INDEX 27 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post.8745)

RARE PICTURES FROM SIVA PURANA

WHEN I AM UPLOADING THIS, THE NUMBERS ARE GOING BERSERK. IF YOU DONT SEE NUMBERS IN DESCENDING ORDER, PLEASE CHECK WITH MY OTHER BLOG

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8745

Date uploaded in London – –27 SEPTEMBER 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8700 PLUS POSTS.

FEBRUARY 2015 INDEX

1682 – S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY , FEBRUARY 28, 2015

1681.கைக்கு அழகு புத்தகம்! புஸ்தகம் ஹஸ்த லட்சணம் ! 28/2

1680.Pushthakam Hastha Lakshanam, 27/2

1679.பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!27/2

1678.Strange Belief about Crows in India and Britain!!,26/2

  1. – S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  2. 31 Quotes on Worldly Wisdom, 25/2 1675.ஆரோக்கியம் தொடர்பான 31 நல்ல பழமொழிகள்!25/2
  3. – S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,

1673.Rain Bows: Ancient Beliefs!!24/2

1672.பில்லியன் டாலர் பிறந்த நாள் விழா: இந்துக்கள் கண்டுபிடிப்பு!24/2

  1. – S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  1. 255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part-2;23/2
  2. புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!23/ 2
  3. Billion Dollar Big Birth Day Parties: Hindus Taught the World!22/2
  4. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  5. கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்? 21/2
  6. 255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part-1; 21/2
    1664.மன்னிக்க வேண்டுகிறேன்! மரங்களே!21/21663. Who did Krishna Worship?20/2
  7. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  8. Beware of Wagtail Birds: Prediction by Varahamihira!19/2
  9. பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி!19/2
  10. Hindus’ Respect for Trees and Forests 18/2
  1. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  2. Lord Shiva and Panini, the Greatest Grammarian!17/2
  3. பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?17/2
  4. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  5. How to find Water in the Desert?16/2 1653.சிந்து சமவெளியில் மக் டொனால்ட்! 16/2
  6. Mac Donald and O’Shaughnessy in Indus Valley Civilization!!15/2
    1652.தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும் 15/2 (Two 1652 numbered by mistake)
  7. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  8. Gems of Women: Varahamihirar’s Definition; 14/2
  9. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  10. 152 Hindu Kings of Nepal ;13/2 (Dictionary of 10,000 Indian Kings – Part 16) 1647.நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!! 13/2
  11. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  12. Perfume Making in India! 2000 years ago!12/2
  13. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,

1645.ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!12/2

(No.1645 repeated by mistake)

  1. Nagaratna/ Cobra Jewel, Rubies and Emeralds in Brhat Samhita11/2

1642.பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன? 11/2

  1. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  2. 226 Kings from 13 more Dynasties! (Part 15 of 10,000 kings)
  3. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  4. ஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை! 10/2
  5. இந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா! 9/2
  6. Eight Types of Pearls: Varahamihira’s 1500 year Old Price List! 9/2
  7. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  8. Gemmology in Brhat Samhita 8/2
  9. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,

1932.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 2; 8/2

  1. Amazing Encyclopaedia Brhat Samhita!7/2 1930.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1; 7/2
  2. . S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  3. Kings of South India; 6/2
  4. . S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,

1627.சிங்கள மொழி அதிசயங்கள்! 6/2

  1. . S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  2. Jesus Mystery! Did he learn in Hindu Gurukula?5/2
  3. . S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,

1623.திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்; 5/2

  1. Sinhalese Wonder! A Riddle in Indo-Aryan Languages! 4/2
  2. . S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  3. God performs Funeral Rites: Strange Custom in Tiruvannamalai; 3/2
  4. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  5. Pandya Kings: Second List; 2/3
  6. S NAGARAJAN ARTICLE; ALREADY LISTED SEPARATELY ,
  7. Emegir, Emesal of Sumer: Sanskrit, Prakrit of India! First February, 2015
  8. எமெகிர், எமெசால்: சுமேரிய சம்ஸ்கிருதமும், சுமேரிய பிராக்ருதமும்; !1/2/2015

To be continued…………………………………

tags –  INDEX 27 ,  LONDON SWAMINATHAN, February 2015

கோவில் பற்றிய 6 பழமொழிகள் என்ன? (Post.8744)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8744

Date uploaded in London – –27 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோவில் பற்றிய 6 பழமொழிகள் என்ன? கட்டத்தில் கண்டுபிடி!

1.கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான் ?

2.கோவிலை அடைத்துக் கொள்ளையிடுகிறவனா குருக்களுக்குத் தட்சிணை  கொடுப்பான் ?

3.கோவில் சோற்றுக்கு குமட்டின தேவடியாள்  காடிச் சோற்றுக்கு கரணம் போடுகிறாள்

4.கோவில் விளங்கக்  குடி விளங்கும்

5.கோவில் ம ணியம் என்ற பெயர் இருந்தால் போதும்     

6.கோவில் பூனைக்குப் பயம் ஏன்?

tags–கோவில்

–subham–

தெய்வீகத் தாமரை!!!- Part 1

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8743

Date uploaded in London – –27 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தெய்வீகத் தாமரை!!!

நமது பாரதத்தில் எல்லா கடவுளோடும் சம்பந்தப் படுத்தப் பட்ட

ஒரு பொருள் உண்டென்றால் அது தாமரையாகத்தான் இருக்கும்.தூய்மையின்

அடையாளமாக க கருதப்படும் இந்த

“சேற்றில் விளைந்த செந்தாமரைதான்”, நமது நாட்டின் தேசீய

மலராகும். நமது நாட்டிற்கு மட்டுமல்ல வியடநாம் நாட்டிற்கும்

இதுவே தேசீய மலர்!!!

