[அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.
அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.
பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார்.
அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். — ?
கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்]
?-ம் திருமுறை, அப்பர் தேவாரம்
சிவனார் திருத்தலம் நூற்றுக்கும் மேலே உண்டு.
எந்த திருத்தலம் குறித்த பாடல் எண்ணில்
அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சுவாமிகள்
“ஆயிரம் மாமுக கங்கை”
என்று பாடி உள்ளார் என்பதய்த்
தெரிவித்து உதவுமாறு வேண்டுகின்றேன்.
நன்றி, வணக்கம்.
G.V.
Answer given by London Swaminathan
ஆயிர மாமுக கங்கை என்று அப்பர் தேவாரத்தில் எங்கு வருகிறது ?
அப்பர் சமண மதத்தை தழுவியிருந்த காலத்தில் பாடலி புத்திரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். ஏனெனில் அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார்.
இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–
திருப்பூவணம்
ஆறாம் திருமுறை , பாடல்
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் ;
மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;
இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் ;
கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்
புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே
சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி .என் . ராமச்சந்திரன் இதை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
Appar Alias Tiru Navukkarasar mentioned the Ganges river that branches out into 1000 small streams before merging with the sea. He lived during the reign of Mahendra Pallava (630 CE)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
அந்தக் காலத்தில் பிராமணர் கல்யாணங்கள் 4 நாட்கள் நடக்கும் மற்ற உயர் ஜாதியினரும் இவ்வாறு 4 நாள் கல்யாணம் செய்தனர்.இப்போது 4 நாள் கல்யாணம் அரை நாள் முதல் ஒன்றரை நாளுக்குள் சுருங்கிவிட்டது.
100 ஆண்டுக்கு முந்தைய ஒரு நாவலில் படித்த இரண்டு விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அந்தக் காலத்தில் ஒரு ஆண் வெளிநாட்டுக்குப் போனால் அவனை ஜாதிப்பிரஷ்டம் செய்துவைப்பார்கள். யாரும் பெண்ணும் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் வெளிநாடு போவது மிக மிக அபூர்வம். இவை எல்லாம் 100 அல்லது 125 ஆண்டுகளுக்கு முந்தைய விதிகள்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பெண்கள் கடல்கடந்து போகக்கூடாது என்று தொல்காப்பியர் ஒரு விதி/ சூத்திரம் எழுதியுள்ளார் . அதற்கு முன்னர் பிராமணர்கள் வெளி நாடு செல்லக்கூடாது என்று மநு , தனது மானவ தர்ம சாஸ்திர புஸ்தகத்திலெழுதிவைத்துள்ளார் . இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. வெளிநாடு போனால்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஆணும் பெண்ணும் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். இதோ இத்துடன் உள்ள இணைப்பைப் படித்து மகிழுங்கள் .
அது மட்டுமல்ல அந்தக் கல்யாணத்தில் வெங்காய சாம்பார் போட்டது சாஸ்திர விரோதம் என்று பிராமணர்கள் பேசிக்கொள்வதும் பல பக்கங்களை எடுத்துக் கொள்கிறது.
9 Nov 2016 — Then seated in a marriage palanquin, and accompanied by dancing women and a band of music, she is taken in procession to the house where the …
24 Aug 2015 — On the day of the marriage, Nemi was taken in a big procession with music, elephants, camels and professional dancers. Nemi was travelling in a …
tags- கல்யாண ஊர்வலம், நாலாவது நாள், புஷ்பப் பல்லக்கு,
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,619 Date uploaded in London – – 2 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி! நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி! ச.நாகராஜன்
வள்ளுவரின் குறளை தினமும் ஓதி உணர்தல் வேண்டும். அப்போது நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) என்பது என்ன என்று தெரியும். நல்ல செய்கை, தீய செய்கை பற்றிச் சொல்ல வருகிறார் வள்ளுவர். நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக் கடை (குறள் 469 – தெரிந்து செயல் வகை அதிகாரம்) நன்று ஆற்றல் என்பது பொதுவாக எல்லோருக்கும் கொடுத்தலையும் எல்லோரிடமும் இன்சொல் பேசுவதையும் குறிக்கும். ஆனால் அதைக் கூடப் பார்த்துச் செய் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொருவருடைய பண்பு அறிந்து பின்னர் ‘நன்று ஆற்றலை’க் கடைப்பிடி என்கிறார் அவர். ஒருவர் பெறுவதற்கு உரியர் அல்லார் எனில் கொடுக்காதே; இன்சொல் பேசாதே என்பது அவரது அறிவுரை. அப்படி நல்ல செய்கையிலும் கூட தவறு உண்டு – பார்த்துச் செய்யாவிட்டால்! ஒவ்வொரு சிறு செய்கையிலும் கூட உன்னிப்பாக நமது கவனம் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி!
ஆகவே இனிய உளவாக இன்னாத கூறல் (குறள் 100) கனி இருக்க காயை நுகர்வது போல என்று சொன்னாலும் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும், எவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இரு என்கிறார் வள்ளுவர்.
