ஹிட்லர் பயம்! ஸ்வஸ்திகா பயம் ! மில்லியன் ரூபாய் ‘வேஸ்ட்’ (Post No.8248)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8248

Date uploaded in London – 27 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Swastika on Indus – Sarasvati Civilization Seals
swastika on Germany stamps

ஆஸ்திரியா நாட்டில் இரண்டு சம்பவங்கள் ; செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உலகம் முழுதும் அகதிகளாக வந்து குடியேறும் மக்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the Soil)  கொதிக்கிறார்கள். வேலையே செய்யாமல் அரசின் உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது வெடிகுண்டு வைத்து மண்ணின் மைந்தர்களை- ஒரிஜினல் குடி மக்களைக் — கொல்வதைக் கண்டு வெறுப்பு அலைகளை பரப்பி வருகிறார்கள் வீடு ஒதுக்கீடு முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பன்றிக்குட்டி போல 10 அல்லது 15 குழந்தைகளுடன் வசிப்பதும் அந்தந்த நாட்டு மக்களின் வயிற்று எரிச்சலை அதிகரிக்கிறது. இப்படிக் கொதித்துப் போகும் பலரும் ஆதரிக்கும் கட்சி ஹிட்லர் கட்சி ஆகும்.

மாக்ஸ்முல்லர் (Prof. Max Muller) என்ற சம்ஸ்கிருத கிராதகன் ஒரு பொய்யைப் பரப்பினான். ‘நான் ஜெர்மானியன் ; இந்தியாவில் குடியேறிய ஆரியர்களும் நாங்களும் ஒன்றே’ என்றான். வேடிக்கை என்னவென்றால் அந்த ஆள் சாகும் வரை இந்தியாவுக்கே வந்ததில்லை! இதை படித்த ஹிட்லர் நானும் ஆரியன்; நாங்கள் மட்டுமே தூய , ஒரிஜினல் குடி மக்கள் ; மற்ற உதவாக்கரைகளை ஒழிப்பதே என் லட்சியம் என்று மெய்ன் காம்ப் (Mein Kampf) என்னும் சுயசரிதைப் புஸ்தகத்தில் எழுதினான் . இந்துக்களின் புனிதச்  சின்னமான சுவஸ்திகா சின்னத்தைக் கொடியிலும் மிலிட்டரி சின்னங்களிலும் பொறித்தான்.

மாக்ஸ்முல்லர் சொன்னதை நம்பி, அவன் சுவஸ்திகா (Swastika) சின்னத்துடன்  மற்றவர்களைக் கொன்று குவித்தான் அது முதற்கொண்டு சுவஸ்திகா சின்னத்தைக் கண்டாலே எல்லா வெள்ளையர்களும் உடுத்தியிருக்கும் ஆடையிலேயே சிறு நீர் கழித்து விடுவார்கள் . இப்போதும் கூட அகதிகளை எதிர்க்கும் ஐரோப்பிய வெள்ளையர் கட்சிகள் இந்த சின்னத்தைப் பயன்படுத்துகின்றன. அவர்கள் ஹிட்லரை தங்களுடைய உதாரண புருஷனாகப் பார்க்கிறார்கள் . அவ்வப்போது ஐரோப்பிய நாட்டுத் தேர்தல்களில் பெரிய வெற்றியும் பெறுகிறார்கள்.

ஹிட்லர் பிறந்தது ஆஸ்திரியா (Austria) என்னும் நாடு. அங்கு ஒரு பள்ளிக்கூடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டப்பட்டது. ஒரு முறை விமானத்தில் இருந்து இதை பார்த்தபோது அது  (Swastika) சுவஸ்திகா வடிவத்தில் இருந்ததை ஒருவர் கண்டு விட்டார். உடனே பத்திரிகைகளில் பெரிய செய்தி. எல்லோரும் ஆடையிலேயே ஒன்னுக்குப் போய்விட்டார்கள். உடனே பள்ளிக்கூடத்தை இடித்து மாற்றிக் கட்டு என்று உத்தரவு போட்டனர். செலவு ஆறு மில்லியன் யூரோ; அதாவது 60 லட்சம் யூரோ (இன்று ஒரு யூரோ =85 ரூபாய்) பவுன் ஸ்டெர்லிங்கும் யூரோவும் அப்போது கிட்டத்தட்ட சம மதிப்பில் இருந்தன;

