சாகசம், விசித்திரம், கற்பனை கலந்த ஆங்கில நாவல்கள் – ஜே.ஆர்.ஆர் டோல்கீன் (Post.9942)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9942

Date uploaded in London – 6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தென் ஆப்ரிக்காவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, ஆங்கிலக் கதைகளை எழுதி, சிறுவர்களையும் பெரியோரையும் மகிழ்வித்த நாவல் ஆசிரியர் ஜே  ஆர் ஆர் டோல்கீன் J R R TOLKIEN  ஆவார்.

ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் JOHN RONALD REUEL TOLKIEN என்பது இவருடைய முழுப்பெயர். தென் ஆப்ரிக்காவில் குடியேறிய ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தவர். தென் ஆப்ரிக்காவில் ‘ப்ளூ பவுன்டைன்’ என்னும் இடத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே தாயாருடன் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து பர்மிங்ஹாம் பகுதியில் வளர்ந்தார். முதல் உலகப் போர் வெடித்தபோது படையில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் ஆங்கில மொழியின் மூல மொழிகள் பற்றிப் பயின்றார். 33 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலோ-சாக்ஸன்  ANGLO-SAXON பேராசிரியர் ஆனார். வேலையில் இருந்து ஓய்வு பெறும்வரை  ஆக்ஸ்போர்டில் இருந்தார்.

ஆக்ஸ்போர்டில் அக்கால எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. நார்னியா க்ரானிக்ல்ஸ் நூல் எழுதிய சி.எஸ். லூயிஸ் (NARNIA CHRONICLES BY C S LEWIS அவர்களில் முக்கியமானவர். இங்க்லிங்ஸ் INKLINGS என்ற எழுத்தாளர் வட்டத்தை ஏற்படுத்தினார்.. அவர்கள் எல்லோருக்கும் கதை செல்லும் கலையில் ஆர்வம் இருந்தது. அடிக்கடி நடக்கும் கூட்டத்தில் ஒவ்வொரு எழுத்தாளரும் அவருடைய கதையின் சாராம்சத்தை உரத்த குரலில் வாசித்துக் காட்டுவார்கள்.

45 வயதில் டோல்கீன் தனது முதல் நாவலான ஹாப்பிட் – THE HOBBIT ஐ வெளியிட்டார். இது சிறுவர்க்கா கதை. மனிதன் போலத் தோற்றமுடைய ஒரு பிராணியின் சாகசங்கள் நிறைந்தது. மத்திய உலகம் MIDDLE WORLD என்ற கற்பனைப் பிரதேசத்தில் அது தனது பயணத்தை மேற்கொள்ளும். இதற்கு நல்ல ரசிகர் குழு கிடைத்தது. பின்னர் அவர் மத்திய உலகத்தை விரிவுபடுத்தி மூன்று தொகுதி நாவல்களைப் பதிப்பித்தார். அவைகளுக்கு LORD OF THE RINGS லார்ட் அப் தி ரிங்ஸ் என்று பெயர்.

‘லார்ட் அப் தி ரிங்ஸ்’ LORD OF THE RINGS  மிக நீண்ட இதிகாசம் போன்றதொரு படைப்பு; இறுதி கட்டத்தில் நல்லோருக்கும் பொல்லாதவர்க்கும் இடையே போர் நடைபெறும். தேவாசுர யுத்தம் போன்றது. அதில் பங்குபெறுவோர் குள்ளர்கள், தேவதைகள், மந்திரவாதிகள், தீமை செய்யும் மிருகங்கள் ஆகும். வேறு எந்த ஒரு எழுத்தாளரும் இதுபோன்று விரிவான கற்பனைப் படைப்பை செய்தது இல்லை. இவர் சுவை குன்றாதபடி இப்படி எழுதியது இவரை இந்தத் துறையில் முன்னனியில் வைத்தது  . அவருடைய கற்பனை உலகத்துக்கான புதிய மொழியையும் அவர் உருவாக்கினார் அவரே ஒரு மொழி இயல் அறிஞர். ஆகையால் பூகோளம், வரலாறு, மொழிகள், கற்பனை, வினோதம், விசித்திரம், அதிசயம், சாகசம் ஆகியவற்றின் சுவைமிகு அவியலை விருந்தாகப் படைத்தார்.

இப்போது உலகம் முழுதும் டோல்கீன்  ரசிகர் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் ஹாபிட், லார்ட் ஆப் த ரிங்ஸ் முதலியன பற்றி விவாத்திதுக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இவரது படைப்புகள் திரைப்படம், டெலிவிஷன்  தொடர்களிலும் பெரும் வெற்றிபெற்றன  ,

பிறந்த தேதி — ஜனவரி 3, 1892

இறந்த தேதி -செப்டம்பர் 2, 1973

வாழ்ந்த ஆண்டுகள் – 81

எழுதி வெளியிட்ட புஸ்தகங்கள்-

1937- THE HOBBIT

1949- FARMER GILES OF HAM

1954 – THE LORD OF THE RINGS (THE FELLOWSHIP OF THE RING,

THE TWO TOWERS, THE RETURN OF THE KING)

1964 – TREE AND LEAF

1967- SMITH OF WODDEN MANOR

PUBLISHED AFTER HE DIED

1977 – THE SILMARILLION

–SUBHAM–

tags- ஜே.ஆர்.ஆர் டோல்கீன், J R R Tolkien, Hobbit, Lord of the Rings

MARCH 2020 London Swaminathan Articles, Index-88 (Post No.9941)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9941

Date uploaded in London – 6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

xxxx

March 2020 Index 88

Death is better than Drinking Milk,7639;1 March 2020

Brahmins weapon is Atharvana Veda, He can slaying his

enemies with it- Manu ,7641:2/3

Gambling while Dying,3/3

I Am Alpha and Omega, Krishna and Christ!7649;4/3

If Houdini escaped from Coffin,7654;5/3

Swami s crossword 532020;7655

Most Famous Buddhist Woman MAHAPAJAPATI

Gotami,7658;6/3

Woman who could compose verses in eight

languages,7663; 7/3

Women Zindabad crossword 7664

Buddha s Meeting with Mango Garden Lady;

King’s Secret Visit to her ,7669;8/3

Swami s crossword 932020;7672

Dead Cat thrown at Lord Macaulay,7674;10/3

Miracle by Buddha, Created a Beauty to teach

another Beauty ,7676;10/3

Political Party Anecdotes,7681;11/3

Quotes on Panini,7684;12/3

Amazing List of 32 Good activities in Hindu

Scripture s ,7687;13/3

Lincoln hand was shaking! Freedom Anecdotes,7692;14/3

Sunlight enters Madurai Temple, 7693;14/37694

Swiss Fish and Nazi Fish 7697;15/3

Swami s crossword,1432020 7694

Tamil Folktale- Divide and Rule,7702,16/3

Swami s crossword 1632020;7703

Rare pictures from an old German book-1,7706;17/3

Diamond Axe Hindu s Reply to Christian Attack, 7705;17/3

Part 2;7709;18/3

Sunlight shines on Nandi/ Bull in Hindu temple,7712;18/3

Story of Panini as told by Kanchi Shankara charya, 7710;18/3

Manu and Veda Vyasa statues in Oxford 7713;18/3

Swami s crossword 1932020;7714

How the jackal fooled a Ghost; Two more Tamil folktales 7715;19/3

Yuan Chwang on Panini,7719;20/3

Third part of Rare Pictures from……7721:20/3

Manu’s Strange Punishment for Brahmins, 7724;21/3

Swami’s crossword 2132020;7725

Why is the sea salty? Why’s the Moon waxing and

waning? Manu ,7729;22/3

Images of Mogul Emperors and Rare Coins from India,7733;23/3

Farmer and the Imps,7732;23/3

Swami’s crossword 2332020;7734

Dialogue poems in the Rigveda,7737;24/3

Sexy Monkey Puzzle in the Rigveda Solved,7741;25/3

Swami s crossword 2532020;7742;25/3

Equality and Socialism Anecdotes,7745;26/3

Quotes on Pride and Self Respect,7748;27/3

Swami s crossword 2732020;7749

Stupid King and Wise Queen,7753;28/3

Swami s crossword 2932020;7757;

