விக்ரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாத ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் மூன்று கேள்விகளை காந்திஜிக்கு அனுப்பி இருந்தார். அவர் 3 கேள்விகளுக்கும் பதில் எழுதினார். மூன்றாவது கேள்விக்கான பதிலை மட்டும் முதலில் காண்போம்
கேள்வி :
இந்துக்கள் போற்றும் (கடவுள்) ஒருவர், அவரது வாழ்க்கையில் , ஏதேனும் தவறுகள் செய்திருக்கலாம் அந்தத் தவறுகளை, அவரைப் போற்றித் துதிபாடுபவரும் செய்தால் அவருக்கு தீங்கு நேரிடுமே. .அந்த உருவத்தை அவர் வழிபட்டால் அந்தத் தவறை அவர் செய்வது சாத்தியம் அல்லவா?
காந்திஜியின் பதில்:
கடிதம் எழுதியவர் , இந்துக்களின் அவதார தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்துவுக்கு அவதார புருஷர் மாசு மருவற்றவர். ஹிந்து பக்தருக்கு கிருஷ்ணன் , பரிபூரணத்துவம் வாய்ந்தவர். மற்றவர்களின் கடுமையான விமர்சனம் பற்றி அவருக்கு கவலையே இல்லை.
கிருஷ்ணரையும் ராமரையும் வணங்கும் பல லட்சம் பேருக்கு அக் கடவுளரை அதே பெயரைச் சொல்லி வணங்கியதால் வாழ்க்கையே அடியோடு மாறியிருக்கிறது. . எப்படி இது நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது . இது ஒரு மர்மம்.. இதை நான் உள்ளத்தின் மூலமோ அறிவின் மூலமோ அறிய முயற்சி செய்யவில்லை ஆனால் நீண்ட காலத்துக்கு முன்னரே கடவுள் என்பவரின் அடையாளம் /குணம் சத்தியம் என்பதை உணர்ந்தேன்.அந்த சத்தியத்தை ராமர் என்ற நாமத்தின் மூலமே அறிந்தேன்.
எனக்கு சோதனை ஏற்பட்ட இருண்ட நேரத்தில் எல்லாம், அந்த ஒரு நாமம்தான் என்னனைக் காப்பாற்றியது .. இன்னும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது.சின்ன வயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பக்தியே காரணமாக இருக்கலாம். என் மீது துளசிதாஸ் ஏற்படுத்திய தாக்கமும் காரணமாக இருக்கலாம்.. இந்த வரிகளை
எழுதும்போது என் சின்ன வயசில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது; அப்போது நான் தினமும் ராமர் கோவிலுக்குப் போவேன். என்னுடைய ராமன் அப்போது அங்கு வசித்தார். பாவங்களிலிருந்தும் பயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றினார். இது என்னுடைய மூட நம்பிக்கை இல்லை . அந்த ராமர் விக்ரகத்தை வைத்திருந்தவர் கெட்டவராக இருந்திருக்கலாம். அவருக்கு எதிராக நான் எதையும் கேட்டதில்லை.அந்தக் கோவிலில் தில்லுமுல்லுகள் நடந்திருக்கலாம்.. அவை பற்றியும் எனக்குத் தெரியாது.ஆகையால் அவை என்னைப் பாதிக்காது. எனக்கு எது உண்மையாக இருந்ததோ, இன்னும் இருக்கிறதோ, அது பல லட்சம் மக்கள் விஷயத்திலும் உண்மையே . என்னுடைய ஹரிஜன சகோதரர் அவருடைய சக தர்மிகளுடன் , விரும்பினால், இந்தக் கோவில் வழிபாடு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளட்டும். ஜாதி இந்துக்கள், , அவர்களுடைய ஹரிஜன சகோதர்களுக்கு ,கோவில்களைத் திறந்துவிடுவது அவர்களின் தலையாய கடமை ஆகும்.
மனித இனத்துக்குத் தேவையான ஆன்மீகத் தேவையை கோவில் வழிபாடு பூர்த்தி செய்கிறது சீர்திருத்தங்களை ஏற்கிறது மனித இனம் வாழும் வரை இதுவும் நீடித்து இருக்கும் ( ஹரிஜன் பத்திரிகை, 18-3-1933)
An iconoclast school teacher asked Gandhiji three questions. Here is the third question and Gandhiji’s reply:-
3.The person, whose image a Hindu adores, might have committed some wrongs in his life time. Will not the adorer be harmed by copying those wrongs, which he is likely to copy if he worships his image?
Gandhiji replied,
The third question shows, perhaps, that the correspondent as not taken the trouble of understanding the Hindu theory of incarnations. For the faithful Hindu, his Incarnation is without blemish. Krishna of the Hindu devotee is a perfect being he is unconcerned with the harsh judgement of the critics. Millions of devotes of Krishna and Rama have had their lives transformed through their contemplation of God by these names. How this phenomenon happens I do not know. It is a mystery I have not attempted to prove it. Though my heart and reason long ago realized the highest attribute and name of God as Truth, I recognize truth by the name of Rama.
In the darkest hour of my trial, that one name has saved me and is still saving me. It may be the association of childhood; it may be the fascination that Tulsidas has wrought on me. But the potent fact is there and as I write these lines, my memory revives the scenes of my childhood when I used daily to visit the Ramji Mandir adjacent to my ancestral home. My Rama then resided there. He saved me from many fears and sins. It was no superstition to me. The custodian of the idol may have been a bad man. I know nothing against him. Misdeeds might have gone on in the temple. Again, I know nothing of them. Therefore, they would not affect me. What was and is true of me is true of millions of Hindus. I want my Harijan brother, if he wishes to share this temple worship with the millions of his co-religionists, the so called caste men . It is the latter’s duty to throw open their temples to their Harijan brethren.
Temple worship supplies the felt spiritual want of the human race.it admits of reform. But it will live as long as man lives . (Harijan, 18-3-1933)
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆறு சக்தி கேந்திரங்கள் உள்ளன. இந்த ஆறும் புகழ்பெற்ற சக்தித் தலங்கள் ஆகும் .
அவையாவன:
1.கோலாப்பூர் அம்பாபாய்/ மகாலெட்சுமி கோவில்
2.துல்ஜாபூர் பவானி கோவில் (சத்ரபதி சிவாஜி புகழ்)
3.மஹாமாயா ரேணுகா கோவில் ,மாஹுர்
4.சப்தச்ருங்கி ஜகதாம்பா கோவில் , வாணி , ஏழு மலை
5.அம்பே ஜோகை யோகேஸ்வரி ,அம்பாஜோகை
6.ஒளந்த் யாமை தேவி கோவில், ஒளந்த்
ஆறு கோவில்களைத் தவிர வேறு பல தேவி கோவில்களும் ஊருக்கு ஊர் துல்ஜா பவானி கோவில்களும் உண்டு. அண்மைக் காலத்தில் புகழ்பெற்ற மும்பை மகாலெட்சுமி கோவில், இவைகளில் ஒன்று.
ஒவ்வொரு கோவிலாக தரிசிப்போம்
xxx
பகுதி 7
32.கோலாப்பூர் அம்பாப்பாய்/ மகாலெட்சுமி கோவில்
கோவிலின் சிறப்பு அம்சங்கள்
1. மூன்று அடி உயர மகாலெட்சுமி சிலை
2. பின்புஅர்ச் சுவரில் ஸ்ரீ சக்ர யந்திரம்
3. சிலையின் மேல் புறத்தில் ஐந்து தலை நாகம்
4. தேவியின் அருகில் சிம்ம வாஹனம்
5. இது 1400 ஆண்டுப் பழமையானது ; சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது.
புனே நகரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் 240 கிலோமீட்டர் தொலைவில் கோலாப்பூர் இருக்கிறது பஞ்ச கங்கா நதிக்கரையில் அமைந்த இந்த ஊரில் நிறைய கோவில்கள் இருக்கின்றன.முக்க்கிய நுழைவாயிலின் இரு புறமும் தீப ஸ்தம்பங்கள் இருக்கின்றன.சதுர வடிவ தூண்களோடு கருட மண்டபமும் உண்டு. கணேஷ் சந்நிதியும் கர்ப்பக் கிரகத்தை நோக்கி இருக்கும்.
மூன்று மேற்கு நோக்கிய சந்நிதிகளில் நடுவில் அமைந்திருப்பது மஹா லெட்சுமி. இருபுறங்களிலும் இருப்பது மஹா காளி , மஹா சரஸ்வதி கோவில்கள்..
கர வீர என்று அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரத்தில் கோலாசுரன் என்ற அசுரனை தேவி அழித்ததாக வரலாறு. லெட்சுமிக்கு மேல் சிவலிங்கம்-நந்தி காணப்படும்.. நவக்கிரகங்கள் உள்பட எல்லாக் கடவுளரும் இங்கே உளர்.
Xxx
சூரிய ஒளி விழும் அதிசயக் காட்சி
ஆண்டில் மக்கள் நடத்தும் திருவிழா தவிர சூர்ய பகவான் நடத்தும் திருவிழாவும் உண்டு.
ஆண்டுக்கு மூன்று முறை சூரிய ஒளி மகாலெட்சுமி சந்நிதியில் நுழையும் பொறியியல் திறனுடன் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளி மகாலெட்சமியின் கர்ப்பக் கிரகத்தில் அஸ்தமன நேரத்தில் புகும் நாட்களை கிரண உற்சவம் என்பார்கள் (சூரிய + கிரணம்)
கிரணோற்சவ நாட்கள் :
நவம்பர் – 9, 10, 11 ஜனவரி – 31 பிப்ரவரி 1,2.