பகவான் கிருஷ்ணன் பகவத்கீதையில் சொல்ல மறந்தது

மலர்களிலிலே நான் தாமரை” ஏன் தெரியுமா???

அவரே “தாமரைக்கண்ணனாக”உதித்ததினால்தான்!!!

தாமரையின் பிறப்பிடம்

ஆதி காலத்தில் ஆதிசேஷன் மீது ஆனந்த சயனத்திலிருந்த

மஹா விஷ்ணுவின் வயிற்றில் தோன்றியதே இந்த தாமரை மலர்!!!

மஹாவிஷ்ணு மட்டுமல்லாமல் மஹா லட்சுமியும் தனது இருப்பிடமாக

கொண்டு விட்டாள்!!!எல்லா தெய்வங்களுக்கும் இருப்பிடமாகி

விட்டது தாமரைப்பூ!!! ஒன்று ஆசனமாக, நிற்கும் உபகரணமாக

அல்லது கையில் பூவாகவோ, மொட்டாகவோ……..

கவுதம புத்தராகட்டும், வர்த்தமான மகா வீர்ராகட்டும் தாமரைப்பூவே

ஆசனமாயிற்று!!! கல்விக் கடவுளாகிய ஸரஸ்வதியோ தனக்கென

ஒரு வெள்ளை கலரை செலக்ட் செய்து கொண்டு விட்டாள்!!!வெள்ளைத் தாமரைப்பூவிலிருப்பாள், வீணை செய்யும்

ஒலியிருப்பாள்!!

எகிப்து கோவில்களில் தாமரைப்பூ முக்கிய இடம் வகிக்கிறது

சைனா,ஜப்பான், மலேஷியா,போன்ற தென் கிழக்கு ஆசிய

நாடுகளில் உள்ள எல்லா கோவில்களிலும், கடவுளர்களிடமும்

கட்டங்களிலும் தாமரைப் பூவிற்கே முதலிடம்……மற்ற வெளிநாடுகளில் அழகிற்காக காகிதம், மெட்டி,தெர்மாகோலில்

செய்து அலமாரிகளில் வைத்துக் கொள்கிறார்கள்.

இப்பூவுலகில் தாமரை

தாமரையின் பிறப்பிடமே சேரும் சகதியும்தான்…….

ஆகையினால்தான் ஏழையாகப் பிறந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு

வந்தவரை “சேற்றில் விளைந்த செந்தாமரை” எனகிறோம்.

குளம், குட்டை தேங்கிய கலங்கிய தண்ணீரில் இரட்டை விதை

கொண்ட நீர்வாழ் தாவரமாக வளர்கிறது தாமரை……எக்காலமும்

ஓடும் நீரில் இது விளையாது.

இதன் அமைப்பு

மிக மிக அழகான வண்ணமான இளம் ரோஸ் கலரும் வெண்மையும்

கலந்த கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கும் இந்த செந்தாமரை சூரியன்

வரும்போது மலரும். சூரியன் மறையும்போது குவியும்.மலர்ந்த

செந்தாமரை சுமார் 6 அங்குல அகலத்திற்கு அழகாக நிறைய இதழ்களுடன் காட்சி அளிக்கும். இந்த பூவிற்குப் பெயர் சதபத்ரி.

“சதபத்ரி” என்றால் 100 இதழ்கள் கொண்டது என்று அர்த்தம்.

சேற்றிலிருந்து கிழங்கு, கிழங்கிலிருந்து தண்டு .இந்த தண்டு

முளைத்து பெரிய இலைகள் இரண்டு உருவாகும்.இலையின்

அடிப்பாகத்திலுள்ள காம்பிலிருந்து உருவாகிறது பூ!!!!தனக்குத்

தேவையான தண்ணீர் தவிர ஒருசொட்டு கூட அதிகமாக

எடுக்காது!!!பூவிலும், இலையிலும் பட்ட தண்ணீரும் முத்துப்போல்

வழிந்தோடிவிடும்!!!

பழமொழி – “தாமரைக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே சண்டை

வந்ததில்லை”

இதன் அறிவியல் பெயர்

“நெலம்போ நூசி fபேரா” – NELUMBO NUOCI FERRA

இது “மக்னோலியாப்சிடா” பிரிவைச் சேர்ந்தது.

தாமரையின் மற்ற பெயர்கள்

அரவிந்தம்,பங்கேருகம், கோகனகம், முளரி, புண்டரீகம், வனசம்,

அம்போருகம், கமலம், இண்டை, சத பத்ரி, வாரிஜம், ஜலஜம்,

அம்புஜம், சரோஜம்,நளினம்,கமலம், அரும்பு, செங்கமலம்,

ராஜீவி.

கவனிக்க-நமது பெண்களுக்கு இருக்கும் அதிகமானவை

தாமரையின் மறு பெயர்கள்தாம்!!.

நன்றி- திரு. சந்தானம் சுவாமி நாதன் எழுதிய

“தாமரையின்வேறு பெயர்கள் “என்ற tamilandvedas

இதழுலிருந்து நம்பர்- 5 6 4 0, தேதி 8 நவம்பர் 2018

எடுக்கப்பட்டது

ஆகாயத் தாமரை

இப்படி ஒரு கொடியினம் தண்ணீரின் மிக வேகமாகப் படர்ந்து

சேத த்தை விளைவிக்கிறது. சில மருத்துவ குணம் இருந்தாலும்

தீமைகள் அதிகமாக இருப்தினால் இதை வளர விடாமல்

தடுப்பது நமது கடமை.

பொற்றாமரைக் குளம்

மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுள்ள குளத்தின் பெயர்

பொற்றமரைக் குளமாகும் .முன்னொரு காலத்தில் இந்த இடம்

கடம்ப வனமாகவும்,நடுவே சுயம்பு லிங்கமாக இருந்த சிவ

பெருமானுக்கு இந்திரன் இந்த குளத்திலிருந்த பொன்னாலாகிய

தாமரைகளால் அர்ச்சனை செய்ததாக வழக்கு.

