Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் பல நாடக ஆசிரியர்கள் சோக நாடகங்களை (Tragic Dramas) எழுதிவந்தனர் . அந்த வரிசையில் முன்னணியில் நின்றவர் யுரிபிடீஸ் (EURIPIDES) ஆவார். அவருக்கு முன்னால் , ஏஸ்கைலஸ் (AESCHYLUS), சோபோக்ளீஸ் (SOPHOCLES) போன்றோர் சோக நாடகங்களையும் கவிதைகளையும் எழுதினார்கள் . ஆனாலும் அந்த அழுகுணி எழுத்தாளர்க ளிடையையே முதலிடம் பெற்றவர் இவர்தான். சோக எழுத்தாளர்களிடையே மிகவும் சோகமாக எழுதியவர் யூரிபிடீஸ்தான் என்று அரிஸ்டாட்டிலே (ARISTOTLE) கூறிவிட்டார்.
யுரிபிடீஸ், ஏதென்ஸ் நகரத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். கசடறக் கற்றார். அந்தக் கால புகழ்மிகு தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் SOCRATES முதலியோருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்களுடைய போதனைகள் இவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தினால் தலை சிறந்த , கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர் ஆனார் .அவருடைய காலத்தில் எழில் மிகு ஏதென்ஸில் புதிய கொள்கைகள், தத்துவங்கள் துளிர்விட்டன; அந்த புதிய அணுகுமுறையை சிக்கெனப்பிடித்த யூரிபிடீஸ் பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளுக்கு சவால் விட்டார்..
கிரேக்க மக்களின் வாழ்க்கையில் நாடகம் முக்கிய இடம்பெற்றது. அவ்வப்போது நாடகப் போட்டிகளும் நடைபெற்றன. அதில் வெற்றி பெறுவோர், சமுதாயத்தில் பிரமுகர் ஆகிவிடுவார்கள். அவர்கள் எங்கு சென்றினும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தன. முப்பது வயதிலேயே நாடகப் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. மீண்டும் மீண்டும் பகீரதப் பிரயத்தனம் செய்தார் . 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பரிசை வென்றார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும் அன்றோ!’
முதல் முதலில் அவரது நாடகங்கள் அரங்கேறியபோது வாதப் பிரதிவாதங்கள் வெடித்தன. சர்ச்சைப் புயல் வீசியது. ஏனைய நாடக ஆசிரியர்களைப் போல கிரேக்க நாட்டின் இதிஹாச, புராண கதாநாயகர்களையே அவரும் நாடக மேடை ஏற்றினார். ஆனால் அவர்கள் பேசிய வசனங்களோ புதுமையாக இருந்தன. அவர்கள் யதார்த்த மனிதர்களை போல பேசினர் . இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எல்லோரும் அறிந்த புராண கதாபாத்திரங்கள், தற்காலத்த்தில் வாழ்ந்தால் என்ன செய்வார்கள், எப்படிப் பேசுவார்கள் என்று காட்டினார். அதுமட்டும் அல்லாமல் இரும்பு நெஞ்சம் படைத்த உணர்ச்சிமிக்க ஒரு பெண்ணை முக்கிய கதா பாத்திரமாகவும் நுழைத்தார். அவருடைய மெடியா MEDEA நாடகம் இதற்கு ஒரு சான்று.
92 நாடகங்களை எழுதிய போதும் அவருடைய நான்கு நாடகங்களுக்கு மட்டுமே முதல் பரிசு கிடைத்தது. அவர் இறந்த பின்னர்தான் மேலும் புகழ் பரவியது. அவருடைய நாடகங்களை ரசிகர்கள் நகல்/ படி எடுத்து தொடர்ந்து நடித்தனர். ஆகையால் அவருடைய பல நாடகங்கள் காலத்தை வென்று இப்போது நம் கைகளில் தவழ்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பாரத நாடு பல்லாயிரக்கணக்கான ரிஷிகளையும், மகான்களையும், அருளாளர்களையும், யோகிகளையும், இசையால் இறைவனை வழிபட்ட நாத உபாஸகர்களையும் பெற்ற நாடு. இவர்களில் ஜெயதேவ கோஸ்வாமி தனி இடத்தைப் பெறுகிறார்.
பஜனை சம்பிரதாயத்தில் இன்றளவும் இவரது அஷ்டபதி பாடல்கள் ஜீவத் தன்மையுடன் பாடப்பட்டு லக்ஷக்கணக்கானோருக்கு கிருஷ்ண பக்தியைத் தந்து கொண்டிருக்கிறது.
ஒரிஸா மாநிலத்தில் குர்தா மாவட்டத்தில் உள்ள பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளிசாசன் என்ற இடத்தில் ஜெயதேவர் பிறந்தார். இவர் இயற்றிய இணையற்ற காவியம் கீத கோவிந்தம். இதில் கண்ணன், ராதை, ராதையின் தோழி ஆகிய மூன்று பாத்திரங்களே இடம் பெறுகின்றனர். ராதையின் தெய்வீகக் காதலை இசை வடிவமாக்கி அமைக்கப்பட்ட அழியாத அமிர்த காவியமாகும் இது. விரகதாபம் கிருஷ்ணபக்தியில் குழைய அதில் ஏற்படும் அற்புதமான கீத கோவிந்தத்திற்கு இணையான இசைக் காவியம் இன்றளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கீத கோவிந்தம் மஹா காவிய வரிசையைச் சேர்ந்தது.12 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு கீர்த்தனத்திலும் எட்டு சரணங்கள் உண்டு. அஷ்ட என்றால் எட்டு. ஆகவே இது அஷ்டபதி என்ற பெயரைப் பெற்றது. ஜெயதேவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது தெரிய வருகிறது. லக்ஷ்மணசேனரின் அரசவைக் கவிஞராக இவர் இருந்து வந்தார்.
போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் அவர்கள் செய்த தவப்பயனாக ஜெயதேவர் அவதரித்தார். இளமையிலிருந்தே கிருஷ்ண பக்தியில் ஊறித் திளைத்த ஜெயதேவர் உண்மையான யோகியாக வாழவே விரும்பினார். தனது நண்பரான பராசரருடன் அருகில் இருந்த புரி நகருக்குச் சென்றார். அங்கு தியானம், நாம சங்கீர்த்தனம் என வாழ்க்கையைக் கழிக்க ஆரம்பித்தார். உஞ்சவிருத்தியில் கிடைத்த பிக்ஷையே அவரது ஆகாரமானது. அந்தச் சமயத்தில் சுதேவர் என்ற பிராமணர் புரி நகரில் வசித்து வந்தார். குழந்தைப் பேறு இல்லாத அவர் ஜகந்நாதரை வேண்டினார். பிறந்த குழந்தையை ஜகந்நாதருக்கே அர்ப்பணிப்பதாகவும் உறுதி கூறினார். அழகிய பெண் குழந்தை ஒன்று அவருக்குப் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு பத்மாவதி என்ற பெயரிட்டதோடு அதை ஜகந்நாதருக்கே அர்ப்பணித்தார். அன்று இரவே அவரது கனவில் ஜக்ந்நாதர் தோன்றி அவர் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். மகளை அவர் அருமையாக வளர்த்து வந்த போது ஜகந்நாதர் அவர் கனவில் தோன்றி பத்மாவதியை தனது பக்தனான ஜெயதேவருக்கு மணம் முடிக்கும் படி கூறினார். யார் அந்த ஜெயதேவர் என்று சுதேவர் தேட ஆரம்பித்து அவரைக் கண்டு பிடித்தார். இறைவனின் ஆணையைக் கூறினார். ஆனால் ஜெயதேவருக்கோ மண வாழ்க்கையில் ஆர்வமில்லை. ஆனால் சுதேவர் நடந்ததை எல்லாம் கூறிய போது ஜகந்நாதரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் ஜெயதேவர். மணம் முடிந்தது. தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார் ஜெயதேவர். சில காலம் அங்கு தங்கி விட்டுப் பின்னர் யாத்திரை கிளம்பினார் ஜெயதேவர்.
இவரது வாழ்க்கையில் புல்லரிக்க வைக்கும் ஏராளமான அற்புத சம்பவங்கள் உண்டு. ஒடிஸா மன்னனான சாத்யகி ஒரு பெரும் கவிஞனும் கூட. அவன் ஜெயதேவரின் அஷ்டபதியையும் அதற்குள்ள கீர்த்தியையும் கண்டு பொறாமை கொண்டான். ஜெயதேவரை அழைத்து அவரது கீத கோவிந்தத்தையும் தனது கவிதைகளையும் இறைவன் முன் வைப்போம், எதை இறைவன் அங்கீகரிக்கிறானோ அதுவே உண்மையான கவிதை என்றான். அதன்படியே கீத கோவிந்தமும் மன்னனின் கவிதைகளும் இறைவனின் பாதத்தில் வைக்கப்பட்டு கர்பக்ருஹம் மூடப்பட்டது. மறுநாள் கோவிலுக்குச் சென்று பார்க்கையில் மன்னனின் கவிதைகள் கர்பக்ருஹத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. ஜெயதேவரின் கீத கோவிந்தம் இறைவனின் திருக்கமல பாதங்களில் பிரகாசித்தது. மன்னன் உடனடியாக அவரை வணங்கி அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டான்.
ஜெயதேவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பியதை அறிந்த மன்னன் அவருக்கு நிறைய பணத்தைக் கொடுத்தான். அதை அவர் விரும்பவில்லை. விஷம் போன்றது பணம் என்றார் அவர். மன்னனோ கேட்கவில்லை. ஆகவே மன்னன் தந்த பொருளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் அவர். அவரிடம் நிறைய பணம் இருந்ததை அறிந்து கொண்ட திருடர்கள் சிலர், தனிவழியில் அவர் செல்லும் போது அவரைத் தாக்கி அவர் கைகளையும் கால்களையும் வெட்டினர்; அவரை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு, பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடினர். நல்ல வேளையாக கிணற்றில் தண்ணீரே இல்லை. ஜெயதேவர் மனமுருக இறைவனைத் துதிக்க ஆரம்பித்தார். அந்த வழியே வந்த அரசன் லக்ஷ்மணசேனன் அவரைக் காப்பாற்றி அவரைப் பற்றி முழுதுமாக அறிந்தான். தன் அரசவையில் பிரதான பதவியைத் தந்தான். ஒரு நாள் அரசவையில் ஒரு விழாவை ஒட்டி அனைவருக்கும் வேண்டியது தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயதேவரிடம் பொருளைப் பறித்த திருடர்கள் பிராமணர் வேஷம் பூண்டு அங்கு வந்தனர்; ஜெயதேவரைப் பார்த்துத் திகைத்தனர். ஆனால் ஜெயதேவரோ அவர்களை மனதால் மன்னித்தது மட்டுமின்றி நிறையப் பணத்தை அவர்களிடம் கொடுத்து ஒரு படைத்தலைவனை சில வீரர்களோடு அவர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பினார். படைத்தலைவன் ஆவல் உந்த அந்த பிராமணர்களை நோக்கி எப்படி இப்படிப்பட்ட மகானின் தொடர்பு உங்களுக்குக் கிடைத்தது என்று கேட்டான். அதற்கு அந்தத் திருடர்கள், ‘நாங்கள் அனைவரும் ஒரு மன்னரின் கீழ் சேவை புரிந்து வந்தோம். நாங்கள் அங்கு அரசவையில் அதிகாரிகள். அவர் எங்கள் கீழ் பணி புரிந்தார். அவர் பல தீங்குகளைச் செய்தார். அதற்காக மன்னன் அவருக்கு மரணதண்டனை கொடுத்தான். அதிலிருந்து தப்பி அவர் இங்கு வந்து விட்டார். எங்களைக் கண்டு பயந்து விட்டார்” என்றனர். இந்த இமாலயப் பொய்யை அவர்கள் சொன்ன அந்தக் கணமே தரை பிளந்தது. அவர்கள் அதல பாதாளத்திற்குச் சென்று வீழ்ந்தனர். இதைக் கண்ட படைத்தலைவன் ஆச்சரியமுற்று நடந்ததை எல்லாம் மன்னரிடம் சொன்னான்.
இதைக் கேட்ட ஜெயதேவர் அந்தத் திருடர்களுக்காக மனம் உருகிக் கண்ணீர் சிந்தினார். அதே கணத்தில் அவரது கைகளும் கால்களும் வளர்ந்து முற்றிலும் பூரண குணத்தை அடைந்தன. எழில் வாய்ந்த ஜெயதேவரை தரிசித்த மன்னனின் ஆச்சரியம் பன்மடங்கானது. அவன் உண்மையை எல்லாம் அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். இப்படி ஏராளமான சம்பவங்கள் இறைவனின் திருவருளால் நிகழ்ந்து கொண்டே இருக்கவே, ஜெயதேவரின் புகழ் நாளுக்கு நாள் உலகெங்கும் பரவத் தொடங்கியது. மனமுருகி கிருஷ்ணபக்தியில் திளைத்த அவர் கீத கோவிந்தம் என்னும் மகத்தான கீத மஹாகாவியத்தை இயற்றினார். மக்கள் அவரை பக்த கவி என்று அழைக்கலாயினர். கீதகோவிந்தம் 24 அஷ்டபதிகளைக் கொண்டுள்ளது. இதில் 72 ஸ்லோகங்கள் உள்ளன. தெய்வீகமான இந்த கீதங்கள் இறைவனின் திருவாக்காகவே கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு அஷ்டபதியைச் சொல்லலாம். 19வது அஷ்டபதியில் வரும் வாக்கியங்கள் இவை:
स्मरगरलखण्डनं मम शिरसि मंडनं ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் देहि पदपल्लवमुदारम् । தேஹி பதபல்லவமுதாரம் ज्वलति मयि दारुणो मदनकदनारुणो ஜ்வலதி மயிதாருணோ மதனகதனாருணோ हरतु तदुपाहितविकारम् ॥ ஹரது தத்பாஹிதவிகாரம் கிருஷ்ணர் ராதையிடம் கெஞ்சுகிறார் இப்படி:- மன்மதனின் விஷத்தை நான் அருந்தி விட்டேன். தாபத்தால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உனது மலர்ப்பாதங்களில் எனது சிரசை வைக்கிறேன். அதுவே எனது அனைத்து உபாதைகளுக்கும் தீர்வைத் தரும்.
கீதத்தை இயற்றிவிட்டாலும் கூட ஜெயதேவருக்கு அவரது வாக்கியங்கள் சற்று மனதை உறுத்தின. மகோன்னதமான அவதாரமான கிருஷ்ணர் ஒரு கோபிகையிடம் இப்படிக் கெஞ்சுவாரா? கெஞ்சுவதும் முறையோ! சீச்சீ, தப்பாக எழுதி விட்டேன் என்று அவர் மனம் நொந்தார். உடனே ஓலைச் சுவடியிலிருந்து அதை அழித்து நீக்கினார். அப்போது தான் மனம் சற்று சாந்தியை அடைந்தது. படுக்கச் சென்றார். மறுநாள் காலையில் ஓலைச் சுவடியைப் பிரித்துப் பார்த்த போது அழகாக அது அப்படியே இருந்தது. திகைத்துப் போன ஜெயதேவர் ஓலைச் சுவடியை நெருப்பில் காட்டினார்.நெருப்பில் சுவடி எரியவே இல்லை. கிருஷ்ணரின் திருவுள்ளத்தை அறிந்து கொண்ட ஜெயதேவர் தெய்வீக விளையாட்டில் தான் ஒரு சிறு கருவியே என்பதை உணர்ந்து கண்ணீர் பெருக்கினார்.
இந்த அஷ்டபதியைப் பற்றி இன்னும் ஒரு செய்தியும் கூறப்படுகிறது. 19ஆம் அஷ்டபதியை ஆரம்பித்த ஜெயதேவர், ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் வரை எழுதினார். அதற்குப் பின்னர் வார்த்தைகள் தடைப்பட்டு நின்று விட்டன. அவரை ஆற்றில் குளித்து விட்டு வருமாறு கூறினார் பத்மாவதி. அவரும் சுவடியைக் கீழே வைத்து விட்டுக் கிளம்பினார். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அவர் அஷ்டபதியைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்து தேஹி பதபல்லவமுதாரம் என்று எழுதி விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜெயதேவர் தனது சுவடியைத் தருமாறு கேட்க, “இப்பொழுது தானே வந்து எழுதினீர்கள்” என்று பத்மாவதி கூற சுவடியைப் பார்த்த ஜெயதேவர் திகைத்துப் போனார் ‘தேஹி பதபல்லவமுதாரம்’ என்ற வரியைப் பார்த்து அதை எழுதியருளியது கிருஷ்ணரே என்பதை உணர்ந்து கிருஷ்ணரின் தெய்வீக விளையாடலால் ஆனந்தம் கொண்டார். தனக்குக் கிடைக்காத கிருஷ்ண தரிசனம் தனது மனைவிக்குக் கிடைத்ததை எண்ணி அவர் ஆனந்தப்பட்டார்; பத்மாவதி தேவியும் பக்தியால் உருகினார்.
ஜெயஜகதீச ஹரே என்ற அஷ்டபதியில் பத்து அவதாரங்களையும் அவர் விவரிக்கிறார். ஒவ்வொரு அவதாரமும் அவர் அகக்கண்ணில் தோன்ற அதை அப்படியே கீதமாக இசைத்தார். ஒவ்வொரு அஷ்டபதிக்கும் உரிய ராகம் ஒன்று உண்டு. அந்த பத்ததி அப்படியே இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜெயதேவருக்கு ஏற்ற பத்தினியாக பத்மாவதி திகழ்ந்தார். ராணியிடன் அந்தரங்கமாக அவர் பழகி வந்தார். ஒருமுறை அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ராணி கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் சதியே சிறந்தவள் என்ற தனது கருத்தைச் சொல்ல அதை பத்மாவதி உடனே மறுத்தார். கணவன் இறந்தார் என்ற சேதியைக் கேட்ட அந்த மாத்திரத்திலேயே உயிரை விடுபவள் அல்லவா உண்மை சதி என்று பத்மாவதி தன் கருத்தைக் கூற ராணிக்குச் சற்று பொறாமை ஏற்பட்டது.