இமயம் முதல் குமரி வரை உள்ள கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில், வழிபடும் விக்கிரகத்தின் மீது சூரிய ஒளி விழும்படி செய்த பொறியியல் அதிசயம் சுமார் 2000 ஆண்டுகளாக இருப்பது இந்தியாவில் மட்டுமே. இந்துக்கள்தான் வான சாத்திரத்தில் வல்லவர்கள் என்பதையும் பொறியியலில் மன்னர்கள் என்பதையும் இது காட்டுகிறது. ரிக் வேதத்திலும் சூரிய வழிபாடு இருக்கிறது. இன்றுவரை 12 மந்திரங்களை சொல்லி, சூரியனுக்கு நமஸ்காரம் செய்வதும் இந்துக்களிடம் மட்டுமே இருக்கிறது. காயத்ரி என்னும் சூரிய மந்திரத்தை நாள் தோறும் வணங்கும் வழக்கமும் இந்துக்களிடம் மட்டுமே இருக்கிறது. இன்றுள்ள கிழமை வரிசையை உண்டாக்கியவர்களும் இந்துக்களே. திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தில்தான் ஞாயிறு முதல் சனி வரை முதல் முதலில் காணக்கிடக்கிறது .உலகில் எகிப்திலோ பாபிலோனிலோ, ரோமிலோ , ஏதென்சிலோ இதே வரிசையில் கிரகங்களின் பெயர்கள் இல்லவே இல்லை . இன்றுள்ள ஆங்கிலக் கிழமைகளிலும் 4 நாட்களில் கிரகங்கள் பெயர்கள் இல்லை.
Xxx
33.துல்ஜாபூர் பவானி கோவில்
சத்ரபதி சிவாஜிக்கு வெற்றியும் வீரத்தையும் தந்தது துல்ஜாபூர் பவானி தேவிதான். அவளே வெற்றி தரும் வீர வாளை அவரிடம் தந்து, மொகலாயப்பேரரசை வீழ்த்தி, ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க, உதவியதாகவும் கதைகள் உண்டு .
51 சக்தி பீடங்களில் ஒன்றான துல்ஜாபூர் கோவில் சோலாப்பூர் என்னும் இடத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. குறைந்தது 800 ஆண்டு வரலாறு உடைத்து.
முக்கிய நுழைவாயிலின் பெயர் சர்தார் நிம்பல்கர்; மற்ற இரண்டு வாயில்களுக்கு சிவாஜி மஹாராஜின் தந்தை தாயாரான ஷாஜி, ஜீஜாபாய் ஆகியோரின் பெயர்களை சூட்டியுள்ளனர்.. வலது புறம் மார்க்கண்டேய மகரிஷிக்கு கோவில் இருக்கிறது. படிக்கட்டில் இறங்கி வந்தால் துல்ஜா கோவிலைக் காணலாம்.இங்குள்ள மூர்த்தத்துக்கு துல்ஜா , துரஜா , த்வரிதா , அம்பா என்று பல பெயர்கள் நிலவுகின்றன. இந்த விக்ரகம் ஸ்வயம்பூ (தானாக உருவாக்கியது; சிற்பிகள் செதுக்கியதல்ல) கோவிலுக்கு முன்னால் யாக குண்டமும் இருக்கிறது விநாயகர், ஆதி சக்தி ஆதிமாதா மங்கள தேவி , அன்ன பூர்ணா சிலைகளும் கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
ஆதி மாயா ஆதி சக்தி கோவிலில் பூஜை முடிந்தவுடன் துல்ஜா கோவிலில் பூஜை துவங்கும்..
முக்கிய திருவிழா – வைசாக பெளர்ணமி
கோவிலில் ஒவ்வொரு நாளும் 4 கால பூஜை நடைபெறும். தமிழ்நாட்டுக்கு கோவில் போலவே அபிஷேகம், ஆராதனை, பள்ளியறை பூஜைகள் உண்டு அம்மனின் ஜெயந்தி திருக்கல்யாணம் முதலியவற்றின்போது வீதி உலா நடைபெறும்.. கோந்தால சமூகத்தினர் ஆடும் ஒருவகை நடனம் கோந்தாலா நடனம் என்று அழைக்கப்படும் . இதில் தேவியின் திருவிளையாடல்களைக் காட்டும் புராணக் கதைகளை நடித்துக் காண்பிக்கிறார்கள்.
துல்ஜாபூரின் மஹிமை காரணமாக ஊருக்கு ஊர் துல்ஜா பவானி கோவில்கள் தோன்றிவிட்டன ஜுன்னார் அருகிலும் சிவநேரி குகைத் தொடரில் ஒரு குகையில் பவானி இருக்கிறாள் . சிவாஜி மஹராஜ் பிறந்த இடம் சிவநேரி என்பது குறிப்பிடத்தக்கது .
To be continued………………………………………….
Tags- துல்ஜாபூர், கோலாப்பூர், தேவி கோவில்கள், சூரிய ஒளி , அதிசயக் காட்சி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தாளம் தப்பாமல் பாத்துக்கோ!
ச. நாகராஜன்
முன்னொரு காலத்தில் ராஜா ஒருவன் பெரிய ராஜ்யத்தை ஆண்டு வந்தான். ஆனால் அவன் சுத்த கருமி. எதை எடுத்தாலும் அதில் எவ்வளவு செலவு ஆகும் என்று பார்ப்பான்.
ஒரு நாள் அரசவைக்கு நடனமாடும் கோஷ்டி ஒன்று வந்தது. தாங்கள் பல ராஜ்யங்களுக்கும் சென்று தங்கள் நடனத்தைக் காண்பித்திருப்பதாகவும் இந்த ராஜ்யத்திலும் தங்களது திறமையைக் காண்பிக்க ஒரு வாய்ப்பை ராஜா நல்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் ராஜாவைக் கேட்டுக் கொண்டனர்.
ராஜாவோ தயங்கினான். நடனம் முடிந்த பின்னர் அந்தக் கோஷ்டியினர் அனைவருக்கும் நிறைய பரிசு வழங்க வேண்டி இருக்குமே!
ஆகவே அவன் பதில் சொல்லாமல் தயங்கினான்.
அரசனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ராஜாவிடம் சென்று, “மன்னா! கவலைப்பட வேண்டாம். இந்தக் குழுவினருக்கு இதோ குழுமி இருக்கும் மக்கள் தங்களால் ஆன தொகையையோ அல்லது பரிசுப் பொருள் எதையாவதோ நிச்சயம் வழங்குவர். அதுவே அந்தக் கோஷ்டியினர் திருப்தி அடையப் போதுமானது. ஆகவே நிகழ்ச்சியைத் தொடங்க அனுமதியை வழங்குங்கள்” என்றார்.
தன் கையிலிருந்து செலவழிக்க வேண்டாம் என்ற செய்தி கிடைத்தவுடன் மகிழ்ந்த மன்னன், நடனமாடும் குழுவினரை உடனே ஆரம்பிக்கலாம் என உத்தரவிட்டான்.
கோஷ்டியின் அற்புத நிகழ்ச்சி ஆரம்பமானது.
நேரம் சென்று கொண்டே இருந்தது.
நடனப் பெண்மணி ஆடி ஆடிக் களைத்துப் போனாள். தனது கூட ஆடிக் கொண்டிருந்த ஆண்மகனைப் பார்த்து பூடகமாக அவனுக்கு மட்டும் புரியும் வகையில் பாடலைப் பாடினாள்.
“இதோ பார்! இந்த இடம் பிரயோஜனம் இல்லை. ஒரு ஆளும் பாராட்டி ஒரு காசைக் கூட இது வரை தரவில்லை. ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியது தான்! என்ன சொல்கிறாய்!”
“நீ சொல்வது உண்மை தான்! நேரம் ரொம்ப ஆகி விட்டது. இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது. முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் ஒரு விஷயத்தை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆட்டத்தில் நன்கு கவனம் செலுத்து. தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே!”
“தாள் மே பங்க நா பாய்” தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே!
நடன மங்கை ஆட்டத்தில் கவனம் செலுத்தினாள்; தாளத்தைத் தப்ப விடாமல் ஆடி முடித்தாள்.
அனைவரும் கை தட்டிப் பாராட்டினர்.
ஒரு சந்யாசி அந்த மங்கையிடம் வந்து பாராட்டி விட்டு தன்னிடமிருந்த ஒரு அருமையான கம்பளத்தைத் தந்தார். அவரிடமிருந்த சொத்து அது ஒன்று தான்! அதை அவர் தந்து விட்டார்.
அடுத்தாற்போல ராஜ குமாரி நடன மங்கையிடம் வந்தாள். தான் அணிந்திருந்த விலை மதிப்புள்ள நெக்லஸை அவளிடம் தந்தாள்.
அடுத்தாற் போல ராஜ குமாரன் வந்தான். அவன் நடன மங்கையிடம் தான் அணிந்திருந்த விலை உயர்ந்த தங்க நகையைத் தந்தான்.
நடன கோஷ்டி மிக்க மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றது.
ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்.
சந்யாசி, ராஜகுமாரி, ராஜகுமாரன் ஆகிய மூவரையும் ஒவ்வொருவராக தனித் தனியே அழைத்தான்.
“எப்படி இதைக் கொடுக்க உங்களுக்கு மனம் வந்தது?” என்று ஒவ்வொருவரையும் அவன் கேட்டான்.
முதலில் சந்யாசி பதில் கூறினார்: “ராஜாவே! நடன மங்கையின் இன்பமான பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த நான், இப்படி உலக இன்பங்களை விட்டு விட்டு எதற்காகத் தவம் புரிய வேண்டும்? நாளையிலிருந்து உலக வாழ்க்கையை மேற்கொண்டு இன்பமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் கடைசியில் “தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே” என்பதைக் கேட்டவுடன் என் மனம் மாறியது. ஒரு நாளும் தாளத்தை தப்ப விட மாட்டேன், என்ன ஆனாலும் சரி என்று முடிவுக்கு வந்து தவத்தைத் தொடர முடிவு செய்தேன். என்னிடம் இருந்த விலையுயர்ந்த வஸ்து அந்தக் கம்பளம் ஒன்று தான். ஆகவே அதையும் துறக்க முடிவு செய்தேன். அதைக் கொடுத்தேன். இதோ என் தவத்தை மேற்கொள்ளக் கிளம்புகிறேன்” என்று கூறிய சந்யாசி அங்கிருந்து கிளம்பினார்.
