
snakes wearing Visha kanya in Belur Temple
Written by London Swaminathan
Post No. 15,621
Date uploaded in London –15 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 76
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 76
திருப்புகழில் அருணகிரிநாதர், திருப்பதி பாலாஜி கோவிலை முருகன் கோவில் என்றார்; பிள்ளையார் கையில் சிவன் கொடுத்தது மாம்பழம் அல்ல, மாதுளம் பழம் என்றார்; சரஸ்வதி நதி இப்போது இல்லை; அங்கே வயிரவி வனத்திலுள்ள முருகன் கோவில் என்று பாடுகிறார் ; இப்போது சிவன் உடலில் தேளையும் பாம்பையும் அணிந்ததாகப் பாடுகிறார் ; உரைகாரர் கள் செய்யும் தவறா ? அல்லது உண்மை உள்ளதா ? ஆராய்வோம்!
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
சுக்கி லக்க லாமிர்தப் …… பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
சுத்த சொற்ப கீரதித் …… திரைநீலம்
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க் …… கருள்கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் …… கருள்வாயே
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்க மிட்டு லாவியச் …… சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்ட னோடமுத் …… தெறிமீனக்
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
துட்க முத்து வாரணச் …… சதகோடி
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
கைப்பி டித்த சேவகப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் … புள்ளிகளைக்
கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை
மலர், நொச்சிப் பூ, வில்வம்,
சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம் … வெண்ணிறம் உடையதாய்
கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர்,
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் … சுத்தமான
ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள்,
சுத்த சொல் பகீரதித் திரை நீலம் … புகழை உடைய, அலைகள்
வீசும் கங்கை நதி, நீலோற்பலம்,
புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு
மத்தை … புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம்,
கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை,
வேணியர்க்கு அருள் கூரும் … (இவைகளை அணிந்த) சடைப்
பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய,
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் … புத்தியும், அஷ்ட
மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும்
கொண்டதுமான உபதேச மொழியை,
புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே … நீர்க்குமிழி போன்ற
நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக.
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம்
இட்டு உலாவி … வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய,
அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி,
அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி … அந்த
அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து,
வாய் தரும் பத்ம சிட்டன் ஓட … அச்சத்தால் வாய்விட்டு
அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட,
முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க …
முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம்
கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க,
மா முறிந்து உட்க … மாமரமாக மறைந்து நின்ற சூரன்
கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும்,
முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு
ஒளிக்க … முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக்
கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும்,
வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே. … சேவற்
கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.
****
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:
அணிமா – அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.
மகிமா – மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.
கரிமா – ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.
லகிமா – ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.
பிராப்தி – பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).
பிராகாமியம் – எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.
ஈசத்துவம் – எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.
வசித்துவம் – எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும். போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.
thuththi nacchu arA iLam picchi nocchi kUviLam: The spotted and poisonous serpent, fresh and tender jasmine and nochchi flowers, vilwa leaves,
sukkilak kalA amirthap piRai cUtham: white nectar-filled crescent moon with many phases, green mango leaves,
suththa raththa pAdalam pon kadukkai Edu alam: pure blood-red flower of pAthiri, golden flower of kondRai (Indian laburnum), a scorpion,
suththa sol pakeerathith thirai neelam: the celebrated river Gangai full of waves, blue lily,
puth(thu) erukku pAzhi kam koththu eduththa thALi thaN poRpu maththai: fresh flower of erukkai, the famous skull of BrahmA, bunches of aRugam (cynodon) grass, and cool and pretty flower of Umaththai –
vENiyarkku aruL kUrum: all these adorn the matted hair of Lord SivA; You preached to that SivA
***
Alam (अलम्).—ind. Ornament. 2. Enough, abundance. 3. Able, adequate or equal to. 4. Prohibition, no not. 5. Unnecessary, no need of. It is chiefly used in composition, as alañjīvikaḥ having enough for subsistence; alandattvā refusing to give; ityalam enough; alaṅkāra ornament, &c. E. ala to adorn. &c. and am aff.
சம்ஸ்க்ருதத்தில் அலம் என்றால் “போதுமான, ஆபரணம்” முதலிய அர்த்தங்கள் உண்டு; இந்த இடத்தில் ஆபரணம் என்பது பொருந்தும் அல்லது ஆலம் என்று கொண்டால் சிவன் கழுத்திலுள்ள விஷத்தைக் குறிக்கும்.
ஆலம் என்பதை படி எடுத்தவர்கள் தவறாக அலம் என்று அடுத்த ஏட்டில் எழுதி இருக்கலாம்
என்னுடைய கருத்து
இந்த இடத்தில் திருநீலகண்டனின் கழுத்திலுள்ள ஆலம் / விஷம் என்பதே !
தமிழ் அகராதியில் ஆலம் என்பதற்கு விஷம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது; சம்ஸ்க்ருதத்தில் இதை Halāhala (Sanskrit हलाहल) ஹலாகல என்பார்கள். தமிழில் ஆலகாலம் என்றும் சொல்லுவதுண்டு.
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவில் மயில் தீவு என்னும் திட்டில் உமானந்தா சிவன் கோவில் உள்ளது ; அங்குள்ள தேள் வடிவத்தைக்கூட தேவி என்றுதான் பக்தர்கள் வழிபடுகிறார்கள்; சிவபெருமானை அல்ல; சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட தேள் முத்திரைகளுக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை .
FOLLOWING IS THE ARICLE WRITTEN BY ME ON 11TH NOVEMBER 2012. IT IS POSTED IN TWO BLOGS ON THA DAY.
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்
(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)
உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.
அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.
கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர். சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.
தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.
கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.
ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.
மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.
படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி
27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.
தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)
எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.
படத்தில் தேள் வீரன்
படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை
எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.
இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.
சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.
பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.
பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.
For more details, see my English post: The Great Scorpion Mystery in History.
Other articles on Snake, Indus Valley etc:
1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God around the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com
–SUBHAM—
TAGS – சிவபெருமான், தேள், அணிந்தாரா? ,அருணகிரிநாதர் புதிர், திருப்புகழில், அரிய செய்திகள் Part 76ருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)