappadikarm have Sanskrit word ADHIKAARAM all through the book?

Since Sanskrit was the spoken language of learned people all over India, all Indian languages, including Tribal languages have Sanskrit words.No one can remove them. It is in their names, Town names, Parents names. Even Gotra names are found in Sangam literature.

To cut it short, Sanskrit was spoken by the leaned and understood by women and laymen. Otherwise we would not have 650++++ plays and several thousand hymns in Sanskrit. Very recently Muthu swami Dikshitar and Sadashiva Brahmendrar wrote everything in Sanskrit and no Carnatic Music concert goes without singing them. Since Sanskrit was spoken and understood by everyone, it happened.

Last but not the least, we have to learn Sanskrit to tell the world what is in it. That is the oldest literature and the largest literature in the world. What we have in Sumerian and Egyptian and Akkadian are not proper literature. They are similar to the contents of Atharva Veda.

Tomorrow we will look at

Q and A

K R

To:swami_48@yahoo.com

Wed, Sep 6 at 6:56 AM

Namaskaram sir. 

Can you oppose these statements with proofs and evidences? 

1.there is no Hindu architecture in India before Sanchi stupa built by Ashoka.

2.there is a temple in India in kanchi ,badri etc before Jain temples and Buddhist temples.

3.in Siva Kanchi boundary wall of temple has Buddhist idol .

( he means Those temples were Jain and Buddhist temples before Hindus converted them)

To be continued………………………………..

 tags- Sanskrit, Spoken language, never, 

நுவரெலியா சிவன் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற…… Part 25 (Post No.12,579)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,579

Date uploaded in London – –  –  12 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்  – Part 25

52.நுவரெலியா லங்காதீஸ்வரன் கோவில்

1978-ம் ஆண்டில் உருவான புதிய சிவன் கோவில் நுவரெலியா  லங்காதீஸ்வரன் கோவில் ஆகும். இந்தக் கோவிலை நிறுவியவர் காயத்ரி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஆர். கே முருகேசு தம்பி ஆவார்.

நுவரெலியா லேடி மக்கலம் வீதியில் No. 82, Lady  Mc Callums Drive அவர் கட்டிய  ஸ்ரீ லங்காதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்தியாவின் நர்மதை கரையில் ஒரு பாண லிங்கம்  கண்டெடுக்கப்பட்டது .. நர்மதை நதியில் உருண்டு வரும், இயற்கையில் உருவான கற்களை பாண லிங்கம் என்றும் ஸ்வயம்பூ (தான் தோன்றி ) லிங்கம் என்றும் அழைப்பார்கள்.

இந்தக் கோவிலில் பல கடவுளர் மூர்த்திகளும், பெரிய தியான மண்டப மும் உள்ளது.  மேலை நாடுகளில் தியான மண்டபங்கள் பல அமையவும் சுவாமிகள் ஏற்பாடு செய்தார். நுவரெலியாவில் சமாதி ஆகும் முன்னர், அம்பாறை மாவட்டத்தின் தெற்கே தம்பிலுவில் கிராமத்தில் “ஸ்ரீ காயத்திரி தபோவனம்” எனும் வளாகத்தில் காயத்திரி மூலவிக்கிரகத்துடன் சிவலிங்கம், மகாமேருயந்திரம் அமையப்பெற்ற மூலஸ்தானம் மற்றும் பிள்ளையார், முருகன், விஷ்ணு , ஆஞ்சநேயர், அகஸ்த்தியர், விஸ்வாமித்திரர் திருவுருவங்களும் உள்ள  ஆலயம் எழுப்பினார்

மட்டக்களப்பு நாவலடி புதுமுகத்துவாரத்தில்  சப்தரிஷிகளுக்கு தனியான, எழுகோண வடிவிலான் ஆலயமும் கட்டப்பட்டது   தனியான மகா மேரு ஆலயமும் மகா விஷ்ணு ஆலயமும் இவர் முயற்சியில் உருவானவை..