அடுத்து ராஜகுமாரி தந்தையான ராஜாவிடம் மனதை விட்டு எதையும் ஒளிக்காமல் கூறினாள். “தந்தையே! நீங்களோ ஒரு கருமி. நாளுக்கு நாள் என் வயது கூடிக் கொண்டே போகிறதே! எனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வரவில்லையே! என்ன செய்வது? நாளைக்கு மந்திரி மகனுடன் ஓடிப் போகலாம் என்ற முடிவுக்கு நடன நிகழ்ச்சி பார்க்கும் போது வந்தேன். ஆனால் கடைசியில் தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே என்ற வரியைக் கேட்டவுடன் என் மனம் மாறியது. ஓடிப் போனால் உங்களுக்கும் ராஜ்யத்திற்கும் மாபெரும் அவப் பெயர் அல்லவா வரும்? ஆகவே இப்படி ஒரு அறிவுரையைத் தந்த கோஷ்டிக்கு என்னிடம் இருந்த ஒரே விலை உயர்ந்த நெக்லஸைத் தந்தேன்.”
அடுத்து ராஜகுமாரனும் தன் உள்ளத்தில் இருந்ததை ஒளிக்காமல் ராஜாவிடம் கூறினான் : “தந்தையே! தாங்களோ கருமி! ராஜ்யத்தை ஒரு நாளும் நீங்கள் எனக்கு அளிக்கப் போவதில்லை. ஆகவே நாளை உங்களைக் கொன்று விடலாம் என்ற முடிவை எடுத்தேன். ஆனால் கடைசியில் தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடாதே என்ற வரியால் என் பிழையை உணர்தேன். உயர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்து இப்படி ஒரு இழிந்த எண்ணம் எனக்கு வரலாமா? எனக்கு உண்மையைப் போதித்த கோஷ்டியினருக்கு என்னிடம் இருந்த ஒரே விலை மதிப்புள்ள ஆபரணத்தை அளித்தேன். என்னை மன்னித்து விடுங்கள்”
அரசன் மனம் மாறினான். அவன் புத்தி தெளிந்தது. அவன் கண்களில் நீர் துளித்தது.
தாளத்தை மட்டும் தப்ப விட்டு விடக் கூடாது என்று முனகிய அவன், சந்யாசியிடம் கொஞ்சம் இருங்கள்” என்றான்.
ராஜ்யத்தை மகனுக்கு அளித்து முடி சூட்டினான். மந்திரி மகனை அழைத்து தன் மகளை அவனுக்கு விமரிசையாக மணம் முடித்துக் கொடுத்தான்.
பின்னர் சந்யாசியுடன், “இதோ, நானும் உங்களுடன் தவம் புரிய வருகிறேன்” என்றான்.
தாளத்தை மட்டும் ஒரு போதும் தப்ப விட்டு விடக் கூடாது.
Maharashtra is famous for the worship of Goddesses Bhavani and Mahalakshmi. There are many temples for Goddesses like we have famous temples for Shiva, Vittoba and Khandoba.
Of the famous temples of Goddesses Kolhapur Lakshmi and Tuljapur Bhavani are more famous. Mahalakshmi temple in Mumbai also has become a popular destination in the recent years.
Part 6
xxxx
32.Mahalakshmi Temple at Kolhapur
Kolhapur is an inland city, located 373 kilometres from Mumbai and , 228 kilometres from Pune. Ambabai temple of Kolkhapur is known as Mahalakshmi Temple.
Another Vitobha temple also attracts devotees during Ashada and Krittika Sukla paksha Ekadasis. Ambabai Temple celebrates a big festival in Asvina Sukla Pachami
Let us first visit Ambaabaai/ Mahaa Lakshmi Temple. The significant factors of the temple are:
1.It is 1400 year old shrine. Exists from Chalukya reign.
2.Three foot Lakshmi made up of black stone is the main deity.
3. Shri Yantra is drawn on the wall
4.Vahana of Goddess Lion is behind her. Five headed cobra is above the head.
5.Kirnotsav is one important event which is held when the sun rays fall on the main deity during three times a year. The rays of the Sun fall on the Idol Goddess Mahalaxmi during Sunset. Kirnostav Dates :
November – 9, 10, 11 January – 31 February 1,2.
xxxx
The four Shakti Peethas of Maharashtra are Tuljapur enshrining Bhavani, Kolhapur enshrining Mahalakshmi, Mahur enshrining Mahamaya Renuka and Saptashringi enshrining Jagadamba. Other Shakti temples in the state are those at Ambe Jogai and Aundh.
Kolhapur is located in Kolhapur district and is well connected with Pune, 240 km north. It is on the national highway between Bangaluru and Pune. It is situated on the banks of the Panchganga river and is full of ancient temples and shrines.
Legends: The Karavira Mahatmya states that Vishnu resides in the form of Mahalakshmi at Kolhapur. Legend has it that Kolhasura, a demon that tormented the Gods and other beings, was destroyed by Mahalakshmi here at Karavira, and that the spot of his death became a thirtha and that she took abode here in a shrine which constitutes the temple today.
The Temple has several Deepamaalas on either side of Mahadwara and a Garuda mandap with square pillars and foliated arches of wood. An image of Garuda faces the sanctum. Another stone mandap, on a raised platform enshrining Ganesh, also faces the sanctum. Following this is the mandap with three shrines facing west. The central one is that of Mahalakshmi and the two on either side are those of Mahakali and Maha Saraswathi.
Legends: The Karavira Mahatmya states that Vishnu resides in the form of Mahalakshmi at Kolhapur. Legend has it that Kolhasura, a demon that tormented the Gods and other beings, was destroyed by Mahalakshmi here at Karavira, which constitutes the temple today.
Above the Mahalakshmi sanctum is a shrine with a Shivalingam and a nandi. The devakoshtas house Venkatesha, Katyayani and Gowri Shankar – facing the north, east and the south. There are a number of subsidiary shrines in the courtyard to the Navagrahas, Surya, Mahishasuramardini, Vitthal-Rakhmai, Shiva, Vishnu, Tulja Bhavani and others. Also located in the courtyard is the temple tank Manikarnika Kund, on whose bank is a shrine to Visweshwar Mahadev.
Xxx
33.Tuljapur Bhavani Temple
It is one of the 51 Shakti Kendras in the country.
Bhavani temple at Tuljapur is located 45 kilometres from Solapur. It is associated with Chatrapati Shivaji. He was said to have blessed by Goddess Bhavani. The temple has a history of nearly 800 years.
The main entrance of the temple bears the name of Sardar Nimbalkar. The other two entrances are named after the parents of Chhatrapati Shivaji, Shahaji and Jijabai. As one enters the Sardar Nimbalkar entrance, there is a temple dedicated to Markandeya Rishi on the right. After descending the stairs, one sees the main Tulja Temple. There is yagna kund (Holy fire pit) in front of this temple. Before entering the sanctum sanctorum of the Goddess, devotees take a dip in the two holy theerthas (tanks) . A Siddhi Vinayak temple is situated on the left side of the main gate whilst on the right, there is a temple of Aadishakti, Aadimata Matangadevi. A temple of goddess Annapurna is also present in the main complex.
The idol of Goddess Tulja Bhawani is believed by her devotees to be `swayambhu` (“self-manifested” not sculpted by human beings”). The high granite idol is three-foot tall, with eight arms holding weapons, and bearing the head of the slain demon Mahishasura. The Goddess is also known as Tulaja, Turaja, Tvarita and Amba.
Adi maya Adi shakti temple is the temple north to the Tuljabhavani temple where pooja starts, and followed by the pooja of Tuljabhavani .
Main Festivals:Vaishaka Full moon
The temple follow a set of elaborate rituals for the deity.These include priests offering a daily ritual bath, change of clothes, and offering food to the deity four times a day. The daily routine also includes offering devotional prayers to the Goddess. In the evening the deity is ceremoniously put to rest. On special occasions such as the birthday, marriage, in addition to ritual bath, the idol of the Goddess is taken around Tuljapur in a procession.
A dance peculiar to the place, named the Gondhala dance,is danced by women of Gondhala community. The dance is about the mythological stories about goddess Durga (Parvati, Tulja).
Tuljapur Bhavani idols are installed in lot of places in the western states. One of the Bhavani temples is in Sivanera Hill caves near Junnar..
ஒரு மனிதன் கடவுளையே நம்பாமல் இருக்கலாம். அப்படியும் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளலாம் இந்து மதம் என்பது, ஓய்வு ஒழிவு இல்லாமல் சத்தியத்தை நாடி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று அது செயலற்று, வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் , கீழே போய்க்கொண்டு இருப்பதற்கு காரணம் அது களைப்படைந்துவிட்டதே. அந்தக் களைப்பு நீங்கிய பின்னர் முன்னெப்போதும் இல்லாத பிரம்மாண்டமான ஒளியுடன் அது பிராகாசிக்கும் மதங்களுக்குள் மிகவும் சகிப்புத் தன்மை உடையது இந்து மதமே ; எல்லோரையும் அரவணைப்பது இந்து மதமே (Young India 24-4-1924)
xxx
மே 2 செவ்வாய்க் கிழமை
இந்து மதத்தின் அழகு , அது எல்லாவற்றையும் உள்ளடக்கிக்கொண்டு இருப்பதே என்பது என்னுடைய கருத்து. மஹாபாரதம் என்னும் உன்னத இதிஹாசத்தை எழுதிய தெய்வீக புருஷன் (வியாசர்) அதுபற்றி சொன்னது அப்படியே இந்துமதத்துக்கும் பொருந்தும் .எந்த மதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களும் இதில் உள்ளது. இந்துமதத்தில் சொல்லப்படாத விஷயம் இருந்தால் அது தேவையற்ற, பசையற்ற விஷயமாக இருக்கும்.