ஒருநாள் அவர் பத்மாவதியிடம் முதலைக் கண்ணீர் வடித்து அவரது கணவர் ஜெயதேவர் காட்டிலே மிருகங்களால் கொல்லப்பட்டார் என்று கூறினார். அதைக் கேட்ட அந்தக் கணமே பத்மாவதி தன் உயிரை விட்டார். இதைப் பார்த்த ராணி திகைத்துப் போனார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஜெயதேவரையும் மன்னரையும் அழைத்து வருத்தத்துடன் உண்மையைக் கூறினாள். ஜெயதேவர் சற்றும் கலங்கவில்லை. நான் தான் உயிரோடு இருக்கிறேனே, அது தெரிந்தால் அவள் உயிருடன் எழுவாள் என்று கூறி கிருஷ்ணரை நோக்கி மனமுருகப் பிரார்த்தித்தார். அஷ்டபதியைப் பாட ஆரம்பித்தார். பின்னர் மனைவியை அழைக்க, அவர் எழுந்தார். ராணியின் வேதனையைப் போக்கியதால் அவர் மிகவும் மகிழ்ந்தார்.
கங்கையில் தினமும் குளிக்கும் பழக்கமுடைய ஜெயதேவருக்கு வயதான காலத்தில் கங்கா நதிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் கங்கையே பாய்ந்து வந்து அவரது வீட்டிற்கு அருகில் வந்தாள் என்று கூறப்படுகிறது.
இறுதி காலத்தில் பிருந்தாவனம் சென்ற அவர் அங்கேயே கிருஷ்ணருடன் ஐக்கியமானார்.
இசை நாடகமாகவும், ராதா கல்யாணங்களில் பாடப்படுவதாகவும் உள்ள அஷ்டபதிகளின் பெருமை இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும், பஜனைஉற்சவம் செய்வோருக்கும் சாமான்யர்களுக்கும் இஷ்டமான ஒன்று. சந்தன சர்சித நீல களேபர எனத் தொடங்கும் அஷ்டபதி நாடெங்கும் பிரசித்தமான ஒன்று. 19ம் அஷ்டபதி சஞ்சீவி அஷ்டபதி என்று அழைக்கப்படுகிறது. இதைப் பாடினால் நோய் அனைத்தும் தீரும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ராதா வதன எனத் தொடங்கும் 22ஆம் அஷ்டபதி கல்யாண அஷ்டபதி என்று கூறப்படுகிறது.ராதை என்ற ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றுவதை இசைக்கும் கீதம் இது.
24 அஷ்டபதிகளும் கிரமம் மாறாமால் இன்றும் ஆயிரக்கணக்கான இல்லங்களில் ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டை ப்ரஹ்ம ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர் அஷ்டபதி இசைக்கப்படும் ராதா கல்யாணத்தை வெகுவாகப் பல இடங்களிலும் பரப்பியவர்களுள் முக்கியமானவர். இன்றும் ஆயிரக்கணக்கான இடங்களில் கீத கீத கோவிந்தம் பாடப்படுகிறது; அதைக் கேட்போர் கிருஷ்ணரின் திருவடியை நிச்சயமாகச் சேரும் பாக்கியவான்களே!
ஜயது ஜயது ஜயதேவ! நன்றி வணக்கம்!
tags – Tags- அஷ்டபதி பாடல்கள் ,ஜெயதேவர் , கீத கோவிந்தம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -56
Xxxx
PANINI SUTRA 5-4-42
VARTTIKA adds Mangalaamangala vachanam……… etc
For long I have been trying to find the link between Mangala in Sanskrit and Manjal/turmeric in Tamil..
In Tamil Manjal (yellow colour turmeric stands for anything auspicious that is Mangala in Sanskrit .
But I couldn’t find a definite link, though the sound Mangala and Manjal means same for a Hindu.
That is Auspicious .
There may be a missing link somewhere.
The background for my hypothesis is yellow skinned people are called Mongoloid race.
In Vietnamese, Mau vang is yellow, closer to Tamil.
In Swahili it is Manjano, closer to Tamil.
In many cultures they for a word that has similar colour. For instance, one may say lemon fruit colour.
So we have lot of different names for Yellow.
This is from one article on yellow skin:–
The conceptual relationship between East Asians and yellow skin did not begin in Chinese culture or Western readings of East Asian cultural symbols, but in anthropological and medical records that described variations in skin color. Eighteenth-century taxonomers such as Carl Linnaeus, as well as Victorian scientists and early anthropologists, assigned colours to all racial groups, and once East Asians were lumped together as members of the “Mongolian race” they began to be considered yellow.
It shows Mongol means Manjal/yellow.
மங்கள , மங்கல என்றால் சுபம் தரக்கூடிய நிகழ்ச்சி, சம்பவம், செய்தி என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது. இதை தமிழர்களும் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் இதற்கு இணையாக மஞ்சள்/Turmeric உள்ளது. எல்லா மங்களகரமான காரியங்களும் மஞ்சள் குங்குமத்துடன்தான் துவங்கும். ஆயினும் சம்ஸ்க்ருதத்தில் மஞ்சள் கிழங்குக்கும் மஞ்சள் நிறத்துக்கும் (Yellow colour) தமிழுடன் தொடர்பில்லாத சொற்கள்தான் உளது.
ஆயினும் காணாமற்போன இணைப்புச் சொற்களைக் (Missing Links) கண்டுபிடித்துவிட்டால் மஞ்சள் = மங்கல் தொடர்பை நிரூபிக்கலாம்.
எனது ஆராய்ச்சியில் இரண்டே சொற்கள்தான் கிடைத்தன. வியட்நாமிய மொழியிலும் கிழக்கு ஆப்ரிக்க ஸ்வாஹிலி மொழியிலும்தான் மஞ்சள் ஒலிக்கு நெருக்கமான ஒலி வருகிறது.
இன்னும் ஒரு தொடர்பு, மங்கோலிய இனத்தவரின் தோல் (Mongolian Race) நிறம் மஞ்சள் என்ற நம்பிக்கையாகும். ஆனால் இது இன வேற்றுமை பாராட்டும்விதத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானியர்களையும் சீனர்களையும் குறிக்க உருவாக்கப்பட்டதாக சமூகவியலாளர் கூறுவர் . எனினும் என் கருத்துப்படி மஞ்சள் நிறம் , மங்கோலியர் தோல் நிறம் ஒன்றே. ஆக இதை ஒரு தொடர்பாக கொள்ளலாம். இன வேற்றுமை பயத்தால் இதை என்சைக்ளோபீடியாக்கள் காட்டுவதில்லை.
Xxxx
5-4-47
Commentators add chharithra= conduct
That which is happening, in other words , history
Charithram in Tamil is used for history, life history.
Chara = chala = walk ; in Tamil also
Nada ththai = conduct
Nada ppu = happening
Nada = chara = chala = SEL/Tamil = go
Selavu = travel, payanam in Tamil
சரித்திரம் என்றால் நட+த்தை ; எது நடக்கிறதோ அது.
தமிழிலும் இதே பொருளில் நாட்டு நடப்பு, கூட்டம் நடக்கிறது என்றும் சொல்லுகிறோம்.
நீண்டகாலமாக நடப்பது சரித்திரம்.
நட என்பதற்கு இணையான செல் என்பதும் சம்ஸ்க்ருதத்தில் உளது.
சர = சல= செல்= செலவு /பயணம்
நேதாஜியின் புகழ் பெற்ற அறைகூவல் , ‘தில்லி சலோ’
பழம் தமிழில் ‘செலவு’ என்றால் பயணம்.
ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் “நட , நடப்பு, வரலாறு” என்பதையும்
“சர = சல = செல் = செலவு” என்பதையும் ஒரே வழியில் உருவாக்குகின்றன .
Xxx
5-4-51
Rahas – rahasyam/secret
It is used even in Tamil; but a Sanskrit word.
Cakshus – eyes
Saalshaath – seen with your own eyes
Saakshi- eye witness
Though Sanskrit words used in Tamil
ரஹஸ்யம் = இரகசியம்; இன்றும் தமிழர்கள் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொல்லாகும்
சக்ஷு என்றால் கண்; இதை வைத்து சாக்ஷாத் , சாக்ஷி /சாட்சி என்ற சொற்களையும் தமிழில் பயன்படுத்துகிறோம்.
Xxx
5-4-57
Commentators add
Pata Pata sound; repeated sound
Used in Tamil as well
From which comes
Pattaasu – fire crackers
Pata pata endru pattas vediththathu= பட பட என்று பட்டாசு வெடி த்தது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஜூன் 27-ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYANARAYANAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXX
வழக்கை சந்திக்க தயார் வி.எச்.பி., அறைகூவல்
நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்’ என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல் புரிந்துள்ளதாக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்திற்கு சந்தை விலையை விட குறைவாகவே கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:
ராமர் கோவிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது.
இதில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டும் எதிர்கட்சிகள், ஆதாரமில்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகாமல் உள்ளன. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
XXXX
யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது- பிரதமர் சிறப்புரை
உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி திங்கட் கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
அப்போது, ‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் என்றார்.
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை என தெரிவித்தார்.
