Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
“நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது எல்லையை மாற்றும், அது வேண்டாம்! ஆனால் ஏழ்மையின் மீது போர் தொடுத்தால் அது மனித குலத்தின் தொல்லையை மாற்றும்!அதைச் செய்வோம்!!”
தமிழர் தம் அறிவுச் செல்வமான ஔவை மூதாட்டி, ‘கொடியது எது’ என்று கேட்ட போது கூறிய வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை. “கொடியது கேட்கின் நெடிய வெவ் வேலோய் ! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். உலகில் இன்றுள்ள ஜனத்தொகை மொத்தம் 780 கோடி. இதில் பத்து சதவிகிதம் பேர் இன்றும் வறுமையில் வாடுகின்றனர்.
வறுமை என்பதை எப்படி வரையறுப்பது? ஒரு மனிதன் இந்தப் பூவுலகில் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளை இழந்து வாழ்வதே வறுமை எனச் சுருக்கமாகக் கூறி விடலாம். உணவு, உடை, உறைவிடம், குடிக்க பாதுகாப்பான நல்ல நீர், கல்விக்கான வாய்ப்பு, வாழ்க்கையில் சமூக மதிப்புடன் வாழ்தல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இருந்தால் வறுமை இல்லை என்று பொருள். இந்த நிலையை 2030க்குள் எட்டி விட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர். உலகில் மொத்தம் 3 சதவிகிதம் தான் வறுமை இருக்கிறது என்ற நிலையை அடைந்தால் கூட போதும் என்பதே இன்றைய குறிக்கோள்!
ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமை முழு வறுமை என்று சொல்லப்படுகிறது. ஒப்பீட்டு வறுமை என்பது இரு நிலைகளை வைத்து ஒப்பிட்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயித்து உன்னிடம் இருப்பதை விட என்னிடம் இருப்பது குறைவு என்று ஒப்பிட்டு உரைப்பதாகும். இதில் முழு வறுமை முதலில் நீக்கப்பட வேண்டும் என்பதே உலகின் இன்றைய குறிக்கோள்.
அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்டவை செல்வச் செழிப்புள்ள நாடுகளாக இருக்கும் போது ஆப்பிரிக்க நாடுகளில் (புருண்டி, மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, மலாவி, நைஜீரியா, மொஜாம்பிக், லைபீரியா, தெற்கு சூடான், கொமொரோஸ், மடகாஸ்கர் உள்ளிட்ட) பலவும், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளும் வறுமையை ஒழிக்க வேண்டிய வறுமை நிறைந்த நாடுகளாக இன்று உள்ளன.
வறுமை எவ்வளவு கொடுமை என்பதை ஒவ்வொரு மனிதனும் அவசியம் உணர வேண்டும். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்பது போல நைஜீரியா திரைப்படத் துறையை நோலிவுட் என்றும் ஜிம்பாப்வே திரைப்படத் துறையை ஜோலிவுட் என்றும் கூறுகின்றனர்.இங்கிருந்து வெளியாகியுள்ள பல திரைப்படங்கள் (The First Grader -2010 – Kenya உள்ளிட்ட ஏராளமான படங்கள்) வறுமையின் கோரத்தைக் காண்பிக்கும் போது உள்ளம் உருகாதவர்கள் இருக்க முடியாது.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லயர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்
என்ற ஔவையின் வாக்கு அப்படியே திரைக்காட்சிகளாக மிளிர்கின்றன. வறுமையில் குழந்தைகளும் பெண்களும் வாடி வதங்கும் காட்சிகள் திடமான மனத்தையும் கலங்க வைக்கும்.
ஒரு நாளைக்கு 183 ரூபாய் (இரண்டரை அமெரிக்க டாலர்) வருமானம் கூட இல்லாமல் உலகின் பாதி ஜனத்தொகையினர் (780 கோடியில் பாதிப் பேர்) வாழ்கின்றனர். 130 கோடி பேருக்கோ ஒரு நாளைக்கு 92 ரூபாய் (ஒண்ணே கால் அமெரிக்க டாலர்) தான் வருமானம். 9 பேர் உள்ள ஒரு குடும்பம் இரு அறைகளே உள்ள ஒரு கூரை வீட்டில், மண் தரையில் ஆங்காங்கே வாழ்வதையும் உலகெங்கும் பார்க்க முடிகிறது.
