வெள்ளி பற்றிய சுவையான தகவல்கள் – – Part 1 (Post No.9908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9908

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 35 தனிமங்களின்/மூலகங்களின் அற்புதங்களை கண்டோம். இன்று வெள்ளி SILVER என்னும் உலோகம் பற்றிய செய்திகளை அறிவோம்.

பல நாடுகளில் கிணறுகளிலும், குளங்களிலும், புனித நீர் நிலைகளிலும்  மக்கள் வீசி எறிந்த வெள்ளிக் காசுகள் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கு தண்ணீரை சுத்தப்படுத்தும் குணம் இருப்பதை அறிந்த பழங்கால மக்கள் மற்றவர்களும் இப்படிச் செய்யட்டுமே என்று கருதி அதற்குப் பல சமய நம்பிக்கைகளையும் கற்பித்து இருக்கலாம். உதாரணத்துக்கு நாம் மருத்துவ குணமுள்ள துளசி, வில்வம், அருகம் புல் போன்றவற்றை இந்து தெய்வங்களுக்குப் படைக்கிறோம். அதனால் நம்மை அறியாமலேயே நமக்கு கிடைக்கும் மருத்துவ  பலன்களையும் அனுபவித்துப் பயன் அடைகிறோம்.

புகழ் பெற்ற சைரஸ் (Cyrus) என்ற பாரசீக மன்னன், எங்கே சென்றாலும்  பெரிய வெள்ளிப்பபானைகளில்  குடிநீரைக் கொண்டு செல்வாராம். அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட ஆற்றிலிருந்து எடுத்து காய்ச்சி வடித்துப் பின்னர் வெள்ளிக் குடங்களில் நிரப்புவார் என்று புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடோட்டஸ் (Herodotus  485- 425 BCE) எழுதி வைத்துள்ளார் . கொஞ்சம் வெள்ளி இருந்தாலே கிருமிகள் இறந்து விடும் என்பது தற்கால விஞ்ஞான  ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நீச்சல் குளங்களை குளோரின் வாயு ஏற்றி சுத்தப் படுத்துவதை விட வெள்ளி உலோக உப்புக்களைக் கலந்து சுத்தப்படுத்துவதே மேல்.

அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுக்காக வெள்ளி இழை கலந்து நெய்யப்பட்ட சாக்ஸ்/ socks காலுறைகள் விற்கப்படுகின்றன. அவர்களுக்கு அதிகமாக வியர்த்து, அங்கே உற்பத்தியாகும் பாக்டீரியா கிருமிகளால் துர் நாற்றம் வீசுவதை இது தடுக்கும். ஆனால் எல்லா பாக்டீரியாக்களையும் வெள்ளி கொல்லாது . கனடா  நாட்டு வெள்ளிச் சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்ட  ஒருவகை பாக்டீரியா தேவை இல்லாத வெள்ளியை செல் சுவர்களில் தள்ளிவிடுவதையும் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் வெள்ளியின் அருமை தெரியும். கோவில்களில், குறிப்பாக வைஷ்ணவ கோவில்களில், அதிகமான வெள்ளிப்பாத்திரங்களைக் காணலாம். உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் மஹாராஜா அரண்மனையில் உள்ளது . 200 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று பெரிய வெள்ளிப் பானைகள் செய்யப்பட்டன.இவற்றில் 4000 லிட்டருக்கு மேல் கங்கை ஜலத்தை சேமித்து வைக்கலாம். ஜெய்பூர் மன்னர் லண்டனுக்கு இங்கிலாந்து மன்னரின் பட்டமேற்பு விழாவுக்கு கப்பலில் வந்த போது இதில் கங்கா ஜலம் கொண்டுவரப்பட்டது. அவர் பயணம் செய்த கப்பலில் மூன்று பிரம்மாணடமான பானைகளில் கங்கை நீர் எடுத்துவரப்பட்டது. ஒவ்வொரு பானையும் 5 அடி உயரமும் 15  அடி சுற்றளவும் உடையது.

xxx

தேவையற்ற ரசாயன ஆயுதங்களை அகற்றவும் வெள்ளி பயன்படுகிறது.மஸ்டர்ட் கேஸ், நெர்வ் கேஸ் (Mustard Gas, Nerve Gas)  எனப்படும் யுத்த கால விஷ வாயுக்களை, விஷமற்ற உப்புக்களாக மாற்ற வெள்ளி நைட்ரேட் கரைசலும் (Silver Nitrate and Nitric Acid)   நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன.

வெள்ளி என்பது தங்கம் போலவே பளபளப்பானது . கம்பியாக இழுக்கலாம்; தகடுகளாகத் தட்டலாம். ஒரு கிராம் வெள்ளியை 2 கிலோ மீட்டர் நீளக் கம்பியாக இழுக்கலாம் . இது அமிலங்களின் கரையக்கூடியது.

வெள்ளி உலோகத்துக்கு இரு  ஐசடோப்புகள் இருந்தாலும் அவைகளுக்கு கதிரியக்கம் கிடையாது

கந்தகம் என்னும் மூலகம்  இதனுடன் சேர்ந்து ஸல்பைடுகளை (Sulphides)  உண்டாக்குகிறது. இது கருப்பு நிற உப்புக்களாக படியும். இதனால்தான் வெள்ளிப்  பாத்திரங்களையும், நகைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது . அதிக கந்தகம் அடங்கிய வெங்காயம், உள்ளிப் பூண்டு, முட்டை போன்றவற்றை வெள்ளிப்பாத்திரங்களில் வைக்கக் கூடாது .

நாளைய தினம் மருத்துவ மற்றும் தொழில் உபயோகங்களைக் காண்போம்.

–தொடரும் 

tags- வெள்ளி, Silver

More Rigvedic Quotations (Post No.9907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9907

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

August 2021 ‘Good Thoughts’ Calendar

FESTIVAL DAYS IN AUGUST 3- ADIP PERUKKU (in Tamil Nadu), 8- Adi Amaavasai, 11- Adi Pooram, 15- Indian Independence Day, Aurobindo Birth Day, 20-Mohuram, 21-Varalaakshmi Vratam, 21 Onam, 22- Yajur Upakarma, Raksha Bandhan, 23- Gayathri Japam,30- Krishna Jayanthi

Amavasai / new moon day – 8; Purnima/ Full moon day- 22,

Ekadasi Fasting Days-4, 18

Auspicious Day s for Weddings etc- 20, 26

August 1 Sunday

To gain your mercy, Varuna,with hymns we bind your heart, as a charioteer binds his horse ( to the chariot) 1-25-3

xxx

August 2 Monday

Never do they fail the ever faithful worshipper 1-25-6

xxx

August 3 Tuesday

O Agni, you are like a Father to his son, Kinsman for kinsman and Friend to a good friend 1-26-3

xxx

August 4 Wednesday

Release us from the upper bond, , untie the bond between, and loose the bonds below. 1-25-21

Xxx

August 5 Thursday

Him, whosoever he may be, no man may vanquish, mighty one.

Nay, very glorious power is his 1-27-8

xxx

August 6 Friday

Agni, you save even one ,who walks in evil way 1-31-6

xxx

August 7 Saturday

Agni, you are our Providence, you are our father , we are your

brothers,and you are our spring of life 1-31-10

xxx

August 8 Sunday

Will not the Indestructible endow us with perfect knowledge of this wealth, of cattle? 1-33-1

Cattle does not mean cows and bulls. Like Tamil saint Tirumular it means the five senses.

