Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
வருங்கால
ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் என்ற எண்ணத்தில், தினமலர் பத்திரிக்கையில் வெளியான விலைவாசி விவரம் இதோ (செப்டம்பர் 2019, சென்னை நகர நிலவரம்)-
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
During my
third trip to India this year (2019), I was fortunate enough to have darshan of
Lord Krishna in Udupi in Karnataka on 12th September 2019. It is a
big town and district headquarters. So I saw a lively town. I was lucky to have
darshan in 15 minutes. I stayed there in Hotel Samanvay which I think is a
three star hotel. It’s standard was very high and came equal to good hotels in
London. It has a restaurant as well.
Let us go to the temple now. Before we entered the temple we saw yellow sari clad ladies singing the Kirtans on Lord Krishna. The sweet music was broadcast by loudspeakers. When I went to the temple next morning to get a book on the temple still the bhajan was going on. Only when I examined my pictures, I came to know it was a different group in the same uniform. It looks like the temple surroundings are surcharged with this Bhajans and Kirtans 24 hours a day. (Please see the pictures taken by me).
Where is
Udupi?
It is a
coastal town in Dakshina Kannada, 380 kilometres from Bengaluru and 60
kilometres from Mangaluru. Well connected by railways and road routes.
What is
there to see?
The
famous temple of Lord Krishna founded by Saint Madhvacharya is in the town.
There are
two interesting things about the temple. Kanakadasa was a great saint. He was
born in a low caste and so he was not allowed to have darshan (viewing’ seeing
) of the Lord through the main entrance of the temple. But when he came to the
temple complex Lord Krishna himself turned in the direction of Kanaka dasa. He
saw the lord’s idol through the window. From that day onwards Lord Krishna was
seen only through the Kanakadasa window. It is similar to the story of Saint
Nandanar of Tamil Nadu. The low caste devotee was not allowed to have the
Darshan of Lord Shiva and so Siva ordered his lieutenant Nandkikeswara to move
to a side so that Nandanar can see him.
Lord Krishna of Udupi is decorated with lot of valuable jewellery. The second important thing about the temple is that eight mutts run the temple in rotation. Every tow years, a new mutt takes charge of the temple. All the eight mutts are around the temple.
Udupi is
surrounded by many famous towns and beauty spots. Famous Manipal Medical
college, beautiful sandy beaches, several temples are in the vicinity. So one should
spend a few days in Udupi to see all the places.
Since June to September is a rainy season for Karnataka we also experienced occasional heavy showers. Tourists and devotees throng the area . all through the year.
Another interesting story about Udupi Krishna
Madhvacharya,
the great Vaishnava saint and exponent of Dwaita philosophy was doing prayers
in the beach . He saw a ship sailing towards a big rock. Madhva alerted the
captain of the ship by waving his top cloth and the great disaster was averted.
The captain was very grateful and offered any valuable item on the ship. But Madhva
said that being a sanyasin / ascetic he couldn’t accept any valuable gift. When
Madhva came to know that ship is sailing from Dwaraka, another holy shrine of
Lord Krishna with ballast, he asked for the yellow ballast/clay so that he and
his devotees could use it for tilak and holy marks on their bodies. Years
rolled after this incident and when the ballast was broken into pieces, they
found the statues of Balarama and Krishna inside. Balarama was installed in a
temple on the beach and Lord Krishna’s statue was taken eight miles inland to
the modern Udupi. All this happened 800 years ago.
One more
important thing about Udupi is saint Madhva’s birth place Pajaka village is nearby.
Malpe is only a few miles away where Balarama temple is situated on the coast.
So one
can earn lot of Punya by visiting Udupi and its surrounding holy shrines. I saw
lot of Tulsi pots in front of the temple.
Whether one knows Udupi Krishna or not, Udupi hotels (restaurants) are very famous through out South India. The sign Udupi Hotel stands for quality and taste.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை
அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!
ச.நாகராஜன்
மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும்
சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.
செல்வம் சேர வேண்டும், நல்ல
உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு
ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ
சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.
அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும்
சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும்
கூட!
காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத்
தரும் அற்புதமான தேவதை!
அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை
வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள்
ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.
காமதேனுவில் அனைத்து தெய்வங்களும்
குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய
பெரும் பேறை அடைகிறோம்.
காமதேனுவிற்கு சுரபி என்றும்
நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.
முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச்
சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு
வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக
இருப்பாய் என்று கூறி அருளினார்.
பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள்
புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை
அறிய முடிகிறது.
சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா
தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து
வருகின்றன.
வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.
உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று
தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால்
நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி
அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன்
ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.
அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு
உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற
பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.
காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால்
அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில்
கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.
பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது
:
பசுவின் பற்களில் (புயல், மின்னல்
ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும், நாக்கில்
சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின் முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய
சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.
நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள்
அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய
நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும், லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.
எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும்
தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.
அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை,
மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள்
வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர்.
அது மாங்கல்ய தேவதை.”
பசுவின் நான்கு கால்களும் நான்கு
வேதங்கள் எனக் கூறப்படுகிறது.
பசுவைத் துன்புறுத்தவே கூடாது
என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.
குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.
காமதேனுவின் ஆலயங்கள் பல.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர்
ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.
ஒரு முறை இமயமலையில் மான் போல
வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு
பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.
பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க
மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான்
ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப்
பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.
காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை
தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு
அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.
அதன் வாலும் புனிதமானதே என்பதால்
பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து.
ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத்
தலங்களாகும்.
கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம்
பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின்
பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு
அனுப்பியது.
பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு
ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம்
என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.
எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.
விசுவாமித்திரர் இங்கு தான்
பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.
ராவணனைக் கொன்றதால் ராமருக்கு
ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி
தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.
கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர்
எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட
தலமாகும்.
இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது
ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர்
கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.
காமதேனு
வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம்
ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள இது தேவ கன்னியரும்,
காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.
இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை
உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.
இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை.
இவற்றை விரிப்பின் பெருகும்.
இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான
ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.
வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும்
காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.
அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும்
தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத்
தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.
கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட
உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.
அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில்
உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.
இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine
Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின்
அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.
காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith), காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.
இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச்
செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின்
இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.
பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம்.
நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து
பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை
விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.
பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத்
தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம்
பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று
குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும்
கதிரியக்கத்தை உண்டாக்குபவை.
ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும்
கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.
ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும்
தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம்
பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.
காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும்,
தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப்
பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
In the days
before gold coins were withdrawn from circulation, they were invariably an object of interest of interest to small
boys, not to mention adults. A paternal gentleman making a purchase in the
store of little Abie’s father permitted the child to hold in his hand ad examine
a shiny five dollar gold piece. To his consternation , as very young children
will do, the child popped the gold coin into his mouth and swallowed it.
“Do not
worry, do not worry”, said proprietor. I will take him into the back and hold
him up by the heels and shake him”. The store owner was gone for some little
time. At last he appeared apologetically with some change, and said, “Too bad
we couldn’t have worked quicker. Here is two dollars and fifty cents. Abie has
digested the rest”.
Xxx
A WOMAN WAS BORN TO BE CHEATED!
The folly is
ineradicable from human nature is neatly summed up by the case of the middle
aged school teacher who invested her life savings in a business enterprise
which had been elaborately explained to her by a swindler. When her investment
had disappeared and the wonderful dream was shattered, she went to the office
of the Better Business Bureau, which was able at once to confirm her darkest fears. “Why on earth”
asked the man, “didn’t you come to us first? Didn’t you know about the Better
Business Bureau? ”
“oh yes, “ she
said sadly, “I have always known about you. But I didn’t come because I was
afraid you would tell me not to do it”.
XXX
FARMER’S
HORSE AND TWO THIEVES
Farmer Jones had a very beautiful horse of
which he was very proud. One day he drove him into town and carefully tied the
animal to the hitching post in front of the local tavern. Two thieves, hurrying
through the town, happened to spy the horse and decided to steal it. Realizing
that the horse was much too fine and valuable an animal to be stolen in the
ordinary manner, they decided on a stratagem to cay out their plan.
One of them
hurriedly untied the horse and rode
swiftly away. The other remained by post.
The farmer
finally emerged from the tavern. Seeing that his was not where he had left him
he was just about to shout when the thief walked up to him. In a sad low tone
he said, “Sir, I am your horse. Years ago I sinned and for my sins I was punished.
