Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 5 October 2018
Time uploaded in London –8-47 am (British Summer Time)
Post No. 5508
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
புராணங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது எப்படி?
புராணங்கள் பழையதா? வேதங்கள் பழையதா?
புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;
சான்று உளதா?
அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள.
Atharva Veda (25-6-4); (11-7-24)
Satapata Brahmana (11-5-6-8)
‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.
‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழையாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’ — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். 18 புராணங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகளின் குறிப்பை அடியில் காண்க. புதிய விஷயங்களுக்கு வருவோம்
புராணங்கள் என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் கட்டுக் கதைகள் என்ற எண்ணம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1.வின்டர்நீட்ஸ் (Winternitz) என்ற இந்தியவியல் அறிஞர் சொன்னார்- ‘சூதர்’கள் எனபடும் கவி பாடும் மக்களிடையே இது போனதால் தரம் தாழ்ந்துவிட்டது. உயர்குடி மக்களிடையே இரு இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிராது.
2.ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.
3.முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில் ஒரு அருமையான தகவல் உளது. நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.
ஆயினும் 18 புரானங்களும் வெவேறு காலத்தில் எழுத்து வடிவம் பெற்றமைக்கு அவைகளுக்கு உள்ளேயே சான்றுகள் தென்படுகின்றன.
4.ரோமஹர்ஷணரும் அவரது புதல்வன் உக்ரஸ்ரவசும் பெரும்பாலான புராணங்க ளை யாத்தனர். இயற்பியலில் மூன்று வர்ணங்களை (primary colours சிவப்பு, மஞ்சள்,நீலம்) ஆதார வர்ணனங்கள் என்பர். அவைகளின் கலவையே ஏனைய வர்ணங்கள்; இது போல மூன்று புராணங்களே ஆதார அல்லது ஆதி புராணங்கள்- பிரம்ம,வாயு, மத்ஸ்ய புராணங்கள். ஏனையவை இவைகளிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்தவையே.
பிரம்ம புராணத்திலிருந்து அக்னி புராணம் வந்தது.
மத்ஸ்ய புராணத்திலிருந்து பத்ம புராணம் வந்தது.
வாயு புராணத்திலிருந்து பிரஹ்மாண்ட புராணம் வந்தது.
பின்னால் வந்த 12 புராணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் அவைகளிடையே பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது மேற்கூறிய மூன்று ஆதி புராணங்களைத் தழுவி நிற்கின்றன. முதல் மூவர்- முதல் மூன்று ஆழ்வார்கள் –என்று சொல்லலாம்.
5.அந்தக் காலத்தில் உலகில் எங்கும் நிகழாத மஹா அற்புதமான மஹா நாட்டை இந்துக்கள் நடத்தி வந்தனர். உலகில் வேறு எங்குமிலாத புதுமை அது. அதாவது 12 ஆண்டுகள் நீண்ட ஒரு மஹாநாட்டை நடுக்காட்டில் நடத்தினர்
ரிஷி,முனிவர்கள் மஹாநாடு கூட்டி புராணங்களை இயற்றுவர், பாடுவர், மாற்றுவர், எடிட் செய்வர், அப்டேட் செய்வர்; எழுதுவர்; இப்படி நைமிசாரண்யமென்ற ஒரு காட்டின் நடுவில் ரோமஹர்ஷணர் சொன்னதுதான் வாயு புராணம்.
விஷ்ணு புராணம்,பாகவத புராணம் போன்ற புகழ்மிகு புராணங்கள் பின்னால் எழுந்தவை.
- மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.
ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.
7.புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்.
- ஒவ்வோரு புராணமும் அந்தந்த ஊர் தெய்வத்தைப் புகழ்வதற்காக, நம்மூர் ஸ்தல புராணங்கள் போல புதுக்கதைகளைஎட்டுக் கட்ட்டினர். சிலர் மன்னர்களை தெய்வங்கள் என்று புகழ்ந்தனர். சிலரை அவதார புருஷர் என்று காட்டினர். நமது காலத்திலேயே சத்ய சாய்பாபா, தான் ஷீரடி பாபாவின் மறு அவதாரம், தான் கடவுள், என்று சொன்னதை அறிவோம். இவ்வாறு ஒவ்வொரு புராணமும் பேசத் துவங்கியவுடன் குழப்பம் அதிகரித்தது.
- மர்மங்கள் ரஹஸியங்கள் அதிசயங்கள், அற்புதங்கள் இல்லாத விடத்திலும் அவைகளை அற்புதம் போலச் சித்தரித்தன. எடுத்துக்காட்டாக அகஸ்தியர் விந்திய மலை வழியாக முதல் சாலை (First Land Route) போட்டார். இதை ‘விந்திய கர்வ பங்கம்’ என்று பெரிது படுத்தினர். அகஸ்த்யர் பண்டிய மன்னர்களை அழைத்துக்கொண்டு கப்பற் படையுடன் தென் கிழக்காசியா சென்றார். அவர் வியட்நாம் இந்தோநேஷியா போனதை அகஸ்த்யர் ‘கடலைக் குடித்தார்’
என்று எழுதின. பகீரதன் மாபெரும் சிவில் எஞ்சினீயர். (Civil Engineer) அவன் கங்கை நதியை பாறைகளைப் புரட்டி திசை திருப்பினான். இதை கங்கையை 16, 000 ஆண்டு தவம் செஉ,,து பூமிக்குக் கொணர்ந்தான் என்றனர்; பரசுராமன் கேரள பூமியை பயிரிடும் பூமியாக மாற்றினான் அவன் கடலில் இருந்து பூமியை மீட்டதாக எழுதினர். பாண்டியன் வேல் விட்டவுடன் கடல் பின்வாங்கி ‘நிலம் தரு திருவில் பாண்டியன்’ ஆனது போல,பல கதைகளை எழுதினர் எஞ்சினீயரிங் விஷயங்கள், அதி அற்புத மனித சாதனைகளை அதிசயங்களாக காட்டினர். அதாவது பழங்காலத்திலிப்படி மறைபொருளில் பேசுவது வழக்கம் அதைப் புரிந்து கொள்ளாமல் கடலைக் குடித்தார், காகம் மூலம் காவிரியை உண்டாக்கினார் என்றெல்லாம் புராணங்கள் செப்பத் துவங்கின.