xxx
மே 3 புதன் கிழமை
விக்ரக ஆராதனை
நான் விக்ரகங்களை வைத்து வழிபடுவதை ஆதரிப்பவனும் எதிர்ப்பவனும்தான் ; அதன் உண்மையான பொருளை உணரும்போது இது சரி. விக்ரக ஆராதனையின் பின்னுள்ள கருத்தை நான் ஆதரிக்கிறேன் மனித இனத்தை உயர்த்துவதில் அது மிக முக்கியமான பங்குபணியைச் செய்கிறது . இந்தப் புண்ணியமான பூமியைப் புனிதப்படுத்தி நிற்கின்ற பல்லாயிரக்கணக்கான கோவில்களைப் பாதுகாக்கும் சக்தி எனக்கு வேண்டும் (Young India 28-2-1924)
xxxx
மே 4 வியாழக் கிழமை
கடவுளை நான் எப்படி உணருகிறேனோ அப்படியே உள்ளது உள்ளபடி நான் சொல்கிறேன் ஆவர் ஆக்குபவர், அழிப்பவர் . அவர் பலவண்ணம் உடையவர் என்ற என் நம்பிக்கையில் பிறந்தது இந்தக் கருத்து. சமண மதத்தினர் மேடையில் நன் பேசும்போது கடவுள் என்பவருக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை என்பேன் ராமாநுஜர் கூட்டத்தில் பேசுகையில் அவரே உலக நாயகன் என்பேன் .யார் ஒருவர் பற்றி நாம் முழுதும் நினைத்தே பார்க்க முடியாதோ அவரை நாம் நினைக்கிறோம். யார் ஒருவரை வருணிக்கவே முடியாதோ அவரைப் பற்றி நாம் வருணிக்க முயல்கிறோம். அறிய முடியாத ஒருவரை அறிய முயற்சி செய்கிறோம். அதுவே உண்மை.; இதனால்தான் நாம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறோம். நம்முடைய வருணனை அவரை எட்டிப்பிடிப்பது இல்லை . இதே காரணத்தினால்தான் வேதங்களும் நேதி ,நேதி (இது இல்லை ,இது இல்லை ) என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது (Young India 21-1-1926)
xxxx
மே 5 வெள்ளிக் கிழமை
நான் விக்ரக ஆராதனை தேவையே இல்லை என்ற கட்சியிலும் நிற்பேன். அதாவது அந்த ஆராதனையின் பின்னுள்ள கருத்தை, தாத்பர்யத்தை உணராமல் வெறித்தனமாக வழிபடுவோர் விஷயத்தில் இதுவே என் நிலை.அவர்கள் என் சிலைதான் உயர்ந்தது; வேறு எங்கும் இறைவன் இல்லை என்ற வெறிபிடித்தவர்கள் சிலையிலோ, தங்க விக்ரகம் ஒன்றிலோ கடவுளைக் காண்பவர்களைவிட இது போன்றவர்கள் அபாயகரமானவர்கள் , மழுப்பல் பேர்வழிகள் ஆவர் (Young India 28-2-1924)
xxxx
மே 6 சனிக் கிழமை
கோவில் வழிபாடு
கோவில்கள் இருப்பது பாவம் என்றோ மூட நம்பிக்கை என்றோ நான் கருதவில்லை ஒரு பொது இடத்தில் கடவுளை வழிபடுவதும் எல்லோரும் கூட்டாக வழிபடுவதும் மனித இனத்தின் தேவை என்றே தோன்றுகிறது . அப்படி வழிபடும் கோவிலில் விக்ரகங்கள் இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்பது அவரவர்கள் ருசியையும், கண்ணோட்டத்தையும் பொருத்தது (Young India 5-11-1925)
xxxx
மே 7 ஞாயிற்றுக் கிழமை
பகவத் கீதையை இந்துக்களின் எல்லா பிரிவினரும் தங்களது என்று ஏற்கின்றனர் அதில் பிடிவாதமான கொள்கை ஏதும் இல்லை..அறநெறி விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறது .புத்திக்குக்கும் இதயத்துக்கும் திருப்தி தருகிறது எல்லோரையும் ஈர்க்கும் சக்தி படைத்தது. மொழி நடையோ மிகவும் எளிதானது .
Xxxx
மே 8 திங்கட் கிழமை
கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் மூன்றும் அடங்கிய நூல் கீதை. இந்த மூன்றும் இணக்கமாக இருப்பதே நல்ல வாழ்க்கையை அமைக்கும் . இதற்கு அடிப்படை சேவை .
XXX
மே 9 செவ்வாய்க் கிழமை
உயர்ந்த தத்துவ எண்ணங்களையும் ஆன்மீக ரகசியங்களையும் உடைய கீதை சாதாரண மனிதர்களுக்கு எளிதில் விளங்காது . அதிர்ஷ்டம் வாய்ந்த சிலர்தான் அதைப் புரிந்துகொண்டு பின்பற்ற முடியும்.. ஆட்சி புரியவோ சமூகக் கட்டமைப்புக்கோ ஏற்றதல்ல ,
XXX
மே 10 புதன் கிழமை
கீதை என்னுடைய பைபிள்; குரான் மட்டுமல்ல அது என்னுடைய தாயார் போன்றது. என்னை ஈன்றெடுத்த தாய் என்றோ போய்விட்டாள் இந்த அழிவில்லாத தாய் அந்த இடத்தைப் பரிபூரணமாகப் பிடித்துக்கொண்டு என்னுடனே இருக்கிறாள்.
Xxx
மே 11 வியாழக் கிழமை
இந்து மதத்தில் கடவுளுக்குப் பல பெயர்கள் உண்டு ராமரும் கிருஷ்ணரும் வரலாறு பூர்வமானவர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர்கள் நம்புகின்றனர்.. ஆண்டவனே தசரதனுடைய மகன் ராமனாக பூவுலகிற்கு இறங்கிவந்தான் என்றும் நம்புகின்றனர் . அவனை வழிபட்டால் முக்தி கிடைக்கும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை .
Xxx
மே 12 வெள்ளிக் கிழமை
இந்துக்கள் பாதுகாப்பு சங்கம்
(பெண்கள் ) கடத்தல் போன்றவற்றைத் தடுக்கவும் தாங்கள் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் சமூக, தார்மீக, பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் இந்துக்கள் சங்கம் துவங்குவது நியாம்தானே , காந்திஜி ?
காந்தியின் பதில்: உங்கள் கேள்வியில் கண்ட விஷயங்களுக்காக ஒரு அமைப்பைத் துவங்குவதை யாருமே ஆட்சேபிக்க முடியாது.. நான் கட்டாயம் எதிர்க்க மாட்டேன் (Young India 2o-10-1925)..
Xxx
மே 13 சனிக் கிழமை
மனு நீதி நூல்
மனு ஸ்ம்ருதியை நான் சாஸ்திரமாகவே கருதுகிறேன் . ஆனாலும் மனு ஸ்ம்ருதி என்ற பெயரில் அச்சிடப்பட்ட அத்தனை ஸ்லோகங்களையும் நம்புவதாக அர்த்தமில்லை.. ஒரு பகுதியை நீங்கள் ஏற் றுக்கொண்டால் அதற்கு முரணாக உள்ள பகுதிகளை நீங்களே ஒதுக்கி விடுவீர்கள். அச்சிடப்பட்ட தொகுதியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.. அதிலுள்ள உயர்ந்த கருத்துக்கள் காரணமாக அதை நான் ஒரு மத நூல் என்றே கருதுகிறேன்.
xxx
மே 14 ஞாயிற்றுக் கிழமை
இந்திய நாகரீகம்
இந்தியா உருவாக்கிய நாகரீகத்தை எவராலும் மிஞ்சமுடியாது நம்முடைய முன்னோர்கள் விதைத்த விதைகளுக்கு சமமானது எதுவும் இல்லை.ரோமானிய சாம்ராஜ்யம் போய்விட்டது;கிரேக்க சாம்ராஜ்யத்துக்கும் அதே கதி.தான். எகிப்திய பாரோ மன்னர்களின் பெருமை குலைந்துபோனது. ஜப்பான், மேற்கத்திய மயமாகிவிட்டது; சீனாவைப்பற்றியோ சொல்வதற்கே ஒன்றுமில்லை.ஆனால் இந்தியாவோ இன்னும் எப்படியோ வலுவான அஸ்திவாரத்தில் நிற்கிறது .
Xxx
மே 15 திங்கட் கிழமை
சத்தியம், அன்பின் வடிவம் இறைவன்; அவனே அறமும் வாழ்க்கை நெறியும் ; இறைவன் என்பவன் அச்சமற்றவன்.நமக்கு வழிகாட்டும் ஒளி; உயிர் மூச்சு ; இதற்கெல்லாம் அப்பாற்பட்டவனும் கூட.
Xxx
மே 16 செவ்வாய்க் கிழமை
இறைவன் நம்முடைய மனச்சாட்சி.; நாஸ்தீகனின் நாஸ்தீகவாதமும் அவனே ; அவனுடைய எல்லையற்ற கருணையே நாஸ்தீகனையும் வாழவிடுகிறது. இதய சோதனையை செய்பவன் அவன்.
Xxx
மே 17 புதன் கிழமை
ஐரோப்பிய நாகரீகம்
ஐரோப்பிய நாகரீகம் ஐரோப்பியர்களுக்கு உகந்தது என்பதில் சந்தேகமே இல்லை.; ஆனால் அதைக் ‘காப்பி’ அடிக்க நாம் எண்ணினால், அது இந்தியாவுக்கு அழிவையே ஏற்படுத்தும்.ஆயினும் அதிலுள்ள நல்ல அம்ஸங்களை ஏற்று அதை நம்முடன் கலக்கலாம் ; அதுபோலவே, அதிலுள்ள தீமையான விஷயங்களை ஐரோப்பியர்களும் அகற்றலாம்..
Xxx
மே 18 வியாழக் கிழமை
நான் ஒரு சாநாதனி ஹிந்து . ஏனென்றால் நான் வேதங்களையும் உப நிடதங்களையும் புராணங்களையும் , இந்து சமயம் என்ற பெயரில் உள்ள எல்லா நூல்களையும் நான் நம்புகிறேன்
Xxxx
மே 19 வெள்ளிக் கிழமை
ஏனென்றால் வர்ணாஸ்ரம தர்மத்தையும் நான் நம்புகிறேன் ; வேதத்தில் குறிப்பிட்ட தர்மத்தை; இப்போதுள்ள பிரபலமான ஜாதிகளை அல்ல.