Xxx

August 9 Monday

I fly to him invisible Wealth giver like a falcon flies to his cherished eyrie 1-32-2

Xxx

August 10 Tuesday

O Asvins, thrice bring to us abundant wealth,; thrice in the Gods assembly, thrice assist our thoughts

Thrice grant us prosperity, thrice grant us fame, for the Sun’s daughter has mounted your three wheeled car 1-34-5

xxx

August 11 Wednesday

Thrice,Asvins, grant to us heavenly medicines, thrice those of earth, and thrice that the waters hold 1-34-6

xxx

August 12 Thursday

His chariot decked with Pearl, of various colours,lofty,with golden pole, the God has mounted

The many rayed one, the holy Savita, bound, bearing power and might, for darksome regions 1-35-4

xxxx

August 13 Friday

Three heavens are there, two Savita’s adjacent, in Yama’ world one, the home of heroes

As on a lynch pin, firm, rest things immortal; he who has known it let him declare it here 1-35-6

xxx

August 14 Saturday

Manu has stabilised you a light, Agni, for all the race of men 1-36-19

Xxxx

August 15 Sunday

Stand up erect to lend us aid, stand up like Savita,the God 1-36-13

Xxx

August 16 Monday

Smite down as with a club, you who has fire for teeth, smite the wicked, right and left. Let not the man who plots against us in the night, nor any foe prevail over us 1-36-16

Xxx

August 17 Tuesday

O, Maruts, before your fury, the earth trembles like a king who is weakened by age 1-37-8

xxx

August 18 Wednesday

Come quickly in swift horses, for you have worshippers among Kanva’s sons.

May you rejoice among them well 1-37-14

Xxx

August 19 Thursday

What now? When will you take us by both the hands as a dear father his son?

Gods, sacred grass is cut and spread for you 1-38-1

Xxx

August 20 Friday

Never were your praiser loathed like a wild beast in pasture land.

Nor should he go on Yama’s path 1-38-5

xxx

August 21 Saturday

O Maruts , at your voice’s at this earthly habitation shakes;

And each man reels who dwells there in 1-38-10

xxxx

August 22 Sunday

You have yoked the spotted deer to your chariot; a red deer, as a leader, draws.

Even the earth herself listened to you as you came near, and men were sorely terrified 1-39-6

xxx

August 23 Monday

O, Son of Strength, each man calls you for aid when spoil of battle waits for him.

O Maruts, may this man who loves you well obtain wealth of good horses and hero might ,may Suntra the goddess come 1-40-2

xxxx

August 24 Tuesday

May Brahmanaspati draw nigh, may Suntra the goddess, come to this rite which gives the god the five-fold gift the Hero, Lover of Mankind .1-40-3

xxx

August 25 Wednesday

Let him not love to speak ill words; but fear the One, who holds all four within his hand until they fall

Tread with your foot and trample out the fire brand of the wicked one, the double tongued, whoever he be 1-42-4

xxx

August 26 Thursday

Lead us to meadows rich in grass; send on our way no early heat.

O Pusan, you find power for this 1-42-8

xxx

August 27 Friday

What shall we sing to Rudra, strong, most bounteous, excellently wise,

That shall be dearest to his heart?1-43-1

Xxx

August 28 Saturday

O, Soma, you set upon us the glory of a hundred men.

The great renown of mighty chiefs 1-43-7

xxx

August 29 Sunday

Agni, Him noblest and most youthful, richly worshipped guest, dear to the men who offer gifts. Him, Jatavedas, I beseech at dawn that he may bring gods to us 1-44-4

xxx

August 30 Monday

Asvins, Sons of the Sea, mighty to save discoverer s of riches, you Gods with deep thought who find out wealth 1-46-2

xxx

August 31 Tuesday

Come in the ship of these our hymns to bear you to the hither shore:

O Asvins, harness the car 1-46-7

The heavens wide vessel is your own; on the floods shore your chariot waits. Drops , with the hymn, have been prepared 1-46-8

–subham–

tags- August 2021, Calendar, Rig Vedic, Quotations

பைத்தியம் பிடித்து இறந்த பிரெஞ்சு சிறுகதை ஆசிரியர் மாப்பாசான் (Post.9906)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9906

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிறுகதைகள் எழுதியவர்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் பிரான்ஸ் நாட்டின் GUY DE MAUPPASANT  கை த  மாப்பாசான்  (     பிரெஞ்சு உச்சரிப்பு – கீ த மோபாசான்) ஆவார்.

இவருடைய சிறு கதைகளில் எளிமை, அங்கதம்/கிண்டல், நகைச்சுவை ஆகியன இருப்பதால் இவர் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் பட்டியலில் முதல் வரிசையில் நிற்கிறார்  மனிதர்களின் வெளியில் தெரியாத குண நலன்களையும், உணர்ச்சிகளையும் கதையில் வடித்துக் கொட்டியதால் தனி இடம் பெற்றார்.

வடக்கு பிரான்சில் நார்மண்டியில் மாப்பாசான் பிறந்தார்.அவருக்கு 11 வயதானபோதே தாயும் தந்தையும் விவாக ரத்து செய்தனர்.இதனால் அவருக்கு திருமணம், தனிமை, கொ

டுமை ஆகியன குறித்து மனதில் அச்சம் துளிர்விட்டது.

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் பாரிஸ் நகரில் சட்டப் படிப்பைத் தொடர்ந்தார். பிரஷ்யா என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தற்போதைய ஜெர்மனி, பிரான்சுடன் போர் தொடுத்தது; இந்தப் போர் பிராங்கோ – பிரஷ்யன் யுத்தம் FRANC0-PRUSSIAN WAR  என்று அழைக்கப்படும். இதனால் 1870-ம் ஆண்டில் மாப்பாசான் கல்வியும் தடைப்பட்டது 20 வயதில் போர் வீரர் ஆனார்.

பின்னர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். அப்போது சிறுகதைகளையும் எழுதினார். அவர் தாயாருடன் வசித்த காலம் அது.

பிரெஞ்ச்- பிரஷ்ய/ஜெர்மனி யுத்தத்தில் பிரான்ஸ் தோல்வி அடைந்ததை வைத்து கொழுப்புப் பந்து BALL OF FAT என்ற சிறுகதையை 30 வயதில் எழுதினார். அதை எல்லோரும் ரசித்துப் படித்தனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் மாப்பாசான், 300 சிறுகதைகளையும், கவிதைகளையும், புதினங்களையும் , பயணக் கட்டுரைகளையும்  எழுதிக் குவித்தார்

‘காசுக்கு கை நிறைய கழுதை விட்டை’ என்னும் பாணியில் இல்லாமல் அத்தனையும் முத்துக்களாக பிரகாசித்தன.

அவைகளில் மனித உணர்ச்சிகளை தத்ரூபமாக சித்தரித்தார். பெண்களின் மீது அவருக்குள்ள ஆர்வமும் வெளிப்பட்டது BEL- AMI ‘பெல் ஆமி’,  PIERRE AND JEAN ‘பியர் அண்ட் ஜீன்’ என்னும் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பெல் ஆமி கதையில், கெட்டது செய்யும் கதாநாயகன் வெற்றி பெறுவதைக் காட்டியதால் அதர்மத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக குற்றச் சாட்டுகளும் எழுந்தன.

எழுத்து மூலம் நிறைய பணம் சம்பாதித்தார். ஆயினும் அவர் காம சம்பந்தமான பாலியல் SYPHILIS  நோயால் பீடிக்கப்பட்டார் . பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததால் இந்த அவல நிலைக்குள்ளானார் . இது அவருடைய மன நிலையை பாதித்து , பைத்தியமாக்கியது;  மாப்பாசான் 42 வயதில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் MENTAL ASYLUM  உயிர் இழந்தார்.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 5, 1850

இறந்த தேதி – ஜூலை 6, 1893

வாழ்ந்த ஆண்டுகள்-  42

எழுதிய நூல்கள்

1880- BALL OF FAT

1881- THE HOUSE OF MADAME TELLIER

1882 – MADEMOISELLE FIFI

1883- A WOMAN’S LIFE

1884- MISS HARRIET

1885- BEL- AMI

1888- PIERRE AND JEAN

–SUBHAM–

tags- பைத்தியம் , பிரெஞ்சு சிறுகதை , மாப்பாசான்

கழிவுப் பொருள்களைக் குறைப்போம்! (Post No.9905)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9905

Date uploaded in London – 29 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 6 – 21-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

கழிவுப் பொருள்களைக் குறைப்போம்!

