Written by London Swaminathan
Post No. 15,651
Date uploaded in London –24 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
English version was posted on 22-4-2026
Tamil version continued…………………….
லோபாமுத்ரா
லோபாமுத்ரா- அகஸ்தியரின் SEXY செக்சி உரையாடல் ரிக் வேதத்தில் உள்ளது (இது பற்றிய மூன்று கட்டுரைகள் என்னுடைய பிளாக்கில் உள்ளது). அவளுடைய கதை,
18 பர்வங்களைக் கொண்ட மஹாபாரதத்தில் மூன்றாவது பர்வமான ஆரண்ய/ வன பர்வத்தில் உள்ளது.
தவம் செய்து, ,பழுத்த பழமாகப் போன அகஸ்தியர் ஒருநாள் ஜாலியாக WALKING வாக்கிங் போனார். ஒரு பெரிய பள்ளத்திலிருந்து ஒரே கூச்சல்; எட்டிப் பார்த்தார்; அவருடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா,பாட்டன், பூட்டன் எல்லோரும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
அடக்கடவுளே ! உங்களுக்கு எல்லாம் என்ன ஆயிற்று? என்றார்.அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் எல்லோரும் ‘புத்’ (PUTH) என்னும் நரகத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து மீள உமக்கு ஒரு புதல்வன் பிறக்கவேண்டும். அல்லது எங்களுக்கு விடுதலை இல்லை என்றார்கள்.
அகஸ்தியர் உடனே விரைந்தார்; கல்யாணம் கட்ட ஆசை; ஆனால் உலக மஹா அழகி வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதை உணர்ந்த தேவர்கள், அவருடைய தவத்தை மெச்சி, உலக மஹா அழகிகளின் சிறந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து பூலோகத்துக்கு அனுப்பினார்கள். அவள் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாக லோபா முத்ரா என்னும் பெண் பிள்ளையாகப் பிறந்தார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தாள் ; வளர்ந்தாள் ; அகஸ்தியர் தான் எதிர்பார்த்த அழகி விதர்பாவில் இருப்பதை அறிந்து விரைந்தார்.
உமது மகளை எனக்குக் கல்யாணம் செய்து வை என்றார்; சாமியார்கள் தாம் செய்த தவ வலிமையால் சேமித்து வைத்த விந்துவை (SPERM) வீணடிக்காமல் யாராவது ஒருவருக்குக் கொடுத்து பிள்ளையை உண்டாக்குவார்கள் ; இந்த செயற்கை முறை TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி பற்றிச் சொன்னால், பாமர மக்களுக்குப் புரியாது என்பதற்காக “இலையில் விந்து விழுந்தது; அது கர்ப்பமாயிற்று —என்றெல்லாம்” மறைமுக மொழியில் கதைப்பார்கள்; உண்மை என்ன வென்றால் அவர்கள் SEX செக்ஸ் இன்பத்துக்காக ஒரு பெண்ணை அணுகவில்லை
உலக மஹா அழகியை உலக மஹா குட்டையன் SHORTEST MAN விரும்பிய செய்தி விதர்ப்ப நாட்டு ராணியின் காதில் விழுந்தது; அவளும் திகைத்தாள்; முனிவரின் சாபம் வந்தால் குலம் வேரறுந்து போகும். முனிவரிடம் அழகியை ஒப்படைத்தாலோ நல்ல பிள்ளை கிடைக்கும் ; அம்மாவும் அப்பாவும் தவியாய்த் தவிப்பதை பார்த்தாள் பெண்ணரசி லோபா.
லோபா முத்ரா சொன்னாள் :- அம்மா ஒரு கவலையும் படாதே ; நான் அகஸ்தியரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள். கல்யாணம் முடிந்தது ஒரு நாள்மிஸ் லோபா சொல்கிறாள்
“அன்பரே! விரைந்து படுக்கை அறைக்குள் வாரும் ; மாதவிலக்கு முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன. சீக்கிரம், சீக்கிரம் ; பிள்ளை பெற அருமையான சந்தர்ப்பம்.
எல்லா பெண்களையும் போல, மிஸ் லோபாவும் ஒரு கண்டிஷன் CONDITION போடறாள் :–
” ஐயா நான் விதர்ப்ப நாட்டு ராஜ குமாரி. தங்கக் கட்டிலில் படுத்து உறங்கிய என்னை மணம் முடித்தீர். என் அம்மா, அப்பாவுக்கும் விதர்ப்ப நாட்டுக்கும் தீங்கு வரக்கூடாது என்று நான் உம்மை மணக்க முடிவு செய்தேன். நான் ராஜ குமாரியாக இருந்த காலத்தில் அணிந்த நகைகளுடன் வருக.
