Vyasa was the greatest writer and compiler in the world. No one in the world of literature comes closer to him. He is credited with the world’s longest epic Mahabharata and 18 Puranas. He compiled all these along with his original mater. They run to millions of pages with billions of words. Mahabharata itself has 200,000 lines with over million words.
No one in his or her life can easily read and understand the real meaning of all his writings. He lived just before the beginning of Kali Yuga in 3102 BCE. He knew that in the Age of Iron/ Kali Yuga , no one will have time to read them in Sanskrit or in translations. So he summarised the message of the Eighteen Puranas in two lines:
Harming others is Sin (Paapam); that is the gist of the contents conveyed by Vyasa in his 18 Puranas.
Purana is translated as Mythology by half baked westerners. That is wrong. Sumerian, Egyptian, Greek and Babylonian stories are rubbish myths. But Hindu Puranas are ancient lore, ancient history. They follow a structure. It is defined as the Pancha Lakshana (Five Principles) It has History, Geography, Morals etc.
Xxxx
Coming back to Vyasa’s message, ‘Help others’, we are told a story by famous religious speaker Sri Kripananda variar (kripaananda vaariyaar).
There was a king in a country who had 12 wise ministers. The king announced a big feast on a particular date, may be his birth day or his coronation day. All the government servants including the ministers were eagerly waiting for the day. Their imagination went wild. They thought of all the tastiest dishes in the country. The very thought made their mouths to water.
The big day came. The king took them to the dining hall. Their expectation was proved true. They were not disappointed. The tastiest dishes in the cookery book were all there. Hundreds of dishes were arranged in order. All the invitees were seated.
The king made a big announcement. No, it was an order by the king.
No one should eat with their hands bent. If anyone sees bending their hands while eating, the hands will be cut off. Here are my soldiers who will keep an eye on you to execute my orders.
Enjoy your meals, saying this, he went out.
All were surprised and shocked; dumbfounded and stunned. One of the wisest ministers stopped panicking and thought laterally. His lateral thinking helped all in the hall.
He announced,
Please stretch your hand and mix the food as we do it at home; but don’t take it to your mouth; with the stretched hand feed the nearby person. Every one heaved a sigh of relief and did what he said. They enjoyed the meals fully without leaving a single bit on their plates. The king entered the hall to see how they were coping with his order. He felt very happy to see everyone enjoying the meal.
He said ‘Stop Eating and Listen to me’.
I want everyone in the country to help his neighbour this way. That is the message I wanted to convey. Now you can eat normally with your hands.
This is what Vyasa also conveyed through his Eighteen Puranas. If everyone in the country help others, the world will be a paradise.
Xxx
Before finishing this story ,Sri Variar added one more illustration.
When you use your Index finger to say something, the other three fingers except thumb are folded and they point towards you.
If you say YOU ARE A FOOL pointing to someone the other three fingers say the same to you.
If you say YOU ARE A WISE MAN, the other three fingers say the same to you.
If you help one person, and many will help you or your family.
So helping others is Good and earns Punya.
(Hindus believe that earning Punya is like depositing money in your bank account in the heaven. Accumulating Paap/ sin is taking loan from the Bank of Heaven. Your bank balance will decide your fate after you die.)
தமிழ் கூறு நல்லுலகத்தில் திருமுருக கிருபானந்தவாரியாரை அறியாதோர் எவருமிலர். நகைச்சுவை ததும்ப ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றவர். அவருடைய மதுரை நகர சொற்பொழிவுகளை பல முறை நேரில் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. அவைகளை மீண்டும் நினைவுகூறுவதற்காக யூ ட்யூப் You Tube உதவியை நாடினேன். இதோ அவர் சொன்ன இரண்டு குட்டிக்கதைகள்
xxxx.
வியாச முனிவருக்கு தீர்க்க தரிசனம் உண்டு. கலியுகம் துவங்குவதற்கு சற்று முன்னர் வாழ்ந்தவர் அவர். கலியுகத்தில் மக்களை திசை திருப்பும் ஏராளமான விஷயங்கள் வரும் என்பதை உணர்ந்து, தன் காலத்தில் நிலவிய அத்தனை விஷயங்களையும் சம்ஸ்க்ருத மொழியில் தொகுத்தார். அதாவது அவர் எழுதிய விஷயங்களோடு ஏனைய விஷயங்களையும் தொகுத்து நமக்கு அளித்தார். உலகிலேயே நீண்ட இதிகாசமான மஹா பாரதத்தை ஒரு லட்சம் ஸ்லோகங்களாகத் தொகுத்தார். அதன் பிறகு 18 புராணங்களையும் தொகுத்தார். இவ்வளவையும் படிப்பதற்கு ஒரு வாழ்நாள் போதாது..