இனி அடுத்து நல்ல செய்கையை விடுத்து கேட்டிற்கு வருவோம். இப்போது பார்க்க வேண்டிய குறள் 796. (நட்பு ஆராய்தல் அதிகாரம்) கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் கேடு என்பது அளக்கும் ஒரு கருவி என்கிறார் வள்ளுவர். கேட்டிலும் கூட பெறக் கூடிய ஒரு நல்லறிவு உண்டு. நமது நண்பர்களை எப்போது அளப்பது? எப்படி அளப்பது? கேடு வரும் காலை எவன் ஒருவன் நமக்கு உதவிக்கு வருகிறான் என்று பார். நல்ல காலத்தில் கூட இருப்பவர் ஆயிரம் பேர். ஆனால் கெட்ட காலத்தில் உடுக்கை இழந்தவன் கை போல எவன் வருகிறான் – அவனே நண்பன்! ஆக கேடு கூட ஒருவகையில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு உதவி செய்யத் தான் செய்கிறது.
சரி, தவறு என்பதை எப்போதும் கவனிக்க வேண்டுமா? இல்லை, ஐயா, கணவன் – மனைவி உறவு என்பது வேறு. தலைவன் – தலைவி கூடும் போது உள்ள காதல் அகராதி வேறு.
கணவனைப் பார்க்கும் போது அவனிடம் ஒரு தவறு கூட இல்லை; தவறைப் பார்க்கவே முடியாது. அவனுடன் இன்பமாய் இருப்பது தவிர வேறொரு நினைப்பும் கிடையாது. ஆனால் அவன் சற்று வேறிடம் சென்று விட்டால் அவனிடம் நினைப்பதற்கு ஒரு நல்லது கூட இல்லை. எல்லாம் தவறாய்த் தான் தெரிகிறது! என்ன விசித்திரம்!! தவறில் கூட அகராதியில் பொருள் வேறு படுகிறது. உறவெல்லாம் கணவன்-மனைவி உறவு போல ஆகுமா? இன்னும் 1154, 1321, 1325 ஆகிய குறள்களில் வரும் ‘தவறு’ குறள்களையும் ஒரு பார்வை பாருங்களேன்!
இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர் அளிக்குமாறு (குறள் 1321 ஊடல் உவகை அதிகாரம்) தோழி கேட்கிறாள் : ஏன் இப்படி உன்னவரை இப்படித் தவறாகச் சொல்கிறாய் என்று. பதில் வருகிறது தலைவியிடமிருந்து : “அவரிடம் தவறு இல்லை. என்றாலும் கூட இப்படி தவறு என்று சொல்வதால் அவர் தரும் இன்பம் பேரின்பம் ஆக இருக்கிறதே” ஆகவே ஊடுதல் சரியே. அது பின்னால் கூடும் போது எல்லையற்ற இன்பத்தை அல்லவா அளிக்கிறது!” – இதுவே தலைவியின் பதில்!
தவறு இலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து (குறள் 1325 ஊடல் உவகை அதிகாரம்)
தலைவி வேண்டுமென்றே தலைவனிடம் சிறிதோ பெரிதோ ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகிறாள். தலைவன், அங்கு பேசவா முடியும்! ஊடலுக்கு ஒரு காரணம். பேசாமல் இருப்பது மென் தோள் வீழ்வாரது வழி.
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் தேறியார்க்கு உண்டோ தவறு (குறள் 1154 – பிரிவு ஆற்றாமை அதிகாரம்)
உன்னைப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்று பார்த்த முதல் நாளே சொன்னவர் தாமே பிரிந்து சென்றால், அவருக்குத் தான் தவறே அன்றி அதை உண்மை என்று நம்பியவர்க்கு தவறு (குற்றம்) உண்டோ? யாரிடம் இருக்கிறது தவறு?
ஆக இப்படி வள்ளுவரை ஊன்றி அவர் சொல்லும் சொற்களின் கூடவே சென்றால் நாம் பெறுவது பேரின்பம். பல அகராதிகளை நாம் அவரிடம் காண்கிறோம். அத்தனையும் உண்மையான அகராதிகளே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2
நேற்றைய கட்டுரையில், ஏழடுக்கிய பாலை பற்றி பரி பாடலிலும் காளிதாசனின் ரகு வம்சம் மற்றும் சாகுந்தலம் நாடகத்திலும் கண்டோம் . அதே போல ஏழிலைகள் கொண்ட சிற்பங்களை கி.மு 900 அஸீரிய நாகரீகத்தில் கண்டோம். மூன்றிலும் புனிதத் தன்மை உளது.
இதோ மேலும் சில மரம் விஷயங்கள்
காளிதாசன் நூல்கள்
மேக தூதம் 25- கிராம சதுக்கத்தில் புனித அரச மரம்:_
காளிதாசன், மேகத்தை தனது காதலி இருக்கும் இடத்திற்கு தூது அனுப்புகையில் குறுக்கிடும் தசார்ணம் என்னும் நாடு பற்றி வருணிக்கிறான் . அங்கே தினமும் இல்லத்தரசிகள் வழங்கும் பலி உணவினை காக்கைகள் உண்டுவிட்டு பெரும் ஆரவாரத்துடன் கூடு கட்டும் காலம் இது. கூடுகள் கிராம சைத்யங்களில் இருக்கும்.