சுற்றுப்புறச்சூழல் மாசின்றித் திகழ கழிவுப் பொருள்களை கூடிய மட்டில் ஒவ்வொருவரும் குறைப்பது அவசியமாகிறது. சிந்தித்துப் பார்த்தால் இதற்கான ஏராளமான எளிய வழிமுறைகள் நமக்குப் புலப்படும்.

வீட்டில் ஒரு முறைப் பயன்படுத்தியவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள்,ஸ்டிரா போன்றவற்றைத் தவிர்க்கலாம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பாட்டில்களை மட்டுமே இல்லத்தில் பயன்படுத்த உறுதி பூண்டு செயல்படலாம்.   

                                                                                  வெளியில் மளிகைப் பொருள்கள் அல்லது காய்கறிகளை வாங்கும் போது மொத்தமாக வாங்குவது சாலச் சிறந்தது. ஒவ்வொரு முறையும் ஆகும் பாக்கிங் பொருள்களின் பயன்பாடு இதனால் குறையும். பாக்கிங் இல்லாமல் இருக்கும் பழங்கள், காய்கறிகளை வாங்கி நமது துணிப்பையில் எடுத்து வருவது பாக்கிங் கழிவுப் பொருள் உருவாவதைப் பெருமளவு குறைக்கும்.

தயிர், பால், பருப்பு வகைகள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றைச் சிறிய அளவில் வாங்குவதால் நிறைய பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றைக் குறைக்க, பயன்பாட்டு அளவைத் திட்டமிட்டு பெரிய அளவில் வாங்கலாம்.         

                                                                     கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பொழுதுபோக்கிற்கென செல்லும் போது அங்கு எந்தக் குப்பையையும் போடாமல் நாமே கழிவுகளை எடுத்து வந்து உரிய இடங்களில் அவற்றை நீக்கலாம். இதனால் பொது இடங்கள் மிகுந்த சுத்தத்துடன் இருந்து அனைவரின் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துவதோடு மனதிற்கு ரம்யமான சூழ்நிலையைத் தரும்.                  பள்ளிகள் திறக்கும் போது பழைய நோட், ஃபைல்களை அப்படியே போட்டு விடாமல் பயன்பாட்டிற்குரியவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். பழைய ஃபைல்களில் புதிய லேபிளை ஒட்டி பயன்படுத்தலாம்.    

            இல்லத்திற்கான பல்வேறு நுகர்வுக் கட்டணங்களை மின்னஞ்சல் மூலமாகச் செலுத்துவதால் ஏராளமான பேப்பர் பயன்பாடு தவிர்க்கப்படும். கணினி பிரிண்டரில் பேப்பரின் இரு புறமும் பயன்படுத்தும் பழக்கமானது பேப்பர் நுகரவை ஏராளமாகக் குறைக்கும். பேப்பர் பெருமளவு குறைக்கப்படும் போதும் பல்வேறு மரங்களைக் காத்த உணர்வு நமக்கு ஏற்படும்.                  இல்லத்தரசிகள் கழிவுகளை இனம் பிரித்து அததற்குரிய குப்பைப் பெட்டிகளில் அவற்றைப் போடுவதன் மூலம் மறுசுழற்சிக்குள்ளாக வேண்டிய பொருள்களைப் பிரிப்பது எளிதாகும். இப்படிப் பல்வேறு வழிகளை ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட்டால் கழிவுப் பொருள்கள் கணிசமாகக் குறையும் அல்லவா?

*

INDEX

Waste Disposal, Avoid plastic, Plan Bulk purchasing, use double side of the paper, wastes to be segrecated

tags- கழிவுப் பொருள்,பிளாஸ்டிக்

சிறை சென்ற ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆஸ்கர் வைல்ட் (Post No.9904)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9904

Date uploaded in London –28 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் நாடக ஆசிரியரும் கவிஞருமான ஆஸ்கர் வைல்ட் OSCAR WILDE ஹோமோசெக்ஸ் HOMOSEX – ஒரு பால் புணர்ச்சி– குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் அவரது படைப்புகள் இந்தக் குற்றத்துக்கு அப்பாற்பட்டவை . இன்றளவும் படிக்கப்படுபவை. நகைச் சுவை ததும்ப எழுதக்  கூடியவர் ஆஸ்கர் வைல்ட்.

அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளின் நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு டாக்டர்; தாயார் ஒரு கவிஞர். ஆஸ்கர் வைல்ட் பிறவியிலேயே ஒரு மேதை. டப்ளின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் சிறப்பாகத் தேறினார். கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர். படாடோப உடைகளை அணிபவர். இதனால் லண்டன் பிரமுகர் வட்டாரத்தில் எல்லோ ருக்கும்  அவரைத் தெரியும்

1884ல் அவர் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்பவரை மணந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார்.

முதலில் பத்திரிகையில் சேர்ந்தார். 34 வயதில் சிறுவர்க்காக எழுதிய கதைப் புஸ்தகம் வெற்றி நடை போட்டது .ஒரே ஒரு நாவல் மட்டுமே எழுதினார்.அ து ஒரு அழகான இளைஞரின் கதை. கெட்ட வழக்கங்களால் அவருடைய அழகிய தோற்றம் எப்படி அவலம் அடைகிறது என்பதை வருணிக்கும் கதை.

1879 முதல் 1895க்குள் ஒன்பது நாடகங்களை எழுதினார். அவற்றில் THE IMPORTANCE OF BEING EARNEST ‘இம்பார்ட்டன்ஸ் ஆப் பீயிங் ஏர்னஸ்ட்’ என்ற நாடகம் நல்ல நகைச்சுவை உடையது இரண்டு  வருங்கால மாப்பிள்ளைகளின் இருவிதமான வாழ்க்கையை இது விளக்குகிறது .

இவ்வாறு நாடகங்களின் மூலம்  புகழ் சேரும் தருவாயில் அவருடைய சுய வாழ்வு பற்றிய ரகசியங்கள் அம்பலமாயிற்று .ஆல்ப்ரட் டக்ளஸ் என்ற பிரபுவுடன் அவர் கொண்ட தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்தது. அக்காலத்தில் ஆணுடன் ஆண் கொள்ளும் ஒரு பால் புணர்ச்சி பிரிட்டனில் சட்ட விரோதமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை

அனுபவங்களையும் கவிதையாக எழுதி வெளியிட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை கிடைத்தது. பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டுக்குச்சென்று வசித்தார்.

அவருடைய உடல்நலமும் குன்றியது. விடு தலை அடைந்த மூன்றே ஆண்டுகளில் ஆஸ்கர் வைல்ட்  இறந்தார்.

பிறந்த தேதி – அக்டோபர்  16, 1854

இறந்த தேதி -நவம்பர் 30, 1900

வாந்தி ஆண்டுகள் – 46 ஆண்டுகள்

அவருடைய நாடகங்களும் கவிதை நூல்களும்

1890- THE PICTURE OF DORIAN GRAY

1891-  LORD ARTHUR SAVILE’S CRIME

1892- LADY WINDERMERE’S FAN

1893- A WOMAN OF NO IMPORTANCE

1895 – THE IMPORTANCE OF BEING EARNEST

1895- AN IDEAL HUSBAND

1896- SALOME

1898- THE BALLAD OF READING GAOL

DRAMA WAS A SUCCESS, BUT AUDIENCE WAS A FAILURE …

https://tamilandvedas.com › drama-w…

  1.  

