இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 21
42.வட்டுக்கோட்டை கண்ணகாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வரப் பெருமான் ஆலயம்
யாழ்ப்பாண வட்டுக்கோட்டை கண்ணலிங்கேஸ்வரப் பெருமான் ஆலயத்தை சுருக்கமாக கண்ணகி கோவில் என்று சொல்லுவார்கள் .ஆதிகாலத்தில் இங்கு அம்மன் சிலை மட்டும் இருந்து, பின்னர் லிங்கம் பிரதிஷ்டை செய்ததே இதற்குக் காரணம்.
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை – மூலாய் சாலையில் கண்ணகாம்பிகா கோவில் இருக்கிறது ஆரிய சக்கரவர்த்திகள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ராமநாத பட்டர் இங்கு முறையான வழிபாட்டை ஏற்படுத்தினார். இது 500 ஆண்டு பழமையான தலம் 1513-ம் ஆண்டில் வேங்கடேச குருக்கள் இந்தக் கோவிலை நிறுவினார். மதவெறியர்கள் இந்தக் கோவிலை இடிக்க வந்த போது இது மாதா கோவில் என்று சொல்லவே அவர்கள் இடிக்கவில்லையாம் . பத்தினி தேவி சிலை என்ற பொருளில் அவர்கள் இப்படிக்கூறினர்.
நாவலர் காலத்தில் இந்து மறுமலர்ச்சி ஏற்ப்பட்டபோது , 1882ம் ஆண்டில் தமிழ் அறிஞர் சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் குமபிஷேகத்தை நடத்தினார். அப்போது கோவில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டு முறையான பூஜைகள் துவக்கப்பட்டன பின்னர் அவரது வம்சத்தினர் தொடர்ந்து சேவை ஆற்றினார்கள் .
மலாயாவில் வசித்த இந்துக்கள் பொருளுதவி செய்யவே 1978 ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது . விநாயகர் முதலிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஜூன் மாதத்தில் ஆண்டு உற்சவம் நடைபெறுகிறது.
XXXX
43.காரைநகர் சிவன் கோவில், ஈழத்து சிதம்பரம் , யாழ்ப்பாணம்
Karainagar Sivan Temple; picture from Wikipedia
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் கோவில் யாழ்ப்பாண…………..PLEASE CONTINUE IN……………………………… swamiindology.blogspot.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
முட்டாள்களின் உளறல்!
ச.நாகராஜன்
சனாதனத்தை ஒழிப்போம் என்று கூக்குரலிடுபவர்களை என்னவென்று சொல்வது?
முட்டாள்கள் என்றா திமிர் பிடித்தவர்கள் என்றா ஒன்றும் அறியா அறிவிலிகள் என்றா?
சனாதனம் என்ற வார்த்தைக்கே என்ன பொருள் என்று அறியாதவர்கள் இவர்கள்.
சனாதனம் என்றால் என்றும் உள்ளது என்று பொருள்.
ஆதி அந்தம் இல்லாமல் நிலைத்து இருப்பது என்று பொருள்.
விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்.
தனக்கு விநாச காலம் வரும் போது புத்தி விபரீதமாகுமாம்!
இப்படி அரசியல் அரங்கில் ஒரு புறம் கூக்குரலைக் காண்கிறோம்.
இன்னொரு புறம் திவ்யா திரிவேதி என்ற ஒரு அம்மணி எதிர்கால
இந்தியா இந்துமதம் இல்லாமல் இருக்கும் என்று அண்மையில் கூறி இருக்கிறார்.
இவர் ஒரு உதவிப் பேராசிரியர். ஹ்யூமானிடீஸ் அண்ட் சோஷியல் ஸயின்ஸஸ் துறையில் பணியாற்றுபவர். இவர் டெல்லியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணிபுரிபவர்!
இவருடைய அறிவு இப்படி இருந்தால் இவரிடம் பாடம் படிக்கும் மாணவ மாணவியரின் அறிவு எப்படி இருக்கும்! ஊகித்துக் கொள்ளலாம்!!
“இரண்டு இந்தியாக்கள் இருக்கிறது. ஜாதி உள்ள பழைய இந்தியா ஒன்றாம். ஜாதி இல்லாத எதிர்கால இந்தியா இன்னொன்றாம்.”
இது இவரது கண்டுபிடிப்பு (ஆதாரம் : 9-9-2023 டைம்ஸ் நௌ செய்தி)
இந்த புத்திசாலியை மீடியாக்காரர்கள் விடவில்லை.
“அம்மணீ! இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி உயரத்தில் போய்க் கொண்டே இருக்கிறதே” என்று யதார்த்த நிலையை ஒரு ஊடகக்காரர் சொல்லி அதை விளக்கவும் செய்தார்.
ரிக்ஷா இழுக்கும் ஒருவர் தொழில்துறை நுட்பத்தின் மேம்பாட்டால் இப்போது மிகவும் பயனடைந்துள்ளதை நாம் பார்க்கவில்லையா என்ன என்றார் அவர்.
உடனே அது “மீடியாத்தனம்” – மீடியாக்காரர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார் அம்மணி.
அனைவரும் சிரித்தனர் அம்மணியின் அறிவைக் கண்டு.