TIMES SQUARE, NEW YORK, USA
யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதைப்போல உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற
நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களை செய்து அசத்தினர்
XXX
ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை
மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.
இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.. 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஆங்கிலேயர்கள் கொடுத்த அடிமை பெயர் தான் இந்தியா…சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம்.
இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். இந்தியாவின் பண்டைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதே, நமது நாகரீகத்தின் ஆன்மாவாக திகழ முடியும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள் மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.
ஆகவே, அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?. இந்தியா என்னும் பெயரை சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் நமக்கு கொடுத்தனர். இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? நமது குழந்தைகளுக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா நடித்த தலைவி ஜெயலலிதா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே தலைவி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போனது. அந்த படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்
XXX
காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது.
கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன
.கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
XXXX
கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை :அமைச்சர் பேட்டி
நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும் திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு திருக்கோயில் பணியாளர்களுக்கான கொரோனோ நோய் தொற்று பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்து அறநிலை துறை கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம் கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி தற்போது தமிழகத்தில் 207.பேர பயிற்சி முடித்து உள்ளனர்.சைவ மற்றும் வைணம் வழிபாட்டு தலங்களில் பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுத்திய பின் கோயில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறது அதை உடனடியாக சட்டரீதியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியாா் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வித்யாதான அறக்கட்டளைக்கு வித்யாதான அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலையாக ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.
அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். அந்தப் பக்தருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
XXXX
வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க பாபா ராம்தேவ் முறையீடு
கடந்த மாதம், யோகா குருவான பாபா ராம்தேவ், ‘அலோபதி மருத்துவம் குறித்து வெளியிட்ட கருத்துக்களுக்கு , இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அலோபதி மருந்துகள் குறித்த கருத்துகளை ‘வாபஸ்’ பெறும்படி, பாபா ராம்தேவிடம் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்று, பாபா ராம்தேவும், தன் கருத்தை திரும்ப பெற்றார்.எனினும், பாபா ராம்தேவுக்கு எதிராக, பல மாநிலங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், பாபா ராம்தேவ் முறையிட்டு உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:எனக்கு எதிராக, போலீசாரிடம் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவ
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by SUJATHA RENGANATHAN
XX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by SUJATHA RENGANATHAN .
Xxx
Those alleging corruption in Ayodhya land deal should approach court if they have evidence: VHP
The Vishwa Hindu Parishad (VHP) on Saturday said those who have accused the Ram temple trust of corruption in the land deal in Ayodhya should go to court if they have evidence to back their claims.
AAP leader Sanjay Singh and former SP MLA from Ayodhya Pawan Pandey had recently alleged that a piece of land worth Rs 2 crore was purchased by the Shriram Janmabhoomi Teerth Kshetra Trust in Ayodhya at an inflated price of Rs 18.5 crore.
Dismissing the allegations as ”baseless”, VHP’s joint general secretary Surendra Jain Saturday said the Shriram Janmabhoomi Teerth Kshetra Trust conducted the land deal with ”utmost honesty and transparency”.
”There is no scam in it. If there is anything wrong, why don’t they go to court? They should move the court if they have any evidence,” he told reporters here, lashing out at the Aam Aadmi Party, the Samajwadi Party, the Congress and other opposition parties which have been demanding a probe into the deal. Singh and Pandey had alleged money laundering in the deal, and demanded a probe by the Central Bureau of Investigation (CBI) and the Enforcement Directorate (ED). The Shriram Janmabhoomi Teerth Kshetra Trust’s general secretary Champat Rai strongly dismissed the allegations, claiming the land was purchased at a price much lower than the prevailing market rate.
AAP Rajya Sabha member Singh told the media last week that he was preparing to take the matter to court.
”We are still waiting for that. Why haven’t they approached the court so far? They should do it. Truth will come out before everybody,” the VHP general secretary said.
XXXX
International Yoga Day News Highlights:
Prime Minister Narendra Modi on Monday said yoga remains a “ray of hope” as the world fights the coronavirus pandemic and asserted that in these difficult times it has become a source of inner strength.
Addressing the 7th International Yoga Day programme, Modi also said that in collaboration with the World Health Organization (WHO), India has taken another important step and now the world is going to get the power of M-Yoga application, which will have many videos of yoga training based on Common Yoga Protocol available in different languages of the world.
This will help us in making the ‘One World, One Health’ motto successful, he said.
“At a time when the whole world is fighting the coronavirus pandemic, yoga remains a ray of hope,” Modi said.
Yoga shows us the way from stress to strength and from negativity to creativity, he asserted.
xxx
Yoga included in govt school curriculum from Classes 1 to 10 in Haryana
Haryana Chief Minister Manohar Lal Khattar on Monday said that yoga has been included in school curriculum for classes 1 to 10 from the current academic session.
He was addressing an event here on the occasion of the International Yoga Day.
“…We have included yoga in school curriculum from this year for Classes 1 to 10 so that children make it a part of their daily lives,” Khattar said. “Like we need oxygen, food and water, likewise, to keep the body healthy yoga has its own importance. To inculcate the habit of practising yoga and to make it a part of students’ lives since childhood, we have decided to include it in school curriculum from this year,” he added.
XXXX
Times Square celebrates International Yoga Day with over 3,000 yogis
The seventh International Yoga Day was celebrated at the iconic Times Square in New York on Sunday. The day-long yoga festival with the theme of ‘Solstice in Times Square 2021’ was attended by more than 3,000 people where yogis, with their yoga mats and flexible bodies, filled Times Square to mark the start of summer.
Xxxx
xxxx
Ramdev moves SC against multiple FIRs over his allopathy remarks
Yoga guru Ramdev on Wednesday approached the Supreme Court seeking a stay on the proceedings in multiple cases lodged against him in various states over his alleged remarks on the efficacy of allopathy in the treatment of COVID-19.
Ramdev has sought protection from coercive actions in FIRs lodged by Indian Medical Associations’ (IMA) Patna and Raipur branches, and transfer of FIRs to Delhi.
He has also sought clubbing and consolidation of FIRs and stay of the proceedings.
Randev has been booked under sections 188 , 269, 504 of the Indian Penal Code (IPC) and other provisions of Disaster Management Act, 2005.
Xxx
Chardham yatra to open partially for locals from July 1
Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri will be opened for residents of Chamoli, Rudraprayag and Uttarkashi districts respectively from July 1 with a cap on the number of pilgrims.
Uttarakhand Cabinet on Friday decided to partially open the Chardham yatra for locals in limited numbers from July 1.
Briefing reporters about the cabinet’s decision, state government’s spokesman Subodh Uniyal said Badrinath, Kedarnath, Gangotri and Yamunotri will be opened for residents of Chamoli, Rudraprayag and Uttarkashi districts respectively from July 1 with a cap on the number of pilgrims to visit the temples daily.
A senior official will be appointed for each of the four Himalayan temples who will coordinate with the district administration concerned about the arrangement for pilgrims, he added.
Xxx
AMARNATH YATRA CANCELLED; ONLINE DHARSAN ARRANGED
The Jammu & Kashmir government has cancelled the annual Amarnath pilgrimage due to the prevailing Covid-19 situation after a discussion with Amarnathji Shrine Board members.
However, Shri Amarnath Ji Shrine Board said it will arrange online darshan for all the devotees worldwide.
The 56-day yatra to the 3,880-metre-high cave shrine of Lord Shiva, located in the upper reaches of Himalayas, was supposed to start from the twin routes of Pahalgam and Baltal on June 28 and culminate on August 22.
The pilgrimage was cancelled in 2020 as well due to the pandemic.
Xxxx
Siva Shankar Baba case: Police launch complaint cell
A statement issued by the police informed victims to contact Investigation Officer DSP Gunavarman on mobile number 98405-58992 and Inspector Renukadevi on 98406-69982.
Days after the arrest of Siva Shankar Baba on charges of sexually abusing girl students and a woman teacher for abetting the crimes, police have announced a complaints cell to encourage victims to file complaints. A statement issued by the police informed victims to contact Investigation Officer DSP Gunavarman on mobile number 98405-58992 and Inspector Renukadevi on 98406-69982.
Victims can also file complaints on inspocu2@gmail.com, The police assured to secure the identity of complainants.
xxx
Pak clothing brand apologises after sharing morphed picture of Hindu God
Wednesday 23rd June 2021 06:24 EDT
Pakistani womenswear brand, Generation, had mocked Hinduism by putting up a morphed image of a Hindu deity in their office. In its post, Hindu Samata said, “This famous Pakistani brand put up a disrespectful poster mocking a Hindu deity in their office.
Pakistan has blasphemy laws that only apply to non-Muslims.
Generation had morphed the image of the Hindu deity and replaced the ‘astras’ with laptop and other items. The desecration of the Hindu Goddess by a brand, founded by a Pakistani husband-wife duo named Saad and Nosheen Rahman, did not go unnoticed. Hindu rights activist points out the dual standards of the Pakistani justice system.
Clothing brand tenders apology
Following the outrage on social media, Generation tendered an apology. In a statement, the brand said, “A few days ago a grave oversight occurred at the Generation HQ. An ignorant and insensitive image became public that was hurtful to our patrons, especially for those that represent the white in our flag (referring to minorities).”
