London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 5 ; Thirty more Books!

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 4 ;  Thirty MORE Books!

FIFTH & LAST   BATCH- Thirty more books! POSTED ON 26 MAY 2025

PLEASE GO TO PUSTAKA.CO.UK AND TYPE LONDON SWAMINATHAN IN THE AUTHOR BOX.

—SUBHAM—

TAGS. London Swaminathan , 142 Book Wrappers, Batch 5, Thirty more Books, Last batch.

தொல்காப்பியத்தில் துர்கா தேவி: தெ.பொ.மீ. தகவல் (Post No.14,458)


Written by London Swaminathan

Post No. 14,558

Date uploaded in London –  27 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மதுரைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், புகப்பெற்ற தமிழ் அறிஞருமான தெ.பொ., மீனாட்சிசுந்தரனார், துர்கா தேவி பற்றி இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்.

துர்க்கையின் தமிழ்ப் பெயரான கொற்றவையின் பொருள் என்ன  என்றும் தொல்காப்பியத்தில் துர்க்கை வழிபாடு இருப்பதையும் மதுரை  மீனாட்சி  சுந்தரேச்வரர் கோவில் கும்பாபிஷேக (1963)  மலரில் குறிப்பிடுகிறார்.

தலைப்பு : காளி- தமிழ்நாட்டில் வேட்டுவவரி- பக்கம் 19

தொல்காப்பியம் கடவுளரைக் குறிப்பிடும்போது மாயோனும் சேயோனும் வேந்தனும் வருணனும்  என்ற இவர்களையே வழிபடுகடவுளராக எடுத்துச் சுட்டக் காண்கிறோம்.

ஆனால் இங்கே பாலைநிலத்திற்கு எனக் கடவுள் ஒருவரும் காணோம். பின்னாளில் ஞாயிறு அத்தகைய பாலைநிலக் கடவுளானமையை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். இருந்தாலும் தமிழ் நூல் பரப்பில் காளியே அத்தகைய சிறப்பிற்கு உரியவளாக ஓங்கி நிற்பதைக் காண்கிறோம்”.

“தொல்காப்பியர் தாய்மை வழிபாட்டினை  குறியாமலே போகின்றார் என்பதற்கில்லை. காடுபிடி சண்டை என்ற வெட்சியில் கொற்றவையைக் குறிப்பிடுகின்றார் . கொல்+ து+ அம் என்பதே கொற்றம் ஆகும் , கொன்று வெற்றி பெறுவதே பழங்கால வெற்றியாகும். சாகும்வரை போராடும் காலம் அது. கொற்றத்திற்கு கடவுள் கொற்றவை . கொற்று+ அவை என்று கொண்டால் அவை என்பது அவ்வை (அம்மை, தாய் ) என்பதன் வடிவமே ஆகும்.  வீரற்கு வெற்றி தந்து பகைவரை அழிக்கும் தாயே கொற்றவை எனலாம். வீரர் படையின் முன்னே இந்தக் கொற்றவை செல்வாள் என்று அக்கால மக்கள் நம்பினார்கள்”.

****

இதற்குப் பின்னர் அவர் எழுதிய நீண்ட கட்டுரையில், சிலப்பதிகார வேட்டுவ வரிப் பாடலை விளக்குகிறார் . அவர் கூறிய இன்னும் ஒரு முக்கியக் கருத்து அந்தக்காலத்தில் மக்கள் கடவுளரை வழிபடும்போது தம்மில் ஒருவரை கடவுளைப் போலவே கோலம் செய்து வழிபட்டார்கள் ; இத்தைகைய வழிபாட்டு முறையின் பெயர் வள்ளிக்கூத்து ; முதலில் முருகப் பெருமான் வழிபாட்டில் வள்ளி போல ஒருவருக்கு கோலம் செய்தார்கள். கொற்றவை வழிபாட்டில் கொற்றவை போல கோலம் செய்து வழிபட்டமையும் வள்ளிக்கூத்து என்றே பெயர் பெற்றது. சிலப்பதிகாரத்தில் காளி ஆடிய மரக்கால் ஆட்டம் பற்றியும் தெ. பொ. மீ.  விளக்கியுள்ளார் .