வடமொழியில் வேடிக்கையான அற்புதமான ஸ்லோகம் ஒன்று உண்டு.
வானரஸ்ய சுராபானம் மத்யே வ்ருஷிச்சக்தம்சனம் |
தன்மத்யே பூதசஞ்சார: யத்தா தத்தா பவிஷ்யதி ||
இதன் பொருள்:
ஒரு குரங்கு சாராயத்தை ‘புல்’லாகக் குடித்து விட்டது.
போதை ஏறிய ஒரு குரங்கை நினைத்துப் பார்த்துக் கொள்வோம். அதை ஒரு தேள் கொட்டி விட்டது. சாதாரணமாகவே ஆடும் குரங்கு சாராய ஆட்டத்தோடு தேள் கடியால் வேறு ஆட ஆரம்பித்தது. அப்போது அதில் ஒரு பூதம் வேறு புகுந்து கொண்டது.
இப்போது குரங்கு எப்படி இருக்கும்?
அம்மணியின் ஆட்டம் அப்படி இருக்கிறது!
மக்காலே தனது கல்வித் திட்டத்தை நுழைக்கப் பார்த்தான். கம்யூனிஸ்டுகள் தங்கள் விலை போகாத தங்கள் சித்தாந்தத்தை நுழைக்கப் பார்த்தார்கள்.
முகலாயர்கள் மதம் மாற்றப்பார்த்தார்கள். ஜஸியா விதித்துப் பார்த்தார்கள்.
ஆங்கிலேயர்கள் மதம் மாற்றப் பார்த்தார்கள். பலவித ஆசைகளைக் காட்டினார்கள்.
அசைந்ததா சனாதனம்.
முகலாயர்கள் ஒழிந்தார்கள். அந்த வம்சத்தையே காணோம்.
ஆங்கிலேய அரசு ஒழிந்தது. அதன் கடைசி ஆசையும் அழிந்தது.
இப்போது காசு கொடுத்து விலைக்கு வாங்கிய இந்த அம்மணிகளும் சில ஊடகங்களும் அதிகார வெறி பிடித்த ஏராளமான ஊழல் பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் சனாதனத்தை அழித்து விடுவோம் என்கிறார்கள்.
அழிந்து போகப் போவது யார்?
விரைவிலேயே பார்க்கப் போகிறோம்!
ஹிந்துக்கள் அனைவரும் எழுந்து ஓரிணையில் இணைந்து இந்த ராவணக் கூட்டத்தைப் பார்க்கும் போதே அது அழிந்து விடும்!
காலம் வேகமாக நகர்ந்து இந்தக் கட்டத்தை அடைந்து விட்டது.
என்றுமுள்ள சனாதனம் தனது வலிமையைக் காட்டப் போகிறது.
சனாதன சேனையில் இணைவோம். சேது பாலம் கட்ட அணில் உதவியது போல நம்மால் முடிந்ததைச் செய்வோம்.
வெல்க இந்து மதம்! வாழ்க பாரதம்! என்றும் இருக்கும் சனாதனம்!!!
ஜன்மாஷ்டமிக்கு முன் தினம் சென்னையில் இருந்தேன் (செப்டம்பர் 2023); சென்னை அயோத்யா மண்டப ம் அருகில் வெங்கடேஸ்வரா போளி கடையில் காப்பி குடித்துவிட்டு தேங்காய் போளி , முறுக்கு, சீடை , வெல்லச் சீடை , வடை, போண்டா ஆகியன வாங்கிக்கொண்டு. மண் டபம் முன்னால், தெருவில் கடை வை த்திருக்கும் பிராமணனிடம் பூணுல், நோன்புக் கயிறு, தர்ப்பண செட்டுகளை வாங்கிக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன் . கிருஷ்ணன் பிறப்பைக் கொண்டாடத் தேவைப்படும் தோரணம், மாவிலை, வாழைக்குருத்து , கிருஷ்ணன் பொம்மைகளைக் கண்டேன்; ஒரே கூட்டம்;
உறவினர் வீட்டுக்கு வந்தால் மறுதினம் அவர்கள் கிருஷ்ணனின் கால் சுவடுகளை வீட்டின் வாசல்படி முதல் , சுவாமி அறை வரை வரைந்திருந்தனர் . அவர்கள் வாங்கி வர சொன்ன பசு வெண்ணெயையும் மறக்காமல் வாங்கி வந்தேன். அங்கே ஏற்கனவே மலை போல சீடை , முறுக்கு வகையறா குவித்து இருந்தது.