5 Apr 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). Playwright Anecdotes: –. SUCCESS AND FAILURE. Oscar Wilde arrived at his …

Rudeness anecdotes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › rudeness-anecdotes

  1.  

21 Dec 2016 — Oscar Wilde indulged his penchant for baiting Yankees when he met Richard Harding Davis. “So you are from Philadelphia where Washington is …

–SUBHAM-

TAGS- சிறை , ஐரிஷ்,  நாடக ஆசிரியர்,  ஆஸ்கர் வைல்ட், OSCAR WILDE

December 2019 London Swaminathan Articles; Index 85 (Post No.9903)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9903

Date uploaded in London –28 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

December 2019 index 85

Bhartruhari Notes 2; 7286;December 1,2019

Part 3,7291;2/12

Part 4;7296;3/12

Billiards anecdotes,7295;3/12

Bhartruhari Notes last part 7300;4/12

Golf anecdotes,7304;5/12

Great woman scholar Avanti Sundari, 7306;6/12

Swami s crossword 81219;7314

More Unknown Poetesses Maryland,Morika,Bhavaka Devi,

Latangi, 7317;8/12

Swami s crossword 91219;7919

Greatness of Number 12,7321;9/12

Hindu Astronomy in Babylonia, 7326;10/12

Great Tamil Poetess Nappasalai,7330;11/12

Bastion 12,Mantra 12, and Hercules 12;1212:7334

Kannaki s Praise for Seven Great Tamil women,7337;13/12

Telugu Heroine Nayakuralu, Cock fight to win the Kingdom, 7341;14/12

Queen Didda of Kashmir, a woman of intrigue s and efficiency,15/12, 7346

Tamil Poetess Avvai , Angavai, and Sangavai, 7350;16/12

Brahmanas,Kshatriyas, Vaisyas must study Vedas- Manu,7354;17/12

Tamil Temple Builder Kundavai,7360;19/12

Queens of Orissa and Kashmir,7364;20/12

Indian History Wonder in Greece,Santorini Monkey,7367;21/12

Influence of Vishnu Sahasranama on World History,22/12

More Golf Anecdotes,7375;23/12

Temples built by Kunkuma and Loka Mahadevi,7385;26/12

Fishing Anecdotes,7378;25/12

British Army Chiefs Praise for Lord Skanda/Kartikeya,24/12,7381

Empedocles propagated Hindu Thoughts,7388;27/12

Longest Rule of a Telugu Woman in the World,7393;28/12

Quotations on Religion and Philosophy from Radhakrishnan,7396;29/12

Christian Blood Miracle,7397;29/12

Malayalee heroine who chopped heads of Muslim Molesters,7400;30/12

Gandhari and Kunti died in Forest Fire , 7404;31/12

Auspicious Days are ahead Happy New Year 2020

Post 2446 repeated, December 31,2019

XXXX

TAMIL ARTICLES FROM DECEMBER 2019; INDEX 85

டுமீல் டுமீல் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் , 7284, 1, 2டிசம்பர் 019

பூமிக்கு நுறு ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை, 7285,1/12

கியூனி பார்ம்  சுவையான வரலாறு, 7288, 2/12

11 வயது மேதைக்கு இப்போது வயாது 38, 7289; 2/12

பெற்றோர் மீது மகன் டைவர்ஸ் வழக்கு, 7290, 2/12

பாபிலோனியர்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள், 7293, 3/12

ஜிப்ஸிக்கள் இந்தியர்களா ?7294, 3/12

3000 ஆண்டுகளுக்கு முன் அஸீரிய மன்னன் அளித்த தடபுடல் விருந்து, 7298, 4/12

பாப் இசை ராணி மடோன்னா , 7299; 4/12

எண் பதினொன்றின்  சிறப்பு , 7302, 5/12

மசூதிக்கு போன் தகடு வேய்ந்த கதை ,7303, 5/12

ஹிட்லர் தற்கொலை, சடலம் பற்றிய மேல்விவரம்,7307,6/12

மெஸபொடேமியாவின் அதிசய துதிப்பாடல் , 7308, 6/12

மர்மச் சிலைகள் இருக்கும் ஈஸ்டர் தீவு , 7310, 7/12

அவந்தி சுந்தரி என்னும் அறிவாளி, 7311, 7/12

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி= த .கு.போ.71219, 7312

திமிங்கிலம் பற்றி புதிய வியப்பான செய்தி, 7316

த .கு.போ.91219, 7321

 நடுங்க வைத்த ஹிட்லர் ராக்கெட், 7322, 9/12

தற்கால  ஒலிம்பிக் சிற்பி சமராஞ்ச் , 7324, 10/12

பாபிலோனியாவில் இந்து நம்பிக்கைகள் ,7325, 10/12

உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர் ,7328, 11/12

வைணவத்தில் எண்  12, சைவத்தில் எண் 12, 7329.11/12

மந்திரத்தில் எண் 12, வாஸ்துவில் எண்  12, 7332, 12/12

பாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம்,7333, 12/12

கிருஷ்ணாதான் கிரேக்க நாட்டு ஹெர்குலீஸ் ஆனாரா?, 7336, 13/12

மார்லின் மன்றோவின்மர்ம மரணம், 7338, 13/12

கோயபெல்ஸ் யார்?7342, 14/12

குரங்கு ஆக மாறிய தமிழ்ப் பெண், சிலப்பதிகாரத்தில்

7 அதிசயங்கள், 7345, 15/12

துப்பாக்கி கலாசாரம், 15/12; 7347

ஜப்பானியர் பாதுகாத்த மாலிப்டின ரகசியம், 7349, 16/12

எமனையும் சமாளித்த பிடல் காஸ்ட்ரோ, 7351, 16/12

பிராமணர், க்ஷத்ரியர் , வைசியர் வேதம் படிக்க வேண்டும், —

மநு  கட்டளை, 7353, 17/12

16 வகை தானம், மூல வர்மன் கல்வெட்டு, 7957, 18/12

கொலைகார இங்கிலாந்து மஹாராஜா , 7359, 19/12

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள், 7362, 20/12

கை  எழுத்தும் தலை எழுத்தும், 7363, 20/12

உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு: கிரேக்க நாட்டில்

சிந்துவெளிக் குரங்கு, 7366, 21/12

லண்டன் தேர்த் திருவிழாக்கள், 738, 21/12

பூமியில் குட்டி சூரியனை உருவாக்க முயற்சி, 7370, 22/12

குத்துச் சண்டை மன்னன், 7371,22/12

வியட்நாமியரின் வியத்தகு சம்ஸ்க்ருத அறிவு-1, 7374, 23/12

எண் 14ன் மஹிமை, 7384, 26/12

அஸ்திகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்,7386, 26/12

பர்மா, மலேயாவில் சம்ஸ்க்ருதம், 7377, 25/12

முருகனைப் புகழ்ந்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி , 7380, 24/12

அற்புதமான ஆர்க்கிட் மலர்கள், 7382, 24/12

ஆட்டுப்பால் அதிசயம், 7389, 27/12

எரிமலைத் தீயில் நுழைந்த அதிசய ஞானி, 27/12, 7390

அதிர்ஷ்டம் பற்றிய 31 பழமொழிகள், ஜனவரி 2020

காலண்டர், 7392, 28/12

இரட்டைக் குழந்தை ஆராய்ச்சி , 7394, 28/12

கிறிஸ்தவ ரத்த அதிசயம், 7397, 29/12

புத்தர் பற்றிய ஐந்து அதிசய விஷயங்கள், 7399, 30/12

முஸ்லீம் தலைகலைப்பந்தாடிய  வீர பெண்மணி, 7402, 31/12

அதிசய நாடு மங்கோலியா, 7403, 31/12

நல்ல காலம் வருகுது (2446 மீண்டும் உபயோகிக்கப்பட்டது)

–subham–

 tags– index 85, December 2019, Swaminathan articles,

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 2 (Post No.9902)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9902

Date uploaded in London – 28 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 26-7-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 2

ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோற்றம்

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தவர் வெளியில் வந்திருக்கிறார் போலும் என்று நினைத்த நான் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி (உள்ளே இருப்பவரை வெளியேயும் பார்த்ததை) பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

    ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பது போன்ற இந்த மாதிரியான அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார்.  அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படி அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இப்படிச் செய்தார்.

