WRITTEN BY S NAGARAJAN Post No. 10,422 Date uploaded in London – – 8 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி.சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர் அவர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர். பாபா அவரிடம் கேட்டார்: “நானா! என்ன முனகுகிறாய்?” நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் பாபா: என்ன ஸ்லோகம்? நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம் பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு
நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை உரக்கக் கூறினார். “தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா | உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சி||”
பாபா; நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா? நானா: புரிகிறது பாபா; அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு. “சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து ஞானம் என்பதைக் கற்றுக் கொள்.பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம் அறிந்த ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள்” என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூறினார். பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம், வேற்றுமை,காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,
பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே விரிவாக விளக்கினார். பாபா:ப்ரணிபாதம் என்றால் என்ன? நானா:நமஸ்காரம் செய்வது! பாபா: பாதம் என்றால் என்ன? நானா:அதே அர்த்தம் தான்! பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர் அனாவசியமாக தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா? நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை! பாபா:சரி,ப்ரஸ்ன என்றால் என்ன? நானா:கேள்வி கேட்பது பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன? நானா: அதே அர்த்தம் தான்! பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால் வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட? நானா: எனக்கு என்னமோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை! பாபா: சரி சேவா என்றால் என்ன? நானா:சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல! பாபா:இதை விட வேறு ஒன்றும் இல்லையா? நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை! அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் – ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன் இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு ஞானம் காட்டப்படும் என்று இரண்டாம் அடியில் ஏன் கிருஷ்ணர் சொல்ல வேண்டும்? என்று கேட்ட பாபா பின்னர் ஞானம் என்ற வார்த்தைக்கு முன்னால் ஒரு அவக்ரஹத்தைச் (அதாவது ஒரு “அ” வைச்) சேர்க்கச் சொன்னார் சங்கராசார்யர் பாஷ்யத்தில் இது இல்லையே என்றார் நானா பாபாவோ இப்போது பொருள் நன்றாகப் புரியும் பார் என்று விளக்கலானார்.அதிசயித்துப் போன சந்தோர்கர் ஒன்றும் தெரியாது என்று நினைத்த பாபாவின் விளக்கதைக் கேட்க ஆரம்பித்தார். அருகிலிருந்தோர் அனைவரும் பாபா அருகில் குழுமி விட்டனர். **
WRITTEN BY LONDON SWAMINATHAN Post No. 10,421 Date uploaded in London – – 7 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்தில் வீடு பற்றி ஒரு துதி உள்ளது. அது தமிழ்க் கவிஞர் பாரதியாரின் ‘காணி நிலம் வேண்டும்’ கவிதை போன்றது . இரண்டிலும் பேராசை எதுவுமின்றி நியாயமான கோரிக்கை, கடவுள் முன்னர் வைக்கப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால் தமிழ் மொழி, கிரேக்க மொழி, லத்தீன் மொழி, பாரசீக மொழி , சீன மொழி இலக்கியங்கள் உலகில் தோன்றுவதற்கு முன்னர் இந்தப் பாடலை வேதகால முனிவர் ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் பாடியுள்ளார். வீடு கட்டும்போதும் பயணம் செய்யும்போதும் சொல்லும் துதி என்று மந்திரத்தின் கீழுள்ள அடிக்குறிப்பு கூறுகிறது. கிராமத்தை விட்டு வெளியேறும்போது ஒரு பயணிகள் கூட்டம் விடை பெறுவது என்றும் அடிக்குறிப்பு கூறுகிறது .முன்னுக்குப் பின், முரணாக இருக்கிறது
ஆ னால் இது கிருஹப் பிரவேச மந்திரம் என்றே தோன்றுகிறது. xxx
துதியிலுள்ள முதல் மந்திரம் நல்ல கண்ணுடன் நான் வீட்டுக்கு வந்துள்ளேன்; அஞ்சற்க .. நீங்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் . பொக்கிஷத்தை வென்று, சக்தியுடன், அன்புமிக்க எண்ணத்தோடு வீடுகளுக்கு வந்துள்ளேன்
மந்திரம் 2 இந்த வீடுகள் சுகம் அளிப்பவை ;பால் வளமும் சக்தியும் பெற்றவை .செல்வ வளம் பெற்று உறுதியாக நிற்கும் அவை எங்கள் வரவை அறியட்டும். மந்திரம் 3 நல்ல நட்புள்ள இதயங்கள் வாழும் இந்த வீடுகள் எங்கள் வரவை அறியட்டும் . வெளியிலிருந்து வருவோர் எண்ணியுள்ள வீடுகளுக்கு இந்த விஷயத்தை அறிவிக்கிறோம்.