இன்று அந்த ஞாபகார்த்தமாக 3 “அடி “அகலமுள்ள அழகிய “பொன்னாலாகிய தாமரை”

அந்த குளத்தில் மிதப்பதைக் காணலாம்.

தாமரையும் தெய்வீகமும்

அறிவிற்சிறந்த சான்றோர்கள் பவுர்ணமி, மற்றும் நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் செந்தாமரை இதழ்கள் கொண்டு தேவிக்கு அர்சசனை செய்கிறார்கள்.

செந்தாமரை மலர்களையே வரிசையாக கோர்த்து மாலையிட்டு

வேண்டிக் கொள்வதும் உண்டு.

தாமரை மணி மாலைகள் ஜபம் செய்வதற்கும் கழுத்தில் அணிவதற்கும் உடலுக்கும், உள்ளத்திற்கும், சிறந்ததாகும்.

To be continued…………………………………………..

tags– தாமரை, தெய்வீகம்

பழம் நீ அப்பா! (Post No.8742)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8742

Date uploaded in London – – 27 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பழம் நீ அப்பா!

ச.நாகராஜன்

பழநி என்ற பெயர் ஏன் வந்தது? அனைவருக்கும் தெரிந்த புராணக் கதை தான்!

முன்னொரு காலத்தில் பிரமதேவன் முன்னால் நாரத முனிவர் வீணையை வாசித்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நான்முகன் ஒரு மாங்கனியை நாரதருக்குத் தந்தார். மாங்கனியைப் பெற்றுக் கொண்ட நாரதர் நேராக திருக்கைலாயத்திற்குச் சென்று அந்த மாங்கனியை சிவபிரான் முன்னர் வைத்து வணங்கினார்.

சிவபிரான் அருகிலே விநாயகரும், முருகனும் இருந்தனர். யாருக்கு கனியைக் கொடுப்பது?

சிவபிரான் இருவரையும் நோக்கிக் கூறினார்: “உங்களில் யார் ஒருவர் இந்த உலகைச் சுற்றி முதலில் வந்து என்னிடம் கனியைக் கேட்பீர்களோ அவருக்கு இதைத் தருவேன்.”

முருகன் தன் மயில் வாகனத்தில் அமர்ந்து உலகைச் சுற்ற வேகமாகப் புறப்பட்டார்.

விநாயகரோ அம்மையையும் அப்பனையும் ஒரு வலம் வந்து கனியைக் கேட்டார்.

சிவபிரான் அவரைப் பார்க்க, “அனைத்து அண்டமும் சுற்றி வந்து விட்டேன் -உங்களைச் சுற்றியதால்!” என்றார்.

அந்த பதிலில் பொதிந்து கிடந்த உண்மையை உணர்ந்த சிவபிரான் மாங்கனியை விநாயகருக்கு வழங்கினார்.

பின்னால் வந்த முருகக் கடவுள் நடந்ததை அறிந்தார். மனச் சோர்வுற்றார்.

கோபத்துடன் நேராக திரு ஆவினன் குடி வந்தடைந்தார்.

உமாதேவியுடன் சிவபிரான் முருகனிடம் வந்தார். அவரை எடுத்து அணைத்துக் கொண்டார். “பழம் நீ”யே” என்றார் சிவபிரான.

உடனே முருகனின்  கோபம் நீங்கியது.

இதனால் திரு ஆவினன் குடி தலமானது பழநி என்ற பெயரைப் பெற்றது.

வையாபுரி நாட்டில் உள்ள இந்தத் தலம் ‘பொதினி’ என்ற பெயராலும் வழங்கப்பட்டு வந்தது.

இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பழநி இருப்பது கொங்கு மண்டலத்தில் தான் என கொங்கு மண்டல சதகம் 22ஆம் பாடலில் கூறுகிறது.

பாடல் இதோ:-

தீத்திகழ் மேனி  சிவன்கையி லோர்கனி தேவர்மெச்சி

ஏத்திய நாரதர் நல்கக் கண் டேயிப மாமுகத்து

மூத்தவன் கொள்ள விளையோனை யீசன் முகந்திருத்தி

வாய்த்த பழநியென் றோதின துங்கொங்கு மண்டலமே

பொருள் : நாரத முனிவர், சிவ பெருமான் திருவடியில் ஒரு மாம்பழத்தை வைத்து வணங்கினார். அதனை விநாயகக் கடவுள் பெற்றுக் கொண்டனர். கோபம் கொண்ட குமரக் கடவுளை சிவபிரான் சமாதானப்படுத்தி ‘பழம் நீ’ என்று சொல்லி அருளியதும் கொங்கு மண்டலத்திலேயாம்.

இந்த வரலாற்றை பழனித்தல புராணம் இப்படி விவரிக்கிறது:

ஈசனுருகி மடியினில் வைத்தென்று மிளையோயறிவுடைமை

தேசு தருநம் வாணுதற்கண் மணி நீ சிறுவனோபெரியை

வாச நறுமென் கனியுமொரு கனியோ மதுரமொழிவாயாற்

பேசவரிய மறை ஞானப் பிள்ளை பழநியெனப் புகன்றார்         

  • பழனித்தல புராணம்
  •  

சிவ பிரானின் ஆனந்தத் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று!

tags– பழம் நீ அப்பா, பழனி

***

தமிழ் சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கண அகராதி – 8 (Post 8741)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8741

Date uploaded in London – –26 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாணினி ஜீனியஸ் GENIUS

