பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தது பாண்டவர்கள்! (Post No.15,712)

Written by London Swaminathan

Post No. 15,712

Date uploaded in London –8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1, 2 என்ற தலைப்பில் இந்த பிளாக்கிலும் என்னுடைய புஸ்தகங்களிலும் எழுபது ஒற்றுமைகளை 15 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன் . அதில் ஒன்று:

பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர். வாலிபால் போல கைப்பந்து  விளையாட்டுகள்

***

2

சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் விளையாட்டு என்ற தலைப்பில் கீழ்கண்ட செய்தியைத் தந்தேன்:

சங்க இலக்கியத்தில் பெண்களின் பூப்பந்து விளையாட்டினைக் கீழேயுள்ள பாடல்களில் காணலாம் :

பெறும்பாணாற்றுப்படை- line 335;

நற்றிணை – 47, 79;

பதிற்றுப்பத்து – 15-5;

பரிபாடல்- 8-106/7;

அகநானூறு  – 17, 49, 66

புறநானூறு – 36

அந்தக் காலத்தில் திருமணமாகும் வரை பெண்கள் என்ன என்ன விளையாடினர் என்று ஒரு பாட்டின் மூலம் தெரிகிறது. இது முற்றிலும் சரி என்பது சங்கத் தமிழ் பாடல்களாலும், ராமாயண, மஹாபாரத நூல்களாலும் உறுதியாகிறது:-

மருங்குவளர் பூங்கா மலர்வாவி யூச

றிருந்துமணி செய்குன்று தேமா- விரும்பமுத

பானங்கிளி பூவை பந்துகன்னங் கழங்கன்ன மயின்

மான்முல்லை பந்தர் வளர்ப்பு

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

1.பூங்காவில் பூக்கள் பறித்து விளையாடினர்.

2.பொய்கை, கிணறுகளில் நீராடிப் பொழுது போக்கினர்.

3.வீட்டிலும் மரத்தடியிலும் ஊஞ்சல் கட்டி ஆடினர்.

4.பணக்காரர் வீடுகளில் செயற்கையாக குன்று எழுப்பி அதில் ரத்தினக் கற்களைப் பதித்துவைத்து அதன் மேல் ஆடி ஓடி சாடினர்.

5.தேமாமரம் விளையாடினர் (மாமரத்தில் ஏறி அல்லது கல் விட்டெறிந்து மாங்காய், மாம்பழம் எடுத்துச் சாப்பிடுதல்) .

6.அமிர்தம் போன்ற பானங்கள் செய்து குடித்தனர்.

7.காய்களை வைத்து கழங்கு ஆடினர்;

8.பூப்பந்து ஆடினர்.

9.கிளி, பூவை (சாரிகைப் பறவை), அன்னம், மயில் ஆகிய பறவைகள் வளர்த்து பொழுது போக்கினர்.

10.முல்லைப் பூச்செடிக்கு பந்தல் கட்டி வளர்த்து அதைப் பராமரித்தனர். முல்லை என்றால் அது போன்ற பிறவகை மலர்ச் செடிகளும் அதில்  அடங்கும்.

***

3

பின்னர் ஆதி சங்கரரின் விவேகா சூடாமணியில் பந்து விளையாட்டு பற்றிய குறிப்புகளையும் சுட்டிக்காட்டினேன்.

Ball Game in Sankara’s Viveka Chudamani – Research Article on VC-42 (Post No.13,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

लक्ष्यच्युतं चेद्यदि चित्तमीषद्

बहिर्मुखं सन्निपतेत्ततस्ततः ।

प्रमादतः प्रच्युतकेलिकन्दुकः

सोपानपङ्क्तौ पतितो यथा तथा ॥ ३२५ ॥

lakṣyacyutaṃ cedyadi cittamīṣad

bahirmukhaṃ sannipatettatastataḥ |

pramādataḥ pracyutakelikandukaḥ

sopānapaṅktau patito yathā tathā || 325 ||

ஆதி சங்கரர் எழுதிய விவேக சூடாமணியில் மனத்தின் இயல்பினை விளக் குகையில் ஒருவரின் மனம் கீழே செல்லத் துவங்கினால் அது மாடிப்பாடியில் விழுந்த பந்தினைப்போல  கீழேயே  படிப்படியாக, பிடிக்க முடியாமல் போகும்  என்கிறார்; அருமையான உவமை; பந்து விளையாட்டினை விளையாடியோருக்கு இது நன்கு விளங்கும்!.

***

4

இப்போது கிடைத்த புதிய செய்திகள்- தமிழ்ப் பெண்களுக்கும் முன்னதாக பாண்டவர்களும் கெளரவர்களும் பந்து விளையாடிய சம்பவங்கள் ஆகும்.