மந்திரம் 4 செல்வ வளம் கொழிப்போரே , மகிழ்ச்சியோடு இனிய பலகாரங்களை உண்டு மகிழ்வோரே! எப்போதும் பசிப்பிணி இல்லாதிருக்க வாழ்த்துகிறோம். தாகம் என்பது இல்லாமல் இருக்கும் அளவுக்கு நீர் வளம் கிடைக்கட்டும். மந்திரம் 5 ஆடுகளும் மாடுகளும் இங்கே பெருகட்டும் உணவும் அமிர்தமும் செழிக்கட்டும் மந்திரம் 6 வீடுகளே , உணவு அதிகரிக்கட்டும். சிரிப்பொலி கேட்கட்டும் ; பசிப்பிணி இல்லாது ஒழியட்டும்; தாகம் என்பதேயில்லாத அளவுக்கு நீர்வளம் சிறக்கட்டும் எங்களைக் கண்டு அஞ்சற்க. xxxx
இதை வெளியிலிருந்து வருவோர் சொல்லுவதா ? விடைபெற்றுச் செல்லுவோர் சொல்லுவதா ? தேவதைகள் ஆசீர்வாதம் செய்கின்றனவா ? என்ற கேள்வியை எழுப்பினால். கடைசியிலுக்குள்ள ஆசீர்வாதம் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது; மற்ற புரோகிதர்கள் இப்படி வாழ்த்தும் போது சக புரோகிதர்கள் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவதை இன்றும் கல்யாண, மங்களைச் சடங்குகளில் காண்கிறோம்.
வேத மந்திரங்களை மொழிபெயர்த்த வெள்ளையர்களுக்கு நம் சடங்குகள் பற்றித் தெரியவும் தெரியாது; தெரிந்தாலும் நம்பிக்கையும் கிடையாது; நம்பிகை இல்லாதது கூடத் தவறில்லை; இந்து மதத்துக்கு எதிரான கொள்கைகளுக்கு ஜெ போடுவதற்காக பல்கலைக் கழகங்களில் காசு கொடுத்து அமர்த்தப்பட்டவர்கள். இந்தியாவுக்கு வராத மாக்ஸ் முல்லரை, இந்தியாவையும் இந்துமதத்தையும் தகர்க்க, கிழக்கிந்தியக் கம்பெனி கூலிக்கு அமர்த்தினர். ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சம்ஸ்க்ருதம், இந்து மதம் தொடர்பாக அமர்த்தப்பட்டவர்கள், அந்தத்துறையின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அதில் ஒரு நிபந்தனை கிறிஸ்தவ மதத்தை தூக்கி நிலை நிறுத்த வேண்டும் என்பதாகும். ஆகையால் மாக்ஸ்முல்லர் கும்பல் கிறிஸ்தவ மதம் பற்றி தவறாக ஒரு சொல் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்தனர்; அவர்கள்தான் இந்துக்கள்; அவர்கள் பூர்வ குடிகளை விரட்டியடித்தனர் என்ற பொய்மை வாதத்தை இறுதி மூச்சு உள்ளவரை சொன்னார்கள்; இதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலோ, அதற்கும் காலத்தால் முந்திய சம்ஸ்க்ருத இலக்கியத்திலோ எள்ளளவும் ஆதாரமே இல்லை. . ஆரிய-திராவிட வாதத்தை காந்தி, அம்பேத்கார், விவேகானந்தர், பாரதியார் முதலியோர் எள்ளி நகை ஆடினர் . இந்த அயோக்கியக் கும்பலுடன் மார்க்ஸீயக் கும்பலும் சேர்ந்து நாட்டைக் கூறுபோடப் பார்த்தனர்; இதுவரை பலிக்கவில்லை (.சிந்து நதி என்ற சொல்லே சங்கத் தமிழில் இல்லை!! )
இந்துமதத்தைப் பின்பற்றுவோருக்கு “கிருஹப் பிரவேசம்” என்பது என்ன என்று தெரியும் மங்கள கோலம் இடுவர்; மாவிலை, கமுகு, தென்னோலையோடு தோரணம் கட்டுவர் ; குத்துவிளக்கு ஏற்றுவர்; கடவுள் படத்தை வீட்டினுள் முதலில் வைத்து பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்லுவர் ; மணி ஓசை எழுப்பி துஷ்ட தேவதைகளை விரட்டுவர்; பெண்கள் குலவை இடுவர்; பாலிகை தெளித்து செடிகள் வளர்ந்தவுடன் முளைப்பாரியை நீர்நிலைகளில் கரைப்பர். எல்லாம் வளர்ச்சி, வளம் பற்றியவை .
அதர்வண வேத மந்திரங்களுக்கு சரியான பொருள் எழுத வேத பண்டிதர்கள்,பல்துறை வித்தகர்களின் மஹாநாட்டைக் கூட்டவேண்டுவது மிகவும் அவசியம் !
இதோ பாரதி பாட்டு ; தமிழ் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கமே சொல்ல வேண்டாம். அதர்வண வேத மந்திரத்திலுள்ள கருத்துக்களை பாரதியும் சொல்லும் இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளேன் . உணவு வளம், நீர்வளம், மகிழ்ச்சி, இனிமை, ஆடல் பாடல், வையம் முழுதும் வாழ்க — இக்கருத்துக்களைச் சொல்லி இயற்கை சூழ்ந்த ஒரு வீடு ஆத்ம திருப்தி தரும் என்று பாடுகிறார் பாரதி.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும், – அங்கு தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்கு கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும், – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந் தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் – எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டுதர வேணும் – அந்தக் காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன் காவலுற வேணும், – என்றன் பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திட வேணும். —மகாகவி பாரதியார்.
–subham– tags- காணி நிலம் வேண்டும் , பாரதியார், நல்ல, வீடு , அதர்வண வேதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
All of us look at sun and moon going into sea or coming out of sea if you live in a coastal area. In Kanyakumari , the southernmost tip of India, tourists throng to see such memorable scene. We were waiting for an hour to see the sun disappearing/setting in Santorini island in Greece. Unless you go well in advance you wouldn’t get a vantage point to watch it. Vedic rishsis/seers were all over India and they speak about hills and vales, rivers and oceans, stars and planets and sun and moon.
