Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காயத்ரி தேவியின் அருள் பெற்ற கோபால்தாஸர்!
ச.நாகராஜன்
ஸ்ரீ விஜயதாஸரின் சீடராக இருந்து கோபால்தாஸர் என்று புகழ் பெற்ற ஜோதிடரின் இயற் பெயர் பாகாண்ட். (Bhagannd).
கர்நாடகாவில் ராய்சூர் மாவட்டத்தில் உத்தனூர் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார் பாகாண்ட். அங்கேயே அவர் கி.பி. 1740 முதல் 1780 முடிய வாழ்ந்தார்.
அவருக்கு மூன்று சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவர் தந்தை இறந்து விட்டார். தாயின் வளர்ப்பிலும் வழிகாட்டுதலிலும் அவர் வளர்ந்து வந்தார். அவரது உறவினர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். அதனால் மிகுந்த ஏழ்மை நிலையில் அவர் கஷ்டப்பட்டார்.
என்றாலும் கூட அவரது எட்டாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. காயத்ரி மந்திர உபதேசம் அதன் மூலம் தரப்பட்டது.
தன்னை எல்லோரும் அலட்சியப்படுத்தியதையோ அல்லது வெறுத்ததையோ பற்றி பாகாண்ட் வருத்தப்படவில்லை.
கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தார். நாள் செல்லச் செல்ல ஜபம் அதிகரித்தது; தீவிரமானது.
ஒரு ஆறு வருடங்கள் ஓடின.அவருக்கு தெய்வீக அருள் கிட்டியது. அதன் பயனாக பிரம்மஞானத்தையும் ஜோதிட அறிவையும் பெற்றார்.
அவரது பிரகாசமான முகத்தைக் கண்ட அனைவரும் அவரை மதிக்க ஆரம்பித்தனர்.
அனைவருக்கும் அவர் ஜோதிடத்தைச் சொல்ல ஆரம்பித்தார். யார் ஜோதிடம் கேட்க வந்தாலும் அவரது கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் துல்லியமாகக் கூற ஆரம்பித்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்தது
யார் வந்தாலும் அவரது முந்தைய மூன்று பிறப்புகளைப் பற்றி அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் அவருக்கு என்ன நடக்கும் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.
எல்லோரும் பிரமிப்புடன் அவரை மதித்து காணிக்கையும் செலுத்த ஆரம்பித்தனர். அவரது ஏழ்மையும் அகன்றது. குடும்பத்தின் நிலை சீரானதோடு வளமாகவும் ஆனது.
சில வருடங்கள் கழிந்தன. பிருகு முனிவரின் அவதாரமாகக் கருதப்பட்ட விஜயதாஸர் அப்போது பிரபலமாக இருந்தார். அவரிடம் அடைக்கலம் புகுந்த பாகாண்ட் அவரது சீடரானார். அவரது உபதேசப்படி நடக்கவே, விஷ்ணுவின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.
அவருக்கும் நாளடைவில் சீடர்கள் உருவாயினர். அவர் கோபால்தாஸ் என அனைவராலும் அறியப்பட்டார். அவரது முக்கிய சீடர்களுள் புகழ் பெற்றவரே ஜகந்நாத தாஸர்.
ஸ்தல யாத்திரை செய்ய ஆரம்பித்த கோபால்தாஸர் அனைவருக்கும் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். தேவையானோருக்கு இதர பொருள்களையும் கொடுத்து உதவ ஆரம்பித்தார்.
இறைவன் புகழைச் சொல்லும் ஏராளமான கீதங்களைப் புனைய ஆரம்பித்த அவர் விட்டலைப் போற்றி நிறைய கீதங்களைப் படைத்தார். அவை பெரும் புகழ் பெற்றன. இன்றும் பாடப்படுகின்றன.
காயத்ரி மந்திரத்தால் அரும் பெரும் சக்தி பெற்ற ஒருவராக அவரை உலகம் அறிந்தது.
காயத்ரி மந்திரத்தின் சக்திக்கு ஒரு அளவே இல்லை என்பது உண்மையே.
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேகத்தை கட்டுப் படுத்தாதீர்கள்!!! Kattukutty
நமது உடல் விசித்திரமானது!!! தேவையில்லாத பொருள்களை வெளியேற்ற நவ துவாரங்களையும், வியர்வை சுரப்பிகளையும் வைத்திருக்கிறான் ஆண்டவன்!!! அவற்றின் மூலமாக அசுத்த பொருள்களை வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைக்கிறது இயற்கை!!! அவை என்னன்ன என்று பார்ப்போமா???