I was changed into a horse. Today my sentence is over, and I can be released if
you will be so kind.”
The farmer,
amazed yet touched by this story, sent the man away wishing him luck in his new
life.
Several
weeks later Farmer Jones went to a fair in a neighbouring town. Great was his
surprise to see his own horse for sale there. Gazing long at the animal to make
sure that his eyes did not deceive him, he walked over and whispering in the
horse’s ear, said “ so you have sinned again”
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 11,000.
புதிர்கள் : இப்பகுதியில் கட்டுரை எண்கள் 6575 -வெளியான தேதி 20-6-19 மற்றும் 6609 வெளியான
தேதி 28-6-19; 6680 – வெளியான தேதி 26-7-19; 6755 – வெளியான தேதி 10-8-19 ஆகியவற்றைத் தொடர்ந்து ஐந்தாம் பகுதி இதோ:-
லட்சம் புதிர்கள், விடுகதைகள், மாயாஜால மாஜிக்குகள், புதிர்க்
கணக்குகள்! – 5 (41 முதல் 60 முடிய)
ச.நாகராஜன்
சில புதிர்களை மாணவ, மாணவியர்
கல்லூரி வளாகத்திலோ அல்லது பொது இடங்களிலோ கேட்கும் போது அதை ‘கடி ஜோக்’ என்றும் கூறுவதுண்டு.
அதையும் இங்கு பார்த்து விடுவோமே!
இனிஷியல் உள்ள நாய் எது?
பால் எப்போது வெட்கப்படும்?
நேரு, படேல் சிலை பக்கம் போகின்ற காகம், காந்தி சிலையின் பக்கம் மட்டும் போகாதது ஏன்?
படகு ஏன் ஆடுகிறது?
இரண்டு இளைஞர்கள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வாசலிலும் மற்றொருவர் தெருவிலும் நின்று படிக்கின்றனர். ஏன்?
செவண்டீபைவ் காபீஸை 12 பேருக்கு எப்படிப் பகிர்ந்து கொடுப்பது?
ஆப்போஸிட் எதிர்ச்சொல் என்ன?
ஒருவர் பஸ்ஸுக்குள் ஏறுகிறார். பஸ்ஸில் இடமிருந்தும் உட்காராமல் நின்று விட்டு ஸ்டாப் வந்ததும் இறங்கிக் கொள்கிறார். ஏன்?
குடிக்க முடியாத காபி எது?
ஒரு ஆபீஸின் 5வது மாடியில் சந்தனம் பூசி இருக்கிறார்கள். ஏன்?
ஒரு குடையில் 3 பேர் இடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் நனையவில்லை. ஏன்?
கடல் அருகில் கொசு போகாது. எதற்காக?
காந்தியடிகள் தலைவரில்லை. ஏன்?
நாய் போல இருக்கும் ஆனால் அதற்கு 3 கால் இருக்கும். அது என்ன?
கையில் ஊசியை வைத்துக் குத்தினால் ரத்தம் வருகிறது. ஏன்?
தண்ணீர் இல்லாத ஆறு எது?
What is always coming, but never arrives?
What can be broken, but is never held?
What is it that lives if it fed, and dies if you give it a drink?
What would you use to describe a man who does not have all his fingers on one hand?
Answers : விடைகள்
ஒநாய்
அதற்கு ஆடையை எடுக்கும் போது!
அவர் கையில் கம்பு வைத்திருக்கிறாரே!
அது ‘தண்ணி’யில் இருப்பதால்
ஒருவர் ‘எண்ட்ரன்ஸ்’ எக்ஸாமுக்குப் படிக்கிறார்.
இன்னொருவரோ ‘பப்ளிக்’ எக்ஸாமுக்குப் படிக்கிறார்!
செவன் டீ யும் ஃபைவ் காபீ யும் இருக்கிறது. ஆகவே 7 பேருக்கு
டீயும் 5 பேருக்குக் காப்பியும் கொடுத்து விடலாமே!
ஆப்போ ‘ஸ்டாண்ட்’
‘நின்றபின் இறங்கவும்’ என்று பஸ்ஸில்
எழுதி இருக்கிறார்களே, அதனால் தான்!
ஜெராக்ஸ் காபி
அது ‘மொட்டை’ மாடி!
மழையே பெய்யவில்லை
கடலில் ‘டார்டாய்ஸ்’ இருக்கு!
