கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு! (Post No.10,664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,664

Date uploaded in London – –    16 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை – குறள் 57

பெண்களை பலவகையான காவலுக்கு இடையே சிறைவைப்பது என்ன பயனைத் தரும்?  தம் 

கற்பு நெறியால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காப்புதான் சிறப்புடைய காவல் ஆகும் .

பெண்களை என்ன காவலில் வைத்த்தாலும் பலன் தராது. அவர்களுடைய கற்புதான் அவர்களைக் காக்கும். இந்தக் கருத்து வால்மீகி ராமாயணம், உலகின் முதல் சட்ட நூலான மனு ஸ்ம்ருதி, ஷேக்ஸ்பியரின் நாடகம் , கம்பராமாயணம் ஆகியவற்றிலும் வருகிறது. ஆயினும் வால்மீகியும் மனுவும் இதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

வால்மீகி சொல்கிறார் ,

न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः |

नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियः ||

ந க்ருஹானி ந வஸ்த்ரானி ந ப்ரகார ஸ்திரஸ்க்ரியாஹா

நேத்ருசா ராஜஸத்காரா வ்ருத்தமாவரணம் ஸ்திரியஹ

இதன் பொருள் :

வீடோ , அணியும் உடைகளோ,வீட்டைச் சுற்றி எழுப்பப்படும் காவல் மதில்களோ , கதவுகளோ அல்லது அரசர்கள் கொடுக்கும் விருதுகளோ ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இராது .அவளுடைய ஒழுக்கமே (கற்பு) அவளைப் பாதுகாக்கும் கேடயம் ஆகும் — யுத்த காண்டம், அத்தியாயம் 114

Xxx

மானவ தர்ம சாஸ்திரத்தில் மநுவும் இதையே சொல்கிறார்,

பெண்களை ஆண்கள் , ஒரு வீட்டுக்குள் காவலில் வைப்பது அவர்களைக் காக்காது; பெண்மணிகள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதே நல்ல பாதுகாப்பு ஆகும் – மநு ஸ்ம்ருதி 9-12

अरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः ।

आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिताः ॥ ९.१२॥

அரக்ஷிதா க்ருஹே ருத்தாஹா புருஷைராப்தகாரிபிஹி

ஆத்மானமாத்மனா  யாஸ்து ஸுரக்ஷிதாஹா

“நம்பிக்கை மிக்க ஆண்களைக் காவல் காக்கவைத்தாலும்” அது அவர்களைக் காக்க முடியாது என்பதையும் மநு சேர்த்துச் சொல்லியுள்ளார். அவர்களிடம் மனக் கட்டுப்பாடு , கற்பு நெறி, இல்லாவிடில் இது சாத்தியமாகாது என்று உரைகாரர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

XXXX

ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியங்களில் கற்பு என்பதை ஒரு முக்கிய பண்பாகக் கருதி நிறைய பாடல்களை எழுதிச் சேர்த்துள்ளனர். அருந்ததி என்னும் கற்பரசியை சங்கத் தமிழ் நூல்களும் வேத இலக்கியங்களும் போற்றிப் பாடியுள்ளன . இப்படிப்பட்ட ஒரு பண் பையோ , மாதரசியையோ மேலை நாட்டு இலக்கியத்தில் காண்பது அரிதிலும் அரிது. ஆயினும் நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் தனது நாடகம் ஒன்றில் டயானா DIANA  என்னும் கத பாத்திரம் வாயிலாக சொல்லுவதைப் படியுங்கள்

டயானா

என்னுடைய மானம் ஒரு மோதிரம் ;

என் கற்புதான் எங்கள் வீட்டின் ஆபரணம்

அது என் முன்னோர்களிடமிருந்து வந்தது

……….

இழப்பதற்கு அரியது

All is well that ends well, Act 4, Scene 2

Xxx

கம்பனும் கற்பு பற்றி, சீதையின் கற்பு பற்றி , அது எப்படி அவளைக் காக்கும் என்பதை குறைந்தது இரண்டு இடங்களில் காட்டுகிறான் . சீதையை தூக்கிச் செல்லும் ராவணனை தடுக்க முயன்று வெட்டுப்பட்ட ஜடாயு என்னும் பறவை அரசன், அடடா இவள் ராவணனால் சிறை வைப்படப்போகிறாளே என்ன ஆகுமோ என்று புலம்புகிறான். பின்னர் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கவலைப்பட ஒன்றுமில்லை; சீதையின் கற்பு அவளைக் காக்கும் என்று சொல்கிறான்

3560.  பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான்;

அருஞ்சிறை உற்றனளாம் ” எனா மனம்

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்

இரும் சிறை இறாது ‘என இடரும் நீங்கினான்.

ஆரண்ய காண்டம் சடாயு உயிர்நீத்த படலம்

பூவை – நாகண வாய்ப்பறவை போல மொழியுடைய சீதை 

Xxx

சுந்தர காண்டத்தில் மற்றோர்  காட்சி ,

ராவணனின் அரண்மனை படுக்கை அறை , அந்தப் புரம் எல்லாவற்றிலும் சீதையைத் தேடும் அனுமன், அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில், அரக்கிகளின் காவலுக்கு  இடையில் சீதையைக் கண்டவுடன் வியக்கிறான் : அற்புதம், அற்புதம் ! இவள் இங்கே மானபங்கம் ஆகாமல் இருந்ததற்கு ஜனகன் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமா?அல்லது தர்மம் இவளை இதுவரை காத்து உதவியதா? அல்லது சீதையின் உயரிய கற்பு நெறிதான் அவளைக் காத்து நிற்கிறதா?  ஒப்பற்ற காட்சி;  எது காரணம் என்பதை என்னைப் போன்றவர் உரைக்கவும் இயலுமோ என்று கம்பன் பாடி முடிக்கிறான்.

5143. 

தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்

கருமமே காத்ததோ? கற்பின் காவலோ ?

அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?

ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?

