Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-16;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,707)

Written by London Swaminathan

Post No. 15,707

Date uploaded in London –7 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தலைச்சங்காடு

நாண்மதியப்பெருமாள்

அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில்  

மூலவர் –       :   நாண்மதியப்பெருமாள்,

உற்சவர்  –      :   வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி

தாயார்  –        :   தலைச்சங்க நாச்சியார்

புராண பெயர் –   :   திருத்தலைசங்க நாண்மதியம், தலைசிங்க நான்மதியம்

ஊர்   –          :   தலச்சங்காடு

தீர்த்தம்:- சந்திர புஷ்கரிணி

தல விருட்சம்:- புரசு

கோலம் -: நின்ற திருக்கோலம்

கையில் சங்குடன் காட்சி தரும் பெருமாள்

சந்திரனின் சாபம் தீர்த்த தலம்

சிவனை போல் பிறை சூடி காட்சி அளிக்கம் பெருமாள்

கோவிலின் முன்புறம் குளம் காணப்படுகிறது. சந்திரன் நீராடி சாபம் தீர்ந்த குளம் என்பதால் இதற்கு சந்திர புஷ்கரிணி என்று பெயர்.

குரு பகவான் மனைவியான தாராவுக்கும்  சந்திரனுக்கும்  இடையே ஏற்பட்ட  காதலால் பிறந்தவர் புதன் என்றும் இதனால் குரு பகவான் சாபமிட்டதாகவும் கதை; சாபம் தீர இங்கே வழிபட்டார் சந்திரன் 

சந்திரன் தனது சாபம் நீங்கும் பொருட்டு இவ்வூர் தீர்த்தத்தில் நீராடியதால் சந்திர தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

108 திவ்ய தேசங்களில் 25-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பெருமாள் கையில் சங்குடன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு தலைச்சங்காடு என்ற பெயர் வரலாயிற்று..

ஒற்றை நிலை கோபுரத்துடன் அமைந்த இக்கோவிலில் ஒரே ஒரு பிரகாரமும், இரண்டு சன்னதிகளும் மட்டுமே அமைந்துள்ளன.

காவிரி ஆற்றின் தென்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. சோழர்கள் ஆட்சி காலத்தில் வணிக நகரமாக இருந்த பூம்புகாருக்கு மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளதால் சங்கிற்கு பிரபலமான ஊராகவும் இது இருந்தது.

இந்த தலத்தில் மட்டுமே சிவ பெருமானைப் போல் பெருமாளின் தலையில் பிறை சந்திரனை அணிந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

சந்திர விமானத்தின் கீழ் மூலவர் நாண்மதியப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார்.

அழகிய சங்கை ஏந்தியபடியால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என்று அழைத்தார்.

இக்கோயிலில் சில காலம் வழிபாடு இன்றி இருந்த நிலையில் வடுக நம்பி சீரமைக்க முயன்றார். பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 2 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

மாயவரத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ள ஆக்கூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆக்கூரிலிருந்து தலைச்சங்காடு வந்து அங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.( தலைச்செங்காடு)தற்போது ‘தலைச்சங்காடு’ என்று அழைக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி வைபவம், நவராத்திரி தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

****

 பாடல் பெற்ற சிவன் கோவிலும் உண்டு!

இவ்வுலக உயிர்களைக் காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை வழிபாடு செய்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார் திருமால். அதனால் இவ்வூரில் உள்ள சிவபெருமான் கோயிலில் திருமாலுக்கு தனி சந்நிதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் என்ற சங்கை அருளிய காரணத்தால் சிவபெருமான், சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலுக்கு அருகில் திருநாங்கூர், திருவாலி, திருநகரி, திருவெண்காடு, பல்லவனீஸ்வரம், கீழப் பெரும்பள்ளம், மேலப் பெரும்பள்ளம், திருக்கடையூர் போன்ற தலங்கள் அமைந்துள்ளன.

***

தலைச்சங்காடு பாசுரங்கள்

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.

—subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-16;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், தலைச்சங்காடு, நாண்மதியப்பெருமாள்

Leave a comment

Leave a comment