அன்னா கரீனா – 2 (Post No.8516)

SRI V SANTANAM DURING STRUGGLE FOR INDEPENDENCE; IMPRISONED WITH SRI K KAMARAJ IN VELLORE JAIL.

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8516

Date uploaded in London – – –16 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அன்னா கரீனா – 2

ச.நாகராஜன்

1

அன்னா கரீனா நாவலின் முதல் பக்கத்தில்,

அன்னா கரீனா

I

ஆசிரியர் :

லியோ டால்ஸ்டாய்

மொழிபெயர்ப்பு:

தினமணி உதவி ஆசிரியர்

வெ.சந்தானம்

தமிழ்ச் சுடர் நிலையம்

திருவல்லிக்கேணி : : சென்னை

உரிமை பதிவு

என்ற பதிவுகளைக் காணலாம்.

அடுத்த பக்கத்தில் உள்ள விவரங்கள் இவை:

முதல் பதிப்பு : மார்ச்சு 22, ‘47

மலிவுப் பதிப்பு விலை ரூ  7 8 0

ஆண்டிக் — }

இரண்டு வால்யூம்}    ரூ 10 0 0

Printed at Thompson  co ltd., (Minerva Press)

Q.H.Ma 15 – (22-31947)

2

தமிழ்ச் சுடர் நிலையம் உரிமையாளரான திரு அ.கி.கோபாலன் சிறந்த தமிழ் அன்பர். நல்ல நூல்களைத் தேடித் தேடி தமிழில் வெளியிட்டிருக்கிறார்.

அவர் அன்னா கரீனா நூலுக்கு அளித்துள்ள பதிப்புரை முதலில் இடம் பெறுகிறது.

அவரது பதிப்புரையை இங்கு காண்போம்:

பதிப்புரை

    உலகப் புகழ்பெற்ற ‘அன்னா கரீனா’வின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தமிழர்கள் முன் சமர்ப்பிக்கிறோம். மகான் டால்ஸ்டாயின் உன்னத திருவடிகளில் இந்தக் கதையும் ஒரு ரத்தினம் போன்றதாகும். மனிதனின் தினசரி வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் கலைப்பண்புடன் சித்தரிப்பதில் டால்ஸ்டாய்க்கு நிகரான கலைஞர் அவரே தாம். அந்த ஈடு இணையற்ற பெரியாரின் இந்தக் கதையைத் தமிழாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வமே இப்புத்தகம் இன்று வெளியாகியிருப்பதற்குக் காரணம்.

     நிற்க, கதையைப் பற்றியோ, அதை எழுதியவரைப் பற்றியோ அல்லது மொழிபெயர்த்தவரைப் பற்றியோ நாங்கள் அதிகமாக எதுவும் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. கதையைப் பற்றியும், இலக்கிய சரித்திரத்திலேயே பல விந்தைகள் புரிந்து அதன் ஆசிரியரைப் பற்றியும் மனத்தில் பதியுமாறு ஆராய்ச்சி முகவுரை எழுதிக் கொடுத்துதவிய அறிஞர்  ஸ்ரீ ரா.ஸ்ரீ. தேசிகன் அவர்களுக்கு நாங்கள் வாசகர்கள் சார்பாக முதலில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

     அடக்கம், பண்பு, அமைதி ஆகிய இம் மூன்றும் ஒருங்கே குடி கொண்டுள்ள நண்பர் ஸ்ரீ வெ. சந்தானம் அவர்களின் மொழிபெயர்ப்பைப்பற்றி ஒரு விஷயத்தை மட்டும் கூற வேண்டியது அவசியமாகிறது.

     ‘அன்னா கரீனா’வை மிக அழகிய, எளிய பாஷையில் தம்முடையை இடைச் செருகல் எதுவுமின்றி, மூலம் எப்படியோ அப்படியே, ஓரிரண்டு பகுதிகளை மட்டும் சுருக்கி  இந்தக் கலைப் பொக்கிஷத்தைத் தமிழில் சமைத்த பெருமை அவருடையதாகும்.

      ‘அன்னா கரீனா’வைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்துச் சில கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தபோது அவை யாவும் சுருக்கமானதாகவும், தழுவலாகவும், நடுநடுவே சிற்சில முக்கிய பாகங்கள் மொழி பெயர்க்காமல் விடப்பட்டனவாகவும் கிடைத்தன. அதன் பின்னரே ஸ்ரீ சந்தானம் அவர்களைச் சந்தித்து அவரைக் கலந்து பேசியபோது, அவரும் இது தமிழில் வெளிவர வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தை வெகுவாக ஆதரித்து, இதை அப்பட்டமாக மொழிபெயர்த்துக் கொடுக்க இசைந்தார். அதன்படியே இலக்கிய மணங் கமழ மொழிபெயர்த்தும் கொடுத்துள்ளார். அன்னாருக்கு எங்கள் இதய பூர்வமான நன்றி.