-சுந்தர காண்டம் , காட்சிப் படலம்

Xxxx

ஆக கற்பு நெறியின் சிறப்பை வால்மீகி முதல் கம்பன் வரை கண்டோம். நாலடியார், பழமொழி ஐம்பெரும் காப்பியங்களிலும் நிறைய குறிப்புகள் உள .

–சுபம் —-

tags-  கற்பு , வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு, 

ஷேக்ஸ்பியர் ‘கள்ளக் காப்பி’ அடித்ததை காட்டிக் கொடுத்த கம்ப்யூட்டர் ! (Post No9603)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9603

Date uploaded in London – –14 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஷேக்ஸ்பியர் ‘கள்ளக் காப்பி’ அடித்ததை  காட்டிக் கொடுத்த கம்ப்யூட்டர் !ஷேக்ஸ்பியர் (Shakespeare) தான் அவர் பெயரில் உள்ள 37 நாடகங்களையும் எழுதினாரா ? அல்லது அவர் காலத்தில் புகழ் பெற்ற மற்றொரு ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோ (Christopher

ஷேக்ஸ்பியர், ‘கள்ளக் காப்பி’,  கம்ப்யூட்டர், கிறிஸ்டோபர் மார்லோ, Marlowe

உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர்! (Post No.7328)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 11 DECEMBER 2019

 Time in London – 8-42 AM

Post No. 7328

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஷேக்ஸ்பியர் (Shakespeare) மூலமாக பிரிட்டனுக்கு கிடைக்கும் வருவாய் மிகப்பெரிய வருவாய் ஆகும். உலகில் வேறு எந்த நாடாவது ஒரு கவிஞர் பெயரை வைத்து இவ்வளவு சம்பாதிக்க முடியுமா  என்பது கேள்விக்குறியே .

எப்போது பார்த்தாலும் ஒருபுறம் நாடகம் நடக்கும். மற்றொரு புறம் ஷேக்ஸ்பியர் பற்றிய புத்தக விற்பனையோ அபரிமிதம் .

ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்ட்ராட்போர்ட் அபான் ஆவனுக்கு (Stratford Upon Avon) வரும் கூட்டமோ

எக்கச்சக்கம் . அங்கு சேக்ஸ்பியர் கண்காட்சியையும் அவரது வீட்டையும் பார்க்கவோ 25 பவுன் கட்டணம் — அவரது கையெழுத்து பல லட்சம் பவுண் பெறும் ஏல த்தில்! இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . நிற்க. நான் தினமணியில் 25-10-1992ல் எழுதிய கட்டுரை 

இதோ :–

OLD ARTICLES ON SHAKESPEARE  IN MY BLOGS

tamilandvedas.com › tag › புரியாத-சொ…புரியாத சொற்கள் | Tamil and Vedas

21 Nov 2018 – ஷேக்ஸ்பியர் தனது வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அதை இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அக்குவேறு ஆணிவேறாக …

tamilandvedas.com › tag › ஷேக்ஸ்பிய…ஷேக்ஸ்பியர் | Tamil and Vedas

50 ஆண்டுப் பழமையான இலங்கைத் தமிழ் மலர் ஒன்றில் இலியத், ருபாயத் காவியங்கள் குறித்தும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய 24,000 சொற்கள் …

 1.  

tamilandvedas.com › tag › ஷேக்ஸ்பிய…ஷேக்ஸ்பியர் கவிதைகள் | Tamil and Vedas

26 Aug 2018 – தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில! (Post No.5365). COMPILED BY LONDON SWAMINATHAN. Date: 26 August 2018. Time uploaded in London – 14-29 (British Summer Time). Post No. 5365.

பெண்ணின் மனம் – Tamil and Vedas

17 Sep 2017 – பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220). Written by London Swaminathan. Date: 17 September 2017. Time uploaded in London- 6-56 …

– Translate this page

tamilandvedas.com › 2018/11/22 › ஷேக்ஸ…ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post …

22 Nov 2018 – ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post No.5680). Written by S Nagarajan. Date: 20 November 2018. GMT Time uploaded in London –5-28 am. Post No. 5680. Pictures shown here are taken from various …

 1.  

tamilandvedas.com › 2017/12/01 › ஷேக்ஸ…ஷேக்ஸ்பியர் நாடகத்தில் …

1 Dec 2017 – ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450). Written by London Swaminathan. Date: 1 DECEMBER 2017. Time uploaded in London- …

 • 11 Nov 2019 – ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202). Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan. swami_48@yahoo.com. Date: 11 NOVEMBER 2019. Time in London – 7-15 …

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும் …

28 Sep 2015 – கம்பன் காவிய இன்பம். கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்! ச.நாகராஜன. கண்ணாடி. உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் …

 1.  

tamilandvedas.com › tag › நியூ-ஐடியாநியூ ஐடியா | Tamil and Vedas

5 Aug 2016 – இங்கே ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்ட்ராட்போர்ட் அபான் ஏவன் STARTFORD UPON AVON என்ற இடத்தில் விற்கப்படும் காந்த வில்லைகலையும் …

 1.  

tamilandvedas.com › 2017/11/22 › shakespeare-in-tamil-veda-tirukku…SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL- Part 1 (Post …

22 Nov 2017 – Written by London Swaminathan Date: 22 NOVEMBER 2017 Time uploaded in London- 20-58 Post No. 4423 Pictures shown here are taken …

 1.  

Translate this page

tamilandvedas.com › 2017/11/23 › love-all-trust-a-…LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE …

23 Nov 2017 – LOVE ALLTRUST A FEW, DO WRONG TO NONE! … SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL– 2 (Post No.4426). Written by London …

 1.  

tamilandvedas.com › tag › gratitudegratitude | Tamil and Vedas

LOVE ALLTRUST A FEW, DO WRONG TO NONE! SHAKESPEARE IN TAMIL VEDA TIRUKKURAL– 2 (Post No.4426). Written by London Swaminathan.

subham

ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202)

Blind Poet Homer of Greece

Compiled by  London swaminathaan

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 7-15 am

Post No. 7202

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

50 ஆண்டுப் பழமையான இலங்கைத் தமிழ் மலர் ஒன்றில் இலியத், ருபாயத் காவியங்கள் குறித்தும் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய 24,000 சொற்கள் பற்றியும் இரண்டு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. படித்து மகிழுங்கள்

from the British Library Catalog:—
My pictures taken at Stratford Upon Avon
Shakespeare Beer!!!!!!!!!!!!!!!

ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post No.5680)

Written by S Nagarajan

Date: 20 November 2018

GMT Time uploaded in London –5-28 am
Post No. 5680

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஆங்கில இலக்கியம்

 ‘ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரில் பெயிலான கதை’ என்ற இதற்கு முந்தைய கட்டுரையைப் படித்து விட்டீர்களா?

ஷேக்ஸ்பியரின் இலக்கியத்தின் மீது எழுந்த திரைப்படங்கள் 525!

ச.நாகராஜன்

ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளாக உள்ளவை 37. இவற்றை அடிப்படையாகக் கொண்டு 410 திரைப்படங்கள் உருவாகி இருப்பதாக  விக்கிபீடியா கூறுகிறது.

ஆனால்

IMDb, 1095 தயாரிப்புகள் ஷேக்ஸ்பியரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது. இவற்றில் சினிமா, தொலைக்காட்சிக்கான படைப்புகள், சில விளையாட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். ஷேக்ஸ்பியரின் படைப்புகளை நேரடியாக அப்படியே கொண்டுள்ள படைப்புகளோடு அவரது சானெட் உள்ளிட்டவையும் சேர்த்துக் கணக்கிட்டால் 525 என்று கணக்கிடலாம் என ஷேக்ஸ்பியர் ஆர்வலர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இதை ஒரு படமாகவே புள்ளி விவரங்களுடன் அவர் தருகிறார் இப்படி:

ஆக உலக வரலாற்றில் ஷேக்ஸ்பியருக்குள்ள ஒரு தனி இடம் மறுக்க முடியாத இடமாக ஆகிறது. இப்படி ஒரு தொகுப்பைத் தந்துள்ள www.stephenfollows.com/blog ற்கு நமது நன்றியை இங்கு பதிவு செய்கிறோம்.

ஷேக்ஸ்பியரின் இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்தோர் தரும் விவரங்கள் ஏராளம்.

மேலே கூறிய 525 படங்களில் சிலவற்றை, எடுத்துக்காட்டிற்காக, இங்கு பார்க்கலாம்:

மேலை நாட்டு ஆங்கிலப் படங்கள்:

West Side Story (Robert Wise and Jerome Robbins) – Romeo and Juliet

Kiss Me, Kate (Geroge Sidney) – The Taming of the Shrew

Forbidden Planet (Nicholas Nayfack) – The Tempest

My Own Private Idaho (Gus Van Sant) – Henry IV parts 1 and 2

Gnomeo and Juliet (Kelly Asbury) – Romeo and Juliet

Looking for Richard (Al Pacino) – Richard III

 

ஹிந்தி திரைப்படங்கள்

Omkara, Maqbool, Haider ( by Bhardwas) – Othello, Macbeth, Hamlet

Golioyon ki Rasleela : Ram – Leela (Sanjay Leela Bhansali) – Romeo and Juliet

ஜப்பானியத் திரைப்படங்கள்

Throne of Blood (Akira Kurosawa) – Macbet                                                                     Ran (Akira Kurosawa) – King Lear

கடந்த 18 ஆண்டுகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

ஜப்பான், இந்தியா, ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, ஜெர்மனி, தாய்லாந்து, இத்தாலி, சீனா, போலந்து, ருஷியா, தென்னாப்பிரிக்கா, திபத், நெதர்லாந்து, வியட்நாம், இஸ்ரேல், சிலி, எஸ்டோனியா, பிரேஜில், ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் இந்தப் படைப்புகளை மிக்க ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

118 மொழிகளில் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி என்ற கணக்கில், ஷேக்ஸ்பியர் இயற்றிய படைப்பிலக்கியப் புத்தகங்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன. இதுவரை எத்தனை கோடி விற்றன என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில் பல கோடி என்று சொல்லி முடிப்பதே சிறந்த விடை ஆகும்!.

LOVE என்ற சொல்லை 2191 முறை ஷேக்ஸ்பியர் பயன்படுத்தியுள்ளார்.அவரது கதாபாத்திரங்களில் வரும் பெயர்களில் உலக மக்கள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் பெயர் ஒலிவியா.

ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்கள் சுமார் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவரது படைப்புகளில் செக்ஸ், அரசியல் சூழ்ச்சி, வன்முறை (இன்றைய நோக்கில் ஒரு திரைப்படத்திற்கான மூன்று முக்கிய அம்சங்கள் இவை தானே!) ஆகிய மூன்றும் உண்டு என்பதால் அவை அனைவரையும் கவரும் திறன் வாய்ந்தவை.

அடுத்து ஷேக்ஸ்பியர் பிறந்த தேதி :

23-4-1564 என்ற தேதி ஷேக்ஸ்பியரின் பிறந்த தேதி. ஆனால் ஜூலியன் காலண்டர் என்ற பழைய காலண்டரின் அடிப்படையில் இந்தத் தேதி தரப்படுவதால் அதை மாற்றி இந்தக் காலத்திய க்ரெகோரியன் காலண்டர் படி பார்த்தால் வரும் தேதி 3-5-1564!

ஷேக்ஸ்பியருக்கு ஏழு உடன்பிறந்தோர் உண்டு.