All of us watch the full moon and sun; but only a Vedic seer described it beautifully in a poem. He gave free rein to his imagination. Sun and moon as two youngsters are playing by hiding in sea and coming out of it!! In other words, played Hide and Seek game. As children all of us have played hide and seek. Parents do play this game with their children But look at what a Vedic seer say about it:-
HYMN LXXXI; AV; BOOK 7; SUKTA 396
A hymn to the New Moon
1.Forward and backward by their wondrous power move these two youths, disporting, round the ocean. One views all living things, and thou, the other, art born again arranging times and seasons.
2.Thou art re-born for ever new: thou marchest, ensign of days, in forefront of the mornings. Marching thou dealest to the Gods their portion. Thou lengthe- nest, Moon! the days of man’s existence.
3.O spray of Soma, Lord of Wars! all-perfect verily art thou. Make me all-perfect, Beauteous One! in riches and in progeny.
4.Thou art the New Moon, fair to see, thou art complete in every part. May I be perfect, fully blest in every way in steeds and kine, in children, cattle, home, and wealth.
5.Inflate thee with his vital breath who hathes us and whom we detest. May we grow rich in steeds and kine, in children, cattle, houses, wealth.
5.With that unwasting stalk which Gods, unwasting Gods, in- crease and eat, p. a307 May Varuna, Brihaspati, and Indra, the Lords and Guardians of the world, increase us.
XXX
PUN ON WORDS
FOREIGN GANG UNDER MAX MULLER GOT CONFUSED IN TRANSLATING AND INTERPRETING VEDAS.
The reason being they started translating them to denigrate or belittle Hinduism.
They did not believe in what Hindus believed. Moreover, they believed a faith which has quite opposite views.
Above all, those idiots wrote from foreign soil. Though a few people like Ralph T H Griffith lived in India, they did not practise Hinduism. Unless you practise something you wouldn’t know the intricacies, significance and the symbolic meanings in such things. Max Muller never visited India. Max Muller gang never watched anything Hindu. May be, he may have seen some pictures.
Vedic rishis sing and dance saying we love talking in mysterious language; coded language; symbolic language. They just use numbers and leave it for your interpretation. Many thousand years after Vedic seers, Tamil Siddhas used that symbolic language. I have never seen such poems in any other language in the world. The number f poems with NUMBERS are enormous in the Rig Veda, the oldest book in the world, dated between 4000 BCE and 1500 BCE.
There is another difficulty in translating or interpreting Vedas. Several words, used quite often, have two or three meanings. Vedic rishis enjoyed pun on words like SINDHU, PASU, AYAS, MANU, SOMA, SEA/SKY, SARASVATI, INDRA, SHIP, ASVA etc
Actually we also do use such words with double meaning; every language has it. But one who is in the field, knows what one wants to say in a particular circumstance.
xxx
MY COMMENTS
Here is my comment. Two youths are playing in the sea. Both sea and sky are blue in colour. So foreigners translated all seas as sky in the Vedas. That is a blunder. In this sukta also they did it. They say that two youths are playing in the sky. But it would make better sense if you imagine the real sea. Youths do this in village ponds and wells. They do play hide and seek in water and on the ground. One must underline the words
Forward and backward by their wondrous power move these two youths, disporting, round the ocean. One views all living things, and thou, the other, art born again arranging times and seasons.
The footnote says it is already in the Rig Veda 10-85-18
Most of the Atharvana Veda poems are taken from the oldest book in the world Rig Veda and presented with some minor changes. I don’t know why they did it.
Stanza /Mantra 2
Here is a beautiful description. Moon is described as the FLAG of the day. It announces the arrival of sun and disappears/sets. Hindus invented FLAG. It is in Harappan seal. Flags are in Ramayana and Mahabharata. Even today if you go to Tamil Nadu you can see the carriers of flags and other symbols go first, followed by drums on bulls, elephant and camels. Vedic pundits reciting Vedas also are part of the procession. Those who have not seen such things, couldn’t interpret Vedas properly. In North India, all such things gone into oblivion because of continuous foreign attacks from outside India.
There is another important statement in mantra two- YOU/moon LENGHTHEN THE DAYS OF MAN’S EXISTENCE.
This is a scientific matter which neither Russian nor American scientists have found yet. Throughout the Vedas, Moon is associated with plants’ growth. Soma stands for Moon and Soma herb. Mysterious properties of Soma plant are described all over the Vedas.
In Bhagavad Gita 9-20, Lord Krishna says
Those who drink Soma juice are cleansed of sin. By drinking the juice in fire sacrifices they go to heaven.
Greatest of the modern Tamil poets, Subrahmanya Bharati also praised Soma juice in two verses.
Dalavaipuram Copper Plates of Pandya Parantaka Veera Narayanan of 9th century CE praised ‘Manosuddha Somabana Kataka Soma Yaji’. One who drinks the Soma Juice is purified in Mind. It is an elixir which elevates you spiritually.
Kanchi Paramacharya in his Vijaya Yatra book says those who do Soma Yaga (Fire sacrifice) are given white umbrella. Sanskrit literature and later Sangam Tamil literature also show white umbrella are held only by emperors.
Now I wonder the Soma here means the herb Soma or the Moon Soma. Moon associated with growth is yet to be confirmed by science. Seeing moon immediately after new moon day and full moon day are considered holy. If one sees 1000 such full moons then it leads to a great celebration.