    கடைசியாக ரஸிகர்களுக்கும் எங்கள் நன்றி உரியதாகும். காந்திஜிக்குக் குரு போன்ற டால்ஸ்டாயின் மற்றொரு சிருஷ்டி, ‘புத்துயிர்’ (Resurrection) தமிழில் வெளிவர இருக்கிறது. அது எப்பொழுது வரும் என்று ‘அன்னா கரீனா’வைப் படித்துவிட்டு எழுதப்போகும் எல்லா அன்பர்களுக்கும், “தமிழர்களாகிய தங்களின் ஆசியைப் பொறுத்தது அவ்விஷயம்!” என்பதை முன் கூட்டியே தெரிவித்துக் கொண்டு விடுகிறோம்.

திருவல்லிக்கேணி                           அ.கி.கோபாலன்

22-3-’47                                    தமிழ்ச் சுடர் நிலையம்

*

எனது தந்தையாரைப் பற்றி, “அடக்கம், பண்பு, அமைதி ஆகிய இம் மூன்றும் ஒருங்கே குடி கொண்டுள்ள நண்பர் ஸ்ரீ வெ. சந்தானம்” என்று திரு அ.கி. கோபாலன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் இந்த நேரத்தில் எங்கள் சிரந் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

TAGS- அன்னா கரீனா – 2

***

INDEX 7 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES – 2012 (Post No.8515)


LONDON SWAMINATHAN’S VISIT TO ATHENS, GREECE 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8515

Date uploaded in London – 15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2012

வடக்கே தலை வைக்காதே , ஆகஸ்ட் 30, 2012

ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது உண்மைதான் 30/8

சிந்து  சமவெளியில் புலிப் பெண் 23/8

சிந்து  சமவெளியில் பேய் முத்திரை 20/8

சைவம் க்விஸ் Quiz on Saivite Saints 18/8

ஸ்தோத்திர க்விஸ் 13/8 Quiz on Hymns in English and Tamil 13/8

இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 11/8

தமிழர்கள் கணித மேதைகள் 8/8

27 நட்சத்திர க்விஸ் 5/8

****

செப்டம்பர் 2012

வீரத்தாயும் வீரமாதாவும் 23/9

பகுதி 2 – கடலில் மர்மத் தீ  20/9

பகுதி 1 – கடலில் தோன்றும் மர்மத் தீ  20/9

அபூர்வ வலம்புரிச் சங்கு 17/9

பகுதி 5 – தொல்காப்பியர் காலம் தவறு 14/9

பகுதி 4 – தொல்காப்பியர் காலம் தவறு 13/9

பகுதி 3 – தொல்காப்பியர் காலம் தவறு 12/9

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே 10/9

பகுதி 2 – தொல்காப்பியர் காலம் தவறு 10/9

பகுதி 1 – தொல்காப்பியர் காலம் தவறு 9/9

தமிழர்களின் தழை உடை –1 , செப்டம்பர் 8/9

தமிழர்களின் தழை உடை –2 , செப்டம்பர் 8/9

மிலேச்ச என்றால் என்ன ? 6/9

பொன் (அயஸ்) என்றால் என்ன? 6/9

*****

AUGUST 2012

Did Indians build Egyptian Pyramids , August 27, 2012

Science behind Swayambu Lingams 29/8

Vedas and Egyptian Pyramid texts 29/8

Flowers in Tamil Culture 25/8

Tiger Goddess of Indus Valley 22/8

Ghost in Indus Seals 19/8

27 Similes in Vedic Hymn 18/8

Why do Hindus Worship Shoes? 15/8

The Story of Hypocritical Cat 14/8

Quiz on Hymns in English and Tamil 13/8

Amazing Statistics on Kalidasa12/8

Indra Festival in the Vedas and Tamil Epics 11/8

Amazing Tamil Mathematics 8/8

27 Star Quiz ( English and Tamil) 5/8

330 Million Gods 5/8

NAVARATRI IN JAPAN AND GREECE 4/8

Gajendra Moksha in Africa 2/8

Sanskrit in the Bible- Part 2 , August 1, 2012

Xxxxxxxx

SEPTEMBER 2012

45 Words for Elephant , 30 September 2012

Elephant Miracles 29/9

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda 26/9

Veera Matha- Mother of Heroes in the Vedas and Tamil literature 22/9

What is Vadamukagni – Submarine Fire? 21/9

Rare Conch- Dakshinavarta Shanka 19/9

Hindu gods in Egyptian Pyramids 16/9

Biggest Brainwash in the World 13/9

Tolkappian- A Genius 12/9

Did Tolkappiar Copy from Sanskrit Books ? 10/9

WHO WAS TOLKAPPIAR.?9/9

Ancient Tamil Dress 8/9

Vishnu in Egyptian Pyramids -3 5/9

MLECHA- Most Misunderstood Word 3/9

AYAS AND ASVA – Most Misunderstood words 3/9

Kannaki and Andal Weddings 2/9

Three Beautiful Tamil Hindu Weddings 2/9

Miracles do Happen 1/9

Xxxx

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for AUGUST and SEPTEMBER,  2012

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 7, INDEX 7, S.SWAMINATHAN,  ARTICLES,

அச்சா எழுத்து! அச்சுப் போன்ற எழுத்து!! (Post No.8514)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8514

Date uploaded in London – 15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ்ப் பழமொழி அகராதியில்  ஓர் பழமொழி இருக்கிறது . அதில் ‘ஹம்ச பாதம்’ , ‘அன்னப்  பறவையின் கால்’ , என்று வரும்:-

ஆரம்பிக்கிறதற்கு பின்னே ஹம்ச பாதமா ?