100 கோடி குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். ஒரு நாளைக்கு 22000 குழந்தைகள் வறுமையினால் இறப்பதாக யுனிசெஃப் (UNICEF) தெரிவிக்கிறது. 75 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் டயரியா உள்ளிட்ட வியாதிகளால் ஒரு நாளைக்கு 2300 பேர் உலகில் இறக்கின்றனர்.
இதைப் போக்க :
ஊடகங்களும் தனி மனிதர்களும் நிறுவனங்களும் இணைந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும்.
2) ஏழ்மையில் வாடும் ஒரு குழந்தைக்கேனும் ஆகும் கல்விச் செலவை வசதியுள்ளோர் தனி மனிதனாக இருந்து தம் தம் பொறுப்பில் ஏற்க முன் வர வேண்டும்.
3) பணமாக உதவி அளிக்க முடியாதோர் புத்தகமாகவோ, உணவுப் பொருள்களாகவோ தானமாகக் கொடுத்து முடிந்த அளவில் ஏழ்மையை ஒழிக்கலாம்.
4) பெண்களை இழிவு படுத்தாமல் அவர்களுக்கான சமூக நீதியை உறுதி செய்து ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
5) உலகளாவிய விதத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
6) அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, நல்ல நீர் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை பகுதி வாரியாக உறுதி செய்ய வேண்டும்.
7) கல்வி அறிவில்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். யுனிசெஃப்பின் கணக்கீட்டின் படி இன்று 100 கோடி பேருக்கு எழுத்தறிவு இல்லை.
வறுமை ஒழிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான கடமை என்ற விழிப்புணர்வே இன்றைய அவசியத் தேவை; அவசரத் தேவையும் கூட!
வறுமைக்கான காரணங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளன. ஓரிடத்தில் குடிநீர் இல்லை என்றால் இன்னொரு இடத்தில் போரின் பாதிப்பினால் மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஒரு நாட்டில் பெண்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது என்றால் இன்னொரு இடத்தில் எதிர்பாரா இயற்கைச் சீற்றங்கள், சீதோஷ்ண நிலை மாறுதல் ஆகியவை பாதிப்பை உருவாக்குகின்றன.
ஊட்டச் சத்து இல்லாமல் குழந்தைகள் நோஞ்சான்களாக ஓரிடத்தில் இருக்கும் போது தரமான கல்வி இல்லாமல் இன்னொரு இடத்தில் குழந்தைகள் வாடுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஜனத்தொகைப் பெருக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இப்படிப் பல காரணங்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நீக்குவதே வறுமை ஒழிப்பு நாளின் உலகளாவிய நோக்கமாகும். அந்த நாள் தான் அக்டோபர் 17.
1987இல் அக்டோபர் 17ஆம் தேதியன்று பாரிஸில் ஒரு லட்சம் மக்கள் ஒன்று கூடி வறுமையை ஒழிக்க உறுதி பூண்டனர். அந்த நாளை ஐ.நா. 1992ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.
கொடிய வறுமை மனித குலப் பாதுகாப்பிற்கான பொதுவான அச்சுறுத்தலாகும். குற்றங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் அடிப்படை தாள முடியாத வறுமையே.
செய்யாத ஒரு குற்றத்திற்கான தண்டனையே வறுமை.
நன்கு ஆளப்படும் ஒரு நாட்டில் உள்ள வறுமை அந்த நாட்டின் வெட்கக் கேடு.
ஒரு நாட்டின் வரலாற்றை செல்வந்தர்கள் மட்டும் எழுதவும் கூடாது; பழிகளை மட்டும் ஏழைகள் மீது அவர்கள் போட்டு விடவும் கூடாது.