Xxxx
மே 20 சனிக் கிழமை
ஏனென்றால் பசுப் பாதுகாப்பை நான் நம்புகிறேன். இதிலும் குறுகிய நோக்கத்துடன் அல்ல.
Xxxxx
மே 21 ஞாயிற்றுக் கிழமை
நான் ஒரு சாநாதனி ஹிந்துஏனென்றால் எனக்கு விக்ரகஆராதனையில் நம்பிக்கை இல்லாமல் இல்லை.
Xxxxx
மே 22 திங்கட் கிழமை
தத்துவ ஞானியின் லட்சிய வாசகம்
மேற்கத்திய தத்துவ ஞானி சொன்ன சொன்ன லட்சிய வாசகத்தை எளிய / நேர்மையான வாழ்க்கை; உயர்ந்த சிந்தனை. PLAIN LIVING; HIGH THINKING பல லட்சம் பேருக்கு உயர்ந்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்பது நமக்குத் தெரியும்.. சிலர்தான் பொதுமக்கள் பற்றி சிந்திக்க முடிகிறது. .உயர்ந்த வாழ்க்கை நடத்தும் நாம், உயர்த்த சிந்தனை இல்லாமல் இருக்கிறோம்.
XXX
மே 23 செவ்வாய்க் கிழமை
மனம் ஒரு பறவை
மனம் ஒரு ஓய்வில்லாத பறவை என்பதை அறிவோம் கொடுக்கக்கொடுக்க அதிகம் கேட்கிறது.. எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி ஏற்படுவதே இல்லை.உணர்ச்சிகளுக்கு வசப்படும்போது அவை கட்டுக்கடங்காமல் போகிறது.
XXX
மே 24 புதன் கிழமை
நான் ஒரு அத்வைதவாதி; ஆயினும் த்வைதத்தையும் ஆதரிப்பேன்.உலகம் ஒவ்வொரு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் எல்லாமே நிலையற்றது; மாயம் என்று சொல்லலாம்.நிலையாமையில் உழ ல்கிறது.; இப்படி இருக்கையிலும் அது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது அப்போது அது மாயம் இல்லை.
Xxx
மே 25 வியாழக் கிழமை
கலப்புத் திருமணம்
தீண்டாமையை ஒழிக்க, கலப்புத் திருமணம் அல்லது சம பந்தி போஜனம் தேவை என்று நான் கருதவில்லை. நான் உள்ள இந்து மதம் மரியாதை தர்மத்தைக் கடைப்பிடிக்கிறது. பழங்காலத்தில் ரிஷி முனிவர்கள் தியானம் மூலமாக நீண்ட ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தனர். உலகில் வேறு எந்த மதங்களிலும் இதைக் காண முடியாது.
xxx
மே 26 வெள்ளிக் கிழமை
பிராமணனும் நாய் தின்னும் புலையனும்
இந்து மதத்தின் உயர்ந்த நிலையில் ஒரு பிராமணன், ஒரு எறும்பு, ஒரு யானை, நாயை அடித்துத் தின்னும் புலையன் (இது கீதை ஸ்லோகத்தில் உள்ள வரி) ஆகிய அனைவரும் சமமே..நம்முடைய தத்துவங்கள் மிகவும் உன்னதமானவை . அத்தைய உயர்ந்த லட்சியத்தை இன்று நாம் கைவிட்டதால் இன்று சகிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுவிட்டது இந்த மதம் மனிதர்களிடையே மட்டும் சகோதரத்துவத்தைப் போதிக்கவில்லை. உயிர் வாழும் எல்லாம் ஓரினம் என்று போதிக்கிறது (Harijan 28-3-1936)
xxx
மே 27 சனிக் கிழமை
பகவத் கீதையில் 4 ஜாதி
நான்கு வர்ணங்கள் குணத்தின் அடைப்படையிலும், செய்யும் வேலையின் அடைப்படையிலும் அமைந்தன என்று பகவத் கீதையில் பேசப்படுகிறது சாதுர் வர் ண்யம் மயா ச்ருஷ்டம் — நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப்பட்டன என்று கண்ண பிரான் பகவத் கீதையில் செப்புகிறார். இது பிறப்பின் அடிப்படையில் அமைந்தது என்றே நான் நினைக்கிறேன் . அப்படி பிறப்பின் அடிப்படையில் இல்லாவிடில் அது ஒன்றும் இல்லாமல் போய்விடும் ( (ஜாதி வேறு , வர்ணம் வேறு என்றும் பின்னொரு இடத்தில் காந்திஜி பேசியிருக்கிறார் )
xxx
மே 28 ஞாயிற்றுக் கிழமை
திருக்குறள் பற்றி காந்திஜி
கேள்வி : காந்திஜி அவர்களே! திருக்குறள் என்னும் நூலில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிரும்’ என்று சொல்லி இருக்கிறாரே ?
காந்திஜி அளித்த பதில்: இப்போது (ஜாதிகள்) பல்கிப் பெருகிப்போன மிகைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் அப்படி சொன்னார். ஒரு ஜாதி நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று செல்லுகையில் அவர் எதிர்க்குரல் எழுப்பத்தானே வேண்டும் . ஆனால் பிறப்பின் அடிப்படையில் அமைந்த வர்ணாச்ரம தர்மத்தின் ஆணிவேரை அது வெட்டாது . சமத்துவம் இல்லாத சமூகத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்துவதற்கு ஒரு சீர்திருத்தவாதி செய்யும் முயற்சிதான் அது.
xxx
மே 29 திங்கட் கிழமை
கிறிஸ்தவ மத மாற்றம் பற்றி
நான் பல அமெரிக்க , ஆங்கிலேய கிறிஸ்தவ மிஷனரி கூட்டங்களில் பேசி இருக்கிறேன் ஏசு கிறிஸ்து என்ன சொன்னார் என்று போதிப்பதை விட ஏசு கிறிஸ்து அவரது மலைப் பிரசங்கத்தில் சொன்னபடி வாழ்ந்து காட்டினால் இந்தியா உங்களை சந்தேகப்பார்வையில் பார்த்திராது . அதற்குப்பதிலாக உங்களைப் பாராட்டி உங்கள் பிரசன்னம் மூலம் பலனும் அடைந்திருக்கும்.. .
xxx
மே 30 செவ்வாய்க் கிழமை
இந்தக் கருத்தின் அடைப்படையில் , பதில் தரும் வகையில் அமெரிக்க நண்பர்களுக்கு நான் இந்துமதம் பற்றி போதிக்க ஒன்றுமில்லை;.மாற்று மத நம் பிக்கை உடையோரிடையே போதிப்பதில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது.அதிலும் அவர்களை மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு பேசுவதை விரும்பவில்லை போதிப்பதால் ஒரு மதம் பரவாது ; அந்த மத போதனை சொல்லும்படி வாழ வேண்டும்.அப்படி வாழ்ந்துகாட்டுவதே நல்ல பிரச்சாரமாக அமையும் (Young India 20-10-1927)
xxxx
மே 31 புதன் கிழமை
உதடும் இதயமும்
வழிபாடானாலும் பிரார்த்தனையானாலும் அது உதட்டிலிருந்து வந்தால் போதாது; இருதயத்தின் அடி மட்டத்திலிருந்து வரவேண்டும்.இதனால்தான் ஊமையும் , திக்குவாயனும், கல்லாதவனும் அறிவிலியும் கூட பிரார்த்தனை செய்ய முடிகிறது . வாயில் தேன் ஒழுகும் சொற்கள்; உள்ளத்திலோ விஷம் என்று வாழ்பவரின் பிரார்த்தனைகள் இறைவன் காதுகளில் விழுவதில்லை.
Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)
–subham–
Tags- காந்திஜி, பொன்மொழிகள், இந்து மதம் , மனுஸ்ம்ருதி , பகவத் கீதை, மத மாற்றம், வர்ணாச்ரம தர்மம், கலப்புத் திருமணம் , மே 2023, காலண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஃப்யூஸ் போன பல்புகள்!
ச.நாகராஜன்
அவர் ஒரு மூத்த அரசு அதிகாரி. பணி ஓய்வு பெற்று விட்டார்.
ஆடம்பரமான அரசு சொகுசு பங்களாவிலிருந்து அவர் முன்பே வாங்கி வைத்திருந்த இந்த ஹவுஸிங் சொசைடி ஃப்ளாட்டுக்கு – குடியிருப்பு சங்க அடுக்குமாடி வீட்டிற்கு – வந்து விட்டார்.
தன்னை அவர் ஒரு பெரிய ஆளாக நினைத்திருந்ததால் யாருடனும் பேச மாட்டார்.
குடியிருப்பு பூங்காவில் காலையிலும் மாலையிலும் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது கூட கம்பீரமாகத் தனியே தான் நடப்பார்.
யாருடனும் பேசமாட்டார்.
அங்கிருக்கும் மேடைகளில் தனி இடத்தில் உட்காருவார்.
ஒரு நாள் தற்செயலாக அவர் பக்கத்தில் இன்னொருவர் வந்து உட்கார நேர்ந்தது. வந்தவர் பேச ஆரம்பித்தார்.
ஆனால் அவர் தான் பேசிக் கொண்டிருந்தார். அந்த கம்பீரமான அரசு அதிகாரியோ ஒரு வார்த்தை அல்லது இருவார்த்தைகள் தான் கூறுவார். “நான் எவ்வளவு பெரிய ஆள்; இந்த இடத்திற்கு ஓய்வு பெற்றதால் அல்லவா வந்தேன்” என்ற அவரது நினைப்பு அவரது நடை உடை பாவனைகளில் தொக்கி நிற்கும்.
அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேச ஆரம்பித்தால் அதை வந்த அந்த நண்பர் கேட்பார்; உன்னிப்பாகக் காது கொடுத்துக் கேட்பார்.
சில நாட்கள் அவர்கள் உட்கார்ந்து பேசுவது வழக்கமானது.
ஒரு நாள் அந்த அரசு அதிகாரி சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, “அவர் யார்?” என்று கேட்டார்.