****

என் கருத்து

மனிதர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, கடவுள் போல வேஷம் (கோலம்) போடும் செய்தி பரிபாடலிலும் வருகிறது; அது மட்டுமல்ல தேவிக்கு மூன்று கண்கள் ன்றும் தமிழர்கள் நம்பினார்கள்! வைகை ஆற்றில் குளித்த பெண்கள் வெவ்வேறு மலர்களை சூடி விளையாடிய காட்சியில் ஒருத்தி, இன்னுமொருத்திக்கு நெற்றிக்குத் திலகமிட்டு கொற்றவை என்று கருதிய காட்சி சங்கத்தமிழில் உள்ளது.

வையை–பரிபாடல் 11

பாடியவர் : நல்லந்துவனார்இசையமைத்தவர் : நாகனார்.

(மழை பொழிய வையையில் நீர் பெருகி ஓடுதல் )

(மகளிர் செயல்கள்)

……………………………

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,

சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95


பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;

‘குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்

இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்‘ என்று

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,

கொற்றவை கோலம் கொண்டுஒர் பெண். 100


கொற்றவைக்கு முக்கண்ணி என்ற பெயரும் அகராதியில் உள்ளது .மேலும் சில பெயர்கள் : கானமர் செல்வி, அயிரை .

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே  – தொல். 1005

கலி.89.8; பரி.11.99; முருகு.258 ,.கொற்றவை சிறுவ (துர்க்கையின் புதல்வன் முருகன் ; துர்க்கை=உமை )

அயிரை – பதி.பத்து 79-16; 38.11; 89.19;  நெடுநல்.166;

கானமர் செல்வி -அகம்.345;

பிற்கால நூல்களில் காடு  கிழாள் முக்கண்ணி ஆகிய சொற்கள் காணப்படுகின்றன.

****

என்னுடைய இருபதுக்கும் மேலான முந்தைய கட்டுரைகளின் சுருக்கம் இதோ :

முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும்  துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியும் எழுதியிருந்தேன். தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பொறாமை என்பதற்கு அவர் பயன்படுத்திய நிம்பிரி சொல் தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காணப்படவில்லை

சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர். அதுமட்டுமல்ல சிவன், நமசிவாய முதலிய சொற்கள் சங்க காலத்தில் இல்லை. பக்தி இலக்கிய காலத்தில்தான் சிவபெருமான் ,லிங்கம், சிவாய நம மந்திரம் ஆகியவற்றைக் காண்கிறோம். சங்கப்  புலவர்கள் சிவனை வேறு பெயர்களால் மட்டுமே புகழ்ந்தனர் . ருத்திரனும் சிவனும் வேறு என்று கூறும் கும்பலுக்கும் பக்தி இலக்கியம் செமை அடி கொடுக்கிறது பெண்கள் கடல்கடந்து செல்லக்கூடாது என்று .  தொல்காப்பியர் சொன்னதை எந்தத் தமிழரும் கடைப் பிடிக்கவில்லை  ‘ச’– என்னும் எழுத்தில் தமிழ்ச் சொற்கள் துவங்கக்கூடாது என்று அவர் சொன்ன விதியையயும் தமிழர்கள் காற்றில் பறக்கவிட்டு தமிழ்ச் சங்கம் என்று எழுதத் துவங்கினர் . மேலும் பொருளாதி காரம் பிற்காலச் சேர்க்கை என்பதும் பல அறிஞர்களின் கருத்து ஆகும்.

தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேயதீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

—(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)

என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.

முல்லை= திருமால்

குறிஞ்சி = முருகன்

மருதம் = இந்திரன்

நெய்தல் = வருணன்

கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.

கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)

மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.

கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.

கொடிநிலை = சூரியன்

கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)

வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

கண் இமைக்காத தேவர்கள் (Alien Civilizations)

தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.

தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.

இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக (Alien Civilizations) இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–

“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)

இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும்.

தென்புலத்தார் வழிபாடு

இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்

சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–

1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)

2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்

3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)

4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்

5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்

6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)

என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.

*****

MY OLD ARTICLES

தொல்காப்பியம்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம்எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் … தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).