Hindu Gods in Tamil Veda Tirukkural 7758;29/3

How to claim Insurance if one’s Father is Hanged?7762;30/3

Gods of Great Tamil Community 7766; 31/3

Swami s crossword 3132020; 7767;31 March 2020

XXX

TAMIL ARTICLES FROM MARCH 2020

பாட்டி சுட்ட வடையும் ஏப்பமும்,7638, 1 மார்ச் 2020

பால் வேண்டாம் சாவே மேல் ,7642, 2/3

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி= த .கு.போ 232020;7643

எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு ,7645;3/3

சாகும்போது பாடியவர் யார்? 7650;4/3

த.கு.போ .432020;7651

அகர முதல எழுத்தெல்லாம் , எனது முக்கிய ஆராய்ச்சி,

7653, 5/3

சாகும்போது ஹூடினி மாஜிக், 7657, 6/3

த.கு.போ .632020;7659

சீனாக்காரன் கொடுத்த சூடான பதில், 7661, 7/3

காக்கா குளியல்- மாணவர்கள் பற்றி பதஞ்சலி நக்கல் ,7662,7/3

நலுங்குப் பாடல்கள் ஆராய்ச்சி, 7666,8/3

அதிசயப் பெண்கள் – எட்டு மொழிகளில் 100 கவிகள், 7667, 8/3

மகளிர் சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி, 7668, 8/3

நாட்டிய தாரகையின் 5 நிபந்தனைகள்; மாந்தோப்பு

 அழகியுடன் புத்தர் சந்திப்பு;7671; 9/3

தமிழில் எத்தனை சதகங்கள்?7675, 10/3

த.கு.போ.1032020;7678

மேடையில் கிழவி, அழகி ஆக மாறிய விந்தை, 7680;11/3

த.கு.போ.1332020;7689

32 வகை தர்மங்களின்  பட்டியல்; 7683;12/3

மேலும் ஒரு நலுங்குப் பாடல் புஸ்தகம்; 7688; 13/3

ஒரே பாடலில் 18 புராணம்;7691;14/3

ஆப்ரஹாம் லிங்கனின் கைகள் நடுங்கியது ஏன்?

 சுவிஸ் மீனும் ஹிட்லர் மீனும்;7696;15/3

தமிழா! புலவர் பற்றிக் கண்டுபிடி;7698;15/3

த.கு.போ.1532020;7699

சடங்கு – விக்கிபீடியா தவற்றைத் திருத்துக;7701/16/3

கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888ம் ஆண்டு நூலில் -1;

7705; 17/3

த.கு.போ.1732020;7707

கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888ம் ஆண்டு நூலில் -2;

7709; 17/3

உலக மொழிகள் தமிழில் இருந்து  உதித்தனவா?7715/19/9

தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியரை

 ஏன் சிவபெருமான் அனுப்பினார்?7718;20/3

த.கு.போ.2032020;7720

தமிழ் மக்கள் சம்ஸ்க்ருதம் இன்றி வாழ முடியுமா?7723;21/3

பேரியம் கஞ்சியும் பச்சை மத்தாப்பும்; 7727/ 22/3

த.கு.போ.2232020;7728

நாட்டுப்புற கதை-நிஜ வாழ்வில் நீலாம்பரி;7731,23/3

த.கு.போ.2432020;7738

இரண்டு பேய்க் கதைகள் ;7736;24/3

பிராமணர்களுக்கு மரண தண்டனை பற்றி மநு 7740;25/3

2 கைதிகள் ஆத்திரக்காரனுக்கு புத்தி மாட்டு; 7744;26/3

த.கு.போ.24-632020;7746

த.கு.போ.2832020;7755

த.கு.போ.3032020;7763

கோபமே பாபங்களின்  தாய் தந்தை ;7750,27/3

30 திருப்புகழ் மணிகள்; மேற்கோள்கள்;7752

அப்பு! தமிழ் தெரியுமா? முட்டாள் ராஜாவும்

புத்திசாலி ராணியும் ;7754;28/3

பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி குட்பை 7759;29/3

இரண்டு ராஜா ராணி கதைகள்; 7761;30/3

ஒரு சந்தேகம் -அந்தணர் என்பவர் யார்- 1; 7765;31/3

–சுபம்–

Tags- Index, March 2020, Index 88,

கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்! (9940)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9940

Date uploaded in London –  6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இணையிலா இந்து மதம்!

ச.நாகராஜன்

ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம் – கேள்விகள், உரையாடல்கள், அருளுரைகள் – இது தான் இணையிலா இந்து மதத்தின் தலையாய சிறப்புகளில் ஒன்றாகும்.

எந்த ஒரு சாஸ்திரத்தை எடுத்துப் பார்த்தாலும் அதற்கு ஆதி கர்த்தாவாக ஒருவர் இருப்பதையும் அவர் தான் கற்று உணர்ந்ததை வழுவாது அதை உண்மையுடனும் பக்தியுடனும் சிரத்தையுடனும் கேட்பருக்கு உபதேசிப்பதையும் காணலாம்.

நைமிசாரண்யத்தில் அல்லது அது போன்ற ஒரு தூய்மையான இடத்தில் பல முனிவர்கள் ஒன்று கூடி இருக்கும் தருணத்தில் சுகரை நோக்கி அவர்கள், எங்கள் முன்னோர்களின் சரிதத்தைச் சொல்லுங்கள் என்று வினயத்துடன் கேட்பதையும் மடை திறந்த வெள்ளம் போல வரலாறுகள் வந்து குவிவதையும் பார்த்து வியக்கிறோம் – பல புராணங்களில்!

ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களில் தான் எத்தனை கேள்விகள்!

நாரத மஹரிஷியைப் பார்த்து வால்மீகி முனிவர் கேட்கிறார் பல கேள்விகளை!

அதிலிருந்து தான் ராமாயணம் பிறக்கிறது.

இப்பூவுலகில் நற்குணம் உள்ளவனும், வீரியமுடையவனும், தர்மம் அறிந்தவனும், சத்தியம் பேசுபவனும், விடாமுயற்சியும் உடையவன் எவன்?

எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை நாடுபவன் எவன்?

எல்லாம் அறிந்தவன் எவன்?

முடியாத காரியங்களையும் முடிக்க வல்லவன் எவன்?

காண்பதற்கு இனியவனும், ஒப்பில்லாதவனுமாக இருப்பவன் எவன்?

தைரியமுடையவன் எவன்?

கோபத்தை அடக்கி தேஜஸ் உடையவனும் பொறாமை அற்றவனுமாக இருப்பவன் எவன்?

எவனுடைய யுத்தத்தினால் தேவர்களும் பயன் அடைவர்?

சரமாரியான இந்தக் கேள்விகளுக்கு நாரதர், “

இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனைஸ்சுருத: |

-இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ராமனே அவ்வித குணங்களை உடையவன்” என்கிறார்.

பிறகு வரிசையாக ராமனின் நற்குணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

வியக்கிறோம், பிரமிக்கிறோம்.

வால்மீகியும் தனது பங்கிற்கு வியப்பதுடன் அல்லாமல் உலக நன்மைக்காக ராமாயணத்தை – ஆதி காவியத்தை – இயற்றுகிறார்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும் போது ஸ்ரீ

கிருஷ்ணர் தர்மரிடம் கேட்க வேண்டியவற்றை எல்லாம் இந்த ஞானச் செல்வத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்.

அதன் விளைவாக தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும், அதில் நுட்பமான பல விஷயங்களையும் நாம் பெறுகிறோம்.

பார்வதி பரமேஸ்வரை நோக்கி, “ ஆயிரம் நாமங்களைப் படிக்க முடியாதவர்களுக்கு லகுவான உபாயம் (கேன லகு உபாயம்?) எதாவது இருக்கிறதா” என்று கருணை ததும்பிய உள்ளத்துடன் கேட்கிறார்:

கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம் |

பட்யதே பண்டிதை நித்யம் ஸ்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ ||

சிவபிரான்,

‘ஸ்ரீராம ராமராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” –

‘ராம நாமம் ஒன்றே ஆயிரம் நாமங்களுக்குச் சமம்’ என்று கூறி அருளுகிறார்.

மஹாபாரதத்தில் பார்வதி, பரமசிவனை நோக்கி, ஜென்மப் பிறப்புகள் பற்றியும் நல்வினை, தீவினை பற்றியும் கேட்க சிவபிரான் கர்மபலன் ரகசியங்களை அற்புதமாக எடுத்துரைப்பதைக் காண்கிறோம்.