ஆரம்பித்தவுடனே ஹம்சபாதமா? என்றும் சொல்லலாம். அதாவது உடனே தவறு செய்வது அல்லது எதையோ எழுத அல்லது சொல்ல மறந்துபோனதைக் குறிக்கும் பழமொழி இது.

ஹம்சபாதம்’ என்றால் என்ன ?

எழுதும்போது விட்டவற்றை , மேல் எழுதுவதற்கு , வரியின் கீழ் இடும் குறி ‘ஹம்சபாதம்’ .

ஹம்சம் எனப்படும் அன்னப் பறவையின் கால்களைப் போல இந்தக் குறி இருக்கும்.

நம்மில் பலரும் கடிதம் எழுதும்போதோ கட்டுரை எழுதும்போது இப்படி ஹம்ச பாதக் குறியீடு போட்டிருப்போம். அதாவது சிந்திக்கும் வேகம் அதிகம்; எழுதும் வேகம் குறைவு. அதனால் இந்தப் பிழை வருகிறது. இரண்டு வேகமும் சரி சமமாக இருப்பதே நல்லது.

இதே போல சிலர் பேசும்போதும் வேகமாகப் பேசுவதால் சொல்லோ எழுத்தோ அடிபட்டு காயப்படுகிறது. அதுவும் பிழையே. ஊடகங்களில் செய்தி வாசிப்போர் , சிலர், பிழை ஏற்பட்டால், நிறுத்திவிட்டு பிழையைத் திருத்திக் கொள்வர். மற்றும் சிலர் பிழையே  விடாதது போல, அடுத்த வாக்கியத்திற்குச்  செல்வர்.

ஆர் எஸ் எஸ் (R S S ) இயக்கத்தின் தலைவராக இருந்த மாதவ சதாசிவ கோல்வால்கர் (குருஜி ) கடிதம் எழுதும் பொழுது, அடித்தல் திருத்தலே இராதாம் . மதுரையில் இருந்த புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஆர் எஸ் எஸ் இயக்கப் பிரமுகருமான ஆ .தக்ஷிணா மூர்த்தி (அண்ணாஜி) இதை எங்களிடம் சொல்லுவார்.அவருக்கு குருஜியிடமிருந்து கடிதம் வந்த பெருமையைச் சொல்லுவதை விட, நாமும் அது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையே பிரதானம்.

என்னிடம் லண்டன் பல்கலைக் கழகத்தில் சுமார் 20 ஆண்டுகளில் 350 முதல் 400 பேர் வரை தமிழ் படித்திருப்பார்கள் . இது தவிர ‘பிரைவேட் கிளாஸ்’.

நான் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்திய  புஸ்தகத்தை இங்கும் பயன்படுத்தினேன். அது கௌசல்யா ஹார்ட் (TAMIL FOR BEGINNERS by KAUSALYA HART)  எழுதிய புஸ்தகம். முதல் பகுதியில் 45-க்கும் மேலான பாடங்கள் இருக்கும். இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு பாடத்திலும்  பின்பற்றப்பட்ட இலக்கண (GRAMMAR)  விஷயங்கள் இருக்கும் . மாணவர்கள் வகுப்புக்கு வரும் முன்பு பாடத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வரவேண்டும். அதை நான் பாடம் நடத்துகையில் , அவர்கள் திருத்தி எழுதிக் கொள்வர். பயிற்சிகளை பாடம் முடித்த பின்னர் தொடர்வோம். அதை மறு வகுப்புக்கு (Next Class) வருகையில் சமர்ப்பிப்பர். நான் அதைத் திருத்திக் கொடுப்பேன்.

சுமார் 400 மாணவ, மாணவியரில் யாரும் 4, 5 கிளாஸுக்குப் பின்னர் சுணக்கம் காட்டுவர்.15 பாடம் முடித்த நிலையில் அவர்கள் 7 , 8 பாடம்தான் முடித்திருப்பர் . ஆனால் யாஸ்மின் (Yasmeen) என்ற ஒரு பெண் மட்டும் அத்தனை பாடங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வாரம் தோறும் சமர்ப்பித்தார். அச்சுப் போன்ற எழுத்து!. ஹம்சபாதமே கிடையாது!! சில எழுத்துப் பிழைகள் மட்டும் இருக்கும்.