அடடா, எனக்கு இவ்வளவற்றையும் ஸம்ஸ்க்ருதத்திலோ அதன் தமிழ் மொழிபெயர்ப்புகளையோ படிக்க வாய்ப்பில்லையே என்று வருத்தம் உருவோருக்கு அவரே 18 புராணங்களின் சாரத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் . இதோ அந்தப் பாடல்
अष्टादशपुराणानां सारं व्यासेन कीर्तितम् |
परोपकार: पुण्याय पापाय परपीडनम् ||
அஷ்டாதச புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகாராய: புண்யாய பாபாய பரபீடனம்
பதினெட்டு புராணங்களின் ஒட்டுமொத்த கருத்தை வியாச முனிவரே விளம்பிவிட்டார்.
பிறருக்கு உதவி செய்வதே புண்ணியம் தரும் செயல்;
பிறருக்கு தீங்கு செய்வதே பாபம் தரும் செயல்.
இதை எல்லோரும் கடைப்பிடித்தால் உலகமே சொர்க்க லோகம் ஆகிவிடும் .
xxxx
இதை விளக்க வாரியார் சுவாமிகள், கிழ்கண்ட கதையைக் கூறினார் . அதைச் சுருக்கமாக என் சொற்களில் வடிக்கிறேன் .
ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தான்; அவனுக்கு 12 மந்திரிகள். அவன் ஒரு பெரிய விருந்துக்கான தேதியை அறிவித்தான். ராஜா விருந்து கொடுக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? முதல் நாள் முதல் யாரும் சாப்பிடாமல் வயிற்றைக் காயப்போட்டனர். சிலர் முன்னதாகவே இஞ்சி கஷாயம் முதலியன சாப்பிட்டு உடலைத் தயார் செய்தனர். எல்லோர் கற்பனையும் சிறகடித்துப் பறந்தது . நாட்டிலுள்ள சுவையான பண்டங்களை நினைக்க நினைக்க அமைச்சர்கள் நாவில் உமிழ்நீர் சுரந்தது.
மறு நாளும் வந்தது . அமைச்சர்கள் அனைவரும் மற்ற ஊழியர்களுடன் சாப்பிடும் அறையான Dining Hall டைனிங் ஹாலுக்கு வந்தனர். நாட்டின் புகழ் மிக்க சுவையா பண்டங்கள் அங்கே இருந்தன. கல்கத்தா ரசகுல்லா, பாம்பே ஹல்வா, திருப்பதி லட்டு, பல வகையான பாயசங்கள் , மெதுவடை, மசால் வடை, அப்பளம், பல வகையான கூட்டுகள்,கறிகள் , பாசுமதி அரிசியில் சோறு, தயிர் வடை, சாம்பார், ரசம் , கெட்டித் தயிர் எல்லாம் காணப்பட்டன. சமையல் வாசனை அனைவரையும் தூக்கிச் சென்றுவிடும்போல இருந்தது. தலை வாழை இலையில், அடி முதல் நுனி வரை, அனைத்தும் பரிமாறப்பட்டன .
ராஜா உரத்த குரலில் ஒரு உத்தரவு போட்டான்
சாப்பிடும்போது யாரும் கைகளை மடக்கக் கூடாது. அப்படி மடக்கிச் சாப்பிட்டால் கைகளை வெட்ட இதோ சேவகர்கள் நிற்கிறார்கள்.
அனைவரும் உண்டு மகிழ்க !!!
என்று சொல்லிவிட்டு வெளியே போனான் .
அனைவரும் திரு, திரு என்று முழித்தனர் . அந்த 12 அமைச்சர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். கையை மடக்காமல் சாப்பிட வழி ஒன்றுண்டு. ஒவ்வொருவரும் கையை நீட்டி சாதத்தைப் பிசைந்து மற்றவருக்கு ஊட்டுங்கள் என்றார் . உடனே அனைவரும் தன இலையில் இருப்பதை எடுத்து மற்றவர்களுக்கு ஊட்டினர் . ராஜாவும் உள்ளே வந்து பார்த்து மகிழ்ந்தான்.
இதுதான் நான் சொல்ல வந்த செய்தி.
நாட்டு மக்கள் அனைவரும் மற்றவர்களுக்கு இது போல உதவி செய்ய வேண்டும்– என்றான்.
மந்திரிகள் அனைவரும் ராஜாவின் புத்திசாலித்தனத்தை மெச்சினார்கள்.