பிராண வாயுவான மூச்சை அடக்கினால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும்!!! அடிக்கடி மூச்சை அடக்கினால், தவறான முறையில், பிராணாயாம ம் செய்தால் இருமல்,வயிற்றுப் பொருமல் சுவை தெரியாமலிருத்தல், காய்ச்சல் உண்டாகும்.
கண்ணிலிருந்து வரும் நீரை அடக்க முடியாது!!! அதையும் மீறி அடக்கினால், கண்வலி, கண்மங்கல், களைப்பு, மனதில் கனம் தோன்றும் கவலையினால்……….
அபான வாயு
இயற்கையினால் வெளியேற்றப்படும் இக்காற்றை தடை செய்தால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல்,உடல் முழுவதும் குத்தல் குடைச்சல் பசி மந்தம் உண்டாகும்.
தும்மல்
இதை அடக்கினால் மூச்சு திணறும், மூச்சு மேலுக்கு கிளம்பி தலை முழுவதும் நோகும். முகம் முழுவதும் காற்றினால் உப்பி வலிக்கும்.
இருமல்
மூச்சில் ஒரு கெட்ட மணம், நெஞ்சில் காற்று அடைத்த மாதிரி உணர்வும் உண்டாகும்
பசி/ தாகம்
உங்களுக்கே தெரியும் உடலிலுள்ள எந்த அவயவங்களும் ஒழுங்காக வேலை செய்யாது. பசியை அடக்கி உண்ணாமலிருந்தால்,உடலில் களைப்பு, இளைப்பு முக வாட்டம் மூட்டுக்களில் வலி……….தலை சுற்றல், காது கேளாமை…….. எல்லாம் உண்டாகும் …….உடலுக்கு ஆதாரமே உணவுதான்!!! தாகத்தை அடக்கினால், களைப்பு,முகம், நாக்கு உலர்தல்,மயக்கம், காது கேளாமை…….பேச்சு வராமலிருத்தல் எல்லாம் உண்டாகும்.
தூக்கம்
இயற்கை நமக்கு அளித்த பரிசு!!!! அதை அலட்சியப்படுத்தி தூக்கத்தை அடக்கினால், தலை கனத்தல்,களைப்பு, கண்சிவத்தல், கண்ணீர் வருதல்,பேச்சு திணறுதல்……அதிகமானால் மயங்கி கீழே விழுதல்……….
இளைப்பு என்னும் வேகத்தை அடக்கினால் உடல் சோர்தல், பெப்டிக் அல்ஸர், உடலில் மிகுந்த வெப்பம் உண்டாகுதல் திடீரென்று மூர்சையடைதல், நீர் வேட்கை எல்லாம் உண்டாகும்.
சிறு நீர்/ வியர்வை
இதை அடக்கினால் உடலின் வேகம் குறைதல்,நீ ர் போகும்பு ழையில புண்,வயிற்றில் பாரம், குறியில் ஒரு எரிச்சல் உண்டாகும். வியர்வையை அவ்வப்போது துடைக்காவிட்டால் வியர்க்குரு, உடலில் ஒரு துர் நாற்றம் உண்டாகும். ஏ.சி ரூமில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி சிறு நீர்கழிக்க வேண்டி வரும். அடக்கக் கூடாது.
மலம்
மலத்தையும், சிறு நீரையும் அடக்கினால் முழங்கால் மூட்டு வலி, வயற்றில் கனம், எந்தக் காரியத்திலும் கவனமின்மை, முக்கியமாக தலை வலி, உடல் பலம் குறைதலும் உண்டாகும்.
கொட்டாவி
முகம் கோணல், உணவு செரிமானம் ஆகாமை, நீர்நோய்கள், அறிவு மங்குதல், களைப்பு, வயிறு சம்பந்தமான நோய்களும் உண்டாகும்.
கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த 14 வித வேகங்களைத் தடுத்தால் உண்டாகும் விபரீதங்கள் நம் வழக்கமான வாழ்வைத் தடுத்து அடிக்கடி வைத்திய செலவுகளை அதிகரிக்கும்.
