Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீங்கள் ஜனாதிபதி ஆகவேண்டுமா?!
—KATTUKKUTY—
எல்லோருக்கும் ஆசைதான்……ஜனாதிபதியாக……இந்தியாவின் முதல் குடிமகனாக ஆக!!!!
உடனேஓடிப்போய் உங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வருவீர்களே……..எனக்குத் தெரியும்…….
கொஞ்சமாவது ‘மு’ னா இருக்கா????? தப்பா நினச்சுக்காதீங்க கொஞ்சமாவது முன்யோசனை இருக்கா என்றுதான் கேட்டேன் உங்களுக்கு அந்த யோகம் இருந்தா இங்கே ஏனையா Tamilandvedas.com ஐ பார்த்துகொண்டிருப்பீர்கள்????
டெல்லியில் அல்லவா இருப்பீர்கள் ???? ( திரு .சாமிநாதன் அவர்கள் மன்னிக்க வேண்டும்) சரி, விட்டுத்தள்ளுங்கள்……உங்கள் பேரன் பேத்தி ஜாதகங்களைக் கொண்டு வாருங்கள் அவரகளுக்காவது இந்த யோகம் இருக்கான்னு பாப்போம்!!!! ஜனாதிபதியாக 3 கண்டிஷன்தான்……
1. உங்களுக்கு 35 வயது முடிந்திருக்க வேண்டும் 2. இந்தியாவில் எங்காவது உங்களுக்கு ஓட்டுரிமை இருக்க வேண்டும். 3. ???
சரி, ஜாதகத்திற்கு வருவோம்
பத்தாமிடத்து அதிபதி 4 ம் இடத்தில் நிற்க நான்காம் இடத்து அதிபதி 10-ல் நிற்க லக்னாதிபதி உச்சம் பெற்றால் சாப யோகம் என்ற ஜனாதிபதி யோகமாம்.
ஓகே…… அடுத்த காம்பினேஷனுக்கு வருவோம்
லகனாதிபதி 10 லும், 10 க்குடையவன் லக்னத்திலும் 2- ம் இடத்தில் குருவும் சந்திரனும் கூடி லக்னாதிபதியை குரு பார்க்க வேண்டும் (வேந்தன் யோகம்)
ஒகே, மூன்றாவது காம்பினேஷனுக்கு வருவோம்.
லக்னத்தில் சனி, 4- ம் இடத்தில் சந்திரன், 7- ம் இடத்தில் செவ்வாய், 10- ம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் கூடினால் வேந்தன் யோகமாம்.
சரி முதல் காம்பினேஷனுக்கு வருவோம். 10- ம் இடத்ததிபதி 4- இடத்தில் என்பது 9 பாதங்களைக்கொண்டது. ஒவ்வொரு பாதங்களிலிருந்தும் மற்ற 9 பாதங்களுக்கும் எண்ணிப் பார்த்தால், 729 காம்பினேஷன் வரும். சரி 2 இடத்திற்கும் சேர்த்து 1,458 காம்பினேஷன்கள் வரும்!!!!
அடுத்தாற் போல் லக்னாதிபதி உச்சம் பெற வேண்டும் அப்போது அங்குள்ள 9 பாதங்களை கணக்கிட்டால் 13,062 என்ற தொகை வரும்.
ஜாதகத்தை ஆகா, 10 க்குடையோன் 4- ல், 4- க்கு உடையோன் 10- ல் என குதிக்கக் கூடாது ……….. எந்த பாதம் எந்த பாதத்துடன் சேர்ந்தால் பலம் பெருகிறது பலன் கிடைக்கிறது எனப் பார்த்தால்தான் யோகம் வரும் ,!!!! புரிகிறதா ????
இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான் நமது முன்னோர்கள் ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறார்கள். கிரகம் இருக்கும் ராசியை, 2 ஆக பிரித்து கோட்கூறு எனவும்
3 ஆக பிரித்து திரேக்காணம் எனவும், 4 ஆக பிரித்து திரிசம்சம் எனவும், 7 ஆக பிரித்து சப்தமாம்சம் எனவும், 9 ஆக பிரித்து நவாம்சம் எனவும், 10 ஆக பிரித்து தசாம்சம் எனவும், 12 ஆக பிரித்து துவதாம்சம் எனவும் 16 அக பிரித்து ஷோடசம்சம் எனவும் 60 கூறாக பிரித்து ஷஷ்டியாம்சம் என தச வர்க்கங்களாகப் பிரித்தனர்!!!!!
இந்த தசவர்கங்களில் ஒவ்வொரு கிரகமும் உச்சம், மூலத்திரிகோணம், ஆடசி, வர்கோத்தமம், நட்பு ஆகிய சுப அம்சங்கள் இருந்தால் ஒரு சுப வர்க்கம் எனக் கூறுகிறோம் 2-சுப வர்க்கம் இருந்தால், பாரிசாதாங்கிசம்………அதாவது நற்குணம், தனம், சுகம், பெருமை கிடைக்கும்
3- சுப வர்க்கம் இருந்தால், உத்தமாங்கிசம் அதாவது அந்த ஜாதகர் நல்ஒழுக்கம், நிபுணத்துவம் பெற்றவர்
4 சுப வர்க்கம் கொபுரம்சம் இருந்தால் பூமி, வீடு, வாகனம், தனம், நல்ல நோக்கமும் உடையவர்
சிங்கனங்கிசம் இருந்தால் செல்வம், அதிகாரம், ராஜ சன்மானம் உடையவராவார்
பாராவதாங்கிசம் இருந்தால், வித்தை , செல்வம், கீர்த்தி உடையவராவார்
தேவலோகாங்கிசம் இருந்தால் சைன்யத்திற்கு அதிபதி, கொடை வள்ளலாக இருப்பார்
வைசேஷாங்கிசம் இருந்தால் லோகதிபதியாவார்
ஐராவதாங்கிசம் இருந்தால் அஷ்ட ஐஸ்வர்யம் உடையவராவார்
தேவேந்திராங்கிசம் இருந்தால் இந்திரனைப் போல் வாழ்வார்
சரி, எல்லா கணக்கும் போட்டு வைசேஷேஷாங்கிசமோ அதற்கு மேல் ஐராவதாங்கிசமோ, தேவேந்திராங்கசமோ இருந்தால் பேரனோ, பேத்தியோ தான் ஐனாதிபதி !!!! சந்தோஷத்துடன் செல்லுங்கள்!!!! உங்கள் போட்டோவும் பேப்பரில் வரும்!!!! ***
Sanskrit Inscription and Magic Square on Tortoise –May 19
Draupadi and Tamil Heroines -May 17,2012
Did Olympics Originate in India? -May 15
Hindu Wonders in A Muslim Country- May 12
First Tamil Historian – Paranar -May 7
Rs 1000 Crore Indian Gem Wonder May 4-5
India needs an Indiana Zones– May 1,2012
Amazing Similarities: Mayans and Nagas- Part 2 May 1,2012
XXXX
INTRODUCTION
I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for APRIL and MAY 2012
I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of S Swaminathan.
Later I used ‘London Swaminathan’.
Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.
Following is the method:-
Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’
Here is an example :
Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com
Or
Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com
Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.
So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.
Thanks for all your support. We are reaching two million hits now.
If you have any difficulty in getting the articles, please let us know.
Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.
TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.
***
IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN
1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA
2.TAMIL HERITAGE FOUNDATION SITE
3.TAMIL BRAHMINS.COM etc.
So you may find the same articles on different days on different blogs
To be continued…………………….
Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ்-5, INDEX 5, S.SWAMINATHAN, ARTICLES,
என்னடா இது தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கே??? படிக்கலாமா வேண்டாமா……… தயவுசெய்து கதைக்கு வாங்கோ வாங்கோன்னு அழைக்கிறேன் என் குடும்ப நண்பர் ஒருவர் என்னையும் என மனைவியையும் சாப்பிட கூப்பிட்டிருந்தார் ரொம்ப ஜோக்காகவும்பாயிண்ட்ஆகவும் பேசக்கூடியவர்
அவர் வீட்டிற்கு போனவுடன் காப்பி முறுக்கு கொடுத்து உபசாரம் செய்துவிட்டு, சிரித்துக் கொண்டே சொன்னார். இன்றைக்கு உங்களுக்காக ஸ்பெஷல், ராகு சாம்பார், கேது ரசம் என்றாரே பார்க்கலாம்……..எனக்கும் என மனைவிக்கும் தூக்கி வாரிபோட்டது, உடனே நானும் என் மனைவியும் எழுந்து விட்டோம்.
என்னடா இது சைனாக்காரன் மாதிரி……..எங்களுக்கு கொரோனா வரவழைத்து திட்டமிட்டு கொலை முயற்சிசிக்கிறாரோ???
சரி இ.பி.கோ செக்ஷன் 345 படி இவர்மேல்கேஸ் திரு பராசரனிடம் சொல்லி (இவர்தான ராமர் கோவிலுக்காக வாதாடி ஜெயித்து கொடுத்தவர்)பு க் செய்ய வேண்டியது தான்………. நானும் என் மனைவியும் நாங்கள் “ப்யூர் வெஜிடேரியன்கள். நாங்கள் அமெரிக்கா போன போதிலும், லண்டன் போன போதிலும் வெஜ் நூடில்ஸ்ஸும் வெஜ் பரகரும் தான் சாப்பிட்டோம்” (நாங்கள் அமெரிக்கா, லண்டன் போனதெல்லாம் எப்போ சொல்லி பீத்திக்கறது????) அவர் சிரித்துக். கொண்டேஉட்காரச் சொன்னார் இதுவும் வெஜிடேரியன்தான் இந்த “உண்மைக் கதையை “கேளுங்கள்……
“உண்மை கதை “என்றவுடன் எனக்கு பழைய ஞாபகம் வந்தது.
சுமார் 60 வருடங்களுக்குமுன் “தினமணி கதிர்” – ஒரு வார இதழ் பத்திரிக்கையில் புஷ்பா தங்கதுரை என்ற எழுத்தாளர் “உண்மை கதை” என்று பெண்களைப்பற்றி விதம் விதமாக கதை எழுதுவார். திரு ஜெயராஜ் அவர்களும் அதற்குத் “தகுந்த மாதிரி” விதம் விதமாக படம் போடுவார் !!!! ஆனால் அதே பத்திரிக்கை முதல் பக்கத்தில் அடியில் இந்த இதழில் வரும் எல்லாம் “முழு கற்பனையே யாரையும் குறிப்பதல்ல” என்று இருக்கும்…… நாங்களும் காசு கொடுத்து வாங்கி அந்த “உண்மைக் கதைகளை” படித்தோம்!!!!
சரி , இந்த உண்மைக கதைக்கு வருவோம் நண்பர் பேச ஆரம்பித்தார். சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ego clash……யார் பெரியவர் என்று….அடிதடி சண்டை……ஆளும்கட்சி எதிர்கட்சி மாதிரி. பொத் பொத் என்று நிறையப்பேர் செத்து விழுந்து கொண்டிருந்தார்கள். தேவர்கள் குரு “குருபகவானும்”, அசுரர் குரு சுக்கிர பகவானும் பரமசிவனிடம் பஞ்சாயத்திற்குப் போனார்கள். அவர் பார்த்தார் ஏற்கனவே ஒரு அசுரனுக்கு (பத்மாசரனுக்கு) வரம் கொடுத்து நான் பட்ட பாடு …….அப்புறம் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து நடிகை லட்சுமி மாதிரி டான்ஸ் ஆடி என்னைக் காப்பாற்றினார்.