இதற்கு உரைகாரர்கள் எழுதிய பாஷ்யத்தில் மேடைகள் அமைக்கப்பட்ட மரங்களென்றும் ஆல் , அரசு முதலியவற்றைச் சுற்றி இப்படி மேடை அமைப்பர் என்றும் உள்ளது
இதே பாட்டில் அன்னப் பறவைகள் மானஸ ஏரியை நோக்கிப் பறக்கும் காட்சியும் உள்ளது. பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் புறநானுற்றுப் புலவரும் இது பற்றிப் படியுள்ளதை முன்னரே எழுதியுள்ளேன் (புறம் 67)
xxx
ரகு வம்சம் 17-12 பல்வேறு மரம் செடி கொடிகளுடன் அபிஷேகம் :–
மன்னன் அரியாசனத்தில் அமர்ந்தபோது அறுகு , யவ தானிய முளை , ஆலம் பட்டை, இளம் தளிர் இவைகளை வைத்து ஆரத்தி எடுத்ததாகவும் உரைகாரர்கள் கூறுவார்கள்.
“புற்களில் அரசன் அருகம் புல் ; அது போல நீயும் சிறந்த அரசனாகுக” என்று பட்டமேற்கும் சம்ஸ்க்ருத மந்திரங்கள் கூறுகின்றன. ஆகவே பட்டமேற்கும் மன்னர்கள் அருகம்புல் மீது கால் வைத்த ஏறினார்கள் என்ற அரிய செய்தியை தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது நூலில் கூறுகிறார். இது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்கம் என்பது காளிதாசன் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.
சாகுந்தலத்தில் சகுந்தலா எப்படியெல்லாம் மரங்களைப் போற்றி வளர்க்கிறாள் என்றும் காளிதாசன் காட்டுகிறான்
XXX
வட இந்தியா முழுதும் வட சாவித்திரி விரத த்தின்போது இன்றும் பெண்கள் ஆலமர வழிபாடு செய்கின்றனர்
சங்க இலக்கிய நூல்கள்
புற நானூறு 198- வ.வ . பேரி சாத்தன் — ஆலமரக் கடவுள்
புற நானூறு 199 – மகா பத்மன் – கடவுள் ஆலம்
“காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்
வேல் கெழு குருசில் “
பெரும்பதுமனார் பாடிய அடுத்த பாடலில் ,
“கடவுள் ஆலத்துத் தடவுசினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்” …..
என்று பாடுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு வரும் யாதவ குல இளைஞர்கள் ஆலம் , மரா மரங்களின் கீழ் உறையும் தெய்வத்தை வணங்கிவிட்டு வந்ததாக முல்லைக் கலி பாடிய நல்லுருத்திரனார் பாடுகிறார்
பொது இடத்தில் மரத்தின் கண் தங்கும் அச்சம் ஊட்டும் கடவுள் கொடுமையுடையாரை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்
கலித்தொகை 101-14/15 மற்றும் பரிபாடல் 8-65/68 வரிகளில் கடவுள் வசிக்கும் மரங்கள் வருவதைக் காணலாம்
அக நானூறு 70- கடுவன் மள்ளனார் பாடல் – ஆல மரத்தின் கீழ் அமர்ந்து இராம பிரான் ,வானர என்ஜினீயர்களுடன் கடல் மீது பிரிட்ஜ் கட்டுவது பற்றி ஆலோசனை.
xxx
நற்றிணை 83- மகாதேவன்பாடல்- கடவுள் முதுமரம்
நற்றிணையில் பெருந்தேவனார் பாடிய பாடலில் கூகையை நோக்கி ஒரு பெண் பாடுவதாக அமைந்துள்ளது. கடவுள் உறைகின்ற பருத்த மரத்தின் மீது இருக்கும் ஆந்தையே இரவில் குரல் எழுப்பி எல்லோரையும் எழுப்பிவிடாதே என்கிறாள் . இவ்வாறு கடவுள் வசிக்கும் மரம் என்ற கருத்து நெடுகிலும் காணப்படுகிறது .
சம்ஸ்க்ருத நூல்களிலும் இக்கருத்து உளது
இது தவிர நாணயங்களில் ‘மேடை அமைக்கப்பட்ட மரம்’ உள்ளது
சிற்பங்களிலும் மரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையில் 15-1ல் வரும் அஸ்வத்த/ அரச மரம் பற்றிய உவமை எல்லோரும் அறிந்ததே 99ஊர்த்வமூலம் அதஸ் சாகம………………..
இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன ? மரங்களில் கடவுள் உறைவர் ; அவர்கள் தீயோரைத் தண்டிப்பர் ; மரங்களில் உள்ள தெய்வங்கள் வணங்குதற்குரியர் என்ற கருத்துக்கள் காளிதாஸனிலும் சங்க இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,616 Date uploaded in London – – 1 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!! ச.நாகராஜன்
14 கேள்விகள். ஒரே ஒரு சொற்றொடரில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியுமா? முடியும். சம்ஸ்கிருதம் என்னும் விந்தையால் மட்டுமே முடியும்!
ஒரே ஒரு கவிதையைப் பார்ப்போம்:
கிம் த்ருஷ்ணாகாரி கோத்க்ரயசரணமஹோ ரௌதி க: காந்திகாஞ்சி: கோபஸ்மாரி புஜங்கே கிம் கலிஷமனம் த்வார்யசம்போதனம் கிம் | கா சுந்தர்யாமபோந்து: கதமசலப்ருத: கா ச சம்புத்தரக்னேர் பீஜ கிம் காவநீஜாரமணமதிஹரா ஹேம சாரங்க லீலா || இதில் 14 கேள்விகள் கேட்கப்பட்டு விடையாக கடைசியில் ‘ஹேம சாரங்க லீலா’ என்ற சொல் தொடர் வருகிறது.
