HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 (Post No.15,646)

Written by London Swaminathan

Post No. 15,646

Date uploaded in London –23 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

English version was posted yesterday.

****

லாஸ்யம்

பெண்கள் ஆடும் நடனம் லாஸ்யம் ;ஆண்மைக்குரிய ஆடலாகத் தாண்டவமும், பெண்மைக்குரியனவாக நளின நடனமாகிய லாஸ்யமும்  கூறப்படும். ஒரு போட்டியில் தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடிக் காட்டினார்; லாஸ்யத்தை உமா தேவியார் ஆடினார்  அந்தப்  போட்டியில் தேவியார் தோற்றுப்போனார் என்றும் கூறுவர்; ஏனெனில் பெண்கள் கால்களை உயர்த்தி தூக்கி ஆடக்கூடாது என்பது நடைமுறை.

***

லவங்கம்

CLOVE கிராம்பு (லவங்கம் Syzygium aromaticum). பூஜையில் பயன்படுத்தப்படும் வாசனைப்பொருள். சமஸ்கிருதத்தில் லவங் என்று அழைக்கப்படுகிறது,  ஆயுர்வேத மூலிகை ஆகும். காரமான சுவையும் வாசனையும் உள்ளது சமையலில் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளில் பிரபலமாக உள்ளது. பல் வலி மருந்தாகவும் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் மூலிகையாகவும் பயன்படும் இது ஒரு தாவரத்தின் மலர் மொட்டு ஆகும்.

***

லலித விஸ்தார

புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை  விளக்கும் சம்ஸ்க்ருத நூல் ; இதில் அக்கால  பண்பாட்டு விஷயங்கள் இருப்பதால் அடிக்கடி மேற்கோள்களில் பயன்படுகிறது

***

லக்ஷணம்

லக்ஷணம் (இலக்கணம்/லட்சணம்) என்பது பொதுவாக அழகு, தன்மை, அடையாளம் அல்லது ஒரு பொருளின் சிறப்பியல்பு ஆகியவற்றைக் குறிக்கும். சாமுத்ரிகா லக்ஷணம் போன்ற நூல்களில் இது அங்க அழகு என்றும், ஆன்மீகத்தில் பக்தி அல்லது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கப் பயன்படுகிறது. சில சூழல்களில், இது சாசனப்பத்திரம் (Deed) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

***

லக்ஷியம்

ஒருவருடைய குறிக்கோள் லக்ஷியம் எனப்படும்; ஒருவர் தான் அடைய வேண்டியதை தனது லக்ஷியம் ஆக வைத்துக்கொள்வார் . கீழே காஞ்சி சுவாமிகளின் உரையில் இந்தச் சொல் வருகிறது: “புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம்”.

***

லெமூரியா

இது ஒரு கற்பனைக் கண்டம் . இந்தச் சொல்லை முதலில் ஒரு ஆங்கிலேயர் (English zoologist Philip L. Sclater (1829-1913) உருவாக்கி அதை கிரேக்கர்கள் சொல்லும் இன்னொரு மறைந்த அட்லாண்டிஸ் கண்டத்துடன் சேர்த்து புஸ்தகம் எழுதினார்.

இந்தச் சொல் இப்பொழுது மடகாஸ்கர் என்னும் பிரம்மாண்டமான தீவு நாட்டில் (இப்போதைய பெயர் மலகாசி) காணப்படும் லெமூர் LEMUR என்னும் பிராணிகளிடத்திலிருந்து அவராக கற்பனையில் உருவாக்கிய சொல்; அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை; இதே பிராணிகளின் பழைய பாசில் FOSSIL சுவடுகள் இந்தியாவிலும் கிடைப்பதால் கோடிக்கணக்கான   ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவும்  இந்தியாவும் இணைந்த நிலப்பரப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ; அப்போது மனித இனமோ நாகரீகமோ தோன்றவில்லை!

இதே போல குமரிக்கண்டம் என்பதும் உண்மையே ; இரண்டு பெரிய சுனாமி தாக்குதல்களில் கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு கடலில் சென்றது; இதற்கும் லெமூரியாயாவுக்கும் தொடர்பு இல்லை. நமது காலத்திலேயே சுனாமி வந்து தனுஷ்கோடி முதலிய இடங்கள் கடலுக்குள் மூழ்கியதையும்  குஜராத்தில் கிருஷ்ணரின் துவாரகை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கியதையும்  எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால்  இவை எல்லாம் சிறு நிலப்பரப்பே . பெரிய கண்டமல்ல ; மேலும் சோழர் கல்வெட்டில் வரும் இலமூரி தேசமும் சுமத்ரா தீவில் உள்ள இடம் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் வெளியிட்ட இந்துமஹாசமுத்திரப்   படம்,  கடலில் மூழ்கிய மலைகளுடன் என்னிடம் உள்ளது; அதிலும் பெரிய நிலப்பரப்பு மூழ்கியதற்கான் தடயங்கள் காணப்படவில்லை ; ஆக நாகரீகமுள்ள லெமூரியா என்பது கற்பனையே .

கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு முதலியன மூழ்கியது பற்றி குறிப்பிடுகின்றன .

SEE THE PICTURE

இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம்ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

Lemuria, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.

Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May.

***

லிங்கம்/ சிவலிங்கம்

‘லிங்கம்’ என்றால் குறி MARK என்று பொருள்; பால் GENDER என்ற பொருளிலும் இலக்கணத்தில் வரும். சம்ஸ்க்ருத வகுப்பில் அகாரந்தப் புல்லிங்க: ராம சப்த: இகாரந்த ஸ்த்ரீலிங்க: என்று சொல்வதிலிருந்து இது ஆணையோ பெண்ணையோ அலியையோ குறிக்கப் பயன்படும் என்பதை அறியலாம். இறைவனுக்கு உருவம் உண்டு/ இல்லை என்பதை சிவபெருமானின் அடி முடியைத் தேடுவதற்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற கதை காட்டுகிறது ;12 லிங்கம் உள்ள ஸ்தலங்களை இந்துக்கள் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று வழிபடுகின்றனர்.

நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும்,  லிங்க வடிவிலுள்ள மலையை இமயத்திலுள்ள புனித கயிலாய மாகவும், காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கத்தை ஜஸ் லிங்கமாகவும்  இந்துக்கள் வழிபடுகிறார்கள் .

இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்;.சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. பூமிக்கடியில் ஏற்படும் அதிர்வலைகளால் இப்படி நடக்கிறதென்று ஜியாலஜிகல் மேகசினில் GEOLOGICAL MAGAZINE  கட்டுரை வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளியில் மொஹஞ்சசத்தாரோஹரப்பாவில் கிடைத்தவை லிங்கங்கள் அல்ல; தாயக் கட்டத்தில் வைத்தாடும் காய்கள் அல்லது எடைக் கற்கள் என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

காஞ்சி மஹா பெரியவர் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1894-1994) லிங்க வழிபாடு மற்றும் சிவலிங்கத்தின் தத்துவம் குறித்துப் பேசியுள்ளார்  .

அருவுருவ நிலை: சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் லிங்கம் ஆகும். இது உருவமும் (ரூபம்) அல்ல, உருவமற்றதும் (அரூபம்) அல்ல. உருவமும் அருவமுமாக இணைந்த அருவுருவம் என்று காஞ்சி சுவாமிகள் லிங்க வடிவத்தை விளக்குகிறார்.

பஞ்ச பூத லிங்கங்கள் என்பன ஐந்து கோயில்களில் உள்ளன ;காஞ்சி சங்கர மடத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சந்திரமௌலீஸ்வரர் (ஸ்படிக லிங்கம்) உள்ளது . லிங்கம் என்பது பரம்பொருளை மனதளவில் உணர்வதற்கான மிக உயர்ந்த குறியீடு .

வேதங்களிலோ சங்க இலக்கியத்திலோ காளிதாசன் மாணிக்கவாசகரின் படைப்புகளிலோ லிங்கம் என்ற சொல்லினைக் காண முடியாது; மிகவும் பிற்கால தமிழ் பக்தி இலக்கியங்களிலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களிலும் மட்டுமே லிங்கம் என்ற சொல் வருகிறது; ஆனால் அதற்கு முன்னர் வழிபாடு இருந்ததற்குத் தொல்பொருட் துறைச் சான்றுகள் உள்ளன . 

Tallest Lingam in Kerala.

***

லீலாவதி

லீலாவதி ( Līlāvatī )  இரண்டாம் பாஸ்கர‍ரால் சமஸ்கிருத‍த்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும்.இந்தப்  பகுதியின் பெயர் பாஸ்கர‍ரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.  பீ ஜ கணிதம், கிரஹ கணிதம், கோளத்யாயம் என்ற தலைப்புகளில் இந்துக்களின் கணித அறிவு விளக்கப்பட்டுள்ளது ; மேலை நாட்டினாருக்கும் முன்னதாகவே ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா ஆகி யவற்றினை சுவைபட விளக்கும் சம்ஸ்க்ருத நூல் 

Srirangam Temple Tower.

To be continued……………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 ,லீலாவதி,லிங்கம், சிவலிங்கம், லெமூரியா, லாஸ்யம்

Leave a comment

Leave a comment