ஜோன் (இரண்டு மாதமே வாழ்ந்த குழந்தை; பிறந்த ஆண்டு 1558)

மார்கரெட் (1562)

கில்பர்ட் (1566)

இன்னொரு ஜோன் (1569)

ஆன்னி (1571)

ரிச்சர்ட் (1574)

எட்மண்ட் (1580)

ஷேக்ஸ்பியருக்கு 18 வயது ஆகும் போது 26 வயதான ஆன்னி ஹாத்வேயை மணந்தார். மணமான போது ஷேக்ஸ்பியரின் குழந்தையை மூன்று மாதக் கருவாகக் கொண்டிருந்தார் அவர்.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு.ஒரு மகன் ஹாம்னெட் இரு பெண்கள் – சூசன்னா, ஜூடித்.

ஷேக்ஸ்பியர் ஒரு நாடக நடிகரும் கூட.

இங்கிலாந்தின் ராணி முதலாம் எலிஸபத் முன்னாலும் மன்னர் முதலாம் ஜேம்ஸ் முன்னாலும் அவர் நடித்திருக்கிறார்!

அவர் ஒரு நல்ல வியாபாரி. செல்வந்தரும் கூட. ஒவ்வொரு படைப்புக்கும் சன்மானமாக அவருக்கு நிறையப் பணம் வந்தது!

ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களை,1852ஆம் ஆண்டு, ‘தி இண்டர்நேஷனல் அஸ்ட்ரானமி யூனியன்’,  யுரேனஸ் கிரகத்தின் 27 துணை நிலாக்களில் பலவற்றிற்கு சூட்டியது. இந்தத் துணை  நிலாக்களுக்கு அலெக்ஸாண்டர் போப்பின் ‘தி ரேப் ஆஃப் தி லாக்’ -இல் வரும் பாத்திரங்களின் சில பெயர்களையும் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களுடன் கூடச் சேர்த்துச் சூட்டியது.

ஷேக்ஸ்பியரைப் பற்றிய மேலும் சில விவரங்களை இன்னுமொரு கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

TAGS– ஷேக்ஸ்பியர்,  திரைப்படங்கள். 

****

ஷேக்ஸ்பியர் ஃபெயிலான கதை! (Post No.5676)

Written by S Nagarajan

Date: 19 November 2018

GMT Time uploaded in London –7-32 am
Post No. 5676

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரில் ஃபெயிலான கதை!

ச.நாகராஜன்

1

ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியர் பற்றிய பரிட்சையில் ஃபெயிலான கதை உங்களுக்குத் தெரியுமா?

இதை கை போஸ் (Guy Boas) என்பவர் 1926ஆம் ஆண்டு ‘Lays of Learning’ என்று ஒரு  கவிதையாகவே எழுதி விட்டார்!

I dreamt last night that Shakespeare’s Ghost

Sat for a civil service post.

The English paper for that year

Had several questions on King Lear

Which Shakespeare answered very badly

Because he hadn’t read his Bradley

ஆமாம், ஷேக்ஸ்பியர் பற்றி பரிட்சை எழுதப் போன ஷேக்ஸ்பியர் ப்ராட்லியின் நோட்ஸைப் படிக்க மறந்து போனார். ஆகவே பரிட்சையில் ஃபெயிலாகி விட்டாராம்!

யார் இந்த ப்ராட்லி? சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதென்றால் இவர் நம்ம ஊர் கோனார் நோட்ஸ் (KONAR TAMIL NOTES) எழுதி மாணவர்களைக் கவர்ந்தாரே, அந்தக் கோனார் போல! கம்பன், வள்ளுவன், இளங்கோ என்ன சொல்லி இருக்கிறார் என்பதை கம்பன் சொல்லி இருப்பதை விடக் கோனார் சொன்னால் தான் நம்புவோமே, அந்தக் காலத்தில்! அது போல, ப்ராட்லி ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். அவர் ஷேக்ஸ்பியர் அதாரிடி!

ஏ.சி. ப்ராட்லி (Andrew Cecil Bradley  பிறப்பு 26-3-1851 மறைவு 2-9-1935) இலக்கிய ஆர்வலர்; அறிஞர்! சார்லஸ் ப்ராட்லி என்பவருக்குப் பிறந்த 21 குழந்தைகளில் கடைக்குட்டி. லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் பணியாற்றியவர். அவர் ஷேக்ஸ்பியர் பற்றி ஏராளமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். Shaekespearen Tragedy (1904), Oxford Lectures on Poetry  என்ற அவரது இரு நூல்கள் இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் நூல்கள்!

2

ஷேக்ஸ்பியர் தனது வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அதை இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து அதில் எத்தனை சொற்கள் உள்ளன என்பது வரை சொல்லி விட்டார்கள்.

அந்த ஆய்வின் படி ஷேக்ஸ்பியர் குறைந்த சொற்களாக 14,701 சொற்களை எழுதிப் படைத்த படைப்பு Comedy of Errors. அதிகப்படியாக 30,557 சொற்களைப் பயன்படுத்தி எழுதிய பெரிய படைப்பு -Hamlet. அவர் பயன்படுத்திய மொத்தச் சொற்கள் 8,35,997!

Shakespeare’s plays,

listed by number of words

Total words in all plays: 835,997

Total plays: 37

Average per play: 22,595

Note: A “speech” consists of either words spoken by a character, or a stage direction —

anything from a one-word shout to a long soliloquy.

Words        Play      Genre

30,557      Hamlet

Tragedy

29,278      Richard III

History

27,589      Coriolanus

Tragedy

27,565      Cymbeline

Tragedy

26,450      Othello

Tragedy

26,145      King Lear

Tragedy

26,119      Henry V

History

26,089      Troilus and Cressida

Tragedy

25,689      Henry IV, Part II

History

25,439      Henry VI, Part II

History

24,914      Winter’s Tale

Comedy

24,905      Antony and Cleopatra

Tragedy

24,629      Henry VIII

History

24,579      Henry IV, Part I

History

24,545          Romeo and Juliet

Tragedy

24,294      Henry VI, Part III

History

23,009      All’s Well That Ends Well

Comedy

22,423      Richard II

History

21,845      Merry Wives of Windsor

Comedy

21,780      Measure for Measure

Comedy

21,690      As You Like It

Comedy

21,607      Henry VI, Part I

History

21,459      Love’s Labour’s Lost

Comedy

21,291      Merchant of Venice

Comedy

21,157      Much Ado about Nothing

Comedy

21,055      Taming of the Shrew

Comedy

20,772      King John

History

20,743      Titus Andronicus

Tragedy

19,837      Twelfth Night

Comedy

19,703      Julius Caesar

Tragedy

18,529      Pericles

History

18,216      Timon of Athens

Tragedy

17,129      Two Gentlemen of Verona

Comedy

17,121      Macbeth

Tragedy

16,633      Tempest

Comedy

16,511       Midsummer Night’s Dream

Comedy

 

14,701        Comedy of Errors                       Comedy

இந்த 8,35,997 சொற்களில் புரியாத சொற்கள் பத்தே பத்து தான்!