நர்மதை – இராவணன் தொடர்பு பற்றி சுவையான கதை

ராவணன் பெண்களைக் கடத்தி கெட்ட பெயரைச் சம்பாதித்தாலும் அவன் பெரிய சிவபக்தன் என்பதை மறுக்கமுடியாது அதனால் லங்காதீஸ்வரன் என்ற நாமம் சிவனுக்கு சார்த்தப்பட்டுள்ளது ;கயிலை மலையை அசைக்க முயன்று கதறி அழுத ராவணன் பற்றியும்  கடைசியில் அவன் சிவன் அருளால் தப்பித்துப் பிழைத்ததையும்  தேவாரத் திருவாசகப் பாடல்கள் மூலம் அறிகிறோம்.

ராமாயண வரலாற்றில் நுவாரெலியாவுக்கு சிறப்பு இடம் உண்டு. மத்திய இலங்கையில் மலைப் பகுதியில் அமைந்த நுவரெலியா , ராவணனுடன் மிகவும் சம்பந்தப்பட்ட இடம். ராவணன் மகன் மேக நாதன் முதலியோர் சிவனை வழிபட்ட இடம் இது என்று சிவபால யோகி மகாராஜ் கூறுகிறார். அவர் 12 ஆண்டு தவத்துக்குப்பின்னர் கண்டெடுத்த லிங்கம்தான் இங்கு பிரதிஷ்டை ஆகியுள்ளது . 1978-ம் ஆண்டில் அக்டோபர் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

நர்மதை நதிக்கும் ராவணனுக்கும் கூட தொடர்பு உண்டு.உலகில் ராவணன் பயந்து நடுங்கிய ஒரே மன்னன் கார்த்த வீர்ய அர்ஜுனன் ஆவான் . வடகிழக்குப் பருவக்காற்று, தென் மேற்குப் பருவக்காற்று   தேதிகளை அறிந்தவர்கள் காத்துட்டு , கால் காசு (Single Paisa)  செலவழிக்காமல் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் சென்று வரலாம் இந்தவிஞ்ஞான ரகசியத்தை ராவணன்,கரிகால் சோழன் முதலியோர் பயன்படுத்தினர். அசோகனும் இந்தப் பருவக்காற்றைப்   பயன்படுத்தி மகன், மகள் , புத்த பிட்சுக்களை அனுப்பிய செய்தி மகாவம்சத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கப்பல்  வரும், போகும் பயணங்களுக்கு இடையில் ஆறு மாத இடைவெளி இருக்கும்  ராவணன் இதைப்  பயன்படுத்தி நர்மதை, கோதாவரி நதிக்கரைகளுக்கு வந்து பெண்களை சீண்டுவது வாடிக்கை ஆக இருந்தது . நர்மதை நதிக்கரையில் மஹிஷ்மதி நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஹேஹய நாட் டு மன்னன் கார்த்த வீர்யாஜுனன் ஆண்டுவந்தான். ராவணனின் தொல்லை அதிகரிக்கவே அவனுக்கு செமை அடி உதை  கொடுத்து சிறையிலடைத்தான். பின்னர் நெடுங்காலத்துக்குப் பின்னர், ராவணனை  சிறையிலிருந்து  விடுவித்தான். அப்போது ராவணன் சொன்னான்- இனி இந்தப்பக்கம் வந்து வாலாட்ட மாட்டேன்..

கார்த்த வீர்யாஜுனன்- ராவணன் மோதல், சிறைவாசக் கதையை வாயு புராணம் விரிவாகக் கூறுகிறது. 