“அப்பா, குருமார்களே!! இது “கிரிமினல் கேஸ்” நான் சாதாரண சிவில்கேஸ் வக்கீல். இந்த மாதிரி கேஸ்களை “டீல்”பண்ணக்கூடிய ஒரே கடவுள் மிஸடர் மகாவஷ்ணு தான். அவரிடம் போங்கள்” என்று “மலையேறி “விட்டார்
அப்புறம் நடந்தது தான் உங்களுக்குத்ந்தெரியுமே……மந்தார மலையை மத்தாகவும்,வாசுகியை பாம்பாகவும் பாற்கடலை கடைந்தனர்,
மகாலடசுமி முதல்ஆல கால விஷம் வரை வந்தன. தங்களுக்கள்ளாகவே “டிஸ்ட்ரிப்யூட்” செய்து கொண்டனர் தேவர்கள். எதிர் கட்சிகள்,” நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் எங்களிடம் t.v இருக்கிறது, பத்ரிகைகள் உள்ளன,,,,,,நீங்கள்ஆட்சியைக் கலைத்தே ஆக வேண்டும்” அதுதான் எங்களுக்கு அமிர்தம்” என்றன!
சரி கதைக்கு வருவோம்..
அமிர்தம் வந்தவுடன் டிஸ்ட்ரிப்யூஷனில் தகராறு……. பார்த்தார் மகாவிஷ்ணு. இதை வேறு விதமாகத் தான் “டீல்” செய்யவேண்டும், என எடுத்தார் மோகினி அவதாரம். அசுரர்களுக்கெல்லாம், சுரா பானம்( foreign சரக்கு) வாங்கிக் கொடுத்து விட்டு, அமிர்தத்தைக் கரண்டியால் கொடுக்க ஆரம்பித்தார் சுவர் பானு என்ற அசுரன் மட்டும், சரக்கு சரியில்லை, சைடு டிஷ் சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்தான். தேவர்கள் ஒவ்வொருவராக அமிர்தத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது சுவர்பானுவும் குறுக்கே நுழைந்து கையை நீட்டினான். சூரியனும் சந்திரனும் இதைப்பார்த்து “இதோ தாலிபான் பாக்கிஸ்தான் உளவாளி“ என்று சத்தம் போட மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் சுவர்பானுவை இரண்டு துண்டாக வெட்டினார். தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.
இருவரும் மகாவிஷ்ணு காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார்கள். நீங்கள் அமிர்தத்தை தொட்டதினால் உங்களுக்கு கிரக பதவி கொடுக்கிறேன். ஆனால் இனிமேல் இப்படியெல்லாம் தப்பு பண்ணக்கூடாது என்று கரண்டியினால் ராகு, கேது தலையில் தட்டினார். கடைசியாக அவர்கள் வாயிலிருந்த விஷம் ராகுவின் வாயிலிருந்து வெங்காயமாகவும், கேதுவின் வாயிலிருந்து உள்ளிப்பூண்டாகவும் விழுந்தது, South east asia வில்!!!!! (சந்தேகம் இருந்தால் google ல் செர்ச் செய்து பார்த்துக் கொள்ளவும்) ஆகையினால் தான் சொன்னேன், இன்று என் வீட்டில் “வெங்காய சாம்பாரும், உள்ளிப்பூண்டு ரசமும்”!!!!! என்று சொல்லி சிரித்தார்.