ஷீர்டி சாயிபாபா அவரது அணுக்கத் தொண்டரான நானாவுக்கு (என்.ஜி.சந்தொர்கர் என்பது இயற்பெயர்) கீதையின் நான்காம் அத்தியாயம் 34வது ஸ்லோகத்திற்கு அற்புதமான விளக்கவுரை கொடுத்து அவரை பிரமிக்க வைத்தார்.

தத்வித்தி ப்ரதிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா மி |

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞானிநஸ் தத்வதர்சிந: மிமி ||

ப்ரஸ்ன என்பதற்கும் மேலாக பரி ப்ரஸ்னம் என்ற வார்த்தையை ஏன் வியாஸர் உபயோகப்படுத்துகிறார்?  முன்னேற்றம் மற்றும் முக்தியை அடைவதற்காகக் கேள்வியின் நோக்கம் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் கேள்விகள் மீண்டும் மீண்டும் முழுப்பொருளையும் உணரும் வரை  கேட்கப்பட வேண்டும் அதாவது குடைந்து குடைந்து கேட்கப்பட வேண்டும். இதுவே பரிப்ரஸ்னம்! இப்படிப்பட்ட பரிப்ரஸ்னம் தூய்மையான நோக்கத்திற்காகக் கேட்கப்படும் போது அதற்கு அளிக்கப்படும் விடை பல கோடி  மக்களுக்கு உபயோகமாகிறது!!

சம்வாதங்கள் – உரையாடல்கள் – என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் நமது புராண இதிஹாஸங்களில் அவற்றைக் காண முடிகிறது.

அவை தரும் ரகசியங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன.

முனிவர்களையும் தேவர்களையும் அவதாரங்களையும் உயரிய தெய்வங்களையும் தவத்தினாலும் பக்தியினாலும் சிரத்தையினாலும் கண்டு பலரும் அவர்களிடமிருந்து உபதேசம் பெற்றதைக் காண்கிறோம்.

இவை யுகம் கடந்து வந்து கோடிக்கணக்கானோருக்கு நல்வழி காட்டி அருள் பாலிப்பதைக் காண்கிறோம்.

இன்னும் இந்த சந்திப்புகளில் துதிகள் – ஸ்தோத்திரங்கள் – இடம் பெறுகின்றன.

அவற்றின் மஹிமையோ வர்ணனைக்கு அப்பாற்பட்டது.

உபநிடத ரகசியங்களோ ஏராளம். வேத ரகசியங்கள் இன்னொரு அற்புத களஞ்சியம்.

இவற்றையெல்லாம் தொகுப்பது என்பது மிகப் பெரிய காரியம்.

அன்றாடம் சிறிது நேரத்தைச் செலவழித்து இவற்றைப் படித்து அறிய ,  நலம் பிறக்கும்; வளம் சிறக்கும்!

***

INDEX

ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், நாரதர், வால்மீகி, ஷீர்டி சாயிபாபா, நானா சந்தோர்கர், கீதை, அத் 4 ஸ்லோகம் 34, பரிப்ரஸ்னம்,பீஷ்மர்,          ஸ்ரீ கிருஷ்ணர், தர்மர், வேத, உபநிடத ரகசியங்கள். ப்ரஸ்னம், சம்வாதம், உபதேசம், ஸ்தோத்ரங்கள்,

TAGS- கேள்விகள், உரையாடல், அருளுரை,

பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ் (Post No.9939)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9939

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேய்க் கதைகள் (GHOST STORIES) , பயமுறுத்தும் ஆவிகள், துரத்தியடிக்கும் பிசாசுகள் பற்றி எழுதிப் புகழ்பெற்றவர்  பிரிட்டனின் அதி பயங்கர எழுத்தாளர் எம். ஆர். ஜேம்ஸ் M R JAMES . கல்யாணம் செய்துகொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இறந்தார். பெண்களையும் பேய் என்று நினைத்தாரோ!?!?

அவர் எழுதிய கதைகளைப் படித்தால், யாரும்  அந்தப் பேய்களை  மறக்க முடியாது.

மாண்டேகு ரோட்ஸ் ஜேம்ஸ் MONTAGUE RHODES JAMES , ஒரு கிறிஸ்தவ மதப் பிரசராகரின் மகன். அவர் அரச வம்சத்தினரும் பணக்கார்களும் கல்வி பயிலும் ஈடனில் ETON COLLEGE பயின்றார்.அங்கே ஐரிஷ் பேய்க்கதை எழுத்தாளர் ஷெரிடன் லே பானு SHERIDAN LE FANU எழுதிய பேய்கள் பற்றிய கதைகளை விரும்பிப் படித்தார். வாழ்நாள் முழுதும் அவரை மறக்காமல் பாராட்டியும் வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் படம் கற்றார். பழங்கால சுவடிகள் (ANCIENT MANUSCRIPTS), தஸ்தாவேஜுகளைப் படிப்பதில் தேர்ச்சியும் பெற்றார்.

கேம்பிரிட்ஜ்  நகரில் ஒரு கல்லூரிக்கும், ஈடன் கல்வி நிறுவனத்துக்கும் தலைமைப் பொறுப்பேற்று பணியாற்றினார்.ஆண்கள் சகவாசத்திலேயே வாழ்ந்த அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

பழகுதற்கு இனியர் ஆயினும் ஒரு பயங்கொள்ளி. இரவு நேரத்தில் பயங்கரக் கனவுகள் வருவது அவருக்கு சர்வ சாதாரண நிகழ்வு. சின்னப்பையனாக இருக்கும்போது பஞ்ச் அன்ட் ஜூடி PUNH AND JUDY  பொம்மலாட்ட வடிவங்களை அட்டையில் வெட்டித் தயாரித்து விளையாடுவார். இதில் ஒன்றை பேய் GHOST என்று சொல்லி விளையாடுவார் . இது அவர் வாழ்நாள் முழுதும் சொப்பனங்களிலும் கதைகளிலும் கதாநாயகன் ஆகிவிட்டது.

குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விடுமுறைக்  காலத்திலும் ஒரு பேய், பிசாசுக் கதையை சொல்லுவது வழக்கம். இதை அவரே எழுதி உரத்த குரலில் படித்து நண்பர்ளை மகிழ்விப்பார் ; பயமுறுத்துவார் .ஒரு நடுத்தர வயது வரலாற்று அறிஞர் ஒரு வரலாற்றுப் புதியலைக் கண்டுபிடித்து தோண்டி எடுப்பதாகவும் அதில் ஒரு வரலாற்று கலைப்பொருளுடன் தொடர்புடைய பேயும் தோன்றுவதாகவும் அவர் கதைகளில் வரும். அந்தப் பேயை அதி பயங்கர உருவமாகக் காட்டி வருணிப்பார் . அதுமட்டுமல்ல. அது தோன்றும் நள்ளிரவு வேளை வருணனை, கேட்போரை புல்லரிக்கச் செய்யும்.

42 வயதில் அவர் முதல் பிசாசுக் கதைத் தொகுப்பை புஸ்தகமாக வெளியிட்டார். அது முதல் இவர் நன்றாக ‘கதை அடிப்பவர்’ என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் அடித்த கதைகளில் ஒன்று:- ஒரு அறிஞர் பேய்களைப் பற்றிய சில காகிதங்கள், சுவடிகளைக் கண்டுபிடிக்கிறார். அதில் விசில்/ ஊதல்  பேய் சொல்கிறது. எப்போதாவது நீ விசில் அடித்தால் நான் வந்துவிடுவேன் என்று. கண்டுபிடித்த வரலாற்று அறிஞர் விசில் அடிக்கிறார். அவ்வளவுதான்! ஒரு பயங்கர ஆவி தோன்றி அவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறது . முடிவு என்ன ஆயிற்று – வெள்ளித் திரையில் காண்க!!! அல்லது புஸ்தகத்தில் கடைசி பக்கங்களில் காண்க!!!.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 1, 1862

இறந்த தேதி – ஜூன் 12, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 73

ஜேம்ஸ் எழுதிய கதைப் புஸ்தகங்கள் –

1904- GHOST STORIES OF AN ANTIQUARY

1911- MORE GHOST STORIES OF AN ANTIQUARY

1919- A THIN GHOST AND OTHERS

1922-  THE FIVE JARS

1922- MEDEVAL GHOST STORIES

1926 – A WARNING TO THE CURIOUS

1931- COLLECTED GHOST STORIES

அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும்  இருந்தார்; பல வரலாற்று நூல்களை எழுதினார். சுவடிகளின் அட்டவணை / கேட்டலாக் நூல்களை தொகுத்தார் . அவர் காலத்தில் அருங்காட்சியக ங்களுக்கு அரிய ஓவியங்களையும் கலைப் பொருட்களையும், சுவடிகளையும் சேகரித்துக் கொடுத்தார்.