நீங்கள் ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியர் எனறு கற்பனை செய்துகொள்ளுங்கள் . வகுப்பில் 40 மாணவ மாணவியர். ஒவ்வொருவருக்கும் 1 முதல் 40 வரை நம்பர் கொடுத்துவிட்டீர்கள் . சாப்பாட்டு நேரம் வந்தது. ஆனால் சாப்பிடும் அறையில் 20 பேருக்குத்தான் மேஜை நாற்காலி இருக்கிறது. உடனே 1 முதல் 20 வரை சாப்பிடப் போங்கள் என்பீர்கள். 20 மாணவ மாணவ மாணவியரின் பெயரைச் சொல்லமாட்டீர்கள் . பின்னர் 21 முதல் 40 வரை சாப்பிடப் போங்கள் என்பீர்கள். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு விழா வந்தால் எல்லா வகுப்புகளையும் 4 அல்லது 5 வர்ணங்களின் அணிகளாகப் பெயர் சூட்டுவீர்கள் . நாளை சிவப்பு அணியும் மஞ்சள்  அணியும் கூடைப்பந்தும், நீல அணியும் வெள்ளை அணியும் கால் பந்தும் விளையாடும் என்று போர்டில் எழுதி வைப்பீர்கள். உலக கால்பந்து போட்டிகளில்  அந்தந்த நாட்டு கொடிகளின் வர்ணத்துக்கு ஏற்ப பனியன், சட்டை அணிவதை பார்க்கிறோம். இது போல ஒரு சுருக்க வழியை பாணினிதான் முதலில் உலகிற்குச் சொல்லிக்கொடுத்தார் . மஹா அறிவாளி . மஹா ஜீனியஸ் . ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பதில் வள்ளுவரை எல்லாம் முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார்.

அதுவும் 2700 ஆண்டுகளுக்கு முன்னர்!

இப்போதுள்ள எந்த மொழியிலும் இலக்கணம் என்பதே இல்லாத காலத்தில்!

இதனால்தான் இந்தப் பாணினியை இன்று உலகமே போற்றுகிறது .

பாரதியார் சொன்னார் :–

“நம்பருந்திறலோடொரு (INCREDIBLE, UNBELIVABLE)  பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்” – என்று

ஒரு மனிதனுக்கு இவ்வளவு அறிவு இருக்க முடியுமா என்று வியக்கிறது. ஆயிரம் ஐன்ஸ்டைன்களை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார் அவர் E = mc2.ஈ = எம் ஸி கொயர்ட் என்றார். இவரோ ‘இகோணசி’ என்றார். இதை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை விளக்குவத்தைச் சொல்லுவதற்கு முன்னர் பாணினி இந்த உத்திக்கு இந்த டெக்கினிக்கிற்கு என்ன பெயர் கொடுத்தார் என்று காண்போம்.

பிரத்தியாஹாரங்கள்

பாணினி பிரத்தியாஹாரம் அமைக்கும் விதத்தை ஒரு சூத்திரத்தில் விளக்கியுள்ளார் 1-1-71

ஒரு சூத்திரத்தில் தேவையான எழுத்துக்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து விவரித்துக் கூறாமல் அதற்குள் அடங்கும் எழுத்துக்கள்  எல்லாவற்றையும் சுருக்கமாக  பிரத்தியாஹாரங்கள் மூலம் சுட்டலாம் .இதற்காக சிவ சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பாணினி பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக ‘அச்’ என்ற  பிரத்தியாஹாரத்தைப் பயன்படுத்தினால் எல்லா உயிர் எழுத்துக்கள் என்று அர்த்தம்.

இதைப் போல ‘ஹல் ‘ என்ற  பிரத்தியாஹாரம் எல்லா மெய் எழுத்துக்களையும் குறிக்கும்.

தமிழில் இதைப் பயன் படுத்தினால் உயிர் எழுத்துக்களுக்கு  பிரத்தியாஹாரம் – ‘அஒள’

மெய் எழுத்துக்களுக்குப் பிரத்தியாஹாரம் – க்ன்  அல்லது ‘கன’

இதனால் மீண்டும் மீண்டும் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று சொல்ல வேண்டியதில்லை.

பாணினி இத்தோடு நிறுத்தவில்லை. இது போல 41 பிரத்யாஹார (PERMUTATIONS AND COMBINATIONS)  சூத்திரங்களைப் பயன்படுத்துகிறார்.

பள்ளிக்கூடத்தில் விஞ்ஞான ஆசிரியர் வானவில்லின் 7 நிறங்களை அதே வரிசையில் நினைவிற்கொள்ள ‘விப்ஜியார்’ VIBGYOR என்று சொல்லித் தருவது போல இது.

VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED வயலெட், இந்திகோ , ப்ளூ , க்ரீன் யெல்லோ , ஆரஞ்சு , ரெட் என்பது போல.

சுருங்க உரைப்பதில் , ஒரு அசை (SYLLABLE)  லாபமானாலும் கூட அதைப் புத்திரப்பேறாக எண்ணி மகிழ்வர் என்று பதஞ்சலி முனிவர்  கூறுகிறார்

இகோயணசி

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார் :–

பாணினி , குறியீடுகளையும் தாமாகப் படைத்துக்கொண்ட சொற்களையும் ஆண்டிருக்கிறார் . இவை ALGEBRA பீஜ கணிதக் குறியீடுகள் — அல்ஜீப்ரா —  போல, பணிநிய இலக்கணத்திற்கு உதவின; இவற்றைப் பயன்படுத்தித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மொழி பற்றிய பீஜ கணித — அல்ஜீப்ரா- நூலை இவர் எழுதினார் என்றுதான் நாம் சொல்ல வேண்டும் .