கேள்வியையும் விடையையும் பார்ப்போம் :
பேராசை எதைப் பெற்றது? – ஹேம – தங்கத்தை தேரின் சக்கரம் எப்படி இருக்கிறது? – சாரம் – சாரத்துடன் – சாரக் கம்பிகளுடன் யார் அதிகமாகப் பேசுகிறார்? – கலி – தொண்டை கிழியப் பேசுபவர் கடலைச் சுற்றி எது உள்ளது? – இலா – பூமி வலிப்பு வந்தவனுக்கு என்ன வரும்? – லாலி – வாயிலிருந்து நுரை பாம்பில் என்ன உள்ளது? – கரம் – விஷம் சண்டையைத் தீர்ப்பது எது? -சமா – சமாதானம் ஒரு பிரபு எப்படி அழைக்கப்படுகிறார் – ஹே – ஹே என்று ஒரு அழகியிடம் என்ன இருக்கிறது? – லீலா- உல்லாச கேளிக்கைகள் சந்திரன் எப்படி உள்ளது? – மாலி – கறுப்பு நிற களங்கத்துடன் மலை எப்படி இருக்கிறது – சாக – மரங்களுடன் அக்னி எப்படி அழைக்கப்படுகிறது – ராம்– தீ என்று பீஜ மந்திரம் எது? – ராம எது சீதையின் கணவனை ஈர்த்தது? – ஹேம- சாரங்க – லீலா – தங்க நிற மானின் விளையாட்டு இதில் முக்கிய சொற்றொடர் ஹேம சாரங்க லீலா. இது பல்வேறு விதமாகப் பிரிக்கப்பட்டு 14 கேள்விகளுக்கும் விடையை அளிக்கிறது. என்ன ஒரு மொழி? எப்படிப்பட்ட விந்தை, ஜாலம்!
What has greed procured? – Hema – Gold How is the wheel of the chariot? – Saram – With spokes Who talks much – gali – full-throated one What is the girdle of the sea? – ila – earth What happens to one in epilepsy? – lali – froth in the mouth What is in a snake? – garam – poison What subdues quarrels? – sama – conciliatory conduct How is a noble person addressed? – he, – oh What is found in a charming woman? – hela – amorous sport How is the moon? – mali – with black spot How is a mountain? – Saga – with trees How is fire addressed? – ram – fire What is the Bijamantra – Rama What captivated the mind of Sita’s husband? – hema – saranga – lila. -The sport of a golden deer (ஆங்கில மொழியாக்கம் திரு A.A.R)
அருமையான இது போன்ற கவிதைகள் ஆயிரக்கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. படித்து ரசிப்போம்; சம்ஸ்கிருத விந்தையைப் போற்றுவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Is Iran, Saka Dwipa? Interesting Information about Sapta Parni and Zoroastrian Cypress (Post.10,615)
Where is Saka Dwipa? Is it Seistan, now part of Iran and Afghanistan? How come the 900 BCE Assyrian Sacred Tree looks like Saptaparni/Seven Leaves Tree? Is there a similarity in Buddha’s Bodhi Tree and Zarathustra’s Cypress Tree? Why did Kalidasa’s books give importance to Sapta parni?
Let us find answers to these questions.
Mahabharata mentions a mighty Saka Tree in Saka Dwipa. Hindus divided the world into seven Dwipas,i.e seven regions surrounded by or divided by seas. They are Jambudwipa, Kusadwipa, Salmali Dwipa, Pushkaradwipa, Sakadwipa, Kraunchdwipa and Plaksha dwipa. Except Jambudwipa (India), all the locations are debatable.
Bhishma Parva (11-28) of Mahabharata says,
People of Saka dwipa adore the Saka tree and they worship Lord Shiva. Saka Dwipa is surrounded by sea. Though different types of trees are worshipped by all cultures, we don’t see any Shiva worship in Iran. When Zarathushtra/ Zoroaster founded the Parsi religion (Persia=Iran) he inculcated the Fire worship. Later the Magi or Magha priests introduced Sun and Mithra worship.
Cypress Tree
Like the Peepal or Bodhi tree became popular after Buddha’s enlightenment under it, Cypress tree also veneered by the Parsis because Zoroaster planted a Cypress tree. Now the tree in Yazd province of Iran is a cultural centre and a tourist attraction. Shah nama, a later work, refers to sacred cypress in Kashmir. A branch from the original tree in Iran was planted in Kashmir. We see such stories in Buddhism as well; Asoka sent the branches of Bodhi tree to Sri Lanka. Now the Cypress Tree in Iran is believed to be 4000 to 5000 years old. But Zoroastrian religion is not that ancient.
Seistan is an area in the border of Afghanistan and Iran. It is shared between the two countries. The ancient name of Seistan is Saka stana. Though it confirms one area of Iran was Saka stan at one time, one may not tell the date. Ancient peoples, groups moved slowly from one area to another. So, no one can pinpoint that this is the original Saka Sthana.
Sapta Parna or Alstonia scholaris is found in India. It is referred to in Sangam Tamil literature and earlier Kalidasa’s works. Nobel laureate Rabindranath Tagore founded the Visvabharati University where the graduates were given Saptaparni branches during convocation.