Xxxxx

 Nilavarai Well; Picture from Wikipedia 

53. யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரி நவ சைலம் சிவன் கோவில்

யாழ்ப்பாணத்தில் நிறைய இயற்கை அதிசயங்கள் உள்ளன. அவற்றில் ராமானுடனும் சிவனுடனும் சம்பந்தப்பட்ட இடம் நிலாவரைக்  கிணறு. வற்றாது  நீர் சுரக்கும் ஊற்று இது. பாசனத்துக்கும் , புனித நீராடலுக்கும் இன்றும் பயன்படுகிறது

யாழ்ப்பாண நகரிலிருந்து 12 மைல் தொலைவில் நவ கிரி நவ சைலம் இருக்கிறது. கிரி, சைலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு மலை என்று பொருள். இதுபற்றி தட்சிண கைலாச புராணத்தில் தகவல் கிடைக்கிறது . “நவ சைலத்தில்  ஒரு குகையில் சிவனும் பார்வதியும் நீல ரத்தினக் கற்களாலான மேடையில் அமர்ந்து இருந்தனர். விநாயகர், சுப்ரமணியர், தே வர்கள்  புடை சூழ இருந்து அருள் மழை சுரந்தனர் .  அப்போது திடீரென இடி ஓசை முழங்க மலைக் குகை பிளந்தது . பூமிக்கடியிலிருந்த  கங்கா தேவி தாமரை மலருடன் தோன்றினாள் அந்த நீரை இறைவனும் எடுத்து தன் சடையின் மீது தெளித்ததால் நீரும் புனிதம் அடைந்தது” .

அந்த இடத்தில் சிவ பெருமானுக்கு பின்னர் கோவில் எழுப்பப்பட்டது ராமன் பற்றிச் சொல்லப்படும் கர்ண பரம் பரைக் கதை :

இராம பிரான், ராவண வதத்துக்குப் பின்னர், குரங்குப் படையுடன் இங்கே வந்தான். வானர சேனைகளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. உடனே ராம பிரான் தனது வில்லால் பூமியைத் துளையிடவே தண்ணீர் பீறிட்டு எழுந்தது. அதுவே நிலாவரைக் கிணறு அதாவது நிலத்தின் எல்லை/ வரை காண முடியாத ஆழம் உடைய கிணறு.

இப்போது இதிலுள்ள விஞ்ஞான உண்மைகளை ஆராய்வோம்.

ஒருமலைக் குகை இருந்தது. அது திடீரென இடிந்து விழுந்தது; அங்கே தண்ணீர் தோன்றியது..

இதிலுள்ள அறிவியல் உண்மை : யாழ்ப்பாண பூமி, சுண்ணாம்புக் கல் (LIME STONES ROCKS AND CAVES)  பாறைகளால் ஆனது. நிலத்துக்கு அடியில் அது பல பள்ளம், குகைகளுடன் காணப்படும். இயற்கையிலேயே அது இடிந்து விழும்போது இடி ஓசை கேட்கும். கீழேயுள்ள தண்ணீர் மேலே ஊற் றெடுக்கும் . அங்கு கோவிலும் இருந்திருந்தால் எல்லாம் இறைவன் செயல் என்ற நமபிக்கையும் பிறக்கும்.

ஆழம் தெரியாத அதிசயக் கிணறு பற்றி ஆராய்ச்சி செய்த பாசனத்துறை சிவில் என்ஜினீயர் SANMUGAM ARUMUGAM (AUTHOR OF HUNDRED HINDU TEMPLES OF SRI LANKA) இலங்கையிலுள்ள 100 கோவில்கள் பற்றி எழுதிய நூலில்,  அவர் கிணறு பற்றி செய்த ஆராய்ச்சியை  விவரித்துள்ளார் ; அதன் சுருக்கம் பின் வருமாறு,

மேலிருந்து பார்த்தால் சாதாரண கேணி போலத் தோன்றும்.; அருகாமையிலுள்ள கிணறுகள் போலவே இருக்கும். ஆனால் கிணற்றின் ஒரு பக்கத்தில் 134 அடியும் இன்னொரு பக்கத்தில் 164  1/2 அரை அடியும் ஆழம் உடையது. கிணற்றின் நீள , அகலம் 48  அடி X 38 அடி.

