Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,647)

Written by London Swaminathan

Post No. 15,647

Date uploaded in London –23 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Uraiyur- Tirukkoziyur

திருச்சி உறையூர் அழகிய மணவாளர் (கமலவல்லி நாச்சியார்) திருக்கோயிலை, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (1762) ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் 2-வது தலம்; திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம்.

உறையூர் பாசுரம்

“கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன

பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்

வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா.”

உறையூர் பாசுரம் -திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி. 

திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளேயே உள்ளது. திருச்சி இரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ளது.

இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயாருக்கு   கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி என்று பெயர்கள் .

–subham—

TAGS– Vishnu Temples, 108 “Divya Desams” ,  Pictures, Part 2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள்-2Uraiyur- Tirukkoziyur, உறையூர் பாசுரம் ,திருக்கோழி

Leave a comment

Leave a comment