தொல்காப்பியத்தில் | Tamil and …

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

14 Apr 2018 — தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் … தொல்காப்பியம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/ · Translate this page. தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் …

தொல்காப்பியர் | Tamil and Vedas

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

15 Mar 2021 — சப்ஜெக்ட் subject டுக்கு வருவோம் . தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் உண்டு (அதிகாரம் என்பது தொல்காப்பியம் … https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா&#8230 …

தொல்காப்பியத்தில் ஜோதிடம் (Post No.11751)

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

6 Feb 2023 — சங்க இலக்கிய நூல்களில் 200 ஜோதிடக் குறிப்புகள் உள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூல் என்ற போதிலும் அதிலும் ஜோதிடம் பற்றி, தொல்காப்பியர் குறிப்பிடத் தவறவில்லை. நிமித்தம் என்பது நல்லன தீயன நிகழப்போவதை அறிவிக்கும் அறிகுறிகள் …

தொல்காப்பியத்தில் Biology உயிரியல் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

11 Aug 2019 — 9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது … தொல்காப்பியர் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/ …

தொல்காப்பியத்தில் இந்திரன்

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

14 Jun 2013 — தொல்காப்பியர் மஹா அறிஞர். இந்திரன் என்பது அரசன் என்ற பொதுப் பெயராகும். அந்தப் பதவியில் அமருவோருக்கு அந்தப் பெயர். வெளி நாட்டு ‘அறிஞர்கள்’, இந்திரன் என்று ஏதோ ஒருவர் இருந்தது போல ஆங்கிலத்தில் எழுதிவிட்டனர். இந்திரன் …

தொல்காப்பிய அதிசயங்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

14 Nov 2014 — ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது. Contact …

தொல்காப்பியத்தில் முக்கோல் அந்தணர் (Post. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

19 Dec 2024 — தொல்காப்பிய பாயிரம் பாடிய பனம்பாரனார் நான் மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சாரியார்தான் தொல்காப்பியருக்கு சர்டிபிகேட் கொடுத்தார் என்று சொல்கிறார். அந்த நான்மறை , அந்தணர் என்பதுடன் சேர்ந்து வருவதை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் …

தொல்காப்பியத்தில் எண்.9 (Post No.7201)

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

11 Nov 2019 — … blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12000 –subham–

தொல்காப்பியத்தில் வருணன்

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

8 Jul 2013 — ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

1 Oct 2020 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 8760. Date uploaded in London – –1 OCTOBER 2020. Contact – swami_48@yahoo.com.

தொல்காப்பிய அதிசயம்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

21 Oct 2016 — சங்க இலக்கியத்திலேயே 14 உவம உருப்புகள் மறைந்து, தொல்காப்பியர் சொல்லாத சில உவம உருபுகளும் வந்திருப்பதால் — பலர் கருதுவது போல தொல்காப்பியத்தை முதல் நூற்றாண்டை ஒட்டிய நூல் என்று கொண்டால் — அதற்கு 500 ஆண்டுகளுக்கு …

Tagged with தொல்காப்பியன்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

14 Jun 2013 — தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். … பல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர். தொல்காப்பியத்தில் மூன்று …

தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

2 Oct 2020 — Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.

தொல்காப்பியம் பற்றிய 2 வினோத …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

25 May 2020 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 8039. Date uploaded in London – 25 May 2020. Contact – swami_48@yahoo.com.

தொல்காப்பியத்தில் பகவத் கீதை வரிகள்-2 (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, …

தொல்காப்பியர் காப்பி அடித்தாரா? …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

4 Feb 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. தொல்காப்பியர் பற்றி இருபது முப்பது கட்டுரைகள் எழுதி விட்டேன். இப்பொழுது அவர் பற்றிய மேலும் சில …

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

9 Apr 2015 — இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள் Written by London swaminathan Research article No. 1789 Date 9th April 2015 Uploaded from London at 10-18 காலை கட்டுரையின் …

தொல்காப்பியத்தில் துர்கை

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

31 Mar 2014 — … வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.

தொல்காப்பியத்தில் கனவுகள் (Post No.13882)

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

13 Nov 2024 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.


தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

4 Jan 2017 — Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com. ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

தொல்காப்பியத்தில் “சதி”

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

2 Oct 2016 — Pictures are taken from various sources; thanks. Contact swami_48@yahoo.com. sati-3. புறநானூற்றில் ஒரு அழகான பாடல் வருகிறது; இது பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி …

தொல்காப்பியம் பற்றி பலர் கருத்துக்கள் (Post No …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

21 May 2020 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 8015. Date uploaded in London – 21 May 2020. Contact – swami_48@yahoo.com.

தொல்காப்பியன் புகழ் (Post No.5217)

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

14 Jul 2018 — Pictures may be subject to copyright laws. தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்: 1.

தொல்காப்பிய – பாணினீய 3 ஒற்றுமைகள் (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › த…

·Translate this page

14 Mar 2021 — … your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. if u want the article in word format, please write to us.தொல்காப்பியர் கி.மு.