எந்த நாட்டுக்குப் போனாலும் எந்த ஊருக்குப்போனாலும் நான் காண விரும்புவது அங்குள்ள மியூஸியம்தான் . கிரேக்க நாட்டுத் தலை நகர் ஏதென்ஸுக்குச்(Athens in Greece) சென்ற போது மியூசியத்துக்கே முதலிடம் தந்தேன் . இலங்கைத் தலைநகர் கொழும்பு நகருக்குச் சென்றபோதும் முதல் நாள் சென்றது மியூசியத்துக்குத்தான். . ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் (Vienna in Austria) முக்கிய மியூஸியத்தைக் குடும்பத்துடன் பார்த்தபோதிலும் எனது பட்டியலில் எழுதியிருந்த மியூஸியத்தை பார்க்காமல் விட்டது என்னவோ போல் இருந்தது. ஒரு கட்டிடத்தில் மூன்றே மாடிகளில் உள்ள சின்ன மியூசியம்தான் . போன் செய்தபோது இன்னும் மூன்று மணி நேரம் திறந்திருக்கும் என்று அறிந்தவுடன் நானும் என் மகனும் டிராம் (Tram) இல் ஏறிக்குதித்து காட்சியகத்தை அடைந்தோம். அறிவுப் பசி உள்ளவர்களுக்கு அவை விருந்தளிக்கும் ; அவ்வா றே அங்கே நிறைய விஷயங்களை அறிந்தோம். மாடிப்படி ஏறும்போதே அவை ஸரி கமபதநிஸ போன்ற இசை நோட்ஸ்களை வாசிக்கும். அங்கு வரும் இசை ரசிகர்கள் படிகளில் ஏறியும் இறங்கியும் கூத்தாடியும் மெதுவாக மியூசியத்துக்குள் நுழைவார்கள்!
Goddess Parvati, 12th Century
கொழும்பு மியூசியத்தில் உள்ள சைவப் பெரியார்கள் ஏற்கனவே இலங்கைத் தபால்தலைகளில் இருப்பதாலும் , மியூசியம் கேட்டலாக் லண்டன் யுனிவர்சிட்டி லைப்ரரியில் இருப்பதாலும், என்ன பார்க்க வேண்டும் என்று முன்னரே திட்டமிட்டிருந்தேன் . லண்டனில் நான் பார்க்காத மியூசியம் இல்லை. ஆகையால் இயற்கை வரலாறு பகுதியைத் தவிர்த்துவிட்டு இலங்கை வரலாறு பகுதிக்கு மட்டும் டிக்கெட் வாங்கினேன்; மூன்று மணி நேரத்துக்கு கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல விருந்து கிடைத்தது.
சென்னைக்குச் செல்வோரும் மெட்ராஸ் மியூஸியம் பார்க்காமல் வரக்கூடாது; அங்குள்ள ஒவ்வொரு ஐம்பொன் விக்கிரகமும் வெளிநாடுகளில் பல லட்சத்துக்கு விலைபோகும்!!.
கொழும்பு மியூசியத்தில் விளக்குகள் , பூஜைப் பொருட்கள், மாலைகள் , ஆபரணங்கள் முதலிய பார்க்க வேண்டியவை . மன்னர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் அவர்களுடைய கொடிகளும் அல்லது அவற்றின் படங்களும் உள்ளன . அவற்றில் இந்து தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன .
உள்ளே நுழையும், போதே பெரிய துர்கா கற்சிலையும், சூரிய தேவன் சிலையும் உள்ளன . நல்லவேலையாக புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. ஆகையால் நூற்றுக்கணக்கில் படங்கள் எடுத்தேன் (பேஸ்புக்கில் எல்லாம் பதிவிடப்படும் ).
Nataraja, 12th century bronze
இதில் என்னை ஏமாற்றம் அடைய வைத்த இத்தாலி நகர்ச் செய்தியைக் கூறுகிறேன். இரண்டு மூன்று முறை இத்தாலியின் தலைநகருக்கு , (ரோமாபுரிக்கு, Rome in Italy) சென்று இருக்கிறேன் . நான் எட்ருஸ்கன் கலாசாரம் (Etruscan Civilization) பற்றி ஆராய்ந்து பல கட்டுரைகளை இங்கே எழுதியுள்ளேன் . ஒரு ட்ரிப் Trip பில் எட்ருஸ்கன் மியூசியத்தையும் (Etruscan Museum) சேர்த்துக்கொண்டேன். குடும்பத்தினர் அனைவரையும் ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு விரைந்தேன் ; பெரிய ஏமாற்றம்! புகைப்படம் எடுக்கத் தடை ; நான் ஆராய்ச்சி நோக்கில் சில படங்களை மட்டும் எடுக்கிறேன் என்றேன்.
இத்தாலிய மொழி மட்டுமே பேசும் ‘அது’களுக்குப் புரியவில்லை. நோ NO, No என்று மட்டுமே சொன்னார்கள். இருந்தபோதிலும் ஸ்வஸ்திகா சின்னம் பொறித்த சில பெரிய ஜாடிகளைப் புகைப்படம் எடுத்தேன் .
வெளிநாட்டில் எல்லா மியூசியங்களின் எக்சிட் EXIT வழியும் புஸ்தகக்கடை , கலைப்பொருட்கள் விற்கும் கடை வழியாகவே செல்லும் ; சரி, சில புஸ்தகங்களை வாங்குவோம் ; அதிலுள்ள படங்களை பயன்படுத்தலாம் என்று எண்ணினால், அதிலும் ஏமாற்றமே ; ஒரு புஸ்தகமும் ஆங்கிலத்தில் இல்லை !
இந்த விஷயத்தில் கொழும்பு காட்சியகத்தைப் பாராட்டவேண்டும் ; சின்ன புஸ்தக்கடையில் நல்ல படங்களையும் நூல்களையும் கண்ணாடி ஷோ கேஸில் வைத்துள்ளார்கள் . கொழும்பு மியூசியத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தை வாங்க்கிக்கொண்டு ஆறு இந்து சமய படங்களையும் வாங்கினேன். ஒவ்வொரு போஸ்ட்காரர்ட் வண்ணப்படமும் இந்திய ரூபாய்க் கணக்கில் ஆறு ரூபாய்தான் ; கொள்ளை மலிவு!
