

COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9815
Date uploaded in London –4 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 4-ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXX
ராம ஜென்ம பூமி நில பேரத்தில் ஊழல் இல்லை – சுவாமி கோவிந்த தேவ கிரி அறிவிப்பு
ராம ஜென்ம பூமி கோவில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஊழல் இருப்பதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. அவர்களை, ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்களேன் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் சவால் விட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் கோர்ட்டில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு எதிராக வழக்கு தொடரவில்லை
இதற்கிடையில் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி வியாழக்கிழமை நிருபர்களைச் சந்தித்தார்.; கடந்த மூன்று நாட்களில் நில பேரம் தொடர்பான எல்லா பத்திரங்களையும் நுணுகி ஆராய்ந்ததாகவும் எந்த ஊழலும் நடக்கவில்லை என்பது உறுதியானது என்றும் கூறினார். இருந்தபோதிலும் எல்லா நடவடிக்கைகளும் பகிரங்கமாக நடத்தப்படும் என்றார் தன்னுடன் மேலும் இரண்டு ட்ரஸ்ட் மெம்பர்களையும் வைத்துக்கொண்டு மூன்று நாட்களுக்கு பத்திரங்களை ஆராய்ந்ததாகவும் ஊழல் புகார் சொன்னவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசி இருக்கின்றனர் என்றும் சொன்னார்.
புகார் கொடுத்தவர்கள் நாங்கள் கொடுத்த விலையைவிட குறைவான விலையில் நிலம் வாங்கித் தந்தால் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக கடன்பட்டவர்களாக இருப்போம் என்றும் சுவாமி கோவிந்த தேவ் கிரி கூறினார்
XXXX

வேறு ஜாதி திருமணத்திற்கு தடை: காஷ்மீர் சீக்கியர்கள் கோரிக்கை
ஜம்மு – காஷ்மீரில், வேறு ஜாதி திருமணங்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என, சீக்கியர்கள் கோரியுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில், சீக்கிய மதத்தை சேர்ந்த நான்கு பெண்கள், சமீபத்தில் முஸ்லிமாக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீக்கிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜக்மோகன் சிங் ரெய்னா, ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஜம்மு – காஷ்மீரில் மத மாற்ற சம்பவங்கள் தொடர்வதால், மதமாற்ற தடுப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு, வேறு ஜாதியினரை திருமணம் செய்து கொள்வதை தடுக்கவும் சட்டம் இயற்ற வேண்டும். இதுபோன்ற சட்டங்கள், மத மற்றும் இன நம்பிக்கை உள்ளோரை காப்பாற்றுவதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.
காஷ்மீரில் நடந்த கட்டாய மத மாற்றக் கல்யாணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஜம்மு காஸ்மீர் மற்றும் டில்லியிலுள்ள சீக்கியர்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சீக்கிய மதத் தலைவர்களும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களும் அடங்கிய குழு மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா, கிஷன் ரெட்டி ஆகியோரைச் சந்தித்து மனுவும் கொடுத்தனர்.
XXX

ராம்தேவ் பேசியது என்ன? விபரம் கேட்கிறது கோர்ட்!
யோகா குரு ராம் தேவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது
அலோபதி மருத்துவத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, ‘ராம்தேவ் பேசியது தொடர்பான உண்மையான முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ எங்கே’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
யோகா குருவான பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தார். அவர் மீது, இந்திய மருத்துவர் சங்கத்தின் பல கிளைகள் சார்பில் பீஹார், சத்தீஸ்கர் என, பல மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, டில்லிக்கு மாற்றக்கோரியும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரியும், ராம்தேவ் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.’ராம்தேவ் பேசியது தான் என்ன; பேச்சின் முழு பதிவை தாக்கல் செய்ய வேண்டும்’ என, அமர்வு குறிப்பிட்டது. நாளை ஜூலை-5ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
XXXX

நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
சொந்தமாக கோயில் கட்டி சிறப்பாக கும்பாபிஷேகம் செய்து முடித்திருக்கிறார் நடிகர் அர்ஜூன்.
நடிகர் அர்ஜுன் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர்.
சில விஷேச பூஜைகள் நத்தப்பட்டபின்னர் கடந்த சில நாட்களுக்கு கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலினும் கும்பாபிஷகத்தில் கலந்து கொண்டார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ராகவேந்திரர் கோவிலை கட்டி உள்ளார்.
நடிகர் அர்ஜூனும் சென்னை போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி இருக்கிறார்.
XXXX
2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டுக்கு அனுமதி: திருத்தணி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் 63 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி மூடப்பட்டது. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவின் பேரில், திருக்கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு, முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது., திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்பணி செய்யப்பட்டது.
காலை 6 மணி முதல் இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனர். 63 நாட்கள் கழித்து முருகப்பெருமானின் தரிசனத்தைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
XXXXXX

இதோ தினமலர் நாளேட்டிலிருந்து ஒரு செய்தி
சத்குருவை மீண்டும் வம்பிழுத்த அமைச்சர்; டுவிட்டர் பதிவு ‘தூசு தட்டி‘ வருணனை
ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, ‘மண்புழு ஓர் ஹிந்து’ என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்.
கடந்த 2015ம் ஆண்டு, சத்குரு டுவிட்டரில், ‘ஹிந்து என்பது புவியியல் அடையாளம். ஒரு யானை ஆப்ரிக்காவில் இருந்தால், அது ஆப்ரிக்கன். இந்த நிலத்தில் (இந்தியா) ஒரு மண் புழு இருந்தால், அது ஹிந்து’ என, பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை தற்போது பகிர்ந்து, பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், ‘ஆப்ரிக்கா ஒரு கண்டம், இந்தியா ஒரு நாடு, குடியரசு (நிலம் என்பது இங்கு இந்தியாவைக் குறிக்கிறது).
இந்து என்பது மதம், நம்பிக்கை. யானை என்பது முதுகெலும்புள்ள பாலுாட்டி, மண்புழு முதுகெலும்பற்றது, நிலத்தில் வாழக்கூடியது. அதுபோல, ‘சார்லடன்’ என்பதற்கு, தன்னிடம் இல்லாத சிறப்பு அறிவையோ, திறமையையோ இருப்பதாக போலியாகக் கூறிக்கொள்ளும் பகட்டுக்காரர் எனப் பொருள். பன்முக பகட்டுக்காரர்’ என, குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன்.
தியாகராஜன் அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், சத்குருவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். திடீரென சில வாரங்கள் அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். தற்போது மீண்டும், பழைய, அதுவும் ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய டுவிட்டை தோண்டி எடுத்து, விமர்சித்து வம்பிழுத்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கோவாவை விமர்சித்தது தொடர்பாக, அமைச்சர் தியாகராஜனுக்கும், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கும், டுவிட்டரில், ‘வார்த்தைப்போர்’ வெடித்தது. அப்போது, ‘பிறவிப் பொய்யர்’ என வானதியை விமர்சித்தார். தற்போது சத்குருவை, ‘பன்முக பகட்டுக்காரர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
XXXX

சித்ர கூடத்தில் முக்கிய ஆர். எஸ். எஸ். கூட்டம்
ராமாயணப் புகழ் சித்ரகூடம் மத்திய பிரதேசத்தில் உள்ளது.அங்கு ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முக்கியக் கூட்டம் ஜூலை 9ம் தேதி முதல் ஐந்து நாட் களுக்கு நடைபெற உள்ளது.
இது அகில பாரதீய பிரா ந்த பிரச்சாரகர் கூட்டம். இதில் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் நாட்டை எதிநோக்கியுள்ள முக்கிய பிரச்சனைகளை அலசி ஆராய்வார்கள். அருகிலுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு மாநில சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளை கூட்டம் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்
tags- Tamil Hindu, News round up, 472021,