அகஸ்தியர் சத்ய சீலன்; ‘சரி, அப்படியே செய்கிறேன்’ என்று புறப்பட்டார்.
வன பர்வம் ஸ்லோகம் -95-15/18
லோபாமுத்ரா செப்புகிறாள் :–
என் மூலமாக ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக என்னை என் கணவர் திருமணம் செய்து கொண்டார் என்று எனக்குத் தெரியும் . அதில் சந்தே கமில்லை; ஒரு மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நீங்கள் என்னிடம் வரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் அரண்மனை போன்ற ஓரிடத்தில் என்னைச் சந்தியுங்கள். அத்தோடு நீங்களும் சிறந்த ஆடை அணிகலன்களை அணிந்து அறைக்குள் வாருங்கள் .
அகஸ்தியர் பகிர்கிறார்
அழகியே; செளபாக்கியவதியே! உங்கள் தந்தையை ஒப்பிடும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே (வன பர்வ ஸ்லோகம் 3-95-20)
லோபாமுத்ரா உரைத்தாள் :
நாதா ! சுவாமி! இந்த பூமியில் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ அத்தனையையும் உமது தவ வலிமையால் பெற முடியுமே
அகஸ்தியர் பதில்: 3-95-21
உன்னுடைய யோசனைப்படி நான் செய்தால் என் தவ வலிமை செலவழிந்து போகுமே; என் தபோ நிதி குறையாத ஒரு யோஜனையைச் சொல்.
மஹா பாரத வன பர்வ ஸ்லோகம் 3-95 22 முதல் 28
லோபாமுத்ரா மொழிகிறாள்:-
நாதா, நான் மாத விலக்கு முடிந்து குளித்து விட்டேன். ஆகையால் உடனே நீர் வரவேண்டும்; காலம் தாழ்த்த முடியாது ; அதனால்தான் உம்மை அவசரப் படுத்துகிறேன். அதே நேரத்தில் உங்கள் தவம் செய்யும் விஷயத்தில் நான் குறுக்கிட விரும்பவில்லை; உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.
3-95-24
அகஸ்தியர் சொல்கிறார்:-
உன் மனதில் இவ்வளவு நம்பிக்கை இருக்குமானால் நானும் முயற்சியை உடனே துவங்குகிறேன். உன் ஆசையை நிறைவேற்றுவேன்; இங்கேயே காத்திரு.
xxx
வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக முதலில் ஸ்ருதர்வா என்ற மன்னனை அகஸ்தியர் அணுகினார். . அவர் எதிர்பார்த்த பணம் இல்லை . உடனே அந்த அரசனையும் கூட்டிக்கொண்டு பிருஹதஸ்வா என்ற மன்னனைச் சந்திக்கிறார். அவனிடம் தேவையான பணம் இல்லை என்பதைக் கண்டுபிடித்தவுடன் அவனையும் கூட்டிக்கொண்டு த்ருஸாதஸ்யு என்ற அரசனிடம் சென்றனர் . அவனிடமும் பணம் இல்லை அகஸ்தியர் மனம் தளரவில்லை. அந்தக் காலத்தில் இல்வலன் – வாதாபி என்ற இரண்டு அரக்கர்கள் பிராமண மாமிசப் பிரியர்களாக இருந்தனர். இரண்டு அரக்கர்களும் பணம் படைத்த இரண்டு அரக்கர்கள்; இருவரும் மாயாஜாலத்தில் வல்லவர்கள்; தம்பி வாதாபியை வெட்டி கறி சமைத்து பிராமணர்களுக்கு பரிமாறுவர். அவர்கள் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்குள் இல்வலன் அவனை அழைப்பான்.உடனே அவன் பிராமணர் வயிற்றைக் கிழித்து வெளியே குதிப்பான். அந்த பிராமண மாமிசத்தை இருவரும் சமைத்து உண்பர். இது அகஸ்தியருக்கு தெரியும்.இல்வலனிடத்தில் இருந்த, செல்வத்தை அபகரிப்பதாற்காக அகஸ்தியர் ஒரு தந்திரம் செய்தார் ; அவனிடம் போய் விருந்தும் உண்டார். வழக்கம் போல ‘வாதாபி வெளியே வா’ என்றான் இல்வலன்; அகஸ்தியர் சிரித்தார் ; வாதாபி இனிமேல் வரவே மாட்டான் என்று அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ பவஹ – என்று சொல்லி தொந்தியைத் தடவினார்; இல்வலன் அழுது புரண்டு அகஸ்தியர் காலில் விழுந்து வணங்கினான்.