திருவண்ணாமலை ரகசியம்

திருவண்ணாமலை அப்படி என்ன ஒரு அற்புதமலை? இந்தக் கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜமே.

ஒரு முறை பால் பிரண்டன் திருவண்ணாமலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்டு ரமணரைக் குடைந்தார்.

மலைக்குள்ளே குகைகள் உள்ளனவா என்று கேட்டார் பிரண்டன்.

ரமணர், “எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.

சித்தர்கள் அதனுள் இருக்கின்றனரா என்று கேட்டார் பிரண்டன். “பெரிய சித்தர்கள் இருக்கின்றனர்” என்றார் ரமணர்.

சித்தர்கள் இமயமலையில் இருப்பதாக அல்லவா சொல்கின்றனர் என்று அடுத்து கேட்ட பிரண்டனுக்கு விடையாக ரமணர், “கைலாயம் சிவனின் இருப்பிடம் தான்; ஆனால் சிவனே தான் இந்தத் திருவண்ணாமலை” என்று கூறினார்.  திருவண்ணாமலையின் ரகசியத்தை இப்படி விண்டுரைத்த ஒரே ரிஷி ரமணர் தான்.

சாமர்த்தியமான கேள்விக்குச் சரியான பதில்!

அன்பர் ஒருவருக்கு ‘இன்ஸ்டண்ட் ஞானியாக’ வேண்டும் என்று ஆசை. ரமண பகவானிடம் வந்தார்.

“நீங்களோ பகவான். ஆகவே எனக்கு எப்போது ஞானம் பிறக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போது ஞானி ஆவேன் என்பதைச் சொல்லுங்கள்” என்றார் அவர்.

ரமணர் அவரை நோக்கி, “ நான் பகவான் என்றால் ஆத்மாவைத் தவிர இரண்டாவது வஸ்து இல்லை. ஆகவே ஞானியோ அல்லது அஞ்ஞானியோ, இரண்டாவதாக ஒருவர் இல்லை. நான் ஒருவன் மட்டுமே தான்! நான் பகவான் இல்லை என்றால் நானும் உங்களைப் போல ஒருவன் தான்! எனவே உங்களுக்குத் தெரிந்த அளவே தான் எனக்கும் தெரியும். எப்படிப் பார்த்தாலும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது.”

கேட்டு அறிவதில்லை ஞான அனுபவம்! உணர்ந்து அறிவதே ஞானாநுபூதி!

ரமணரிடம் சாமர்த்தியமாகப் பேசித் தங்கள் கருத்துக்களை அவர் மேல் ஏற்றி அவரைப் பயன்படுத்த நினைத்த (மத மாற்றம் செய்யும்) ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பாதிரியார் உடபட அனைவரும் ஏமாந்தே போனார்கள். இப்படிப்பட்ட நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் உண்டு.

நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன?

நிஷ்காம்ய கர்மம் – பலனை எதிர்பாராமல் செயலைப் புரிவது – என்றால் என்ன?

ரமணர் பெரிய கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதிலைத் தருவார். ஒரு சம்பவம் இது:-

வெல்லூர் வர்கீஸ் கல்லூரியைச் சேர்ந்த தெலுங்கு பண்டிதர் ரங்காச்சார் என்பவர் ஒரு நாள் (25-12-1935 அன்று) ரமண மஹரிஷியிடம் நிஷ்காம்ய கர்மம் என்றால் என்ன என்று கேட்டார். பதிலே இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து ரமணர் அருணாசலமலையை மீது ஏறலானார். பக்தர்கள் பின் தொடர்ந்தனர். பண்டிதரும் தொடர்ந்தார்.

வழியிலே முள் நிறைந்த கம்பு ஒன்று கீழே கிடந்தது. அதை மஹரிஷி கையில் எடுத்துக் கொண்டார். ஓரிடத்தில் உட்கார்ந்து மெதுவாக அந்த முள்களைச் செதுக்கி எடுத்தார். கம்பில் இருந்த முண்டு  முடிச்சுகளைத் தேய்த்து அதைச் சீராக்கினார். ஒரு சொரசொரப்பான இலையை எடுத்து அதைத் தேய்த்து வழவழப்பாக்கினார்.

சுமார் ஆறு மணி நேரம் இந்த வேலை தொடர்ந்தது. கம்பு பளபளவென்று பாலிஷானது. அனைவரும் இதைப் பார்த்து எப்படி இருந்த கம்பு இப்போது எப்படி மாறி உள்ளது என வியந்தனர்.

பிறகு ரமணருடன் பக்தர் குழு நகரத் தொடங்கியது.

அப்போது ஒரு இடையன் அங்கே வந்தான். தனது கம்பைத் தொலைத்து விட்டு மிக்க கவலையுடன் இருந்த அவனைப் பார்த்த மஹரிஷி தன் கையிலிருந்த கம்பை அவனிடம் கொடுத்து விட்டு மேலே நகரலானார்.

தனது கேள்விக்கு பிராக்டிகலான பதிலே – நடைமுறை பதிலே – கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தார் பண்டிதர்.

பிரதிபலன் எதிர்பாராமல் தம் கடமையைச் செய்வதே நிஷ்காம்ய கர்மம்!

பகவானின் உபதேச மொழிகள்

மிக நீண்ட சொற்பொழிவுகளோ பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ ரமணரிடம் இல்லை.

அவரது உபதேசம் மிக மிக எளிமையானது; சாமான்யரான எந்த ஒருவர் நினைத்தாலும், இறைவன் அருளும் கூட இருந்தால், சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடியது! செலவில்லாததும் கூட!

‘நான் யார் என்பதை தொடர்ந்து தியானித்து வா என்றார் அவர்.

உன்னைக் கண்டுபிடித்து அறிந்து விட்டால் அனைத்தையும் கண்டுபிடித்தவன் ஆவாய் என்பது அவர் அருள் உபதேசம்.

தன்னை அறிவதே ஆன்மீகம்!

அவர் அரிதாக அவ்வப்பொழுது இயற்றிய அருமையான  ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம், உபதேசவுந்தியார், உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், அப்பளப்பாட்டு உள்ளிட்ட நூல்கள் ரமணாசிரமம் வாயிலாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஏராளமான ரமண பக்தர்கள் 

ஆயிரக்கணக்கான சுவையான சம்பவங்களைப் புத்தக உருவத்தில் தந்துள்ளனர். அனைத்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏன் உலகின் பல்வேறு மொழிகளிலும் கூட உள்ளன. இவற்றை ரமணாசிரமத்திலும் ரமணர் நூல்கள் கிடைக்கும் இதர இடங்களிலும் வாங்கிப் படித்துப் பயனடையலாம்.