தொல்காப்பியத்தில் சம்ஸ்கிருதம்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

10 Sept 2012 — இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் …

தொல்காப்பியத்தில் Biology உயிரியல் விஞ்ஞானம்! (Post No.6761)August 11, 2019In “தமிழ் பண்பாடு”

‘கலிகெழு கடவுள் கந்தம்’ சிவலிங்கமா? (Post No.8340)July 14, 2020In “சிவ”

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)May 7, 2019In “தமிழ்”

தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)

மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book

—subham—

Tags- தொல்காப்பியம் , துர்கா தேவி, தெ.பொ.மீ. தகவல், கொடிநிலை, கந்தழி, வள்ளி, வள்ளிக்கூத்து, கொற்றவை ,அயிரை, கானமர் செல்வி 

உலகின் கூரிய விழியாள் வெரோனிகா செய்டர்! (Post No.14,457)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,557

Date uploaded in London – –27 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

உலகின் கூரிய விழியாள் வெரோனிகா செய்டர்! 

ச. நாகராஜன்                                                              

பெண்களின் கண்ணழகை வியந்து மீன் விழியாள் என்றும் மான் விழியாள் என்றும் புலவர்கள் பாடுவதுண்டு.

இப்போது பிரமிக்க வைக்கும் கூரிய பார்வையைக் கொண்ட ஒரு பெண்ணின் கண்ணழகை எப்படி வர்ணிப்பது? 

யோசிக்க வேண்டியது தான்!

வெரோனிகா செய்டர் (VERONICA SEIDER) என்ற மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த பெண்மணிக்கு உலகிலேயே யாருக்கும் இல்லாத அளவு கூரிய பார்வை உள்ளது என்பது அதிசயச் செய்தி தானே!

1951ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஸ்டுட்கார்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

ஒரு மைல் தூரத்தில் உள்ள ஒருவரை சரியாக அடையாளம் கண்டு உரைக்கும் இவரது பார்வை நல்ல பார்வையை உடைய ஒருவரின் பார்வையை விட 20 மடங்கு அதிகமாகக் கூரிய பார்வையைக் கொண்டதாக இருக்கிறது.

பருந்துப் பார்வை, கழுகுப் பார்வை என்றெல்லாம் வர்ணிப்போமே அதை விட கூர்மையாக உள்ளது இவரது பார்வை.

1972ம் ஆண்டிலேயே கின்னஸ் உலக சாதனைகளில் இவரது கண் பார்வை பற்றிய சாதனை இடம் பெற்றுள்ளது.

இவரது 21ம் வயதிலேயே இவர் படித்த பல்கலைக் கழகம் இவரது அபூர்வ ஆற்றலை உணர்ந்து சோதனைகளை நடத்தி அதை உலகிற்கு அறிவித்தது.

நுண்மையான பார்வையைக் கொண்ட இவரது பார்வை மைக்ரோஸ்கோபிக் பார்வை எனப்படுகிறது.

சாதாரண ஒரு மனிதரின் கண்கள் 25 செண்டிமீட்டர் துரத்தில் உள்ள ஒரு பொருளை 100 மைக்ரான் என்ற அளவில் பார்க்கும் சக்தியைக் கொண்டது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும். பத்து மைக்ரான் என்பது ஒரு பேப்பரில் இடப்பட்ட ஒரு சிறு புள்ளி என்று கொள்ளலாம்.

வெகு தொலைவில் வானத்தில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திரங்களைச் சிறு புள்ளிகளாகப் பார்த்து பிரமிக்கிறோம்.

ஆனால் வெரோனிகாவின் கூரிய பார்வையோ அதீத மனித ஆற்றல் கொண்ட மர்மமமாக இருக்கிறது!

சாதாரணமாக நாம் பத்து பக்கம் எழுதும் ஒரு கடிதத்தை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அதைப் படிக்கும் ஆற்றல் உள்ள கண் பார்வையை இவர் கொண்டுள்ளது படைப்பு விசித்திரமே தான்!

ஒரு முறை ஒரு பேப்பரை தனது நகத்தின் அளவில் கிழித்து அதில் 20 கவிதைகளை அவர் எழுதிக் காட்டினார்.