இது பழைய செய்தி (Metro 23-5-2012)

***

புதிய செய்தி இதோ ஜூன் 2, 2020

even today Hindus use Swastika

சென்ற 2019-ல் ஒரு பெரிய வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆஸ்திரிய அரசு. பிரானோ ஆம் இன்  (Braunau am Inn in Austria)  என்கிற சிற்றுரில் 1889 ஏப்ரல் 20ம் தேதி ஹிட்லர் பிறந்தார். இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின்னர் அது டூரிஸ்ட் ஸ்தலமாகி வருவதைக் கண்டு பய ந்த ஆஸ்திரிய அரசு அதை வாடகைக்கு எடுத்து பல அலுவலகப் பணிகளுக்குப் பயன் பபடுத்தியது .அதன் தற்போதைய சொந்தக்காரர் எந்த மாற்றமும் செய்யக்கூடாதென்றதால் அரசு பலவந்தமாக ஒரு ஆணை பிறப்பித்து அதை ஒன்பது லட்சம் டாலருக்கு விலைக்கு வாங்கியது நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அதை போலீஸ் ஸ்டேஷனாக மாற்ற இந்த 2020 ஜூன் மதம் முடிவு செய்தது.அதற்கான செலவு 50 லட்சம் யூரோ (ஒரு யூரோ 84 ரூபாய்). கட்டி முடிக்கப்போகும் ஆண்டு  2223 ம் ஆண்டு. அதற்குள் இன்னும் செலவு உயரக்கூடும் யானைக்கு கோதுமை அல்வா வாங்கிப் போட்ட கதைதான்.

ஹிட்லர் ஆதரவுக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெரும்போதெல்லாம் அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது . மக்களின் வரிப்பணமும் வீணாகிறது

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது தமிழ் பழமொழி.

ஹிட்லர் இருந்தாலும் ஆயிரம் பயம்  , இறந்தாலும் ஆயிரம் பயம்  என்பது  புது மொழி.

Tags –ஹிட்லர் , பயம் ,ஸ்வஸ்திகா

–subham–

சிம்பல் SYMBOL மயம் உலகம்!(Post No.3586)

Germany Stamps with Swastika

Written by S NAGARAJAN

 

Date: 29 January 2017

 

Time uploaded in London:-  5-29 am

 

 

Post No.3586

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

பாக்யா 20-1-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

சிம்பல் மயம் உலகம்!

 

ச.நாகராஜன்

 

சிம்பல் (Symbol) எனப்படும் அடையாளக் குறியீடு அல்லது சின்னம் இன்று உலகில் பெற்றுள்ள முக்கியத்துவம் மனித சரித்திரத்தின் பரிணாம வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகிறது.

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் சுருங்கி விட்ட உலகத்தில் எந்த ஒரு மொழி பேசுபவருக்கும் ஒரு மௌன மொழியாக, பல இடங்களில் உயிர் காக்கும் கருவியாக, சிம்பல் விளங்குகிறது.

 

 

எதிரிலே ஒரு பாலம் வருகிறது, பாதை வளைகிறது, மெதுவாகப் போ, ஆபத்தான ஹேர் பின் பெண்ட் என்றெல்லாம் இந்த சிம்பல்கள் சுட்டிக் காட்டுவதால் அல்லவா மனிதன் உயிரிழப்பு இல்லாமல் நிம்மதியாக ஒரு இடத்தைச் சென்று சேர முடிகிறது!

மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உலகத்தை சிம்பல்களினால் படைக்க முடியும் என்று இந்த அடையாளக் குறியீட்டில் ஆர்வம் உள்ளவர்கள்  சொல்கின்றனர்.