Foreigners don’t know a thing about this Great Hindu ceremony known as Sahasra Chandra/Soma Darsana Ceremony.
Here is an old news item from year 2008:–
Sahasra Poorna Chandra Darshana Santhi Mahotsavam
Bhagawan Sri Sathya Sai Baba , the Divine incarnation of the Kali Yuga is entering the auspicious 83rd year of His advent on 23rd November, 2008. This holy event is an occasion providing us a unique opportunity to observe and celebrate it in a grand and auspicious manner.
The celebration of the completion of 1000 full moon days of the divine incarnation is a unique and auspicious event.
Words can’t explain the kind of bliss that thousands of devotees witnessed during the last day of Sahasra Poorna Chandra Darshana Shanthi Mahotsavam.
Apart from the many thousands, there were many Swami ji’s belonging to various temples, spiritual organisations and Institutions. The atmosphere was totally Divine and why not – it was the day to thank the DIVINE for coming to His world, and witnessing 1000 full moons in this BODY.
Kanchi Shankaracharya Sri Jayendra Sarasvathi attended the event along with other Heads of Mutts.
In short, moon is associated with growth and longevity.
Mantra 3
Here moon is linked with soma herb.
Lord of War is Moon! In all cultures planet Mars is associated with war. The colour of the planet is also blood red. But here, moon is called God of War! The footnote adds “probably because the first quarter of the moon was considered a favourable time for predatory excursions”.
But I think moon is associated with mind according to Vedas (RV.10-90). Next mantra is also about the tidal force
(High tides and low tides are caused by the moon. The moon’s gravitational pull generates something called the tidal force. The tidal force causes Earth—and its water—to bulge out on the side closest to the moon and the side farthest from the moon. These bulges of water are high tides.)
Mantra 4
Special fire sacrifices are done on New Moon and Full Moon days. Goddesses Anumati and Raka are worshipped by Vedic Hindus. And the Yagas are called Darsa purnamasa. New moon day called Amavasya is also important. Some people start the Hindu month from Amvasya . Here First seen is Amavasya. And then the seer prays for children, cattle, horse, house and wealth it made more sense when they did special sacrifices. but later they left the fire sacrifice and started Purnima Puja. It is very popular among Devi worshippers. They do Pur nami puja with flowers and offer cooked Prasad. (I have seen it performed by Swamiji Krishna of Ayakkudi near Tenkasi)
New moon is described as ‘complete’. For Hindus it is a complete day. They start new ventures on New Moon day.
Mantra 5
Here the seer asks the moon to bulge, surge. We know it happens on both full moon and new moon days. It disturbs people who are already suffering from mental health problems. And the argument is human body contains 70 percent water like earth. So the moon affects humans as well, particularly on Full moon and New moon days.
Here also the seer prays for all good things.
Mantra 6
Now there is a clear reference to Soma juice and its effect on Devas/ heavenly people. Like gods we must also increase/ grow prays the mantra. In short give us growth
The important thing is previous two mantras are also about Full moon and New moon days.
So it is better to look at them together. (I am giving them separately)
–subham–
tags- Moon, Sahasra Chandra, Soma, Hide and seek,Sun and moon, Growth
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 6-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஷீர்டி சாயிபாபா! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
பாரதம் கண்ட அற்புத மகான்களின் வரிசையில் ஷீர்டி சாயிபாபாவின் பெயர் தனி இடத்தைப் பெறுகிறது.
ஏனெனில் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் அவர் பெரும் வழிகாட்டியாக, மகானாக, அருளாளராக விளங்கினார். மஹராஷ்டிரத்தில் பாத்ரி என்று ஒரு கிராமம். அங்கே கங்கா பாவத்யா, தேவகிரியம்மா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். சிறந்த சிவ பக்தர்களான அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் கங்கா பாவத்யா வெளியில் சென்றிருந்த போது ஒரு முதியவர் வீட்டின் கதவைத் தட்டி, “மழை அதிகமாக இருக்கிறது. இன்று இரவு மட்டும் இங்கு தங்குகிறேன்” என்றார். தேவகிரியம்மா சம்மதித்தார். திண்ணையில் அவர் படுத்தார். சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி உணவு கேட்டார். தேவகிரியம்மாவும் உடனே தந்தார். அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. வந்த முதியவர் என் கால்கள் வலிக்கின்றன. அமுக்கி விட வேண்டும் என்றார். குழப்பத்தில் ஆழ்ந்தார் தேவகிரியம்மா. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சமயம் கதவு தட்டப்பட ஒரு பெண்மணி நின்றிருந்தார். நான் கால்களைப் பிடித்து விடலாமா, இந்த முதியவருக்கு என்று கேட்டார் அவர். சந்தோஷமாக சரி என்றார் தேவகிரியம்மா. அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு மெய் சிலிர்த்தது.வந்த முதியவரும் பெண்மணியும் அங்கு இல்லை. பார்வதி பரமேஸ்வரன் காட்சி தந்தனர்.
“உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும்.மூன்றாவதாக நானே வந்து பிறப்பேன்”
என்று கூறி அருள் பாலித்தார் சிவபிரான்.அப்படியே நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக தேவகிரியம்மா இருந்த போது சிவபிரான் தனக்கும் தரிசனம் தர வேண்டுமென்று கங்கா பாவத்யா காடு மேடுகளில் அலைய ஆரம்பித்தார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற தேவகிரியம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். ஆனால் கங்கா முன்னால் சென்று கொண்டே இருக்கவே, குழந்தையை இலைகளின் மீது வைத்துச் சென்றார் தேவ்கிரியம்மா. அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீம் பக்கீர் எடுத்து தன் கிராமமான மன்வாத்தில் வளர்க்கலானார். பின்னர் குழந்தை வளர்ந்து சிறுவனான போது, அந்தச் சிறுவனை வெங்குசா என்பவரிடம் கொடுத்தார்.
சாயிபாபா 1838ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று சமாதி எய்தினார்.
இடைப்பட்ட 80 ஆண்டு காலத்தில் உலகில் அவர் நிகழ்த்திய லீலைகள் ஏராளம்.
16ஆம் வயதில் அவரது அருள் சக்திகள் வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. அவர் மீது செங்கல்லை விட்டு ஒருவன் எறிய அது அப்படியே அந்தரத்தில் நின்றது.
இதைத் தொடர்ந்து, அவரை அணுகி நூற்றுக் கணக்கானவர்கள் வந்து அருளாசி பெறலாயினர்.
அவரது பெயர் எப்படி ஸாயிபாபா ஆனது? இதற்கு பி.வி.நரசிம்மஸ்வாமி ஒரு விளக்கம் தருகிறார்.
ஸாயின் என்ற பாரசீக வார்த்தைக்கு ‘ஸ்வாமி’ என்று பொருள். பாபா என்ற ஹிந்தி வார்த்தைக்கு அப்பா என்று பொருள். ஆகையால் ஸாயிபாபா என்றால் அன்பிற்குரிய ஒரு ஸ்வாமி அல்லது யதி என்று அர்த்தமாகிறது.
ஸாயிபாபாவின் குரு யார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் ராதாபாய் தேஷ்முகீன் என்ற பெண்மணி பாபாவிடம் தனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டி வற்புறுத்தினாள்.அவரோ அதை ஏற்கவில்லை. உடனே அந்தப் பெண்மணி உபதேசிக்கவில்லை என்றால் அன்ன ஆகாரமின்றி உயிரை விட்டு விடுவேன் என்றாள். இதைக் கேட்டு உருகிய பாபா தன்னைப் பற்றி அவளிடம் சொன்னார்.
“நான் பன்னிரெண்டு வருஷ காலம் என் குருவிடம் பாத சேவை செய்தேன். அவரைப் போல ஒரு கருணாநிதியைக் காண முடியாது. அவர் எனக்கு எந்த வித உபதேசமும் செய்யவில்லை. அவர் தனது கடாக்ஷ வீக்ஷண்யத்தால் என்னைக் காப்பாற்றி வந்தார்.குருவிடம் அனன்ய சிந்தை செய்தால் அவரையே பரமார்த்தம் என்று எண்ணினால் அதுவே போதும்” என்று கூறினார்.
வாழ்நாள் முழுவதும் பக்தர்களுக்கு அவர் அருளிய வார்த்தைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று சிரத்தா இன்னொறு சபூரி. அதாவது சிரத்தையும் பொறுமையும், அவ்வளவு தான்! ‘நானிருக்க பயமேன்’ என்பது அவரது அபய வாக்கு!
“உலகில் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நானா, உன்னை மட்டும் ஏன் அழைத்தேன் தெரியுமா, நீயும் நானும் சென்ற நான்கு ஜென்மங்களாக நெருங்கி இருந்து வருகிறோம். உனக்கு அது தெரியாது. எனக்குத் தெரியும்” என்று அணுக்க பக்தரான நானாவிடம் ஒரு முறை அவர் கூறினார்.
இப்படி தனக்கும் பக்தர்களுக்கும் உள்ள நெருங்கிய உறவை ருணானுபந்தம் என்று அவர் கூறுவார்.
ஒரு நாள் காலை 8 மணி. பாபா ரஹதா நதிக்கரையோரம் அமர்ந்திருக்க வழிப்போக்கன் ஒருவர் அவரிடம் வந்து அமர்ந்தார் தனது வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தவளை ஒன்றின் ஓலக் குரல் கேட்டது. வந்த வழிப்போக்கரை அந்தக் குரல் வந்த திசையில் போகச் சொன்னார் பாபா. அங்கு ஒரு பாம்பு தவளை ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் பார் என்றார். வழிப்போக்கர் அந்த திசையில் சென்று பார்க்க ஒரு பெரிய பாம்பு ஒன்று தவளையை விழுங்க முயல்வதைப் பார்த்த அவர் ஒடி வந்து இன்னும் பத்து இருபது நிமிடங்களில் எல்லாம் முடிந்து விடும். தவளையை கரும்பாம்பு விழுங்கி விடும் என்றார்.
பாபாவோ, “ நானே அதன் தந்தை. அப்படி சாக விட்டுவிடுவேனா” என்று கூறி விட்டு அந்த பாம்பு இருந்த இடத்திற்குச் சென்று கூவினார்:
“ஹே, வீரபத்ரப்பா, இன்னும் கூட உன் எதிரி பசப்பா மீது உனக்கு இரக்கம் வரவில்லையா? இப்படிச் செய்ய நீ வெட்கப்பட வேண்டும்” என்றார்.
உடனே பாம்பு தவளையை விட்டு விட்டுச் சென்று மறைந்தது.
