I am skipping 50,51,52,53,54, 55 to coincide with at least one book. I will cover them later.
शशी दिवसधूसरो गलितयौवना कामिनी
सरो विगतवारिजं मुखमनक्षरं स्वाकृतेः ।
प्रभुर्धनपरायणः सततदुर्गतः सज्जनो
नृपाङ्गणगतः खलो मनसि सप्त शल्यानि मे ॥ 56॥
ஶஶீ திவஸதூஸரோ கலிதயௌவனா காமினீ
ஸரோ விகதவாரிஜம் முகம் அனக்ஷரம் ஸ்வாக்ருதேஹே |
ப்ரபுர்தனபராயணஹ ஸதததுர்கதஹ ஸஜ்ஜனோ
ந்ருபாங்கணகதஹ கலோ மனஸி ஸப்த ஶல்யானி மே || 1.56 ||
56. The moon pale by day, a lovely woman past her youth, a lake bereft of lotuses, the unlettered mouth (speech) of a handsome man, a powerful man devoted to wealth, a good man ever in misfortune, a wicked man in a king’s court – these are seven barbs in my heart.–56
பகலில் காணப்படும் ஒளியிழந்த சந்திரனும், இளமையைத் தாண்டிய பெண்ணும், தாமரையில்லா குளமும் , பேசத்தெரியாத அழகனும், செல்வச் செருக்குடைய பலவானும் , கஷ்டப்படும் நல்லவனும் , அரசவையிலுள்ள தீயோனும் என் இதயத்தைத் துளைக்கும் ஏழு முள்கள் ஆகும் .
xxxxxx
न कश्चिच्चण्डकोपानामात्मीयो नाम भूभुजाम् ।
होतारमपि जुह्वानं स्पृष्टो दहति पावकः ॥ 57॥
ந கஶ்சிச்சண்டகோபானாம்
ஆத்மீயோ நாம பூபுஜாம் |
ஹோதாரம் அபி ஜுஹ்வானம்
ஸ்ப்ரு ஷ்டோ வஹதி பாவகஹ || 1.57 ||
57. There is no one dear as one’s own, to a king with a fierce temper. The fire, burns even the sacrificer offering oblations, if touched (by him).
கடுங் கோபமுடைய அரசனுக்கு எவனும் நெருங்கிய நண்பன் இல்லை; யாகத் தீயானது வேள்வி வேட்பவன் தொட்டாலும் சுட்டுப் பொசுக்கத்தான் செய்யும்.
அதிகோபங்கொள்ளும் அரசரிடத்தில்
மதியோன் எவனும் மருவான் — விதிசேர்
மகஞ்செய்வோன் தன்னையங்கி வாட்டத் தொடங்கின்
முகங் கால் தெரியாது முன்பு –57
Xxxxx
मौनान्मूकः प्रवचनपटुर्वातुलो जल्पको वा
धृष्टः पार्श्वे वसति च सदा दूरतश्चाप्रगल्भः ।
क्षान्त्या भीरुर्यदि न सहते प्रायशो नाभिजातः
सेवाधर्मः परमगहनो योगिनामप्यगम्यः ॥ 58॥
Xxxx
The norms of serving are complex, incomprehensible even to sages. If silent the servant is labelled dumb, if quick to reply, flippant and loquacious. If he stays close he is called audacious, and if not, diffident. If patient (with rebukes etc.) then he is timid, if not tolerating them, he is discourteous.
Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?–58
வேலையாளின் நிலைமை கஷ்டம்தான்.முனிவர்களுக்கும் புரியாது. வேலைக்காரன் பேசாதிருந்தால் ஊமை என்று இகழ்வார்கள் உடனே பேசினால் வாயாடி பட்டம் சூட்டுவார்கள் ; பக்கத்தில் நின்றால் மரியாதை தெரியாதவன்; தள்ளி நின்றால் தன்னம்பிக்கை இல்லாதவன்; பொறுமையாக இருந்தால் பயந்தவன்; பொறுமை இல்லாவிட்டால் அவமதிப்பவன் என்பார்கள்- 58
மௌனோன் மூகஹ ப்ரவசனபடுர்வாதுலோ ஜல்பகோ வா
த்ரு ஷ்ஹ பார்ஶ்வே வஸதி ச ஸதா தூரதஶ்சாப்ரகல்ஹ |
க்ஷான்த்யா பீருர்யதி ந ஸஹதே ப்ராயஶோ நாபிஜாத ஹ
ஸேவாதர்மஹ பரமகஹனோ யோகினாம் அப்யகம்யஹ || 1.58 ||
பேசாதிருந்தால் பெருமூமையென்று நன்றாய்ப்
பேசினால் வாயாடிப் பேதை என்றும் — ஆசையுடன்
ஒட்டியிருந்தாலச்சம் உட்பயமில்லானென்றும்
எட்டியிருந்தால் எதற்கும் இல்லாத – மட்டியென்றும்
நெஞ்சம் பொறுத்தால் நிலைத்த முரடனென்றும்
கொஞ்சம் பொறானேல் — குலவீனன் வஞ்சநென்றும்
பேரார் துறைகளென்றும் பேசுவர் தஞ்ச சேவகனை
ஆராயுங்காலவர்பால் யாராலும் –சீராகச்
சேவித்தலாகா சிறந்ததவ மாதவ ர்க்கும்
பாவிக்கலாகாதாம் பண்பு –58
—subham—
Tags- Nitisataka part 17, Bhartruhari 17, Slokas 56,57,58
கேரளத்தில் காசர்கோடு அருகிலுள்ள அனந்த பத்மநாப சுவா மி கோவில் குளத்தில் மீண்டும் ஒரு முதலை தோன்றி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது அங்கு வசித்த வெஜிட்டேரியன் முதலை , சரியாக ஓராண்டுக்கு முன் இறந்த செய்தி உலகம் முழுதும் பத்திரிகைகளில் வெளியானது. பபியா என்னும் அந்த முதலை கோவில் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு 70 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சென்ற ஆண்டு அக் டோ பர் 9-ம் தேதி இறந்தது.
