கனவு பற்றிய சுவையான உரையாடல் (Post No.15,741)

Written by London Swaminathan

Post No. 15,741

Date uploaded in London –15 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Picture: Mayadevi dream

மிலிந்த பன்ஹா  என்ற நூல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைஇலக்கிய உதயம் நூலில் விளக்கமாக எழுதியுள்ளார் ; இந்த நூலிலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அதை இடைச் செருகல் என்று சிலர் சொல்லுவார்கள்.

மிலிந்த பன்ஹா =  மிலிந்தனின் கேள்விகள்’ என்று பொருள்படும்;

.உரையாடுபவர்கள்: மன்னர் மிலிந்தன் மற்றும் பௌத்த ஞானி நாகசேனர்.

நோக்கம்: பௌத்த தத்துவத்தின் கடினமான கருத்துக்களை, எளிமையான விவாதங்கள் மற்றும் உவமைகள் மூலம் விளக்குவது.

கனவு பற்றிய உரையாடல் பகுதியின் சில கருத்துக்களை இங்கு காண்போம் ; அதை ஆங்கிலத்தில் ஒருவர் எழுதியுள்ளார் இந்த நூலிலுள்ள 4, 5, 6, 7 ப்குதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக கருதப்படுகிறது; அதில்தான் கனவு பற்றிய உரையாடல் கிடைக்கிறது

***

இந்த நூலின் பின்னணி  

மிலிந்த பன்ஹா (Milindapanha) மிலிந்தனின் கேள்விகள்’ என்பது கி.மு. 100 – கி.பி. 200 காலகட்டத்தில் பாலி மொழியில் எழுதப்பட்ட மிக முக்கியமான பௌத்த இலக்கிய நூல். இது இந்தோ-கிரேக்க மன்னர் மிலிந்தன் (மெனாண்டர்) மற்றும் பௌத்த முனிவர் நாகசேனர் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் வடிவில் பௌத்த தத்துவங்களை விளக்குகிறது

மன்னரின் குழப்பங்களுக்கு நாகசேனர் தர்க்கரீதியான மற்றும் நகைச்சுவையான பதில்களை வழங்குகிறார், இது இறுதியில் மன்னரை பௌத்த மதத்தை ஏற்க வைக்கிறது.பௌத்த தத்துவங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நூல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

***

1

மிலிந்தனின் கேள்வி :

மரியாதைக்குரிய நாக சேனர் அவர்களே ! இந்தப் பூவுலகில் ஆண்களும் பெண்களும் கனவு காண்கிறார்கள் ; கெட்ட கனவுகளும் நல்ல கனவுகளும் எல்லோருக்கும் வருகின்றன; முன்னால் ஒருவர் செய்த செயல்களையும், செய்யாத செயல்களையும் அதில் காண்கிறோம்; பல வடிவங்களில், பல வண்ணங்களிலும் கனவுகள் தோன்றுகின்றன. அருகிலும் தொலைதூரத்திலும் நடந்தவை தெரிகின்றன; சில இன்பம் பயக்கின்றன; சில அச்சுறுத்துகின்றன . கனவுகள் என்றால் என்ன ? இவைகளை யார் யார் காண்கிறார்கள் ?

நாகசேனர் பதில்

அவை நம் மனதில் தோன்றுபவை; ஆறு வகையான மனிதர்கள் கனவுகளைக் காண்கிறார்கள்; மன உறுதியில்லாதவர்கள்களும்,  கபம் உள்ளவர்களும், பித்தம் அதிகரித்தவர்களும், மனப்பயிற்சி செய்வோரும், தேவர் அருள்பெற்றோரும், எதிர்காலத்ததை அறிவோரும் கனவுகளைக் காண்கிறார்கள . வருங்காலத்தை உணர்த்தும் கனவுகளே உண்மையானவை; ஏனையவை  பலிக்காத கனவுகளே !

எனது கருத்து – புத்தர் பிறக்கப்போவதை அவரது தாயார் பல சின்னங்கள் மூலம் அறிந்த கனவு மிகவும் பிரசித்தமானது ; பெளத்த சின்னங்களில் ஓவியமாகவும் சிற்பங்களாகவும் இடம்பெற்றுள்ளன ; ஆகவே அதை ஒட்டி இந்தப் பதில் அமைந்துள்ளது ; ஆனால் கனவுகளின் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் இந்துக்களே  ; கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கனவுகள் பற்றி   சிக்மண்ட்  பிராய்ட் (Sigmund Freud: In his 1899 book, The Interpretation of Dreams), Carl Jund கார்ல யங் ஆகியோர் இது பற்றி விளக்கினார்கள்; அதற்கு முன்னர் கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் பேசினாலும் விஞ்ஞான விளக்கம் இல்லை. மனிதர்கள் எல்லோரும் கனவுகள் கண்டே ஆக வேண்டும் என்பது நவீன கொள்கை; இதை அறிந்த இந்துக்கள் வேத காலம் முதல் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்ற பிரார்த்தனையை தினசரிப் பிரார்த்தனையில் சேர்த்துள்ளார்கள்; பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளிலும் கெட்ட கனவுகளை அகற்றுங்கள் என்று வேண்டுகின்றனர் ;அதாவது நல்ல  கனவுகள் வரட்டும் என்பதே பொருள்; ஆகவே கனவுகள் வந்தே தீரும் என்பதை முதலில் அறிந்தவர்கள் இந்துக்களே!