ரமண – யாத்திரை இடங்கள்

ரமணரின் அருளைப் பெற விரும்பும் ஒருவர் நினைத்த இடத்திலிருந்து அவரை வணங்கலாம்; அருளைப் பெறலாம். அவர் வாழ்ந்த திருவண்ணாமலை ரமணாசிரமம், ஜெனித்த திருச்சுழி இல்லம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்குக் கோபுரத்திற்கு நேர் எதிரில் அமைந்துள்ள தெருவில் அவர் ஞானம் பெற்ற இல்லம் ஆகியவை அன்பர்கள் ஆன்மீக உயர்வுக்காக நாடிச் செல்லும் யாத்திரை இடங்களாக அமைந்துள்ளன.

 இறுதி நாட்களில் அவர் கையில் கட்டி ஒன்று தோன்றவே அன்பர்கள் மனம் கலங்கினர். ஆனால் ரமணரோ, “நான் எங்கு போகப் போகிறேன். இங்கே தான் இருப்பேன் என்று அருளினார்.

அதை நிரூபிக்கும் வகையில் அவரை அங்கு துதிப்போர் அனைவரும் ஆன்மீக அனுபவங்களை இன்றளவும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் எதிர்ப்படும் பிரச்சினைகள் அவரை வணங்கியவுடன் தீர்ந்து போவது ஒரு ஆச்சரிய அனுபவமாகும்.

1950ஆம் ஆண்டு எப்ரல் 14ஆம் நாள் இரவு 8.47க்கு அவர் மேலாம் நிலையை அடைந்து விண்ணில் கலந்த அதே கணத்தில் வானில் ஒரு பெரும் ஜோதி வேகமாகச் சென்றது.

ரமண ஜோதி பூவுலகில் தன் உடலை உகுத்து விண்ணில் ஜொலிக்கும் ஜோதியாக மாறியதைப் பார்த்தோர் அதிசயித்தனர்.

அற்புதமான அண்ணாமலையில் அருளாட்சி புரியும் அதிசய மஹரிஷி ரமணரை நினைத்தாலும் துதித்தாலும் குறைகளை எல்லாம் களையலாம்;கோடி நலம் பெறலாம் என்பது திண்ணம்!

வாழி ரமணேசன் வாழியவன் வாரிசத் தாள்

வாழி ரமணீய குணமாணடியார் – ஊழி பல

வாழி பராசக்தி வாழி சதாமூர்த்தி

வாழி சிவானந்த வளம்!       

நன்றி வணக்கம்.

****

TAGS- ரமண மஹரிஷி! – 2

Tamil and English Words 2700 Years Ago- Part 58 (Post No.9901)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9901

Date uploaded in London –27 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -58 Tamil and English Words 2700 Years Ago- Part 58

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -58

பாணினி எழுதிய அஷ்டாத்யாயியி (அஷ்ட அத்யாய = எட்டு அத்தியாயங்கள்) உள்ள நூலில் ஆறாவது பகுதிக்கு வந்துவிட்டோம்.

Panini 6-1-3;6-1-4

Doubling rules

In modern days Sandhi/ joining letters or words/ rules exist only in two ancient languages -Sanskrit and Tamil

Doubling rules discussed in these sutras exist in Tamil as well,  but I must add that the rules are not same.

If I want to add kan +Aadi, I have to add one more n to kan and form Kannaadi= mirror or specs.

If I don’t add’ n’ , it will be Kanaadi.

In short doubling rules exist in only these two ancient languages EVEN TODAY.

இரட்டிப்பு விதிகள்.

உலகில் சந்தி விதிகள் இன்றும்  பின்பற்றப்படும் இரண்டே மொழிகள் ஸம்ஸ்க்ருதமும் தமிழும்தான் .

தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் சந்தி விதிகள் வெவ்வேறானவை. ஆனால் சொல்லோ எழுத்தோ புணரும்போது அவை மாறும் என்பது பொதுவிதி. திராவிட மொழிக் குடும்பம் என்பது வேறல்ல. ஸம்ஸ்க்ருதமும் தமிழும் ஒரே மூலம் உடையவை என்பதை அறிய வேண்டும்.

கண் + ஆடி என்பதை கணாடி என்று எழுத முடியாது. கண் +ண் +ஆடி = கண்ணாடி என்றுதான் எழுத முடியும் இங்கே ‘ண்’ என்பது இரட்டித்தது. இது போல விதிகளை இன்றும் சம்ஸ்க்ருதத்தில் காணலாம். தொல்காப்பியத்துக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த பாணினீயத்தில் இதைக் காண்பது சிறப்புடைத்து.

XXX

6-1-6

Jaag= wake, ஜாக்ர = விழிப்பு

Wake up is derived from Jaag

Darithra = poor தரித்ர /ஏழ்மை

Indian languages use this until today.

Xxx

6-1-12

சர சர, சல சல

Words are doubled in both the languages

Varttika adds

Saraasara, chalaachala are examples

Bull they can be used without doubling too

Chara, chala

In Tamil also this is same,

Avan ododi/ Odi+ Odi/ vanthan.

ஓடோடி = ஓடி, ஓடி

We can even say Avan Odi ஓடி vanthaan

Avan azuthu azuthu kan sivanthathu

அழுதழுது கண் சிவந்தது.

அழுது , அழுது

Or simply Avan azuthu அழுது  kan sivanthathu

பட பட  என்று வெடித்தது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டது.

பிற மொழிகளில் பேச்சு வழக்கில் வந்தாலும் இலக்கிய நடையில் வராது.

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே இதைக் காணலாம். இதற்கு தமிழுக்கும் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி விதி இயற்றியது குறிப்பிடத்தக்கது.

Xxx

6-1-14

Bandhu = relative

Bond is derived from this; also binding; bound; bundle etc

பந்து = சொந்தக்காரன் ; பந்த பாசம்;

Xxx

6-1-16

Grah= paani grahanam = holding hands = wedding

Grah = solar eclipse = surya grahana

Grah = grip= grab

கிரஹ = பிடி

பாணி கிரஹணம் – கைப்பிடித்தல்

சூரிய கிரஹணம்

Way = weave, வேய்

Vrus = vettu in Tamil வெட்டு

Prasj = fry வறு

ப = வ

Xxx

6-1-20

Vas = wish

Xxx

6-1-24

Drava = liquid

திரவ

Drava= drip, drop

Xxxx

6-1-25

Prates = freeze = solidify

 freeze- விறை

ப= வ

Xxx

6-1-47

Spurati= spur

ஸ்புரதி – துடித்தல்

Xxx

6-1-82

Kravya – to sell

In Tamil Kirayam Selling is used even in villages

கிரவ்ய = கிரயம் = விலை பேசுதல், விற்றல் .

இப்போதும் கிராமத்தில் கூட நிலத்தை ……. க்கு கிரயம் பேசினான் என்பதைக் கேட்கலாம்.

Xxx

6-1-87

Commentators give an example

Karabauru= thighs like the trunk of an elephant

Karaba =elephant = kari in Tamil

Kara =chiro= kai in Tamil

கரபோ ரு = யானையின் துதிக்கை போன்ற தொடை

கரப = யானை = கரி = யானை

கரப= கையினால் தண்ணீ ர் குடிக்கும் பிராணி

கை = கைரோ = கிரேக்க மொழியிலும் கை என்ற சொல்லே உள்ளது.

இது சம்ஸ்க்ருத தொடர்புடையது.

கிரேக்க மொழியில் உள்ள சொல் தமிழிலும் இருக்கிறது. அதன் மூல வடிவம் ஸம்ஸ்ருதத்தில் உளது

Xxx

6-1-89

Varttika adds vrddhi and that becomes Vathi in Tamil

Tion = Sion in English

ட = ஷ

ஆங்கிலத்தில் டியன் என்று ஸ்பெல்லிங் இருந்தாலும் உச்சரிப்பு = ஷன்

இது சம்ஸ்க்ருத விதிப்படியானது.