இந்தக்கோவில் குளத்தில் ஒரு முதலை இறந்தவுடன் அடுத்த முதலை வருவது அதிசயமாக இருக்கிறது. இப்படி வரும் நாலாவது முதலை இது; இவ்வளவுக்கும் பக்கத்தில் முதலை வசிக்கும் ஆறோ , குளமோ இல்லை. இப்பொழுது கோவில் அர்ச்சகர்கள் இந்த முதலை பற்றி ஒரு முடிவு எடுப்பார்கள்.
The Mahavishnu temple is located at Ananthapura near Kumbla in the northern Kerala district of Kasaragod. The temple is known as the ‘moolasthanam’, the original source, of the Sri Ananthapadmanabha Swamy temple of Thiruvananthapuram, according to its website.
MY OLD ARTICLE
கேரள வெஜிட்டேரியன் முதலையும் மஹாபாரத முதலையும் (Post No.11,348)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 11,348
Date uploaded in London – 12 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
கேரளத்திலுள்ள ஒரு கோவில்குளத்தில் வசித்த சைவ (வெஜிட்டேரியன்) முதலை பபியா (Babia) இறந்த செய்தி நாட்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த இந்த முதலை பற்றிய செய்தி எல்லா முக்கிய பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.
தவறு செய்யும் மனிதர்கள் மிருகங்களாகப் பிறப்பார்கள் என்று மநு நீதி நூல் (Manu Smrti) கூறுகிறது. என்ன என்ன தவறுக்கு என்ன என்ன பிறப்பு என்ற ஒரு பெரிய பட்டியலையும் (Manu 12-54 to 12-70) தருகிறது. மஹாபாரத முதலைக் கதைகளும் இது உண்மைதான் என்று விளம்புகிறது. முதலில் மஹாபாரத முதலைக் கதையைப் பார்ப்போம்.பின்னர் மனு ஸ்மிருதி ஸ்லோகங்களைக் காண்போம் .
மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. பிராமணர்களுக்கு யாரும் தீங்கு செய்யக்கூடாது என்று புறநானுற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரும் (பாடல் 34- பார்ப்பார் தப்பிய கொடுமையோர் )எச்சரிக்கிறார். இது தெரியாமல் ஐந்து தேவ லோக அழகிகள், ஒரு பார்ப்பனனைக் கிண்டல் செய்து முதலைகள் ஆன கதை மிகவும் சுவையானது.
அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும் என்பது தமிழ்ப் பழமொழி. ஆகையால் சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; குப், குப் என்று அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார். குணம் என்னும் குன்றேறி நினறவர்க்கு வெகுளி கணமேயும் காத்தல் அறிதன்றோ ?( வள்ளுவன் குறள் ) ஆகையால் பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.
இந்துமதத்தில் ஒரு பிரம்மாண்டமான உண்மை உள்ளது; அதாவது சத்தியம்தான் கடவுள் (God is Truth; Truth is God) ; அதை கடவுள்களாலும் மீற முடியாது. இதை எல்லாக் கதைகளிலும் காணலாம். சொன்னது சொன்னதுதான். அதை வாபஸ் பெற முடியாது; ‘ஜகா’ வாங்க முடியாது. ஆனால் கொஞ்சம் தளர்த்தாலாம் .
சரி போ; ஒரு பெரிய வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.
பெண்கள் அழுதுகொண்டே நின்றபோது நாரதர் அந்தப் பக்கம் வந்தார். அவர்தான் திரிகால ஞானி ஆயிற்றே ; அவர் சொன்னார்; அஞ்ச வேண்டாம் அழகிகளே ; அர்ஜுனன் என்னும் மாவீரன் 13 ஆண்டுக் கால வனவாசம் அனுபவிக்கின்றான். அவன் இந்தக் குளத்திற்கு வந்து உங்களை விடுவிப்பான் என்று ஆறுதல் பகன்றார்.
அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அவர்கள் வசித்த குளத்திற்கு அருகில் வந்தான்.; யாரையும் காணவில்லை ; அற்புதமான அழகுமிக்க இந்தக் குளத்திற்கு யாரும் குளிக்க வரவில்லையே; நான் மட்டும் போகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த காலையில் ஒருவர் வந்து சொன்னார். இந்தக் குளத்தில் மனிதர்களைத் தின்னும் அதிபயங்கர முதலைகள் (Man eating Crocodiles) வசிக்கின்றன. ஆகையால் பிராமணர்கள் அனைவரும் ஓடிப் போய்விட்டார்கள் என்று. அதைக் கேட்டவுடன் அர்ஜுனன் குளத்தில் பாய்ந்தான்; பிராமணர்களை விரட்டிய முதலைகளை நான் ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்லி குளத்தில் இறங்கினான்.
உடனே ஐந்து முதலைகளும் அவன் மீது பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான். அபோது வர்கா என்னும் பேரழகி, முதலை உருவத்தைவிட்டு, மீண்டும் அழகியாக அர்ஜுனன் முன்னிலையில் நின்றாள்; வியப்புடன் வினவினான் அர்ஜுனன் : ‘மடக்கொடியே, யார் நீ’ ? உடனே அவள் பிராமண சாபம், பார்ப்பார் தப்பிய கொடுமை எல்லாவற்றையும் விரித்துரைத்தாள் . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .
பின்னொரு காலத்தில் அர்ஜுனன், மாதலி என்பவன் ஒட்டிய ஸ்பேஸ் ஷட்டிலில் Space Shuttle – (விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ராக்கெட்) — இந்திர லோகம் சென்றான். அவன் செய்த விண்வெளி பயணம் பற்றிய கதை மகா பாரத வன பர்வத்தில் உள்ளது . அப்படிச் சென்ற போது ஐந்து தேவ லோக அழகிகளும் அர்ஜுனனை அடையாளம் கண்டு கொண்டனர் ; உடனே செய் நன்றி மறவாமல் அர்ஜுனனுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஷோ Special Dance showஏற்பாடு செய்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர்.
Kasargod, Nov 11, 2023: Thirteen months after the death of crocodile Babiya, another crocodile has been spotted at at Ananthapura Lake Temple here. This is a cause of surprise among the devotees.
Babiya had a history in the temple and worshiped for 75 years. However, it died on October 9, 2022.