விளக்குகளில் இந்தனை வகைகளை ஒரே இடத்தில் காண்பது அரிது (இந்தியாவில் தனி விளக்கு மியூசியமும் உளது). மன்னர்கள் பயன்படுத்திய வாட்கள், கத்திகள், ஈட்டிகள் முதலியன பழங்ககால போர்க்கள காட்சிகளை நம் கண் முன் கொண்டு வருகின்றன.
இலங்கை நாட்டுப்புற நடனத்தை ஒரு LIVE SHOW லைவ் நிகழ்ச்சியாக அமைத்துள்ளனர் ; நாம் அங்கே போய் நின்றவுடன் நடனக்காட்சி துவங்கும் ; சில நிமிடங்களுக்கு அது நீடிக்கும்
இறுதியில் இலங்கை விவசாய வரலாறு உள்ளது.
வரலாற்றறு ஆய்வாளர்களுக்கு அங்குள்ள கல்வெட்டுகளும் நாணயங்களும் ஆதார பூர்வ விஷயங்களை நமக்குத் தெரிவிக்கின்றன. சம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்ட அனுராதபுரம் தங்கத் தகடுகள், வல்லிபுரம் பிராமி எழுத்து தங்கக் (Gold Plate) கல்வெட்டு முதலியன குறப்பிடத்தக்கவை . பல பொருட்களை பாதுகாப்பின் பொருட்டு நேரில் வைக்காமல் படங்களை மட்டும் வைத்திருக்கிறார்கள்
புத்த மத வரலாறு, புத்தர் சிலைகள் அதிகம் உள்ளன.. வருங்காலத்தில் ராமாயண இலங்கையைக் காட்டும் இடங்களையும் படங்களையும் வைத்தால் இலங்கை வரலாறு பூர்த்தியாகும். அதே போல சோழர், பாண்டியர் ஆகிய வம்ச மன்னர்களின் பங்கு பணி பற்றிய பிரிவும் தனியே அமைய வேண்டும்.
God Surya 12th century bronze in Colombo Museum
—-subham—-
Tags- கொழும்பு மியூசியம், இலங்கை வரலாறு, சோழர் கால சிலைகள், தங்க கல்வெட்டுகள், சாசனங்கள், இந்துசமயம், Colombo Museum Bronze
யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு செட்டியார் கோவில் என்ற பெயரும் உண்டு; காரணம், வைத்திலிங்க செட்டியார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் இலங்கையில் இந்துமதம் தழைக்க வித்தூன்றிய ஆறுமுக நாவலர், முதலில் சமயச் சொற்பொழிவு ஆற்றிய கோவில் இதுதான்
இந்தியாவிலிருந்து வந்த கோபால செட்டியார் வணிகம் மூலம் பெரும் பொருளை ஈட்டினார். இதனால் அப்போது ஆட்சி செய்துவந்த ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது அவருடைய மகன்தான் வைத்திலிங்க செட்டியார். அவரும் முத்துக்குளித்தல் முதலிய தொழில்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். மேலும் தனது செல்வத்தை தர்மப்பணியில் செலவிட்டார். கூழங்கைத் தம்பிரான் கூறியபடி சிவன் கோவிலை எடுப்பித்தார். அங்கே வைத்தியநாதனையும் தையல் நாயகியையும் பிரதிஷ்டை செய்தார்.
சோழ நாட்டில் மிகவும் பிரசித்தமான கோவில் மாயூரம் / சீர்காழிக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆகும். அந்த வட்டார மக்களுக்கு வைத்திய நாதனே குல தெய்வம் என்பதும் குறிப்பிடத்தக்கது
வண்ணார்பண்ணை கோவில் உருவான வரலாறு சுவையான வரலாறு. போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் இலங்கையிலுள்ள 4000 கோவில்களில் பெரும்பாலானவற்றை தரை மட்டமாக்கி அந்தக் கற்களைக் கொண்டு சர்ச்சுகளையும் கோட்டைகளையும் கட்டினார்கள். நெதர்லாந்து/ ஹாலந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவர்ளுக்கு மதவெறி கொஞ்சம் குறைவு . ஆகையால் இந்துக் கோவில்களைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதற்கும் பணம் வசூலித்துவிடுவார்கள் ; வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லவா !
பனங்காமம் நல்ல மாப்பாண வன்னியனை தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்தனர் டச்சுக்காரர்கள் . வைத்திலிங்க செட்டியார் தனது செல்வாவாக்கைப் பயன்படுத்தி விடுதலை செய்தார். அதற்கு நன்றி பாராட்டும் முகத்தான், அவர் 20,000 பனை மரங்களை கோவில் கட்டுவதற்கான வேலைகளுக்கு அளித்தார் . அவரை விடுதலை செய்ய, செட்டியார் கொடுத்த தொகை 1200 டாலர். அது அக்காலத்தில் பெரும் தொகை . டச்சுக்காரர்கள் எவ்வளவு கில்லாடிகள் என்பதை அறிய இது உதவும் .