ஆதி பர்வத்தில் வரும் சம்பவம் இது : பாண்டவர்களும் கெளரவர்களும் மிகவும் சின்னப் பையன்களாக இருந்தபோது காடு போன்ற பகுதியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர் ; அப்போது ஒருவர் அடித்த அடியில் பந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது; அது தண்ணீர் இல்லாத வறண்ட கிணறு ; ஆனால் எல்லோரும் சிறுவர்கள் ஆனதால் ஏது செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர் ; ஒருவரை ஒருவர் வெட்டகத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர் ; அப்போது, தினமும் காலையில் செய்யும் அக்கினி ஹோமத்தை முடித்துக் கொண்டு ஒரு கருத்த பிராமணன் அங்கே வந்தான் ; க்ஷத்ரிய பலத்தைவிட பிராமணனின் புத்திர் பலமே சிறந்தது என்று காட்ட எண்ணி கிணற்றுக்குள் வட்ட வடிவிலுள்ள மோதிரத்தை எறிந்தான்; தர்ப்பைப் புல் வைத்துக்கொண்டு  மந்திரங்களையும் முனுமுனுத்தான். முதலில்  ஒரு அம்பினால் பந் தினையும் பின்னர் மோதிரத்தையும் எடுத்தான்; அந்த மோதிரத்தை 105 பாண்டவ, கெளரவர்களிடம் அளித்தான் ;இதை அந்தச் சிறுவர்கள் பெரிய தாத்தா பீஷ்மரிடம் சொல்லவே அவர் அந்தக் கருப்பு நிற பிராமணனை அம்புப் பயிற்சி சொல்லித் தரும்படி நியமித்தான்; அவர்தான் உலகப்புகழ்பெற்ற வில்வித்தை ஆசிரியர் துரோணர் ; பிறகு இந்தப் பிராமண சிரேஷ்டர், மகாபாரத யுத்தத்தில்  ஒரு கமாண்டராக ARMY DIVISIONAL COMMANDER நியமிக்கப்பட்டதை நாம் அறிவோம் (Mahabharata 1-131-17 Adi parva)

இந்த இடத்தில் அவர்கள் விளையாடியது கைப்பந்தா, கால்பந்தா என்ற விவரம் இல்லை ;ஆனால் சம்ஸ்க்ருத மொழியில் உத்ர் என்ற வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதன் வடிவம் வட்டம் என்று சொல்ல முடியும் ; விஷ்ணுவானவர் வராஹ அவதாரம் எடுத்த போது சமுத்திரத்துக்கு அடியிலிருந்து வட்ட வடிவ பூமியை மேலே கொண்டு வந்ததற்கும் இதே வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது ; வராஹத்தின் மூக்கில் வட்ட வடிவ பூமி இருப்பதை பழங்கால சிற்பங்களில் கூடக் காண முடிகிறது;  பூமி என்பது வட்டமானது என்பதை முதலில் கண்டுபிடித்த இந்துக்கள் அதை பூகோளம் என்றே சொல்லி பாடம் நடத்தினர். பாண்டவர்கள் கெளரவர்கள் உதைத்து விளையாடியதால் அது கிணற்றுக்குள் விழுந்ததை யூகிக்க முடிகிறது . ஆகவே உதை பந்து என்னும் கால் பந்தினைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே ; தென் அமெரிக்க மாயா நாகரிக மக்கள் அல்ல  .

***

இரண்டாவது பந்து விளையாட்டு

பாண்டவர்களின் தாயான குந்தியின் ஒரிஜினல் பெயர்- அதாவது அப்பா, அம்மா வைத்த பெயர் பிருதா ; பிருத்வி என்னும் வட்ட வடிவ பூமியை நினைவு படுத்தும் பெயர்;  அவள் கதையை அவளே கிருஷ்ண பரமாத்மாவிடம் சொன்ன சம்பவம் மஹாபாரதத்தில் உள்ளது ;அவளது தந்தை ஷுரா , இவள் சின்னப் பெண்ணாக பந்து விளையாடிக்கொண்டிருந்த போது குந்திபோஜன் என்னும் உறவினனுக்குத் தத்துக் கொடுப்பதாகச் சொன்னானாம் இங்கும் பந்து விளையாட்டினைக் குறிப்பிடுகிறார் வியாசர் . அவள் விளையாடியது சங்கத் தமிழ் பெண்கள் போல பூப்பந்தாக இருக்கலாம் .

***

5

செப்பும் பந்தும் போல– என்று தமிழில் பழமொழியும் உண்டு ; சங்க காலத்தில் தமிழ்ச் சிறுமிகள் உருண்டையான  கழங்கு கொண்டு அம்மானை முதலியன விளையாடினார்கள் .

***

6

From Tamil Dictionary அகராதியிலிருந்து

ammāṉai n. அம்மானை [K.ammāle, M. ammāna.] 1. Girls’ game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம்.

—SUBHAM—

Tags- பந்து விளையாட்டு,  கண்டுபிடித்தது,  பாண்டவர்கள் , சங்க காலம் , தமிழ்ப் பெண்கள், விவேக சூடாமணி 

Leave a comment

Leave a comment