Devotees believed that Babiya used to guard Lord Anantapadmanabha. It used to live in the pond throughout the year. The food that is offered to the Lord is its daily meal. It used to crawl on the same path on which the devotees used to walk from one pond to another pond.
The temple got international popularity because of Babiya, which never harmed anyone. A crocodile was there in the temple pond even before India got independence. However, the British, who set up their military camp in the area shot and killed it. Later, a baby crocodile appeared in the pond and the temple priests named it Babiya.
The development assumes significance, as according to a temple official, there was always a lone crocodile in the lake and the latest one would be the fourth.
“When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the temple has said on its website.
Year After ‘Vegetarian’ Crocodile’s Death, Another One Appears At Kerala Temple
According to temple officials, Babia was a vegetarian and subsisted on the ‘prasadam’ made there.
The Mahavishnu temple is located at Ananthapura near Kumbla in the northern Kerala district of Kasaragod. The temple is known as the ‘moolasthanam’, the original source, of the Sri Ananthapadmanabha Swamy temple of Thiruvananthapuram, according to its website.
“By tradition, the lake is inhabited by a single crocodile and in the memory of the very aged men the present crocodile happens to be the third one they have seen. When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the website stated.
“There is no river or pond nearby where crocodiles exist. The crocodile is friendly and harmless to human beings. Its presence in the lake around the Mahavishnu temple reminds one of the well-known Gajendra Moksha stories in the Bhagavatha Puranam,” according to the temple’s website.
“When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the temple has said on its website.
The new crocodile was spotted in a cave along the lake on November 8 by some devotees, the temple official said.
After the devotees informed the temple about the presence of the crocodile, the temple officials on Saturday verified its presence.
“It is a young crocodile. We have informed the tantri (head priest) of the temple and he will decide what needs to be done next,” the temple official said.
The earlier crocodile, fondly called Babia, was found dead on October 9, 2022.She was the third crocodile in the lake and was believed to be over 70 years old.
1.தீபாவளிக்கும் எந்த அசுரனுக்கும் தொடர்பு படுத்தும் கதை உள்ளது? அவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் ? அவனைக் கொன்றது யார்?
XXX
2.தீபாவளியை சமண மதத் த்தினர் ஏன் கொண்டாடுகிறார்கள்?
XXX
3.தீபாவளி அன்று கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்பது ஏன் ?
XXX
4. தீபாவளியை சீக்கியர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?
xxxx
5.தீபாவளி என்பதைப் பேச்சு வழக்கில் DIWALI திவாளி என்பர். இந்தச் சொல்லின் பொருள் என்ன ?
xxx
6.தீபாவளி அன்று காசியில் என்ன விசேஷம்?
xxx
7.தீபாவளி மருந்து என்றால் என்ன ?
xxxx
8.அன்ன கூட விழா என்றால் என்ன ?
XXX
9.அயோத்திக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?
XXXX
10.குஜராத்தில் எத்தனை நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது?
XXX
ANSWERS
1.தீபாவளிக்கும் நரகாசுரன் என்ற அசுரனுக்கும் தொடர்புள்ள கதை தென்னாட்டில் வழங்கி வருகிறது. அவனை ,கிருஷ்ண பரமாத்மா கொன்றார். காம ரூபத்திலுள்ள ப்ரகஜோதிஷ நகரிலிருந்து அவன் ஆண்டான். இப்போது அதை அருணாசல பிரதேசம் அஸ்ஸாம் என்று பிரித்துள்ளோம்.
XXX
2.சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர்; அவர் முக்தி அடைந்தது தீபாவளி தினத்தில்தான். மேலும் சமணர்களின் ஆண்டு நிறைவடைவதும் அன்றுதான்.
xxxx
3.நரகாசுரனின் தாயின் வேண்டுகோளின்படி அன்று எந்த நீரில் குளித்தாலும் அதில் கங்கை பிரவேசிக்கிறாள்; ஆகையால் கங்கை யில் குளித்து விட்டீ ர்களா என்று கேட்பது சம்பிரதாயம்
XXXX
4.சீக்கிய மதத்தின் ஆறாவது குரு ஹரி கோவிந்த சிங்; அவரை ஜஹாங்கீர் சிறை வைத்தியிருந்தான்.தீ பாவளி தினத்தன்று அவரையும் 52 சீக்கியர்களையும் அவன் விடுதலை செய்தான். அவர் திரும்பி வந்ததைக் கொண்டாட அன்றைய தினம் சீக்கியர்களும் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்தனர். இன்றும் அவ்வாறே கொண்டாடுகின்றனர்.
.xxx
5.தீப +ஆவலி / ஆவளி என்றால் விளக்கு வரிசை என்று பொருள்; அன்றைய தினம் வட இந்தியாவில் , கார்த்திகை அன்று தமிழர்கள் விளக்கு ஏற்றுவது போல விளக்கு ஏற்றுவார்கள் .
xxxx
6.அன்று அன்னபூரணியின் தங்க விக்ரகம் தரிசனத்துக்கு வைக்கப்படும். மற்ற நாட்களில் அது, ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. .xxx
7.தீபாவளி அன்று பலவகை பலகாரங்களையும் இனிப்புகளையும் சாப்பிடுவதால் வயிற்றுக்கு கோளாறு, அஜீரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஜீரண சக்தியை அதிகரிக்க, தீபாவளி மருந்து என்னும் ஸ்பெஷல் லேகியத்தை அன்று உண்ணுவது வழக்கம்; அது அரிசித் திப்பிலி, கண்ட ந் திப்பிலி , சுக்கு, ஜீரகம், வெல்லம், மிளகு, கிராம்பு, ஓமம், தேன் , வெண்ணெய் ஆகியவற்றால் ஆகிய லேகியம் ஆகும்;. அதை ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிடுவார்கள் . அது சாப்பிட ருசியாக இருக்கும்.
XXXX
8.தீபாவளியின் நாலாவது நாளன்று கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க ஏராளமான இனிப்புகளையும் பல காரங்களையும் கோவிலில் வந்து மலைபோலக் குவிப்பார்கள்.அன்றுதான் பெரிய மழையிலிருந்து இடைச் சிறுவர்களை கிருஷ்ணன்,காப்பாற்றினான். கோவர்த்தன மலையைக் குட்டையாகப் பிடித்து தோழர்களைக் காப்பாற்றியதால் அந்த நாளுக்கு கோவர்த்தன பூஜை என்று பெயர்.
