தமிழ்ச்சங்க நூலிலும்,பைபிளிலும் கின்னரம்; பாபிலோனியாவில் தமிழ் தம்பட்டம்! (Post.15,655)

ராமேசுவத்தில் கின்னரி 

Written by London Swaminathan

Post No. 15,655

Date uploaded in London –25 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாங்காக் அரண்மனையில் கின்னரி; லண்டன் சுவாமிநாதன் மார்ச் 2026 -ல் எடுத்த படம்

பத்துப்பாட்டில் தமிழ்ச் சங்கப்புலவர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை என்ற நூல் உள்ளது; அதில் கின்னரம் குறிப்பிடப்படுகிறது. இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்; பைபிளில் 47 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது . பாபிலோனியாவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தம்பட்டம் பயன்படுத்தப்பட்டது ; இதோ ஆதாரங்களுடன் சுவையான செய்திகள்!

***

சீனாவில் இந்து இசைக் கலைஞர்கள்

சீன மன்னரின் அழைப்பின்பேரில் ( 581 CE )  பல சங்கீத விற்பன்னர்கள் சீனாவுக்குச் சென்றார்கள்; சுஜிவன் என்ற வீணை வித்வான் சீன மன்னர் (560 – 578 CE) அவையை அலங்கரித்தார்.

அவர் சீன சங்கீதப் பிரியர்களுக்கு இந்திய ராகங்களைப்  பயிற்றுவித்தார். சப்த ஸ்வரங்களைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே ; இதற்கான சான்றுகள் வேதங்களில் உள்ளன. இந்த ஸ்வரங்களையும் அவர் பிரபலப்படுத்தினார் என்பது ஓலைச் சுவடிகள், பழங்கால காகித ஆவணங்களிலிருந்து தெரிகிறது ; சீனாவின் சங்கீதத்தில்  சட்ஜ,  ரிஷப , பஞ்சம ஆகிய மூன்றும் தூக்கலாக உள்ளன .

***

ஜப்பானில்

ஜப்பான் நாட்டில் சீனாவிலிருந்து வந்த போதிசத்வ, பைரோ ஆகிய இரண்டு இசைகள் பிரபலமாகின; இந்தியாவிலிருந்து சென்ற பிராமணன் போதி ,இதை அவர்களுக்கு கற்றுத்தந்தான் என்று பாரம் பரியக்கதைகள் உள்ளன ; இவை இரண்டும் இந்தியப் பெயர்கள் என்பதில் எவருக்கும் ஐயமில்லை ; இப்போதும் பைரவி ரகத்தை இந்தியில் பைரோ என்றுதான் சொல்கிறார்கள் .

***

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திய கலாசாரமும் குறிப்பாக சங்கீதமும் நடனமும் இருந்ததற்கு நிறைய சான்றுகள் இருப்பதோடு ராமாயண மஹாபாரதக் காட்சிகளை இன்றுவரை நடித்தும் ஆடியும் பாடியும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ; ஜாவா சுமத்ரா, பாலி தீவுகளின்  சிற்பங்களிலும் இவைகளைக் காண முடிகிறது .

திபெத்திய புத்தமத குருமார்கள் சாம் வேத ராகத்தில் பெளத்த கிரந்தங்களைப்  பாடுகிறார்கள் ; தொலைவிலிருந்து இவைகளைக் கேட்டால் பிராமணர்கள் வேதம் ஓதுகிறார்கள் என்றே நினைப்போம்.

***

கிரீஸ் நாட்டில்

எகிப்திலும் , குறிப்பாக கிரேக்க நாட்டிலும் இந்திய சங்கீதத்தின் தாக்கத்தைக் காண முடிகிறது பெரும்பாலான கிரேக்க எழுத்தர்கள் இதைக் குறிப்பிட்டார்கள்; ஸ்ட்ராபோ என்பவர் இந்தியாவிலிருந்து சங்கீதம் வந்ததை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

கிரேக்க நாட்டிலுள்ள பழைய ஸ்வரங்களான மிக்ஸோலிடிக், டோரிக் (Mixolydic and Doric)  ஸ்வரங்கள் இந்து சங்கீதத்தை ஒத்திருக்கிறது ;    பிதகோரஸ் முறையிலுள்ள சங்கீதத்தில் இந்து நாட்டிய சாஸ்திரத்தின்  சட்ஜ பஞ்சம , சட்ஜ -மதியம – பாவ -ங்களைக் காணலாம்  அரிஸ்டாட்டில் வருணிக்கும் ஒரு கருவி இந்துமத நூல்களில் காணப்படும் ஏகதந்திரி  வீணையை நினைவுபடுத்துகிறது .

அதர்வண வேத பூமி / ப்ருத்வீ சூக்தத்தில் நாரதர் வீணை வருகிறது தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை முதல் தடவையாக குறிப்பிடப்பட்டுகிறது; சங்க காலம் வரை யாழ் மட்டுமே இருந்தது அதற்குப் பின்னார் ஐந்தாம் நூற்றாண்டில் இளங்கோ எழுதிய சிலப்பதிகாரத்தில் நிறைய புராண விஷயங்களைக் காணமுடிகிறது. 