அவர் ‘சாந்தியை’ விரும்புகிறாரே
நொண்டி நாய்
யார் குத்தியது என்று பார்ப்பதற்காகத் தான் ரத்தம் வெளியே வருகிறது!
5க்கும் பின் வரும் 6
Tomorrow
A Promise
Fire
Normal,
because people usually have half their fingers on one hand.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Frog Music!
A farmer advertised a “frog farm” for sale, claiming that he had a pond that was thoroughly stocked with fine bull frogs. A prospective buyer appeared and was taken late one warm evening to the pond that he might hear the frogs. The ‘music’ made so favourable an impression on the buyer and the sale was made. Soon afterward the purchaser proceeded to drain the pond in order to catch and market the frogs, to his surprise, when the water was drained out of the pond, he found that all the noise had been made by one old bull-frog.!
Xxx
Cat Sale
A poor Irish
man applied to one of the overseers of the poor for relief.
“Och, yer
honor”, said he, “sure I would be starved long since but for me cat”.
“But for
what?” asked the astonished interrogator.
“My ca”,
rejoined the Irishman.
“Your cat-
how so?”
“Sure, yer
honor” I sold her eleven times for six pence a time, and she was always home
before I could get there meself”
Xxx
TRAINS ANECDOTES
One time
WINSTON CHURCHILL almost missed a train and Mrs Churchill was alarmed. Sir
Edward Marsh, Churchill’s private secretary, tried to calm her by saying,
“Winston is such a sportsman, he always gives the train a chance to get away”.
Xxx
MESSAGE FROM
WIFE!
Mrs Theodore
Roosevelt, the younger, after being absent from home for several days, wired
her husband to meet her at a certain station. Hurrying to be on time, Colonel
Ted arrived at the station just in time to see the train whiz through at a
great speed. Somewhat bewildered, he stared at the speeding cars and was more
astonished to see his wife standing on the very back carriage frantically
waving an important looking envelope in her hand, spying him, she threw at him,
and the train rounding a corner, she disappeared from the sight.
Scrambling
about in the bushes into which the envelope had fallen, the Colonel finally
found it and quickly opened it. He was amused and was relieved to read,
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 11,000.
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திற்கு ச.நாகராஜன் அளித்த பேட்டி
வாழ்க பாரதம்! வெல்க
பாரதம்!
ச.நாகராஜன்
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சுதந்திர தினத்தையொட்டி
14-8-2019 அன்று காலை 10 மணிக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.
இந்தியா குறித்து பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயங்கள் யாவை என்று
பேட்டி எடுத்தவர் கேட்க அதற்கு ச.நாகராஜன் அளித்த பதில் ஒலிபரப்பப்பட்டது.
அன்பர்களுடன் அந்த உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். 81.5 கோடி மக்கள்
வாக்காளர்களாக இங்கு உள்ளனர்.
உலகின் அதி இளமையான நாடு இந்தியா தான். சுமார் 130 கோடி என்று
உள்ள இன்றைய ஜனத்தொகையில் சுமார் 60 கோடி பேர்கள் 25 வயது முதல் 29 வயது வரை ஆன இளைஞர்களே.
ஆக இளைஞர்கள் அதிகம் கொண்ட ஒரே நாடாக இந்தியா இலங்குகிறது.
இந்த இளமைத் துடிப்புடன் அறிவியலில் அது பாய்ச்சல் போட்டு முன்னேறுகிறது.
செவ்வாய் நோக்கிய பயணத்தில் தனது முதல் முயற்சியிலேயே அது வெற்றி
பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையான விஷயம்.
மங்கள்யான் -1 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஆசியாவில் முதலாவதாக
செவ்வாய்க்குக் கலம் அனுப்பிய நாடு; உலகில் நான்காவதாக அனுப்பிய நாடு என்ற பெருமை நம்மைச்
சேர்கிறது.
5-11-2013 அன்று செவ்வாயை
நோக்கி நமது கலம் கிளம்பியது. சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளுடன்
சேர்ந்து விட்டது இந்தியா இந்த செவ்வாய் பயணத்தின் மூலமாக.
அடுத்து சந்திரயான் – 1 22, அக்டோபர் 2008இல் சந்திரனை நோக்கி
ஏவப்பட்டது. முதன் முதலாக சந்திரனில் நீர் இருக்கிறது என்ற செய்தியை இந்தக் கலத்தின்
மூலமா 2009ஆம் ஆண்டு கண்ட நமது விஞ்ஞானிகள் அதை உலகிற்கு அறிவித்தனர்.