It further added, “We are so so sorry! We pledge to strive to be better, to make better and more informed choices. We also pledge to conduct regular sensitivity workshops at the HQ to learn more about the people we share our country with. We hope you can forgive us, and that we can grow to be more sensitive and mindful as a community.”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பிறந்த தேதி –அக்டோபர் 21,1772
இறந்த தேதி – ஜூலை 25, 1834
ஆங்கிலக் கவிதை உலகத்தில் மகிழ்ச்சியூட்டும் கற்பனைமிக்க படைப்புகளைத் துவக்கிவைத்தவர் கோல்ரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE). தி ரைம் ஆப் தி ஏன்ஷியன்ட் மரினர் (THE RIME OF THE ANCIENT MARINER )கவிதை மூலம் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடம்பெற்றவர்.
கோல்ரிட்ஜ் , ஒரு மதப் பிரசாரகரின் மகன். இங்கிலாந்தில் ஒரு கிராமப்புறத்தில் ஒன்பது பேருடன் பிறந்தவர் .லண்டனில் பள்ளிக்கூட படிப்பின்போது பிரபல எழுத்தாளர் சார்ல்ஸ் லாம்பு (CHARLES LAMB) டன் பழக்கம் ஏற்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும்காலையில் கவிஞர் ராபர்ட் சதேயுடன் (POET ROBERT SOUTHEY) பரிச்சயம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து பென்சில்வேனியாவில் ஒரு லட்சிய சமுதாய அணியை (IDEAL COMMUNITY) உருவாக்க இருவரும் திட்டம் போட்டனர். ஆனால் அது நிறைவேறவில்லை.
இந்தத் தொடர்பு காரணமாக 1795-ல் சதேயின் காதலியின் சகோதரியை கோல்ரிட்ஜ் கல்யாணம் செய்துகொண்டார்.
1797ம் ஆண்டில் இயற்கையைப் போற்றும் புகழ்மிகு கவிஞர் வோர்ட்ஸ் வொர்த்து (Wordsworth) டன் நட்பு மலர்ந்தது. இருவரும் சேர்ந்து லிரிக்கல் பாலட்ஸ் (Lyrical Ballads) என்ற கவிதை நூலை வெளியிட்டனர்.
எளிய, அனறாடம் புழங்கும் சிறந்த மொழி நடையில் இவை இருந்தன . இயற்கையை புதிய கோணத்தில் பார்க்கும் எண்ணத்தையும் உண்டாக்கியது . இதில் கோல்ரிட்ஜ் படைத்த ஏஷியன்ட் மாரினர் Ancient Mariner கவிதையும் அடக்கம். கடலில் பறக்கும் மிகப் பெரிய ஆல்பட்ராஸ் (Albatross) பறவையை ஒரு மாலுமி கொன்ற பின்னர் ஏற்படும் துயரங்களை வருணிக்கும் பாடல் இது. இயற்கைக்கு எதிரான குற்றம் இழைத்தற்குக் கிடைத்த தண்டனை குறித்த கவிதை இது.
அவருடைய மற்ற சிறந்த கவிதைகளை குப்ளா கான், கிரிஸ்டாபல் கவிதைகள் ஆகும். இவை மர்மமும் அதிசயமும் நிறைந்தவை. குப்ளா கான் கவிதை வரிகளை இவர் கனவில் கண்டாராம்.
சொந்த வாழ்க்கையில் பல பிரச்ச்சினைகளை சந்திக்க நேரிட்டது. அபினி, கஞ்சாவுக்கு (Opium) அடிமையானதே இதற்குக்காரணம். குடும்பத்தை விட்டு வெளியேறினார். ஆயினும் கவிதை, கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தவில்லை. கலைகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.
ஒரு கவிஞனின் பணி என்ன என்பதை ‘பயக்ராபியா லிட்டரேரியா’ (BIOGRAPHIA LITERARIA) என்ற நூலில் எழுதினார். சம காலத்தில் புழங்கும் நம்பிக்கைகள் எண்ணங்கள் ஆகியவற்றைக்கொண்டு, புதியவற்றை படைப்பதே புலவரின் வேலை என்று அதில் கோல்ரிட்ஜ் எழுதினார்.
இவரது முக்கிய இலக்கியப் படைப்புகள் :-
PUBLICATIONS
1796 – POEMS ON VARIOUS SUBJECTS
1798 – LYRICAL BALLADS – WITH WILLIAM WORDS WORTH
1802 – DEJECTION – AN ODE
1816 – CHRISTABEL
1816 – KUBLA KHAN
1817 – BIOGRAPHIA LITERARIA
1825 – AIDS TO REFLECTION
PUBLISHED AFTER HE DIED—
1895 – ANIMA POETAE
-SUBHAM-tags – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், S T Coleridge
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம்- ஸ்ரீ காள ஹஸ்தி கோவில்-Part 35
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 27-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை வயல் அணி காழியான்
சிட்ட நால்மறை வல் ஞானசம்பந்தன் சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக அமைவதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், ராகு கேது ஸ்தலமாக அமைவதுமான ஸ்ரீகாளஹஸ்தி தலமாகும். இது திருப்பதியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ என்றால் சிலந்தி. காள என்றால் பாம்பு. ஹஸ்தி என்றால் யானை என்று பொருள். இந்தத் தலத்தில் ஞானப் பிரஸூனாம்பாள் சமேதராகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் தன்னை வழிபட்ட சிலந்திக்கும், பாம்பிற்கும், யானைக்கும் ஒரே சமயத்தில் காட்சி அளித்து இவை மூன்றையும் ஒன்றாக முக்தி அடையச் செய்தார்.
அவ்வுருவங்களையும் அந்தப் பெயர்களையும், தான் இணைத்து, ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமத்தைப் பெற்றார். ஏராளமான புராண வரலாறுகளையும் சரித்திரச் சம்பவங்களையும் கொண்டுள்ள மிகப் புராதனமான ஸ்தலம் இது. ராகுவும் கேதுவும் வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. ஆகவே, லிங்கத் திருமேனியில் நாகப்பாம்புகள் பின்னலிடப்பட்டது போன்ற தோற்றத்தை இங்கு காண முடிகிறது.இது ராகு கேதுவிற்கான விசேஷ ஸ்தலம் என்பதால் காலம் காலமாக ராகு, கேது தோஷம் உடைய லட்சக்கணக்கானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். சர்ப்ப சாந்தி உள்ளிட்ட பல வழிபாடுகளை நடத்தி தங்கள் தோஷத்தைக் கழிக்கின்றனர். திருமணத் தடை உள்ளிட்ட பல தடைகள் நீங்கி மனம் மகிழ்கின்றனர்.
கோவிலைச் சுற்றி பிரம்மாண்டமான கற்சுவர்களும் வானளாவிய கோபுரங்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. இதன் ஆதி வரலாறு ஒன்று உண்டு. கர்ப்பூர லிங்கம் ஒன்றை இங்கு ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாயு பகவான் வழிபட்டு வந்தான். இதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான் அவனுக்கு மூன்று வரங்களை அருளினார். அதன் படி வாயு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையையும், ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்கும் தன்மையையும், அவன் வழிபட்ட கற்பூர லிங்கம் அவன் பெயராலேயே வழங்கப்படும் பெருமையையும் பெற்றான். இங்கு, சிறிதும் காற்று வீசாமல் இருக்கும் கர்பக்ருஹத்தில் உள்ள திருவிளக்கின் சுடர், தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பது ஒரு அதிசயமாகும். ஆகவே இங்குள்ள லிங்கம் வாயு லிங்கம் எனப்படுகிறது. படைப்புக் கடவுளான பிரம்மா ஒருமுறை கைலாயத்தைத் தன் தோளின் மீது எடுத்து பூலோகம் வழியாகச் செல்லும் போது எங்கு சிகரத்தின் பாரத்தை உணர்கிறாரோ அங்கு அதை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தால் சுபிட்சம் ஏற்படும் என்ற அசரீரி ஒலி கேட்டது. தென் திசை வழியே செல்லும் போது சிவபிரான் வாயுலிங்கமாக சிகரத்தில் நுழைந்தார். பாரம் அதிகமானது. ஆகவே பிரம்மா அதை அங்கேயே வைத்தார். அந்த இடம் தான் திருக்காளத்தித் தலமாகும். அவர் அங்கேயே தங்கு தவம் செய்யத் தொடங்கினார்.
ஒருமுறை காமதேனுவை வழிபடாமல் புறக்கணித்த லக்ஷ்மி தேவி, அதனால் தன் ஒளியை இழந்தாள். திருமால் லக்ஷ்மியைப் புறக்கணித்து, காளத்தி சென்று தவம் புரியுமாறு கூற, அவரும் ஸ்வர்ணமுகி நதியில் நீராடி ஒரு ஸ்ரீ சக்ரத்தை அம்பிகை ஞானப் பிரஸூனாம்பாளின் திருப்பாதங்களில் வைத்து வழிபடலானார். சில காலம் கழித்து ஒரு வைகாசி மாதம் பௌர்ணமி கழிந்த ஐந்தாம் நாள் ஸ்ரீசக்ரத்திலிருந்து அம்பிகை வெளிப்பட்டுக் காட்சி தர லக்ஷ்மி தேவி இழந்த தனது பிரகாசத்தை மீண்டும் பெற்றாள். திருமால் லக்ஷ்மியை ஏற்றுக் கொண்டு வைகுந்தம் ஏகினார். பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று!