அச்சுப் போன்ற (BEAUTIFUL HAND WRITING) கையெழுத்துக்காக நான் ‘கூகிள்’ செய்தபோது தமிழில் பாரதியார் பாடலைத்  தப்பும் தவறுமாக எழுதி இருந்த படமே வந்தது. அதைப் பார்த்தபோதும், ஹம்சபாதம் பற்றிப் படித்தபோதும் யாஸ்மின் என்ற உண்மை மாணவியின் நினைவு வந்தது. அவர் எழுதிய பாடங்களை நான்  யுனிவர்சிட்டியில் போட்டோகாப்பி எடுத்து வைத்திருந்தேன். சில பகுதிகளை இங்கே இணைத்துளேன்.

***

நான் கட்டுரையில் விட்ட எழுத்துப் பிழைகளைப் பார்த்த — பார்த்துச் சகிக்காத — ஒரு பெண்மணி எனக்கு பேஸ்புக் (Facebook) கிலேயே ஒரு ‘அடி’ கொடுத்துவிட்டார்; வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு ‘காமெண்ட்’ (COMMENT) எழுதியிருந்தார் —

“மிஸ்டர் சுவாமிநாதன், உங்கள் கட்டுரைகளை எனக்கு முன்கூட்டி அனுப்பினால் ‘ப்ரூப் ரீடிங்’ செய்து தருவேனே!’ – என்று.

எனக்குப் புரிந்தது. பல பிழைகள் ‘கூகிள்’ செய்யும் பிழைகள்; நாம் ஒன்று அடித்தால் அதில் வேறொன்று வருகிறது!!! பொறுமையாக தவறுகளைத் திருத்த   வேண்டும் என்பது உண்மைதான் !

வாழ்க யாஸ்மின் ! வளர்க்க தமிழ் எழுத்துக் கலை!

அரச மரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8513)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8513

Date uploaded in London – 15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்

அரச மரத்தைச் சுற்றியதும்  அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாற்  போல

( கர்ப்பிணி  ஆகிவிட்டோமா என்று அறிய)

அரச மரத்துக்கடியில் இருக்கும் கல் அத்தனையும் பிள்ளையார்தாம்

அரச மரத்தடி பிள்ளையாரே அடியேனுக்கும் ஒரு பெண் பாரும்

அரச மரத்தைப் பிடித்த சனியன் பிள்ளையாரையும் பிடித்ததாம்

ஆல் பழுத்தால் அங்கே , அரசு பழுத்தால் இங்கே 

tags – அரச மரம் , பழமொழி,

—– subham —-

கத்துக்குட்டியின் 17 ஜோதிட- வானியல் கேள்விகள் (Post No.8512)

NAVA GRAHAS IN ASHMOLEAN MUSEUM , OXFORD, ENGLAND

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8512

Date uploaded in London – 15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.எல்லாக் கிரகங்களும் மேற்கு கிழக்காகச் சுற்றுகின்றன ; ஆனால் ஒரு கிரகம்

மட்டும் கிழக்கு மேற்காகச் சுற்றுகிறது. அது எந்தக் கிரகம்?

2.மற்ற கிரகங்கள் சூரியனை வலமாகச் சுற்றுகையில் இரண்டு கிரகங்கள்

மட்டும் இடமாகச் சுற்றுகின்றன; அவை யாவை?

3.பகலும் இரவும் சமமாக வரும் நாட்கள் (12 மணி நேரம்) எவை?

4.பூமியின் வட பகுதியில் (வட கோளார்த்தம் ) வாழ்வோருக்கு

அதிக நேரம் இரவு வரும் நாள் எது?

5.பூமியின் வட பகுதியில் (வட கோளார்த்தம் ) வாழ்வோருக்கு

அதிக நேரம் பகல்  வரும் நாள் எது?

NAVA GRAHAS IN BRITISH MUSEUM, LONDON

6.கிரகங்களில் சிறிய கிரகம் எது?

7.கிரகங்களில் பெரிய கிரகம் எது?

8.சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

9.ஒலியின் வேகம் (SPEED OF SOUND) என்ன ?

10.ஒளியின் (SPEED OF LIGHT) வேகம் என்ன?

11.பூமியின் வயது என்ன ?

12.மனித இனம் தோன்றி எவ்வளவு ஆண்டுகள் ஆயின ?

13.பஞ்ச பூதங்கள் யாவை?

14.கிரகங்களில், கடவுள்களில், மனிதர்களில் யாருக்கு ‘ஈஸ்வரன்’ பட்டம் இருக்கிறது ?

15.கிரகங்களில் ஒருவரைக் குருடன் என்றும் மற்றொன்றை நொண்டி என்றும் பகடி செய்வார்கள் ? இந்தக் கிரகங்களைத் தெரியுமா ?

NAVA GRAHAS IN VARASITHY VINAYAKAR TEMPLE, SWITZERLAND 

16.சக்கரம் இல்லாத தேரில் பவனி வருபவன் என்றும் ஒரு சக்கரத் தேரில் பவனி

 வருபவன் என்றும் இலக்கியங்கள் புகழும் கிரகம் எது?

17. சனி பகவான் யார் ஒருவரைக் கண்டு மட்டும் பயப்படுவான் ?