வியாசரும் இதையே சொல்கிறார். 18 புராணங்களும் இதைத்தான் காட்டுகின்றன; போதிக்கின்றன; பிறருக்கு உதவி செய்யுங்கள்; அதுவே மஹா புண்யம்.
XXX
இதைச் சொல்லிவிட்டு வாரியார் சுவாமிகள் வேறு ஒரு விளக்கமும் கொடுத்தார். பிறருக்கு தீங்கும் செய்யக்கூடாது; குறையும் சொல்லக்கூடாது. நீங்ககள் உங்கள் ஆள்காட்டி விரலால் மற்றொருவனை
நீ ஒரு முட்டாள் என்று திட்டினால் , அப்போது மூன்று விரல்கள் மடங்கிய நிலையில் உங்களை நோக்கி இருப்பதைக் காண்பீர் கள் ; அதன் பொருள் வேறு மூன்று பெயர்கள் உங்களை முட்டாள் என்று திட்டுகிறார்கள் என்பதாகும். அதையே இப்படி மாற்றி யோஜியுங்கள்
நீ ஒரு புத்திசாலி என்று ஒருவனை நோக்கிச் சொன்னால், அப்போது மடங்கிய மூன்று விரல்களும் உங்களை ,
நீ ஒரு புத்திசாலி, மேதாவி, அறிவாளி என்று சொல்லுகின்றன.
ஆகவே நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் ஒன்பது பேர் உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ உதவி செய்வார்கள் என்று சொல்லி , வாரியார் சுவாமிகள் பிரசங்கத்தை முடித்தார்.
XXXX
சொறி நாய் சிங்கமான கதை
கீழ்மக்களை உயர்த்தி ஆட்சியில் அமர்த்தினால் என்ன நிகழும் என்பதை விளக்கும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது
தொடரும்………………………………….Tags- வாரியார்,குட்டிக் கதைகள், பெரிய விருந்து, ராஜா ,கதை, பரோபகாராய: புண்யாய, 18 புராணங்கள், சாரம், வியாசர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிருஷ்ண சைதன்யரின் தியாகம்!
ச.நாகராஜன்
கிருஷ்ண சைதன்யரின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கேள்விப் படாதவர் இருக்க முடியாது.
இளமையில் இவர் நிமாயி என்றே அறியப்பட்டார்.
நவத்வீபத்தில் இவர் வாழ்ந்து வந்தார்.
மிகப் பெரும் அறிவாளியான இவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். பதினாறே வயதில் இலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்த பின் அவர் நியாய சாஸ்திரத்தைக் கற்க ஆரம்பித்தார்.
அதில் தேர்ந்த பின் அதைப் பற்றிய ஒரு நூலை எழுத ஆரம்பித்து முடித்தார்.
அவரது இளமைப் பருவ நண்பராகவும் வகுப்பில் இணைந்து படித்தவராகவும் இருந்தவர் பண்டிட் ஶ்ரீ ரகுநாதர்.
அவரும் பேரறிஞர். அவரும் நியாய சாஸ்திரம் பற்றிய ஒரு நூலை எழுதலானார்.
ரகுநாதருக்கு நிமாயியும் நியாய சாஸ்திரம் பற்றி ஒரு நூல் எழுதியது தெரிய வந்தது.
நிமாயி எழுதிய நூலை அவர் பார்க்க விரும்பினார்.
ரகுநாதர் தனது விருப்பத்தை நிமாயியிடம் கூறினார்.
மறு நாள் வகுப்பிற்குச் செல்லும் போது தனது நூலை எடுத்து வந்தார் நிமாயி.
அக்கரைக்குச் செல்ல இருவரும் படகில் அமர்ந்தனர்.
நிமாயி தனது நூலை எடுத்து ரகுநாதருக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.
பொருள் செறிவும் சொற் செறிவும் நிறைந்த அந்த நூலைக் கேட்ட ரகுநாதர் ஓவென்று அழ ஆரம்பித்தார்.
அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நிமாயி, “ரகுநாதரே! என்ன ஆயிற்று? எதற்காக அழ வேண்டும் இப்படி?“ என்று வியப்புடன் கேட்டார்.
“எனது நியாய சாஸ்திரம் நூலைப் படித்தவர்கள் இது மட்டுமே நியாய சாஸ்திரத்தில் ஒப்பற்ற நூல் என்று சொல்வார்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் நூலைக் கேட்டவர்கள் இதை சீண்டக் கூட மாட்டார்களே! எனது நம்பிக்கை சிதைந்து வீணாகி விட்டதே! அதை நினைத்து வருந்தி அழுதேன்” என்று மனம் திறந்து வெளிப்படையாகத் தான் அழுத காரணத்தை ரகுநாதர் விளக்கினார்.