தன்னுடன் வந்துருந்த 3 அரசர்களுக்கும் 10,000 பசுமாடுகளையும் தங்க நாணயங்களையும் கொடு என்று அகஸ்தியர் கட்டளை இட்டார். (3-97- 12/13 )
அகஸ்தியர் தனக்கு அது போல இரு மடங்கு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார் அகஸ்தியரும் மூன்று அரசர்களும் அவரவர் இருப்பிடம் அடைந்தனர்.
(இந்தப் பகுதி மூலம் வேத கால அரசர் பெயர்களும், அரக்கர் அல்லது அசுரர் என்பவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதும் தெரிகிறது ; த்ரஸா தஸ்யூ முதலிய அரசர் பெயர்கள் ரிக் வேதத்திலும் உள.)
3-97-17/18 லோபா முத்ரா பேசும் ஸ்லோகம்
அன்பரே ! நான் சொன்ன எல்லாவற்றையும் செய்து விட்டீர்; விரைந்து வந்து என் மூலம் குழந்தை பெறுக
அகஸ்தியர் சொல்கிறார் 3-97-18/18
பேரழகியே ! சரி குழந்தை பெறலாம்; அதற்கு முன்னர் என் கேள்விக்குப் பதில் சொல் ;ஆயிரம் மகன்கள் வேண்டுமா? அல்லது 1000 மகன்களுக்கு நிகரான ஒரே மகன் வேண்டுமா?
லோபா புகல்வதாவது :–
சஹஸ்ர சம்மிதஹ புத்ர ஏகோ மே அஸ்து தபோதனஹ
ஏகோ பஹுபிஹி ஸ்ரேயான் வித்வான் சாது ரசாதுபிஹி
தவ சீலரே !ஆயிரம் மகன்கள் தேவையில்லை ; ஏன் எனில் குணமோ கல்வி அறிவோ இல்லாத 1000 மகன்களை விட முனிவர் போன்ற ஒரு மகன் இருந்தால் போதும் .
இதற்குப் பின்னர் ஒரே மகன் பிறக்கட்டும் என்று அகஸ்தியர் வரம் தருகிறார்; அகஸ்தியர்- லோபா ஜோடிக்குக் கிடைத்த லாபம் – த்ரதஸ்யு என்ற புதல்வன் இன்னும் ஒரு பெயர் – இத்ம வாஹ ( Drdhaasyu- Idmavaaha) அவரும் வேதம் செய்த ஒரு ரிஷி.
த்ருணாதூமாக்கினி என்னும் பெயர் உடைய தொல்காப்பியருக்கும் அகஸ்தியருக்கும் லோபாமுத்ரா காரணமாக நடந்த மோதலை உச்சிமேற்புலவர் கொள் நச்சினார்க்கினியர் சொல்கிறார்; அதைத் தொல்காப்பியரின் கீழ் பின்னர் காண்போம் .
***
லோமச ரிஷி
லோமச ரிஷி (Lomasha )
சொர்கத்துக்குச் சென்றபொழுது இந்திரனுடன் சிம்மாசனத்தில் அர்ஜுனனும் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார் . இதைக் குறிப்பாலுணர்ந்த இந்திரன் அர்ஜுனன் பூமியில் பிறந்து முக்கியப் பணிகளைச் செய்யவிருப்பதாகச் சொன்னார் ; இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க லோமச ரிஷியும் பூமியில் பிறந்தார். கடுமையான தவத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்ற, சிவபக்தர்.
இவர் பாண்டவர்களின் வனவாச காலத்தில், கவலையில் மூழ்கியிருந்த யுதிட்டிரருக்குத் தத்துவ ஞானங்களை உபதேசித்து, தீர்த்த யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அவர்களுடன் யாத்திரை மேற்கொண்டார் , பல்வேறு புனித தலங்களுக்கு அழைத்துச் சென்று கதைகள் மற்றும் ஞானத்தை போதித்தார். இவர் உணவின்றி, கடுமையான தவத்தில் சிறந்து விளங்கியவர். லோமச முனிவரின் கதைகள் மகாபாரதத்தின் வன பர்வத்தில் உள்ளன.
***
லோமபாத
லோமபாத/ ரோமபாதர்
மஹாபாரத வனபர்வத்திலும் வால்மீகி மாயணயத்திலும் இவரைப் பற்றிய கதைகள் உள்ளன ; ரோமபாதர் அங்க தேசத்தின் மன்னர் ;தசரத சக்கரவர்த்தியின் நண்பர். தசரதன்-கோசலை தம்பதியரின் மகளான சாந்தாவை தத்து எடுத்து வளர்த்தவர்.