XXXX
9.ராம பிரான், இலங்கையில் ராவணனனைக் கொன்றுவிட்டு அன்று அயோத்திக்குத் திரும்பியதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆகையால் அன்று அயோத்தியில் உலகம் வியக்கும் எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழி படுவர்.
XXXX
10. குஜராத்தில் ஐந்து நாட்களுக்குத் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் .தீபாவளிக்கு முன்னரே இந்தப் பண்டிகை துவங்கிவிடுகிறது. உணவு வகைக்களை தயாரிப்பார்கள். பசுக்களை வழிபடுவார்கள்;பழைய கணக்குகளை முடித்து புதுக்கணக்கு துவங்குவர். லெட்சுமி பூஜை செய்வார்கள் . காளி பூஜை, அனுமான் வழிபாடு நடக்கும் ; அன்ன கூட விழா ஆகியனவும் நடைபெறும். கேரளத்தில் ஓணம் பண்டிகையின்போது மகாபலியை வரவேற்பது போல வரவேற்பார்கள் ; மலையாளிகள் போலவே கிராமப்புறங்களில் புலி வேஷம் போட்டு ஆடுவார்கள் பட்டாசு வெடித்தல், விளக்கு ஏற்றுதல், அந்தக் கரியில் கண்ணுக்கு மை தயாரித்தல், இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் , புத்தாடை அணிதல் எல்லாம் நடக்கும்; புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிப்பார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓணம் , பொங்கல், புத்தாண்டு தினம், அன்னாபிஷேகம், தீபாவளி ஆகிய அனைத்தையும் 5 அல்லது 6 நாட்களில் கொண்டாடிவிடுவார்கள்.
மகாராஷ்டிரம், கர்நாடகம், இலங்கை ஆகிய இடங்களில் உள்ள 108 கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி முடித்துவிட்டேன். இப்பொழுது, இந்தத் தீபாவளித் திருநாளில் (12-11-2023), காலடி ஆதிசங்கரனையும், குருவாயூரில் குடிகொண்ட கிருஷ்ணனையும், உலகிலேயே பிரம்மாண்ட பொக்கிஷமுள்ள திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியையையும் திருச்சூர் வடக்கு நாதனையும், , செங்கானூர் பகவதியையும் , கொட்டாரக்கரை கணபதியையும், சபரிமலை சாஸ்தாவையும் வணங்கி கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள் பற்றி எழுதத் துவங்குகிறேன் ; இதை முடித்தவுடன் ஆந்திர மாநில கோவில்களையும் தரிசிப்போம்
கேரளம் என்று சொன்னவுடன் சபரிமலையும் , குருவாயூரப்பனும் , திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியும், பல பகவதி அம்மன் கோவில்களும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் . ஆயினும் வெளி மாநிலங்களில் மிகவும் பிரசித்தமாகாத நூற்றுக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. பட்டியலைப் பார்த்தால் நன்றாகப் புரியும் முதலில் முக்கியக் கோவில்களை எடுத்துக்கொள்வோம்.
கேரளத்தில் உள்ள பாடல்பெற்ற தலங்கள்
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் கேரள வைணவ ஸ்தலங்கள் பற்றிக் கூறுவதை படியுங்கள் :–
“108 வைணவத் திருத்தலங்களில் 11 தலங்கள் கேரளத்தில் இருக்கின்றன. நம்மாழ்வார் பாடல்பெற்ற தலம் திருவட்டாறு. அவருடைய அன்னை பிறந்த ஊர் திருவெண்பரிசாரம். இவை அன்றைய கேரளமாகிய (தற்போதைய ) குமரிமாவட்டத்தில் உள்ளன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxxx
மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
வாரணாசியிலோ (காசி) கங்கா ஆரத்தி என்ற பெயரில் கங்கை நீரில் தீப வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கில் தீபங்கள் கங்கா நதியில் ஜொலிக்க தூய்மையான கங்கை நீர் அனைவருக்கும் வளத்தையும் நலத்தையும் தூய்மையையும் அளிக்கிறது.
சிந்தி சமூகத்தினரோ சோடீ தீபாவளி என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாளே அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்கின்றனர்.
ஒரிஸாவில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் சிவ-பார்வதி வழிபாடு நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் ‘மோக்ரா மாதா சேவா’ என்ற பெயரில் மல்லிகை மலர்மாலைகள் தேவிக்குச் சூட்டப்படுகின்றன.
கோவாவில் நரகாசுர ராத்ரி என்ற பெயரில் நரகாசுரனின் பெரிய அளவு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு மறம் அழிந்து அறம் ஓங்க மகிழ்ச்சி பொங்குவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்கள் நலத்தையும் பாதுகாப்பையும் கோரும் விழாவாக இது அமைகிறது.
வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு காளி வழிபாடு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளிலும் தீபாவளி
இந்திய நாகரிகத்தின் உச்ச கட்ட பண்டிகையாக அமையும் இது, பல நாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுவது, தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.
நேபாளத்தில் திஹார் என்ற பெயரில் இது கொண்டாடப்படுவதோடு, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கு மற்றும் பறவைகளை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் நேபாள மக்கள்.
இந்தியாவில் இது தேசிய விடுமுறை தினம் என்பது போல டிரினிடா & டுபாகோ, மயன்மார், மரிஷியஸ், கயானா, சுரிநாம், நேபாளம், மலாசியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா, பிஜி உள்ளிட்ட 12 நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அமைகிறது. மக்கள் உற்சாகமாக தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிலோ இது விருப்பத் தேர்வு விடுமுறை தினம்!
இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்திலும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவிலும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதும் மேற்கத்திய லீசெஸ்டர் நகரம் வண்ண விளக்குமயமாக தீபாவளி அலங்காரம் செய்யப்படுவதும் உலகளாவிய பண்டிகை இது என்பதற்கான சான்றுகளாகும்.