மிக பிரசித்தமான கண்ணப்ப நாயனாரின் சரித்திரத்தை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அர்ஜுனனே கலியுகத்தில் வேடுவர் குலத்தில் கண்ணப்பனாகப் பிறந்தார் என்று தெலுங்குக் கவிஞர் தூர்ஜடி கூறுகிறார். ஒருமுறை கண்ணப்பன் இங்குள்ள தன் இஷ்ட தெய்வமான லிங்கத்தை வழிபடச் செல்ல, லிங்கத்தின் இடது கண்ணிலிருந்து இரத்தம் வழியவே திகைப்புற்ற கண்ணப்பன் தன் கண்ணைப் பிடுங்கி இறைவனின் கண் இருந்த இடத்தில் அப்ப, ‘நில்லு கண்ணப்ப, இது எனது திருவிளையாடலே’ என சிவ்பிரான் அவனுக்குக் காட்சி அளித்துக் கூறினார். கண்ணப்பனின் பக்தியின் பெருமையை உலகம் அறிந்த இடம் திருக்காளத்தியே.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் இங்கு வந்து தவம் புரிந்து இறைவனின் தரிசனத்தை நேரில் பெற்றான். ஆகவே இந்தத் தலம் வரகுணபுரம் என்ற பெயரைப் பெற்றது. சிவபிரானின் பாடல் பிழையானது என்று நக்கீரர் ஒருமுறை கூற சிவபிரான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க, நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர். அதனால் சிவபிரான் அவருக்கு குஷ்ட நோய் வருமாறு சாபம் தர, தன் பிழையை உணர்ந்த நக்கீரர் இறைவனிடம் தன்னை மன்னித்து அருள் பாலிக்குமாறு வேண்ட சிவபிரான் நீ கைலாயத்தை அடையும் போது உன் நோய் தீரும் என்று அருள் பாலித்தார். திருமுருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரர் திருப்பரங்குன்றம் குளத்தில் குளித்து எழும் போது எதிரே ஸ்வர்ணமுகி ஆறு ஓடுவதைக் கண்டு அதிசயித்தார். தக்ஷிண கைலாய மலையான காளத்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததனால் ஆனந்தம் அடைந்த அவர் கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி நூலை இயற்றி மனம் மிக மகிழ்ந்தார். காளத்தி கோவிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள தக்ஷிண கைலாய மலைச் சரிவில் நக்கீரருக்கு ஒரு கோவில் உண்டு. சித்துலய்யா என்று அங்கு இவர் அழைக்கப்படுகிறார். இந்தத் தலத்தில் வந்து வழிபட்டுள்ள திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும், சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஸ்ரீஞானப்ரஸூனாம்பாளும், ராகு, கேது பகவானும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். சுந்தர நாயனாரின் நல் வாக்கு இது :
நீறார் மேனியனே, நிமலா நினை அன்றி, மற்றுக், கூறேன் நா அதனால், கொழுந்தே, என் குணக்கடலே, பாறார் வெண்தலையில் பலி கொண்டுஉழல்காளத்தியாய்,
யோக வாசிஷ்டத்தில் பேருண்மைகளை விளக்கும் அற்புதமான கதைகள் உள்ளன. அவற்றில் மிகச் சுவையானதும் அற்புதமானதும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதுமான ஒரு கதை லீலாவின் கதை.
உற்பத்தி பிரகரணத்தில் 15ஆம் அத்தியாயம் முதல் 60ஆம் அத்தியாயம் முடிய இந்தக் கதை சுவையாக விவரிக்கப்படுகிறது.
இங்கு சுருக்கத்தைக் காண்போம்:
பத்மா என்ற அரசன் தனது மனைவியான லீலா என்ற அரசியுடன் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தான். லீலாவிற்கு ஒரு ஆசை பிறந்தது. தானும் தனது கணவரும் மரணமே அடையாமல் என்றும் ஒன்றாக சந்தோஷமாக இருந்து பூவுலகில் வாழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. லீலா தனது நாட்டில் இருந்த அறிஞர்கள் அனைவரையும் வரவழைத்தாள்.எப்படி மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்து இந்தப் பூவுலகிலேயே இருக்கலாம், அதற்கு ஒரு வழியைச் சொல்லுங்கள் என்றாள் அவள். அறிஞர்கள் அனைவரும் திகைத்தனர். அனைவரும் ஒருமித்தமாக மரணம் அடையாமல் இருக்கவே முடியாது, மனிதனாய்ப் பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம் உண்டு என்றனர்.
லீலா அவர்கள் அனைவரையும் போகச் சொன்னாள். சரஸ்வதி தேவியை நோக்கிக் கடும் தவம் புரிய ஆரம்பித்தாள். அதே சமயம், கணவனுக்கான தனது பணிகளை அவன் சந்தேகப்படாமல், விடாமல் தொடர்ந்து செய்து வந்தாள். சரஸ்வதி தேவி அவளது தவத்திற்கு மெச்சி நேரில் அவள் முன் பிரசன்னமானாள்.
லீலாவை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டாள் சரஸ்வதி தேவி.
இரு வரங்கள் வேண்டும் என்றாள் லீலா.
“அவை என்ன, சொல்” என்றாள் சரஸ்வதி.
“ஒன்று, எனது கணவர் இறக்கும் போது அவரது ஜீவன் அரண்மனையிலேயே இருக்க வேண்டும். இரண்டாவது நான் விரும்பிய போதெல்லாம் சரஸ்வதி தேவியாகிய நீங்கள் எனக்கு முன்னால் நேரில் பிரசன்னமாக வேண்டும். இவை தாம் நான் வேண்டும் இரண்டு வரங்கள்” என்றாள் லீலா.
“தந்தோம் இரு வரங்களை, உனக்கு” என்று கூறிய தேவி மறைந்தாள்.
சில காலம் கழிந்தது. ஒரு நாள் மன்னன் பத்மா மரணமடைந்தான். மிகுந்த துயரத்தை அடைந்த லீலா சரஸ்வதி தேவியை நேரில் வருமாறு பிரார்த்தித்தாள். நேரில் பிரசன்னமான சரஸ்வதி, “பிணத்தை மலர்களினால் மூடு” என்று கூறியதோடு, பின்னால் அவன் திருப்பி வருவான் என்றாள்.
தேவி கூறியபடியே லீலா செய்தாள்.
சில நாட்கள் கழிந்தன. லீலாவிற்குத் துக்கம் தாளவில்லை. மீண்டும் சரஸ்வதியை அழைத்தாள். “என்னை என் கணவன் எங்கு இருக்கிறாரோ அங்கு அழைத்துச் செல்லுங்கள், அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று கூறினாள்.
சரஸ்வதி அவளது உடலை விடுமாறு கூறி அவளை அவள் கணவரிடம் அழைத்துச் சென்றாள்.
இன்னொரு ராஜ சபையில் தனது கணவன் அமர்ந்திருப்பதை லீலா பார்த்தாள். இப்போது அவனுக்கு வயது பதினாறே ஆகி இருந்தது. அது மட்டுமல்ல, தனது அரச சபையில் இருந்த பலரும் கூட அங்கே அங்கம் வகிப்பதையும் அவள் பார்த்தாள். அவளுக்கு ஒரே ஆச்சரியம். இவர்கள் கூட இறந்து விட்டார்களோ என்று அவள் எண்ணினாள். அதை சரி பார்த்து விடலாமே என்று தோன்றியது அவளுக்கு.சரஸ்வதி தேவியிடம் வேண்டிக் கொள்ள அவர் அருளால் தனது அரண்மனைக்குத் திரும்பினாள். அங்கு அவளே ஆச்சரியப்படும்படி அவளது அனைத்து அரசவை உறுப்பினர்களும் இருந்தனர். அவளது கணவனின் உடலை எப்படி விட்டாளோ அப்படியே விட்டது விட்டபடி அது இருந்தது!
லீலாவிற்கு ஒரே ஆச்சரியம்! எப்படி அவளது குடிமக்கள் இங்கும் இருக்க முடிகிறது, இன்னொரு இடத்திலும் இருக்க முடிகிறது?!
இதில் எது உண்மை, எந்தக் காட்சி பொய்?
தேவியானவள் அவள் முன் தோன்றி இரண்டு அனுபவங்களுமே கனவினைப் போன்றவையே, இரண்டுமே மாயை தான் என்றாள்!
மேற்கொண்டு சரஸ்வதி வசிஷ்டர் என்ற ஒரு பிராமணரின் கதையைக் கூறினாள்.
மிக்க ஏழையான வசிஷ்டர் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அரசன் ஒருவன் வேட்டையாடச் சென்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். இப்படி வலிமை வாய்ந்த அரசனாக அல்லவோ பிறக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அடுத்த பிறவியில் அவர் பராக்ரமம் பொருந்திய ஒரு அரசனாகப் பிறந்தார். வசிஷ்டரின் மனைவியும் தொடர்ந்து இறக்கவே, அவள் அரசனின் மனைவியாக ஆனாள். சரஸ்வதி இந்தச் சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் நடந்தது என்று விளக்கினாள். அது மட்டுமல்ல, வசிஷ்டர் என்ற அந்த பிராமணரே பத்மா என்ற அரசன் என்றும் அவள் தான் வசிஷ்டரின் மனைவி என்றும் கூறினாள்.