ஜேம்ஸின் கதைகள் டெலிவிஷன் தொடராகவும், பிபிசி வானொலி ஒலி பரப்புகளாகவும் வந்தன.

–SUBHAM–

TAGS- பேய்க் கதைகள், எம்.ஆர்.ஜேம்ஸ், ஆவிகள், பிசாசுகள் , கதை, M R JAMES

நாட்டிய நாடகம் பார்ப்பது வேதம் ஓதுதலுக்கு இணையானது – பரத முனி (Post No.9938)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9938

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்

எப்படி எழுதினேன் என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது (முந்தைய கட்டுரைகளில் இரண்டு விஷயங்களையும் காண்க)

அந்தக் காலத்தில் நாட்டியமும் நாடகமும் ஒன்று. அதாவது புராண, இதிஹாசக் கதைகளை நாட்டியம் மூலம் கதைகளாக அபிநயித்துக் காட்டுவர். பின்னர் இடையிடையே வசனங்கள் நுழைக்கப்பட்டன. பழைய கருப்பு வெள்ளைத் திரைப்பட (BLACK AND WHITE FILMS) விளம்பரங்களில் கூட இந்தச் செய்திகளைக் காணலாம்- இந்தத் திரைப்படத்தில் 26 பாடல்கள் உள்ளன! என்று. அதாவது பாடலுக்கு அவ்வளவு மதிப்பு.ஆடலுக்கு அவ்வளவு மதிப்பு.

கடைசி அத்தியாயத்தில் உள்ள ஒரு முக்கிய விஷயம் நாட்டிய- நாடகம் பார்ப்பதால் என்ன பலன் என்பதாகும் . முதல் அத்தியத்திலேயே நாட்டிய சாஸ்திரம் மஹாபாரதம் போல ஐந்தாவது வேதம் என்று சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல வேதம் போல் அல்லாது எல்லா ஜாதியினரும் பங்கு பெறக்கூடியது என்றும் பகர்ந்தார் பரத முனி. “இதில் இல்லாதது உலகில் இல்லை; உலகிலுள்ள எல்லாம் இதனில் உளது” என்ற மஹாபாரத அடைமொழியை நாட்டிய சாஸ்திரத்துக்கு சேர்த்துச் சொன்னார்கள்.

நாட்டிய நாடகம் பார்ப்பதால் ஏற்படும் பலன்களை பரத முனிவரே சொல்கிறார்:-

மங்களம் – ஸ்லோகங்கள் 71-82

இந்த சாஸ்திரம் மகிழ்ச்சி அளிப்பது ; புனிதமானது; கேட்போரை தூய்மையாக்குவது. ஒருவர் செய்த பாவத்தை அழித்துவிடும் இதைப் படிப்போரும், கேட்போரும் , இதன்படி நாடகங்களை தயாரிப்போரும், அவற்றைக் காண்போரும்  வேதங்களை ஓதுவோர் அடையும் அதே பலன்களைப் பெறுவார்கள். யாகங்களை செய்வதாலும் தான தருமங்களை செய்வதாலும் கிடைக்கும் பலன்களும் இதனால் கிடைக்கும்  தானங்களில் மிகப்பெரிய தானம் , ஒரு நாட்டிய நாடகத்தைக் காணச் செய்வதாகும்.

ஒரு நாட்டிய நாடகத்தை மேடை ஏற்றுவது கடவுளுக்கு திருப்திதரும். சந்தனத்தாலும் மலராலும் பூஜிப்பதைவிட இது மேலானது.

இகலோக வாழ்க்கையில் சங்கீதத்தையும் நாட்டியத்தையும் ரசிப்பவர்கள் ஈஸ்வரன், கணேசன் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாகி இறைநிலை எய்துவர் .

நான் பல்வேறு விதிகளைச் சொல்லி பல விஷயங்களை விளக்கி நாட்டிய/நாடகம் நடிப்பத்தைச் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லாத விஷயங்களை மக்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அறிந்து  அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .

இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

உலகிலிருந்து மக்களின் வறுமையும் நோய்களும் அகலட்டும் ;

உணவும் இனிய செல்வங்களும் செழிக்கட்டும்;

பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கட்டும்; எங்கும் அமைதி நிலவட்டும்.

நாடாளும் அரசர்கள் எல்லோருக்கும் பா துகாப்பு வழங்கட்டும் “

இவ்வாறு சொல்லி பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திர நூலை நிறைவு செய்கிறார்.

Xxx

என்னுடைய கருத்துக்கள் :

சம்ஸ்க்ருத இலக்கிய வரலாற்றை எழுதுவதாகச் சொல்லி 5, 6 அரை வேக்காட்டு, இந்து விரோத வெளிநாட்டினர் நூல்களை இயற்றியுள்ளனர். நாடகம் என்று வருகையில் நாம் அதை கிரேக்க நாட்டிலிருந்து கடன் வாங்கியதாக ‘மாக்ஸ்முல்லர் கும்பல்’ எழுதியுள்ளது. இது முற்றிலும் தவறு.

ரிக் வேதத்திலேயே 16 சம்பாஷணைக் கவிதைகள்- உரையாடல்கள் உள்ளன. அவை யாவும் அக்காலத்தில் நடிக்கப்பட்ட நாட்டிய நாடகங்கள். ஒரு வேளை அதனிடையே சிறிய உரை நடைப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்பதும் தற்கால ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

ஆனால் கிருத யுகத்தில் நாட்டிய நாடகம் இல்லை; திரேதா யுகத்தில்தான் அது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது என்று பரத முனிவரே செப்புவதால், ரிக் வேத பாடல்களை நாம் நாடகத்தின் வித்துக்கள் என்றே சொல்ல  வேண்டும்.

கிரேக்க நாடோ வேறு நாடுகளோ நம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை மேலும் சில சான்றுகளுடன் மீண்டும் சொல்கிறேன் :-

மேலே, பரத முனி நாடகத்தின் புனிதம் பற்றிச் சொல்கிறார். பாஷா, காளிதாசன் வரையுள்ள நாடகங்களில் நாம் இந்த புனிதத்தைக் காண்கிறோம். கிரேக்க நாடகங்கள் இப்படி புனிதமானவை அல்ல. அவை பகடியும், அரசியல் நக்கல்களும் சிலேடைகளும் செக்ஸும் கொண்டவை.

மேலும் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களும் கூட கண்ணன், சிவன், துர்க்கை, லட்சுமி முதலிய தெய்வீக நாட்டியங்களே. ஆக, இரண்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் கூட  புனிதமே நிறைந்து இருந்தது.

மேலும் ஒரு முக்கிய விஷயம்- பரதரும் “கோ ப்ராஹ்மணேப்யோ  சுபமஸ்து நித்யம்” என்று முடிக்கிறார். 1400 வருடங்களுக்கு முன்னர் தேவாரத்திலும் வாழக அந்தணர் வானவர் ஆனினம் என்ற பாடல் உளது. இதற்குப் பொருள் அந்தணர் முதலான எல்லோரும், பசு முதலிய எல்லா பிராணிகளும் என்று பொருள். இப்படிப் பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்பதை உலகில் வேறு எங்கும் காண முடியாது. ரிக் வேதம் முதலிய இந்து நுல்களில்தான் காணலாம்.எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் என்பதே இதன் பொருள் .