சிவகாசியின் சிறப்பு
தீபாவளி அன்று வெடி வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெடியைத் தயாரிக்க ஏற்படும் அதிகத் தயாரிப்புச் செலவினால் செல்வந்தர்கள், பிரபுக்கள், அரசர்கள் ஆகியோரால் மட்டுமே வெடி வெடிக்க முடிந்தது. ஆனால் இதை அனைவரும் கொண்டாட வழி வகை செய்ய முன்வந்தது தமிழகத்தில் உள்ள சிவகாசி. விதவிதமான பட்டாஸ் வகைகள் மிக மலிவான விலையில் அளிக்கப்படவே உலகெங்குமுள்ள மக்கள் சிவகாசி வெடிகளை வாங்கி வெடித்து வருகின்றனர். இன்று நமது நாட்டில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் அனைவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்கிறது சிவகாசி என்பதால் தமிழகம் தீபாவளி வணிகத்தில் தனி இடத்தைப் பெறுகிறது.
இசைக் கலைஞர்கள் புது வித மெட்டுகளில் இசைப் பாடல்களை வெளியிட தீபாவளி ரிலீஸ் என்று மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும் சிறந்த கலைஞர்களின் திரைப்படங்கள் தியேட்டர்களை அலங்கரிக்க ரசிகர்கள் அங்கு முற்றுகை இடும் நாளாகவும் இது அமைகிறது. ஓவியர்கள் தீபாவளியை மையப்படுத்தி ஏராளமான ஓவியங்களை வெளியிடும் நாளும் இதுவே தான்.
பத்திரிகைகளோ தீபாவளி மலர்களை வெளியிட்டு வாசகர்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன!
பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான உற்சாகப் பண்டிகை இது. ரங்கோலி கோலங்கள் வண்ண மயமாக வீடுதோறும் திகழ, புதிய பட்டாடைகள், விதவிதமான டிஸைன் துணிகள் என குழந்தைகளை அலங்கரிக்க இனிப்பு வகைகள் ஏராளமாக விதவிதமாகக் கிடைக்க இதுபோல் ஒரு பண்டிகை இன்னொன்று இல்லை என்ற பெயரைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது தீபாவளி.
பாரதியாரின் தேசபக்தியூட்டும் தீபாவளிக் கட்டுரை
பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக தீபாவளி நன்னாள் பற்றி மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார் இப்படி;-
“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம். சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்
தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.
நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான். பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.
நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.
ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.”
இதைத் தொடர்ந்து “தீபாவளி தினத்திலே கூட அந்நியத் துணிகளை வாங்கும் ஈஸ்வர துரோகிகளை” கண்டித்து தேசபக்தியை ஊட்டி ‘வந்தேமாதரம்’ என்று முடிக்கிறார் அவர் தனது தீபாவளி தலையங்கத்தை!
வாழ்த்துக்கள்
இந்த நன்னாளில் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், மன திருப்தி, குடும்ப ஒற்றுமை, தைரியம், வீரம், மறத்தை ஒழித்து அறத்தை வெல்லச் செய்யும் வலிமை,உற்சாகம், சமுதாய மேன்மை ஆகியவற்றைப் பெறச் செய்யும் தீபாவளி நன்னாளில் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற மாலைமலருடன் இணைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன்.
47. O Eminent cloud! Who does not know that you are the sole life-support of the Chataka birds? Why then do you wait for our pitiful entreaties?
ஓடும் மேகங்களே! சாதகப் பறவைகளுக்கு ஆதாரமாக இருப்பது நீ ஒன்றுதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.அப்படியிருந்தும் எங்கள் தாக்கத்தைத் தணிக்க மழை கொட்டட்டும் என்று நாங்கள் வேண்டவும் தேவையா ?
48. O Chataka, my friend! Listen attentively for a moment. There are many clouds in the sky, yet not all of them are such (worthy of asking). Some drench the earth with showers, some simply roar in vain. Do not utter pitiful words before everyone you see.
ஓஒ சாதகப்பறவையே ! கத்தித் தீர்ப்பதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கேள் வானத்தில் எவ்வளவ் மேகங்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் ஒன்றேயல்ல சில மேகங்கள் பூமி முழுதும் நனையுமாறு கொட்டித்தீர்க்கின்றன. இன்னும் சில வெற்று இடியோசை செய்துவிட்டு ஒரு சொட்டுத் தண்ணீர் விடாமல் போய்விடும். ஆகையால் நண்பனே! நீ எல்லா மேகங்களுக்கு முன்பாக வும் தண்ணீருக்காக கூவாதே
சாதகப் பறவை வானத்தில் பற ந்தவாறே மழை நீரை மட்டுமே உண்ணும் என்பது ஸம்ஸ்க்ருத , தமிழ் செய்யுட்களில் வரும் விஷயம் ஆகும். இங்கே பர்த்ரு ஹரி இரண்டு விஷயங்களை நம் முன் வைக்கிறார்.
உண்மையான கொடையாளி, ஒ ருவன் கேட்கும் வரை காத்திருக்கத் தேவை இல்லை; வறுமை உள்ளவனுக்கு வாரி வழ ங்குவது அவன் கடமை;
இரண்டாவது பாடலில் கொடாதோரை இடித்துரைக்கிறார். சிலர் வெறும் வாய்ச் சவடால் அடிப்பார்கள்; பைசா காசு கூட கொடுக்கமாட்டார்கள்; இன்னும் சிலர் கர்ணன் போல, பாரி போல அனைத்தையும் கொடுப்பார்கள்
49. Ignorance is ascribed to a modest man, deceit in an austere man, hypocrisy to a pure man, ruthlessness to a brave one and lack of intelligence to an ascetic. Poverty or need is attributed to one who speaks sweetly, arrogance to a powerful one, garrulity to an eloquent speaker and incompetence to a strong, calm man. Which virtue of good people is not maligned by the wicked?
அடக்கமாக இருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாதவன் எளிமையாக இருப்பவனுக்கு அகந்தைப் பேர்வழி , தூயவனுக்கு கபட வேஷதாரி கருணையே இல்லாதவனுக்கு துணிச்சல்காரன் அறிவே இல்லாதவனுக்கு ஞானி என்ற பெயரை தீயோர் சூட்டுவர்; இனிமையாகப் பேசினால் ஏதோ எதிர்பார்க்கிறான் என்றும் வீரா ப்புடன் பேசினால் திமிறு பிடித்தவன் என்றும் நன்றாகப் பேசினால் வாயாடி என்றும் அமைதியாக இருந்தால் கையாலாகாதவன் என்றும் கெட்டவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் திட்டாத ஆளும் உண்டோ !