அரபு நாட்டு எழுத்தாளர் ஜாகீஸ் (Arabian writer, Jahiz ) அப்பாஸித் (The Abbasid Caliphate (750–1258 CE) மன்னர்கள் காலத்தில் இந்து சங்கீதம் பிரபலமாக இருந்தது என்று எழுதியுள்ளார்.ஈரான் என்னும் பாரசீக நாட்டில் இது போல இருந்ததும் குறிப்பிடத்தத்தக்கது .அராபிய சங்கீதத்தின் அடித்தளம்  இந்திய சங்கீதமே என்று பிரபல இசை மேதை Yehudi Menuhin  எஹுதி மெனுஹினும் விளம்பியுள்ளார் 

***

தமிழ்நாட்டின் தம்பட்டம்

பாபிலோனியாவிலுள்ள timbutu திம்புட்டு, தமிழ்நாட்டின் தம்பட்டம் என்று கார்ட் சாக்ஸ் Curt Sachs  எழுதியுள்ளார் ; டேவிட் மன்னரின் கின்னொர் , சம்ஸ்க்ருத கின்னரம் என்கிறார் (Hindu kinnari was king David’s kinnor).

சிவனின் உடுக்கையின் பெயர் டமருகம் . பழைய சிவ புராணம், பாகவத புராணம் ஆகியவற்றில் வரும் இந்தச் சொல் திரிந்து தமிழில் டமாரம்ஆங்கிலத்தில் DRUM டிரம் என்ற சொற்களை உருவாக்கியது ; தம்பட்டம் என்பதும் சம்ஸ்க்ருத டமருகம் என்ற சொல்லின் மரூஉ-வுவாக இருக்கலாம் இந்தச் சொல் சங்க காலத்தில் இல்லை !

தமுக்கு / டமருகம் (சம்ஸ்க்ருதம்) டாம் டாம் ,தம்பட்டம்

தமுக்கு என்பது மக்களுக்குத் தகவல்களை அறிவிக்க, முக்கியமாக கிராமப்புறங்களில் செய்தி தெரிவிக்கப் பயன்படும் ஒரு பழமையான, வட்ட வடிவத் தமிழரின் இசைக்கருவி (பறை வகை) ஆகும். இது அரசாங்க அறிவிப்புகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது அறிவிப்புகளுக்கு முன் முழக்கப்படும். இது ‘தமுக்கு’ அல்லது ‘தமருகம்’ என்றும் அழைக்கப்படுகிறது

***

பைபிள் நூலில் கின்னர

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பைபிளில் சம்ஸ்க்ருதம் என்று நான் எழுதிய கட்டுரையில் 47 முறை பைபிளில் கின்னரம் பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டேன் . இசைக்கருவி என்ற பொருளில் அது பயிலப்பட்டது; இப்பொழுது கிரேக்க புராணக்கதைகளை நான் ஆராய்ந்ததில் மேலும் சுவையான தகவல்கள் கிடைத்தன.

***

கின்னரர்கள் யார் ?

இந்துமத புராணங்களில் தேவலோக இசைக் கலைஞர்களைக் கந்தர்வர்கள் என்றும் கின்னரர்கள் என்றும் வருணித்துள்ளனர் குதிரை உடலுடனோ அல்லது பறவை உடலுடனோ கின்னரர்களை வரைந்தனர் ; செதுக்கினர் ; ராமேஸ்வரத்தில் கின்னரி சிலை உள்ளது ; இவர்கள் இமய மலையில் குபேரன் என்னும் யக்ஷர் அவையில் இருப்பதாவதும் எழுதினர். ஒரு கையில் வீணையுடன் காட்சி தரும் இவர்கள் தட்சிணாமூர்த்தியின் சிலைகளில் இருப்பதையும் ஹெச் சாஸ்திரி தனது நூலில் குறிப்பிடுகிறார் அவர்தான் கின்னரி படத்தையும் வெளியிட்டார்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய நூல்களிலும் மஹாபாரத ஆதி பருவத்திலும் கின்னரர் விஷயங்கள் வருகின்றன . சங்கத்தமிழ் நூலான பெரும்பாணாற்றுப்படையையும் பட்டினப்பாலையையும் (ருத்திரன் மகன் கண்ணனார்) உருத்திரங்கண்ணனார் என்ற பிராமணப்புலவர் இயற்றினார் அதிலும் கின்னரர்களை இசைக்கலைஞராக புலவர் பாடியுள்ளார்.

***

கிரேக்க நாட்டில் கந்தர்வர் , கின்னரர் 

கிரேக்க நாட்டில் ரிக்வேத நாய் சரமேயஸை ஹெர்மிஸ் HERMES  என்று திரித்து எழுதியது போல நிறைய பெயர்களை மாற்றி எழுதினார்கள்; கந்தர்வர் என்பதை CENTAUR சென்டார் என்றும் கின்னரரை கிரோன் CHIRON  என்றும் எழுதி படங்களை மட்டும் இந்துக்களைப் போலவே வரைந்தனர்; அதாவது குதிரை உடல்; மனித முகம்! இவர்களில் கிரோன் / கின்னர, ஒரு புராண புருஷர் என்றும் அவர்தான் மூலிகை விஷயங்களை ஜேசன், அக்கிலிஸ் போன்ற புராண புருஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார் என்றும் பகர்ந்து , யாழுடனும் குதிரை உடலுடனும் ( chiron) கிரோனை சித்தரித்துள்ளார்கள். இந்த இசைக் கருவியும் குதிரை உடலும் மனித முகமும் இவரை கின்னரர்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன . சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சென்ற இந்துக்கள்தான் கிரேக்கர்கள் . இதை இந்திய வேதங்களை ஆராய்ந்து எழுதிய வெள்ளைக்காரர்களும் விளம்பியுள்ளனர் .  

–subham—

Tags- தமிழ்ச் சங்க நூல்,  பைபிள், கின்னரம் பாபிலோனியா, தமிழ் தம்பட்டம்!

Leave a comment

Leave a comment