ஆகவே தான் வறுமை இல்லாத நாட்டைக் கனவு கண்ட திருமூலர் அன்றே சொன்னார் ‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’ என்று கூறி உண்ணும் போது அடுத்தவரை நினைத்து அவருக்கும் ஒரு பிடி கொடு என்றார். அத்துடன் அவர் கூடவே சொன்னார்:
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
ஏழைக்கு ஒன்றைத் தரும் போது அது இறைவனுக்கும் சேரும்; ஆகவே இருவரையும் அது சேர்வதால் இரட்டிப்பு பலனைத் தரும் என்பது அவர் வாக்கு.
‘தேடு கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்’ என்றார் மகாகவி பாரதியார். ஆக கல்வியும், உணவும், நல்ல நீரும் இருப்பதை ஒவ்வொரு மனிதனும் உறுதிப் படுத்த சூளுரை எடுக்க வேண்டிய நாளாக அக்டோபர் 17 அமைகிறது.
வறுமை இல்லாத உலகை உருவாக்குவோம். மனித குலம் என்றும் வளமுடன் நீடித்து இருக்க நமது பங்கை ஆற்றுவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ஆதிசைவப் பிரபாவம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!
ச.நாகராஜன்
கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர். நூற்றாண்டுகளுகு முன்பே ஆதிசைவர்களின் பெருமையை உரைக்கும் நூலாக இருக்கும் ஆதிசைவப் பிரபாவம் என்ற நூலானது காலவெள்ளத்தில் அழிந்துவிடாமல் உயிர் பெற வேண்டுமென்ற நல் நோக்கத்தில் இந்த நூலை அவர் 2017 டிசம்பரில் பதிப்பிட்டுள்ளார். 1880ஆம் ஆண்டு இந்த நூல் முதன் முதலாகப் பதிக்கப்பட்டது.
இந்த நூலை எழுதியவர் ஸ்ரீ சோமசுந்தர நாயகர் ஆவார். இவரது காலம் 1846 முதல் 1901 முடிய ஆகும். இவர் சுமார் 126 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தனது உத்யோகத்தை விட்டு விட்டு இவர் சைவப் பணி ஆற்ற களத்தில் இறங்கினார். இவரது சிறப்பான சைவ சமயப் பணிகளைக் கண்டு வியந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், இவருக்கு “வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற பட்டத்தைச் சூட்டினார்.
பாஸ்கர சேதுபதி மன்னர் விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு தாயகம் திரும்பும்போது அவரைப் பெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர். அவர், விவேகானந்தரை தமது அரசவையில் சோமசுந்தர நாயகரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது நாயகர் விவேகானந்தரிடம் வேதாந்தம் போன்று ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவசித்தாந்த தத்துவத்தை எடுத்துக் கூறினார். விவேகானந்தர் அது கேட்டு வியப்புற்றார் என்பது தெரிய வருகிறது. பரசமயங்களின் தத்துவங்களை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து அவற்றைத் தவிடு பொடியாக்கும் சூரர் என்பதால் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் “பரசமயக் கோளரி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
நூல் முழுவதும் ஆதி சைவர்களின் சிறப்பைக் காணலாம். அத்துடன் மட்டுமல்லாமல் “சைவ வேடம் பூண்டு திரியும் வஞ்சகப் பேய்களை” இவர் சாடுவதையும் காணலாம்.
ஆசாரியர் என்பவர் யார்? நாலு வேதம் ஆறு அங்கங்களை அறிந்தவரகவும், ஞான பாதங்களை நன்கு போதிப்பவராகவும், கிரியா பாதத்தில் சமர்த்தராகவும், யோக பாதத்தில் அப்பியாசம் உள்ளவராகவும், சரியா பாதப் பிரகாரம் நடத்தை உள்ளவராயும், சிவபூஜை, சிவாகினி இவைகளைத் தப்பாமல் நடத்துகின்றவராயும் உள்ளவரே ஆசாரியர் ஆவார்.