Before continuing with C S Navartnam’s pages to show Brahmin’s role in Sri Lanka, I want to add what Mudaliyar C Rasanayagam says in his book ANCIENT JAFFNA (Year 1926).
He says that Arya Chakravarti Dynasty which ruled Northern Sri Lanka for 400 years had Brahminical origin. They were the one who established Hindu Samrajya in Sri Lanka like Shivaji in India. But the great Vijayanagara Hindu Empire and Veera Sivaji’s Hindu Samrajya wiped out Muslim invaders; in Sri Lanka it was quite opposite; Portuguese, Dutch (Holland) and British demolished all Hindu Temples and converted a lot of Hindus after killing the last Arya Chakravarti. They were Christian fanatics. Then Hindu Renaissance happened in the nineteenth century and Saivite saint Arumuga Navalar and Tamil Nagarathar Chettiyars helped to re construct Hindu temples.
Arya Chakravarti has two Sanskrit words. This Arya has nothing to do with the wrong interpretation of Max Muller gang. They said that Aryans came from outside India. But Tamil and Sanskrit scriptures never gave an ethnic connotation to the word or attributed outside origin. They used ARYA for Himalayan saints, speakers of refined language, and civilized and cultured people in general.
Rasanayagam says there was another Malava Chakravarti as commander and this Arya Chakravarti was a minister cum commander in Rameswaram. At that time, that is 800 years ago, Rameswaram was under Sri Lankan kings. Interpreting an inscription at Tiruppullani near Rameswaram, he said that this Arya Chakravarti married a Kalinga princess living in Jaffna. His descendants were called Arya Chakravarti and he used both her and his royal titles and symbols. Singai Aryan or a handicapped king known as Koolangai Chakravarti was the first king.
First let me give Rasanayakam’s page and then continue with Navaratnam pages:
சிவாஜி மஹராஜ், இந்தியாவில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியது போல இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை நிறுவியவர்கள் ஆரிய சக்கரவர்த்திகள்; 400 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார்கள் . போர்ச்சுகீசிய , டச்சு (ஹாலந்து நாடு), பிரிட்டிஷ் பறங்கியர்கள்கள் இலங்கையை ஆக்ரமித்து இந்து மதத்தை எள்ளி நகையாடும் வரை, ஆரிய சக்கரவர்த்திகள் இடிபட்ட 500 கோவில்களையும் புனர் நிர்மாணித்தார்கள் . இந்த சக்ரவர்த்திகளின் தோற்றம் பிராமண தொடர்புடையது. இவர்கள் ராமேஸ்வர பகுதியிலிருந்து வந்தவர்கள். முதல் சக்ரவர்த்தி 50 சதவிகித பிராமணன்; ராவணனைப் போல 50 சதவிகித பிராமணன்.
ஆரிய சக்ரவர்த்தி என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும். இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களும் இந்திய மன்னர்களின் பெயர்களில் கூட கிடையாது. ஆரிய என்றால் இனம் அல்ல.பண்பாட்டின் உயர்மட்டத்தை அடைந்தவர்கள் என்று பொருள். அதாவது ஆங்கிலத்தில் CIVILIZED சிவிலைஸ்டு, CULTURED கல்ச்சர்ட் என்று சொல்லுவார்கள்; மாக்ஸ்முல்லர் கும்பல் இதை மாற்றி இவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளைக்காட்டி அங்கிருந்து வந்தவர்கள் என்று சொல்லி வரலாற்றையே தலைகீழாக மாற்றியது. இந்திய பூமியில் உதித்து ஈரான் வரை சென்றவர்கள் ஆரியர்கள் என்பதை பாரசீக மதத்தினரின் வேத புஸ்தகம் ZEND AVESTA சென்ட் அவஸ்தா காட்டுகிறது
யாழ்ப்பாண ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள தொடர்பில் எவருக்கும் சந்தேகம் இல்லை; யாழ்ப்பாண சக்கரவர்த்திகள் முதலாமவர் சேதுக்கரை என்னும் ராமேஸ்வரம் , திருப்புல்லாணிப் பகுதியி லிருந்து வந்தவர்கள் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. யாழ்ப்பாண மன்னர்களே ராமேஸ்வரம், திருப்புல்லாணியில் செய்த கோவில் திருப்பணிகளையும் அவ்விரு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. முதலாவது ஆரிய சக்ரவர்த்தி பிராமண க்ஷத்ரியருக்கும் பிறந்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
யாராவது ஒரு மன்னனுக்கு அங்கஹீனம் இருந்தால், அதை வைத்தே மக்கள் அவனை அடையாளம் காண்பர்; நின்ற சீர் நெடுமாறன் முதலில் கூன் பாண்டியனாக இருந்தான்; அவனை மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த சின்னப்பையன் விபூதி தடவி வழுதி கூனை நிமிர்த்தினான். அந்தச் சின்னப்பையன் திருஞான சம்பந்தன் இல்லாவிடில் இந்தியாவிலும் இலங்கையிலும் சைவ சமயம் இருந்திராது. அவனுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் , கீரந்தை என்னும் பிராமணன் வீட்டைக் காப்பதற்காக தனது கையையே வெட்டிக்கொண்டான் . பின்னர் சித்த, ஆயுர் வேத நிபுணர்கள் வந்து அவனுக்கு ஆபரேஷன் செய்து தங்கக் கையைப் பொருத்தினர் . அந்த மன்னன் பெயரே நமக்குத் தெரியாது ஆனால் பொற்கைப் பாண்டியன் என்றால் நமக்கு உடனே தெரியும். அவன் கதை பழைய காப்பியங்களில் வருவதால் அவன் சங்க கால மன்னன் என்று நமக்குத் தெரிகிறது.