Sakuntala (Act 1-26) of Kalidasa refers to Sapta Parna (Seven Leaves) tree in Kanva Maharishi Ashram. A platform with raised seat was constructed round the tree. That means it is a sacred tree. In his Raghuvamsa Kavya he mentioned Sapta Parna in the 4th and 5th chapters. He says that the flowers of the Saptaparna Tree smelt like the rut of elephants. Immediately the elephants in Raghu’s army also were in rut.
In Sangam Tamil work Paripatal, we see it in the sacred mountain of Lord Muruga/Skanda in Tirupparankundram in Tamil Nadu.
The interesting thing about the Seven Leaf tree is we find such sacred Trees in Nimrud in Iraq around 900 BCE. Though we see some people worshipping it, literary details are lacking but the trees show seven leaves.
Vedic hymns refer to Red trees with Soma juice and 15 types of Soma juice. I guess that several plants were used for Soma juice or similar elixir. Even the Parsis use different plant as Soma in their ceremonies. In the Iraq sculptures we see plants similar to Soma filters in Indus valley seals. Saptaparni figures belong to 900 BCE.
Trees with seven leaves are found in other parts of the world too. Casava leaves are also in a bunch of seven. But we don’t find them sacred. Here the Nimrud sculpture can easily be compared with Sapta Parna of India. Both are projected as sacred trees.
Tree Worship
Tree worship is as ancient as Vedic or Indus Valley culture. Buddha chose an Asvatta Tree for meditation because it was considered sacred even before Buddha. We see Pippaladan (Mr Asvatta Tree) in the Upanishads. We see Ficus leaves in Indus seals too.
Vishnu Sahasranama Hymn named all the three Ficus Tree species as Vishnu’s names. Amazing thing about the three trees is botanically all belonged to Ficus species (Ficus Religiosa= Asvatta/peepal; Ficus Indica= Nyagrodha or Banyan tree and Ficus Udumbara- Udhumbara)
Rig Veda refers to the mighty Banyan Tree as Maha Vriksha. Throughout Tamil Sangam literature, Banyan (Vata Vrksha) is praised as a tree where god resides. Hindu god Dkashinamurthy sitting under the tree in meditative posture, is found in all South Indian Temples.
Kalidasa’s Meghaduta Kavya also talks about Trees surrounded by raised platforms. This shows that sacred trees are worshipped from Kanyakumari to Kashmir. ( In my earlier posts I Have given the details. Please see the links)
–subham–
TAGS– Saptaparni, Zoroastrian, Cypress, Seven leaves, Saka Dwipa, Seistan, Saka
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ZOROAASTRIAN CYPRESS IN IRAN,
ஈரான் நாட்டை இந்துக்கள் ‘சக த்வீபம்’ (Saka Dwipa) என்று அழைத்தார்களா? அங்கு சக (Saka Tree) என்னும் மரம் வழிபடப்பட்டதாக இந்துக்கள் சொல்லுவது சரியா ?
காளிதாசனும் சங்க இலக்கிய புலவர்களும் சொல்லும் மர வழிபாட்டிலுள்ள ஒற்றுமை என்ன ? என்பனவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
இந்துக்கள் உலக நிலப்பரப்பை 7 பெரும் பிரிவுகளாகப் பிரித்து அவைகளுக்கு அங்கு முக்கியமாகக் கருதப்படும் தாவரம் அல்லது பிராணிகளின் பெயரைச் சூட்டினார்கள். இதை பார்த்து தமிழர்களும் ஐந்து செடிகொடிகள் பெயர்களை நிலத்துக்குச் சூட்டினார்கள்
இந்துக்கள் புஸ்தகங்களில் 7 த்வீபங்கள் (Sapta Dvipas) என்று குச , சால்மலி , ஜம்பு, பிலக்ஷ , கிரெளஞ்ச, சக , புஷ்கர த்வீபங்கள் சொல்லப்பட்டுள்ளன. இதில் நாவல் மரம் சிறப்பாக உள்ள நாவலந்தீவு (சம்ஸ்க்ருதத்தில் ஜம்பூத்வீபம் Jambu Dvipa) ) இந்தியா என்பதில் எவருக்கும் ஐயப்பாடு இல்லை.ஆனால் மற்ற கடல் சூழ்ந்த பகுதிகளை (த்வீபம்) அறிஞர்கள் வேறு வேறாகக் காட்டியுள்ளனர்.
இதை ஒன்பது த்வீபங்களாக வகுத்து கேது மாலா ஆகியவற்றியும் சேர்ப்பதும் உண்டு
Xxx
சக த்வீப குறிப்புகளை முதலில் காண்போம் :-
சக த்வீபத்தில் பெரிய ‘சக மரம்’ இருப்பதாக மஹாபாரதம் கூறுகிறது. அவர்கள் அந்த மரத்தைப் போற்றியதோடு சிவ பெருமானை வழிபட்டதாக பீஷ்ம பருவத்திலிருந்து 9-28 (Bhishma Parva, Mahabharata) அறிகிறோம் சிந்து நதிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதி இது என்பது கருத்து. ஆனால் ஈரானில் சிவன் வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை. அவர்கள் தீயை (Fire Worship) மட்டுமே துவக்கத்தில் வணங்கினர் ; வேதகால இந்துக்கள் அக்கினி வளர்த்து சோம ரசத்தை அதில் ஆஹுதி செய்தது போல பார்ஸி சமய(Parsis) மக்களும் செய்தனர். பிற்காலத்தில் மாக, மாகி (Magi, Magha) என்ற குருமார்கள் மூலம் சூரிய/ மித்ரா (Mithra Worship) வழிபாடும் அறிமுகப் படுத்தப்பட்டது. இவையும் வேதத்தில் உள்ளவைதான்.