இன்று நம் கையில் தவழும் நாடிய சாஸ்திரத்தில் முன்னுக்குப் பின்  முரணான விஷயங்களும் உள்ளன . இதையும் பரதரே இறுதியில் நியாயப்படுத்திவிட்டார். மக்களின் பேச்சு , நடை உடை பாவனை ஆகியவற்றைக் கண்டு அவ்வப்போது அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மங்களம் பாடுகிறார். ஆகையால் இப்போதைய நாட்டிய சாத்திரத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்குப் புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டதை அறிகிறோம். பகவத் கீதையில் கூட கண்ணன் , நான் சொல்ல வேண்டியத்தைச் சொல்லி விட்டேன்; ஏற்பதும் மறுப்பதும் உன் இஷ்டம் என்னும் தொனியில்தான் கிருஷ்ணன் பேசுகிறான். அதே போல மக்களின் சுய சிந்தனைக்கும், சுதந்திரத்துக்கும், மனோ தர்மத்துக்கும்  பரத  முனிவரும் இடம் தருவது 2500 ஆண்டுக்கு முன்னுள்ள முற்போக்கு சிந்தனையைக் காட்டுகிறது. உலகம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறிந்த இந்துக்கள் தங்களுடைய எல்லா நூல்களையும் ‘அப் டேட்’ UPDATE  செய்திருப்பதை நாம் காண்கிறோம்.

இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

மேலும் நாடகத்தின் முதல் அங்கத்தில் டைரக்டர்/ சூத்ரதாரர் தோன்றி இது என்ன நாடகம், ஏன் வந்தது என்பதை அறிவிக்கும் வழக்கமும் நூற்றுக் கணக்கான சம்ஸ்க்ருத நாடகங்களில் உண்டு. கிரேக்கத்தில் இல்லை.

கிரேக்க நாடகங்களில் தேசீய கீதம் கிடையாது. சம்ஸ்க்ருத நாடகங்கள் அனைத்தும் ‘பரத வாக்கியம்’ என்னும் தேசீய கீதத்துடன் முடிவடையும். நாடு செழிக்க, மன்னன் வாழ்க, மக்கள் வாழ்க எனும் பொருள்படுபடும் படி 6 முதல் 8 வாக்கியங்கள் இருக்கும். தேசீய கீதம் பாடும் வழக்கத்தை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதுவும் கிரேக்க நாடகத்தில் இல்லை. ஆக புனிதமான நாடக , நடனக் கலைக்கு முதல் முதலில் நூல் யாத்த பரத முனிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இன்று அவர் எழுதிய விதிகள், விஷயங்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆயினும் அவர் கூறிய அடிப்படை கருத்துக்கள் மாறவில்லை. மேடை அமைப்பது முதல், மேடையில் செய்யப்படவேண்டிய பூஜைகள் முதல், நடிகர்களுக்குப் போட வேண்டிய வே ஷம்வரை அவர் நிறைய விதிகளை இயற்றியுள்ளார்.

வாழ்க பரத முனி!  வளர்க நாட்டிய/நாடக சாஸ்திரம்!!

–subham–

tags –நாட்டியம், நாடகம், பலன், நன்மைகள் , பரத முனி , வேதம் ஓதுதல்

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1 (Post.9937)

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1 (Post.9937)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9937

Date uploaded in London –  5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்!

குழந்தையானந்தரின் அவதார தோற்றம்

மதுரை மீனாட்சியின் அருள் விளையாடல்கள் அன்றும் நிகழ்ந்தன, இன்றும் நிகழ்கின்றன, என்றும் நிகழும்.

அவற்றை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கும் பக்தர்கள் அம்பிகையின் செல்லக் குழந்தைகளே!

ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில்  மதுரையில் உலாவி வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ராமஸ்வாமி ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க, கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக் கூறினாள்.

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து, எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.

இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.

அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.

ஏழு வயதான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அருள் ஆணை பிறந்தது.

கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.

முதல் சமாதி குருநாதரிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராமனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராளமானோர் தரிசித்து அருள் பெற்றனர்.

த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.

இரண்டாவது சமாதி

பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்டம் நீங்கிற்று. பல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.

ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.

ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.

மூன்றாவது சமாதி         

நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.

பின்னர் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.

நான்காவது சமாதி

மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.

சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூன்று ஆண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. இதனால் குழந்தையானந்தர் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார்

பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.

1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். ம்காலிங்க்ம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.

சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.

அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?

அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.

இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அவர் நான்காவது சமாதியை அடைந்தார்.    

  • தொடரும்

                          ***

S NAGARAJAN

tags-  குழந்தையானந்த ஸ்வாமிகள்,

WATCHING DANCE IS EQUAL TO STUDYING VEDAS; SIN WILL RUN AWAY! (Post No.9936)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9936

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Bharata , who wrote the Natyasastra in Sanskrit 2500 years ago , finishes it beautifully. 6000 slokas are there in his 36 chapters. The 36th chapter gives the benefits of Natya/dance and drama (in the olden days dramas were produced with more songs than prose dialogues. Vedic dialogue poems prove it).

While we read this, we must remember that he talks about ‘holy dramas and holy dances’. The best example is available in Tamil epic Silappadikaram. One of the main characters, Madhavi, did 11 types of dances and all of them were from Hindu mythology (see below the link for the 11 types).

Mangala slokas are in 71 to 82 in the last chapter of Natyasastra. It says,

“This sastra is entertaining; it purifies; it is holy; it destroys sin. Those who read it and those who listen to it, those who produce plays in accordance with it, and those who attentively watch the performance, all these  derive the same merit as may be derived by those who study the Vedas, those who perform sacrifices, and those who perform acts of charity and religion. This is the greatest gifts of all the gifts, viz. the giving of an opportunity to watch a performance.  The production of a play is pleasing to the gods as no other form of worship with sandal paste or flowers is.

“Those who enjoy music and dance well in this life, will attain the blessed state of Isvara and Ganesa.

“I have thus far elaborated on many subjects and rules regarding the production of plays. Things which are not stated here should be learnt by attentively watching the talk and behaviour of people and should be used in the performance.

“What more can I say?

May want and disease disappear from the world and may there be plenty of food and riches of every kind. May there be peace and security for cows and Brahmins everywhere. May the kings give protection to the world.”

Thus ends Bharat’s Natyasastra chapter 36 entitled ‘Descent of Drama on Earth’.

xxx

My comments

Like Krishna in Bhagavad Gita, Bharata never forces anyone to do the dance and drama in his way. He gives freedom and scope to improve upon it. He asks the people in the field to watch people and include their interests. In other words, he asks us to act according to times. Even if someone produces a play today against COVID virus or the necessity of getting the jabs against the virus ,it is agreeable and meritorious.

What Bharat said in his last chapter shows that the Natya sastra in the present form is an updated version. But the core remains the same. What Bharata said about the benefits of drama cannot be said about Greek dramas. That shows Indian dance and drama are independent of Greek dramas or any foreign influence. Westerners created a great doubt about Indian ingenuity by saying everything came from Greece to India.

As a brahmin I do Sandhyavadana everyday in the morning and evening in London with Thames water where I recite all the 7 days of the week in the same order found in our calendar- Sunday to Saturday. This is in the same order in Thevaram of Sambandar which is 1400 years old. No one would have inserted some foreign material in Brahmin’s mantras or Sambandars Tamil poems. This is only one example to show Westerners have been always anti Hindu.

Please read my article on Bharatavakyas (National Anthems)  which are said at the end of all Sanskrit dramas. How patriotic our people have been from ancient period!

–subham–

My old articles:-

Matavi’s 11 types of Classical Dance | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/06/15 › matavis-11-t…

15 Jun 2012 — She was the daughter of Chitrapathy. Madhavi learnt dance from the age of five and mastered the art of classical Bharatanatyam at the age of …

Hindus are the Pioneers of National Anthems | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/04/26 › hindus-are-th…

26 Apr 2014 — Bharatavakya is the benedictory address spoken at the close of every Sanskrit drama. We find this in all the dramas of Bhasa and Kalidasa.

Colour Coding of Seats in Ancient Theatres! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/13 › colour-codin…

13 May 2014 — There are two dramatic stages coupled up with green rooms as they were prevalent in the olden days when Sanskrit plays used to be staged.