 

 

ஹென்றி ட்ரைஃபஸ் (Henry Dreyfuss )   என்பவர் இந்த அடையாளங்களைத் தொகுப்பதில் முன்னோடி. சுமார் இருபதினாயிரம் சிம்பல்களை அவர் உலகெங்குமிலிருந்து பல்வேறு நாகரிகங்கள், நாடுகளிலிருந்து தொகுத்திருக்கிறார். சிம்பல் சோர்ஸ்புக் (Symbol Sourcebook) என்ற அவரது புத்தகம் ஆயிரக்கணக்கான சிம்பல்களைச் சித்தரித்து அவற்றின் அர்த்தத்தையும் விளக்குகிறது; பார்ப்போருக்குப் பிரமிப்பையும் தருகிறது.

 

 

வரலாறில் சிம்பல்களின் தாக்கம் மகத்தானது.

இரண்டாம் உலகப்போரில் அசுர சக்தியாக விளங்கிய ஹிட்லர் பல நாடுகளுக்கும் சிம்ம சொப்ப்னமாக இருந்தான். அவனது கொடியில் ஸ்வஸ்திகா பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் முடிவில் அவன் வீழ்ச்சியையே அடைந்தான்; தற்கொலை செய்து கொண்டான்.

ஹிந்துக்களின் நலச் சின்னமாகவும் புனித அடையாளக் குறியீடாகவும் காலமெல்லாம் விளங்கி வருவது ஸ்வஸ்திகா. கோவில்களில் தவ்றாமல் இடம் பெறும் சின்னமும் இதுவே.

இதில் இரு வகை உண்டு. வலப்பக்க சுழற்சி உடைய ஸ்வஸ்திகா தைவிக் ஸ்வஸ்திகா என்று குறிப்பிடப்பட்டு நல்லனவற்றைத் தரும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இதையே ஹிந்து ஆலயங்களில் காணலாம்,

 

 

ஆனால் உலகின் அதிர்ஷ்டத்தின் காரணமாக ஹிட்லர் ஸ்வஸ்திகாவின் சுழற்சியை இடப்பக்கமாக மாற்றி அதை 45 டிகிரி கோணத்தில் வேறு வளைத்து தீமையைத் தரும் ஆசுரிக் ஸ்வஸ்திகாவைத் தேர்ந்தெடுத்தான். விளைவு, அசுர வேகத்தில் முன்னேறிய அவன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.

பண்டைய ரோமில் பாதாளக் கல்லறைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது ஒரு அதிசய செய்தி. திபெத்திய சுவடிகள், குகைகள் மற்றும் ஆலயங்களிலும் ஸ்வஸ்திகா இடம் பெற்றுள்ளது.

 

 

 

இரண்டாம் உலகப் போரில் வி (V) என்ற வெற்றிச் சின்னத்தை தன் இரு விரல்களில் மூலம் காட்டினார் வின்ஸ்டன் சர்ச்சில். கையின் பின்புறம் தன்னை நோக்கி இருந்து ‘வி’-ஐப் பார்ப்போருக்குக் காண்பித்தால்,அது வெற்றி.

 

 

காண்பிப்பவரை நோக்கி உள்ளங்கை இருந்து இரு விரல்களைக் காண்பித்தால் அது அடுத்தவரை அவமானப்படுத்தும் சைகை.  சர்ச்சில் வெற்றிக்கான சைகையை வடிவமைத்து 1941, ஜூலை,20 ஆம் தேதி பிபிசி மூலம் பிரிட்டனில் அதை பிரபலப் படுத்தினார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆரும் இந்த வி சைகையையும் இரட்டை இலையையும் மக்களிடையே உற்சாகமாகப் பரப்பி தொடர் வெற்றி கண்டதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

ஆக உலக தலைவர்கள் அனைவருமே சிம்பல்களில் தனிக் கவனம் செலுத்துவது அதன் மூலம் மக்களை உத்வேகமூட்டி ஒரு பெரிய வெற்றிக்கு அழைத்துச் செல்வதற்கே.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2008ஆம் ஆண்டு தனது தேர்தல் பிர்ச்சாரத்தின் போது தவறாமல் கையில் எடுத்துச் சென்றது ஹனுமானின் படத்தையே. இதை அப்போதைய எகனாமிக்ஸ் டைம்ஸ் (10-6-2008இதழ்) வெளியிட்டது.