சகர இன மக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து மூல்டான் , காஷ்மீர், குஜராத் ஆகிய பிரதேசங்களில் சூரியன் கோவில்களை நிர்மாணித்ததற்கு சான்றுகள் (Sun Temples in Kashmir, Gujarat, Multan) உள்ளன. ஆனால் சக தீவு என்பது ஈரான் என்று சொல்ல அதிகம் சான்றுகள் இல்லை. ஈரானில் புதிய மதத்தை – பார்சி மதத்தைப் பரப்பிய ஜராதுஷ்டிரா (Zarathustra – Zoroaster) எனப்படும் ஜொராஸ்டர் அக்கினி தேவன் கோவிலுக்கு முன்னதாக ஒரு சைப்ரஸ் மரத்தை (Cypress Tree) நட்டதாக ஒரு குறிப்பு உள்ளது. இது சக மரமா? இதைத்தான் மஹாபாரதம் சொன்னதா என்பதை ஆராய்வோம்.
ஈரான் நாட்டின் நடுவிலுள்ள யாஸ்ட்(Yazd) மாகாணத்தில் அபார்குக் என்னும் இடத்திலுள்ள சைப்ரஸ் மரத்தை ஜொராஸ்டர் மரம் என்று சொல்லி இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர் இது 4000 ஆண்டு பழமை உடையது என்று நம்புகின்றனர். இதனுடைய கிளைகள் காஷ்மீரிலும் நடப்பட்டதாக பிற்கால நூலான ஷா நாமா கூறும் . உலகம் முழுதும் சுமார் 150 வகை சைப்பிரஸ் மரங்கள் உள்ளன. இவை ஊசியிலை (Conifers) மரங்கள் என்று அழைக்கப்படும்
இவை உண்மையில் மஹாபாரதம் சொல்லும் சக மரம் என்றால் 4000, 5000 ஆண்டுப் பழமையை ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் ஜொராஸ்டர் நட்டு வளர்த்த மரம் என்றால் அவ்வளவு பழமை இருக்க முடியாது.
இந்த மரம் இன்று ஈரானில் இருப்பதாலும், சக மரம் காரணமாக சக த்வீபம் என்று அந்தப் பகுதி அழைக்கப்பட்டதாவும் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.
இப்போது ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் எல்லையாக அமைந்த சய்ஸ்தானின் (Seistan= Saka Sthana) பழைய பெயர் ‘சக ஸ்தானம்’ என்பதாகும். இதன் பாதி பகுதி இப்போது ஈரானில் உள்ளது. இதுவும் சக த்வீபம்தான் அந்தப் பகுதி என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் பழங்காலத்தில் ஒவ்வொரு இன மக்களும் மெதுவாக இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதால் இதுதான் அவர்களின் மூலஸ்தானமா என்றும் சொல்வதற்கில்லை . சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சக என்னும் பகுதி வேறு எந்த இடத்தையும் விட இரான் பகுதியையே சுட்டிக் காட்டுகிறது.
மத்திய கிழக்கில் ஏழு இலைகளைக் கொண்ட ஒரு மரமும் (Seven Leaves= Sapta Parni) சிற்பங்களில் உள்ளது. தமிழ் இலக்கியம் சொல்லும் ஏழிலைப் பாலை என்பது இதுவா என்று ஆராய்வோம். அது உண்மையானால் தமிழர்கள் – மத்திய கிழக்கு தொடர்பு பற்றி புதிய செய்திகள் கிடைக்கும்
ஏழிலைப் பாலை
IT LOOKS LIKE SOMA STAND IN INDUS SEALS
சாகுந்தலம் 1-25 சப்த பர்ண மர மேடை
பரி பாடல் 21-13 ஏழிலைப் பாலை (ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை)
சாளுக்கியன் சேந்தளூர் சாசனம் – ஏழாம் நூற்றாண்டு – சப்த பர்ண மரம்
ஏழிலைக் கிழங்கு என்பது மர வள்ளிக்கிழங்கு
7 இலைகளைக் கொண்ட சப்தபரணி மரம் இந்தியாவிலும் ஆசிய கண்டத்தின் பிறநாடுக லும் வளருகிறது தாகூர் ஸ்தாபித்த விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் இது பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்க்கு வழங்கப்படுகிறது . தேரவாத புத்தமதப்படி, இதன் கீழ்தான் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டது
ஏழிலைப் பாலையின் மணம் யானைகளுக்குப் பிடிக்காது என்று ஆனந்த விகடன் அகராதி சொல்கிறது
காளிதாசர் இயற்றிய ரகு வம்சத்தில் 4-23 வரும் பாடலின் பொருள் –
யானையின் மத ஜலம் போல நாற்றமுள்ள எழிலை மரத்தின் புஷ்பங்கள் மணத்தால் ரகு மஹாராஜாவுடன் வந்த யானைகளும் பொறாமை கொண்டு மத ஜலத்தை 7 அவயங்கள் வழியாகப் பெருக் கின.
இதே பொருளுள்ள இன்னும் ஒரு பாடல் ரகு வம்சத்தில் 5-48 உள்ளது .காளிதாசனின் சாகுந்தல நாடகத்திலும் இதந்த மரத்தை மேடைக்கு நடுவில் காண்கிறோம்
அசீரிய நாகரீகத்தில் (Nimrud in Iraq) 7 இலைகள் கொண்ட புனித மரம் வழிபடப்படுகிறது.