இஃதே போல யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் மன்னனுக்கு Polio Attack போலியோ தாக்குதல் காரணமாக குறுகிய கை இருந்தது. அவனை கூழங்கை சக்ரவர்த்தி என்று அழைத்தனர்.
சரி, முதல் சக்ரவர்த்தி, ராவணனைப்போல 50 சதவிகித பிராமணன்.
என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?
முதலியார் சி ராஜநாயகம் புராதன யாழ்ப்பாணம்ANCIENT JAFFNA, MUDAIYAR C. RASANAYAGAM, 1926 என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் திருப்புல்லாணி க் கல்வெட்டையும் மஹா வம்சக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பின் வருமாறு கூறுகிறார் மாளவ சக்ரவர்த்தி என்பவர் முன்னர் இலங்கையுடன் சண்டையிட்டதையும் குறிப்பிட்டுவிட்டு அவர் சொல்வதாவது–
ராமேஸ்வரத்திலுள்ள ஒரு பிராமணர் யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்சத்து உக்ர சிங்கனின் இளவரசி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, தந்தை வழி பெயரான ஆர்ய என்பதையும் வைத்துக்கொண்டார் பெண்வழி வம்சப் பெயரான கலிங்கத்தையும் வைத்துக்கொண்டார் என்பது தெரிய வருகிறது . சேது என்ற பெயரையும் கலிங்க வம்ச சின்னங்களையும்( ராஜ முத்திரை ) வைத்துக்கொண்டனர் .
ஆர்ய சக்ரவர்த்தி என்பது ஒரு படைத்தளபதியின் பெயர் ;
மஹாபாரத துரோணர் , அஸ்வத்தாமன் காலத்திலிருந்தே பிராமணர்கள் படைத் தளபதிகளாகவும் இருந்ததை அறிகிறோம். இதனால் முதல் மன்னர் 50 சதவிகித பிராமணர் என்பதில் வியப்பதற்கொன்றுமில்லை.. ஆயினும் ஆட்சி என்று வருகையில் அ வர்கள் க்ஷத்ரியனாகவே (கலிங்க வம்சம்) காட்டிக்கொள்வார்கள்.
உலக வரலாற்றில் சிங்கமே இல்லாத, சிங்கத்தையே பார்த்திராத சிங்கபுரி (சிங்கப்பூர்), இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளின் கொடி அல்லது சின்னத்தில் சிங்கம் இருப்பதற்குக் காரணம் இந்துக்கள் உலகம் முழுதும் வீறு நடை போட்டதே.
இந்துக்களின் ஆதிக்கம் ஐரோப்பா வரை பரவியதால், சிங்கமே இல்லாத ஐரோப்பாவில் ஜுவலியஸ் சீசர்/CAESAR அகஸ்டஸ் சீசர் என்று சிங்கத்தின் அடைமொழியை சேர்த்து க்கொண்டனர். கேசரி ( கேச + அரி = மயிர் மிருகம் ) என்பதை ரோமன் லிபியில் எழுதுகையில் கேசர்= சீசர் ஆகிவிடும் ; இன்றும் நான் சார்ல்ஸ் CHARLES என்றும் கேரக்டர் CHARACTER என்றும் C சி எழுத்தை மாறி மாறி பயன்படுத்துவது இந்த சி குழப்பத்தால்தான்.
இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கை நகர், சிங்கை ஆரியன் ஆகிய எல்லாம் இந்தியத் தொடர்புள்ள கலிங்க வம்சம் என்பதைக்காட்டவே.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பது பாண்டிய + கலிங்க கலப்பு ரத்தம் உடையவர்கள். மஹா வம்சமும் ஓரிடத்தில் இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுகையில் ஆரியன் அல்லாத என்ற சொற்றோடரைப் பயன்படுத்தக் காரணம் அந்த இளவரசி யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்ச அரசி என்பதால்தான்.
இவ்வளவையும் படிக்கையில் இலங்கையின் முதல் மன்னனே கலிங்க வம்சத்தவன் எனபதையும் மறந்துவிடக்கூடாது ; கலிங்கம், வங்கம் என்பன அடுத்தடுத்தது உள்ள பிரதேசங்கள்; அவனைக் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விரட்டிவிட்ட இடம் வாங்க மாநில துறைமுகம்; வங்கம் என்றால் கப்பல்; அது புறப்பட்ட மாநிலத்துக்கே இப்போது வங்கம் என்று ஆகிவிட்டது. பழைய தமிழ் பாடல்களில் வங்கம் என்ற சொல் கப்பல் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது கப்பல் கீழைக்கடலை நாம் இன்றும் வங்காள விரிகுடா என்றே அழைக்கிறோம் ; வளைந்த (BANGA/ BEND/ VANTHANA/ VANANGUTHAL are cognate words) எல்லாப் பொருளும் வங்கம் ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே
– தீப ரகசியம் பற்றி திருமூலர் ஏழாம் தந்திரம் – 10
உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா ஆ ஆ ஆ ஆ
உறவாடும் நேரமடா!
-கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அறம் வெல்லும் திருநாள்
உலகின் பல நாடுகளிலும் இப்போது தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
அறத்திற்கும் மறத்திற்குமான போரில் அறம் வென்ற நாள் இது.
மலர்ச்சி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஒளி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், மேன்மை உள்ளிட்ட ஏராளமான நலன்களை தீப ஒளி போல வரிசையாகத் தருவதால் இது தீபாவளி ஆகிறது. தீபம் + ஆவளி = தீப வரிசை)
லட்சுமி தேவி பாற்கடலில் அவதரித்த நாள் இதுவே.
இந்த நன்னாளில் லட்சுமி தேவி சர்வ அலங்காரபூஷிதையாக பூமியில் வருகிறாள். அவளை இல்லந்தோறும் வரவேற்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் அழுக்குகளையும் குப்பைகளையும் போக்கி, வீட்டை, தீப ஒளி ஏற்றி, பிரகாசமாக வைத்து புத்தாடை புனைந்து தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்டிரும் ஆண்களும் குழந்தைகளும் வெடி வெடித்து இனிப்பு வழங்கி லட்சுமியை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர்.
லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
ஐந்து தினக் கொண்டாட்டம்
தீபாவளியை ஐந்து தினங்களாக வடக்கே கொண்டாடுகின்றனர்.