***

2

மிலிந்தனின் கேள்வி :

நீங்கள் சொல்லும் வருங்கலத்தை அறிவிக்கும் கனவுகளை யாராவது நமக்குக் கொண்டு வருகிறார்களா ? நாமாக அதை நாடுகிறோமா ? அல்லது அதுவாக நமக்கு ஏற்படுகிறதா ?

நாகசேனர் பதில்

மன்னனே ! கனவுகளை யாரும் நமக்கு கொண்டுவருவதில்லை; நாமாக அதை நாடி ஓடுவதும் இல்லை ; வருங்காலம் பற்றி ய செய்திகள் அதுவாக வருகின்றன; நீங்கள் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிறீர்கள்; நீங்களாக அதற்குள் நுழையவில்லை ; யாரும் உங்களைக் கொண்டுபோய் நுழைக்கவும் இல்லை ; யார் பார்க்கிறார்க்ளோ அதன் பிரதிபலிப்பு  அங்கே இருக்கிறது அது போலத்தான் கனவுகள்.

***

3

மிலிந்தனின் கேள்வி :

நாகசேனரே ! அப்படியானால் கெட்டது நடக்கப்போகிறது அல்லது நல்லது வரப்போகிறது என்று மனதுக்கு முன்னரே தெரியுமா?

நாகசேனர் பதில்

இல்லை மன்னா ! மனதுக்கு எதுவும் தெரியாது ; ஒருவர் காணும் நல்ல அல்லது கெட்ட கனவுகளை ஏனையோரிடம் சொல்கிறோம்; அவர்கள் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள்  .

***

4

மிலிந்தனின் கேள்வி :

மரியாதைக்குரிய நாக சேனர் அவர்களே  !

உடலில் சில மச்சங்களும் வடுக்களும் தோன்றுகின்றன ; அவைகள் சாதகமானவை அல்லது பாதகமானவை, மகிழ்ச்சி தருபவை அல்லது துக்கம் விளைவிப்பவை, மானம் அல்லது அவமானத்தைக் கூறுபவை அல்லது புகழையோ இகழ்ச்சியையோ உண்டாக்குபவை என்றெல்லாம் சொல்கிறார்களே. அவைகளுக்கு அது தெரியுமா ?

நாகசேனர் பதில்

இல்லை மன்னா ! அவைகளை வருங்காலம் உரைக்கும் ஆரூடக்காரர் கர்களிடம் காட்டும்போது அவைகள் உடலில் தோன்றி ன்றியுள்ள இடத்தை வைத்துப் பொருள் கற்பிக்கிறார்கள் ; அது போலத்தான் கனவுகளும் ; மனதுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது; நல்லதோ கெட்டதோ நடக்கும் போதுதான் கண்ட  கனவுகளையும் அவன் பிறரிடம் சொல்கிறான் ; அப்போது அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்

***

5

மிலிந்தனின் கேள்வி :

கனவு காணும்போது ஒருவன் விழிப்பு நிலையில் உள்ளானா அல்லது தூக்கத்தில் இருக்கிறானா?

நாகசேனர் பதில்

கனவு காணும்போது விழிப்பும் இல்லை ; உறங்கவும் இல்லை ; தூக்கம் சொக்கும் நிலையில் சுய நினைவற்ற நிலையை அடைவதில்லை; தூங்கிய பின்னர்  சுய நினைவற்ற நிலையை அடைகிறான் . அப்போது மனம் வேலை செய்யாது; அதனால் அவனுக்கு துன்பமோ இன்பமோ இல்லை; எளிதில் பாதிக்கும் மனம் இல்லாத, உறுதியான மனம், உடையோருக்கு இது பொருந்தாது . இருள் சூழ்ந்தவிடத்தில் கண்ணாடி யிலும் நிழல் விழாது ; முகம் தெரியாது ; அது போலவே மனதுக்கும் பாதிப்பு இல்லை ; அப்போதும் உடலுக்குள் மனம் இருக்கத்தான் செய்கிறது.