“அட, இந்த சின்ன விஷயத்திற்காகவா அழுகை?” என்று கேட்ட நிமாயி கடகடவென்று சிரித்தார்.
ரகுநாதருக்கு ஒன்றும் புரியவில்லை.
“இதோ இந்த நூல் எனது நண்பருக்கு இப்படி ஒரு வேதனையைத் தரும் என்றால் அது தேவையற்ற ஒன்று தான்” என்று கூறிய நிமாயி அதைக் கிழித்து கங்கை ஆற்றில் தூக்கி எறிந்தார்.
ரகுநாதர் விக்கித்துப் போய் பிரமித்தார்.
நிமாயியின் காலைப் பிடித்து வணங்கினார்.
நிமாயியோ சிரித்தவாறே அவரைக் கட்டித் தழுவினார்.
கிருஷ்ண சைதன்யரின் வாழ்வில் பக்தி, சேவை, தியாகம் இதெல்லாம் சர்வ சாதாரணமாக அமைந்திருந்தது.
8.3 feet long snake skin on Shivalinga found on 16-5-2002
7.5 foot long snake skin found on 21-5-2002 at goddess shrine
snake skin is framed and kept in the shrine
I visited over 40 Temples, Ashrams and Adhistanams (Samadhis) during my February 2023 India Trip. Of the 40++ places some are remarkable for their architecture , statues and miracles. I have written in detail in Tamil. I will just list only the miracles here.
Around Kumbakonam in Tamil Nadu, we have Nava Graha temples. I visited Tirupaampuram (Tiru+ Paampu+ Puram= Mr Snake Town). It is famous for Rahu and Ketu (Chaayaa Grahas= Shadows of Earth and Moon). Sanskrit word Graha means celestial objects with Gravity. English words Gravity, Grip, Grab etc came from Graha in Sanskrit. So it is not Nine “Planets”. It is Nine “celestial objects” with Gravitational Power.
xxxx
In Tiru Pampuram, we see Rahu and Ketu in special sanctum sanctorum. Siva is the main deity. All Hindu Gods and Goddesses are associated with SNAKES. English words Snake and Serpent are Sanskrit words (S+naaka=Snake; Sarppa= Serpent)
In Tiru Paampuram, Shiva Sannidhi (Sanctum sanctorum= Graba Graha) has two Pictures framed with glass. One shows the snake skin 8 foot long that was found in the Goddess Shrine. Another was found on Shiva Linga as garland in 2002. Both are displayed there.
Hindus look at snakes from two different angles. When Shiva wears it as his belt or garland, it means He controls all the Five senses like a Yogi/ saint. So the Five headed Snakes found in sculptures and Thevaram hymns represent Five Senses. If one controls them or channelise them one becomes a saint.
From another angle Snake represents Kundalini Power. Westerners do not know the A B C D of such a mighty power. If one can raise it from the bottom of mental body to the top, one gets liberation (from the cycle of birth and death); Half way through the body, one gets miraculous powers. This will distract many and push them downwards in life. That is why we see many BABAS in jails today.
Snake Towns from Kashmir to Kanyakumari
To teach proper Hinduism, our forefathers constructed SNAKE TEMPLES from Kashmir o Kanyakumari. We see
it in Ananta Nag (snake) district of Kashmir where we have Sesha Nag ( snake) lake and Nagerkoil in Tamil Nadu very near the land’s southern most tip. In between, we see thousands of SNAKE TOWNS in India- from Nagpur in Maharashtra to Nagoor in Tamil Nadu.
I visited three Snake Temples during this Indian Visit. One of them is above mentioned Tiru Paampu Puram = Holy Snake Town or Mr Snake god Town.
You will see huge snake statues erected at the back of the temple. The reason is Hindus associate Snake and Child birth. If one has killed a snake in one’s previous birth, he or she may not have a child in the next birth. So astrologers advise them to go to Snake Temples (Rahu and Ketu Grahas) and pacify the snakes with Pujas and other rituals.
Xxx
I went to another snake temple Tiru Naeswaram ( Holy or Mr Snake God Town). Here Rahu Graha (shadow Planet which cause Grahanas/eclipses by its shadow. It is believed even the milk that was poured on the statue becomes blue. The blue colour represents poison.