உதாரணமாக , நிலை மொழி ஈற்றில்  இ, உ, ஐ, ஸ   என்ற இவ்வெழுத்துக்கள் குறிலாகவேனும், நெடிலாகவேனும் நின்று வருமொழி முதலில் உயிர் வருமாயின்  நிலை மொழியீறு  ய் , வ் ,ர் , ல் என முறையே திரியும் . இவ்விதியை ‘இகோ யணசி’ என்ற சூத்திரத்தால் பாணினி குறித்துள்ளார். 

இங்கே ‘இக்’ என்பது இ உ ய ஸ  என்பதையும் ‘யண்’ என்பது  ய் , வ் , ர் , ல்  என்பவற்றையும் ‘அச்’ என்பது உயிர் எழுத்துக்களையும் குறிக்கும் இவர் இலக்கணத்தை உணர்ந்து கொள்வதில் ஞாபக சக்தி பெரிதும் வேண்டப்படும்

ஒரு விதியின் பொருளை உணர வேண்டுமாயின், அவ்விதிக்கு முன்னருள்ள அனைத்து விதிகளையும் ஞாபகத்தில் வைத்தலோடு தாது பாடத்தையும் கண பாடத்தையும் மனனம் பண்ணியிருக்கவேண்டும்.

to be continued…………………………

tags –இலக்கண அகராதி – 8, பிரத்தியாஹாரம்,இகோயணசி

சிவன் பற்றிய 6 பழமொழிகள் என்ன ? (Post No.8740)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8740

Date uploaded in London – –26 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவன் பற்றிய 6 பழமொழிகள் என்ன ? கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு

2.சிவன் சொத்து குல நாசம்

3.சிவ பூசை வேளையிலே கரடி புகுந்தது போல

4.சிவலிங்கத்தின் மேல் எலி போல

5.சிவனே என்றிருந்தாலும் தீவினை விடவில்லை

6.படிக்கிறது திருவாசகம் (ராமாயணம்)  இடிக்கிறது சிவன் கோவில்.

TAGS—சிவன், படிக்கிறது, குல நாசம்

—SUBHAM—

குபேரன் கேள்வி-பதில்- QUIZ (Post No.8739)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8739

Date uploaded in London – –26 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.குபேரன் எந்த திக்குக்கு அதிபதி ?


2.குபேரனின் வாகனம் எது


3.குபேரனின செல்வத்திற்குப் பெயர் என்னன்ன ?

4.குபேரனுக்கு அமர  கோசம் நிகண்டுவில் எத்தனை  பெயர்கள் உள்ளன ?

5.அவன் தலைநகர் எது?

6.அவன் தோட்டத்தின் பெயர்?

7.குபேரனின் மகன்கள் யார்?

8.மனைவி பெயர்?

9.குபேரனின் மொத்த நிதிகள் எத்தனை ?

10.குபேரன் முழு செல்வத்தையும் இழந்து சிவனை பூஜை
செய்து மீண்டும்பெற்ற இடம் எது?

******

ANSWERS

 1.வடக்கு, 2. மனிதன், 3.சங்க நிதி, பதும நிதி, 4) 17 பெயர்கள் ,5.கைலாஷ் மலையில் உள்ள அளகாபுரி, 6.சைத்ர ரத,7.நளகூபரன் , மணிக்ரீவன், 8.காவேரி ,9) . ஒன்பது / நவ நிதிகள் அவை– சங்க, பதும, மஹாபத்ம, கச்சப்ப, மகர , முகுந்த, கு ண்ட/நந்த , நீல , கரப; 10. கும்பகோணத்திலிருந்து 18 கிமீ தொலைவிள் உள்ளதிருநள்ளாறு பாதையில் எஸ். புதூர் என்ற திருத் தண்டிகை புரம்.

tags- குபேரன், கேள்வி-பதில், Quiz
—subham—

தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள் (Post.8738)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8738

Date uploaded in London – – 26 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இராமாயண வழிகாட்டி!       

தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள்!

ச.நாகராஜன்

ஹிந்து தர்மத்தில் அனைத்து நல்ல சாஸ்திரங்களுக்கும் ஒரு இடம் உண்டு.

ஜோதிடம், சகுனம், நிமித்தம், கைரேகை, கால் ரேகை, சாமுத்ரிகா லக்ஷணம் என இப்படிப் பல்வேறு சாஸ்திரங்கள் – கலைகள் உண்டு.

அவை அனைத்தும் உண்மையே.

ஆனால் அவற்றை உரிய முறையில் கற்று வல்லவராக ஆனால் மட்டுமே நன்கு பயன்படுத்த முடியும்.

சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டு இருந்த சமயம் தனக்குத் தானே புலம்பித் தவிக்கின்ற இடங்கள் ஏராளம் உண்டு.

இராவணன் தனது தந்திரத்தால் இராமனும் இலக்குவனும் செத்து விட்டதாக சீதையை நம்ப வைக்க முயன்றான்.

இந்திரஜித் போரில் நாகபாசத்தை ஏவி ராமரையும் லக்ஷ்மணரையும் கட்டுவித்தான். செயலற்று அவர்கள் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்தனர். ராமனும் லக்ஷ்மணனும் போரில் இந்திரஜித்தால் கொல்லப்பட்டனர் என்று இலங்கை முழுவதும் தண்டோரா போடச் செய்தான் இராவணன்.

ஹிட்லரின் ஆணையின் பெயரில் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்ட கோயபல்ஸுக்கு முன்னோடியாக ராவணன் இருந்திருக்கிறான்!

பின்னர் அரக்கிகளை ஏவி விட்டு புஷ்பகவிமானத்தில் சீதையையும் திரிஜடையையும் ஏற்றி போர்க்களத்திற்கு அனுப்பினான். அங்கே வீழ்ந்து கிடந்த ராமரையும் லக்ஷ்மணரையும் பார்த்த சீதை லக்ஷ்மணரை நோக்கிப் புலம்பும் போது தன் சாமுத்ரிகா லக்ஷணங்களைக் கூறுகிறாள்; புலம்புகிறாள்.