உடல்தான் கண்ணாடி;

உறக்கம்தான் இருள்;

மனம்தான் ஒளி ;

இன்னும் ஒரு உதாரணம்

மூடுபனி இருக்கும் பொது சூரிய கிரணங்கள் நுழைவத்தில்லை ஆனால் அப்போதும் சூரியன் ஒளியை வீசிக்கொண்டுதான் இருக்கிறான் ;அது போல மனம் சுயநினைவற்ற நிலையில் காண்பதில்லை .

உடல்தான் சூரியன் ;

உறக்கம்தான் மூடுபனி ;

மனம்தான் சூரிய  ஒளி .

***

6

மிலிந்தனின் கேள்வி :

உறக்கத்துக்கு துவக்கம்இடை நிலை, முடிவு என்று ஏதேனும் இருக்கிறதா?

நாகசேனர் பதில்

பலவீனமும் களைப்பும் வேறு எதையும் நினைக்க முடியாத நிலையும்  தூக்கத்தின்  ஆரம்பம் ஆகும் .

பாதி உறக்கம் , பாதி விழிப்பு உள்ள நிலையானது குரங்குத் தூக்கம்ஆகும்  — தமிழில்   கோழித் தூக்கம்என்போம்  – இது இடை நிலை ஆகும்.அப்போது கனவுகள் வரும். அந்த நிலையில் புலன் அடக்கமுள்ள ஞானமுள்ள மனிதன் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண்கிறான் . விழிப்பு நிலையிலும் அரைத்தூக்கத்துக்குச் சென்று இதைச் செய்யலாம்.

எனது கருத்து

இங்கு மனம் என்று சொல்லும் இடத்தில் நாம் நமது உடல் என்று கொண்டால் எளிதில் பொருள் விளங்கும் ; அதாவது கனவுகள் உடலைப் பாதிப்பது இல்லை ; மிகவும் கஷ்டப்பட்டதாகக் கனவு கண்டுவிட்டு முழிப்பு வந்தவுடன் அப்பாடா ! நான் கண்டது கனவுதான் ; உண்மையில்லை என்று பெருமூச்சு விடுகிகிறோம்

இன்னுமொரு கருத்து:

இந்த அரைத்தூக்கம் என்பதை சிந்தனை என்று சொல்லலாம் ; நாம் பல நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில்  சில சரியான முடிவுகளை எடுக்கிறோம்

வேறு விளக்கமும் இருக்கலாம் ; ஏனெனில் முற்காலம் அல்லது வருங்காலம் உரைப்போரிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தியான நிலைக்குச் சென்று நிகழப்போவதைச் சொல்வதை நானே கண்டுள்ளேன் ; இதை சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் கையாளுகிறார்கள்

எடுத்துக்காட்டாக, காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம்   எம் எஸ் சுப்புலட்சுமி விடை பெற்றுக்கொண்டபோது இப்போது போக வேண்டாம் என்று சொன்னவுடன் அவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது; சுவாமிகள் சொன்னதை மறுக்கவும் முடியாது; மறுநாள் கச்சேரிக்கு ஒப்புக்கொண்டதை மாற்றவும் முடியாது; ஆனால் மறுநாள் பத்திரிக்கைகளில் வந்த செய்தி இந்தியாவையே உலுக்கியது ; அரியலூரில் ஆற்றுவெள்ளத்தில் ரயில் அடித்துச் செல்லப்பட்டு பல நூறு பேர் ஜல சமாதி அடைந்தனர் ; உடனே ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமாச்  செய்தார் ; அந்த ரயிலில்தான் எம் எஸ் சும் பயணம் செய்வதாக இருந்தது ; இது போல நூற்றுக் கணக்கான சம்பவங்கள் உண்டு ; ஞானி கள் தியானம் செய்யும்போது விழிப்பும் இல்லை; உறக்கமும் இல்லை ; வேறு எவர் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் விழுவதுமில்லை ; அவர்களுக்கு முன்னால்  நாம் செய்யும் சேட்டைகளை அவர்கள் பார்ப்பதும் இல்லை ; இதைத்தான் நாக சேனர் விளக்குகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது  

கனவு பற்றி பெரிய புராணம் முதலிய நூல்களில் கதைக்கு கதை வந்துகொண்டே  இருக்கிறது. இந்துக்கள் போல கனவுகளை ஆராய்ந்தோர் இல்லை; மேலும் பிராய்ட் , யங் ஆகியோரின் கொள்கைகள் முழுவதும் சரி என்றும் சொல்வதற்கில்லை. இந்துக்களின் கனவு பற்றிய கொள்கையை யாரோ பிற்காலத்தில் நாக சேனர் உரையாடலில் சேர்த்துவிட்டார்கள்!! 

–subaham—

Tags :கனவு , சுவையான உரையாடல்,மிலிந்த பன்ஹா  , நாகசேனர்

Leave a comment

Leave a comment