வழிப்போக்கர் ஆச்சரியப்பட்டு வீரபத்ரப்பாவின் கதையைக் கேட்க, வீரபத்ரப்பாவுக்கும் பஸப்பாவிற்கும் சென்ற ஜென்மத்தில் நடந்த சண்டையை விரிவாக எடுத்துரைத்தார் பாபா. தனது சொற்களைக் கேட்டு வெட்கப்பட்டு வீரபத்ரப்பா விலகி ஓடியதாகவும் தெரிவித்தார்.
இன்னொரு முறை ஒரு ஆட்டுக்குட்டியை அன்போது அணைத்துக் கொண்டார். அது அவரது பழைய சிஷ்யன். தன் அன்பைத் தெரிவித்து ஆசி தந்தார். எத்தனை ஜென்மமானாலும் உங்களைக் கை விட மாட்டேன் என்பது அவர் பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். இது தான் பந்தத்தினால் ஏற்பட்ட கடன் – இதுவே ருணானுபந்தம் என்றார் அவர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
There is a very interesting poem/hymn on house, house warming and a traveller in the Atharvana Veda. This fourth Veda contains poems and statements on various subjects. One would be amazed to see that the Vedic seers have sung such poems in Sanskrit on various themes before Greek, Tamil Hebrew, Chinese , Persian and Latin literature appeared on the horizon. Though we have Old Testament , Zend Avesta and fragments of Chinese and old Greek matter on certain things none of them is dated before 1000 BCE, the date given to Atharvana Veda (AV) even by the conservative foreigners who translated Vedas.
Since most of the foreigners have no first-hand knowledge of Hindu way of life, their translation and interpretation are not correct. Moreover, they looked at them with a critical eye rather than appreciative.
I have given Ralph TH Griffith’s translation here. If we compare it with Tamil poet Bharati’s poem on House, who was well versed in Vedic literature it would bring out the meaning in a better light. Bharati has appreciated all that is in the Vedas and asked every one to beat the Vedic drum so that it would roar in all the eight directions on earth.
What are the words we find in AV hymn?
Delightful Houses, Rich in Power, Glad and Joyful,
Store of Milk, Replete with Wealth, Standing firm, Dwellers with Friendly Heart, Delightful Sweets, Friends, Freedom from Hunger, Freedom from Thirst, Kind Greetings, Cattle, Food, Peasant Drink, Full of Refreshment, Full of Charms, Full of Laughter, Full of Felicity, Ever free from Hunger, Ever free from Thirst, Happy Fortune, Abundant Growth
In one sentence A Heaven where there is happiness,food and water.
Even if you are asked to give a speech at a House Warming Party or Inauguration of a New Housing Block in your city, you may not remember all these positive words.
It is amazing to see that one community in the world known as Brahmins have passed them from one generation to another for thousands of years! One must be grateful to them for ever and it is Hindu’s duty to carry these positive thoughts to generations to come.
xxxx
Read the Vedic poem and then the poem by Tamil poet Bharati
Hymns of the Atharva Veda, by Ralph T.H. Griffith, [1895], at sacred-texts.com
HYMN LX, Book 7, AV (Suktam No.375)
A parting traveller’s address to the houses of his village
1.I, prudent, bringing power, a treasure-winner, with amicable eye that strikes no terror, Come, praising and kind-thoughted, to these houses: be not afraid of me, be glad and joyful.
2.Let these delightful Houses that are rich in power and store of milk, Replete with wealth and standing firm, become aware of our approach.
3.These Houses we invoke, whereon the distant exile sets his thought, p. a296 Wherein dwells many a friendly heart: let them beware of our approach.
4.Thus greeted, ye of ample wealth, friends who enjoy delightful sweets. Be ever free from hunger, free from thirst! Ye Houses, fear us not.
5.Kind greeting to the cattle here, kind greeting to the goats and sheep! Then, of the food within our homes, kind greeting to the plea- sant drink!
6.Full of refreshment, full of charms, of laughter and felicity, Be ever free from hunger, free from thirst! Ye Houses, fear us not. Stay here, and come not after me: prosper in every form and shape. With happy fortune will I come! Grow more abundant still through me!
xxx
This poem is interpreted in two ways.
The footnote says – The hymn is used as a charm to inaugurate the construction of a house and on starting a journey.
But I would interpret it as a House Warming Speech and saying Good Bye to visitors who travelled long way to attend the Grahap Pravesa Ceremony (HOUSE ENTERING CEREMONY)
More in my comments at the end.
Xxx
Tamil Poem by Poet Bharati; Translated into English
A Plot of Land
1.A plot of land – Parasakti
A plot of land I beg to thee;
With pillars beautiful and bright
And rising stories gleaming white
Build thou for me a castle there ;
May coconut trees wave their green leaves fair,
And their delicious milk supply
While springs refreshing gurgle by .
2. Gren coconut trees, these do I require
Some ten or twelve beside me there;
And like a soft and pearly shower
Bright moonbeams send thou me, (Great Power)
And cause within my ears to fall
The distant cuckoo’s gentle call ;
Do thou send me evening breeze
That softly fans, my heart to please.
3.A faithful wife give thou to me ,
In all my songs to mingle free;
And bring us poetry divine,
That our delights it may refine;
In that most solitary space
Great Mother guard us with thy grace
And grant that my gift of song
My sceptre over the world be strong
—Translated by Professor Hepzibah Jesudasan
Though it is not a word by word translation we get the exact meaning.
In short, a house where one will have happiness and water and milk/food in plenty.