இவைகளை இராக் நாட்டின் நிம்ருத் நகர சிற்பங்களுடன் ஒப்பிட்டால் பொருத்தமாகவே இருக்கிறது. அங்கும் மரத்தின் புனிதத்தைக் காண்கிறோம். அவை சுமார் 3000 ஆண்டுப் பழமை ஆன சிற்பங்கள் அல்லது படைப்புகள்
சாகுந்தலத்தில் முதல் காட்சியில் இந்த மரம் வருகிறது அதைச் சுற்றி மேடை அமைக்கப்பட்ட செய்தியும் உளது. முக்கிய அல்லது புனித மரங்களைச் சுற்றி மட்டுமே மேடை அமைப்பர். அதன் கீழ் அமர்ந்து கூட்டம் நடத்த, தியானம் செய்ய அது பயன்படும்.
எப்படி கண்வ முனிவர் ஆஸ்ரமத்தில் இதைக் காண்கிறோமோ அதே போல பரிபாடலிலும் புனித திருப்பரங்குன்றத்தில் இந்த மரம் இருப்பதாகப் புலவர் பாடுகிறார்.
சோம ரச தாவரத்தையும் சில ரிக் வேத பாடல்கள் செம்மரம் என்று வருணிக்கிறது. மேலும் 15 வகை சோமம் பற்றிய குறிப்பும் ஒரு மந்திரத்தில் வருகிறது. பார்சி மத மக்கள் வேறு ஒரு தாவரத்தை சோமம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர். இவைகளை எல்லாம் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் 7 இலைகள் கொண்ட புனித மரம் ஒன்று எல்லோராலும் வழிபடப்பட்டது தெரிகிறது.
கி.மு 900 ஆண்டு சிற்பங்கள் இதைக் காட்டுவதால் இவை சோமம் அல்லது அதுபோன்ற ஒரு புனித மரம் என்று சொல்ல முடியும். இந்த சிற்பங்கள் உள்ள நிம்ருத் (Nimrud in Iraq) இராக் நாட்டில் உள்ளது.
ரிக் வேதம் ஆல மரத்தை மஹா வ்ருக்ஷம் என்று போற்றுகிறது. ஆனந்த விகடன் அகராதியும் மகா சையம் என்பதை ஆலமரம் என்று இயம்புகிறது.
உபநிஷத்தில் பிப்பலாடன் என்ற பெயர்
சிந்து சமவெளியில் காணப்படும் அரச மரம் புத்தருக்கு ஞானம் அளித்தது. அவர் அந்த மரத்தின் கீழ் தியானம் செய்யக் காரணம் அது இந்துக்களின் புனித மரம் என்பதால்தான். பிப்பலாடன் = அரச மரம் என்ற பெயரில் வேத கால முனிவர்கள் இருந்தனர். மேலும் அரசு, ஆலம், அத்தி ஆகிய மூன்றையும் விஷ்ணுவின் பெயர்களாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காண்கிறோம். இவை மூன்றும் தாவர இயலின் படி ஒரே பைகஸ் FICUS என்னும் பிரிவைச் சேர்ந்தவை!
காளிதாசன் சொல்லும் மர வழிபாடு தமிழ் இலக்கியம் நெடுகிலும் உளது கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அதைக் காண்போம் .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாடைக் காற்று சுடுகின்ற வேளை!
ச.நாகராஜன்
வாடைக் காற்று அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.
ஈங்கையின் மொட்டுக்கள் உள்ளனவே அவை உருகிய அரக்கைப் போல நிறத்தைக் கொண்டவை.
வட்ட வடிவமான நிறத்தைக் கொண்டவை.
அவற்றோடு விளங்கும் பஞ்சு போன்ற தலை பாகத்தை உடைய புதுப்பூக்கள் மலரின் மதுவைச் சுரக்கும்.
அந்தத் தேன் துளிகள் சொட்டுச் சொட்டாகக் கீழே விழும்.
அது பறந்து வருகின்ற வாடைக் காற்றோடு கலக்கும்.
புது மழை பெய்த காலம் அது. ஆகவே, நாளும் ஏரிட்டு உழுத கழனி முழுதும் புது நீர் நிரம்பி இருக்கும்.
அந்த ஈரமான நீரில் வாடைக் காற்று பட்டு, அலையும்.
அது மட்டுமல்ல, பெரிய ஊரின் வெளிப்பக்கமும் பறந்து அனைத்தையும் தழுவிக் கொள்ளும்.
இப்போது வாடைக் காற்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதாக ஆகி விட்டது!
தண் என்ற இந்தக் காற்று என் மேனியை நோக்கி அல்லவோ வருகிறது!
ஏ, வாடைக் காற்றே! உனக்கு எப்போதாவது நான் தீங்கு செய்வதற்கு மனதால் கூட நினைத்ததில்லையே!
மூங்கில் போன்றது என் இளம் தோள்கள். அவை பெருத்த தோள்கள்.
என்னை அணைத்து என் ஒளி பொருந்திய வளைகளை நெகிழச் செய்தவர் என்னவர்! என் காதலர்!
அவர் பொருள் சம்பாதித்து வருகிறேன் என்று போனாரே, என்னைப் பிரிந்து அல்லவா போய் விட்டார்.