அதற்கு அவரது தற்காலிக நண்பர் பதிலளித்தார் : “ பணி ஓய்வுக்குப் பின்னர் நாம் ப்ஃயூஸ் போன பல்புகள் போலத் தான். எவ்வளவு அதிகமான வாட் இருந்தாலும் ப்யூஸ் போனது போனது தான். அதில் வித்தியாசமே இல்லை. நாந் இந்த காலனியில் ஐந்து வருடமாக வசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எவரிடமும் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவன் என்று சொன்னதே இல்லை. இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இதோ இப்போது தான் முதல் தடவையாக உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.
நமது அரசு அதிகாரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. எம்.பி.யா? அவரிடமா தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறோம்?
எம்பி தொடர்ந்தார். “ உங்கள் வலது பக்கம் போய்க் கொண்டிருக்கிறாரே, அவர் பெயர் வர்மா. இந்திய ரயில்வேயில் ஜெனரல் மானேஜராகப் பதவி வகித்தவர்.”
நமது அரசு அதிகாரி அரண்டு போனார். ரயில்வேயின் ஜி.எம். மா?
எம் பி தொடர்ந்தார். “அதோ இருக்கிறாரே, சிங் சாஹப், அவர் நமது ஆர்மியில் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர்.”
அரசு அதிகாரிக்குத் தலை சுற்றியது.
“இதோ, இந்தப் பக்கம் போகிறாரே, இவர் தான் இஸ்ரோவின் தலைவராக இருந்தவர். யாரிடமும் அதை இவர் சொன்னதில்லை. ஆனால் எனக்குத் தெரியும்”
எம்பி தொடர்ந்தார்.
“எந்த வாட் இருந்தாலும் 10லிருந்து நூறு வரை எதாக இருந்தாலும் சரி இப்ப்போது அது எவ்வளவு என்பது முக்கியம் இல்லை. எல் டி- யா அல்லது சிஎஃப் எல்- லா ஹாலோஜனா அல்லது இன்காண்டஸ்சென்டா. ஃப்ளோரெஸெண்டா, டெகோரேடிவா- எதுவும் முக்கியமில்லை. நண்பரே, இந்த விதி உமக்கும் பொருந்தும், சரி தானே?”
அர்சு அதிகாரிக்கு சற்றுப் புரிந்தது. அவர் விழித்துக் கொள்ள ஆரம்பித்தார்.
சூரியன் உதிக்கிறான், மறைகிறான். உதயத்தில் உதயமாகும் சூரியனைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அதே போல மறைவதையும் பார்க்கிறோம்.
ஆனால் உதய சூரியனைப் பார்க்கும் அதே சந்தோஷம், உத்வேகம் அதை மறைவதைப் பார்க்கும் போது ஏற்படுவதில்லை.
சதுரங்க விளையாட்டு முடிந்த போது அரசனோ அரசியோ, அல்லது பான் – ஓ எதாக இருந்தாலும் அவற்றைச் சதுரங்கப் பெட்டிக்குள் போட வேண்டியது தான்!
ஆங்கிலத்தில் உள்ள மேற்படி கட்டுரையின் மூலத்தை (13-12-2022) சமூக ஊடகத்திலிருந்து எடுத்து டாக்டர் சுபிர் சௌத்ரி கொல்கத்தா ‘ட்ரூத்’ வார இதழ் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தன் குறிப்பையும் சேர்த்துள்ளார் இப்படி:-
நாம் ஃப்யூஸ் போன பல்புகள் இல்லை. ஆனால் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். பேரண்ட ப்ரக்ஞையுடன் தொடர்பு கொண்டு அதன் ஒளியைப் பெறுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. ஹரி ஓம்.”
உண்மை தான், தற்காலிக இணைப்புத் துண்டிப்பிற்காக அலட்டிக் கொள்ளாமல் இன்னும் அதிக ஒளியை உலகிற்கு முடிந்த வரை தர உரிய இணைப்பைப் பெறலாம்; காலமும் நிறைய இருக்கும்.
***
ஆதாரம், நன்றி “ TRUTH KOLKATA WEEKLY 30-12-2022 Vol 90 N0 36
I have given below 31 quotations of Mahatma Gandhi on Hindus and Hinduism.
May 1 – May Day ; 4 Agni Nakshatra/ Hottest period begins,; 5 Chitra Poornima; also Buddha Poornima , Madurai Chitra Festival; 29 Agni Nakshatra/ Hottest period ends. New moon Day – 19; Full moon Day– 5; Ekadasi Fasting Days – 1, 15; Auspicious Days – 11, 22, 24, 25
May 1 Monday
Hinduism will spread!
A man may not believe even in God and still he may call himself a Hindu. Hinduism is a relentless pursuit after truth and today it has become moribund, inactive, irresponsive to growth, it is because we are fatigued; and as soon as the fatigue is over, Hinduism will burst forth upon the world with a brilliance perhaps unknown before. Of course, therefore, Hinduism is the most tolerant of all religions. Its creed is all embracing. (Young India 24-4-1924)
Xxx
May 2 Tuesday
Hinduism all inclusive
In my opinion, the beauty of Hinduism lies in its all embracing inclusiveness. What the divine author of Mahabharata said of his great creation is equally true of Hinduism. What of substance is contained in any other religion is always to be found in Hinduism. And what is not contained in it insubstantial or unnecessary.(Young India 17-9-1925)
It (Gita) is accepted by all Hindu sects as authoritative. It is free from dogma. In a short compass, it gives a compete reasoned moral code. It satisfies both the intellect and the heart. It is thus both philosophical and devotional. Its appeal is universal. The language is incredibly simple.
Xxx
May 4 Thursday
Bhagavad Gita
The Gita contains the gospel of work, the gospel of Bhakti or devotion, the gospel of Jnana or knowledge. Life should be a harmonious whole of these three. But the gospel of service is the basis of all.
Xxx
May 5 Friday
Bhagavad Gita
The Gita is a compendium of the subtlest philosophical thoughts and spiritual mysticism and as such its true purport is not intelligible t o the laymen of the world. The religion of Gita may be understood and practised only by a fortunate few, but it cannot be the basis of social discipline or popular theocracy.
Xxx
May 6 Saturday
Bhagavad Gita
The Gita is not only my Bible or my Koran; it is more than that; it is my mother. I lost my earthly mother who gave me birth long ago; but this eternal mother has completely filled her place by my side ever since.
Xxx
May 7 Sunday
Rama
In Hindu religion god is known by various names. Thousands of people look doubtless on Rama and Krishna as historical figures and literally believe that god came down in person on earth in the form of Rama, son of Dasarath, and by worshipping him one can attain salvation.
Xxx
May 8 Monday
Manusmriti
I hold Manusmriti as part of the Shastras. But that does not mean that I swear by every verse that is printed in the book described as Manusmriti. There are so many contradictions in the printed volume, that , if you accept one part you are bound to reject those parts that are wholly inconsistent with it. I hold Manusmriti as a religious book because of the lofty teachings contained in it. (Harijan, 1934)
Xxx
May 9 Tuesday
God
To me God is Truth and Love; God is ethics and morality; God is fearlessness. God is the source of Light and Life and yet He is above and beyond all these.
Xxx
May 10 Wednesday
God
God is conscience. He is even the atheism of the atheist. For in His boundless love God permits the atheist to live. He is the searcher of hearts.
Xxx
May 11 Thursday
European Civilization
European Civilization is no doubt suited for the Europeans, but it will mean ruin for India if we endeavour to copy it. This is not to say we may not adopt and assimilate whatever good and capable of assimilation by us, as it does not also mean that even the Europeans will not have to part with whatever evil might have crept into it.
Xxx
May 12 Friday
Plain living
Let us engrave on our hearts the motto of a Western philosopher , Plain Living and High thinking’. Today it is certain that millions cannot have high living and we the few who profess to do the thinking for the masses run the risk., in a vain search after high living of missing high thinking.(Young India 30-4-1931)
Xxx
May 13 Saturday
Mind is a bird
We notice that the mind is a restless bird; the more it gets the more it wants, and still remains unsatisfied. The more we indulge our passions the more unbridled they become. .(Hind Swaraj, chapter 13).
Xxx
May 14 Sunday
Indian Civilization
I believe the Civilization India has evolved is not to be beaten in the world. Nothing can qual the seeds sown by our ancestors. Rome went, Greece shared the same fate; the might of Pharoahs was broken; Japan has become westernised; of China nothing can be said; but India is still ,somehow or other, sound at the foundation.(Hind Swaraj, chapter 13).
Xxx
May 15 Monday
Advaitam
I am an advaitist and yet I can support dvaitism (dualism). The world is changing every moment, and therefore is unreal. It has no permanent existence. But though it is constantly changing, it has something about it which persist and therefore to that extent real. (Young India 21-1-1926)
Xxx
May 16 Tuesday
I talk of God exactly as I believe Him to be. I believe Him to be creative as well as non-creative. This too is the result of my acceptance of the doctrine of manyness of reality. From the platform of Jains, I prove the non-creative aspect of God., and from Ramanuja the creative aspect. As a matter of fact we are all thinking of the Unthinkable and describing the Indescribable, seeking to know the Unknown, that is why our speech falters, is inadequate and even often contradictory. That is why the Vedas describe Brahman as not this, not this. (Young India 21-1-1926)
Xxx
May 17 Wednesday
Idol Worship
I am both an idolater and an iconoclast in what I conceive to be the true senses of the terms. I value the spirit behind the Idol Worship. It plays a most important part in the upliftment of the human race. And I would like to possess the ability to defend with my life the thousands of holy temples which sanctify this land of ours. (Young India 28-2-1924)
Xxx
May 18 Thursday
Iconoclast
I am an Iconoclast in the sense that I break down the subtle form of idolatry in the shape of fanaticism that refuses to see any virtue in any other form of worshipping the deity save one’s own. This form of idolatry is more deadly for being more fine and evasive than the tangible and gross form of worship that identifies the Deity with a little bit of stone or a golden image. (Young India 28-2-1924)
Xxx
May 19 Friday
Temple Worship
I do not regard the existence of a temple as a sin or superstition. Some form of common worship, and a common place of worship appear to be a human necessity. Whether the temple should contain images or not is a matter of temperament and taste.