ஆதி சைவர் சிவத்விஜர் . மஹா சைவர் பிராம்மணர்கள். அநு சைவர் க்ஷத்திரியர் மற்றும் வைசியர்கள். அவாந்தர சைவர் சூத்திரர்கள். பிரவர சைவர்கள் என்பவர் சவர்ன அம்பஷ்ட மத்யஸ்த குலாலர்கள், அந்த ஜாதியார் அந்ய சைவர் ஆவார்.
சகலபிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவனே ஆசாரியன் ஆவான்.
ஆசாரிய நிதிகளாகிய சிவ வேதியரே சரவ அநுக்ரஹத்வாதி பரம தர்மங்களை உடையவராய் விளங்குவர்.
இப்படி இந்த நூல் ஆதி சைவரின் பெருமையை தகுந்த பிரமாணங்களுடன் சித்தரிக்கிறது. பர சமயங்களை நிராகரிக்கிறது.
சோமசுந்தர நாயகர் இயற்றியுள்ள 47 நூல்களின் பட்டியலை நூலின் இறுதியில் காணலாம்.
48 பக்கங்கள் உள்ள இந்த நூல் அழகிய தாளில் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ சோமசுந்தர நாயகர் வரலாற்றைச் சுருக்கமாக தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தந்துள்ளார்.
சைவத்தில் பற்றுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. ஆதிசைவர்கள் நிச்சயம் இதைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல் ஏன் சைவம் அல்லாத பர சமயங்கள் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு அடிப்படையான வாதங்களையும் இந்த நூல் தருகிறது.
பதிப்பாசிரியர் தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் நமது பாராட்டுக்குரியவர்.
40 ரூபாய் விலையுள்ள 48 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அன்பர்கள், ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம், குளத்து மேட்டுத் தெரு, கள்ளகுறிச்சி, 606 202 (போன் 97518 47933) என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அக்ஷய: (அக்ஷயஹ) – 10-33 முடிவற்ற
அக்ஷர ஸமுத்பவம் -3-15 அழிவற்ற பரம்பொருளில் தோன்றியது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Following are he pictures from the book ‘MY PILGRIMAGE TO THE WISEMEN OF THE EAST’ BY Moncure Daniel CONWAY.
Year of publication 1906, Boston and New York
(Book available at SOAS, University of London Library)
Images of Madame Blavatsky, Rama Bhai, Keshub Chunder Sen, P Ramanathan of Sri Lanka, Budddhist Monks of Sri Lanka, Kandy Temple, Devil Dancers, M D Conway, William Hunter, Amir Ali, Jain Picture and Pandava Castle
Part two
ramabaipandava castleK C SENJAIN PICTURE–sybham-
tags- rare pictures, M D Conway, Blavatsky, Kesava Chandra Sen, Rama bhai
பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள் : T.N. இராமச்சந்திரன்
சேக்கிழார் அடிப்பொடி திரு தி.ந.இராமச்சந்திரன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அறக்கட்டளையின் சார்பில் 7-3-2002 அன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை கழகச் சார்பில் ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற தலைப்பில் ஒரு உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்திய அன்றே இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
48 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. பாரதி ஆய்வுகள் – இதுவரை, பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள், பாரதி வாழ்க்கை பற்றிய எதிர்கால ஆய்வுகள் ஆகிய மூன்று அத்தியாயங்களில் சிந்தனையைத் தூண்டி விடும் விஷயங்கள் அடுக்கடுக்காகத்த் தரப் படுகின்றன.
முதல் அத்தியாயம் மிக விரிவாக பாரதியார் பற்றிய ஏராளமான நூல்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறது.
‘பாரதியார் ஒரு விராட் புருஷர்; அவரை உங்கள் சிறு விரலால் அளந்து காட்டத் துணியாதீர்கள்’ என்ற இந்த நூலாசிரியரின் எச்சரிக்கை முற்றிலும் உண்மையானது.