கிணறு இருக்கும் புத்தூர்,  கடல் மட்டத்தைவிட 17 அடி உயரம் அதிகம். யாழ்ப்பாண குடா நாடு முழுதும் LIME STONE  லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புக் கல் மீது அமைந்துள்ளது. பூமிக்கடியில் மேடு , பள்ளங்கள், கால்வாய், குகைகள் போன்ற அமைப்புடையவை. மழைக்காலத் தண்ணீர் இவைகளில் தங்கும்.. நீரைக்கரைக்கும் சக்தி சுண்ணாம்புக்கு இருப்பதால் குகைகள் தோன்றும். அவை பெரிதாக விரிவு அடைந்தால் பாரம் தாங்காது தாழ்ந்து போய் கிணறுகள் உண்டாகும். கடலுக்கு அருகில் இவை இருந்தால் பூமிக்கு அடியில் குகை வழியாக கடல் உப்பு நீரும் உள்ளே பாயும் . நிலவரைக் கிணற்றில் மேலேயுள்ள நீர் சுத்த நீராகவும் ஆழத்தில் உள்ள நீர் உப்பு நீராகவும் இருப்பதற்கு இதுவே காரணம்.

மழை நீரால் நிரப்பப்படும்  முதல் 80 அடி ஆழம் குடி நீர்  தரம் உடையது.  50 அடி முதல் 70 அடி ஆளும் வரையுள்ள தண்ணீர் குடி நீரானாலும் அசுத்தம் கலந்து உள்ளது. 70 அடி முதல் 80 அடி வரையுள்ள தண்ணீர் நீரினால் ஆன ஒரு சுவர் போன்றது . அதாவது கடல் நீருக்கும் மேலேயுள்ள குடிநீருக்கும் இடையிலுள்ள பிரிவினை அடுக்கு.

80 அடிக்குக் கீழே  போனால் உப்புக்கரிக்கும் கடல் நீர் தென்படுகிறது. 130 அடி ஆழம் வரை கடல் நீர் போல பல அசுத்தங்கள் இருக்கிறது 130 அ டிக்கும்  கீழே போனால் கடல் நீரை விட அதிக உப்பு இருக்கிறது.

நிலாவரை ஊற்றுக்கு அருகில் எந்திர DRILLS ட்ரில்கள் மூலமாக ஓட்டை போட்டுப் பார்த்ததில் வெவ்வேறு மட்டத்தில் தண்ணீர் காணப்பட்டது. அதற்குப் பின்னர் வெற்றிடம் வழியாக ட்ரில் கருவி மிக  ஆழத்தில் போய் உட்கார்ந்தது . இதன் மூலம்  இடையே குகை அல்லது பள்ளம் இருப்பது தெரிந்தது. இதுவும் இடத்துக்கு இடம் வெவ்வேறு ஆழத்தில் நிகழ்வதால் குகைகள் அளவு வேறு என்பதும் தெரிகிறது . 100 அடிக்குக் கீழே குகைகள் உள்ளன

தட்சிண கைலாச புராணத்தில் சொல்லப்படும்  அதிசய நிகழ்ச்சியும் இந்த குகைகள் உடைந்து பள்ளம் ஏற்படுவது , ஊற்று மேலுக்கு வருவது போன்ற ஒரு நிகழ்வுதான்.

xxx

என்னுடைய 2 ஆராய்ச்சிகள்

முன்னொரு கட்டுரையில் முழங்கா வில் கோவில் பற்றி ஒரு அதிசயத்தைக் கண்டோம். அதாவது  வானம் இடிக்காமல், மின்னல் மின்னாமல் இடி ஓசை கேட்டது; தண்ணீர் வந்தது என்பதும் மேற்கண்ட நிகழ்வு போன்றதே .

பூமிக்கு அடியிலுள்ள சுண்ணாம்புக் கல் குகைகள் இடிந்து நிலம் சரியும் போது  இடி ஓசை போல சப்தம் கிளம்புகிறது  நிலாவரை கிணறு தோன்றியதையும் தட்சிணா கைலாச புராணம் இதே போல விவரிப்பதை ஒப்பிட்டால் புரியும் .