(Young India 5-11-1925)
xxx
May 20 Saturday
Inter Caste Marriage
I do not regard inter dining and inter marriage as essential to the removal of untouchability. The religion to which I belong prescribes for our observance Marayada Dharama. The Rishis of old carried on exhaustive researches through meditation and as a result of the researches they discovered some great truths, such as have no parallel perhaps in any religion.
Xxx
May 21 Sunday
Mental condition
Our ancestors , therefore, et a limit to our indulgences. They saw that happiness was largely a mental condition. A man is not necessarily happy because he is rich, or unhappy because he is poor. The rich are often seen to be unhappy, the poor to be happy. Millions will always remain poor. Observing all this, our ancestors, dissuaded us from luxuries and pleasures. .(Hind Swaraj, chapter 13).
Xxx
May 22 Monday
Brahmin’s Sacred Thread
Q : You desire ladies to sacrifice their jewels. Why do you not ask casteman to sacrifice his pride by giving up his thread?
Gandhiji’s reply: There is no parallel between the two cases. The thread is a symbol of consecration for those who believe it. I do not wear it because it has no meaning for me and I knew millions go without it.
Xxx
May 23 Tuesday
Sacred thread to Harijans
There is nothing to prevent Harijans from adopting it (Sacred thread) if they chose. But I should strongly discountenance the practice as it would be an imitation without the original meaning behind it.
Xxx
May 24 Wednesday
Four Varnas In Gita
The Gita does talk of Varna being according to Guna and Karma, but Guna and Karma are inherited by birth. Lord Krishna says all Varnas are created by me “chaatur varnyam mayaa srshtam”. i.e I suppose by birth. The law of Varna is nothing, if not by birth
Xxx
May 25 Thursday
Tirukkural
Do you know that the author of Tamil classic (Tirukkural) says there is no caste by birth? Gandhiji’s reply: He says it as an answer to present day exaggerations. when superiority was claimed by any Varna, he has to raise his voice against it. But that does not cut at the root of Varna by birth. It is only the reformer’s attempt to cut at the root of inequality.
Xxx
May 26 Friday
Prayer
Worship or prayer is not to be performed with lips, but with the heart. And that is why it can be performed equally by the dumb and the stammerer, by the ignorant and the stupid. And prayers of those toungues are nectared and whose hearts are full of poison are never heard.
Xxx
May 27 Saturday
Equality in Hinduism
In the purest type of Hinduism, a Brahmana, an ant, an elephantand a dog eater are of the same status (It is from Bhagavd Gita sloka). And because our philosophy is so high, and we have failed to live up to it, that very philosophy today stinks in our nostrils. Hinduism insists on the brotherhood not only of all mankind but of all that lives. (Harijan 28-3-1936)
Xxx
May 28 Sunday
Christian Conversion
I have ventured at several missionary meetings to tell English and American missionary meetings that if they could have refrained from “telling” India bout Christ and had merely lived the life enjoined upon them by Sermon on the Mount, India instead of suspecting them would have appreciated their living in the midst of her children and directly profited by their presence.
Xxx
May 29 Monday
Holding this view, I can “tell” American friends nothing about Hinduism by way of “return”. I do not believe in people telling others of their faith, especially with a view to conversion. Faith does not admit of telling. It has to be lived and then it becomes self propagating.
(Young India 20-10-1927)
Xxx
May 30 Tuesday
Sanatani Hindu
I call myself a Sanatani Hindu, because
1.I believe in the Vedas, the Upanishads, the Puranas and all that by goes by the name of Hindu scriptures, and therefore the Avataras and rebirth
2. I believe in the Varnashrama Dharma in a sense, in my opinion, strictly Vedic, but not in its present popular and crude sense.
3. I believe in the protection of the cow in its much larger sense than the popular.
4. I do not disbelieve in idol worship.
(Young India 6-10-1921)
Xxx
May 31 Wednesday
Organisation for Protecting Hindus
Q :Are not the Hindus justified in organising themselves, not for any aggressive action against Moslems or others, but for safeguarding their religious rights and stamping out such evils as kidnapping etc. as also for the physical, social, moral and material advancement of the Hindu community?
Gandhiji :- I do not suppose anybody can possibly object to the Organisation such as the question mentions. I certainly do not object.
(Young India 2o-10-1925)
Source book – Hindu Dharma, M K Gandhi, Navajivan Publishing House, Ahmedabad, 1950)
–subham–
Tags- Mahatma, Gandhi, Quotations, on Hinduism, Hindus, Manu, Gita, Varna ashrama, Conversion, Sacred thread , caste
Four devotees who covered all the 8 temples at one go.
பகுதி 6
நேற்று அஷ்ட விநாயகர் கோவில் எனப்படும் எட்டு பிள்ளையார் கோவில்களில் நான்கு கோவில்களை தரிசித்தோம். இன்று மீதமுள்ள நான் கு கணபதிகளைத் தரிசிப்போம்.
५ चिंतामणी मंदिर थेऊर, पुणे जिल्हा
६ गिरीजात्मज मंदिर लेण्याद्री, पुणे जिल्हा
७ विघ्नेश्वर मंदिर ओझर, पुणे जिल्हा
८ महागणपती मंदिर रांजणगाव, पुणे जिल्हा
28. தேவூர் சிந்தாமணி மந்திர்
புனே மாவட்டம்
புனே நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் தேவூர் இருக்கிறது. இங்குதான் மூலா , முத்தா , பீமா நதிகள் சந்திக்கின்றன.. ஏனைய 7 கோவில்களையும் விட இது அளவில் பெரியது கபில முனிவர் வைத்திருந்த சிந்தாமணி என்னும் அபூர்வ ரத்தினைக் கல்லை குணா என்ற பேராசைக்கார மன்னன் பறித்துக்கொண்டான். அந்த மணியை மீண்டும் கபிலருக்கு மீட்டுக்கொடுத்த கணபதி என்பதால் இவரை சிந்தாமணி விநாயகர் என்று அழைக்கிறார்கள் . கோவிலுக்கு ப் பின்னால் அமைந்துள்ள ஏரியை கடம்ப தீர்த்தம் என்பர் . சிந்தாமணி ரத்தினக் கதை முத்கல புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது .
Xxx
29. கிரிஜாத்மஜ விநாயகர் கோவில்
(புனே மாவட்டம்)
ஜுன்னார் என்னும் ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் லேனாத்ரி என்னும் இடத்தில் கிரிஜாத்மஜ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கிரிஜா (மலைமகள்) என்பது பார்வதியின் பெயர் ஆத்மஜ என்றால் மகன். பார்வதி என்னும் கிரிஜா, தவம் செய்து பிள்ளையாரைப் பெற்ற இடம் இது. இங்கு பாத்த மதத்தைப்போற்றும் 18 குகைகள் இருக்கின்றன. அவற்றில் எட்டாவது குகையை பிள்ளையார் பிடித்துக்கொண்டார்.ஒரே பறாங் கல்லில் அமைந்த குடைவரைக் கோவில் . குகைகளை கணேஷ்லேணி என்றும் அழைப்பர் . கோயிலுக்குச் செல்ல 307 படிகள் உண்டு பெரிய மண்டபம் ஆனாலும் தூண்கள் எதுவுமில்லை.. 53 அடி நீளம், 51 அடி அகலம்,7 அடி உயரத்துடன் உள்ள கம்பீரமான மண்டபம்.. மின்சார விளக்கு எதுவுமின்றி , சூரிய ஒளியால் மட்டும் சுயம் பிராகாசமாக ஜொலிக்கிறார் பிள்ளையார்.
Xxx
30. விக்னேஷ்வர் கோவில்
(புனே மாவட்டம்)
ஓஜர் என்னும் ஊரில் விக்னம் போக்கும் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது புனே நகரிலிருந்து சுமார் 85 கிலோமீட்டர். குக்டி நதிக்கரையில் அமைந்த கோவில் இது . நாராயண காவ்ன் என்னும் கிராமம் 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது
அபிநந்தன் என்னும் அரசனின் வழிபாட்டுக்கு ஊறு விளைவித்த விக்னா சுரனை , பிள்ளையார் சம்ஹாரம் செய்த ஊரில் கோவிலைக் கட்டி இருக்கிறார்கள் .அப்போது அசுரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.. என் பெயர் எப்போதும் உங்கள் பெயருடன் நீடிக்க வேண்டும் என்றான். அது முதல் பிள்ளையாருக்கு விக்னேஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது . விக்னம் என்றால் தடைகள், இடையூ றுகள் . பிள்ளையார் சும்மா விடுவாரா ? மகா பாரதம் எழுதித்தருவதற்கு வேத வியாசருக்கே கண்டிஷன் போட்டவர் அல்லவா ! அவரும் ஒரு கண்டிஷன் போட்டார். எனது பக்தர்கள் எவரிடமும் நீ செல்லக்கூடாது என்று. அது முதல் பிள்ளையார் பக்தர்களுக்கு விக்னங்கள் (கஷ்டங்கள்) எதுவும் வருவதில்லை .
பிள்ளையாயர் சிலைகளில் நீலம் , வைரம் ஆகிய ரத்தினைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, கோவிலின் கோபுரமும் தங்கத்தால் வேயப்பட்டு இருக்கிறது சித்தி, புத்தி ஆகிய இரு தேவியர் புடை சூழ அமர்ந்து காட்சி தருகிறார் கணேசர்.
Xxx
31. மஹா கணபதி கோவில்,
புனே மாவட்டம்
ராஞ்சன் காவ்ன் என்னும் ஊர் புனே நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.திரிபுராசுரனை வாதம் செய்வதற்கு முன்னர், சிவன் வழிபட்ட இடம் இது. அருணகிரிநாதரின் திருப்புகழைப் படித்தோருக்கு இந்தக் கதை தெரியும். எல்லோரும் எந்தக் காரியத்தைத் துவங்கினாலும் கணபதியை வணங்கிவிட்டுதான் செல்ல வேண்டும். அவசரத்தில் சிவன் மறந்து போய், ‘ஹலோ’ Hello சொல்லாமல் கிளம்பிவிட்டார். சிவனுடைய கார் டயர் வெடித்துவிட்டது; அதாவது ரத்தத்தின் சக்கரம் அச்சு(Axis) முறிந்து அச்சோ என்று உட்கார்ந்து விட்டது உடனே சிவ பெருமான், Sorry, Sorry, Very Good Morning குட் மார்னிங் சொல்லி, ஸாரி , ஸாரி என்று சொன்னவுடன் வெற்றிபெற வாழ்த்துகிறர் கணபதி.