மாப்பாண வன்னியன் பனை மர நன்கொடையோடு நிற்கவில்லை. வைத்திய நாத சுவாமி- தையல் நாயகி அம்மனின் நித்திய பூஜைக்காக துணுக்கை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தையும் கோவிலுக்கு தானம் செய்தார் அதன் நெல்வயல்களும் குளமும் கோவிலுக்குச் சொந்தமாயின.
1791-ம் ஆண்டில் கோவில் கட்டப்பட்டது. நித்திய பூஜைகளோடு ஆண்டுதோறும் விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டன. பிற்காலத்தில் வசந்த மண்டபம், ராஜகோபுரம் எழுப்பப்பட்டன.
மார்ச் மாதம்வரும் பெளர்ணமியில் 20 நாள் சிவ பெருமான் உற்சவம் நிறைவு பெறுகிறது . ஜுலை மாத அமாவாசையில் அம்பாளின் தீர்த்த உற்சவத்தோடு தேவியின் திருவிழா முடிவடையும் .
ஏ . முத்துத் தம்பி பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வரலாற்றில் மேல் விவரம் கிடைக்கும் JAFFNA HISTORY, A. MOOTOOTAMBY PILLAY.
XXXX
41.நல்லூர் சட்டநாதர் கோவில் , யாழ்ப்பாணம் Saddanathar Sivan Kovil
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி கூழங்கை சிங்கை ஆரியன், நல்லூர் நகரை அமைத்து , நான்கு திசைகளில் 4 கோவில்களையும் கட்டினார் ; வட திசைக்குக் காவலாக எழுப்பப்பட்டது சட்டநாதேசுவரர் கோவில் ஆகும் .
அவரை அடுத்து ஆட்சி செய்த ஆரிய சக்ரவர்த்திகளும் கோவில்களை நன்கு பராமரித்தனர் குறிப்பாக கனக சூரியன் சிங்கை ஆரியன் (14401478), இந்து தர்மத்தைப் போற்றினார் .
அதற்குப்பின்னர் கிறிஸ்தவ வெறியர்கள் போர்ச்சிகீசிய கவர்னர் பிலிப் தெ ஒலிவீர PHILIP DE OLIVEIRA உத்தரவில் கோவிலை தரை மட்டம் ஆக்கினர். அதற்கு முன்னர், கோவில் குருக்கள்கள் , விக்கிரகங்களை குளத்தில் போட்டு மறைத்து வைத்தனர்.
தென்னாட்டுக் கோவில்களை மாலிக்காபூர் என்னும் மத வெறியன் கொள்ளை அடித்த போது , அர்ச்சகர்கள் கையாண்ட இதே தந்திரத்தை யாழ்ப்பாணத் தமிழர்களும் கையாண்டனர்.
1621-ம் ஆண்ட்டில் தரை மட்டமான இந்துக்கோவில், பீனிக்ஸ் PHOENIX பறவை போல, 1815-ம் ஆண்டில் புத்துயிர் பெற்றது . தம்பையா பிள்ளை , தெய்வீக ஆற்றல் பெற்று, குளத்தில் கிடந்த பல விக்கிரகங்களை மீட்டார்.
கிடைத்த விக்கிரகங்களில் நல்லை நாயகி அம்மன் விக்கிரகம் மட்டும் புதுக்கருக்கு அழியாமல், முழு வடிவில் கிடைக்கவே , கோவில் கட்டி அதை பிரதிட்டை செய்தார். அதே நேரத்தில் மூலஸ்தானத்தில் சிவலிங்கமும் நிறுவப்பட்டது.ஏனைய விக்கிரகங்கள் யாழ்ப்பாண மியூசியத்துக்கு வழங்கப்பட்டன. கஜ லெட்சுமி, வள்ளி தெய்வானை, தட்சிணா மூர்த்தி , சனைச்சரன் (சனீஸ்வரர்), ஒற்றைக் கல்லிலான மயில் மேலமர்ந்த சுப்பிரமணியர் ஆகியனவும் குளத்திலிருந்து மீட்கப்பட்ட சிலைகள் ஆகும். இவை அனைத்தும் விஜய நகர சாம்ராஜ்ய காலத்தவை..
தம்பையா பிள்ளை வம்சத்தில் வந்துதித்த சிவப்பிரகாச பிள்ளை , தம்பையா பிள்ளை ஆகியோர் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, மணிக்கூண்டு கோபுரத்தை எழுப்பினர். நர்மதை நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து ஸ்வயம்பூ லிங்கங்களை டாக்டர் டி . நல்லைநாதன் நிறுவி புண்ணியம் சம்பாதித்துக் கொண்டார்.
நர்மதா நதிக்கரைகளில் இயற்கையில் கிடைக்கும் லிங்க வடிவக் கற்களை இந்தியா முழுதும் காணலாம் . நல்லை நாதன் பிரதிஷ்டை செய்த பஞ்ச லிங்கங்களில் சக்கரக் குறியீடுகள் இருப்பது கூடுதல் சிறப்புடைத்து .
நல்லை நாயகி சமேத நல்லை நாத லிங்க மூர்த்திக்கு , எல்லா சிவாலயங்களிலும் நடத்தப்படும் அனைத்து ஆராதனைகளும் சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டு வருகின்றன .