பிரம்மாவின் புத்திரர் குசர் என்பவர். அவர் தவ மஹிமை உடைய பெரிய ரிஷி. அவருக்கு வைதர்ப்பி என்பவளிடத்தில் குசாம்பர், குசநாபர், அதூர்த்தரஜஸ், வசு ஆகிய நான்கு புத்திரர்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் பற்பல நகரங்களை ஸ்தாபித்து அரசாண்டு வந்தனர். இவர்களில் குசநாபருக்கு ஒப்பற்ற அழகுடைய நூறு புத்திரிகள் பிறந்தனர். அவர்கள் இளமைப் பருவம், அழகு ஆகியவற்றுடன் மாரிக்காலத்து மின்னல் போல பிரகாசித்துக் கொண்டும், உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டும் தங்களுடைய சிங்காரத் தோட்டத்திற்கு வந்து ஆடியும் பாடியும் உல்லாசமாக நடனம் செய்து கொண்டும், வீணை முதலிய வாத்தியங்களை வாசித்துக் கொண்டும் இன்பமாகக் காலம் கழித்து வந்தனர். குற்றமற்ற சிறந்த அங்கங்கள், நல்ல குணங்கள், மங்கைப் பருவம், கம்பீரம் ஆகியவற்றுடன் அவர்கள் மேகங்களின் மத்தியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைப் போல அந்தத் தோட்டத்தின் மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வாயு பகவான் அவர்களைக் கண்டு மோகம் கொண்டான்.
அவர்களை அணுகி அவர்களை நோக்கி, “ஓ, பெண்களே, நான் உங்களை நாடி வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு மனைவி ஆகுங்கள். இந்த மனித ரூபத்தை விட்டு விட்டு தேவ சரீரத்தைப் பெறலாம். நெடுங்காலம் வாழலாம். இளமை நீர்க்குமிழி போல் நிலையில்லாதது. அதிலும் மனிதர்களுக்கோ அது இன்னும் குறைவு. நீங்கள் அழியாத இளமைப் பருவம் பெற்று இறவாத தெய்வத் தன்மையை அடையலாம்” என்றான்.
இதைக் கேட்ட அந்த பருவ மங்கையர் நகைத்தனர்.
அவர்கள் வாயு பகவானை நோக்கி, “ நீரோ எல்லோருடைய சரீரங்களிலும் அலைகிறவர். ஓ, வாயு பகவானே! உம்முடைய சக்தி பற்றி நாங்கள் நன்கு அறிவோம். நீர் ஏன் எங்களை அவமானம் செய்கின்றீர்? நாங்கள் குசநாபருடைய குமாரத்திகள். நீர் தேவனாக இருந்தாலும் நாங்கள் உம்முடைய பதவியை இழக்கும்படி செய்வோம். ஆனால் எங்கள் தவப்பயன் வீணாகாமல் இருக்கும் பொருட்டு நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மூட புத்தி உடையவரே! சத்தியவானான எங்கள் தந்தையை மதிக்காமல் நாங்களே சுயமாக ஒரு புருஷனை எக்காலத்திலும் தேடிக் கொள்ள மாட்டோம். எங்கள் தகப்பனாரே எங்களுக்கு நாதன். அவரே எங்களுக்கு மூல தெய்வம். அவர் பார்த்து யாருக்கு எங்களைக் கொடுக்கின்றாரோ அவரே எங்களுக்குரிய கணவன் ஆவார்” என்றனர்.
இதைக் கேட்டு வாயு பகவான் மிகுந்த கோபம் கொண்டார்.
அவர்களுடைய உடல்களில் பிரவேசித்து அவர்களுடைய அங்கங்களை ஒடித்தார். வாயுதேவனால் அவர்களது அங்கங்கள் ஒடிக்கப்பட்டதால் அவர்கள் அழுது கண்ணீர் விட்டனர். வெட்கம் அடைந்தனர். நேராக தன் தந்தையாரான அரசனிடம் சென்றனர். மிகுந்த பேரழகிகளான தனது பெண்கள் இப்படி அங்கம் ஒடிந்த நிலையில் வரக் கண்ட அவன் பதறிப் போனான். அவர்களை நோக்கி, : ஓ! பெண்களே! என்ன இது? இவ்வாறு தர்ம விரோதமாய் நடந்தது யார்? இந்தக் கோணலான உருவம் உங்களுக்கு எப்படி யாரால் நேர்ந்தது? நீங்கள் ஏன் துக்கத்துடன் இருக்கிறீர்கள்? ஏன் பதில் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்றான்.
அவனது பெண்கள் அவனது காலில் விழுந்து வணங்கி நடந்ததைக் கூறினர்.
அதைக் கேட்ட அரசன், “ஓ, பெண்களே! சாந்தமுடையவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பொறுமையை நீங்கள் வாயு பகவானிடத்தில் அனுஷ்டித்திருக்கிறீர்கள். இது நமது வம்சத்திற்கு பெருமை தருவதாகும். மனிதர்கள், பெண்மணிகள் ஆகியோருக்கு பொறுமையே சிறந்த ஆபரணம். உங்களைப் போலவே என் வமிசத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் இப்படி பொறுமை உடையவராக இருக்கக் கடவது. பொறுமையே தர்மம். பொறுமையே சத்யம். பொறுமையே யாகம். பொறுமையே கீர்த்தி. பொறுமையினால் தான் உலகமே நிலை பெற்றிருக்கிறது” என்று சொல்லி விட்டு தன் குமாரத்திகளை நல்ல குலத்தில் பிறந்த ஒருவனுக்கு மணம் முடிப்பது பற்றி தனது மந்திரிமார்களுடன் ஆலோசிக்க ஆரம்பித்தான்.