இதைத் தவிர அடிப்படையான வண்ணங்களைப் பார்க்கும் ஆற்றலையும் இவர் கொண்டிருந்தார். ஒரு டெலிவிஷன் காட்சியில் அடிப்படையாக உள்ள வண்ணங்களை இனம் கண்டு எடுத்துரைக்கும் வல்லமையும் இவருக்கு இருந்தது.

இப்படி ஒரு அபூர்வத் திறமையைக் கொண்டிருந்தாலும் அவர் பகட்டையும் விளம்பரத்தையும் விரும்பவில்லை. சாதாரண ஒரு பல் டாக்டராக மேற்கு ஜெர்மனியில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட அபூர்வப் பெண்மணி தனது 62ம் வயதில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி மரணமடைந்தார்.

எல்லையற்ற படைப்பு விநோதங்களில் அறிவியலாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு அபூர்வ ஆற்றல் கொண்ட பெண்மணி வெரோனிகா செய்டர்!

**

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 4 ;  Thirty more Books!

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 4 ;  Thirty MORE Books!

FOURTH  BATCH- Thirty more books! POSTED ON 26 MAY 2025

PLEASE GO TO PUSTAKA.CO.UK AND TYPE LONDON SWAMINATHAN IN THE AUTHOR BOX.

–subham—

 Tags- London swaminathan, books, Pustaka.co.in

விட்ட எழுத்து எது? விடாத எழுத்து எது? திருமூலர் விடுகதை! (Post No.14,556)

Written by London Swaminathan

Post No. 14,556

Date uploaded in London –  26 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் அசபை என்ற ஒரு அத்தியாயமே நாலாம் தந்திரத்தில் உள்ளது அதைத் தொடர்ந்து வரும் திருவம்பலச் சக்கரம்  என்ற அத்தியாயத்தில் தான் விட்ட எழுத்து விடாத எழுத்து பற்றித் திருமூலர் ரிக்வேதம் போல விடுகதை பாஷையில் பாடு கிறார்.

அசபை — இது அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

இந்த விட்ட எழுத்து விடாத எழுத்து பற்றி மூன்று விளக்கங்களை மூன்று புஸ்தகங்கள் கூறுகின்றன. சி +வ என்று சைவசித்தாந்த திருமந்திரம் நூல் கூறுகிறது . ஆங்கிலத்தில் திருமந்திரத்தை வெளியிட்ட இணையதளம்  ஓ +ம்  என்று கூறுகிறது. ,மதுரை மீனாட்சி கோவில் கும்பாபிஷேக (2009 )மலரில் ஒரு கட்டுரையில் ஹம் +சம்  என்று ஒருவர் எழுதியுள்ளார்.

இதற்குப்பின் வரும் ஒரு பாடலில் அவ்வுண்டு சவ்வுண்டு என்ற பாடலுக்கும் வெவ்வேறு விளக்கங்கள் கூறப்படுகிறது ஆனால் இது அம் +சம் (ஹம் +சம்) என்னும்  அஜபா மந்திரம் என்பதே சரி.

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்

ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்

விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்

கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

918: Significance of Letter Om

They know not how the Lord

Became conjoint with Her,

Who, on the blooming lotus sits;

They who chant the letter aspirated “O”

Conjoint with the letter unaspirated “m”

May well preserve their life ever.

*****

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது,

சவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை,

கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்,

சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே.

English translation of verse 933:

There is Letter Hau

There is Letter Sau

In them are comprehended all;

How they entwined are,

None knows;

They who know this union mystery

Are indeed blessed

Of both, Sakti and Sadasiva.

திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 2. திருஅம்பலச் சக்கரம் > பாடல்: 933
எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண் டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடி வாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.

****

இதை அவ்வையார் விநாயகர் அகவலில் காணலாம்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

****

பரமஹம்ச

ஹம்சம் என்பதற்கும் இது போல வேதாந்திகள் விளக்கம் தருவர்.

ஹம்சம் என்றால் அன்னப் பறவை (swan) என்று பொருள்.

இதை

அஹம் = நான் = ஜீவாத்மன்

ச: = அவனே + பரமாத்மன்

அஹம்+ச; = அம்ச (ஹம்ச)

இது அத்வைதத்தின் உயர்நிலை; அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதற்குச் சமம்.

இந்த உண்மையை உணர்ந்தவர்  பரமஹம்சர் என்று அழைக்கப்படுகிறார்கள்  . ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகிய பெரிய மஹான்களின் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம்.