அந்தச் சொற்கள் :

 1. ARMGAUNT (Antony & Cleopatra, I.V)
 2. BALK’D (Henry IV : Part 1, I.I)
 3. BRAID (All’s Well That Ends Well, IV.II)
 4. COCI-A-HOOP (Romeo & Juliet, I.V)
 5. DEMURING (Antony & Cleopatra IV.XV)
 6. EFTEST (Much Ado About Nothing, IV.II)
 7. GLASSY (Measure For Measure, II.II)
 8. IMPETICOS (Twelfth Night, II.III)
 9. PORTAGE (Pericles, III.I)
 10. WATCH-CASE (Henry IV:Part 2, III.I)

ஷேக்ஸ்பியர் பற்றிய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்து இன்னொரு கட்டுரையில் காண்போம்!

tags–

ஷேக்ஸ்பியர்,

ஏ.சி. ப்ராட்லி, புரியாத சொற்கள்

****

தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில! (Post No.5365)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 14-29 (British Summer Time)

 

Post No. 5365

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையைச் சேர்ந்த தமிழ் பண்டிதர் கோபாலகிருஷ்ண ஐயர் பல ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் கவிதை வடிவில் தந்தார். அதில் ஷேக்ஸ்பியரின் சில கவிதைகளையும் நாடக வசனங்களையும் தமிழில் காண்போம்.

 

ஷேக்ஸ்பியர் ஒரு மஹா மேதை என்பதைக் கீழ்கண்ட புள்ளிவிவரமே காட்டும் :

அவர் எழுதிய நாடகங்கள் 37

அவர் நாடகத்தில் எழுதிய வரிகள் 34,896

அவர் எழுதிய நாடகங்களில் மிகப் பெரியது (Hamlet) ஹாம்லெட்- 4042 வரிகள்

சிறிய நாடகம்- (Comedy of Errors) காமெடி ஆப் எர்ரர்ஸ்- 1787 வரிகள்

 

அவர் உருவாக்கிய கதா பாத்திரங்கள்- 1221 பேர்

அவர் கவிதை, நாடகங்களில் பயன்படுத்திய சொற்கள் 8,84,429

ஒப்பற்ற (unique) சிறப்புச் சொற்கள் 28,829

ஒரே முறை மட்டும் வந்த சொற்கள் 12493

 

His plays are: அவருடைய 37 நாடகங்கள்
1 Two Gentlemen of Verona
2 Taming of the Shrew
3 Henry VI, part 1
4 Henry VI, part 3
5 Titus Andronicus
6 Henry VI, part 2
7 Richard III
8 The Comedy of Errors
9 Love’s Labours Lost
10 A Midsummer Night’s Dream
11 Romeo and Juliet
12 Richard II
13 King John
14 The Merchant of Venice
15 Henry IV, part 1
16 The Merry Wives of Windsor
17 Henry IV, part 2
18 Much Ado About Nothing
19 Henry V
20 Julius Caesar
21 As You Like It
22 Hamlet
23 Twelfth Night
24 Troilus and Cressida
25 Measure for Measure
26 Othello
27 All’s Well That Ends Well
28 Timon of Athens
29 The Tragedy of King Lear
30 Macbeth
31 Anthony and Cleopatra

32 Pericles, Prince of Tyre
33 Coriolanus
34 Winter’s Tale
35 Cymbeline
36 The Tempest
37 Henry VIII

 

 

–SUBHAM–

என்னுடைய புத்தாண்டு சபதம்! FACEBOOK LIKES! பேஸ்புக் லைக்ஸ்!

WRITTEN by London Swaminathan 

 

Date: 9 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7–19 am

 

 

Post No. 4473

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சபதம் ( NEW YEAR RESOLUTION) எடுக்கிறேன்; அது ஜனவரி இரண்டாம் தேதியே காற்றில் பறந்துவிடுகிறது. ஏன் தெரியுமா? நடக்க முடியாத விஷயங்களை நினைப்பதால்தான்! ‘கோபமே வரக்கூடாது; யாரையும் சபிக்கக்கூடாது’ என்று சபதம் எடுத்தேன். நான் வேலை பார்த்த இடத்தில் காரணமே இல்லாமல் எனக்கு எதிராகச் சதி செய்தவர்களைச் சபிப்பதும் வெறுப்பதும் இன்று வரை மனதை விட்டு அகலவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் வெல்லுவது அப்படி என்ன கிள்ளுக் கீரையா?

அப்படி கோபத்தையும் வெறுப்பையும் வென்று விட்டால் அப்புறம் சங்கராச்சார்யார், பாபா ஆகியோர் படங்களுடன் என் படமும் சுவரில் தொங்குமே! அது நடக்கக் கூடிய காரியம் இல்லை!!!

என் தந்தையைக் காண தினமும் நிறைய பேர் வருவார்கள்; அவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். அவர் பெயர் வெ. சந்தானம். மதுரையில் தினமணி பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டிற்கு வந்து செய்திகளைக் கொடுத்து ‘ஸார்! கட்டாயம் நாளைக்கே, கொட்டை எழுத்துக்களில் பெரிய செய்தியாகப் போட்டு விடுங்கள்’ என்பார்கள். என் தந்தை ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். யெஸ் YES என்றோ நோ NO என்றோ சொல்ல மாட்டார்.