TO BE CONTINUED………………………………………………
Tags- நல்லூர் ,சட்டநாதர் கோவில் , யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, வைத்தீஸ்வரன் கோவில் , செட்டியார் , டச்சுக்காரர், மாப்பாண வன்னியன்
ப்ரம்மராக்ஷஸனாக ஆனவுடன் அவர் வானில் பறக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் நர்மதா நதிக்கரையோரம் இருந்த அரச மரம் ஒன்றில் அவர் உட்கார்ந்து இளைப்பாறினார்.
அந்த அரசமரத்தைக் கடந்து பல பிராமண பண்டிதர்கள் சென்று கொண்டே இருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் ப்ரம்மராக்ஷஸரான கௌடபாதர், ‘பச்’ என்பதுடன் ‘க்ட’ என்பதைச் சேர்த்தால் என்ன வரும் என்று கேட்டார்.
எந்த ஒருவர் சரியான விடையைச் சொல்கிறாரோ அவர் போக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் எவர் ஒருவர் சரியான விடையைச் சொல்லவில்லையோ அவர் ப்ரம்மராக்ஷஸருக்கு ஆகாரம் ஆனார்.
‘பச்’ என்ற வேர் பாணினி சூத்திரத்தின் படி (8/2/52) பக்கா என்பதாகும்.பக்தா என்றால் அது தவறாகும்.
சந்த்ர சர்மா
ஒரு நாள் ஒரு அழகிய பிராமணப் பையன் பதஞ்சலி மஹாபாஷ்யத்தைக் கற்பதற்காக சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
அவன் நர்மதை நதிக்கரையில் இருந்த அந்த அரசமரத்தின் வழியே சென்று கொண்டிருந்தான்.
வழக்கம் போல ப்ரம்மராக்ஷஸர் தனது வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
உடனடியாக அவருக்குச் சரியான விடை தந்தது.
ப்ரம்மராக்ஷஸருக்குத் தான் விடுதலையாகும் தருணம் வந்து விட்டது என்பது புரிந்தது.
இந்தப் பையன் வடிவத்தில் தனக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்.
அந்தப் பையனை மரத்தின் மீது ஏறுமாறு கூறினார். மஹாபாஷ்யத்தின் அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
ஆனால் அந்தப் பையனுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
மஹாபாஷ்யத்தின் அனைத்துப் பாடங்களும் கற்று முடியும் வரையில் அந்தப் பையன் அந்த மரத்திலேயே இருக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.
மஹாபாஷ்ய விளக்கவுரை மரத்தின் மீது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
அந்தப் பையன் தன் தொடையை அறுத்து அங்கிருந்து பீறிட்டு வரும் இரத்தத்தால் மரத்தின் மீதிருந்த இலைகளில் எல்லாப் பாடங்களையும் எழுதி வரலானான்.
ஒரு விதக் குறுக்கீடுமின்றி ஒன்பது நாட்கள் இந்த விளக்கவுரை தொடர்ந்தது.
ஒன்பது நாட்கள் கழிந்த பின்னர் பத்தாம் நாள் இருவரும் மரத்திலிருந்து இறங்கினர்.
அந்த இலைகளில் எழுதிய மஹாபாஷ்யமே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் மஹாபாஷ்யம் ஆகும்.
அதனுடைய பெயர் பாணிபாஷ்யம் ஆகும்.
அந்தப் பையனின் பெயர் சந்த்ர சர்மா.
கௌடபாதர் விடுதலை அடைவது என்பது முடியவே முடியாது என்று பதஞ்சலி மஹரிஷி உணர்ந்து கொண்டதால், தானே சந்த்ர சர்மாவாக உருவெடுத்தார்.
ப்ரம்மராக்ஷஸரான கௌடபாதரும் விடுதலை அடைந்தார்.
கோவிந்த பகவத்பாதர்
சந்த்ர சர்மா சந்யாச தீக்ஷை பெற்றார்.
கோவிந்த பகவத்பாதர் என்ற புதிய நாமதேயத்தையும் (பெயரையும்)
பெற்றார்.
அவரே ஆதிசங்கரரின் குருவாகவும் ஆனார்.
இறைவனின் தெய்வீகத் திருவிளையாடலில் பதஞ்சலி முனிவர், ஶ்ரீகௌடபாதர், கோவிந்தபகவத்பாதர், ஶ்ரீ சங்கரர் ஆகியோர் முக்கியமான அற்புத பாத்திரங்கள். அதாவது இறைவனின் அம்சங்கள்!
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 19
36.யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில்
யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் கல்வளையிலிருக்கும் பிள்ளையார் கோயில், இன்னும் ஒரு புகழ்பெற்ற விநாயகர் ஆவார் . இவருடைய சிறப்பு என்னவென்றால் 200 ஆண்டுகளுக்கு முன்னரே அந்தாதிப் பாடல் பெற்றதாகும். யாழ்ப்பாணத்தை ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் சின்னத் தம்பி புலவர் வாழ்ந்து வந்தார். அவர் இந்தப் பிள்ளையார் மீது அந்தாதி இயற்றியுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மத்தியில் கல்வளை , நடுவக்குறிச்சி என்று இரண்டு கிராமங்கள் உள்ளன. கல்வளையில் பிள்ளையார் வடிவக் கல் கிடைத்தவுடன் அதை கணபதியாக வழிபடத் துவங்கினார்கள்.