விஞ்ஞான நிகழ்வுகளுக்கு , இயற்கை அதிசயங்களுக்கு இறைவன் பெயரை இழுக்கலாமா என்று பகுத்தறிவுப் பகலவன்கள் கேள்விகளை எழுப்பக்கூடும். ஏன் இப்படி குறிப்பிட்ட காலத்தில் நிகழ்கிறது என்பதற்கு  விஞ்ஞானம் விடை தராது  கடலுக்கு அடியில் ஏராளமான ஏரி மலைகள் குமுறி க்கொண்டு இருக்கின்றன.; எப்போது பார்த்தாலும் கடலுக்கு அடியில் பூகம்பங்கள் ஏற்படுவதை ஸைஸ்மோகிராப் கருவிகள் பதிவு செய்கின்றன  ; உடனே அதைக் கவனிப்பவர்கள் கரை ஒரே மக்களுக்கு சுனாமி பேரலைகள் வரும் என்று எச்ச ரிக்கின்றனர். ஆனால் சுனாமி வருவதே இல்லை. அவர்கள் எச்சரிக்காத போது பிரமாண்டமான சுனாமி ராட்சத அலைகள் எழுந்து இரண்டு லட்சம் பேரை கடலுக்குள் இழுத்துச் சென்று ஜல சமாதி வைத்ததை  நாமே படித்தோம். இதுதான் இறைவனின் திருவிளையாடல் .

BIG BANG AND BIG CRUNCH

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்ற பெயரை சம்ஸ்க்ருத அகராதிகள்  காட்டுகின்றன. அதாவது அவர்கள் நினை க்கும்போது  பிக் பேங் BIG BANG என்னும் பிரபஞ்ச வெடிப்பைத் தோற்றுவித்து உயிரினங்கள், பிரபஞ்சங்களை   உண்டாக்குவர். யுக முடிவில் பிக் க்ரஞ்ச் BIG CRUNCH என்ற பெயரில் மஹா பிரளயத்தை உண்டாக்குவர். இதை இந்துப் புராணங்கள் விளக்குவது போல நாஸா NASA  விஞ்ஞானிகள்  கூட விளக்கவில்லை. விஷ்ணு சஹஸ்ர நாமம் இறைவனையே ஆத்ம யோனி, ஸ்வயம் ஜாதோ என்று வருகிறது அதாவது அவரே யோனி; பிறப்பிடம் !! தன்னைத்தானே பிறப்பிக்கும் வல்லமை அவன் ஒருவனுக்கே உண்டு.

Xxx

பள்ளம்= பிலம் = வில்லு = வில்

இரண்டாவது ஆராய்ச்சி வில்வில்லு பற்றியது . இலங்கையில் மட்டும் பள்ளமான, வளைவான பகுதிகளுக்கு வில், வில்லு என்ற சொற்களைப்  பயன்படுத்துகின்றனர் (உ.ம். முழங்கா வில்)

வில் என்பது வளைவான  அமைப்பு என்பது ராமபிரானின் கோதண்டத்தைப் பார்த்தாலே விளங்கும் . இது தமிழ் சொல் இல்லை அல்லது தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் பொதுவான சொல். ஏனெனில் பிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பள்ளம் , குகை என்று பொருள். ராமாயணத்தில் வாலி- சுக்ரீவன் கதையைப் படித்தோருக்கு இது நினைவில் நிற்கும். ப = வ இடம் மாறும் என்பது தொல்காப்பியத்திலுள்ளது; சங்க இலக்கியத்தில் உள்ளது; AVESTAN அவஸ்தன் மொழியில் உள்ளது  ஆக பள்ளம்= பிலம் = வில்லு = வில் ஆகிய எல்லாம் வளைந்த பூமியைக் குறிக்கும் (Cognate Words)  . வில்லைக் கையில் ஏந்திய காட்டுவாசிகளை,  வட இந்தியாவில் பில்லர்கள் (Bhils) என்றே அழைப்பர் .

To be continued……..

Tags-  யாழ்ப்பாண, புத்தூர், நவ கிரி, நவ சைலம், , நிலாவரைக் கிணறு, நுவரெலியா, லங்காதீஸ்வரன், கோவில்,

மாறி வரும் சிகிச்சை முறைகள்! (Post.12,578)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,578

Date uploaded in London –  12 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஹெல்த்கேர் அக்டோபர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 மாறி வரும் சிகிச்சை முறைகள்!