 

சில நேரங்களில் நானும் அதை வாங்கிப் பார்ப்பேன், படிப்பேன்; அவருடைய புன் சிரிப்பின் காரணத்தை அறிய! ஒரு முறை அந்தச் செய்தியைப் படித்தவுடன் எனக்கு புன்சிரிப்புக்குப் பதிலாகக் குபீர் சிரிப்பு வந்தது வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தேன். என் அப்பாவின் முன்னிலையில் ஒரு காமெண்ட் (COMMENT) டும் அடித்தேன்.

 

“சரியான முட்டாள் பயல்! கங்கை நதி -வைகை நதி  இணைப்பு  சங்கக் கூட்டம்! இது என்ன பைத்தியக்காரத்தனம்? கங்கை நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகளையே இணைக்க முடியாது. இடையில் பெரிய தக்காண பீடபூமி இருக்கிறது. பூகோளமே தெரியாத பயல் எல்லாம் சங்கம் நடத்துகிறான்” என்றேன்

 

பொதுவாக எங்களிடம் அதிகமாகப் பொது விஷயங்களைக் கதைக்காத என் தந்தை கதைத்தார். சிரித்துக்கொண்டே சொன்னார். அவன் பெயர் குலாம்பாய்; 7 சங்கங்களுக்கு தலைவன்; நல்லவன்; காஷ்மீர் நமதே சங்கம், நடைபாதைக்காரர் கள் சங்கம், சைக்கிள் சவாரி செய்வோர் சங்கம் போன்ற சங்கங்களுடன் கங்கை- வைகை நதி இணைப்பு சங்கமும் வைத்திருக்கிறான். எது நடக்க முடியாதோ அதை லட்சியமாக வைத்து நடத்துவதே அவன் தொழில்; நடக்கக்கூடிய ஒரு லட்சியம் வைத்து இருந்தால் சங்கத்தின் முடிவு நெருங்கிவிடும். கங்கை- வைகை இணைப்பு நடக்க 100 ஆண்டுகள் ஆகலாம்; நடக்காமலும் போகலாம். இதனால் சங்கம் ஆண்டுதோறும் கூடி, ஒரு தீர்மானமாவது நிறை வேற்றலாம் என்று தொடர்ந்தார். என் சிரிப்பு அடங்கியது. மேலும் ஒரு பாடம், தந்தையிடமிருந்து, கற்றேன்.

 

இது போல நடக்கமுடியாத பிரமாண்டமான லட்சியங்களை வைக்கக்கூடாதென்று நினைத்து இந்த ஆண்டு, நடக்கக்கூடிய(?!?!?!) ஒரு ரெஸல்யூஷன் – தீர்மானம் நிறைவேற்றப் போகிறேன்.

புதிய, நடக்கக்கூடிய ஒரு புத்தாண்டு சபதம் எடுக்கப்போகிறேன். அது என்ன? தயவு செய்து யாரும் போட்டிக்கு வராதீர்கள்!

 

பேஸ்புக்கில் FACEBOOK நிறைய பேருக்கு LIKE லைக் போட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதே என் லட்சியம்! ஆனால் எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு, நிபந்தனையும் போட்டுக்கொள்வேன். கண்ட கண்ட, தோழான் துருத்திக்கெல்லாம்,(TOM DICK AND HARRY)  சகட்டுமேனிக்கு லைக் போட மாட்டேன். அடி மனதின் ஆழத்திலிருந்து, இந்த விஷயம் புதிய விஷயம், இது உன்னத கருத்து, இது உண்மையிலேயே அழகானது என்று என் மனதில் படும்போது மட்டுமே லைக் போடுவேன்.

பொம்பளை படத்துக்கு அதிக லைக்ஸ்!

ஏன் இந்த திடீர் ஆசை? அற்ப ஆசை! என்று கேட்கிறீர்களா? ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு அழகான பொன்மொழி கண்களில் பட்டது.

 

‘சீ! நன்றி சொல்லுவதில்கூட நான் பிச்சைக்காரன்!’ என்று ஹாம்லெட் நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது.

BEGGAR THAT I AM, I AM EVEN POOR IN THANKS (HAMLET).

 

பேஸ்புக்கில் பலர் LIKE லைக் போடுவதில்கூட பிச்சைக்காரகளாக இருக்கிறார்களே! என்ற நினைப்பு உடனே பளிச்சிட்டது. ஆனால் அவர்கள் தவறாமல், பெண்கள் படங்களுக்கு, அதாவது பெண்கள் (நண்பிகள்) UPLOAD அப்லோட் செய்யும் படத்துத்துக்கு

தவறாமல் லைக் போடுவதையும் பார்க்கிறேன்.

இது என்னடா? புதிய வியாதி!

 

ஆனால் இதைச் சொன்னவுடன் என் போஸ்டு POST களுக்கு எல்லாம் லைக் போட வேண்டும் என்று நான் நினைப்பதாக நீங்கள் நினைத்துவிட மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் (குழப்புகிறேனோ?)

லைக் போடுவதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் புரிகிறது. யாராவது ஒருவருக்கு லைக் போட்டால் அந்த ஆள் போடும் வேண்டாத போஸ்டுகளும் நம் கண் முன் தோன்றி நம் கழுத்தை அறுக்கும். வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய கதை ஆகிவிடும். வேலியிலே போன ஓணானை ……………………. (UNPARLIAMENTARY WORDS!) விட்டுக்கொண்டு குடையுதே குடையுதே என்று கத்திய கதை ஆகிவிடும்.

 

 

நான் சொல்ல வந்த விஷயங்கள் இரண்டே!

 

 1. புத்தாண்டில் 2018-ல், நான் அதிகம் பேருக்கு லைக் போட்டு பேஸ்புக்கில் முதலிடம் பிடிக்க வேண்டும் (நடைமுறை வாழ்க்கையிலும் இதைச் செய்யலாம்)
 2. நீங்களும் எல்லாருடைய ஒரிஜினல் போஸ்டுகளுக்கும் லைக் போட்டு அவர்களை ஆதரியுங்கள்.