இப்படிப்பட்ட லக்ஷணங்களைக் கொண்டவளைப் பெரும் பாக்கியசாலி என்று பெரியோர் கூறினரே, அது பொய்யா என்று கூறி அரற்றுகிறாள்.

சீதை கூறும் சில வாக்கியங்களைக் கீழே காணலாம்:-

“குலப் பெண்கள் எவைகளால் அரசர்களாகிய தம் கணவர்களோடு பட்டமஹிஷிப் பதவியில் அபிஷேகம் செய்யப்படுகிறார்களோ அந்த பத்ம ரேகைகள் என் பாதங்களில் இதோ இருக்கின்றனவே!” (வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் 48ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 6)

எனக்கு கூந்தல் மயிர்கள் தடிக்காதவை. ஒத்தவை! கறுத்தவை. புருவங்கள் இரண்டும் ஒன்று சேராமல் இருக்கின்றன. எனது கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் உள்ள பாகங்கள் இரண்டும் தசைப்பற்று உள்ளவையாகவும் உரோமம் இல்லாமலும் இருக்கின்றன. பற்கள் இடைவெளியில்லாமல் இருக்கின்றன. (ஸ்லோகம் 9)

எனது நெற்றியின் இரு புறங்களும், கண்களும், கைகளும், கால்களும், தொடைகளும் சதைப்பற்று உடையவாக இருக்கின்றன. எனது விரல்கள் வட்டமான நகம் உடையனவாயும், மிருதுவானவைகளாகவும், ஒத்தவைகளாகவும் உள்ளன. (ஸ்லோகம் 10)

எனது இந்த மார்பகங்கள் இரண்டும் இடைவெளியின்றி, பருத்து, காம்புகள் உள்ளடங்கப் பெற்றிருக்கின்றன. எனது உந்தியானது ஆழ்ந்தும், வரம்பு தடித்தும் இருக்கிறது. விலாப்பக்கங்களுள்ளிட்ட மார்பின் மேற்புறமும் தசைப்பற்றுள்ளாத இருக்கிறது. (ஸ்லோகம் 11)

எனது நிறம் மாணிக்கத்தைப் போல இருக்கிறது. உரோமங்கள் மிருதுவாக இருக்கின்றன. (பத்து விரல்கள் மற்றும் இரு உள்ளங்கால்கள் ஆக) இந்தப் பன்னிரெண்டும் பூமியில் படியப் பெற்ற உத்தம லக்ஷணம் பொருந்தியவள் என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள் (ஸ்லோகம் 12)

உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும் பூர்ணமான யவரேகைகளை உடையன. இடைவெளியற்றன. செந்நிறம் வாய்ந்தன. பெண்களின் லக்ஷணங்களை அறிந்தவர்கள் என்னைப் பார்த்து எப்போதும் புன்னகை உடையவள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் (ஸ்லோகம் 13)

சீதை மேற்கூறியபடி கூறிப் புலம்புகிறாள்.

இதில் ஒரு உத்தமமான பெண்ணுக்கு இருக்க வேண்டிய நல்ல லக்ஷணங்களை சீதைச் சுட்டிக் காட்டுவதைக் கவனித்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே ஹிந்து தர்மத்தில் சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிய கூரிய அறிவும் நம்பிக்கையும் இருந்திருப்பது புலனாகிறது.

சாமுத்ரிகா லக்ஷணம் என்ற கலை பெரியோர்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.

பின்னால் வரும் சம்பவங்களால் சீதை ராமனுடன் சேர்ந்து அயோத்தியை அடைந்து பட்டமகிஷியான விஷயத்தை நாம் அறிவோம்.

ஜெய் ஸ்ரீ ராம்!

tags– தெய்வீக,  பெண்கள்,  சாமுத்ரிகா லக்ஷணங்கள்

SEMEN POWER- SPERM POWER IN HINDU AND GREEK LITERATURE (Post.8737)

sperm entering female egg.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8737

Date uploaded in London – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are lot of statements about semen and sperm in Tamil and Sanskrit literature . Hindus believed that saving semen would give them strength and good memory power. It is called URDHVA RETAS. Literally sending ‘semen upwards’.

Puranas have many stories of Rishis (seers) shedding semen in cups and leaves and transferring to women. Most of which sounds like Test Tube babies and artificial insemination.

Following is taken from wisdom library:

Urdhva retas

one who lives in perpetual celibacy or abstains from sexual intercourse; यतीनामूर्ध्वरेतसाम् (yatīnāmūrdhvaretasām) Mb.3.233.44. (-m.)

1) Name of Śiva.

2) Bhīṣma (who vowed not to marry)

Ūrdhvaretas is a Sanskrit compound consisting of the terms ūrdhva and retas (रेतस्).

Ūrdhvaretas (ऊर्ध्वरेतस्).—[adjective] chaste (lit. having the semen above).

  1. Ūrdhvaretas (ऊर्ध्वरेतस्):—[=ūrdhva-retas] [from ūrdhva] mfn. keeping the semen above, living in chastity, [Gautama-dharma-śāstra; Mahābhārata; Harivaṃśa; Kathāsaritsāgara] etc.

Xxxx

Sri Ramakrishna and Vivekananda

“If one practises celibacy, a physiological change is produced in the body. A rudimentary nerve known as Medha will develop, the function of which is to transmute the lower energies in to higher. The knowledge of the higher Self is gained after the development of the Medha Nadi”.

Swami Vivekananda added some more interesting details about celibacy:- He says a person who observed celibacy for twelve years obtains tremendous memory power. Swami could remember anything he read, page after page. When someone wanted to test his thought reading power, he told the person even his disciple could do it who was sitting just beside him. The disciple was so scared to hear this, because he did not have that power. But when Swami Vivekananda told his disciple to read the person’s mind, he did it. Swami attributed everything to celibacy. In short, one can develop tremendous powers if one observed celibacy at three levels= Tri Karana Suddhi= word, thought and deed.