ரிஷப = இடப வாகனம் = ஷ = ட

It is from Panini sutra

Vrusabha = Rishabha = Idabha in Tamil

Here we see sha =da; Sion =Tion

Xxx

6-1-94

Ushta = uthadu in Tamil

Ushtra = Animal with prominent lips = camel

Ushtra = Ottai =Ottakam in Tamil

ஏற்கனவே சொல்லிவிட்டேன் உதடு= உஷ்ட்ரா= ஓட்டை= ஒட்டகம்

உதடு பிராணி – உஷ்ட்ர = ஓட்டை= ஒட்டகம்

Xxx

6-1-95

Om or Aum

ஓம்

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஒரே விளக்கம் அ + உ +ம

All the mantras begin with Om

Known to all Indians

Tamils also give the same explanation

A+ u+ m

To be continued……..

tags-  Panini in Tamil 58

விக்டோரியன் கால புகழ் மிகு கவிஞர் ஆல்ப்ரெட் டென்னிஸன் (Post No.9900)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9900

Date uploaded in London –27 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விக்டோரியன்  காலத்திய புகழ் மிகு கவிஞர் ஆல்ப்ரெட் டென்னிஸன் ALFRED TENNYSON ஆவார்.

இசை நயம் மிக்க உணர்ச்சி கொப்பளிக்கும் சிறிய பாடல்களை ஆங்கிலத்தில் லிரிக் LYRIC என்பர். அவைகளை எழுதுவதில் அதி சமர்த்தர் டென்னிசன்;  அவருடைய யுலிஸிஸ் ULYSSES கவிதையைப் படித்தவர்களுக்கு இது புரியும்

ஆல்ப்ரெட் டென்னிஸன், ஒரு கிறிஸ்தவ மத போதகரின் மகன். அவரே அவருக்குக் கல்வி கற்பித்தார். கவிதைகள் பற்றி ஆர்வத்தையும் உண்டாக்கினார். இதனால் அவர் 15 வயதிலேயே கவிதை எழுதினார். பைரன் பிரபு பாணியில் கவிதை எழுதத் துவங்கினார். BYRON பைரன், இவருக்கும் முந்தைய பெருங் கவிஞர்.

18 வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது அவருடைய சகோதரர்கள் எழுதிய கவிதைகளுடன் இவர் கவிதையும் புஸ்தகமாக வெளிவந்தது. அங்கு படிக்கையில் ஆர்தர் ஹாலம் ARTHUR HALLAM என்பவருடன் நட்பு மலர்ந்தது. டென்னிசன் தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தார்

இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பில் மிகவும் பிரபலமான மரியானா MARIANA இடம்பெற்றது. இந்தத் தொகுப்பு விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் குறையும் சொன்னார்கள். அடுத்த தொகுப்பில் மிகவும் பிரபலமான THE LOTUS EATERS ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ பாடலும் THE LADY OF SHALOTT ‘தி லேடி ஆப் தி ஷலோட்’ ட்டும் இடம்பெற்றன. இதற்கு அடுத்த ஆண்டில் அவரது ஆப்த நண்பர்  ஆர்தர் ஹாலம் ARTHUR HALLAM இறந்தார். இது டென்னிசனுக்கு பெரிய மனத் தொய்வை உண்டாக்கியது. அடுத்த ப த்து ஆண்டுகளுக்கு கவிதை எழுதிய போதும் எதையும் வெளியிடாமல் அமைதி காத்தார்.

1842ல் டென்னிசன் வெளியிட்ட இரண்டு தொகுதி கவிதைகளில் ஆர்தர் பற்றிய கவிதையும் யூலிஸிஸ் ULYSSES கவிதையும் இருந்தன. இவை பெரும் வரவேற்பைப் பெற்றன இதைத் தொடர்ந்து அவர் 1850-ல் ஆஸ்தான கவிஞராக POET LAUREATE  நியமிக்கப்பட்டார். அவர் புகழ்  எங்கும் பரவியது. . அதே ஆண்டில் ஹாலம் நினைவாக ‘இன் மெமோரியம்’ IN MEMORIAM கவிதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்பாகும்.

பின்னர் வெளியான MAUD மாட் தொகுப்பில் தான், ‘சார்ஜ் ஆப் தி லைட் ப்ரிகேட்’ CHARGE OF THE LIGHT BRIGADE அச்சாகியது பின்னர் ஆர்தர் கதைகளைப் பிரதிபலிக்கும் ‘ஜடில்ஸ் ஆப் தி கிங்’  IDYLLS OF THE KING என்ற காவியத்தை  எழுதினார்.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 6, 1809

இறந்த தேதி – அக்டோபர் 6, 1892

வாழ்ந்த ஆண்டுகள் – 83

PUBLICATIONS

1827- POEMS BY TWO BROTHERS

1830- POEMS, CHIEFLY LYRICAL

1832- POEMS

1842- POEMS- TWO VOLUMES

1847- THE PRINCESS

1850- IN MEMORIAM

1855- MAUD

1859-85- IDYLLS OF THE KING

1884 – BECKETT

1892- THE FORESTERS

—SUBHAM-

ALSO READ…………..

டென்னிசன் மாக்ஸ்முல்லர் சம்பவங்கள் | Tamil and …

https://tamilandvedas.com › tag › ட…

· Translate this page

22 Apr 2016 — Tagged with டென்னிசன் மாக்ஸ்முல்லர் சம்பவங்கள் … (for old articles go to tamilandvedas.com OR …

Havanas | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ha…

  1.  

Translate this page

21 Apr 2016 — Max Muller about Tennyson: Habits die hard! (Post No 2745). 610-Max-Mueller-India-Stamp-1974-225×300. Compiled by London swaminathan.

TAGS – கவிஞர், ஆல்ப்ரெட் டென்னிஸன், டென்னிசன், TENNYSON, யூலிஸிஸ், ULYSSES

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 1 (Post No.9899)

Post No. 9899

WRITTEN BY S NAGARAJAN

Date uploaded in London – 27 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 26-7-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பாருக்கரிய பகவான் ரமண பதஞ்

சேரக் கிடைத்த இந்த சென்மம் போல் – யாருக்கும்

எத்தனை கோடிப் பிறவி ஏற்றாலும் வாய்ப்பரிதே

அத்தனை மாண்புள்ளதிதுவாம்.

ஸ்ரீ சாது ஓம் வாழி!

பல்லாயிரக்கணக்கான ரிஷிகளை யுகம் தோறும் பார்த்த பூமி பாரத பூமி. அவர்கள் யுகம் கடந்த நிலையான தர்மங்களை மக்களுக்கு உபதேசித்தவர்கள்.

ரிஷிகளைப் பற்றி சம கால மக்கள் நன்கு அறிந்து உணரும் வண்ணம் தோன்றி, லக்ஷக்கணக்கானோருக்கு அருள் பாலித்தவர் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி!

திருவண்ணாமலை பற்றிய புராண சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. அக்னி ஸ்தலம் என்று மிகவும் போற்றித் துதிக்கப்படும் திருவண்ணாமலை உலகின் பழம்பெரும் மலை என்பதோடு அதிசய மலையும் கூட!

காலத்திற்குத் தக்கவாறு அடியார்களுக்கு அருள் புரிய சிவபிரான் உளங் கனிந்தார் போலும்; ரமண மஹரிஷியைத் தன் பால் திருவண்ணாமலைக்கு ஈர்த்து பல அருள் விளையாடல்களை அவரை வைத்து நிகழ்த்தச் செய்தார். பல்லாயிரம் மக்களை ஆன்மீகத்தில் உயர்த்த வழி வகுத்தார். திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த பகவான் ரமண மஹரிஷியின் வாழ்வு அதிசயமான ஒன்று; அன்பர்களுக்கு ஆனந்தம் தருவதும் கூட!