Xxx
In Kumbakonam, we have another Shiva temple named Nageswarar Temple. Nageswarar is Shiva with snake as belt or garland. One of the famous 12 Jyotir Lingas also has this name Nagesam.
Kumbakonam temple has an architectural wonder. There we see the Nataraja Mandapa designed as a SUN CHARIOT. One will be reminded of such Sun Chariots in Konark and Hampi. Four elephants and two horses pull that enormous chariot where Goddess Sivakami (consort of Nataraja/ Shiva) plays rhythmic beats and Lord Vishnu play music on his flute.
Kumbakonam Nageswaraar Temple Stone Chariot (This picture is used from another blog; thanks)
Xxx
All these SHIVA temples are portrayed in Thevaram Hymns. That means they are at least 1500 years old.
Xxxx
Tirumeeyachur Goddess Temple
In between Snake Temples we made it a point to visit Lalithaambikai Temple at Tiru Meeyachur. There we saw the beautiful goddess Lalitha Ambikai. This temple is famous because devotees believe that Lalithaa Sahasra Naamam (1000 name of Goddess) originated here. Hayagreeva ( neck as long as of a Horse) gave the 1000 names to Saint Agastya. Today millions of women recite this hymn everyday.
We saw some unusual things there. It is a Shiva temple. Goddesss’ right leg is folded, and left leg is left downward. Devotees offer bangles and sliver or gold anklets as offerings in the temple for fulfilling their vows. 11 or eleven and a half inch long anklet (Kolusu in Tamil) is accepted when it is brought with a proper tax paid receipt. Around Rs 4000 will be the fees for Abhisheka (bathing) and Prasad in Anklet Puja. Three-day advance notice is required for such a ritual. It will be done in the morning for 3 to 4 hours. We got some glass bangles as Prasad.
PARROT WONDER at TIRU MEEYACHUR
After we had the Darshan (Viewing of God) of Shiva we circumambulated the Prakara/ corridor. The priest in the Shiva shrine came running towards us and pointed out a parrot sitting at the mini tower of the shrine (Vimaanam in Sanskrit). He told us that it is a good and auspicious sign to see the sitting parrot which whispers the messages at the ear of Gods in the temple. He advised us to think about all the good things in the world so that they will be fulfilled by the Goddess Lalitha. Whether one believes in such miracles or not, thinking of Good things and praying for them is a positive sign. We did it as we are told.
நாகேஸ்வரன் = பாம்பு ஈஸ்வரன் என்பது சிவ பெருமானின் திரு நாமங்களில் ஒன்று . 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று நாகேசம். அது தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளது .
பிப்ரவரி 2023 இந்தியப் பயணத்தில் கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரன் கோவிலுக்கும் சென்றுவந்தோம். முன்னதாக திருப்பாம்புரம், திரு நாகேஸ்வரம் தலங்களைத் தரிசித்தோம்.
இன்று நாகேஸ்வரர் கோவிலை தரிசிப்போம்
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் பாடல்பெற்ற க்ஷேத்திரங்களில் ஒன்று. அப்படியானால் குறைந்தது 1500 ஆண்டுப் பழமை உடையது. இந்தக் கோவிலை நரகாசுரன், சூரியன் ஆகியோர் பூஜித்ததாக கோவில் வரலாறு சொல்லும். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரிய கிரணங்கள், மூலவர் சிலை மீது விழுகிறது. பல கோவில்களில் கர்ப்பக் கிரகத்துக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் பிரம்மாண்டமான கோபுரங்களை எழுப்பிய தமிழர்களின் பொறியியலைக் கண்டு வியக்காதோர் எவருமில்லை . சில கோவில்களில் சந்திரனின் ஒளியும் இவ்வாறு விழுகிறது; அற்புதத்திலும் அற்புதம். இது இந்துக்களின் வானவியல் அறிவுக்கும் சான்று பகர்கிறது .
இந்தக் கோவில் அப்பர் பெருமானால் தேவார பாடலில் போற்றப்படுகிறது. அவர் இந்தக் கோவிலைக் குறிப்பிட்டு பாடுகையில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று சொல்லுவதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு இருந்த பெயரையும் நாம் அறிய முடிகிறது. இது வில்வத்தில் தோன்றிய லிங்கம் என்ற நம்பிக்கையும் உளது (ஒருவேளை, வில்வ மரக் காட்டில் தோன்றியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் சொந்தக் கருத்து ; இதே போல சூரிய ஒளி விழுவதால் சூரியன் பூஜித்த தலம் என்கிறார்கள் போலும்!)