முதல் நாள் ‘தன் தேரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. தன் என்றால் பணம் அல்லது செல்வம் தேரஸ் என்றால் திரயோதசி திதியைக் குறிக்கிறது. செல்வத்தை வரவேற்கத் தயாராகும் நாள் இது. தன்வந்திரி பாற்கடலிலிருந்து வெளிவந்து அவதரித்த தினம்.துளசி செடியின் அருகில் இருந்து யமனை வழிபடும் தினமாக இது அமைகிறது.
அடுத்த நாள் நரக சதுர்தசி. இது கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்த நாள்.
அடுத்த நாள் அமாவாசை – தீபாவளித் திருநாள். லட்சுமி பூஜை தினம்.
அதற்கடுத்த நாள் கோவர்தன் பூஜை தினம்.
கடைசியாக பாய் துஜ் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் யமன் தனது சகோதரியான யமுனையை சென்று பார்த்த நாள். இந்த நாளில் எந்த சகோதரன் தனது சகோதரியைச் சென்று பார்க்கிறானோ அவனுக்கு அனைத்துப் பாவங்களும் போய்விடும் என்று யமன் அனுக்ரஹித்தான்.
குபேர பூஜையை அனைத்து இல்லங்களும் சிறப்பாகச் செய்து செல்வ வளத்தைப் பெற வழி வகுப்பது தீபாவளி பண்டிகை தினங்களே!
நரகாசுரனின் வதமும் இராமன் அயோத்தி திரும்புதலும்
நரகாசுரன் தனது தாயான பூமிதேவி மட்டுமே தனக்கு மரணத்தைத் தர முடியும் என்ற வரத்தை வாங்கிக் கொண்டான். அகங்காரம் தலைக்கு ஏற அட்டகாசம் செய்து அனைவரையும் அவன் கொடுமைப்படுத்த தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனை வேண்ட சத்யபாமை பூமிதேவியின் அம்சமாகத் தோன்றி கண்ணபிரானுடன் சென்று அவனுடன் போரிடுகிறாள். நரகன் எய்த அம்பு கண்ணபிரானை மார்பில் தாக்க, சத்யபாமை கண்ணனைக் காப்பாற்றித் தானே நரகாசுரனை வதம் செய்ய உதவுகிறாள். நரகாசுரன் தனது பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தான் இறந்த இந்த நாளை புவியில் உள்ளோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளாக அமைய வரம் வேண்ட கண்ணன் அப்படியே அருள்கிறான். அதிலிருந்து தீபங்களை ஏற்றி ஒளிமயமாக இந்த நாளை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
இராமபிரான் இராவணனை வதம் செய்து அயோத்தி மீண்டு அரியணை ஏறிய நாள் தீபாவளி நன்னாளே. ஆகவே நாடு முழுவதும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளி என்பதால் மக்கள் அவர்களை தீபங்களை ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்து வரவேற்றதும் தீபாவளி நன்னாளிலேயே!
விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த நாள் தீபாவளியே.
ஜைன, புத்தம், சீக்கியம் கொண்டாடும் தீபாவளி
ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மஹாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி தினமே. ஆகவே ஜைனர்கள் இந்த தினத்தை புனித நாளாக அனுஷ்டிப்பதோடு தமது முன்னோர்களையும் இந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.
முகலாய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த சிங் இந்த நாளில் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆகவே சீக்கியர்கள் இதை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் அவருடன் 52 மன்னர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆகவே அந்தந்த மன்னர் ஆண்ட பிரதேசங்களிலும் இது வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலிங்கத்துப் போரினால் மனம் மாறி அஹிம்சையை வலியுறுத்தும் புத்தமதத்தை அசோகன் தழுவியது இந்த நாளில் தான். ஆகவே புத்தமதத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.
கந்தபுராணத்தின் படி சக்தி தேவியானவள் 21 நாள் விரதம் அனுஷ்டித்து தனது கேதாரகௌரி விரதத்தை முடித்த நாள் இதுவே.
அன்றே சிவபிரான் தேவியை தனது தேகத்தில் பாதியாக ஏற்று அர்த்தநாரீசுவரர் ஆனார். ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நாளைப் போற்றித் துதிக்கின்றனர்.
விவேகானந்தரால் உத்வேகம் பெற்று கணிதப் பேராசிரியராக இருந்த ஸ்வாமி ராமதீர்த்தர் சந்யாசம் பெற்றது (1899இல்) தீபாவளித் திருநாளிலேயே. இவர் பிறந்ததும் தீபாவளித் திருநாளில் தான் (22-10-1873). ஜலசமாதி அடைந்ததும் ஒரு தீபாவளி நாளில் தான் (17-10-1906)! இப்படி பல மகான்களுடன் தீபாவளி நாளின் அதிசயிக்கத் தக்க தொடர்பு உண்டு!
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சிறப்பு அம்சம்
நாட்டில் உள்ள பல பகுதிகளும் இதைப் பலவிதமாகக் கொண்டாடுவது ஒரு வியப்பான சிறப்பான செய்தியாகும்.
தமிழகத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடி வெடிகளை வெடித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வது தமிழர் மரபு. அன்று இல்லத்தில் கங்கை வருவதாக ஐதீகம். ஆகவே ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று ஒருவரை ஒருவர் விசாரித்து மகிழ்வர்.
கர்நாடகத்தில் நரகாசுரனை கண்ணபிரான் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக நரக சதுர்த்தசி அல்லது சோடி தீபாவளி என்று இது அழைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
மஹராஷ்டிரத்தில் வசு பரஸ் என்று அழைக்கப்பட்டு மணமான மங்கையர் பசுக்களையும் கன்றுகளையும் சிறப்பாக இந்த தினத்தில் வழிபடுகின்றனர்.
குஜராத்திலோ ‘சோப்டா பூஜன்’ என்ற பெயரில் எல்லா வணிகர்களும் தங்களது வணிகம் வளமுற இந்த நாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகின்றனர். புதுக்கணக்கு தொடங்க உகந்த நாள் இது. ஸ்டாக் மார்க்கெட் கூட சிறப்பு வணிகத்தை இந்த நாளில் அறிமுகப்படுத்துகிறது.