ச.நாகராஜன்

கைவிரல் மூலம் மார்பகப் புற்றுநோய் அறியலாம்!

அதிவேகத்தில் இயங்கும் நவீன உலகம் மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை. அதன் இயக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.

சிகிச்சை முறைகள் மாறி வருகின்றன.

தொலைதூரத்திலிருந்து ஒரு டாக்டரிடம் வீடியோ மூலமாக தனது வியாதிக்கான மருந்தை ஒருவர் பெற முடிகிறது. இது போல பல மாற்றங்கள். சிலவற்றைப் பார்ப்போமா? 

பெண்கள் மிகவும் பயப்படும் மார்பகப் புற்று நோய்க்கான தீர்வை மிக சுலபமாக மேற்கொள்ளலாம் என்கிறது நவீன ஆய்வுகள்.

ஒரு பெண்மணியின் கைவிரல்களில் உள்ள வியர்வையைப் பார்த்தாலேயே – பரிசோதித்தாலேயே – போதும் அவருக்கு மார்பகப் புற்று நோய் உண்டா இல்லையா என்பது தெரிந்து விடும் என்கிறது நவீன ஆய்வு.

ஏனெனில் கைவிரல்களில் உள்ள புரோடீன்களைச் சோதித்தால் போதுமாம், அதன் மூலம் மார்பகப் புற்று நோய் பற்றித் துல்லியமாக அறிந்து கொள்ள  முடியுமாம். ஷெஃபீல்ட் ஹல்லம் பல்கலைக்கழக (Sheffield Hallam University) ஆய்வாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்போதுள்ள பயாப்ஸி, மம்மோகிராம் ஆகியவை திறன் வாய்ந்தவை தான் என்றாலும் அது பெண்களுக்கு மிகவும் சங்கடத்தைத் தருகின்றன. பண்பாட்டு ரீதியாகவும் பல பெண்கள் அதைச் செய்து கொள்ளத் தயங்குகின்றனர். ஆனால் கை விரல்களைக் காண்பியுங்கள் என்றால் யார் தான் மாட்டார்கள்?

15  பெண்கள் மீதான சோதனை இப்படி கைவிரல் ரேகையைப் பார்த்து 98% துல்லியமான முடிவுகளை அறிவித்திருக்கிறதாம்.

முகர்ந்து பார்க்க முடியவில்லையா? ஆரஞ்சை எடுங்கள்!

கோவிட் வந்தாலும் வந்தது உலகில் ஏராளமானோருக்கு மூக்கால் நுகரும் சக்தியே போய் விட்டது. சமீபத்தில் டெய்லி டெலகிராப் பத்திரிகை இப்படி நுகரும் சக்தியை இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியைத் தருகிறது. தினமும் இப்படிப்பட்டவர்கள் இரண்டு ஆரஞ்சு பழங்களை முகர்ந்து பார்த்தால் போதுமாம், அவர்களது பழைய திறன் திரும்பி வந்து விடுமாம். அடடா. ஆரஞ்சுக்கு அப்படி ஒரு சக்தியா என்று வியப்பு ஏற்படுகிறதல்லவா?

கோவிட் -டால் இப்படி போன திறன் நிரந்தரமாக இழந்து விட்ட ஒன்று அல்ல என்று லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் (University College London).

பத்தே பத்து விநாடிகள் காலையிலும் மாலையிலும் ஆரஞ்சையோ அல்லது எலுமிச்சம்பழத்தையோ அல்லது காபியையோ முகர்ந்து பார்த்தால் போதுமாம், மூளை தனது இழந்த திறனைப் பெற்று விடுமாம்! நல்ல வாசனையான கண்டுபிடிப்பு அல்லவா இது! 