நாங்களும் விழுந்து விழுந்து சிரித்து விட்டு பொரித்த அப்பளாம் ஜவ்வரிசி பாயசத்துடன் சாப்பிட்டு முடித்தோம்! இனிதே முடிந்தது “உண்மைக கதையும்”விருந்தும்!!!!! இப்பொது நான் சில சமயம் என் மனைவிடம் இன்று “ராகு பஜ்ஜி, கேது சட்னி “ என்றே சொல்கிறேன் !!!!! ரொம்ப ஆசாரமாக இருப்பவர்கள் ராகு கேதுவுக்கு பயந்து கொண்டு இதை சாப்பிட மாட்டார்கள்! ஆனால் நான் சாப்பிடுவேன் ஏனெனில் எனக்கு கடக ராகு மகர கேது…..ஒண்ணும் பண்ணாது……..இது வரை கடவுள் கிருபையினால் ஒன்றும் ஆகவில்லை!!!! அடுத்த கட்டுரையில் ராகு கேது எப்படி இருந்தால் நலம் செய்வார் என்பதைப் பற்றியும் அவர் கூடச் சேர்ந்த குளிகன் கத்தரிக்காயையும் பற்றியும் சொல்வேன். நன்றி ……வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Books Indians Should Read- 14
Chapter 5 – Part 2
R.Nanjappa
Ancient philosophy for modern times
We tend to think of philosophy as an academic discipline or intellectual exercise. But in
the ancient world, it was considered a guide to practical life. Stoicism is one of the ancient
Greek philosophies, very influential in its day. The ancient Greeks were interested in the
‘good life’ or happiness. They found its key in “virtue” or virtuous conduct, which is
reflected in a life devoted to “self-control, courage, justice, and wisdom”. They felt that
virtue alone was sufficient for happiness.
Stoicism is ultimately a manual on ‘how to live’- system of ethics based on logic – “the
highest point to which man can attain by the mere use of his faculty of reason”,
as the modern philosopher Arthur Schopenhauer said. It holds that there are things which are beyond our control, and it is wisdom
to accept this. (Cosmic determinism.) Our freedom consists in ordering our life,
in the light of reason, subject to and in accordance with this imperative. This attitude focuses on the present, and avoids giving in to desire for pleasure, or fear
of pain. We have to use our mind to understand nature around us and conduct our life in
accordance with its plan. This necessarily involves living in harmony with others, based
on justice and fair play.
Formally, its origins have been traced to the Greek philosopher Zeno of Citium in the third
century BC. He taught in Athens.
CC By-SA 4.0
Creative commons via Wikimedia Commons.
It flourished in Greece and later in Rome till the third century AD. It declined later due to
the organised onslaught of Christianity . Its great advocates and practitioners were
Epictetus, Seneca, Emperor Marcus Aurelius, Musonius Rufus, Posidonius, etc. Throughout
the ages, it has had many admirers and advocates among the great minds: Emerson, Walt
Whitman, George Washington, Thomas Jefferson, Theodore Roosevelt, Adam Smith,
Immanuel Kant, Matthew Arnold, etc.
Stoic wisdom in daily doses
In this admirable book, Ryan Holiday and Stephen Hanselman bring to us the wisdom of the
Stoics in the form of short quotes from the famous practitioners, one for a day. The book has
a short but admirable introduction, giving the essence of the philosophy focused solely
on practice.
The Stoic wisdom is organised under three disciplines of Perception, Action, and Will.
Under each is grouped important quotations on themes for daily reflection and practice.
Short notes accompany each quotation that aid understanding .
The Discipline of Perception relates to the right understanding of the world- how we
perceive the world around us. This involves our mind and reason, as it is our mind which
interprets the world!
The Discipline of Action relates to how we act in the world, what decisions we take,
their motives and aim.
The Discipline of Will relates to developing true understanding of our place in the world,
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சம்ஸ்கிருதப் புதிர்க் கவிதைகள் : எந்த நதியைக் கடப்பது கஷ்டம்?
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத மொழியில் ஏராளமான புதிர் ஸ்லோகங்கள் உள்ளன. நூற்றுக் கணக்கில் உள்ள இவற்றை ஒருவர் கேட்டு இன்னொருவர் பதில் சொல்ல முற்படுவது அறிவு பூர்வமான ஒரு பொழுதுபோக்காக இருந்து வந்திருக்கிறது.