கத்துக்குட்டி நாளை பதில் சொல்லுவார்.

TAGS – KATTUKUTY, quiz, ஜோதிட- வானியல் கேள்விகள்,

Books Indians Should Read – 16 (Post No.8511)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8511

Date uploaded in London – – – 15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Books Indians Should Read – 16

Chapter 6 –Part 1

COLLECTED WRITINGS OF

 DHARAMPAL-1

R. Nanjappa

Who is Dharampal?

Dharampal [1922-2006] was a Gandhian worker and thinker. He took part in the freedom movement, discontinuing his college studies, culminating in the Quit India activities, when he went underground. He was imprisoned, and later released, with entry denied to Delhi. He got interested in community work, rediscovering and regenerating the indigenous sources and modes of the organization of rural life. This culminated in his discovery of the roots and nature of the Village Panchayat system. He was sorely disappointed that the Indian Constitution did not recognise and incorporate the Indian aspects of administration and governance, even where these could be easily adopted.

 He was outraged by the disgrace India faced  at the time of the Chinese aggression of 1962. He, along with two friends, wrote an open letter to the Members of Parliament, demanding that PM Jawaharlal Nehru should resign, owning moral responsibility.  As a result, he was imprisoned along with his friends, and put into Tihar Jail! This was the great  secularist darling Nehru’s idea and display of democratic spirit!
 [Incidentally, this is how governments of free India have been treating peaceful protesters and dissenters, whether it is Sunderlal Bahuguna or Anna Hazare!] 


What did he do?

His study of the panchayat system in the villages of Tamil Nadu acquainted him with the way the colonial power brutally destroyed that working system, also extensively disrupting in the process  the economic, social and political life of the people.
 He wanted to study in detail the nature of Indian society as it existed at the time of British colonisation. For this he undertook a detailed and painstaking study of the original material lying in various archives, libraries, museums, etc abroad and in India. He thus accessed the records prepared by the officials of the East India Company and government servants, detailed correspondence between officials of all grades, at all levels, right up to Governor General and the Board of Commissioners in London. In the absence of photocopying facilities, and the means to afford them, he wrote down the documents in long hand, running into millions of words and thousands of pages. His writings are based on these original records. He thus performed a task which no other academic historian has attempted.


His writings have been gathered into some books. The Other India Press, Mapusa, Goa has brought out a beautiful set of five volumes, [2016] containing his major writings. The volumes are organised around themes as under:

I. Indian Science and Technology in the Eighteenth Century.

II. Civil Disobedience and Indian Tradition.

III. The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century.

IV. Panchayat Raj and India’s Polity.

V. Essays on Tradition, Recovery and Freedom.

What is the significance of his work?

Our knowledge of our history, in recent times, is largely derived from what foreigners have written. The foreigners were of different types, with different motives: plunderers, invaders, scholar-travellers, traders, etc. At last came the Europeans as traders, but soon developed territorial ambitions. The British succeeded in the end more than the others, and established colonial rule. 

Dharampal shows that though officially it was only in 1858 that the Crown took over direct administration, the fact is that right from 1785 it was the English government which was directing Indian affairs, and the Company was only the executing arm. In 1858, that executing arm was dispensed with.

The colonial power was only interested in maximising its revenue from India. [This fact was noted by the great Adam Smith in his ‘Wealth of Nations’, 1776.] They had to understand the indigenous industries, technology, trading systems so that they could eliminate indigenous products and sell their own. 

Later, as a fall out from the Scottish Enlightenment movement which was developing, some sections wanted to study the local philosophies, religions, social systems, etc so that valuable knowledge accumulated by these societies in the past would not be destroyed, as it had happened in the Americas. So, the company officials were asked to gather information and file reports. It is in this process that many reports containing much valuable information was gathered from original sources relating to almost all aspects of Indian life. Some of the early students of Indian systems of knowledge and its languages were truly impressed by what they found, and this gave rise to British Indology. 

However, as the imperial ambitions gathered force, the colonial power as the ruling class did not want to admit the achievements or superiority of Indians in any field. They deliberately suppressed the facts, and gave a distorted image of Indian society as poor, backward, etc denigrating Indians as a whole. Thematerial gathered in the reports filed by the company officials were not made public, and did not serve as the basis for their administration.


 The colonial power wrote our history giving this distorted picture, and the educational system they imposed here made every Indian believe that he was indeed backward! This is the image which is still persisting, 70 years into so called Independence!

அன்னா கரீனா : தினமணி திரு. சந்தானம் மொழி பெயர்த்த அற்புத நாவல் (Post No.8510)

Sri V Santanam standing behind Rajaji.

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8510

Date uploaded in London – – –15 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

1998ஆம் ஆண்டு. ஆகஸ்ட் 15. எங்களது தந்தையார் மதுரை எல்லிஸ் நகரில் ‘கொடி ஏத்தியாச்சா என்று கேட்டு விட்டு அமரரான நாள். அவருக்கு எங்கள் அஞ்சலி! – வெ.சந்தானம் குடும்பத்தினர்!