நல்லூரில் கல்வியாலும், வாரி வழங்கும் வள்ளல்தன்மையாலும் கீர்த்திபெற்று விளங்கியவர் வில்லவராய முதலியார் ஆவார் . அவருடைய புதல்வர்தான் சின்னத் தம்பிப் புலவர் யாழ்ப்பாணத் தமிழர்களின் சம்பிரதாயம், சட்ட திட்டங்களைக் கூறும் நூல் “தேச வழமை” எனப்படும்; அந்த நூலை காலத்துக்கு ஏற்றபடி எழுதித்தர டச்சு அரசாங்கம் 12 பேரை நியமித்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் வில்லவராய முதலியார் . 1707-ம் ஆண்டில் நூல் முழுமை பெற்றது அவரது வீட்டில் இரவு நேரத்தில் கூழங்கைத் தம்பிரான் சமயச் சொற் பொழிவு ஆற்றிவந்தார். அதைகேட்டுக் கேட்டு கவிகள் புனையும் ஆற்றலைப் பெற்றார் சின்னத்தம்பி; அவர் இந்தியாவில் உள்ள சைவத்திருத் தலங்களையும் தரிசித்தார். இறைவன் மீதும், வள்ளல்கள் மீதும் கவி பாடினார் அவர் இயற்றிய நூல்கள் –மறைசையந்தாதி , கல்வளையந்தாதி , பறாளை விநாயகர் பள்ளு (சுழிபுரம், பறாளை) , நாலு மந்திரி கும்மி, கரவை வேலன் கோவை (கரவெட்டி).
கல்வளை அந்தாதியை 1934-ம் ஆண்டில் சைவ பரிபாலன சபை வெளியிட்டது ; இதில் அவர் பிள்ளையார் பெருமைகளைக் கூறி, என்ன பலன் கிடைக்கும் என்றும் பாடியுள்ளார்.
தற்காலத்தில் கற்பக விநாயகர் மட்டுமின்றி பைரவர் கோவிலும் உள்ளது .
இந்த வட்டாரத்தில் இப்போது பல கோவில்கள் பிரபலமாகிவிட்டன . அவை —
சீரணி நாகபூசணி அம்மன் கோவில்
சண்டிலிப்பாய் விசுவநாதீசுவரர் கோவில்
சண்டிலிப்பாய் ஐயனார் கோவில்
இரட்டைப்புலம் வைரவர் கோவில்
முருகமூர்த்தி கோவில்
ராஜராஜேசுவரி கோவில்,
பத்திரகாளி அம்மன் கோவில்
XXXXX
37. ஓமந்தை பிள்ளையார் கோவில், வவுனியா, Omanthai Pillaiyar Kovil
இந்தப் பிள்ளையார் கோவில் ஓமந்தை, கொந்தக்காரன்குளம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
வவுனியாவுக்கு பத்து மைல் தொலைவில் , யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் வழியில், ஓமந்தை கிராமம் இருக்கிறது. கோ மந்தை – மாடுகள் மேயும் இடம் — என்பது ஓமந்தையாக மருவி இருக்கலாம் .
பிள்ளையார் கோவில் மூலமாக இப்போது இது பிரசித்தமானாலும் ஒரு காலத்தில் வன்னி தளபதிகள் இங்கே வசித்தனர். ஊருக்கு அருகில் பாழடைந்த சிவன் கோவில் இருப்பது இதன் பழமையைக் காட்டுகிறது. இந்தத் தகவல்களை புராதன யாழ்ப்பாணம் என்ற ஆங்கில நூலில் ராஜநாயகம் கூறுகிறார். அந்தக் காலத்தில் ஜம்புகோவலத்தில் இறங்கிய அரச மரம் ஊர்வலமாக அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது , ஓமந்தையில் தங்கிச் சென்றதாம்.
இங்குள்ள பிள்ளையார் கோவில் , சாலை ஓரமாக ஒரு கொட்டகையில் இருந்தது . பிற்காலத்தில் கல் கட்டிடமாக மாறியது. சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர், ரயில் பாதை அமைக்க சர்வே எடுக்க வந்தவர்கள் , பொங்கல் வைத்து 100 கொழுக்கட்டை செய்து வழிபட்டனர் . ரயில் பாதையும் எளிதில் அமைந்தது . எல்லாம் பிள்ளையார் அருள் என்று பக்தர்கள் மகிழ்ந்தனர்.
XXX
38.அரியாலை பிள்ளையார் கோவில்
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களில் பழமையானதும்……………………………. PLEASE CONTINUE READING IN
சம்ஸ்கிருத இலக்கியம் அகன்றது. ஆழ்ந்தது. அதில் உள்ள கோடிக்கணக்கான நூல்களை முற்றும் கற்றவர் இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம், அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் கலைகள் பற்றிய அவ்வளவு அபூர்வமான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.
சம்ஸ்கிருத இலக்கணத்தை யாத்தவர் மாமுனிவரான பாணினி. ஆனால் அவரது இலக்கணத்தை சாமானியனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதை சுலபமாகப் படிக்கும் வகையில் பதஞ்சலி முனிவர் அதற்கு மஹாபாஷ்யம் – விரிவுரை – ஒன்றை எழுதினார். இந்த விரிவுரையே ஒரு அபூர்வமான பொக்கிஷம்.