இங்கு இரு புதிர்க் கவிதைகளைப் பார்ப்போம்:
எந்த நதியைக் கடப்பது கஷ்டம்?
நதியைக் கடக்க விரும்பும் ஒருவனுக்கு எந்த நதியைக் கடப்பது கடினம்?
யார் மதிக்கப்படத் தக்கவர்?
வாளை எப்படிஅழைப்பது?
புத்திசாலியே,
தூரத்தில் புகையைக் கண்டவுடன் நான் என்ன செய்ய வேண்டும்?
இதற்கான விடை ஒரே வார்த்தையில் இருக்க வேண்டும். முடியுமா?
முடியும்.
அனுமாதாஸே என்பது தான் விடை!
நதியைக் கடப்பது கடினம்; எப்போது படகு (நு) இல்லாவிடில்! (அநு – படகு இல்லாவிடில்!
MAHADEVA TEMPLE, ALUVA, KERALASABARI MALAI, KERALA
மதிக்கப்பட வேண்டியவர் தாய் தானே (மாதா)
வாளை ஓ,வாளே (ஆ,ஸே) என்று தான் அழைக்க வேண்டும் (ஸே – வாள்)
புகையைக் கண்டவுடன் என்ன செய்ய வேண்டும்?
புகை தீயை வளர்ப்பதைக் குறிப்பதால் காலை நேரம் என்று உய்த்துணர வேண்டும்.
(ஸ்லோகம் இது தான்:-
கீத்ருக் தோயம் துஸ்தரம் ஸ்யாத் திதீர்ஷோ:
கா பூஜ்யாஸ்மின் கட்கமாமந்த்ரஸ்வ |
த்ருஷ்ட்வா தூமம் தூரதோ மானவிக்ஞா:
கிம் கர்தாஸ்மி ப்ராதரேவாஷ்ரயாஷம் ||
Which water (river) is difficult to ford when one wishes to cross? (a-nu: that which has no boat)
Who deserves to be respected? (mata : the mother)
Address the Sword! (ase : O, Sword)
Oh!, intelligent people, having seen smoke afar what shall I do? (anumatase – you will infer fire in the morning itself)
(Translation by A.A.R.)
*
இன்னொரு புதிர் ஸ்லோகம்:
தமக்கு இஷ்டப்பட்டபடி விளையாட விழையும் மீன்களுக்கு எந்த இடம் எதனால் பயனளிக்காது?
மற்றவர்களின் நல்ல குணங்களால் எந்த மனிதன் மிகுந்த சந்தோஷம் அடைகிறான்?
விடை ஒரே வார்த்தையில் இருக்க வேண்டும்!
விடை இது தான் : வி-மத்சராஹ்!
முதல் கேள்விக்கு பதில் : வி – மத் – சராஹ்: – மீன் கொத்திப் பறவைகள் நிறைந்த ஏரி!
இரண்டாம் கேள்விக்கு பதில் வி – மத்சராஹ் – பொறாமையிலிருந்து விடுபட்டவன்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிவ பக்தர் படம் இங்கே ! பெயர் எங்கே? விவரம் எங்கே ?