சிவனின் திருநாமம் – நாகேஸ்வரர்
அம்மனின் திருநாமம்- பெரிய நாயகி
இந்தப் பெயருக்கு ஏற்றவாறு பெரிய கோபுரங்களை உடையது இந்தக் கோயில்.
தல மரம் – வில்வம்
தீர்த்தம் :சிங்கமுக தீர்த்தம். தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.
xxx
சிற்பக் கலைச் சிறப்பு – சூரிய ரதம்
இந்தக் கோவிலின் நடராஜ மண்டபம் , ஒரு தேர் போலவும் அதை 2 குதிரைகளும் 4 யானைகளும் இழுப்பது போலவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது சூரிய தேவன் ஆகும். இதைப் பார்த்தவுடன் கொனாரக்கிலுள்ள சூரிய ரதம் நினைவுக்கு வரும். குடந்தை ரதத்தில் பிரமாண்டமான சக்கரத்தைக் காணலாம். அதன் 12 ஆரங்கள் 12 ராசிகள் ஆகும். இந்த நடராஜ மண்டபத்தில் நட ராஜன் டான்ஸுக்கு / நடனத்துக்கு சிவகாமி அம்மை தாளம் போடுகிறார்; விஷ்ணு மியூசிக் Music தருகிறார்; அதாவது குழல் Flute ஊதுகிறார்.
‘அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது என்று வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே.
மகாமக உற்சவத்தின் போது இந்தக் கோவில் மூர்த்தியும் மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்குச் செல்லுவார்.
Xxx
‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்‘
‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்‘ என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராஜ சபை, சுற்றுச் சுவர்கள், சிங்கமுக தீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் சொம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டினார் .
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.
xxxxx
அப்பர் தேவாரம் – ஆறாம் திருமுறை (Please go to thevaram.org for full meaning)
பாடல் எண் : 1
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 2
கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 3
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே-3
Ratha/ Chariot at Hampi
பாடல் எண் : 4
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே- 4
பாடல் எண் : 7
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 8
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
பாடல் எண் : 10
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
Ratha/ Chariot at Konark
பாடல் எண் : 11
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
–subham—
TAGS- குடந்தைக் கீழ்க்கோட்டம் , கும்பகோணம், நாகேஸ்வரர் கோவில், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், கல் ரதம் , பெரியநாயகி , சூரிய ஒளி, கர்ப்பக்கிரகம் , அப்பர் தேவாரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்திய சிற்பக் கலை!
ச. நாகராஜன்
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சிற்பக்கலையை எடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டோமானால் அதில் சிறந்து விளங்குவது பாரத தேசத்தின் சிற்பக் கலையே என்பது தெரிய வரும்.
ஆயிரக் கணக்கான கோவில்கள் பாரத தேசமெங்கு பரவி நிறைந்துள்ளன.
கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள் கலை நேர்த்தியுடனும் அறிவியலின் இன்றைய தொழில்நுட்பத் திறனை உள்ளடக்கியும் அமைக்கப்பட்டிருப்பது பிரமிப்பைத் தரும்.
எடுத்துக் காட்டாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அறிவியல் ரீதியிலான ஒலி அமைப்பை உள்ளடக்கிய திறனைக் கூறலாம்.
அக்னி புராணம், சிற்பி தனது கலையை உடனே உருவாக்கி விட முடியாது என்று உறுதி படக் கூறுகிறது.
ஒரு சிற்பத்தை வடிவமைப்பதற்கு முன்பாக முதல் நாள் இரவு அந்த சிற்பி உள்ளார்ந்து இறைவனை வழிபட வேண்டும் என்று அது கூறுகிறது.
“இறைவனுக்கு இறைவனே! எனது மனதில் உள்ளதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எனது கனவில் வந்து தெரிவி” என்று ஒரு சிற்பி வேண்டிக் கொள்ள வேண்டும் என்று அது வழி வகை கூறுகிறது.
ஹைதராபாத்திற்கு 60 மைல் தொலைவில் உள்ளது அஜந்தா. இதன் புகழை அறியாதவர் இருக்க முடியாது.
எல்லோராவில் உள்ள கைலாஸ் ஆலயம் பற்றி மும்பை ஆர்ட் காலேஜின் முதல்வராக இருந்த சாலமன் என்பவர் (ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில்) எழுதுகையில் கூறுகிறார் இப்படி:
“கைலாஸர் ஆலயத்தில் உள்ள பெரும் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்து ஹிந்து தெய்வங்கள், தேவதைகளைச் சித்தரிக்கிறது.