 

 1. பெண்களின் போஸ்டுகளுக்கும், பெண்களின் படங்களுக்கும் லைக் போடுவதை நான் தடுக்கவா முடியும்?

கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக

ஷேக்ஸ்பியர் உதிர்த்த மேலும் இரண்டு நன்றிப் பொன்மொழிகளை மொழிவேன்.

 

வள்ளுவன் சொன்ன செய்நன்றி அறிதல் பற்றிய பத்துக் குறட்களும் தான் நமக்கு அத்துபடியாயிற்றே! நான் அரைத்த மாவையே அரைக்க விரும்புவதில்லை!

 

இதோ ஷேக்ஸ்பியர்:–

 

சீ நன்றிகெட்ட ஒரு மகன், விஷப்பாம்பின் பல்லை விடக் கொடுமையானவன்! –(கிங் லியர்)

HOW SHARPER THAN A SERPENT’S TOTH IT IS TO HAVE A THANKLESS CHILD (KING LEAR).

 

நான் உன் குரலுக்கு நன்றி சொல்லுகிறேன், நன்றி, என்ன இனிமையான குரல்! – (கொரியோலேனஸ்)

 

I THANK YOU FOR YOUR VOICES, THANK YOU, YOUR MOST SWEET VOICES (CORIOLANUS)

 

பேஸ்புக் வாழ்க! லைக்ஸ் வாழ்க! வாழ்க!!

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450)

Written by London Swaminathan 

 

Date: 1 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-59

 

 

Post No. 4450

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்   இந்துக்கள் போற்றும்  துருவ நட்சத்திரம்! (Post No.4450)

துருவ நட்சத்திரம் என்பதை அறியாத இந்துக்கள் இருக்க முடியாது. திட உறுதிக்குப் பெயர் எடுத்தவன் துருவன். இந்துக்களின் நூல்களில் சிறுவர்களும் புகழ்பெறுவார்கள்— நசிகேதன், மார்கண்டேயன், துருவன் போன்ற சிறுவர்கள் அ ழியாத இடம் பெற்றவர்களில் சிலர். இந்த துருவ நட்சத்திரத்தை நாம் எப்படி உறுதியின் சின்னமாக, நிலைத்த தன்மையின் சின்னமாகக் கருதுகிறோமோ அது போல ஷேக்ஸ்பியரும் கருதுகிறார். அவர் பல நாடகங்களில் இந்து மதக் கருத்துக்களை எதிரொலிப்பதால் இந்துக் கதைகளை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒரு இடத்தில் நாகரத்னம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் தேரையின் த லையில் உள்ள ரத்தினம் என்பார். ஏதோ பராபரியாக நமது நம்பிக்கைகளை அறிந்திருப்பார் போலும். ஓரிடத்தில் காளிதாசனின் சகுந்தலையைப் போலவே மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு இடத்தில்  ஜூலியஸ்சீசர் வாய்மொழி மூலமாக துருவ நட்சத்திரத்தைப் புகழ்கிறார்.

 

துருவனின் கதை எல்லோரும் அறிந்த கதைதான்:- ஸ்வாயம்புவ மனுவுக்கு இரண்டு புத்திரர்கள் என்று விஷ்ணு புராணம் கதை சொல்கிறது. பிரியவிரதன், உத்தான பாதன் என்ற இரண்டு மகன்களில் உத்தான பாதனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தியின் பெயர்  சுருசி; அகந்தையின் சின்னம்; மற்றொருத்தியின் பெயர் சுநீதி; அடக்கத்தின் உறைவிடம்!

 

சுருசியின் மகன் பெயர் உத்தமன்; சுநீதியின் மகன் பெயர் துருவன். எங்கேயாவது அடுத்த பட்டத்துக்கு துருவன் போட்டிக்கு வந்துவிடுவானோ, தன் மகன் உத்தமனை பதவிக்கட்டிலில் அமர விடாமல் தடுத்துவிடுவானோ என்று எண்ணி சின்ன வயதிலிருந்தே துருவனைப் படாதபாடு படுத்தினாள் சு-ருசி. பெயரிலுள்ள ருசி குணத்தில் இல்லை! சு-நீதி மிகவுமடக்கமானவள்  என்பதால் துருவனை ரிஷி முனிவர் கோஷ்டியில் சேர்த்துவிட்டாள். அவர்கள் பேரின்பத்துக்கு வழிகாட்டுவர் என்றும் சொன்னாள்.

 

துருவனும் தாய் சொல்லைத் தட்டாதே என்று ரிஷி முனிவர்களுடன் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். இந்திரனுக்கு அச்சம்! அட, நம்ம பதவிக்கு உயரத்தான் தவம் செய்கிறான் போலும் என்று தடுத்துப் பார்த்தான்; முடியவில்லை. துருவனோ நாராயணனே நமக்கே பறை தருவான் என்று தவம் செய்தது வீண்போகவில்லை.

நாராயணனே நேரில் தோன்றி அவனை அரசு பதவிக்கும் மேலான இடத்தில், துருவ நட்சத்திரமாக உயர்த்தினார் என்று விஷ்ணு புராணம் புகழும்.

துருவ நட்சத்திரம் பற்றி க்ருஹ்ய சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் நூல்களில் பல  இடங்களில் அருந்ததி நட்சத்திரம் பற்றி விதந்தோதுகின்றனர். சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்ட நட்சத்திரத்தை ஒட்டியுள்ள அருந்ததியை திருமணமான தம்பதிகளுக்குக் காட்டுவதற்கு முதலில் துருவ நட்சத்திரத்தைக் காட்டி அதிலிருந்து அருந்ததி இருக்கும் இடத்தை உணர்த்துவர். ஆகவே 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அருந்ததி, சப்தரிஷி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றை தமிழர்களும் வட இந்தியர்களும் அறிவர்.