அன்னா கரீனா : எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அவர்கள் மொழி பெயர்த்த அற்புத நாவல்! -1

ச.நாகராஜன்

1

    லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா நாவல் ஒரு அற்புதமான நாவல். உலகப் புகழ் பெற்ற நாவல். இதை 1947ஆம் ஆண்டு தமிழ்ச் சுடர் நிலையம், திருவல்லிக்கேணி, சென்னை வெளியிட்டது.

இதை எனது தந்தையார் தமிழில் மொழி பெயர்த்தார்.

நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் 396 பக்கங்களைக் கொண்டது. இரண்டாம் பாகம் 348 பக்கங்களைக் கொண்டது. மொத்தம் 744 பக்கங்கள்.

நூலை வெளியிட்டவர் திரு அ.கி.கோபாலன், தமிழ்ச் சுடர் நிலையம், சென்னை.

அவர் நூலுக்கான பதிப்புரையைத் தந்துள்ளார்.

நூலுக்கு முகவுரை தந்துள்ளவர் பிரபல எழுத்தாளரான ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்கள்.

நூலுக்கு முன்னுரை தந்துள்ளவர் எனது தந்தையார்.

நூல் உருவான விதத்தையும் நூலின் தரம் பற்றியும், அன்னா கரீனாவின் கதைச் சுருக்கத்தையும் நான் விளக்குவதற்குப் பதிலாக இந்த நூலில் உள்ள முன்னுரை, பதிப்புரை மற்றும் முகவுரையே விளக்குவதால் அவற்றை இங்கே தருகிறேன்.

2

Mr V Santanam and Mrs Rajalakshmi Santanam in Madurai

முதலில் முன்னுரை இதோ:

முன்னுரை

     ஞானி டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனா வெறும் நாவல் மட்டும் அல்ல; பெரிய காவியம்; தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம். இதில் வரும் கதா பாத்திரங்களை முற்றிலும் கற்பனை ஜீவன்கள் எனக் கூற முடியாது; அவர் ஏட்டிலே தீட்டியுள்ள அன்னாவையும், ஆப்ளான்ஸ்கியையும் கரீனையும் விரான்ஸ்கியையும், கிட்டியையும், டாலியையும், லெவினையும் ரஷ்யாவில் மட்டுமின்றி இந்தத் தேசத்திலே, இந்த உலகத்திலே எங்கும் காணலாம். அத்தனை பேரும் இன்றும் என்றும் காணப்படக் கூடிய உயிர்ச் சித்திரங்கள். மனித சமுதாயத்துக்கு ‘அன்னா கரீனா ஒரு வரப்பிரசாதம்.

   மனோரஞ்சித மலருக்கு ஒரு விசேஷ குணம் உண்டென்று சொல்வார்கள். அந்த மலரை முகரும் போது எந்தப் புஷ்பத்தின் வாசனையை நினைத்துக் கொண்டு முகருகிறோமோ அந்த வாசனையைத் தருமாம் மனோரஞ்சிதம். அது போலத்தான் ‘அன்னா கரீனா என்ற இந்த சிருஷ்டியும்.

   இந்த நாவலைத் தமிழில் வெளியிட வேண்டுமென்று தமிழ் சுடர் நிலையத்தின் அதிபர் ஸ்ரீ அ.கி.கோபாலன் அவர்கள் துடியாய்த் துடித்தார். அவருடைய மகத்தான உற்சாகமும் பேரறிஞர் டால்ஸ்டாயின் காவியப் போக்குந்தான் நானே திடுக்கிடும்படியான அளவு வேகத்தில் மிகக் குறுகிய காலத்தில் இதை மொழிபெயர்த்து முடிக்க என்னை ஊக்கி ஓட்டியவை. அந்த வேகத்தின் காரணமாகக் குற்றங் குறைகள் என்னை அறியாது ஏற்பட்டிருக்கலாம். “இப்படி அவசரமாக எழுதுவானேன்? ‘குற்றங் குறைகளை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று சம்பிரதாயமான பல்லவியைப் பாடுவானேன்?” என்று அன்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. நண்பர் கோபாலன் அவர்களின் ஆசையும், அன்பும், ஊக்கமும், தமிழன்னைக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் என்னை அபாயமறியாத வேகத்தில் இந்தப் பணியைச் செய்யத் தூண்டி விட்டன. ஆகவே ‘அன்னா கரீனா’ தமிழ் மேடையில் ஏறிய பெருமை முற்றிலும் நண்பர் அ.கி. கோபாலன் அவர்களையே சாரும்.