கைத்தல நிறைகனி என்று துவங்கும் திருப்புக்கழில்
முத்தமிழ் அடைவினை முற்படு கிரி தனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடி செய்த அதிதீரா
என்று அருணாகிரி பாடியதை தமிழர்கள் அறிவார்கள்
அத்தகைய பெருமை உடைடய இந்தக் கோவிலில் தட்சிணாயன காலத்தில் சூரிய ஒளி , பிள்ளையார் மீது விழும்படி கோவிலைக் கட்டியிருக்கிறார்கள் . இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை உடைத்து.
Xxx
மகாராஷ்டிரத்தில் பிள்ளையார் சதுர்த்தி தேசீயத் திருவிழா ஆகும். பால கங்காதர திலகர் இதைப் பிரபலப்படுத்தி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக சுதந்திரக் கனலை மூட்டிவிட இந்த விழாவைப் பயன்படுத்தினார். ஆயினும் அவருக்கும் முன்னதாகவே விநாயகர் வழிபாடு உண்டு. மராட்டிய மாநிலத்தில் உள்ள பிள்ளையார் குடைவரைக் கோவிலைக் காண்கையில் நம்முடைய பிள்ளையார் பட்டிக்கும் அது முன்னோடியோ என்று எண்ணத் தோன்றுகிறது .
சித்தி, புத்தி என்ற விநாயகர் மனைவிகள், அடையாளபூர்வ சொற்கள் ; உண்மை மனைவியர் அல்ல. பிள்ளையாரை வழிபாட்டால் சித்தியும் புத்தியும் கிடைக்கும்.
எல்லா சதுர்த்தி தினங்களிலும், பிள்ளையார் சதுர்த்தியின் போதும் அஷ்ட விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்பதை சொல்லத் தேவை இல்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்
அரசியல்வாதிகளுக்கு பீஷ்மரின் அட்வைஸ்!
ச.நாகராஜன்
“என்ன சார்? பீஷ்மர் எப்போது நமது அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் செய்தார்?” என்று ஆச்சரியப்பட வேண்டாம்.
அன்றைய ராஜாவை விட இன்றைய ‘சாதா மந்திரி’ நூறு மடங்கு ‘பவர்ஃபுல்’.
சரி, அன்றைய நாளில் ராஜா ஒரு எப்படி இருந்திருக்க வேண்டும்?
யுதிஷ்டிரர், பீஷ்ம பிதாமஹரை நோக்கி. “ ஓ! பிதாமஹரே! ஒரு அரசன் எப்படி ஒழுக்கத்துடன் இருந்து மனிதர்களை மேன்மையடையச் செய்து புண்ணிய உலகங்களை ஜெயிப்பான் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டார்.
பீஷ்மர் 36 குணங்களைக் கூறி இவை அரசன் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
1) தர்மத்தை அதன் செயல், நடைமுறைகளோடு முற்றிலுமாக அப்படியே அவன் கடைப்பிடிக்க வேண்டும். அதில் அவன் வெறுப்புடன் அவற்றைச் செய்யக் கூடாது.
2) தர்மத்தைக் கடைப்பிடிக்கும் போது மற்றவருடன் அன்பினால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3) பணமோ அல்லது செல்வ வளங்களோ எதானாலும் சரி அவற்றைக் கொடூர வழிகளில் பெறக் கூடாது.
4) அவன தனது வளங்களை அனுபவிக்கும் போது மிக்க கௌரவத்துடன் இருத்தல் வேண்டும்.
5) அனைவருடனும் கனிவாகப் பேச வேண்டும்.
6) அவன் வலிமை வாய்ந்த மாபெரும் வீரனாக இருக்க வேண்டும். ஆனால் தன் வீரம் பற்றித் தற்புகழ்ச்சியாகப் பேசக் கூடாது.
7) அவன் தானங்களை வெகுவாக வழங்க வேண்டும். ஆனால் தகுதி அற்றவருக்கு வழங்கக் கூடாது.
8) கெட்டவர்களுடன் அவன் ஒரு போதும் பழகக் கூடாது.
9) வீரனாக இருப்பினும் கொடூரனாக இருக்கக் கூடாது.
10) நல்ல நண்பர்களுடன் ஒருபோதும் அவன் சண்டை போடக் கூடாது.
11) தனக்கு விசுவாசமில்லாத ஒருவனை ஒற்றனாக அவன் நியமிக்கக் கூடாது.
12) தனது பணியை மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் அவன் செய்ய வேண்டும்.
13) வெறுக்கத்தக்க மனிதர்களிடம் அவன் தனது பணிகளையும் திட்டங்களையும் அவன் சொல்லக் கூடாது.
14) தனது நற்குணங்களைப் பற்றித் தானே புகழ்ந்து பேசக் கூடாது.
15) தன்னை விட மேலான நற்குணங்களை உடைவர்ளிடமிருந்து, அரிய சிறப்பானவர்களிடமிருந்து அவன் ஒரு போதும் பணத்தைப் பெறக் கூடாது.
16) அயோக்கியர்கள், தரம் தாழ்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து அவன் ஒரு போதும் உதவியைப் பெறக் கூடாது.
17) குற்றம் செய்து விட்டான் என்று சொல்லப்படும் ஒருவனை நன்கு விசாரிக்காமல் அவன் குற்றத்தை உறுதி செய்யாமல் ஒரு போதும் தண்டிக்கக் கூடாது.
18) ரகசிய ஆலோசனைகள் வெளியில் தெரியாதவாறு அவன் செயல்பட வேண்டும்.
19) பேராசையுள்ளவர்களுக்குப் பணத்தைத் தரக் கூடாது.
20) தனக்கு எதிராக தீய செயல்களைச் செய்தவர்களை அவன் ஒரு போதும் நம்பக் கூடாது.
21) தனது மனைவியைப் பொறாமையின்றி அவன் காப்பாற்ற வேண்டும்.
22) அவன் சுத்தமாக இருக்க வேண்டும், தவறற்றவனாகத் திகழ்தல் வேண்டும், மற்றவர்களை வெறுக்கக் கூடாது.
23) பெண்களிடம் அதிகமாக ஈடுபாடு கொண்டு போகம் அனுபவிக்கக் கூடாது.
24) சுத்தமான ருசியான உணவை மட்டுமே அவன் உண்ண வேண்டும். சுவையில்லாத மணமற்ற உணவை ஒருபோதும் உண்ணக் கூடாது.
25) தான் என்ற அகங்கார அணுகுமுறை அவனிடம் இருக்கக் கூடாது, மதிப்பு வாய்ந்தவர்களை மிக்க ஜாக்கிரதையுடன் மதிக்க வேண்டும்.
26) தன்னை விட உயர்ந்தவர்களுக்கு ஏமாற்றாமல் அவன் சேவை செய்ய வேண்டும்.
27) மிக்க தாழ்மையுடன் எளிமையாக அவன் கடவுளை பூஜிக்க வேண்டும்.
28) தவறான வழியில் ஒருபோதும் செல்வத்தைச் சேர்க்கவோ அல்லது சொத்தை அடையவோ முயலக் கூடாது.
29) மிக்க அன்புடன் எப்போதும் அவன் நடத்தல் வேண்டும்.
30) எல்லாப் பணிகளிலும் திறமையானவனாகவும் நிபுணத்வம் கொண்டவனாகவும் அவன் இருக்க வேண்டும். இடையறா பணியில் அவன் தகுந்த ஓய்வு எடுத்துக் கொள்ள மறக்கக் கூடாது.
31) இறுதிச் சடங்குகளில் அவன் போலித்தனமான இரங்கலைத் தெரிவிக்கக் கூடாது.
32) ஒருவனுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர், அவன் வருந்தக் கூடாது.
33) ஒருவனின் தவறை ஊர்ஜிதம் செய்து கொள்ளாமல் அவனை அடிக்கக் கூடாது.
34) எதிரிகளைக் கொன்ற பின் அவன் வருந்தக் கூடாது.
35) திடீரென்று ஒருவனின் மீது தன் கோபத்தைக் காட்டக் கூடாது.
36) தீங்கு செய்தோரிடம் அவன் அன்பு பாராட்டக் கூடாது, இதர மனிதர்களிடன் நட்புடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
*
முழுமையாகப் படிக்க விரும்புபவர்கள் சாந்தி பர்வம் 75ஆம் அத்தியாயத்தைப் பார்க்கலாம்.
***
இப்போது அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு டெஸ்ட்!
உங்களுக்குப் பிடித்த ராஜாவை – அது தான் சார் – இந்தக் கால அரசியல்வாதியை – மந்திரியை – யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலே உள்ள 36இல் அவரை வைத்து உரசுங்கள்.
யூ-டியூபர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்! யூ டியூப்களையும் பாருங்கள்!!
எந்த மாடல் அரசாக முன் வைக்கப்பட்டாலும் அந்த மாடலை அந்த மாடலை முன் வைத்தவரை, அவரது பூர்வீகத்தை அலசி ஆராயுங்கள்!
இன்னொரு கிருத யுகத்தை எதிர் நோக்குவோம் அல்லது நாமேஉருவாக்குவோம்!
****
ஹனி ட்ராப், ஸ்டிங் ஆபரேஷன், நாங்கள் போட்ட பிச்சை நீங்கள், எங்கள் மாடல் அரசு சூப்பர், பாத யாத்திரை, ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் மாதா மாதம் இலவம், இலவசமாகத் தேரில் போகலாம் – ஸாரி, பஸ்ஸில் போகலாம் …… இன்னும், இன்னும், இன்னும்……