இந்தச் சமயத்தில் மிகுந்த தேஜஸுடன் சூளி என்ற மஹரிஷி
இந்திரியங்களை முற்றிலும் அடக்கியவராய் பிரம்மத்தைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது ஊர்மிளை என்பவளது புத்திரியான சேரமதை என்ற ஒரு கந்தர்வப் பெண் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள். பக்தி சிரத்தையுடன் தனது பணிவிடையைப் பல காலம் அவள் செய்து வந்தாள். அதனால் அந்த முனிவருக்கு அவளிடத்தில் மிகுந்த திருப்தி உண்டாயிற்று. அவர், அவளை நோக்கி, “உன்னிடத்தில் நான் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறேன். உனக்கு என்னால் செய்ய வேண்டியது ஏதாவது இருக்குமாகில் அதை உடனே சொல்” என்றார்.
அதைக் கேட்ட சேரமதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவரை நோக்கி, “ நீங்கள் பிரம்மாவைப் போன்றவர். பிரம்ம தேஜஸ் கொண்டவராக விளங்குகிறீர்கள். மிகுந்த தவ சக்தி உடைய ஒரு உத்தம புத்திரனை எனக்கு அருள வேண்டும். நான் இதுவரை ஒருவருக்கும் மனைவியாகவில்லை” என்றாள்.
அப்படியே அந்த முனிவரும் பிரமதத்தன் என்ற பெயருடைய ஒரு புத்திரனை அவளுக்கு அளித்தார்.
அந்த பிரமதத்தன் க்ஷத்திரிய வமிசத்தினவளானான சேரமதைக்கு பிறந்த காரணத்தால் அரசனாகி தேவேந்திரன் தேவ லோகத்தை ஆள்வது போல காம்பிலி என்ற பெயரை உடைய வனம் பொருந்திய ஒரு நகரத்தை உருவாக்கி அதை மிகுந்த சிறப்புடன் அரசு புரிந்து வந்தான்.
குசநாபன் பிரமதத்தனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனுக்கு தனது நூறு குமாரத்திகளையும் விவாகம் செய்து கொடுக்க முன் வந்தான்.
பிரமதத்தன் அந்த மங்கையரை ஒவ்வொருவராகப் பாணிக்ரஹணம் செய்து கொண்டான்.
அவனால் தொடப்பட்டவுடனேயே அந்த மங்கையர் ஒவ்வொருவரும் தமது கோணல் உருவம் நீங்கி சுய உருவத்தை அடைந்து முன்னிலும் பொலிவு பெற்று விளங்கினர். வாயு பகவானின் தீய செயலிலிருந்து விடுபட்டு அவர்கள் சுகமாக இருப்பதைக் கண்ட குசநாபன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.
சேரமதை என்ற கந்தர்வ பெண்ணும் தனது மகனையும் நூறு மருமகள்களையும் கட்டித் தழுவிக் கொண்டு அளவிட முடியாத மகிழ்ச்சியை அடைந்தாள்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -19
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
Xxxx
3-1-35
Kasa – cough
காச = இருமல்
காச நோய் (TB)
Kaasa noy is used in Tamil
Xxx
3-1-51
Uuna – less
‘ஊன’ என்றால் ஒன்று குறைவு.
உடல் ஊனம் – ஒரு அங்கம் குறைவு அன் , யுன் , யுனி என்றால் ஒன்று என்றும் பொருள்.
லத்தின் மொழி யிலும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளிலும் இதை வேறு வேறு விதமாக உச்சரிப்பர்
தமிழில் ஒன்பது, தொண்ணூறு , தொள்ளாயிரம் என்பதெல்லாம் வினோத எண்கள்.
வெளிநாட்டுக்காரர்கள் தமிழ் கற்கும் பொழுது திணறிப்போகிறார்கள்
எழுபது 70, எண்பது 80, தொன்பது 90 தானே சரி. ஏன் தொண்ணூறு என்று சொல்கிறீர்கள்? என்பர் ஒன், தொன் என்பதெல்லாம் ஒரு ‘டிஜிட்’ குறைவு என்று பொருள்படும் ; இதே கதைதான் தொள்ளாயிரத்துக்கும் . இது ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்த ‘ஊன’ என்பதன் தாக்கம் என்பர் அறிஞர் பெருமக்கள்
In Tamil we see strange construction of numbers – when one says arupathu 60 elupathu 70 enpathu 80 , onpathu should be 90. But strangely onpathu is just 9.