Missing: bharatvakyas ‎| Must include: bharatvakyas

–subham-

tags-benefits, dance, drama, watching, Bharata, Natyasastra

FEBRUARY 2020 London Swaminathan Articles; Index-87 (Post No.9935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9935

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

xxxx

FEBRUARY 2020 London Swaminathan Articles Index-87

Wonders in Prakrit Language- 2000 Inscriptions, 7523;1 February 2020

Hindu Discovery Sun is a Star ,7526;2/2

Tarigonda Vengamamba and Madhuravani (Great Women), 7530;3/2

Mega Treasure discovered in Britain, 7533;4/2

Vasantasena, Noble Courtesan s Love Affair with a

Brahmin Merchant,7540;5/2

Great Exodus- Yadavas Migration to Gujarat from

Uttar Pradesh, 7544;6/2

Do you prefer to die in Explosion or Collision? 7548;7/2

Women in Vedas in Bullet Points, 7551;8/2

Are Women Human Beings? Christian Discussion 7555;9/2

Vedic Hindu Women, Greek women and Parsi Women,7559;10/2

God and commonwealth on Different sides- Politics Anecdotes, 7563;11/2

A Rigvedic Hymn with Number Symbolism,7566;12/2

Two Types of Vedic Women,7570;13/2

Marriage Ceremony Mantras In Rigveda 7574;14/2

Greatest Muslim Queen of India, 7576;15/2

Four Tamil Folk Tales, 7582;17/2

Riddle Poem in the Rigveda,8-29;7586;18/2

Miracles done by Hindu Women,7590;18/2

Surya/ Sun God in Indus Valley civilisation,7593;19/2

First English Tamil Etymological Dictionary, 7597;20/2

Beat the dog continuously- Ramakrishna Paramahamsa’s

Advice, 7598;20/2

What is Ati Rudra Sacrifice,7601;21/2

Dad I will treat you the same way you treated your dad, 7602;21/2

Why did the Farmer weep in Jain Temple? 7606;22/2

Oh My God! Ramayana is very  heavy, 7609;23/2

Swami s crossword 2322020;7610

Story of Woman Philosopher Chudala,24/2

Yatha Raja, Thatha Praja, 7616;25/2

Swami s crossword 2522020;7618

Buddha- Anti woman, Anti Disabled, Anti Vegan, 7621;26/2

What is Corona Virus?26/2;7622

On Women, Wine and Vices;31 Quotations from

Jataka Tales 7626;27/2

Swami s crossword 2722020;7627

My Appearance and Disappearance,7630;28/2

Painting while Dying,Singing while Dying, 7635;29/2

How many Mahabharata characters can you find in the Spiral?

7636; 29 February 2020

XXX

பிப்ரவரி 2020 லண்டன் சுவாமிநாதன் கட்டுரைகள்

பிராகிருத மொழி அதிசயங்கள்-2000 கல்வெட்டுகள், 7522, பிப்ரவரி 1, 2020

ஏழு வகை பிராக்ருதத்தில் உள்ள அற்புத நூல்கள்,7525, 2/2

கடவுள் இருக்காண்டா குமாரு, 7528, 3/2

சூரியனும் ஒரு நட்சத்திரம் என்பது வேத காலா முனிவர்க்குத் தெரியும் ,7529, 3/2

தேன் ஏன் கெடுவதில்லை?7533, 4/2

செய்தியில் அடிபட்ட புஸ்தகங்கள், 7535, 4/3

புதையலோ புதையல் மஹா  மஹா  மெகா புதையல் , 7532, 4/2

வேப்பமரம் பற்றி சுவையான செய்திகள், 7538, 5/2

சடலங்களை உண்ண கழுகுகள் தேவை, 7539, 5/2

அடங்காதவரை அடக்குவது எப்படி?7542, 6/2

எவரெஸ்ட் சிகரத்தில் நூறு சடலங்கள், 7543, 6/2

கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் , 7546, 7/2

மார்லின் மன்றோ உடைகள் ஏலம், 7547, 7/2

சிலந்தி டாக்டர்! சிலந்தி ஆஸ்பத்திரி! 7550, 8/2

வேத கால பெண் கவிஞர்கள், 7552, 8/2

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?7554, 9/2

தமிழா, சோதிடத்தை நம்படா! ப்ளிஸ் , வாகடத்தை நம்படா!7557, 10/2

மேலும் ஒரு புதையல் செய்தி, 7558, 10/2

பெண்கள் மனிதப் பிறவிகளா?கிறிஸ்தவர் காரசார விவாதம் 7561, 11/2

கள்ளிவரின் யாத்திரை, 7562, 11/2

மஷ்ரூம், பூண்டு, வெங்காயம் சாப்பிட்டதே! அம்பலவாணர்

அட்வைஸ், 7565, 12/2

சாதனை படைத்த சாதனை நூல் தோன்றிய கதை 7567,12/2

வேதத்தில் இரண்டுவகைப் பெண்கள், 7569, 13/2

22 பிரதம மந்திரிகளைக் கண்டவர், 7571, 13/2

குங்குமப் பூ பாபா  கதை, 7573, 14/2

இந்தியர்களை வியக்கவைத்த முஸ்லீம் ராணி, 7577, 15/2

மாதவையா குடும்பத்தினரின் மகத்தான தமிழ் சேவை ,7578, 15/2

பாம்புச் செடி உண்மையா?7580, 16/2

கடவுள் செய்த ஆறு தவறுகள்- அம்பலவாணர் பட்டியல், 7581,16/2

மனிதர்களில் இந்திரன், பிரம்மா, சிவன் யார்?7584, 17/2

டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்?ரிக் வேதபி புலவர் புதிர், 7585, 17/2

பரிபாடல், சிலாம்பில் ரிக்வேத வரிகள்,, 7588, 18/2

நமது மொபைல் போன்களுக்காக சூரியனை நோக்கி மேலும்

ஒரு விண்கலம், 7589, 18/2

கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள் , 7592, 19/1

சிந்து சமவெளியில் இருப்பது சூரியனா, இந்திரனா?7595, 20/2

பிராணிகளுக்கு கடிகாரம் பார்க்கத்  தெரியுமா?7600,21/2

பணம் எங்கே நிலைத்து நிற்கும்? 7604, 22/2

தமிழ் குறுக்கெழுத்து போட்டி= த.கு.போ.2422020, 7613

யோகா ஒரு சமுத்திரம்! 5 லட்சம் சுவடிகள், 7612, 24/2

வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்?7617, 25/2

நல்லவர்கள் யார்? அம்பலவாணர் தரும் பட்டியல், 7620, 26/2

த.கு.போ.2622020,7623

புத்தர் சொன்ன உணவுகள், மருந்துகள், 7625, 27/2

அப்பா உனக்காக, எல்லாம் உனக்காக ,7629, 28/2

நூறு  எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? 7631, 28/2

துலுக்கன் குதிரை தோற்றது தமிழன் குதிரை வென்றது ,7632, 29/2

31 முக்கிய சித்தர் பாடல்கள் , 7634, 29 பிப்ரவரி, 2020.

-சுபம்-

tags- Index 87, February 2020, London Swaminathan

ஆர். கே. நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு ஆங்கில நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன் (9934)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9934

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆர்.கே. நாராயணன், உலகப் புகழ் பெற முதலில் உதவியவர் பிரிட்டனைச் சேர்ந்த சிறுகதை , நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE ஆவார் . பிரிட்டனில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தியர் எழுதிய கதைகளில் பாராமுகமாக இருந்த போது கிரஹாம் க்ரீன் ஒருவெளியீட்டாளரைக் கொண்டு ஆர்.கே. நாராயணனின் கதைகளை ஆங்கில உலகில் வெளியிட்டார். பின்னர் அவர் சுயம்பிரகாசமாக ஒளி உமிழ்ந்தார். அப்படி இருந்த போதும் இருவரும் வாழ்நாள் முழுதும் நட்புறவோடு வாழ்ந்தனர்.

கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆவார். அவருடடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் அறநெறி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். மேலும் உலகின் பல இடங்களில் நடந்ததாக இருக்கும். அவர் உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று வந்தவர் என்பதால் இப்படி கதையின் இடத்தை மாற்ற முடிந்தது.

க்ரீன் 21 வயதில் லண்டனில் பத்திரிகையில் சேர்ந்து பணிபுரிந்தார். 25 வயதில் அவருடைய முதல் நாவல் அச்சாகியது த மேன் வித்தின் THE MAN WITHIN என்ற அந்த நாவலுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தவுடன் அவர் பத்திரிகைத் தொழிலை உதறி எறிந்தார்.

இரண்டாவது உலகப் போர் காலத்தில் அவருடைய சேவையை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. பின்னர் அவர் பிரிட்டனின் உளவுத் துறையில் பணியாற்றினார். இதனால் கிடைத்த அனுபவத்தைக் கதைகளில் புகுத்தினார். அரசியல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் நாவல்களை எழுதினார்.28 வயதில் இவர் எழுதிய உளவாளி கதை STAMBOUL TRAIN சுவைமிக்கது அதற்குப் பின்னர் இவர் எழுதிய திகில் கதைகள் திரைப்படங்களாக உருவெடுத்தன.