லீலாவிற்கு ஒரே திகைப்பு, பிரமிப்பு! இது எப்படி சாத்தியம் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தன் கணவர் பத்மாவுடன் பல ஆண்டுகள் அல்லவா வாழ்ந்து வந்தாள்! ஒரு வாரத்திற்கு முன்னர் மட்டுமே இறந்து போன இவர்கள் எப்படி பற்பல ஆண்டுகள் வாழ்ந்தது போலத் தோற்றமளிக்கின்றனர்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சரஸ்வதியை அவள் திகைப்புடன் பார்க்க, தேவியோ, “ காலமும் வெளியும் மனக் கற்பனைகளே” என்று விளக்கினாள். ஒருவன் எதைக் கற்பனை செய்கிறானோ அதுவாகவே அவன் ஆகிறான். ஒருவன் கனவு காணும் போது வெகு தூரத்தில் அவன் இருப்பதைக் காண்கிறான். அங்கு நெடுங்காலம் வசிப்பது போலவும் அவன் காண்கிறான். ஆனால் விழித்துக் கொண்டவுடன் தனது பழைய இடத்தில் அதே காலத்தில் இருப்பதைக் காண்கிறான். கனவில் தான் கண்ட நெடுங்காலமானது கனவு கண்ட சில நிமிடங்களில் ஏற்பட்டதே தான் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.
லீலா இந்த விஷயத்தை இன்னும் சரி பார்த்து விடலாம் என நினைத்து சரஸ்வதி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வேண்டினாள். அங்கு வசிஷ்டரின் மகன்கள் வசிஷ்டர் இறந்து விட்டதை நினைத்து இன்னும் துக்கம் அனுஷ்டிப்பதைக் கண்டாள்.
ஆக இப்படியாக சரஸ்வதி, லீலாவிற்கு மூன்று கணவர்கள் இருப்பது மெய்யே என உணர்த்துகிறாள். வசிஷ்டர் என்ற ஏழை, பத்மா என்ற வயதான அரசன், புதிய அரசை ஆளும் இளமையான அரசன்! ஆக தேவி லீலாவை நோக்கி அவளது இந்த மூன்று கணவர்களில் யாரிடம் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்கிறாள். லீலா தனக்கு நிறைய பிறப்புகள் இருப்பதையும் நிறைய கணவர்கள் இருப்பதையும் இப்போது உணர்ந்து விட்டதாக தேவியிடம் கூறுகிறாள்.
தேவியிடம் தன்னைத் தனது மூன்றாவது கணவனான இளைஞனான அரசனிடம் அழைத்துச் செல்லுமாறு லீலா வேண்டுகிறாள். அங்கேயோ அந்த அரசின் மீது எதிரிகள் ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுத்துள்ளனர். ஆகவே இளைய அரசன் தனது மந்திரிகளுடன் அந்தப் படையெடுப்பை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறான். மந்திராலோசனை முடிந்த பின்னர் அரசன் தூங்கச் செல்கிறான். அப்போது தேவி அவனை எழுப்புகிறாள். தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசன் தனது இரு புதிய விருந்தாளிகளைப் பார்த்து ஆனந்தம் அடைகிறான். பின்னர் தேவி தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரை எழுப்பி அவருடைய அரசன் பெயர் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு கேட்க அவர் அரசனின் பெயர் விதுரதா என்றும் அவர் இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.
உடனே தேவி அரசனின் தலை மேல் கையை வைத்து அவனது இறந்த காலத்தைப் பார்க்குமாறு சொல்கிறாள். அரசன் எப்படி ஒரு வாரத்திற்கு முன்னர் தான், தான் கிராமத்தில் இறந்து விட்டதையும், அதற்கு ஒரு நாள் முன்னதாகத் தான் பற்பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த பத்மா என்ற அரசனாக இருந்து இறந்து போனதையும் இப்போது பல காலமாக விதுரதா என்ற பெயரில் தான் வாழ்ந்து வருவதையும் பார்த்து வியப்பின் உச்சிக்கே செல்கிறான். சரஸ்வதி இந்த மூன்றுமே மாயை என்று கூறி ஒரு போதும் அவன் இறக்கவும் இல்லை, பிறக்கவும் இல்லை என்று உணர்த்துகிறாள். உண்மையில் அவன் சுத்த விஞ்ஞானம் அதாவது சுத்தமான பிரக்ஞை என்றும் கூறுகிறாள்.
இளைஞனான அரசன் தேவியிடம் புதிய ராணியையும் புதிய அமைச்சரையும் தனது பழைய அரசுக்குக் கூட்டிச் செல்ல தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்கிறான். தேவி, அதற்கு அவன் போரில் இறக்க வேண்டும் என்றும் பின்னர் தனது புது மனைவியுடனும் புது அமைச்சருடனும் அவனது பழைய உடல் கிடக்கும் இடத்திற்கு அப்படிச் செல்லலாம் என்றும் கூறுகிறாள்.
அதன்படியே அரசன் போருக்குச் சென்று அங்கே கொல்லப்படுகிறான். பிறகு தேவி அவனையும் அவனது ஒரே மாதிரியாக இருக்கும் இரு மனைவிகளையும் அதாவது பழைய லீலா, புதிய லீலா ஆகிய இருவரையும் கூட்டிச் செல்கிறாள். அங்கு உடலாகக் கிடந்திருக்கும் பழைய மன்னன் பத்மாவை உயிர்ப்பிக்கிறாள்.
இந்தக் கதை இப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது. பெரிய உண்மை என்னவெனில் சங்கல்பம், ஆசை, எண்ணங்கள், காலம் வெளி ஆகியவற்றின் ஒப்புமைத் தோற்றம் ஆகியவை இந்தக் கதை மூலம் நன்கு விளக்கப்படுகிறது. நாம் காணும் உலகத்திற்குள் இன்னும் பல நுண்ணிய உலகங்கள் இருக்கின்றன என்பதையும் இந்தக் கதை புலப்படுத்துகிறது. ‘புருஷா சேதனா மாத்ரம்’ – அதாவது புருஷன் என்பவன் வெறும் சேதனா தான் – ஆன்மா என்பது பிரக்ஞையே என்ற உண்மையை உணர வேண்டும். விதுரதா என்ற மன்னனின் உடல் பத்மா என்ற மன்னனின் உடலாக இருப்பது ஏன் என்றால் அதற்கான காரணம் உள்ளூர அவனிடம் இருக்கும் ஆசையே தான் – வாஸனையே அதன் காரணம் என்று இந்தக் கதை விவரிக்கிறது.
இந்தக் கதையை நன்கு ஆழ ஊன்றி சிந்திப்பதன் மூலம் பல பேருண்மைகளை அறிந்து கொள்ள முடியும்!
இதில் உள்ள உண்மைகளை ஹ்யூ எவரெட் (Hugh Everett)என்ற நாஸா விஞ்ஞானி சமீப காலத்தில் கூறிய போது உலகமே வியந்தது. யுனிவர்ஸ் (Univierse) என்பது ஒன்று மட்டுமல்ல, பல பிரபஞ்சங்கள் உள்ளன, (Multiverse) என்றார் அவர். இந்தக் கொள்கையை அறிவியல் உலகம் இப்போது தீவிரமாக ஆதரித்து மேலும் ஆராய்ந்து வருகிறது. இன்னொரு செய்தி, இந்த பல் பிரபஞ்சங்கள் ஒன்றிற்கு மேல் ஒன்றாக ஒரு மிலிமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறதாம்!
யோக வாசிஷ்ட உண்மைகளும் நவீன அறிவியல் உண்மைகளும் ஒன்றே என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது இல்லையா?!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நாம் பின்பற்றும் நூற்றுக் கணக்கான விஷயங்களுக்கு மூலம்/ ஆணிவேர் , உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அடர்ந்த காடுகள்; பிரம்மாண்டமான நதிகள்; பாலங்கள் கிடையாது. அகஸ்தியர் விந்திய மலையில் ரோடு போடும்வரை சாலைகள் கிடையாது. கடலோரமாகவோ, கப்பல் மூலமாகவோதான் கங்கை நதி வழியாக வட இந்தியாவுக்குள் நுழைய முடியும் ;மின்சாரமும், மொபைல் போனும் இன்டர்நெட்டும் இல்லாத காலத்தில்- குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு– முன்னர் ஒரே நம்பிக்கை இருந்ததென்றால் அதிசயம்தானே . அதுவும் அப்போது இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு!
பெயரிடும் முறையைக் காண்போம் .
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், அண்டர் மகன் குறுவழுதி என்பன புறநானூற்றுப் புலவர் பெயரில் உள்ளனர். அதாவது இன்னார் மகன் நான் என்று பெருமையாக செப்புவது பழைய வழக்கம். இதன் மூலம் ஒருவரை அடையாளம் காண்பதும் எளிது. ஏனெனில் பழங்காலத்தில் ஒரே பெயருடன் ஒரு ஊரில் பலர் இருப்பர்!