So the Vedic thoughts are echoed in this poem, though it came many thousand years after the Vedic seers. I have underlined the words to highlight the same positive thoughts found in the AV.
Xxxx
My Comments:–
Only a Hindu would understand it!
A Hindu’s House Entering Ceremony known as ‘Gruha Pravesam’ consists of several rituals:-
He has to consult an astrologer or a priest to choose an auspicious day and auspicious time.
The family enters the house using their right foot first .
The house is decorated with Rangolis/Kolam with auspicious signs.
The house has festoons with Mango leaves, Banana Plants and other auspicious flowers.
An oil lamp in front of God’s pictures is lighted by the women folk, who is married and living with her husband.
A cow is asked to enter the house first. Its dung and urine are considered very auspicious.
If anyone is interested in rituals, they hire a priest and he recites mantras for purification with water.
In all auspicious Hindu ceremonies Hindu women make Palikai, i.e. a certain number of pots filled with grains/seeds are sprinkled with water. When they grow and the little seedlings come out, they are taken to the river or village pond or well, they are dissolved there. This is how the propagation of plants was done in the olden days.
In South India, coconut, arecanut, betel leaves are available in plenty and they are also used .
Also note that neither the Vedic Rishi/seer nor Bharati was greedy; they say what is needed for a small family.
XXXX
BHARATI’S POEM IN TAMIL
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும், – அங்கு தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்கு கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும், – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந் தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் – எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டுதர வேணும் – அந்தக் காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன் காவலுற வேணும், – என்றன் பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.
—மகாகவி பாரதியார்.
–subham–
tags- House, Atharva Veda, Bharati, House warming, Gruha Pravesa,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 5-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!
திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்
கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடனாகி
இயல்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நவகிரகங்களில் தெய்வீக அறிவுக்கும் ஞானத்திற்கும் அதிபதியான குரு பகவானின் சிறப்புத் தலமும் பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் ஒன்றாக அமைவதுமான திரு இரும்பூளை எனப்படும் ஆலங்குடி திருத்தலம் ஆகும். தமிழகத்தில், கும்பகோணத்திற்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமம் : ஸ்ரீ காசி ஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயர்
அம்மன் : ஏலவார்குழலி ஸ்தல வ்ருக்ஷம் : பூளைச் செடி
தீர்த்தம் : அமிர்த புஷ்கரணி விசேஷ மூர்த்தி: குரு தக்ஷிணாமூர்த்தி
விநாயகர் : கலங்காமல் காத்த விநாயகர்
இத்தலத்தில் ப்ரம்ம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம் இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்கள் உள்ளன.
இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு. பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் உருவாகவே அதைக் கண்டு தேவர்கள் அஞ்சி நடுங்கினர். சிவபிரான் தன் தோழராகிய சுந்தரரைக் கொண்டு விஷத்தைக் கொண்டு வரச் செய்து அதைக் குடித்து தன் கண்டத்தில் அடக்கினார். அதனால் இத்தலம் ஆலங்குடி என்னும் பெயரைப் பெற்றது. இறைவன் ஆபத்சகாயர் என்னும் திருப்பெயரைப் பெற்றார். இங்கு விஷம் தீண்டி யாரும் இறப்பது கிடையாது.
இங்குள்ள விநாயகருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. கஜமுகாசுரனால் தேவர்களுக்கு நேர்ந்த இடர்களைக் களைந்து அவர்களைக் காத்தமையால் இவர் கலங்காமல் காத்த விநாயகர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
உமாதேவி தவம் செய்து இறைவனைத் திருமணம் செய்து கொண்ட தலம் இது.
ஒரு முறை கைலாயத்தில் பார்வதி தேவி தனது தோழிகளுடன் பந்தாடிக் கொண்டிருந்த சமயம், உயரப்போன பந்தைப் பிடிக்க கையை உயரத் தூக்கவே வானவீதியில் வலம் வந்து கொண்டிருந்த சூரியன் தன்னைப் பார்த்துத் தான், அம்பிகை நிற்கச் சொல்வதாகக் கருதி நின்றான். அதனால் அவன் தொழில் தடைப்பட்டு உலகம் ஸ்தம்பித்தது. அவன் சிவபிரானிடம் முறையிடவே அவரிட்ட சாபத்தின் காரணமாக அம்பிகை பூலோகத்தில் காசி ஆரண்ய தலமான இத்தலத்தில் அவதரித்து தவம் செய்து சிவபிரானைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த இடம் இன்று திருமண மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அம்பாளின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, லக்ஷ்மி, கருடன், அஷ்டதிக் பாலகர்கள், ஐயனார் வீரபத்திரர் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்களை நிறுவி இங்கு வழிபட்டனர். முசுகுந்த சக்ரவர்த்தி, சுவாசனன், திருஞானசம்பந்தர், சுந்தரர் உள்ளிட்டோர் வந்து வழிபட்ட தலம் இது.
முசுகுந்த சக்ரவர்த்தியைப் பற்றிய ஒரு வரலாறும் இத்தலம் பற்றி உண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி தன் மந்திரியும் சிறந்த சிவபக்தருமான அமுதோகர் என்பவருடைய சிவ புண்யத்தில் பாதியையாவது தருமாறு வேண்டினார். அவரோ மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னன் அவர் தலையை வெட்டும் படி உத்தரவிட்டான். கொலை செய்ய வந்தவர்கள் வாளை எடுத்தவுடன் சிவபிரானின் ஆணையால் அவர்கள் உயிர் அக்கணமே நீங்கியது. உடனே அமுதோகர் என்ற சப்தம் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அரசன் வியந்தான். தான் செய்த தவறை உணர்ந்தான். அபசாரம் நீங்க இத்தலத்தில் வந்து வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான்.