சுவர்க்கத்தில் உள்ள தேவதைகள் அங்கு சுவர்களில் மிதக்கின்றனர்.”
அடுத்து மைசூரில் உள்ள சோமநாத்புர ஆலயத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்த்து வியந்த யாத்ரீகர் ‘Through Town and Jungle’
என்ற தனது புத்தகத்தில் சோம்நாத்புர ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் மனதை ஈர்க்கிறது என்றும் ஒவ்வொரு சிற்பமும் அநேக வடிவமைப்புகளையும் சிற்ப நேர்த்தியையும் கொண்டுள்ளது என்றும் கூறி வியக்கிறார்.
ஹாவல் (Havell) என்ற எழுத்தாளர் தனது “Indian Architechture” என்ற நூலில் ஹிந்து கட்டிடக் கலை விற்பன்னர்கள் மட்டும் இல்லையெனில் ஒரு தாஜ்மஹாலோ அல்லது ஜும்மா மஜ்ஜித்தோ அல்லது மோடி மஜ்ஜித்தோ சிறப்புற இப்படி உருவாக சாத்தியமே இல்லை என்கிறார்.
ஹிந்து சிற்பிகளின் மேதையையும் புத்திகூர்மையையும் ஐரோப்பிய மற்றும் முகலாயர்கள் தங்களது மதத்தின் சிறப்பை உயர்த்திக் காட்டப் பயன்படுத்தியுள்ளனர் என்பது அவரது கூற்று.
அராபிய யாத்ரீகரான அல்பெரூனி ஹிந்து தேசத்தைப் பற்றிப் பாராட்டுவது ஒவ்வொருவரையும் வியக்க வைக்கும். தனது கூரிய பார்வையையும் தனது யாத்ரீக அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து அவர் வியந்து கூவுகிறார் இப்படி : “Our people when they see them, wonder at them and are unable to describe them much less to construct anything like them”
“நமது மக்கள் இவற்றைப் பார்க்கும் போது வியப்பு மேலிட, அவை போல அமைப்பது ஒரு புறம் இருக்கட்டும்,
அவற்றை விளக்கக் கூட முடியாமல் இருக்கிறார்கள்.”
கஜினியைச் சேர்ந்த சுல்தான் மஹம்மது மதுராவை அழித்த பிறகு தனது கஜினி கவர்னருக்கு எழுதினான் இப்படி: “இது போன்ற இன்னொரு அமைப்பு இன்னும் இருநூறு ஆண்டுகளானாலும் அமைக்கப்பட முடியாது!”. அவன் மதுரா நகரின் புகழுக்குக் காரணமான லக்ஷக்கணக்கான பக்தர்களைப் புகழ்ந்து ‘லக்ஷக்கணக்கான’ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறான்.
இப்படி பாரத தேசத்திற்கு வந்த யாத்ரீகர்களின் பார்வையையும் மேலை நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வையும் தனியாக எடுத்துத் தொகுத்து அலசி ஆராய்வோமானால் நமது தேசத்தின் சிற்பக் கலையின் பெருமை வர்ணனைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர முடியும்!
இப்படிப்பட்ட சிற்பக்கலையின் மகோன்னதத்தை உணராதவர்கள் நாம் என்பதை வருத்தத்தோடு உணர்வதோடு மட்டுமல்லாமல், இதைப் பாராட்டி வியந்து நமது சந்ததியினருக்கு இந்த மாபெரும் உண்மையைத் தெரியப்படுத்த தவறியவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்பதையும் சோகத்தோடு சொல்லவும் வேண்டும்.
இந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் முயன்று அனைவருக்கும் நமது புகழோங்கிய நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
பிப்ரவரி 2023-ல் திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்களுக்கு விஜயம் செய்தேன். திருப்பாம்புரத்தில் சிவன் மீதும், அம்மன் மீதும் ஏழரை அடி , எட்டு அடிப் பாம்புகள் வந்து அவற்றின் சட்டைகளை மாலையாக அணிவித்துச் சென்றதை நேற்று கண்டோம் .
திருநாகேஸ்வரம் மற்றோர் பரிகார தலம். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலனை அடைகிறார்கள். இது ஒரு சிவன் கோவில்.
திருநாகேஸ்வரம் கோவில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சுவாமியின் திரு நாமம் – சண்பகாரண்யேஸ்வரர் , நாகநாதசுவாமி
ஒரு காலத்தில் இந்த இடம் சண்பக மரங்கள் நிறைந்த வனம் ஆக இருந்தது
கிரி குஜாம்பிகை சந்நிதி தனியே உள்ளது. சுதையால் ஆன உருவம் ஆதலால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
பிறையணிவாள் நுதல் அம்மை என்ற பெயருடைய தேவியின் கருவறையில் கார்த்திகை மாத சந்திரன் ஒளி புகும்.