ரமண அவதாரம்

 அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள திருச்சுழியில் 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசன நாளன்று புனர்வசு நக்ஷத்திரத்தில் சுந்தரம் ஐயருக்கும் அழகம்மாளுக்கும் குழந்தையாக வந்துதித்தார் ரமணர். அவருக்கு வேங்கடராமன் என்று பெயரிடப்பட்டது.

மற்றவர்களைப் போலவே இருந்தாலும் கூட இள வயதிலேயே சகஜ சமாதி எனப்படும் அரிய நிலை வேங்கடராமனுக்கு இயல்பாக வாய்த்திருந்தது. ஒரு நாள் அவரது உறவினர் ஒருவர் நான் திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன் என்றார். திருவண்ணாமலை என்ற சொல் அவரை வெகுவாகப் ஈர்த்தது.

1896ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் அவருக்கு மரண பயம் தோன்றியது. தொடர்ந்து, மதுரையில் அவர் இருந்த இல்லத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தால், பெறுதற்கரிய ஞானத்தில், உயர் நிலையை அவர் பெற்றார். 1896ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ரயிலில் ஏறிய அவர் திருவண்ணாமலையை அடைந்தார் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி  சமாதி நிலையை எய்தியது வரை திருவண்ணாமலையை விட்டு வேறு ஒரு இடத்திற்கும் அவர் செல்லவில்லை.

கடுமையான தவத்தின் மூலம் சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி பரமாசார்யர், நாராயண குரு உள்ளிட்ட மகான்கள் வியந்து போற்றும் மஹரிஷியாக அவர் திகழந்தார். காவ்யகண்ட கணபதி சாஸ்திரி அவரை அழைத்த ரமணர் என்ற பெயரால் அவரை உலகம் அறிந்து கொண்டது.

ஏராளமானோர் அவர் அருள் நாடி வரவே ரமணாசிரமம் உருவானது.

அற்புதங்கள் ஆயிரம்!

ரமணரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களுக்கு எண்ணிக்கையே இல்லை; நவீன காலத்திற்கேற்றபடி பல்வேறு அன்பர்களும் அவற்றைக் குறிப்புகளாக எடுத்ததோடு புத்தகங்களாக எழுதியும் வெளியிட்டனர்; ஆகவே தான் அதிகாரபூர்வமான ஆவணங்கள் மூலம் அவை அனைத்தையும் அறிந்து பரவசப்பட முடிகிறது.

நேரத்தைக் கருதி சில சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம். அமுதத் துளியில் எந்தப் பகுதியைச் சுவைத்தாலும் இனிக்கும் என்பது போல பகவானின் வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த சம்பவமும் சுவையானதே; அரிய ரகசியத்தையோ செய்தியையோ அது சொல்வதும் இயல்பானதே.

ரமணரிடம் வந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ்

 நூற்றுக் கணக்கான மேலை நாட்டோர் திருவண்ணாமலை வந்து ரமணரை தரிசனம் செய்து பயன் பெற்றனர்; தங்கள் அனுபவங்களைப் பல்வேறு நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

முதன் முதலாக வந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ் என்பவர். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸிஸ்டண்ட் சூபரிடெண்டெண்டாக பம்பாய்க்கு வந்தார். பம்பாய் வரும் போதே அவரது உடல் நிலை மோசமானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது மனதை வலியிலிருந்து திருப்ப முயற்சி செய்து ஆவி உடலில் மேலெழும்பி சஞ்சரிக்க ஆரம்பித்து வெல்லூர் வரை வந்தார். அங்கு நரசிம்மய்யா என்பவரைப் பார்த்தார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு ஒருவாறாக அவர் மார்ச் மாதம் உடல் நிலை தேறினார். அதே மாதம் 18ஆம் தேதி வெல்லூருக்கு அவர் வந்தார். அங்கு தான் ஆவி உடலில் பார்த்த நரசிம்மய்யாவை நேரில் கண்டு வியந்தார். மீண்டும் உடல் நிலை மோசமாகவே ஊட்டிக்குச் சென்ற அவர் அதீதமான தனது அனுபவங்களை நரசிம்மய்யாவிற்குக் கடிதம் மூலம் எழுதி விளக்கம் கேட்டு வந்தார். ஏதேனும் ஒரு பெரிய மகானைச் சந்திக்க முடியுமா என்ற தனது ஆவலைக் கடிதம் மூலம் தெரிவித்த அவர் வெல்லூர் வந்த போது தன் மனதில் தோன்றிய ஒரு குகையின் படத்தையும் குகை வாயிலில் நிற்கும் மகானின் படத்தையும் வரைந்து நரசிம்மய்யாவிற்குக் காட்டினார். அந்த மகான் தான் ரமணர்.

இப்படி எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த பல அயல் நாட்டினருக்கும் அருள் பாலித்து அவர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் ரமணர்.

உலகின் மிகப் பெரும் எழுத்தாளரான பால் பிரண்டன் (Paul Brunton) ரமணரைச் சரண் அடைந்த சம்பவம் சுவையான ஒன்று. காஞ்சி மஹாபெரியவாளைச் சந்தித்த பிரண்டன் அவரைத் தனக்குக் குருவாக இருந்து வழிகாட்ட முடியுமா என்று கேட்ட போது அவர் ரமணரைத் தரிசிக்குமாறு அருளுரை புகன்றார். அதன்படி ரமணரைச் சந்தித்த பிரண்டன் தான் கேட்க விரும்பிய கேள்விகளுக்கெல்லாம் அவர் சந்நிதியில் உடனுக்குடன் தன் மனதிலேயே பதில் கிடைப்பது கண்டு வியந்தார்.

பகவான் ரமணருடனான தன் அனுபவங்களையும் ரமணரின் உபதேசங்களையும் பல நூல்களின் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார்.

உலகம் முழுவதும் ரமணரின் புகழ் பரவ ஆரம்பித்தது. பால் பிரண்டனின் ‘எ செர்ச் இன் சீக்ரட் இந்தியா” (A Search In Secret India) பல்லாயிரம் பிரதிகள் விற்பனையான அருமையான ஒரு புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

மிகவும் பிரபலமான ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் (Somerset Maugham) திருவண்ணாமலைக்கு ரமணரை தரிசிக்க வந்தார். தான் கேட்க வேண்டிய கேள்விகளைக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவர் சந்நிதியின் முன் அமர்ந்தார். ஒவ்வொரு கேள்வியாக அவர் மனதில் எழ அதற்கான அற்புதமான பதில் அவர் மனதிலேயே தோன்றியது. ஒரு கேள்வியையும் அவர் கேட்கவில்லை. ஹிந்து மதம் பற்றிய அவரது ‘பாயிண்ட்ஸ் ஆப் வியூ’ என்ற புத்தகம் அரிய சம்பவங்களையும் கருத்துக்களையும் கொண்ட நூலாகும்.

பகவான் ரமணரின் கருணை மழை அனைவருக்கும் பொதுவானது.

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். இன்னும் மைசூர் மஹாராஜா, பரோடா மஹாராஜா, மஹாத்மா காந்திஜியின் செயலாளரான மஹாதேவ தேசாய், பரமஹம்ஸ யோகானந்தா, நாராயண குரு, காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக், சாமர்செட் மாம்,திலிப் குமார் ராய் உள்ளிட்ட ஏராளமான துறவிகள், தேசியத் தலைவர்கள், பேரறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

  – தொடரும்

tags- பகவான்,  ரமண மஹரிஷி,