கோவில் ஊரின் நடுவே, நான்கு புறமும், தாமரை பூத்திருக்கும் அகழி சூழ, உயரமான மதில்களுடன் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கோவிலில் உள்ளே பிரவேசித்ததும் கலங்காமல் காத்த விநாயகர் மேலக்குடவறையில் அமைந்து காட்சி அளிக்கிறார். எதிரே உள்ள முதல் பிரகாரத்தில் அம்பாளின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மஹாமண்டப வாயிலில் கர்பக்ருஹத்தில் கிழக்கு நோக்கி ஆபத்சகாயர் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாகிய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் அமைந்து தரிசனம் தந்து அருள் பாலிக்கிறார்.
குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழியே குருவின் பெருமையை நன்கு உணர்த்தும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி குரு. உடலில் சதை இவர். வடக்கு திசை குருவிற்கு உரியது. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் ப்ரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம். தனுர், மீன ராசிகளுக்கு அதிபதி குரு. மஞ்சள் நிறத்திற்கு உரியவர். கடலை தானியமும் முல்லை மலரும் அரசு சமித்தும் இவருக்கு உகந்தவை.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஏலவார் குழலியும் காசி ஆரண்யேஸ்வரரும், குரு பகவானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 அன்று தொடங்கி 20-11-21 அன்று முடிய ஒலிபரப்பாகி வந்தது.
20-11-2021 காலை ஒலிபரப்பான பத்தாவது கடைசி உரை கீழே தரப்படுகிறது.
ஒரு இல்லத்தரசியாகவோ அல்லது ஒரு குடும்பத் தலைவராகவோ இருக்கும் ஒருவர் சுற்றுப்புறச்சூழலைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தாலும், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்று நினைத்து மனம் தளர வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இந்த நற்பணியை நாம் தொடங்கலாம்.
முதலில் குப்பை கூளங்களை அகற்றும் போது காய்கறி மற்றும் உணவுப் பொருள் கழிவுகள், மின்சாதனக் கழிவுகள், ‘டயபர்’ (Diaper) போன்ற கழிவுகளைத் தனித் தனியே பிரித்து அததற்குரிய கழிவுத் தொட்டிகளில் போடுதல் வேண்டும்.
வீட்டில் மின்சக்தியை சேமிப்பதோடு மின் பில்லையும் (BILL) குறைக்கும் வகையில் இன்காண்டெஸ்சென்ட் (Incandescent) பல்புகளை அறவே அகற்றி விட்டு CFC எனப்படும் காம்பாக்ட் ப்ளோரெஸெண்ட் விளக்குகளைப் பொருத்தினால் 35000 மணி நேரம் அதிக பட்சமாகவும் 10000 மணி நேரம் குறைந்த பட்சமாகவும் வடிவமைப்புக்குத் தக்கபடி, அவை உழைத்துப் பயனைத் தருகின்றன.
தோல் பொருள்களில் ஆர்வம் உடையவர்கள் கைப்பை உள்ளிட்டவற்றை வாங்கும் போது அது சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு பயக்காத வகையில் மிருகங்களைக் கொடுமைப் படுத்தாமல் பெறப்பட்ட தோலினால் ஆக்கப்பட்டதா என்பதைச் சரி பார்த்து வாங்கலாம்.
மேக் அப் எனப்படும் ஒப்பனை சாதனங்களின் உறைகளில் அது சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த ஒன்றா என்று சரி பார்த்து வாங்குதல் வேண்டும். குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது பிளாஸ்டிக் எனில் அது பசுமை பொம்மையா – GREEN TOY தானா, அதாவது சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காத பிளாஸ்டிக்கினால் ஆனதா என்று பார்த்து வாங்குதல் வேண்டும். அல்லது மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு மாறுவதும் ஒரு சிறந்த வழியே.
கறிகாய்கள் வாங்கும் போது வேதிப் பொருள்களை உரமாகப் பயன்படுத்தாத ஆர்கானிக் காய்கறிகளா என்று பார்த்து வாங்குதல் வேண்டும். வெளியிலிருந்து உணவு வகைகளைப் பெறுவது பெருகி வரும் இந்நாளில் அவை ஆர்கானிக் உணவு தானா என்பதை சரி பார்த்து வாங்குதல் வேண்டும். துணியில் ஆர்கானிக் காட்டன் இப்போது எங்கும் கிடைக்கிறது. இந்த வகை பருத்தி இரசாயனம் கலந்த செயற்கை உரங்கள் இன்றி வளர்க்கப்படுவதே இதன் சிறப்பு. கறிகாய்கள், மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும் போது நமது வீட்டிலிருந்தே துணிப்பையைக் கொண்டு செல்வதோடு கடைக்காரரிடம் பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்குமாறும் அன்புரை கூற வேண்டும்.
இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தினால் ஒரு இல்லத்தரசியோ அல்லது ஒரு குடும்பத்தலைவரோ வீட்டிற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவை செய்தவர் ஆவர்; சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காக்க உதவி செய்தவர்களும் ஆவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது முது மொழி அல்லவா!