 

 

இஸ்ரேலில் புனிதமாகக் கொண்டாடப்படும் ஸ்டார் ஆஃப் டேவிட் தென்னிந்தியக் கோவில்களில் தவறாமல் இடம் பெறுகிறது. முருகனின் அருளைப் பெற ஷட் கோணத்தை முருக பக்தர்கள் வீட்டில் வைத்து வழி படுகின்றனர்.

ஸ்ரீ சக்ரத்தின் பெருமையை அலெக்ஸி குலைச்சேவ் என்ற ரஷியர் பிரம்மாண்டமான் ஆய்வு செய்து பிரமிக்க வைக்கும் உண்மகளை ஆய்வு முடிவாகத் தந்திருக்கிறார்.ஸ்ரீ சக்ரத்தில் உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும், அத்துடன் கூட இன்னும் விளங்கிக் கொள்ள் முடியாத விடை காண இயலாத அநேக அறிவியல் விளக்கங்களும் இந்த யந்திரத்தில் உள்ளன என்கிறார் அவர். ஸ்ரீ சக்ரத்தில் உள்ள சிக்கலான கணிதத்தை நவீன தலைமுறை கம்ப்யூட்டர்கள் கூட விடுவிக்க முடியவில்லை என்ற அவரது கூற்று நம்மை பிரமிக்க வைக்கிறது!

இந்த யந்திரத்தின் பல்வேறு ம்ஹிமைகளைப் பட்டியலிடும் அவர் எப்படி இந்த யந்திரம் பண்டைய காலத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்று வியக்கிறார்!

 

புத்த மதத்தினரின் தர்ம சக்கரம் உள்ளிட்ட நல்ல அடையாளக் குறியீடுகள் காலம் காலமாக பலன் அளித்து வருவதை பௌத்தர்கள் உணர்ந்து இன்றும் அவற்றை விடாமல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட சிம்பல்களை இனம் காட்டி உலகெங்கும் விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள் பணத்தில் கொழிப்பது கண்கூடாக நாம் இன்று பார்க்கும் உண்மை.

 

அமெரிக்க டாலர் இன்றும் உலகின் செல்வாக்கு மிக்க கரன்ஸியாக விளங்குவதற்கான காரணம் அதில் உள்ள பிரமிடும் கண்ணுமே என்பதை சிம்பல் ஆய்வாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர் (பாக்யா இதழில் அமெரிக்க டாலர் மர்மம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது). அமெரிக்காவை நிறுவும் போது அதை ஸ்தாபித்த தலைவர்கள் செல்வாக்கு மிக்க சக்தியாக அமெரிக்காவை நீடுழி காலம் இருக்குமாறு செய்ய  இப்படிப்பட்ட பல இரகசிய சிம்பல்களை அமெரிக்க வாழ்க்கை முறையில் புகுத்தி விட்டிருக்கின்றனர் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.


 

உலகியல் வாழ்க்கைக்கு இன்று இன்றியமையாதது சிம்பலே. கணிதத்தின் சமன்பாடுகள், தொழிற்சாலையில் பல விஷயங்களை எளிதில் சுட்டிக் காட்டும் வழிகாட்டிகள், அறிவியலில் பலவற்றையும் விளக்கும் விளக்கக் குறியீடுகள், நெடுஞ்சாலைகள், விமானதளங்கள், கடல் வழிகள் என அங்கிங்கெனாதபடி எங்கும் வழிகாட்ட உதவும் அடையாளச் சின்னங்கள் ஆகியவை மட்டும் இல்லையெனில் இன்று வாழ்க்கை முறையாக நடைபெறாது. சிம்பல் இல்லாத உலகம் விபத்துள்ள உலகமாக ஆகி விடும்.

நமது அன்றாட வாழ்க்கை முறையில் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு சிம்பலைத் தேர்ந்தெடுக்க அவரவர் வாழ்க்கை முறை, தேசீயம், மதம் வழி வகுக்கிறது.