Xxxx

Tamil Siddhas on Sex Energy

Gorakkar, one of the 18 great siddhas , advises sick people taking herbal medicine  to have union with women after taking cool milk with palm sugar. He adds ,

The cool milk along with the medicine mentioned earlier will help increase manliness and give joy with women. He talks about ‘lekiyam’ in verses 12 and 13 of karpa cuustiram  (Kalpa sutra)

The commentator explains ,

Lekiyam – medicine brought to the consistency of a paste. This will help manliness and give joy with women without expenditure of semen by emission.  It is like  Tamil Viagra.  In Buddhism ulta- sadhana is referred to as the culture of bodhi -citta , semen virile. In alchemy mercury symbolises semen and alchemist tries to find out ways and means of converting into a hard metal i.e. gold and using it for transubstantiation of body

Ulta- sadhana  (the contrary practice of  sublimating semen)  and alchemy  (a process of hardening semen  )  are the two esoteric and exoteric methods of kaya sadhana – transformation of the body  into an immortal essence. In the previous verses and in this verse

Gorakkar suggests  the medicinal way of sublimating semen to an adamantine body.

—-This is taken from The Yoga of the 18 Siddhas, edited by T N Ganapathy.

Xxx

Greeks on sex and the games

The one time world heavy weight boxing champion Lennox Lewis , arguing that women weakened a boxer, avoided sex for three weeks before a big fight.  The theory has  certainly  been around for some time. In the ancient world it was based on the idea that semen was a vital factor in keeping a man strong.

The doctor    Aretaeus , in the first century CE said-“

“If any man is possession of semen, he is fierce, courageous, and physically mighty like beasts. Evidence for this is to be found in athletes  who practise   abstinence.

Even involuntary nocturnal emissions were thought to be enfeebling, threatening one’s endurance, and breathing. The doctor Galen , in the second century CE recommended that athletes take precautions

Sex before exercise was criticized;

Exercise before sex was strongly recommended.

Xxx

Manu on semen

“Once upon a time the universe was made up of darkness.  Then the lord who is self existent, himself  unmanifest, putting his energy into the great  elements  and everything else, he became visible and dispelled the darkness.  He thought deeply , for he wished to emit various sorts of creatures from his own body. First, he emitted the waters and then he emitted his semen in them.  That semen became a golden egg.  As bright as the sun with his 1000 rays. Brahma himself, the grand father of all people, was born in that egg.

Manu mentioned semen in other places as well.

In short, Greeks identified  semen with  physical strength ; Hindus identified it with spiritual strength.

xxxxx

FOLLOWING ARE NEWS ITEMS FROM LONDON NEWSPAPERS

CHILDREN FROM DEAD BODIES

((I HAVE ALREADY WRITTEN ABOUT SUCH AN INCIDENT IN MAHABHARATA- ‘TEN MEDICAL MYSTERIES IN MAHABHARATA’.))

WHAT ARE THE LAWS FOR SPERM DONATION IN THE UK?

  THE INDEPENDENT

Tuesday 21 January 2020 17:28

A recent report published in the Journal of Medical Ethics has argued that doctors should be able to take sperm from men who have passed away if they have consented to becoming post-mortem donors.

The authors state that doing so is “both feasible and morally permissible”, as it may help to ensure that “sufficient quantities of sperm“ are made available to individuals who wish to become parents through sperm donation.

So where does the law in the UK currently stand with regards to sperm donation? Here is everything you need to know.

Who is eligible to donate sperm?

According to the Human Fertilisation and Embryology Authority (HFEA), sperm donors are usually aged between 18 and 41.

xxxxxxxx

8 foods that increase sperm count

  • Oysters + pumpkin seeds. Both are very high in zinc, which may increase testosterone, sperm motility and sperm count.
  • Oranges. …
  • Dark, leafy vegetables. …
  • Dark chocolate. …
  • Salmon + sardines. …
  • Pomegranate juice. …
  • Brazil nuts. …
  • Water.

Xxxxxxxxxxxxxx

Carrots and lettuce linked to better sperm quality

Thursday 31 October 2013

“The secret to healthy sperm? Carrots,” the Mail Online website declares. The study it reports on found that certain vegetables may help improve sperm quality.

The researchers carrying out the study were interested in two important aspects of sperm quality:

  • sperm motility – how quickly a sperm can swim towards an egg
  • sperm morphology – the size and shape of a sperm (for the best chance of successfully conceiving, a sperm should have an oval head and a long tail)

They looked at young men’s diets and analysed their sperm samples. They found that men who ate a higher amount of three antioxidants found in fruit and vegetables had sperm with better motility and morphology.

The three antioxidants in question were:

  • beta-carotene – found in carrots, lettuce and spinach
  • lutein – found in lettuce and spinach
  • lycopene – found in tomatoes
  •  
  • tags – semen, sperm, Tamil Viagra, Sexy foods

xxxxxxxxxxxxxxxx

தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 7 (Post No.8736)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8736

Date uploaded in London – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொடர்ந்து இலக்கண விஷயங்களைக் காண்போம்; இறுதியில் ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கொடுத்து அது தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எப்படி அழைக்கப்படுகிறது என்று காட்டவும் ஆசை. முடிந்தவரை செய்கிறேன்