மன அழுத்தம் போக அடுத்தவர் வியர்வை

ஒரே டென்ஷன், மன அழுத்தம் என்றெல்லாம் அலறுபவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி! கூட்டமான மெட்ரோ புகை வண்டிகளில் அல்லது பஸ்களில் பயணம் செய்யுங்கள் என்கிறது நவீன ஆய்வு ஒன்று! என்ன இது என்று ஆச்சரியப்பட்டால் அதற்கான காரணத்தையும் விளக்குகிறது. அடுத்தவர்களிடமிருந்து வெளிப்படும் வியர்வை நாற்றம் நமக்கு ஒரு பெரிய அமைதியான நிலையை ஏற்படுத்துகிறதாம். ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு சில தன்னார்வலர்களை அழைத்து அவர்களின் அக்குளிலிருந்து வியர்வைத் துளிகளை எடுத்ததாம். அவர்களில் சிலர் திகிலூட்டும் படங்களைப் பார்த்தவர்கள். மற்றவர்கள் காமடி படத்தைப் பார்த்தவர்கள். ஆனால் அந்த வியர்வை மாதிரிகளை கவலைப்படுவோரிடமும் மன அழுத்தம் உடையவர்களிடமும் காண்பித்து அதை முகரச் சொன்னார்கள் ஆய்வுக் குழுவினர். இந்த சிகிச்சை முறை அவர்களுக்கு நல்ல பலன் அளித்திருக்கிறது. 39% மன அழுத்தம் அவர்களுக்குக் குறைந்து விட்டது. கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் (Karolinska Insititue) ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது.

தாய்க்கும் சேய்க்கும் உள்ள வாசனை உறவு நமக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் இப்போது தான் யாருடைய வியர்வை வாசனையும் கூட நமக்கு ஒரு ஆறுதலைத் தரும் என்பது தெரிகிறது.

இதன் அடிப்படை காரணம் இன்னொரு சக மனிதரின் சுகந்த வாசனை இப்படி ஒரு ஆறுதலை அளிக்கிறது என்கிறது ஆய்வுக் குழு! 

ஸ்ட்ரோக் பாதிப்பு போக எலக்ட்ரோட்!

ஸ்ட்ரோக்கினால் – பக்க வாதத்தினால் முடங்கிக் கிடந்த ஒரு பெண்மணி தனது பழைய இயக்கத்தைப் பெற்று விட்ட அதிசயத்தை நவீன சிகிச்சை முறை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. அவருக்கு அவரது கழுத்தில் எலக்ட்ரோடுகள் பதிக்கப்பட்டன. அவரது மூளைக்கும் முதுகுத்தண்டுக்கும் உள்ள தொடர்பை இந்த எலக்ட் ரோடுகள் அகற்றவே அவர் தனது பழைய இயக்கங்களைப் பெற்று கை கால்களை அசைக்க ஆரம்பித்து விட்டார். நேச்சர் மெடிஸின் என்ற பத்திரிகையில் ஒரு அமெரிக்க குழு இதை விவரித்து எழுதியுள்ளது. மோட்டார் நியூரான்களுடன் தொடர்பு கொள்ளும் சென்ஸரி நியூரான்களை ஊக்குவிக்க எலக்ட்ரோடுகள் பயன்பட்டன என்று தெரிவிக்கிறது இந்தக் குழு. ஹீதர் ரெண்டுலிக் (Heather Rendulic) என்ற ஆய்வாளர், “இரண்டு கை உலகில், பாவம் அந்த 22 வயது இளம் பெண் ஒற்றைக் கையுடன் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள். இப்போதோ பழையபடி கையில் ஸ்பூனையும் ஃபோர்க்கையும் எடுத்துக் கொண்டு நன்கு சாப்பிடுகிறாள்” என்கிறார்.

 2023ஆம் ஆண்டின் கண்டுபிடிப்புகள்

இவையெல்லாம் 2023இன் அதிசய சிகிச்சை முறைகள்.

இன்னும் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட அதிசய சிகிச்சை முறைகள் 2023இல்  பல உள்ளன. அவைகளையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது – நவீன உலகத்தில்!

***

நன்றி, ஆதாரம் : The Week May 26, 2023