—subham—-

Tags– அசபை , அஜபா , ஹம்சம் , பரம ஹம்சர் ,ஊமை எழுத்து, சிவோஹம் , விட்ட எழுத்து , விடாத எழுத்து, எது, திருமூலர் விடுகதை

அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப் (Post No.14,555)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,555

Date uploaded in London – –26 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை 

அதிசயிக்க வைக்கும் ஐஸ் மனிதன் விம் ஹாஃப்

(WIM HOF– THE ICEMAN) 

ச. நாகராஜன் 

இறைவனின் படைப்பில் நாம் காணும் அதிசய ஆற்றல்கள் கொண்ட மனிதர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

கடும் குளிரைத் தாங்கும் மனிதரும் உண்டு என்பதை நிரூபிக்க விம் ஹாஃப் என்னும் ஐஸ் மனிதர் இருக்கிறார்.

நெதர்லாந்தில் லிம்பர்க்கொல் சிட்டார்ட் என்னும் இடத்தில் 1959-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி இவர் பிறந்தார். இப்போது இவருக்கு வயது 65.

இவருடைய பதினேழாம் வயதில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றது. பீட்ரிக்ஸ்பாக்ஸ் என்னும் கால்வாயில் கடும் குளிர் நீரில் திடீரென அவர் குதித்து நீந்தத் தொடங்கினார். குளிர் அவர் உடலை பாதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து குளிரான சூழ்நிலை அவரைப் பாதிக்காமல் இருப்பதைக் கண்ட விஞ்ஞானிகள் அவரை ஆராயத் தொடங்கினர். 2024ல் எட்டு ஆய்வுகள் நடைபெற்றன; அவரது தனித்துவம் வாய்ந்த ஒரு வழி அவரைக் குளிரிலிருந்து காக்கிறது என்று முடிவை அறிவித்தன.

தனது வழியை விம் ஹாஃப் மெதேட் (WIM HOF METODஎன்று அவர் கூறுகிறார்.

இமயமலையில் உள்ள யோகிகளும், திபெத்திய லாமாக்களும் இமயமலையில் கடும் குளிரில் போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல் இருப்பதை பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆனால் விம் ஹாஃப் வழி தனி வழி!

26 உலக ரிகார்டுகளை அவர் பெற்றிருக்கிறார்.

வெறும் காலுடன் இரண்டு மணி நேரம் 16 நிமிடம் 34 வினாடிகள் அவர் பனிக்கட்டிகளின் மீது ஓடியது ஒரு உலக சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த சாதனை பின்லாந்தில் 2007ம் ஆண்டு ஜனவரி 26ம் நாளன்று நிகழ்த்தப்பட்டது.

2000, மார்ச் மாதம் 16ம் நாளன்று ஐஸுக்கு அடியில் நீந்தி அவர் கின்னஸ் சாதனையைப் படைத்தார்.

மவுண்ட் எவரெஸ்டில் வெறும் சாதாரண உடையுடன் அவர் ஏறி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும் வெளியாகியுள்ளன. யூ டியூபிலும் அவரைப் பற்றிய படம் உண்டு.

தனது சாதனைகளின் அடிப்படையில் அவர் உணர்வூக்கம் கொடுக்கும் மோடிவேஷன் பேச்சாளராக மிளிர்ந்து அனைவருக்கும் ஊக்கமூட்டி வருகிறார்.

அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகளில் சில இதோ:

நமக்குள்ளே சக்தி இருக்கிறது. நமக்குள்ளே சென்று எதையும் வென்று விடலாம்.

உங்கள்  மூளையைக் கட்டுக்குள் கொண்டு வரும் போது நம்பிக்கை வருகிறது.

நாம் இயற்கையிலிருந்து வெளியே வந்து விட்டோம். குளிரானது நாம் இழந்த ஒன்றிற்கு நம்மை திருப்பி இட்டுச் செல்லும் வலிமை கொண்டது.