   நான் மட்டும் தனியாக இருந்தேனாகில் இந்த முத்துக் கடலில் இறங்கும் துணிவு எனக்கு ஏற்பட்டிருக்காது. இந்தத் துணிவை ஏற்படுத்தி எனக்கு கைலாகு கொடுத்து உற்சாகமூட்டி உதவி செய்த அன்பர்கள் பலர். அவர்களில் விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய நண்பர், பல சிறு கதைகளும் நாவல்களும் எழுதியிருப்பவரும், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான “கலைமகள்” ‘ஆர்வி’ ஆகும். அவர் செய்த உதவி மகத்தானது. ‘உயிரைக் கொடுத்து உதவுகிறேன்’ என்று சில நண்பர்கள் உபசாரமாகக் கூறுவர். ஆனால் இந்தக் கோபுரத்தை எழுப்பி முடிக்க, இரவு பகலெனப் பாராமல் உயிரைக் கொடுத்து உதவி செய்த ’ஆர்வி’க்கு என்றும் நான் கடமைப்பட்டவன்.

   இந்தப் புத்தகத்துக்கு மனமுவந்து அருமையான முகவுரை எழுதியிருக்கும்

ஸ்ரீ ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்களுக்கு என் நன்றி உரியதாகும். தாம்ப்ஸன் அச்சகத்தைச் சேர்ந்த ஸ்ரீ துரைசாமியின் ஒத்துழைப்பையும் என்னால் மறக்கவியலாது. மற்றும் சில ஆப்த நண்பர்கள் புத்தகம் வெளிவரப் பேருதவி செய்திருக்கின்றனர். அவர்களுடைய பெயர்களைப் பிரஸ்தாபிப்பதற்கில்லை. அவர்களுக்கும் என் நமஸ்காரம்.

   இங்கே ஒரு விஷயத்தை வாசகர்களுக்கு அறிவிக்க வேண்டியது என் கடமை. மூல நூலில் உள்ள ‘அன்னா கரினினா’ என்ற பெயரை ‘அன்னா கரீனா’ என்று மட்டுமே படிக்கும் சௌகரியத்தை உத்தேசித்து நான் மாற்றியுள்ளேன். ‘கரினினாவுக்கு, கரினினாவுடைய, கரினினின்’ என்று இம்மாதிரி வரும் இடங்கள் எல்லாம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் சிரமமாக இருக்கிறது என்று உணர்ந்து இந்த மாறுதலைச் செய்தேன். இதை அன்பர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

   “பேணுமொரு காதலை வேண்டியன்றோ பெண்மக்கள்…” என்று மகா கவி பாரதி எழுதிய உண்மை துலங்கும் இந்த வாழ்க்கைச் சித்திரத்தைத் தமிழன்னையின் பிரதிநிதிகளான தமிழர் சந்நிதானத்தில் பக்தியுடனும், ஆர்வத்துடனும் சமர்ப்பிக்கிறேன். ஆசையில் செய்த பணி; அன்பர்கள் ஆசீர்வாதம் வேண்டி நிற்கும்

திருவல்லிக்கேணி

21-3-’47                                        வெ.சந்தானம்

**

அடுத்த பகுதிகளில் பதிப்புரை மற்றும் முகவுரையைப் பார்ப்போம்.

Tags – ‘அன்னா கரினினா’, வெ.சந்தானம், லியோ டால்ஸ்டாய்

Previous Post on Anna Karenina

Please Help to Find our Father’s Tamil Translation of Anna …

tamilandvedas.com › 2011/11/07 › p…

Translate this page

7 Nov 2011 – Anna Karenina was written by the famous Russian author Leo Tolstoy. My father Venkatraman Santanam translated it in to Tamil in the 1940s …

November | 2011 | Tamil and Vedas | Page 4

tamilandvedas.com › 2011/11 › page

11 Nov 2011 – 5 posts published by Tamil and Vedas during November 2011. … Please Help to Find our Father’s Tamil Translation of Anna Karenina.

to be continued………………………..

Part 3-சிவ பக்தர் படம் இங்கே ! பெயர் எங்கே? (Post No.8509)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8509

Date uploaded in London – 14 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானால் பாடப்பட்ட 63 நாயன்மார்களில் , நேற்று பத்துப் பேரைக் கண்டோம். இதோ மேலும் சில படங்கள். –இவைகளைப் பார்த்தவுடன் நாயன்மாரின் பெயர்  நினைவுக்கு வருகிறதா என்று  பாருங்கள்.

picture 1
picture 2

picture 3

picture 4

picture 5
picture6
picture 7
picture 8
picture 9
picture 10

படங்களுக்கு விடைகள்:–

1.அதிபத்த நாயனார் 2.எறி பத்தர் 3. மூ ர்க்க நாயனார் 4.கலிக்கம்பர்
5.காரைக்கால் அம்மையார் 6.கோட்புலி நாயனார் 7.பூசலார்
8.ருத்ரப் பசுபதி நாயனார் 9.திருநீல கண்டர் 10. திருநீல நக்க நாயனார்.

tags –சிவ பக்தர் படம் -3, நாயனார்

INDEX 6 FOR S.SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES – 2012 (Post No.8508)

LONDON SWAMINATHAN IN ATHENS, GREECE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8508

Date uploaded in London – 14 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுவாமிநாதன் கட்டுரை இன்டெக்ஸ்-6

