GREATES NAYAK KING TIRUMALAI NAYAK OF MADURAI WITH HIS WIVES.
THREE BEAUTIFUL WIVES OF TIRUMALAI NAYAKKAR., MADURAI
Written by London Swaminathan
Post No. 15,760
Date uploaded in London –19 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆவுடையார் கோவில், மதுரை , திருநெல்வேலி அருகிலுள்ள கிருஷ்ணாபுரம், ஸ்ரீ வைகுண்டம் முதலிய கோயில்களில் நாயக்கர் கால சிற்பிகள் குறத்தி, வேடுவச்சி ஆகியோரின் சிலைகளை வடித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர் தற்காலத்தில் அவைகளைக் கம்பிக் கிராதிகள் மறைப்பதாலும், இருண்ட பகுதியில் அவை இருப்பதாலும் நம்மால் அவைகளை முழு அளவுக்கு ரசிக்க முடிவதில்லை. அந்தக் குறைகளை போக்கும் வகையில் புகழ்பெற்ற ஓவியர் சில்பி அவர்கள் அவைகளை அருமையான வரைபடங்களாக வரைந்து நமக்குக் காண்பிக்கிறார்; இவைகளின் நேர்முக வருணனையையும் அவர் தென்னாட்டுச் செல்வங்கள் நூலில் கொடுத்துள்ளார் .
மதுரைக் கோவில் சிலையில் ஒரு வேடன் குரங்குடன் காட்சி தருகிறான்.
கிருஷ்ணாபுரம் கோவிலில் ஒரு வேடர் தலைவன் ராஜ குமாரியைத் தூக்கிச் செல்லும் காட்சியும் ஒரு வேடுவச்சி ராஜ குமாரனைத் தூக்கிச் செல்லும் காட்சியும் சிற்பங்களாக உள்ளன இதை ஸ்ரீவைகுண்டக் கோயிலிலும் காண்கிறோம்.
கடத்தப்பட்ட ராஜகுமாரி கூச்சல் போட்டவுடன் அவளை மீட்க குதிரை வீரர்கள் சிட்டாகப் பறந்து வருகிறார்கள் ;அவர்களுடைய ஆக்ரோஷத்தையும் குதிரைகளின் வேகத்தையும் கல்லிலே வடித்த சிற்பி தெய்வீக சிற்பிதான் .
பகடி வீரன் சிலையும் அஷ்ட கோணத்தில் வடிக்கப்பட்டுள்ளது !
நாயக்கர் காலத்தில் இவைகளையெல்லாம் மீனாட்சி கோவிலில் இடம்பெறச் செய்த மாபெரும் நாயக்க மன்னன் திருமலை நாயக்கர் அவருடைய மூன்று மனைவியருடன் பணிவுடன் தோன்றும் காட்சியும் மீனாட்சி கோவிலில் உள்ளது; திருமலை நாயக்கரின் சிலைகள் வெவ்வேறு கோயில்களில் வெவ்வேறு கோணத்தில் இருப்பதாக புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி கருதுகிறார்.
படங்களைக் கூர்ந்து கவனியுங்கள் ; முடிந்தால் என்லார்ஜ் செய்து பாருங்கள்.
HUNTER FROM MADURAI TEMPLE
HUNTER WITH A PARROT IN HAND, MONKEY IN ROPE, MADURAI TEMPLE
KIDNAPPED PRINCESS IS BEING RESCUED
PRETENDING LIKE A HERO
FALSE HERO, COMEDIANPRETENDING LIKE A HERO
HUNTER KIDNAPPING A PRINCESS, SRI VAIKUNDAM
HUNTRESS KIDNAPPING A PRINCE
குறத்தி FORTUNE TELLER, NOMADIC TAMIL GYPSY WOMAN
ஆவுடையார் கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிற்பம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.
–subham—
Tags- கிருஷ்ணாபுரம் மீனாட்சி கோவில், குறத்தி சிற்பம், ஆவுடையார் கோவில், திருமலை நாயக்கர், கோவிலில் குறத்தி, வேடுவச்சி சிற்பம், ஸ்ரீ வைகுண்டம், ஓவியர் சில்பி