 இது போன்ற ஊக்கமூட்டும் ஏராளமான கருத்துக்களை அவர் கூறி இளைய சமுதாயத்தினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 விம் ஹாஃப் – தி ஐஸ் மேன் – ஒரு அதிசய மனிதர் தான்!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 47 (Post No.14,554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,554

Date uploaded in London – –25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 47

 Pictures of 2500 Indian Stamps!- Part 47 (Post No.14,554)

Stamps posted today include 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

ACTORS SIVAJI GANESAN, RAJ KAPOOR, SHANTARAM, GREETINGS STAMPS, RANI AVANIBAI, RANI JHALKARI  BAI, BHARATIDASAN, JAYAPRAKASH NARAYAN, ANCIENT SHIPS, TARANGINI, PAL GALBAT, INTERNATIONAL FLEET REVIEW, CANCER AWARENESS, VOLUNTEER, SEVA PRAMO DHARMAH, KRISHNA SARAMAH, RAO TULARAM, YURI GAGARIN, COMPOSER, C SANKARAN NAIR, GLOBAL IODINE DEFICIENCY, VIJAYA RAJE SCINDIA, SHYAMA PRASAD MUKERJEE, SHOBA SINGH, GIANI GURMUKH SING MUSAFIR, JAIN SYMBOL, MAHAVIR, MASTER MITRASEN, JAGDEV PRASAD, U KIANG, GEOLOGICAL SURVEY, MINERALS, MARATHA BICENTENARY FREDERYC

–subham—

Tags– ACTORS SIVAJI GANESAN, RAJ KAPOOR, SHANTARAM, GREETINGS STAMPS, RANI AVANIBAI, RANI JHALKARI  BAI, BHARATIDASAN, JAYAPRAKASH NARAYAN, ANCIENT SHIPS, TARANGINI, PAL GALBAT, INTERNATIONAL FLEET REVIEW, CANCER AWARENESS, VOLUNTEER, SEVA PRAMO DHARMAH, KRISHNA SARAMAH, RAO TULARAM, YURI GAGARIN, COMPOSER, C SANKARAN NAIR, GLOBAL IODINE DEFICIENCY, VIJAYA RAJE SCINDIA, SHYAMA PRASAD MUKERJEE, SHOBA SINGH, GIANI GURMUKH SING MUSAFIR, JAIN SYMBOL, MAHAVIR, MASTER MITRASEN, JAGDEV PRASAD, U KIANG, GEOLOGICAL SURVEY, MINERALS, MARATHA BICENTENARY FREDERYK CHOPIN 

Maha Rudra Japa Yajnam in London (Post No.14,553)

Written by London Swaminathan

Post No. 14,553

Date uploaded in London –  25 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Mitraseva UK conducted its Third Maha Rudra Japa Yajnam in Harrow (London ) on Sunday 25th May 2025. It was their third successful Homam with over 700 participants. They recited the Rudram and Chamakam Mantras of Yajur Veda 11 times while the priests conducted Homam (Havan). The stage was decorated with a beautiful Mont Kailash image. At the end of each recitation there was arti and abishekam to the beautiful crystal Shiva Linga on the stage.

It is significant that even many boys recited the Rudra- Chamaka by heart. Women folk made Prasad and decorations.

Last evening, a prayer session was held by women.

Sri Kalyanasundara Sivacharya lead the priests, and he dedicated each recitation to all the famous Hindu Shiva Shrines in India.

Mitraseva organisers Sri M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer, Mr Subramanyam (Subbu Iyer ) and Mrs Gayatri Subramanyam and scores of volunteers made elaborate arrangements. After the Poorna Ahuti prasad was given to all the participants.

Another significant thing is the participants travel from far off cities in the Uk to participate in the event. Now the Rudra Mahayajnam has become a permanent annual event of Mitra seva. It has been conducting Radha Kalyanam in November every year with Sri Udaiyalur Dr Kalyana Raman team. Over thousand people attend its annual Radha Kalyanam .

Mitraseva is a registered charity and people can contribute to it if they can’t attend the events personally. Their web site has the bank details. They have a WhatsApp group through which you can get event details in advance.

–subham—

Tags- Maharudra Japam, Yajnam, London, Mitraseva, May 2025

MAHA RUDRA JAPA YAGNAM IN LONDON TODAY 25 MAY 2025

 NO GNANAMAYAM BROADCAST FROM LONDON TODAY BECAUSE OF GRAND MAHA RUDRA HOMAM IN LONDON TODAY/SUNDAY.

C U ALL NEXT SUNDAY 1-6-2025.

–SUBHAM–

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 3 ;  Thirty more Books!

London Swaminathan Again! 142 Book Wrappers; Batch 3 ;  Thirty MORE Books!

THIRD BATCH- Thirty more books!

PLEASE GO TO PUSTAKA.CO.UK AND TYPE LONDON SWAMINATHAN IN THE AUTHOR BOX.

—SUBHAM—

tag- london swaminathan, books , third batch, 142 books