1926ல் காதல் மனைவி காரணமாக, க்ரீன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தார். இதனால் கிறிஸ்தவ மதம் போற்றும் உத்தம குணங்களையும் கதைகளில் பயன்படுத்தினார் .ஆங்கில கடற்கரையில் வாழ்ந்த இளம் வயது குற்றவாளி, மெக்சிகோவில் வாழ்ந்த குடிகார பாதிரியார், மத்திய ஆப்ரிக்க நாட்டில் பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க கட்டிடக் கலைஞர் என்று பன்னாட்டு கதாபாத்திரங்களைப் படைத்தார்.

கிரஹாம் க்ரீன் லண்டனுக்கு அருகில் ஐந்து சகோதர, சகோதரிகளுடன் பிறந்தார் . ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வரலாறு படித்தார்.அவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். 86 வயதில் இரத்தப் புற்றுநோய் கண்டு இறந்தார். சுய வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் கதைகளிலும் பொது வாழ்விலும் ‘ஜோக்’குகளை உதிர்த்தார். பத்திரிக்கைக் காரர்களையும் ஏமாற்றிவிடுவார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன நாவல் கிடைத்துவிட்டது என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றினார். உண்மையில் அது அவரிடமே இருந்தது; தொலையவில்லை. APRIL FOOL ஏப்ரல் ஃ பூல்  போன்றதொரு ஜோக் அது!

67 ஆண்டு எழுத்துப் பணியில் 25 நாவல்களை எழுதினார். பல பரிசுகளை வென்றார்.

இடதுசாரி சிந்தனை உடையவர் என்பதால் இவருடைய நாவல்களில் அமெரிக்க எதிர்ப்பும் இருக்கும் . நோபல் பரிசுக்கு முன்மொழியப்படுவோர் பட்டியலில் இவர் பெயர் இருந்தது; அது எட்டாக்  கனியாகவே போயிற்று. ஆனாலும் ஷேக்ஸ்பியர் விருது, ஜெரூசேலம் விருது போன்ற ஏனைய இலக்கிய பரிசுகளை வென்றார் .

பிறந்த தேதி – அக்டோபர் 2, 1904

இறந்த தேதி – ஏப்ரல் 3, 1991

வாழ்ந்த ஆண்டுகள் – 86

எழுதிய நாவல்கள், கதைகள்:-

PUBLICATIONS

1935- THE BASEMENT ROOM AND OTHER STORIES

1938- BRIGHTON ROCK

1940- THE POWER AND THE GLORY

1948- THE HEART OF THE MATTER

1950- THE THIRD MAN

1951 -THE END OF THE AFFAIR

1955- THE QUIET AMERICAN

1958 – OUR MAN IN HAVANA

1961- A BURNT OUT CASE

1966 – THE COMEDIANS

–SUBHAM–

tags- ஆர்.கே.நாராயணன், கிரஹாம் க்ரீன், Graham Greene 

தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–2 (Post No.9933)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9933

Date uploaded in London – 4 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ்ப் புலவர்களின் ரஸிக்க வைக்கும் சொல்லாடல்–2                                           பா.கண்ணன், புது தில்லி

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 2-8-2021 அன்று ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம்.

ஞானமயம்-தமிழ் முழக்கம் ஓராண்டு நிறைவையொட்டி, அழகுத் தமிழில் பொதிந்துள்ள மேலும் சில சுவாரசியமானப் பாடல்களைப் பார்க்கலாம்…..

அழகிய மணவாளதாஸர் எனும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 108 திருப்பதி அந்தாதி நூலை அடியொட்டி திருநின்றவூர் திருமலை அத்தங்கி தாதாரியர் தொண்டன் அதே தலைப்பில் வேறொரு நூல் இயற்றியுள்ளார் ஒரு வித்தியாசத்துடன் .ஒவ்வொரு திவ்யதேசத்துக்கும் உரிய 8 முக்கியச் செய்தி களை ஒவ்வொரு செய்யுளிலும் அதாவது, வழிபட்டோர், தீர்த்தம், விமானம், பிராட்டியாரின் நாமம், திசை, கோலம், திருமால், திருப்பதி ஆகியவற்றை விவ ரித்துள்ளார்.. காப்புச் செய்யுள் 2, & 3-ல் யமகம் கையாளப்பட்டுள்ளது. 2-வது திருமங்கை ஆழ்வார் பற்றியது. 3-வது-எதிராஜர் (ராமாநுஜர்) பிரானைப் போற்றுவது.

  பரகாலன் பாசக் கயத்தார்ப் புணாகருள் பாரெனவம்

  பரகால னாந்திரு மாலவ னெங்கட் படமையினிம்

  பரகால னென்றி யவர்க்குரித் தாமுனைப்பற்றி னஞ்சீர்ப்

  பரகால னான்மறை யாறங்க மோ துமெய்ப் பாவலனே.

பரகாலன்(யமன்), ஆர்ப்புணாது அருள் பார்(பாசக் கயிற்றால் கட்டுப் படாமல் இருக்க அருள்வாய்), அம்பரக் காலனாம் திருமால்(ஆஅகாயத்தை அளந்தப் பாதத்தையுடையத் திருமால்), இம்பர காலன் அன்றி அவர்க்கு உரித்தாம் உன்னை- இவ்வுலகில் அக்காலனுக்கு உரித்தாகாமல் விஷ்ணுவிக்கே உரித் தானப் பரகாலனான உன்னைப் பற்றினேன், நான்மறை ஆரு அங்கம் ஓதும்

(நான்மறைக்குச் சமமான, திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி ஆகியவற்றுக்கு 6 அங்கங்கள் போல் அமைந்த பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய 6 நூல்களை அருளிச் செய்தப் பரகாலன் என்றத் திருமங்கையாழ்வாரைத் தாள் பணிந்துச் சேவிக் கிறேன், என்கிறார். 

தமிழுக்குத் தொண்டாற்றியப் புலவர்கள் பலருள் இரட்டைப் புலவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாவர். இவர்கள் வாழ்ந்த காலம் ( நூற்றாண்டு என்கின்றனர் வர லாற்று ஆய்வாளர்கள்.

சோழநாட்டில், செங்குந்தர் மரபில் தோன்றினர் என்றும், இருவரும் உறவினர் கள் – அதாவது அத்தை மகன், மாமன் மகன் என்றும், இருவரும் இணைபிரியாத வர் என்பதால் இரட்டையர் எனப் பெயர் பெற்றனர் என்றும் கூறப்படுவது உண்டு

சோழநாட்டில் வாழ்ந்த ஒரு வேளாளர் தம்பதிக்கு, சிவபெருமானின் திருவரு ளால், அஸ்வினி தேவர்களின் அம்சமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஒருவர் பிறவியேலேயே கண் பார்க்க இயலாதவர். மற்றொருவர் கால் நடக்க இயலாதவர்.இதனால் மனமுடைந்த தம்பதியர்க்கு,‘ஊனம் இருந்தாலும்,ஞானம் மிகப் பெற்று,ஞாயிறு போன்று பிரகாசித்து,ஞாலத்தை வலம் வருவார்கள்’ என்று  பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.அதனாலேயே, முன்னவருக்கு முது சூரியர் என்றும், இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர்.

சிறு வயதிலேயே இருவரும் தமிழ்ப்பற்று மிகுந்து விளங்கினர். தமிழைக் களங்கமறக் கற்றுச் சிறந்தனர்.

இருவரும் மனமொத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். கால் நடக்க இயலா தவர் முதல் இரண்டு வரிகளைப் பாட, செய்யுளின் தன்மை மாறாமல் அடுத்த இரண்டு வரிகளை கண் பார்க்க இயலாதவர் பாடுவாராம்.

பெரியோர்கள் வாழ்த்தியது போல, ஞாலத்தை (தேசங்களை) வலம் வந்த இரட் டையர்கள் சென்றமிடமெல்லாம் விரும்பிப் பெற்றப் பரிசில் தொகை ஒரு பணம் மட்டுமே!

கண்பார்வை இழந்தவர்  நடமாட முடியாதவரைத் தன் தோளில் சுமந்தவாறு, அவரின் வழிகாட்டுதலில் நடப்பார்.இவர்கள் ஒவ்வொரு தேசமாகச் சென்று பாடல் பாடி வந்தனர். இவர்களுடைய பாடல்களில் சைவப்பற்று

ஓங்கியிருந்தது. .