இந்த சிம்பல்களில் வெவ்வேறு வண்ணங்களும் சேர்க்கப்படும் போது அதன் மகத்துவம் பன்மடங்கு பெருகி விடுகிறது. கலர் தெராபி என்பது இன்றைய உலகில் பெரும் சிகிச்சை முறையாக உருவெடுத்து வரும் நிலையில் வண்ணங்களை இடம் அறிந்து பாரம்பரியமாக உள்ள சிம்பல்களில் நமது முன்னோர் இணைத்திருப்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தியே!

சரியான சிம்பலை ஒருவர் நாடி அதை உரிய அளவின் படி செய்து நிர்ணயிக்கப்பட்ட வண்ணங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டால் அது அவருக்கு வேண்டியதைத் தந்து விடும். இதன் உண்மையை அனுபவத்தில் அறியலாம்!

மொத்தத்தில் சிம்பல்  மயம் உலகம்!

*****

 

ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

Swastik_on_head

 

Brahmin boy with Swastika on head.

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

 

‘’சாதிகள் இல்லையடி பாப்பா!—குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!’’ (பாரதி)

 

6 கோடி பேரைக் கொன்ற ஆரிய இனவெறிக் கொள்கை:

இந்து மதத்தினரின் புனிதச் சின்னம் ஸ்வஸ்திகா. ‘’ஸ்வஸ்தி’’ என்றால் மங்களம் உண்டாகட்டும் என்பது பொருள். ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் இந்த சின்னத்தை வரைவார்கள். வணிகர்கள் கடையில் லாபம் தரும் இந்த சின்னத்தை வரைவார்கள்.( இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா, அவருடைய பெண் கல்யாணத்துக்கு அடித்த பத்திரிகையில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம் இருந்தது. அவர், எனது தந்தைக்கு அனுப்பியதை வெகு காலம் வரை நான் பாதுகாத்து வைத்திருந்தேன்).

 

ஸ்வஸ்திகாவை ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்தும் வரை, மேலை நாட்டிலும் இதற்கு நல்ல பெயரே இருந்தது. ஐரோப்பாவில் 10,000 ஆண்டுப் பழமையான தொல் பொருட் துறை சின்னங்களிலும் இந்த சின்னம் காணப்படுகிறது. இதை சூரியனைக் குறிக்கும் சின்னம் என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.

swastika stamps

Swastika stamps issued by Germany under Hitler

ஆரிய திராவிடக் கொள்கை என்னும் விஷப் பாம்பை வளர்த்தவர்கள் வெள்ளைக்காரகள். அந்த விஷப் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தவர்களை அதுவே கொன்றது என்றால் மிகையல்ல. ஆறு கோடிப் பேரை பலிவாங்கிய இரண்டாவது உலகப் போருக்கு ஆரிய இனவாதக் கொள்கைதான் காரணம் என்பதை உலகம் அறியும். ஆறு லட்சம் யூதர்களும், ஐந்து லட்சம் ‘’ஹிந்து ஜிப்சி’’ இனத்தவர்களும், பல்லாயிரகணக்கான இந்திய சிப்பாய்களும் இந்த ஆறு கோடித் தியாகிகளில் அடங்குவர்.

 

 

ஹிட்லர் தான் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ என்னும் சுய சரிதை டயரியில் ஆரிய இன வெறிக் கொள்கையை விளக்கி, உலகில் தூய ஆரியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பிள்ளைகளைப் பெற்றதே ஜெர்மானிய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் எழுதியுள்ளார். (ஆங்கிலக் கட்டுரையில் ஹிட்லரின் சொற்களை அப்படியே கொடுத்துள்ளேன்).

 

அவர் யூத மதத்தினரை வெறுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் அவர்களே காரணம் என்றும் நினைத்ததோடு அவர்கள் ஆரியரால்லாத தாழ்ந்த இனத்தினர் என்றும் கருதினார். வெள்ளைக்கார்கள் இந்தியாவில் விதைத்த அதே விஷ வித்தை ஐரோப்பாவிலும் விதைத்தனர். ஆறு கோடிப் பேரை அந்த இன வெறிக் கொள்கை பலி வாங்கிய பின்னர், அந்த கொள்கையைப் புதைத்து அதன் மேல் கல்லறை கட்டி விட்டனர். ஆனால் இந்தியாவில் இதை அரசியல்வாதிகள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை இங்கும் ஆறு கோடிப் பேரை இது பலி வாங்கினால்தான் கல்லரை கட்டுவார்களோ என்னவோ!