பாரதியாரைப் பற்றிய பல விவரங்கள் பிழைபடப் பல நூல்களிலும் தரப்பட்டுள்ளன. (சில விவரங்களை தமிழ் உலகம் அறியவே இல்லை.)
இவற்றைக் களைய வேண்டும் என்பதே நூலாசிரியரின் உள்ளார்ந்த ஆதங்கம்.
பாரதியின் நூல்களுக்குப் பர்மா அரசாங்கம் தடை விதித்தது. அதையொட்டித் தமிழ் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. தடை விதித்தவர் பின்னாளில் காங்கிரல் அமைச்சராக விளங்கிய பி. சுப்பராயன் அவர்கள். இதைக் க்ண்டு
கொதித்தெழுந்தார் சத்தியமூர்த்தி. அவரது கிடுகிடுக்க வைக்கும் ஆங்கிலப் பேச்சுக்கள் பொன் எழுத்தில் பொறிக்கத் தக்கன.
பாரதியார் நண்பர்கள் பற்றி வந்துள்ள விவரங்களில் கபாலி சாஸ்திரியார் இடம் பெறாததை சுட்டிக் காட்டும் நூலாசிரியர் அது பற்றிய விவரங்களைத் தருகிறார்.
பாரதியாரைப் பற்றி வெளிவந்த பல ஆய்வு நூல்களைப் பட்டியலிட்டுத் தருகிறார் திரு இராமச்சந்திரன்.
இதுவரை வந்த ஆய்வுகளை முதல் அத்தியாயத்தில் சித்தரிக்கும் அவர், இரண்டாவது அத்தியாயமான ‘பாரதி படைப்புகள் பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் முயற்சிகளை விவரிக்கிறார்.
திரு சீனி விசுவநாதன் தொகுத்து வெளியிட்டுள்ள கால வரிசைப்படியான பாரதியார் எழுத்துக்கள் என்ற நூலில் 263 தலைப்புகளில் 24-1-1897 தொடங்கி 29-12-1906 வரையிலான எழுத்துக்கள் தரப்பட்டுள்ளன.
பாரதியாரின் வடமொழி அறிவு பற்றித் தனி ஒரு நூல் வேண்டும் என்ற நூலாசிரியரின் கூற்றை அனைவரும் ஆமோதிப்பர்.
சூரத் காங்கிரஸ் கூட்டத்தை வருணித்து மகாகவி மூன்று மொழிகளைக் கலந்து காங்கிரஸ் கீதை என்று ஒரு பனுவல் படைத்தார்.
யாரும் அறியாத செய்தி இது. இதில் உள்ள ஒரு சுலோகத்தை – தேவி வஸந்தானந்தா தந்ததை – இந்த நூலில் காண முடிகிறது:
“தர்ம க்ஷேத்ரே சூரத் க்ஷேத்ரே ஸமவேத யுயுத்ஸவஹ
மாமகாகஹ எக்ஸ்ட்ரீமிஸ்ட் மாடரேட்ஸ் சைவ கிமகுர்வத ஸஞ்சயா”
பாரதியின் பல கவிதைகளில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருள் கண்டு அதை விவரிப்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்.
காணி (நிலம் வேண்டும் என்ற பாடல்) அம்பு (அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் என்ற பாடல்) ஆகிய சொற்களுக்கு உண்மையான அர்த்தத்தை விவரிக்கிறார்.
சீனி.விசுவநாதன் வெளியிட்டுள்ள பாரதி நூற்பெயர்க்கோவை என்ற தொகுப்பு நூலில் சுமார் 370 நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. இதில் 275 நூல்கள் விவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலக் கவிஞரான ஷேக்ஸ்பியர் பற்றி 1982 முடிய 1,50,000 நூல்கள் வெளியாகி இருப்பதையும் வருடத்திற்கு சுமார் 3000 நூல்கள் ஷேக்ஸ்பியர் பற்றி வெளியாகி வருவதையும் சுட்டிக் காட்டுகிறார் திரு இராமச்சந்திரன். ஷேக்ஸ்பியர் பற்றிய வினா விடை நூல்கள் நிறைய உள்ளன. அது போல பாரதியார் பற்றியும் வினா- விடை நூல்கள் வேண்டும். 1000 கேள்விகள் கொண்ட நூறு நூல்களை வெளியிட வேண்டும் என்பது இவரது ஆசை. அவ்வளவுக்கு விஷயங்கள் உள்ளன.