புராணங்களில் உள்ள மிக நுண்ணியக் கருத்துக்களைத் தம் பாடல்களால் வெளிக்கொணர்வதில் வல்லவர்களாக இருந்தனர்.“கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்” எனும் தொடர் வாயிலாகக் கலம்பகம் எனும் தமிழ் வகைப் பாடல்கள் பாடுவதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி, கதம்ப மலர் மாலையைப் போன்று, பதினெட்டு உறுப்புகள் அமையப்  பலவகைச் செய்யுள் விகற்பங்களால் பாடப் பெறுவதாகும்.

சிதம்பரம் நடராஜர் மேல் அதீத பற்றுக் கொண்டவர்கள். எழுதாக் கிளவியை (சொற்கள்)வேதம் என்றும், எழுதும் மறையை தேவாரம் என்றும், முனிவர் உபமன்யு வேதம் ஓதியவர் என்றும், கழுமல(சீர்காழி) முனிவர் சம்பந்தர் பெருமான் தேவாரம் பாடி வழிபட்டார் என்றும், இவர்களின் இனியத் திருவடிகள் எங்கள் சிரசின் மீது எக்காலமும் இருக்க வேண்டும் என்று இவ்விருவரும் ஸ்தோத்திரம் செய்துள்ளது மிகச் சிறப்பாகும். தில்லை நடராஜர் மீது அவர்கள் இயற்றியப் பாடல்கள் தில்லைக் கலம்பகம் என்று அழைக்கப்படும். இவர்கள் இரட்டையர்கள் அல்லவா ?இவர்கள் பாடிய தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்றில், இரண்டு பேசும் பொருள்கள் தொடர்ந்து வருவது போல் பாடுகின்றனர்.

 சுருதிக்கும், தாளத்துக்கும் ஒத்து வரும் இசைவண்ணம் நிரம்பியப் பாடல்…

காதில் இரண்டு பேர்; கண்டோர் இரண்டு பேர்;

ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்;

பேதை முலை உண்ணார் இரண்டு பேர்;

ஓங்கு புலியூரருக்குப்

பெண்ணான பேர் இரண்டு பேர்

சிவமஹா புராணத்தில் மிகச் சிறிய அளவில் இடம்பெறும் ஒரு சம்பவம் இது.

நாக அம்சமாகப் பிறந்த இரண்டு பேர், சரஸ்வதி கடாட்சத்தினால் அருமையான இசைஞானத்தைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும் தங்களின் இசை வல்ல மையை சிவபெருமானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவமிருந்தார்கள். தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், அவர்களின் வேண்டுதலின் படி, அவர்கள் இருவரையும் தன்னுடைய காதுத் தோடுகளாக அணிந்து கொண்டார். அந்த நாகர்கள் இரண்டு பேர் – கம்பளர் மற்றும் அசுவதரர் எப்போதும் சாமகானம் பாடிய வண்ணம் இருப்பார்களாம்..இந்த இருவரையும் தான், இரட்டைப் புலவர்கள் ‘காதில் இரண்டு பேர்’ என்கின்றனர்.

‘கண்டோர் இரண்டு பேர்’ – தில்லைச் சிதம்பரத்தில் ஆடல்நாயகனின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் இரண்டு பேர். அவர்கள் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள்.

‘ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்’– அடிமுடி தெரியாவண்ணம் ஜோதி ஸ்வரூபமாக நின்ற சிவபெருமானை – பிரம்மாவும் விஷ்ணுவும் தலை எங்கு, கால் எங்கு என்று தெரியாமல் – திகைத்தனர். ஆகையாலேயே பிரம்மாவும், விஷ்ணுவும் ‘காணோர் இரண்டு பேர்’.

‘பேதை முலை உண்ணார் இரண்டு பேர்’ – பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது மரபு. ஆனாலும், குழந்தையாய் இருந்தாலும் தாய்ப்பால் உண்ணாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் பிரம்மரிஷி வியாக்ரபாதர்-ஆத்ரேயி

தம்பதியின் மகன் உபமன்யு ஆவார். குழந்தைப் பசியால் அழுத போது மகேசனே அதற்குப் பாற்கடலையேக் குடிக்க வைத்துப் பசியாற்றினாராம்:   மற்றொருவர் பார்வதி தேவியால் குழந்தையாக பாவிக்கப்பட்டு ஞானப்பால் அருளப்பெற்றவர் திருஞானசம்பந்தர் (இளைய பிள்ளையார்).

‘ஓங்கு புலியூரருக்கு பெண்ணான பேர் இரண்டு பேர்’ – சிவபெருமான் கங்கை, உமாதேவி இருவரையும் நாயகியராகக் கொண்டதைக்  குறிக்கின்றனர் இரட்டையர்.

.சாஸ்திரங்கள் இறைவன் உள்ளான் என நிலை நிறுத்தும்; ஆனால் ஸ்தோத்திரங்கள் இறைவனையே நம் மனக்கண் முன் காட்ட வல்லது. அதைத் தான் தில்லைக் கலம்பகம் உறுதிபடுத்துகிறது.

தமிழ் மகாசமுத்திரத்தில் அமிழ்ந்துக் கிடந்து நம்மைப் பிரமிக்க வைக்கும்  இப்படிப்பட்ட இலக்கிய ரசனை மிகுந்த முத்துக்களும், இரத்தினங்களும் ஏராளம், ஏராளம்!

 உயிர் எழுத்துக்களில் ஆரம்பித்தோம் அதிலேயே அழகாய் முடிப்போமே!

இதை நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? ஈசன்-தருமி, யட்சன்-தருமன் கேல்வி-பதில் பாணியில் ஒன்று இதோ…..

“அ” வுக்கு அடுத்து “ஆ” வருவதேன்?*                                                             

*அரியும், ஆண்டியும் (பிச்சாண்டி= அரன்) ஒன்றே என்பதை அறிந்திட!!* 

*”இ” வுக்கு அடுத்து “ஈ” வருவதேன்?*

*இல்லறத்தை நடத்தப் பொருள் ஈட்டி வாழ் என நினைவுறுத்த!”

*”உ” வுக்கு அடுத்து “ஊ” வருவதேன்?*

*உத்தமன் ஊருடன் கூடி வாழ்வான் எனக் கூறிட!”

*”எ” வுக்கு அடுத்து “ஏ” வருவதேன்?*  

*எதையும், ஏட்டிக்குப் போட்டி ஆக்காமல் ஆழ்ந்துச் சிந்தித்துப் பார்க்க!!  அல்லது இப்படியும் சொல்லலாமே.

எரு அடித்து விட்டால் அடுத்து  ஏர் உழ வேண்டியதைக் குறிக்க

*”ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?*

*யாருடனும் ஐக்கியமாகாமல் தலைக்கனம் கொண்டிருந்தால் தனிமைப் படுத்தப்படுவாய் என்பதை உணர்த்த!* அல்லது காலத்துக்கு ஏற்ப,

“ஐரேயன் (கள்) குடித்தவன் போல் சுருண்டு, வளைந்துக் குறுகிக் கிடக்காதே!” என்றுச் சுட்டிக் காட்ட!

“ஒ” வுக்குப் பின் “ஓ” வருவதேன்?

*ஒற்றுமைத் தழைக்க ஓரம் சொல்லேல் (ஓருதலைப் பட்சக் கண்ணோட்டம்) என்பதை உணர்த்திட!!!*

“ஔ”வும் தனியாக நிற்பதேன்?  —அடுத்தவர் உயர்வைக் கண்டு ஔவியம் (பொறாமை) பேசி தாழ்த்திக் கொள்ளாதே என்று எச்சரிக்கவே!

 ஆம், முடிவில் இந்த “(அ) ஃக்” எதற்கு?  — அஃகம் சுருக்கேல் “அஃகமும் (தானியம்) காசும் சிக்கெனத் தேடு” என்று உரைத்திட!

*ஆஹா! தமிழ் ஓர் அழகு மொழியே என்பதில் என்ன சந்தேகம்!”.

தமிழ் முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும். திக்கெட்டும் நீக்கமற பரவட்டும்! வாழ்த்துக்கள்.

நன்றி, வணக்கம். ஜெய் ஹிந்த்!

       ———————————————————————————————————

tags–தமிழ்ப் புலவர், சொல்லாடல்–2,