 

ஹிட்லரின் தீப்பொறி கக்கும் பேச்சுகளும் ,நாஜி கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆரிய இனவெறிக் கொகையையும் யூத மத எதிர்ப்புக் கொள்கைகளையும் வரி வரியாக விளக்குகின்றன. ஹிட்லர் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ புத்தகத்தில் ‘’ஆரிய இனம்’’ என்ற ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது.

 

IndusValleySeals_swastikas

Indus Seals with Swastika

 

 

தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் வேத இதிஹாச புராணங்களிலும் இல்லாத, வெள்ளைதோல்—கருப்புத் தோல் இனக் கொள்கை இந்தியாவை மெதுவாகக் கொல்லும் விஷம் என்பது வெள்ளைகாரனுக்குத் தெரியும். நெப்போலியனை தனித் தீவில் வைத்து உணவில் ஆர்சனிக் என்னும் ரசாயனத்தைக் கலந்து, பிரிட்டிஷ்காரகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். இப்போது நெப்போலியன் தலைமுடியை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதுபோல ஆரிய திராவிட இனவெறிக் கொள்கை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தை ஒழித்துகட்டவும் இந்தியாவைத் தகர்த்து அழிக்கவும் அவர்கள் திட்டம் போட்டதை இப்பொது மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

 

சிந்து சமவெளி நாகரீகம் இந்து மத நாகரீகம் என்பதையும் அது அழிந்ததற்கு சரஸ்வதி நதியின் போக்கே காரணம் என்பதும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கிருஷ்ணரின் துவாரகை ‘சுனாமி’-யில் அழிந்தது பற்றி மஹா பாரதமும் புராணாங்களும் கூறியது உண்மைதான் என்பதும் கடலடித் தொல் பொருட் துறை அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

திராவிடர்களை சிந்து சமவெளியிலிருந்து ஓடிவந்த ‘’கோழைகள்’’ என்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்த ‘’வந்தேறு குடியினர்’’ என்றும் வெள்ளைகாரன் எழுதிய சரித்திரம் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டன. சங்க இலக்கியமும் புராணங்களும் கூறும் 18 குடிகளே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்பதும் அது தோலின் நிறத்தின் அடிப்படையிலன்றி மக்களின் வாழ்க்கை முறை, குணங்களின்  அடிப்படையில் அமைந்தது என்றும் எனது 600–க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கி வந்துள்ளேன். மேலும் வரும்……..

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

Hitler about SWASTIKA

In 1920, Adolf Hitler decided that the Nazi Party needed its own insignia and flag. For Hitler, the new flag had to be “a symbol of our own struggle” as well as “highly effective as a poster.” (Mein Kampf, pg. 495)

On August 7, 1920, at the Salzburg Congress, the red flag with a white circle and black swastika became the official emblem of the Nazi Party.

In Mein Kampf, Hitler described the Nazis’ new flag: “In red we see the social idea of the movement, in white the nationalistic idea, in the swastika the mission of the struggle for the victory of the Aryan man, and, by the same token, the victory of the idea of creative work, which as such always has been and always will be anti-Semitic.” (pg. 496-497)

Because of the Nazis’ flag, the swastika soon became a symbol of hate, anti semitism, violence, death, and murder.

4x4HitlerStamps

The Aryan Race

 

Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People

 

‘’If we divide mankind into three categories – founders of culture, bearers of culture, and destroyers of culture – the Aryan alone can be considered as representing the first category.’’

‘’Every manifestation of human culture, every product of art, science and technical skill, which we see before our eyes to-day, is almost exclusively the product of the Aryan creative power’’.

‘’The readiness to sacrifice one’s personal work and, if necessary, even one’s life for others shows its most highly developed form in the Aryan race. The greatness of the Aryan is not based on his intellectual powers, but rather on his willingness to devote all his faculties to the service of the community.’’

Contact swami_48@yahoo.com

Pictures are taken from Wikipedia and other sites; thanks.

swastika in Berlin May PoleSwastika raised in Berlin during Hitler’s rule.