நாயன்மார்கள் என்போர் சிவன் அடியார்கள் . இவர்களின் எண்ணிக்கை 63. இவர்கள் அனைவரின் கதைகளும் பெரிய புராணத்தில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரை எவரும் தொகை அடியாரில் சேர்க்கவில்லை இந்த 63 நாயன்மார்களில் சிலர் கண்ணப்ப நாயனார் போல அன்பே வடிவானவர். இன்னும் சிலர் சாக்கிய நாயனார் போல வன்முறையில் இறங்கி வழிபடுவர். குழந்தைகளையும் மனைவியரையும் தியாகம் செய்த சிவன் அடியார்களும் இந்த 63ல் உண்டு. இவர்கள் அனைவரையும் மாலையில் மணிகளைக் கோர்க்கும் நூல் போல உதவுவது சிவ பெருமானின் மீதுள்ள முரட்டுத் தனமான அன்பே ஆகும். இங்கே ஒவ்வொரு நாயன்மாரும் எதனால் புகழ் பெற்றனர் என்பது படமாக உள்ளது. பெரிய புராணத்தைப் பயிலாவிடினும் கதைகளைக் கேட்டிருப்பீர்கள். இதோ உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சோதனை .படத்தைப் பார்த்து நாயன்மார் பெயரைச் சொல்வதோடு அவரின் சிறப்பையும் ஒரு வரியில் சொல்லுங்கள் . விடை தெரியாவிடில் கீழே விடைகளைப் பாருங்கள்
PICTURE 1
XXX
PICTURE 2
XXXX
PICTURE 3
XXXX
PICTURE 4
XXXX
PICTURE 5
XXXX
PICTURE 6
XXX
PICTURE 7
XXX
PICTURE 8
XXXX
PICTURE 9
XXXX
PICTURE 10
ANSWERS
படம் ஒன்று –கண்ணப்ப நாயனார் தன கண்களையே சிவனுக்கு தானம் செய்து முக்தி பெற்ற வேடர் குல வேந்தன்
படம் இரண்டு – நந்தனார் அல்லது திரு நாளைப் போவார்; கடைசி ஜாதியில் பிறந்தும் விடா முயற்சியால் சிவ தரிசனம் பெற்றவர் ; சிதம்பரம் செல்வதை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்ததால், இவரைத் திரு நாளைப் போவார் என்றும் கேலி செய்வார்கள் .
படம் இரண்டு – நந்தனார் அல்லது திரு நாளைப் போவார்; கடைசி ஜாதியில் பிறந்தும் விடா முயற்சியால் சிவ தரிசனம் பெற்றவர் ; சிதம்பரம் செல்வதை ஒத்திப் போட்டுக்கொண்டே வந்ததால், இவரைத் திரு நாளைப் போவார் என்றும் கேலி செய்வார்கள் .
படம் 3 – சாக்கிய நாயனார் ; கல்லை சிவலிங் கம் மீது எறிந்து ‘வழிபட்டவர்
படம் 4 – மெய்ப்பொருள் நாயனார். அவரைக் கொன்றவன் முத்தநாதன்
படம் 5 – சைவ மதத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஞானச் சிறுவன் ஞான சம்பந்தர்
படம் 6- என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கோவிலில் களை எடுத்து அருந்தொண் டாற்றியவர் அப்பர்,
படம் 7 – இரண்டு மனைவி கிடைக்க சிவன் உதவி பெற்றவர், சுந்தரர்.
படம் 8 – இசையால் சிவபதவி பெற்ற ஆனாய நாயனார் ; இவருடைய தெய்வீக இசைக்கு பிராணிகளும் வசப்பட்டன
படம் 9- இறைவனுக்கு நறுமணப் புகை போட மனைவியின் தாலியையும் விற்று குங்கிலியம் வாங்கிய குங்கிலியக் கலய நாயனார்.இவர் சாய்ந்த சிவலிங்கத்தையும் தனது தவ வலிமையால் நிமிர்த்திவைத்தார்
படம் 10- -ஞானச் சிறுவனை மதுரைக்கு அழைத்துவந்த சோழர்குல திலகம், பாண்டிய மன்னரின் மனைவி மங்கையர்க்கரசியார் ; அவரது அமைச்சர் குலச் சிறையார் ; நோய் தீர்ந்து சைவ மதம் திரும்பிய பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறன்; மற்ற பெயர் கூன் பாண்டியன்
tags –
சிவ பக்தர் ,நாயனார் quiz, ,நாயன்மார்கள் quiz, , க்விஸ்