மூன்றாம் அத்தியாயமான, ‘பாரதி பற்றிய எதிர்கால ஆய்வுகள்’ என்ற அத்தியாயத்தில் பாரதியாருடன் நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய குறிப்புகள் வேண்டும், பாரதியார் போற்றிய நம் நாட்டு, வெளி நாட்டு அறிஞர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்பு வரையப்பட வேண்டும். உலக அளவில் பாரதியார் என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற முத்து முத்தான யோசனைகளை எதிர்கால ஆய்வாளருக்குத் தருகிறார் நூலாசிரியர்.
பல பிழையான தகவல்களை அடியோடு களைந்து அதிகாரபூர்வமான பாரதியார் வாழ்க்கை பற்றிய நூல் ஒன்று வேண்டும் என்பதைச் சொல்வதோடு இனி பிழையான கருத்துக்களைச் சொல்லவும் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று கூறுகிறார் இவர்.
நூலின் இணைப்பாக மாதிரிப் புதிர் வினா- விடை ஒன்றும் தரப்பட்டுள்ளது.
மொத்தத்தில் பாரதியார் பற்றிய கடந்த கால, நிகழ்கால, எதிர்கால ஆய்வுகளை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் நல்லவொரு அரிய சேவையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் மூலம்.
பாரதி அன்பர்களும் ஆய்வாளர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது.
***
சேக்கிழார் அடிப்பொடி திரு T.N. இராமச்சந்திரன் பாரதியாரின் ஒவ்வொரு எழுத்தையும் கரைத்துக் குடித்தவர். வழக்கறிஞராக இருந்தவர் தமிழ் இலக்கியத்தின் பால் தீராக் காதல் கொண்டு இலக்கியத்தின் பக்கம் திரும்பினார்; சுமார் 50000 நூல்களை தனி ஒருவராகத் தனக்காகச் சேகரித்து வைத்த பெரும் மேதை. 18-8-1934இல் பிறந்த அவர் சமீபத்தில் 6-4-2021 அன்று மறைந்தார்.
tags- பாரதி , எதிர்கால ஆய்வுகள் , T.N. இராமச்சந்திரன்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Following are he pictures from the book ‘MY PILGRIMAGE TO THE WISEMEN OF THE EAST’ BY Moncure Daniel CONWAY.
Year of publication 1906, Boston and New York
(Book available at SOAS, University of London Library)
Images of Madame Blavatsky, Rama Bhai, Keshub Chunder Sen, P Ramanathan of Sri Lanka, Budddhist Monks of Sri Lanka, Kandy Temple, Devil Dancers, M D Conway, William Hunter, Amir Ali, Jain Picture and Pandava Castle.
tags– M D Conway, My Pilgrimage, Wisemen of the East, Indian, Sri Lankan, Scholars
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அகர்த்தாரம் – 4-13 செயலில் இறங்காதவர்
அகர்ம – 4-16 செயலின்மை , கர்மம் என்று கருதப்படாதது
அகர்ம க்ருத் -3-5 ஒரு கர்மத்திலும் ஈடுபடாமல்
அகர்மண: – 3-8 செயலின்மை (: இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இதை முன் உள்ள எழுத்துக்குத் தக உச்சரிக்க வேண்டும்; இங்கே ஹ என்ற ஒலி = அக்கர்மணஹ ) கர்மம் செய்யாமை
அகர்மணி -2-47 செயலின்மையில்
அகல்மஷம் – 6-27 மாசு மருவற்ற; குற்றமில்லாத ; பாவமற்றவன்