ஜூன் 2012

பெண்கள் பற்றி 300 தமிழ்ப்  பழமொழிகள் – இறுதிப்பகுதி , ஜூன் 28, 2012

பெண்கள் பற்றி 300 தமிழ்ப்  பழமொழிகள் – பகுதி 2,  ஜூன் 26, 2012

பெண்கள் பற்றி 300 தமிழ்ப்  பழமொழிகள் – பகுதி 1, ஜூன் 28, 2012

பாரதி பாட்டில் பழமொழிகள் -ஜூன் 25, 2012

பொம்பளை சிரிச்சா, உதைச்சா , பார்த்தா போச்சு – ஜூன் 23, 2012

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள் -பகுதி 1, ஜூன் 22, 2012

இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள் -பகுதி 2, ஜூன் 22, 2012

நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை -ஜூன் 18, 2012

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியமா ?- ஜூன் 17, 2012

மாதவியின் 11 வகை நடனங்கள் – ஜூன் 16, 2012

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல் – ஜூன் 6, 2012

யானை பற்றிய நூ று பழமொழிகள் – ஜூன் 5, 2012

சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா- கம்போடியா அதிசய தொடர்பு- ஜூன் 5, 2012

கண்ணன் வழி  தனி …வழி –ஜூன் 2, 2012

நாமும் அனுமார் ஆகலாம் –ஜூன் 2, 2012

உலக செஸ் சாம்பியன் ஆனந்த் –ஜூன1, 2012

ஜூலை  2012

Tamil Quiz-3 தமிழ் தெரியுமா ஜூலை 29, 2012

Tamil Quiz-2 தமிழ் தெரியுமா ஜூலை 25, 2012

Tamil Quiz-1  தமிழ் தெரியுமா ஜூலை 23, 2012

Hindu Tamil Quiz-4  ஜூலை 20, 2012

Hindu Tamil Quiz-3, ஜூலை 16, 2012

சம்ஸ்க்ருதத்துக்கு உயிர் இருக்கிறதா –ஜூலை 15, 2012

Hindu Tamil Quiz-2,ஜூலை 14, 2012

தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுக –ஜூலை 13, 2012

Hindu Tamil Quiz -ஜூலை 11, 2012

கம்பன் வீட்டுக்  கட்டுத் தறியும்  கவி பாடும் –ஜூலை 17, 2012

ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்) –ஜூலை 9, 2012

போஜராஜன் செய்த தந்திரம் – ஜூலை 7, 2012

குமரியில் புகழ் மிகு சிலைகள் –ஜூலை 7, 2012

JUNE 2012 Posts

Largest Gold Coin , June 29, 2012

Lie Detectors in Upanishads 27/6

Flags of Ancient Indian Kings 21/6

Serpent Queen: Indus Valley to Sabarimalai 17/6

Matavi’s 11 types of Classical Dance 15/6

Hindu Runners 6/6

Pictures of Sahasralinga in Karnataka, Cambodia 5/6

Latest News on Ganges Water 4/6

20000 Tamil Proverbs 1/6

Xxxxx

JULY 2012 by London swaminathan

Answers for Interesting Logo Quiz, July 31, 2012

INTERESTING LOGO QUIZ,30/7

MOST HATED NUMBERS 666 and 13, 29/7

ETRUSCAN-HINDU/TAMIL LINK 28/7

Rs 10 Gandhi Stamp is Rs 14,000 26/7

London is Changing 25/7

Hindu Picture Quiz-1 , 24/7

.Largest Golden Temple in the World 23/7

Can Birds Predict Your Future? 22/7

108,000 Temples in India 21/7

Hindu Quiz-4 20/7

Tamil Saint’s Mad Experiment 19/7

Sanskrit and Computers 18/7

Tiruvalluvar Statue in London 18/7

280 SANSKRIT WORDS FOR WATER 17/7

Hindu Quiz-3 16/7

Sanskrit in Bible 14/7

Secrets of Vishnu Sahasranama 13/7

Hindu Quiz-2, 12/7

Hindu Quiz-1,11/7

Four Birds in one Sloka: Adi Sankara and Nature 9/7

Largest Story Collection in the World 8/7

New York Ideas 7/7

Two Statues that inspired the World 5/7

Shakespeare or ‘Fake’speare? JULY 4, 2012

****

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for JUNE and JULY  2012

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of S Swaminathan.

Later I used ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

TAMIL TITLES ARE GIVEN SEPARATELY.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OFINDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 6, INDEX 6, S.SWAMINATHAN,  ARTICLES,

அக்கிரகாரம் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8507)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8507

Date uploaded in London – 14 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா ?

2.அக்கிரகாரத்தில் செத்தாலும் அடக்கம் சுடுகாடுதான்

3.அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா ?

4.அக்கிரகாரத்து நாய் பிரதிட்டைக்கு அழுதது போல

5.அக்கிரகாரத்துக்கு ஓர் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்

tags — அக்கிரகாரம் ,பழமொழி, கண்டுபிடியுங்கள்