One of the explanations for this strange construction is uuna = less one
10-1= 9
Sanskrit word ‘Uuna’ is used with utaluunam= handicapped.
In Tamil , all 9, 90, 900 numbers are following the same principle. Foreigners who learn Tamil are easily misled by this.
Thonnuuru may be confused with 900
After elunuru and ennuru they will say 90.
Une, uni, un is ‘one’ in Latin, French etc.
Xxx
Dwan = sound
த்வனி – சப்தம், தொனி
D = s ; it becomes sonus in latin
த = ச
Noise is another word that comes from dwan= sonus= noise
Xxx
3-1-58
Sthamba – stop
ஸ் தம்ப – நில்; ஸ்தம்பித்துப்போனான்
Sthampiththu nindraan in tam
த்வஜஸ்தம்ப
Dwajas sthamba
Bus stand, bus stop
பஸ் ஸ்டாண்ட் , பஸ் ஸ்டாப்
Xxx
3-1-61
Deep = deepa/ lamp/ give light தீபம்
Jan – born- generate ஜன = பிற
Puur = pour, fill in பூர் = கொட்டு
Xxx
3-1-62
Kaashta – kattai / wood/ stick
காஷ்ட= கட்டை
Swayameva – self
ஸ்வயம்மே வ = செல்ப்
Xxx
3-1-65
Anuthapa- அனுதாப = வருந்துதல்
Varunthuthal
இப்போது கொஞ்சம் அர்த்தம் மாறிவிட்டது
Xxx
3-1-70
Praas – give light; shed light
Prass= plassa = flash
பிராஸ், பிளாஷ்
Xxx
3-1-85
Anda – egg
அண்ட = முட்டை.; இந்த பூமி , பிரபஞ்சம் என்பதெல்லாம் வட்ட வடிவமானது என்பது தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது. கோலம் என்பதிலிருந்து குளோப் GLOBE வந்தது.
ஆழி என்றால் கடல், சக்கரம் என்றும் பொருள் . பூமியின் வடிவம், கடலின் வடிவம் எல்லாம் தமிழ்ப் பாடல்களில் தெளிவாக உள்ளது
Anda is used for universe , galaxies
This shows hindus new that every space object from earth to galaxy, everything is egg shaped/ round
Xxx
3-1-87
Kaashtam binaththi
காஷ்டம் பின்னதி
கட்டையை பின்னம் ஆக்குகிறான்
பின்னம் = வாக்கு, பிள
Kattaiyai pilakkiraan
Bina – pila
Bidhyate – bits
B = v
Bid – vettu/cut
பித்யதே – பிட் பிட் ஆக பிளக்கிறான்
ப= வ
பிட்= வெட்டு
Xxx
ஸ்தாலி – பானை
Sthaali = pot = thaazi
முதுமக்கள் தாழி – அரசர்களைப் புதைக்கும் பானை
Muthumakkal thaazi
Xxx
3-1-88
Tapas – thavam
Found in kura etc
P = v
தபஸ்= தவம்
திருவள்ளுவர் காலத்திலேயே ப = வ ஆகிவிட்டது
குறளில் தவம் வருகிறது
Even 2000 years ago p in skt changed into v in tamil
Xxx
3-1-96
Vasa – live வாச = வசி / வாழ்
Vasi , vasikkiraan – used in T amil
Xxxx
3-1-97
Han – to be killed; killable
ஹன் வத்யம் கா த்யம் = கொல்
Hunt ஹன்டர் = வேட்டைக்காரன்
Vadyam – killableவாத்யம்= வேட்டை /கொல்
Vettai= hunt
Xxx
3-1-100
Aachaarya – teacher
ஆசார்ய என்பது ஆங்கிலத்தில் டிச்சார்ய= டீ ச்சர் ஆனது.
இன்னும் ஒரு பொருள் பார்க்கவேண்டிய தேசம்
Another meaning is visitable
Aachaarya desah = country that can be visited
Desa is used all over India
தேச என்பதை இன்றும் பயன்படுத்துகிறோம்
Xxx
3-1-101
Panya – buyable, saleable
பண்ய – விலைக்கு வாங்க/ விற்க வேண்டிய பொருள்
Panya – panam/ money ; p=v
Pani = vanik
பணம் = மணிMONEY /ஆங்கிலம் P = M
Paanyam – praisable; paanar in Tamil are bards who praise everyone for money