இறைவன் சந்நிதியில் சங்க நிதி, பதும நிதி, மகா சாஸ்தா விக்கிரகங்களும் இருக்கின்றன .
XXXX
கோவில் மிகவும் பெரியது. நான்கு புறங்களும் கோபுரங்கள் உடையது . சூர்ய புஷ்கரணி இங்குள்ள திருக்குளம் ஆகும். தேவாரப்பாடல் பெற்றதால் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடைத்து. ஆதித்ய சோழன் காலத்திலிருந்து வரலாறு உடையது. சேக்கிழாரும், கோவிந்த தீட்சிதரும் போற்றிய தலம் இது .
சந்திரனும் சூரியனும் , ஐந்து தலை நாகமும் இங்கே பூஜித்ததாக ஐதீகம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியார் சகிதம் தரிசனம் தருகிறார்.
ராகு பகவானுக்கு உள்ள தனி சந்நிதியில் மனித முகத்துடன் ராகு காட்சி தருவது வியப்பான விஷயம். ஏனெனில் பொதுவாக பாம்பு முகத்துடன்தான் ராகு சிலைகள் இருக்கும். ராகு காலத்தில் இங்கு பாலாபிஷேகம் செய்தால் திருமணத் தடைகள், குடும்பச் சண்டைகள், குழந்தை பிறவாமை முதலிய பிரச்சினைகள் தீருமாம் .
(தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.(FROM WIKIPEDIA))
XXX
இங்கு சேக்கிழாருக்கு சந்நிதி இருப்பதுடன் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவும் நடைபெறுகிறது
பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், தாயார் அழகாம்பிகை இங்கே உள்ளனர். சேக்கிழாரின் ஊர் சென்னையில் பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள குன்றத்தூர் ஆகும் . அங்கு சிவபெருமானுக்கு கோவில் கட்டி, அந்தக் கோவிலுக்கு திருநாகேஸ்வரம் என்றே பெயர் சூட்டினார். அவ்வளவு அன்பு இக்கோவிலின் இறைவன் மீது.
அங்கிருந்து அரை மைல் தூரத்தில் உள்ள நத்தம் என்ற இடத்தில் சிறிய குன்றின்மேல் சுப்ரமண்யர் ஆலயமும் கீழே சேக்கிழார் கோயிலும் உள்ளன.
XXX
நரேந்திர மோடி, நச்சினார்க்கினியர், ஐந்து தலைப் பாம்பு
திருநாகேஸ்வரம் தேவாரம் —
சம்பந்தர் , அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பட்ட தேவார பதிகங்கள் நிறைய தகவல்களைத் தருகின்றன .
கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாக ஈச்சரவ னாரே. 1 —அப்பர்
தமிழ் இலக்கியத்தில் அதிகமாக உரை எழுதிய பார்ப்பனன் நச்சினார்க்கினியன். மதுரை நகர பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியன் என்று போற்றப்பட்டவர் . அவருடைய நாமம் இந்த அப்பர் பாட்டில் வருகிறது.
XXX
மோடி= துர்கா தேவி
போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈச் சரவ னாரே. 8
5 தலை நாகம் = ஐந்து புலன்கள்
கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 9
XXXX
தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. 1 — அப்பர், ஆறாம் திருமுறை
XXXX
பாடல் எண் : 1
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.– அப்பர், ஐந்தாம் திருமுறை
XXX
1)
அரையினில் பாம்பை அணிகிற ஐயன் அவன்தாளை
விரைமலர் கொண்டு பணிகிற பத்தர் வினைபோக்கிக்
கரையினில் சேர்த்துக் கருணைசெய் ஈசன் கடிதேகும்
நரைவிடை ஏறும் நலம்தரும் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்
ஆதி சேடன் அன்று போற்ற அருள்செய்தான்
பாதி உடலைப் பார்வ திக்குப் பரிந்தீந்தான்
ஓதித் தொழுவோர் உள்ளத் துள்ளே உறைகின்ற
நாதி ஆவான் நலம்செய் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்
TO BE CONTINUED……………………………..
TAGS– திரு நாகேஸ்வரம் , ராகு, பரிகார தலம் , சேக்கிழார் , நீல நிறம் , தேவாரம், மோடி, நச்சினார்க்கினியர்