காத்யாயன மஹரிஷி பாணினி இலக்கணத்திற்கு ஒரு உரையை – கார்திக் – எழுதினார்.
பாற்கடலில் லக்ஷ்மி பள்ளி கொண்ட நாராயணன் சேஷசயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் ஆதி சேஷனே அத்ரி மஹரிஷியின் புத்திரராக அவதரித்தார். பதஞ்சலி என்ற பெயரைக் கொண்டார். ஆதிசேஷனின் இதர அவதாரங்கள் : வாசுகி, த்ரேதா யுகத்தில் லக்ஷ்மணன், த்வாபர யுகத்தில் பலராமர், கலியுகத்தில் பதஞ்சலி.
மூன்று நூல்கள்
மனித குலம் உய்வதற்காக பதஞ்சலி முனிவர் மூன்று உயரிய அரிய நூல்களை யாத்தார்.
1) பதஞ்சலி யோகசூத்ரம்
2) மஹாபாஷ்யம்
3) சரக சம்ஹிதா.
பதஞ்சலி முனிவரின் இன்னொரு பெயர் சரகர்.
ஆயிரம் சீடர்கள்
பதஞ்சலியின் உயரிய ஞானத்தைக் கண்டு ஏராளமானோர் அவரை அண்டி அவரது சிஷ்யர்களாக ஆயினர்.
இப்படி ஓராயிரம் சிஷ்யர்கள் அவரிடம் சேர்ந்தனர். அவரைக் குருவாகக் கொண்டனர்.
இவர்களில் ஒருவரே ஶ்ரீ கௌடபாதர்.
இவரே பதஞ்சலி முனிவரின் அரிய ஞானத்தை உலகிற்கு அளித்துப் பரப்பியவர் எனலாம்.
பதஞ்சலி முனிவர் வாழ்க்கையிலும் கௌடபாதர் வாழ்க்கையிலும் ஏராளமான அற்புத நிகழ்ச்சிகள் உண்டு.
ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் ஆயிரம்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.
இந்த மண்டபத்தில் ஆயிரம் சிஷ்யர்களும் குழுமி தங்களுக்குத் தோன்றிய சந்தேகங்களை ஒரே சமயத்தில் எழுந்து கேட்பது வழக்கம்.
அந்த ஆயிரம் பேருடைய சந்தேகங்களையும் ஒரே சமயத்தில் அவர்கள் கேட்டாலும் அதை அப்படியெ நினைவிலிருத்தி ஒவ்வொருவருக்கும் தக்க பதிலை அளித்து சந்தேகங்களைத் தீர்ப்பது அவரது வழக்கம்.
அப்படிப்பட்ட ஞானமும் நினைவாற்றலும் கொண்ட மஹா யோகி அவர்.
சிஷ்யர்கள் கேள்விகளைக் கேட்கும் போது அவர் சேஷ உருவத்தை எடுத்துக் கொள்வார். ஒரு திரைக்குப் பின்னாலிருந்து பதிலைச் சொல்வார்.
அவர் இந்த சபையில் கூடும் அனைவருக்கும் இரு நிபந்தனைகளை விதித்திருந்தார்.
1) ஒருபோதும் திரையை விலக்கிப் பார்க்காதீர்கள். அது பெரும் தீமையை விளைவிக்கும்.
2) ஒரு போதும் பாதியில் சபையை விட்டுப் போகாதீர்கள். அப்படிச் செல்பவர்கள் பிரம்ம ராக்ஷஸர்களாக ஆவார்கள்.
ஶ்ரீ கௌடபாதர்
ஒரு நாள் சிஷ்யர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. எப்படி இவரால் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் கேட்கும் கேள்விகளை நினைவில் இருத்தி தக்கபடி விடைகளை அளிக்க முடிகிறது என்பதே அந்த சந்தேகம்.
ஒரு நாள் ஆர்வம் உந்த அவர் திரையை விலக்கினார். ஆதி சேஷனின் விஷம் அவர் மீது பாய்ந்தது. எங்கும் பரவியது. அங்கிருந்தோர் இறந்தனர்.
ஒரே ஒரு சிஷ்யர் பதஞ்சலி முனிவரின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவரது அனுமதியின்றி சபையை விட்டு வெளியேறினார்.
அவர் மட்டுமே உயிருடன் இருக்க முடிந்தது. அவர் பதஞ்சலி முனிவரின் அதே உருவத்தை அடைந்தார்.
அவரை அழைத்த பதஞ்சலி முனிவர், “நீ என்னிடமுள்ள அனைத்து ஞானத்தையும் பெறுவாய். ஆனால் என் சொல்லை மீறி அனுமதியின்றி வெளியே சென்றதால் நீ ஒரு ப்ரம்மராக்ஷஸனாக ஆவாய். எப்போது உனது ஞானம் அனைத்தையும் எதிர்காலத்தில் வரும் எனது சிஷ்யர்களுக்கு அளிக்கிறாயோ அப்போது அந்த பிரம்மராக்ஷஸ உருவம் நீங்கும்” என்றார்.