டாக்டர் K.மீனாட்சி, உலக மஹா சாதனை செய்து இருக்கிறார். பாணினியின் அஷ்டாத்யாயியில் உள்ள 4000 சூத்திரங்களையும் மொழிபெயர்த்து சுருக்கமான உரைகளையும் கொடுத்து இருக்கிறார். மூன்று பாகங்களாக வெளிவந்து இருக்கிறது. தொல்காப்பியத்தையும் கற்றவர் அவர். இந்தியாவில் தமிழ் மட்டும் படித்தவன் அரைவேக்காடு. சம்ஸ்கிருதம்   மட்டும் படித்தவனும்  அரைவேக்காடு. இரண்டு மொழிகளையும் கற்றவர்களே அறிஞர்கள் ; அந்தக் காலத்தில் பி.எஸ். சுப்ரமண்ய சாஸ்திரிகள் போன்றோர் இருந்தனர். இக்காலத்தில் டாக்டர் மீனாட்சி, டாக்டர் இரா. நாகசாமி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களே உள்ளனர் 

டாக்டர் என்ற பட்டத்துடன் தமிழ் மொழி பற்றி நூல்களை எழுதிய சிலரைக் கண்டு கண்டு சிரிப்புதான் வருகிறது. கிரேக்க மொழி செத்துப் போச்சு ; ஹீப்ரு மொழி செத்துப் போச்சு , லத்தின்  மொழி செத்துப் போச்சு, ஸம்ஸ்கிருத  மொழி செத்துப் போச்சு என்று உளறு கின்றனர். கிரேக்க மொழி, ஹிப்ரு மொழி பற்றி விக்கிபீடியாவில் கூட உள்ளது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ‘தமிழ் வாழ்த்து’ என்று எழுதி வரிக்கு வரி சம்ஸ்கிருதத் சொல்லை புகுத்தி தமிழர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கியது போலத்தான் இதுவும் .

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது தமிழ் வினைச் சொற்கள் 75-0ஐப் பட்டியலிட்டேன். ஆனால் அவை அனைத்தும் தற்கால வினைச் சொற்கள். ஸம்ஸ்க்ருதத்திலோ 2700 ஆண்டுகளுக்கு  முன்னர் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டு விட்டனர். அப்போது கிரேக்க, எபிரேய, சீன, பாரசீக மொழிகளுக்கு இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. தமிழும் லத்தினும் அப்போது இருந்ததற்குச் சான்றுகள் இல்லை.

இதோ 1970 வினைச் சொற்களின் வகைகள்

தாது பாடம்

பாணினி தனது இலக்கணத்தில் விகரணங்களையும் CONJUGATIONAL SIGNS , அவைகளுக்குரிய ஓட்டுக்கள், அவைகளை நீக்குதல் , ஆகியவைகளை பற்றிப் பேசும்போது அவைகளை தாதுக்களின் வகுப்பு மூலம் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக 2-4-72, 2-4-75, 3-1-69, 3-1-73, 77, 78, 79, 81 ஆகிய சூத்திரங்களைக் குறிப்பிடலாம்

ஸம்ஸ்க்ருத மொழியில் காணப்படும் தாதுக்கள் அனைத்தையும் அவைகளையடிச் சொல்லாக மாற்றும்போது அவைகளோடிணைக்கப்படும் விகரணங்களின் அடிப்படையில் பத்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு தாது பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்     தாதுக்களின் மொத்த எண்ணிக்கை 1970 ஆகும்.

பத்து வகைகளும் அதிலுள்ள தாதுக்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு—

தாது – வினை அடிச் சொல் , வேர் ROOT

1.பூ தாதி  வகுப்பு – 1059

2.அ தாதி  வகுப்பு    – 72

3.ஹூ தாதி  வகுப்பு    – 25

4..தி வாதி   வகுப்பு    – 137

5. ஸ் வாதி  வகுப்பு    – 34

6.து தாதி   வகுப்பு    –  143

7.ரு தாதி  வகுப்பு     –  25

8. த னாதி  வகுப்பு    –  10

9. க்ரீ யாதி  வகுப்பு   – 81

10.கரா தி வகுப்பு     — 395

மொத்தம்        – 1970

பாணினி தனது சூத்திரங்களின் தாதுக்களை ‘கரம்’ அல்லது ‘இத்’  –  தொடர்பாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய ‘கரம்’ பெற்ற தாதுக்கள் ‘இத்’ – தைக் கொண்ட தாதுக்கள்  எவையெவை என்பதை அறிய தாது பாடத்தின் உதவியைத்தான் நாட்டை வேண்டியிருக்கும் ஏனென்றால் தாது பாடத்தில்தான் இவைகளின் பட்டியல் இருக்கிறது . இதனால் அதன் முக்கியத்துவம் விளங்குகிறது .

இதைப்போன்று 4-1-76 தொடங்கி ஐந்தாம் அத்தியாய இறுதிவரையில் ‘தத்தித’ ஓட்டுக்களைப்  பற்றி பாணினி பேசுகிறார். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பெயரை மட்டும்தான் குறிப்பிடுகிறார்.  அக்குறிப்பிட்ட வகுப்பினுள் அடங்கும் சொற்கள் எவை என்பதை அறிய கண பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் ..

கணபாடம்

தாது பாடத்தில் தாதுக்களின் வகுப்பைக் கூறியிருப்பது போல், கணபாடத்தில் பெயர்ச் சொற்களை குறிப்பிட்ட ஒரு வரிசைக்ரமப்படி  அமைக்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வகை —

1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட சொற்கள்

2.பெயர்ச் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் அமைக்கப்பட்டவை .

யார் எழுதியது ?

தாது பாடம், கண பாடம்  ஆகிய இரண்டின் ஆசிரியர் பாணினியா அல்லது வேறு ஒருவரா என்ற விவாதம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது . ஆயினும் இவை பாணினி காலத்தில் நன்கு அறியப் பட்டிருந்தன. அஷ்டாத்யாயியை விளங்கிக் கொள்ள இவை இன்றியமையாதவை.

tags – இலக்கண அகராதி –7,கண பாடம், தாது பாடம்

TO BE CONTINUED……………………………