

Written by London Swaminathan
Post No. 15,750
Date uploaded in London –17 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதன் தொகுத்து வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்
***
போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவிக்கான கோயில்தான்: நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

போபால்: மே 16, 2026
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. இது சரஸ்வதி தேவி கோயில் என்று இந்துக்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் அது கமல் மவுலா மசூதி என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அங்கு கடந்த 2003-ல் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினரையும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட ஏஎஸ்ஐ அனுமதி அளித்தது.இதுதொடர்பான வழக்கில் ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா, அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வரலாற்று இலக்கியங்களும் ஆவணங்களும், சர்ச்சைக்குரிய பகுதியின் இயல்பு – பார்மர் வம்சத்தை சேர்ந்த மன்னர் போஜருடன் தொடர்புடைய ஒரு சமஸ்கிருத கற்றல் மையமான போஜசாலையாகவே இருந்ததை நிலைநாட்டுகின்றன.
மேலும் போஜர் காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இலக்கிய மற்றும் கட்டிடக்கலை குறிப்புகள், அங்கு சரஸ்வதி தேவி கோயில் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அது சரஸ்வதி கோயில்தான். லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலையை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மசூதி கட்டுவதற்கு வேறு நிலம் ஒதுக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், ‘‘ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. இந்து தரப்பினருக்கு வழிபடும் உரிமையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனிமேல், அங்கு இந்து வழிபாடு மட்டுமே நடைபெறும்’’ என்றார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தார் மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்தி அல்லது தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
***
பெங்களூரில் வாழும் கலை ஆஸ்ரம விழா
ரவிசங்கர் 70ஆவது பிறந்த நாள் விழா

பெங்களூருவில் உள்ள சர்வதேச ‘வாழும் கலை‘ (Art of Living) மையத்தின் 45ஆவது ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70 ஆவது பிறந்த நாள் விழா மே 2026-ல் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தியாவை ஆன்மிக வல்லரசாக மாற்றும் பாதைக்கு குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழிகாட்டுகிறார் என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புகழாரம் சூட்டினார் .
. 182 நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த உலக அமைதிக்கான கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
பெங்களூரு: சர்வதேச வாழும் கலை மையத்தில் நடந்த, தியான நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்..
பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள, சர்வதேச வாழும் கலை மையத்தில் நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருகிறது

உலகெங்கிலும் வசிக்கும் ரவிசங்கர் குருஜியின் பக்தர்கள், சர்வதேச வாழும் கலை மையத்திற்கு படையெடுத்து வருகின்றனர். ‘உலக அமைதிக்காக குருதேவுடன் இணைந்து உலகம் தியானிக்கிறது’ என்ற பெயரில், புதிதாக கட்டுப்பட்டு உள்ள தியான மண்டபத்தில் நேற்று தியான நிகழ்ச்சி நடந்தது. ஆன்லைன் மூலமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இணைந்தனர்.
பக்தர்கள் திரண்டதால், வாழும் கலை மையத்தின் சூழல் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மகிழ்ச்சி, இசை, பக்தி, ஆழ்ந்த ஒற்றுமை உணர்வால் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா, இண்டோ ஆங்கிலேய திருச்சபை செபி மறைமாவட்ட பேராயர் டாக்டர் மார்வின் மேத்யூ, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, இழப்பீடுகளுக்கான ஜனாதிபதியின் சிறப்பு துாதர்கள் எக்வோ ஸ்பியோ, அரமன்சா என்டெஷி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்நிகழ்ச்சியில் வாழும் கலை மையத்தின் இலவச பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் வழங்கிய கலைநிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆலமரம், அரசமரம், வேப்பமரம், மாமரம், அத்திமரத்திற்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் புனித நீர் ஊற்றினார்.
***
உதயநிதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சட்டமன்றத்தில் சனாதானத்தை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து மே 17 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது .தமிழ் நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது . ஏற்கனவே இப்படி பேசியதால் தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர் . இப்போது அவர் பேசுவதால் கட்சியே அழிந்து போகும் என்று ஆர்ப்பாட்டத்தினர் கூறினார்கள்.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 4 இடங்களில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் முன்னர் அறிவித்து இருந்தார். அதன்படி நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பதிவில், சட்டமன்றத்தில் தனது முதல் உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டு இருந்தார்.
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தபோது, சனாதானத்தை ஒழிப்போம் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பது கண்டிக்க தக்கது. ஏற்கனவே ஜாமீனில் இருக்கும் அவர் இதுபோன்ற கருத்துக்களால் இந்துக்களின் வாக்குகளை இழந்து வருகிறார் என்றார்.
***