ஆங்கிலத்தில் மகன் பெயரை தந்தை பெயருடன் ஒட்டிவிடுவார்கள்:-
எ .கா . டேவிட்சன், ஸ்மித்சன்
ஸ்காட்டிஷ், ஐரிஷ் மொழிகளில் முன்னால் ஒட்டிவிடுவர்
எ .கா .
மக் டொனால்ட் = டொனால்ட் மகன்
இந்த ஸ்காட்டிஸ் பெயரில் தமிழ் சொல் மகன் (மேக்) இருப்பதைக் காண்க
ஓ’ ஷானஸ்ஸி = ஷானஸ்ஸி வழிவந்தவன் (தாத்தா பெயர் ஷானஸ்ஸி )
இதிலும் முந்தைய பெயரிலும் மகன், தாத்தா என்பதெல்லாம் தனியாகவோ ஒட்டிக்கொண்டோ இருக்கின்றன . அதுவும் ஐரிஷ் ஸ்காட்டிஷ் பெயர்களில் முன்னால் ஒட்டப்படுகின்றன அல்லது இணைக்கப்படுகின்றன இப்போது தமிழ்ப் பெயரை ஒப்பிடுங்கள்
அண்டர் மகன் குறு வழுதி
மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார்
பேய் மகள் இள வெயினி
இது ரிக் வேத முறையாகும்.
‘மானா’ வின் மகன் அகஸ்தியன் என்று மந்திரங்களில் வரும் .
குசிக விச்வாமித்ரன் இக்ஷிதரன் மகன் (3-33) என்று காண்கிறோம்.
தமிழ் முறையில் ‘மகன்’ என்பது தனியே வரும்.
இன்னொரு முறையும் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. தசரதன் மகன் தாசரதி , ஜனகன் மகள் ஜானகி, பாண்டு புதல்வன் பாண்டவன் என்றும் வரும். அந்த அமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.
ஆனால் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்தும் மற்றுமுள்ள ஒற்றுமை மகன் என்பதை பிரித்துச் சொல்வதாகும்.
XXX
மநு மர்மம்
தமிழில் மநு நீந்திச் சோழன் கதையை எல்லோரும் அறிவர். இந்த மநு பற்றியும் புராணத்தில் வரும் பிரளய கால மநு பற்றியும் பலரும் அறிவோம். ரிக் வேதத்தில் மனு பற்றி பல மண்டலங்களில் வருகிறது. இவர் எந்த மநு ? எத்தனையாவது மனு? இவருக்கும் நீதி நூலுக்கும் சம்பந்தம் உண்டா? இவருக்கும் பிரளயா காலத்தில் உயிரிங்களைக் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றிய மநுவுக்கும் தொடர்பு உண்டா? அல்லது தற்கால மன்வந்தரத்தின் அதிபதி வைவஸ்வத மனுவா என்றெல்லாம் தெரியவில்லை. யாரும் இது பற்றி பிரஸ்தாபிப்பதும் இல்லை.
எந்தத் துறை எடுத்தாலும் அதில் ரிக் வேதமே வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியா தவிர மற்ற கலாசாரங்களில் 4 பருவங்கள் தான் உண்டு. ரிக் வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மட்டும் 6 பருவங்கள் இருக்கின்றன. இதை விட நமக்கு வேறு என்ன சான்று தேவை? இமயம் முதல் குமரி வரை ஒரே கலா சாரம் அதுவும் கைபர் கணவாய் வழியாக வந்ததல்ல ; மண்ணின் மைந்தர்கள் தோற்றுவித்ததே அது .
கர்நாடக சங்கீதத்தி ல் கடைசியில் பெயரைச் சொல்லி முத்திரை வைப்பதை திருஞான சம்பந்தர்தான் சொல்லிக் கொடுத்தார் என்று நினைத்தேன். சமப்ந்தருக்குப் பின்னர் ஜெயதேவர் அஷ்டபதியில் அவருடைய பெயர் ஒவ்வொரு பாடலிலும் முத்திரையாக வருகிறது. பின்னர் புரந்தரதாசர், தியாகராஜர் பாடல்களிலும் பாடியோர் பெயர்களைக் காண்கிறோம். இதுவும் ரிக் வேத மந்திரத்தில் துவங்கியதே. பல்லவி அனுபல்லவி, ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அதே வரிகள் ஆகிய எல்லாவற்றையும் ரிக் வேதத்தில் காணும் போது வியப்பு மேலிடுகிறது.
உவமைகளில், நண்பர்கள் பற்றிய உவமைகள் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலாவது இந்த அளவுக்கு இருக்குமா என்பது ஐயப்பாடே. பெற்றோர்கள், மனைவிமார்கள் உவமைகளும் அன்பின் இலக்கணமாக உவமிக்கப்படுகின்றன .
உலகின் மிகப் பழைய கவிதைத் தொகுப்பு, வரலாற்று நூல், வாய் மொழி இலக்கியம் என்ற பெருமையுடன் மேற்கூ றியனவும்சேரும்போது ரிக் வேதத்தின் சிறப்பு அதிகரிக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிறந்த தேதி – ஜனவரி 3, கி.மு.106
இறந்த தேதி – டிசம்பர் 7, கி.மு.43
வாழ்ந்த காலம் – 63 ஆண்டுகள்
சிசரோ (CICERO) ஒரு சக்தி வாய்ந்த பேச்சாளர், எழுத்தாளர், ராஜ தந்திரி ஆவார் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியின் ரோமாபுரியில் கொ டி கட்டிப் பறந்தவர் ;உரைநடையில் வல்லவர். அவர் லத்தீன் மொழி யில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இன்றும் எழுத்து வடிவில் கிடைக்கின்றன. அவருடைய காலத்திலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு லத்தீன் மொழி ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியது இந்த செல்வாக்கிற்குக் காரணம் சிசரோ போன்றோரின் காலத்தால் அழியாத படைப்புகள்தான்.
சிசரோ மத்தியதர குடும்பத்தில் பிறந்தார். பணப் பிரச்சினை இல்லை. ஆகையால் ரோம் நகரில் அருமையான கல்வி வசதி அவருக்குக் கிடைத்தது. வழக்கறிஞராக வாழ்க்கையைத் துவங்கினார். ஆயினும் அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் பெரும்புகழ் தந்தது. 30 வயதிலேயே அவர் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செனட் SENATE என்பது ரோமானிய சாம்ராஜ்ய ஆட்சிக்குழு. அந்த அரசில் பெரும்பதவி ‘கான்சல்’ (CONSUL) எனப்படும். ஒரு அமைச்சரைப் போன்ற பதவி. அதில் அவர்க்கு ஆசை பிறந்தது பிரபுக்கள் குடும்பத்தில் பிறவாத எவர்க்கும் இப்பதவி கிடைப்பது அரிதிலும் அரிது. ஆயினும் அவருடைய பேச்சாற்றல் மூலம் கி.மு.63-ல் செனட் உறுப்பினர் ஆனார்.
அப்போது ரோம் அரசுக்கு எதிரான சதியை சிஸரோ கண்டுபிடித்து அதில் சமபந்தப்பட்டவர்களுக்கு மரண தண் டனை வாங்கித் தந்தார். இதில் தகாத வழிகளை அவர் பின்பற்றியதாக ஜூலியஸ் ஸீஸர் (JULIUS CAESAR ) குற்ற ஞ்சாட்டி அவரை ஒரு ஆண்டுக்கு நாடு கடத்தினார். அதற்குப் பின்னர் ஜூலியஸ் சீஸர் , ரோமாபுரியை ஆளும் சர்வாதிகாரி ஆனார்.
ஓராண்டுக்குப் பின்னர் ரோமுக்குத் திரும்பிவந்த சிசரோ, அரசியலை விட்டு விட்டு இலக்கியத்தில் முழு கவனம் செலுத்தினார். அந்தக் காலத்தில்தான் அவர் தத்துவம், சமுதாயம், பேச்சாற்றலை பற்றிய அரிய படைப்புகளை எழுதினார்.
கிமு.44-ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது பதவிப் போர் வெடித்தது. கான்சல் மார்க் ஆன்டனிக்கும் (MARK ANTON)Y எதிர்கால ஆட்சியாளர் அகஸ்டசுக்கும் (EMPEROR AUGUSTUS) இடையே பெரும் போராட்டம். மார்க் ஆண்டனிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சொற்பொழிவு வாயிலாக சிசரோ உதிர்த்தார். இது பிலிப்பிக்ஸ் PHILIPPICS என்ற நூலாக மலர்ந்தது. இதுவே அவரது உயிரைக் காவு கொண்டது.
மார்க் ஆன்டனியும் அகஸ்டசும் (EMPEROR AUGUSTUS) கைகோர்த்து ஓரணியில் சேர்ந்தனர். ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து சிசரோவை சிரச்சேதம் செய்தனர். அவருடைய உடல் உறுப்புகளை சேதப்படுத்தி பழிதீர்த்துக் கொண்டனர். ஆனால் காலப்போக்கில் அவர் புகழ் உயர்ந்து ஓங்கியது.