அதனால் துணை இன்றித் தவிக்கிறேனே நான்!
யாருமில்லாமல் ஒரு பக்கமாய்த் தனித்திருந்து, சிறையில் இருப்பது போல வாடுகின்றேனே!
ஏற்கனவே இப்படி வாடி இருக்கும் என்னை, வாடைக் காற்றே,
இன்னும் சிறிது வருத்தாதே!
தலைவி உள்ளம் கலங்கிப் பாடுகின்ற பாடல் இது.
நற்றிணையில் 193வது பாடலாக மலர்கிறது இது:
“அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத்
துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ
நிறைநீர்ப் புனிற்றுப்புலம் துழைஇ ஆனாய்
இரும்புறம் தழூவும் பெருந்தண் வாடை!
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே!
பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தவெம் காதலர்
அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக
யாருமில் ஒரு சிறை இருந்து
பேரஞர் உறுவியை வருத்தா தீமே!”
வட்டு – வட்டம் ; ஈங்கை – ஈங்கை மலர்; புனிற்றுப் புலம் – ஏரினால் உழுத கழனி; இரும்புறம் – ஊரின் பெரிதான வெளிப்பக்கம்; இன்னொரு பொருள் – தலைவியின் நீளமான கூந்தல் தாழ்ந்து தொங்கியபடி இருக்கும் பின் பக்கம்!
ஒரு பெண்ணின் உள்ளத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கும் பாடல் இது.
ஈங்கை மலர் குளிர் காலமாகிய ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மலரும் தன்மை கொண்டது! ஆக தலைவி பாடுவது குளிர் காலத்தில் என்று ஆகிறது.
வாடைக் காற்றே, என்னை வருத்த வந்து விட்டாயே,
போ, போ, என்னைப் பிரிந்தாரே, என் காதலர் அவரைப் போய் வருத்து. என் ஞாபகத்தை ஊட்டு, அவருக்கு!
தென்றலும் வாடையும் தலைவனும் தலைவியும் சேர்ந்து இருக்கும் போது உடல் சூட்டைத் தணிக்கும்.
ஆனால் தனித்து இருக்கும் போது தண்ணிய காற்று உடம்பை நடுங்க அல்லவோ வைக்கிறது.
உடலை மட்டுமா நடுங்க வைக்கிறது, உள்ளத்தையும் அல்லவா நடுங்க வைக்கிறது!
சங்கத் தமிழ் தரும் ஆயிரக்கணக்கான காதல் காட்சிகளில் மாட்சி மிக்க காட்சி இது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
How many Gods are there in Hindu Religion? Ten years ago I published a post under ‘330 Million Gods’ (Matter given at the end)
33 is repeated in all the four Vedas of Hindus. But it is equally important in Buddhist and Zoroastrian religions. We know that Hinduism influenced them. When we compare the similarities between the ancient religion of Iran, also known as Parsi Religion or Zoroastrian religion, this is one of the points discussed by scholars of yester years.
Rig Veda, Buddhist and Avesta scriptures describe the Heaven as ‘the region of eternal light’. Vanaparva of Mahabharata also described the stars are nothing but holy souls. The Hindu belief is that holy souls become eternal stars.
Later Buddhist scriptures used the expression ‘heaven of 33 gods’ it is also found in Zoroastrian’s Avesta. More than half a dozen passages in the Rig Veda, the oldest book in the world, quote 33 gods. In some passages we see 33,330, 3309 etc. here is the list from 3 Vedas-
Rig Veda –
1-34-11; 1-45-2; 1-139-11;
3-6-9
8-28-1; 8-30-2; 8-39-9
9-92-4
Xxxx
Yajur Veda
BLACK YAJUR VEDA 1-4-10-1
WHITE YAJUR VEDA 14-31
Xxx
Atharvana Veda
10-4-27; 10-7-13, 23
Xxx
Later we see 33 gods in Brahmana books , Ramayana ,Mahabharata and the Puranas .
This was borrowed by the Buddha .
Who are 33 gods ?
Vasus 8
Adityas 12
Rudras 11
Prajapati
Daksha
xxx
330 MILLION GODS (posted on August 5, 2012)
From London Newspaper’s Q and A column
How many gods and goddesses are there in the Hindu pantheon?
Depending on how you look at it, the Hindu pantheon may consist of one Supreme Being and 330 million gods. In ancient times, it was held that there were 330 million living beings, given rise to the idea of 330 million deities or gods.
Of course, this vast number of gods could not have been worshipped, since 330 million names could not have been designed for them. The number was simply used to give a symbolic expression to the fundamental Hindu doctrine that God lives in the hearts of all living beings.
The misunderstanding arises when people fail to grasp the symbolism of the Hindu pantheon. For just as a single force in space can be mathematically conceived as having various spatial components, the Supreme Being or God, the personal form of the Ultimate Reality, is conceived by Hindus as having various aspects.
A Hindu deity (god or goddess; note the small “g”) represents a particular aspect of the Supreme Being. For example, Saraswati represents learning and knowledge. So if a Hindu wants to pray for knowledge and understanding, he prays to Saraswati.
Just sunlight cannot have an existence independent of the sun itself, a Hindu deity does not have a separate and independent existence from the Supreme Being.
Thus, Hindu worship of deities is monotheistic polytheism and not simple polytheism.
-Marion Kinder, Manchester ( Daily Mail, Saturday, 3rd Feb. 2001; Answers to Correspondents)