இவர் பிராமணர்களை அவமதித்ததால் அவர்களிட்ட சாபத்தினால் பெரும் வறட்சி ஏற்பட்டது. நீண்ட வறட்சியைப் போக்க, ரிஷ்யசிருங்க முனிவரைத் தன் நாட்டுக்கு அழைத்து வந்து, தனது வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு மணம் முடித்துக் கொடுத்தவர். தன் நாட்டில் நிலவிய கடும் வறட்சியைப் போக்க, அபார பிரம்மச்சரிய சக்தி கொண்ட ரிஷ்யசிருங்க முனிவரை பெண்களை அனுப்பி ஆசை காட்டி தன் நாட்டுக்கு வரவழைத்து மழை பொழியச் செய்தார்.
ரிஷ்ய சிருங்கர் யார் ?
கலைக்கோட்டு முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர்.
பிறக்கும் போதே தலையில் மான் கொம்புகளுடன் பிறந்தவர்.இவரது தந்தை விபாண்டக முனிவர்;தாயார் அப்சரஸ் தேவலோக நடனப் பெண்ஊர்வசி. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி.
யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத உத்தமராக இருந்தார்.ரிஷ்யசிருங்கர் காலடி வைத்த இடமெல்லாம் மழை பெய்தது.
***
லோகாலோகபர்வதம்
லோகாலோகபர்வதம் (Lokaloka Parvata) என்பது இந்து புராணங்களின்படி, பிரபஞ்சத்தின் எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலைத்தொடர் ஆகும்.
அமைவிடம்: இது லோகம் (வெளிச்சம் உள்ள உலகம்) மற்றும் அலோகம் (வெளிச்சம் இல்லாத இருண்ட பகுதி) ஆகிய இரண்டையும் பிரிக்கும் எல்லையாகக் கருதப்படுகிறது.
புராணங்களின்படி, இது ஐம்பது கோடி யோஜனை விஸ்தாரமுடைய பூமியின் நான்கில் ஒரு பாகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சூரியனின் ஒளி பூமியின் மீது படுவதற்கு ஏதுவாக, ஒளியை பிரதிபலித்து எல்லை அமைக்கும் மலையாக இது வர்ணிக்கப்படுகிறது. லோகாலோகபர்வதம் என்பது ஒளியுலகிற்கும் இருளுலகிற்கும் இடையிலான எல்லை.
பாகவதத்தில் உள்ள வருணனை :
சுத்த ஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் ஜனஸஞ்சாரமுள்ள உள்பாகத்திற்கும் ஜன ஸஞ்சாரமில்லாத வெளிப்பாகத்திற்கும் இடையில் சுற்றிலும் லோகாலோகமென்னும் பர்வதம் ஏற்பட்டிருக்கின்றது. மானஸோத்தர பர்வதத்திற்கும் மேருபர்வதத்திற்கும் இடையில் எவ்வளவு பூமி இருக்கின்றதோ அவ்வளவு பூமி சுத்தஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் இருக்கின்றது. அதற்கப்புறமுள்ள பூமி ஸ்வர்ணமயமாய்க் கண்ணாடிப்புறம் போன்றிருக்கும். அப்பூமியில் வைத்த பொருள் எதுவும் மீளவும் புலப்படுகிறதில்லை. ஆகையால் அந்தப் பூமி ஒரு ப்ராணியுமின்றிச் சூன்யமாயிருக்கிறது. அதை அலோகமென்கிறார்கள். தன்வரையிலுமுள்ள பூமி லோகமென்றும் தனக்கு வெளியிலுள்ள பூமி அலோகமென்றும் கூறப்படுகின்றனவாகையால் இடையிலுள்ள பர்வதம் லோகாலோகமென்று பேர்பெற்றது. அப்பர்வதம் மூன்று லோகங்களுக்கும் வெளியில் சுற்றிலும் ஈச்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது அப்பர்வதத்தின் மேல் நான்கு திக்குக்களிலும் ப்ரஹ்மதேவனால் லோகக்ஷேமத்தின் பொருட்டு ருஷபம், புஷ்கரசூடம், விமானம், அபராஜிதம் என்னும் பேருடைய மேலான யானைகள் நான்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸர்வேச்வரன் சங்கு சக்ரம் முதலிய தன் ஆயுதங்களால் திகழ்கின்ற பாஹுதண்டங்கள் விளங்கப்பெற்றுக் கல்பாவஸானம் வரையில் அந்த லோகாலோக பர்வதத்தில் நாற்புறத்திலும் வீற்றிருக்கிறான்.
–subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 56; இந்து மத கலைச்சொல் அகராதி-56 லோபாமுத்ரா,லோகாலோகபர்வதம், ரோமபாதர்