- மிகப் பெரிய குழப்பம் ஒரே பெயரில் பலர் ஆண்டதால் ஏற்பட்டது. மூன்று தசரதர்கள், ரிக் வேதத்தில் வரும் பல மநுக்கள், சர்யாதி, யயாதி போன்ற பெயரில் பல காலங்களில் பல மன்னர்கள் இருந்ததைப் புரிந்துகொள்ளாமல் ‘இவர் அவரே’, ‘அவர் இவரே’ என்று பகர்ந்து குட்டை யைக் குழப்பினர். துருக்கி-இராக் பகுதியை ஒரு தசரதன் கி.மு 1400ல் ஆண்டதை குயூனிபார்ம் களிமண் கல்வெட்டுகள் காட்டுகின்றன. ராமாயண தசரதனை நாம் அறிவோம்; அசோக சக்ரவர்த்தியின் பேரன் பெயரும் தசரதனே. இப்படிப் பல பெயர்கள் வந்தவுடன் கதை சொல்லுவோர் அறியாமை காரணமாக புலம்பினர்; வைவஸ்வத மநு– ஒரு மன்னன். மநு சம்வரணி– வெறும் கிராமத் தலைவன்; இருவர் பெயரும் ரிக் வேதத்தில் வருகின்றன. மநு சம்வரணியின் மகன் நாபானேதிஷ்டா. அவனை யார் மகன் என்ன ஜாதி என்றெல்லாம் பிற்காலப் புராணங்கள் புதுக்கதைகளை புகன்றன. இது ஒரு எடுத்துக் காட்டுதான்; தமிழ் இலக்கியத்திலும் பல கபிலர்கள், பல அகஸ்தியர்கள் உள்ளனர். ஆறு அவ்வையார்கள் இருக்கின்றனர். நாம் இக்காலத்திலேயே குழம்பினால் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் குழப்பம் உண்டாவது இயல்பே.
வசிஷ்டர், அகஸ்தியர் போன்றோர், பல கதைகளில் வருவர். அது கோத்திரப் பெயர். இந்திரன் என்றால் ‘மன்னன்’ ‘தலைவன்’ என்று பொருள். அதை எல்லாம் ஒரே ஆள் தலையில் கட்டிக் கதை எழுதினர். எல்லா வசிட்டர்களுக்கும் அருந்ததியை மனைவியாக காட்டினர். கற்புள்ளா எல்லோரும் அருந்ததிதானே!! சங்கத் தமிழ் இலக்கியத்திலேயே மன்னர் மனைவிகளை அருந்ததி என்று சங்கப் புலவர்கள் ஆறு இடங்களில் பாடினர். ஆகப் பெயர்க் குழப்பம் மஹா குழப்பத்தில் முடிந்தது.
சூரியன், சந்திரன், இந்திரன் ஆகிய பெயர்கள் இன்று வரை தென்கிழக்காசியா முழுதும், காஷ்மீர் வரை கண்டி வரையும் ஸம்ஸ்க்ருத்தில் உள்ளபடியே (தமிழர்களாலும் ) பயன் படுத்தப் படுகின்றன. அக்காலத்திலும் இப்படி உபயோகித்தனர். ஆனால் பௌராணிகர்கள், சுவை ஊட்டுவதற்காக, உண்மையான சந்திரனும் சூரியனும் மனிதனுடன் உறவாடியதாகப் பேசிவிட்டனர். இன்று ராஜேந்திரன் பாஸ்கரன் (சூரியன்) என்றால் நம் அலுவலக்த்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் என்று அறிவோம்; அந்தக் காலத்தில் உண்மையான சூரியன் வேத கால இந்திரன் என்றெல்லாம் எழுதிவிட்டனர் புராணங்களில். வேதங்களை ஆராய்ந்த முப்பது வெளி நாட்டு அறிஞர்களும் இன்று வரை ரிக் வேதம் குறிப்பிடுவது ஒரு இந்திரனையா, ‘ஒரு’ கடவுளையா, ‘ஒரு’ இயற்கைச் சக்தியையா என்று சொல்லவில்லை; சொல்லவும் முடியாது!
புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள் போதாதே! என்ன செய்வது!
tamilandvedas.com/tag/புராணங்கள்
Posts about புராணங்கள் written by Tamil and Vedas
tamilandvedas.com/tag/18…
Posts about 18 புராணங்கள் written by Tamil and Vedas
–சுபம்–
You must be logged in to post a comment.