THF Dr Subhasini with the Copper Plates
ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து விஜயத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் (லீடன் செப்பேடுகள்) அந்நாட்டு அரசால் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 14 ஆண்டுகால இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அரிய பொக்கிஷம் தாய்நாடு திரும்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து விஜயத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் (லீடன் செப்பேடுகள்) அந்நாட்டு அரசால் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 14 ஆண்டுகால இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அரிய பொக்கிஷம் தாய்நாடு திரும்பியுள்ளது
***
.ஆனைமங்கலம் செப்பேடுகள்: சிறப்பம்சங்கள்
காலம்: 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தைச் சார்ந்தவை. முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை.
எடை மற்றும் அமைப்பு: சுமார் 30 கிலோ எடையுள்ள, 21 செப்புத் தகடுகளைக் கொண்ட தொகுப்பாகும்.மொழி: தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களின் அரச முத்திரையான அமர்ந்த நிலையில் உள்ள புலி மற்றும் பிற சின்னங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஹாலந்து நாட்டின் லெய்டன் நகரிலுள்ள அருங்காட்சியத்தில் இரண்டு சோழர்காலச் செப்பேடுகள் உள்ளன, 21 இதழ்களை கொண்ட செப்பேடு பெரிய லெய்டன் செப்பேடு என அழைக்கப்படுகிறது
(நாகை பெளத்த விகாரம் கட்ட ஆனைமங்கலம் என்னும் ஊரில் உள்ள நிலங்களை தானம் செய்ய இராஜராஜர் பிறப்பித்த ஆணை, இராஜேந்திரரின் காலத்தில் செப்பேட்டில் மாற்றிய விவரங்கள் இதில் உள்ளது)
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் (1700-களின் தொடக்கத்தில்) நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஃபுளோரென்டியஸ் கேம்பர் என்ற டச்சு மத போதகரால் இந்த செப்பேடுகள் நெதர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் இவை நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) பாதுகாக்கப்பட்டு வந்தன.இந்தத் தொன்மையான பொக்கிஷங்களை மீட்டெடுக்க 2023-ல் இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. யுனெஸ்கோ (UNESCO) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகள் தற்போது முழு வெற்றி பெற்றுள்ளன.
****
3 இதழ்கள் கொண்ட சிறிய செப்பேடு, சிறிய லெய்டன் செப்பேடு என அழைக்கப்படுகிறது, இது முதலாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தது, இதுவும் ஆனைமங்கலத்தில் உள்ள பெளத்த விகாரத்திற்கு நிலம் கொடுத்தது பற்றியதாகும், பெரிய லெய்டன் செப்பேட்டில் உள்ளது மாதிரியே இதிலும் முத்திரை உள்ளது, அதில் இராஜசேசரி வர்மன் ஶ்ரீ குலோத்துங்க சோழனின் ஆணை எனப் பொறிக்கப்பட்டுள்ளது,
கி.பி 1009 ஆம் ஆண்டு நாகையில் பெளத்த விகாரம் கட்டிக்கொள்ள நிலங்களை ஒதுக்கினார் மாமன்னர் இராஜராஜர், இதனை அவரது மகன் இராஜேந்திரர் செப்பு சாசனமாக மாற்றிக் கொடுத்தார்,
முதலாம் குலோத்துங்கனின் இருபதாவது ஆட்சியாண்டில் (1090) இந்த இடத்தில் சில பிரச்சனைகள் வந்துள்ளது, இந்த இடத்தை சிலர் ஆக்ரமித்துள்ளனர், இதனால் அந்த இடத்தில் வரிகள் (பள்ளிச்சந்தம்) வசூலிக்க பெளத்த துறவிகளால் இயலவில்லை, இந்த சூழ்நிலையை உணர்ந்த கடாரத்து அரசன் இதை தீர்த்து வைப்பதற்காக தமது இரு தூதர்களை குலோத்துங்க சோழனிடம் அனுப்பி, பெளத்த விகாரத்திற்கு வரி கட்டாமல் நிலங்களை ஆக்ரமித்தவர்களை வெளியேற்றவும், தங்கள் உரிமைக்கு ஒரு செப்பு சாசனத்தையும் கேட்டு உள்ளனர், இதற்கு குலோத்துங்க சோழன் அனுமதி கொடுத்துதான் இந்த சிறிய லெய்டன் செப்பேடு,
குலோத்துங்க சோழன் ஆயிரந்தளியான ஆகவமல்ல குல காலாபுரம் என்ற ஊரிலுள்ள அரண்மனையின் திருமஞ்சன சாலை மண்டபத்தில் பள்ளிப்பீடம் காலிங்கராயன் என்ற பெயருடைய நாற்காலியில் வீற்றிருந்த போது இந்தச் செப்பேட்டை வழங்க ஆணை பிறப்பித்துள்ளார், தூதுவராக வந்த இருவரது பெயர்கள் ராஜவித்தியாத்ர ஶ்ரீசமந்தா, அபிமானதுங்கா ஶ்ரீ சமந்தா என்பதாகும்,
குலோத்துங்க சோழனின் வாய்மொழி உத்தரவு, சோழ அதிகாரியான இராஜேந்திர சிங்க மூவேந்த வேளாணுக்கு தரப்படுகிறது, அவரும் ராஜ வல்லப பல்லவராயனும் உடனடியாக செயல்பட்டு பெளத்த விகாரத்திற்கு சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்படுகிறது, அதன்படி நிலத்தை தற்போது அனுபவித்து வரும் காணியாளர்கள் என்ற குத்தகைதாரர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும், வரிகளை பணமாகவோ, பொருளாகவோ வசூலித்து கொள்ள புத்த விகாரத்திற்கு அனுமதி தரப்படுகிறது, பெளத்த விகாரத்திற்கு ஒன்பது கிராமங்களில் நிலங்கள் ஒதுக்கப்பட்டதையும், பெளத்த விகாரத்தின் நான்கு எல்லைகளும் இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
—subham—
Tags- உலக இந்துமத செய்தி மடல், 17-5-2026