இதைச் சரிபார்க்கத் தனது கலத்தை ஏவிய அமெரிக்க விண்வெளி ஆய்வு
நிறுவனமான நாஸா அது உண்மையே எனக் கண்டு வியந்து அதை உலகிற்கு அறிவித்தது.
சந்திரனுக்குக் கலம் அனுப்பியதன் மூலமாக அமெரிக்கா, சோவியத்,
சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டது.
இப்போது சந்திரயான் – 2 விண்ணில் 22 ஜூலை 2019 அன்று ஏவப்பட்டுள்ளது. இதில் உள்ள விக்ரம் என்ற லேண்டர் (Lander) செப்டம்பர் முதல் வாரத்தையொட்டி தரை இறங்கி அனைத்தையும் சரிபார்த்த பின்னர் ப்ரக்யான் என்ற நமது ரோவர் சந்திரப் பரப்பில் ஊர்ந்து செல்லும்; ஆய்வுகளை நடத்தும். இது பெருமைக்குரிய ஒரு பெரிய விஷயம்.
விண்ணில் பறக்கும் ஒரு விண்கலத்தை மீண்டும் தேவையெனில் தரையிறக்கும்
ஸ்பேஸ் காப்ஸ்யூல் ரிகவரி எக்ஸ்பெரிமெண்டையும் (Space Capsule Recovery Experiment) இந்தியா செய்து
வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரே ராக்கெட்டில் 104 சாடலைட்டுகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை
படைத்திருக்கிறது. பல நாடுகளும் தங்கள் சாடலைட்டுகளை விண்ணில் ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.
அடுத்து உலகின் பொறியியல் வல்லுநர்களில் அதிகமான பேரை உருவாக்குவது
இந்தியாவே என்பது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.
அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.
இதற்குச் சான்றாக மல்டி நேஷனல் கம்பெனிகளையும் அதி நவீன தொழில்நுட்பத்தைக்
கொண்டுள்ள உலகின் தலை சிறந்த கம்பெனிகளையும் வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே
இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.
Microsoft,
Google,Pepsico,AdobeSystem, Mastercard உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில்
இருப்பவர்க்ள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.
இந்தியா உலகின் மூன்றாவது பலம் பொருந்திய இராணுவத்தைக் கொண்டுள்ளது.
ஆனால் எந்த ஒரு நாட்டையும் அது தோன்றிய காலத்திலிருந்து தாக்கியதில்லை, ஆக்கிரமித்ததில்லை
என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம்.
தற்காப்புக்கென இருக்கும் நமது ராணுவத்தை ஐ.நாவின் அமைதி காக்கும்
படையிலும் நமது நாடு ஈடுபடுத்தியுள்ளது.
அதிக துருப்புகளை ஐ.நாவின் பணிக்கென அனுப்பிய இரண்டாவது பெரிய
நாடாக இந்தியா இலங்குகிறது.
தகவல் தொடர்பில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா
விளங்குகிறது. இதை நிரூபிப்பது நமது இன்ஸாட் அமைப்பு. (Insat System).
உலகின்
அறிவியல் முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர்.
சர் சி.வி.இராமன்,
ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், சீனிவாச இராமானுஜன், எஸ்.சந்திரசேகர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
உள்ளிட்டவர்களின் பங்களிப்பு அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
இந்தியாவின்
கும்பமேளா திருவிழா உலகின் ஒரு அதிசயம். குறிப்பிட்ட
நாட்களில் தாமாகவே ஒருங்கு சேர்ந்து வழிபட்டு அமைதியாகத் தாமாகவே கலைந்து செல்லும்
பெரும் மக்கள் திரளை இது போல உலகில் வேறெங்கும் காண முடியாது.
இது மட்டுமல்ல,
பொழுது போக்குத் துறையில் உலகில் மிக அதிகமாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவது
இந்தியாவே.
இப்படி
சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட
நாடு வெகு விரைவில் வல்லரசாகத் திகழப்பொவது மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் நல்லரசாகவும்
திகழப்போகிறது.
இதில்
வாழ்வது பெருமைக்குரிய ஒரு விஷயம். வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!!