 

ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஸீஸர் கூறுகிறார்.
“But I am constant as the Northern Star, of whose true fixed and resting quality, there is no fellow in the firmament”– (Caesar)

 

நான் வட மீன் போல நிலையானவன்; அதனுடைய உறுதியும் நிலைத்த குணமும் உடையவன்; வானத்தில் வேறு எங்கும் காணமுடியாத அருங்குணம் அது- ஸீஸர்

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்  உள்ள இந்த வாசகம் நமது புராணத்திலும் இதிஹாசத்திலும் துருவன் பற்றி புகழப்படும் வாசகம்.

கிரேக்க புராணங்களில் சப்தரிஷி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பெருங்கரடிக் கூட்டம் (Great Bear, Ursa Major) என்று சொல்வரேயன்றி நம்மைப் போல புனிதமோ திட உறுதி பற்றிய குணங்களோ கற்பிக்கப்படுவதில்லை. ஆகவே ஷேக்ஸ்பியர் இந்து நம்பிக்கைகளை அறிந்திருந்தார் என்று சொல்வது மிகையல்ல.

நிறைய திருக்குறள் கருத்துக்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருப்பதால் அவற்றையும் பின்னணியில் வைத்து எனது கருத்துக்களை நோக்க வேண்டும். ஆங்கிலத்தில் நாலைந்து கட்டுரைகளில் திருக்குறள்- ஷேக்ஸ்பியர் ஒப்பீடுகளை அளித்துவிட்டேன். விரைவில் தமிழிலும் தருவேன்.

 

சுபம்–

பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220)

Written by London Swaminathan

 

Date: 17 September 2017

 

Time uploaded in London- 6-56 am

 

Post No. 4220

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பெண்களை தாயார் ஸ்தானத்தில் வைக்கும்போது அவர்களை இந்து மதம் புகழ்வது போல வேறு எந்த மதமும் புகழ்வதில்லை; தமிழ் சம்ஸ்கிருத நூல்களில் கண்டது போல வேறு எங்கும் கண்டதில்லை. மனு தர்ம சாஸ்திரமோ பெண்களை உச்சானிக்  கொம்பில் வைத்து போற்றுகிறது. அவர்கள் அழுதால் அந்தக் குடும்பம் அல்லது அதற்குக்  காரணமானவர் வேருடன் சாய்வர் என்று எச்சரிக்கிறார் மனு. பெண்களுக்கு நகை நட்டுகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்க வேண்டும் என்றும் உலகிற்கு புத்திமதி சொல்கிறார். சுத்த மான இடங்கள் எவை என்பதை பட்டியலிடுகையில் பெண்களின் வாய் எப்போதும் சுத்தமானது என்றும் சொல்லுகிறார் மனு (எனது பழைய கட்டுரைகளில் ஸ்லோக எண்களுடன்  மேல் விவரம் காண்க)

 

மேல் நாட்டு இலக்கியங்களில் பெண்களின் அழகை வருணிப்பர்; அவர்களைத் தூற்றுவர். ஆங்கில  மஹா கவி ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களிலும் இதைக் காணலாம்; கம்பனிலும் இதைக் காணலாம். நீதி வெண்பாவிலும் இதைக் காணலாம்; திருக்குறளிலும் இதைப் படிக்கலாம்.

 

ஆனால் தாய், சஹோதரி என்ற நிலையில் நாம் புகழ்வோம்; மேல்நாட்டு இலக்கியங்களில் அப்படி இல்லை!

 

அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:

 

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்

கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே

கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ

மானார் விழியார் மனம்.

 

பொருள்:

பித்தரே= பெண் மயக்கம் கொண்ட பித்தர்களே; பைத்தியக்காரர்களே!

 

அரு = பார்ப்பதற்கு அருமையான

அத்தி மலரும் = அத்திப் பூவும்

காக்கை வெண்ணிறமும் = காக்கையின் வெள்ளை நிறமும்

கத்து புனல் மீன் பதமும் = ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும்

கண்டாலும் = ஒருக்கால் பார்க்க இயன்றாலும்

(பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது)

(நாம் மட்டும் அல்ல)

கான் ஆர் தெரியல் கடவுளரும் = மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்

மான் ஆர் விழியார் மனம் = மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெ ண்களின் நெஞ்சத்தைக் காண்பரோ = காண்பார்களோ?

(அவர்களும் காண மாட்டார்)

 

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

 

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

 

ரிக் வேதத்தில் ஊர்வசிக்கும் (10-95) புரூருவசுக்கும் இடையே நடை பெறும் அற்புதமான உரையாடல் உளது; அதில் ஊர்வசி சொல்கிறாள்

 

வேண்டாம்; புரூருவஸ், இறந்து விடாதே, றைந்து விடாதே. கெட்ட ஓநாய்கள் உன்னை விழுங்கிவிடக் கூடாது.

 

பெண்களுடன் நிரந்தர நட்பு என்று எதுவுமே கிடையாது; பெண்களின் இதயம் புலியின் (கழுதைப் புலி) இதயம் போன்றது.

 

ஷேக்ஸ்பியர் சொன்ன அதே சொற்கள்!

Nay, do not die Puruvas, nor vanish;

let not the evil-omened wolves devour thee.

With women, there can be no lasting friendship; hearts of the hyenas are the hearts of women.

RV 10-95-15

கம்பன், வள்ளுவன், வேத கால ரிஷி, ஷேக்ஸ்பியர் ஆகியோர் எச்சரிக்கும் அழகே தனி! ஒப்பிட்டு மகிழ்க!

 

My Old Article:

 1. பெண்களின்எதிரி | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பெண்களின்…

Posts about பெண்களின் … பெண்களின் எதிரியா? … கம்பன், …

 

 

 

TAGS: பெண் மனம், புலியின் இதயம், ஷேக்ஸ்பியர், ரிக்வேதம், நீதி வெண்பா

 

–Subham–