உணவை எப்படி சாப்பிட வேண்டும்? நூறு வார்த்தைகளில் பதில்! (Post.15,791)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,791

Date uploaded in London – 27 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Healthcare ஏப்ரல் 26 இதழில் வெளியான கட்டுரை!

உணவை எப்படி சாப்பிட வேண்டும்? நூறு வார்த்தைகளில் பதில்!

ச. நாகராஜன்

உணவை உண்பது பற்றி அறநூல்கள் கூறுபவை:-

உணவை ஒருவன் புனிதமாகக் கருத வேண்டும். அதை இகழந்து சாப்பிடக் கூடாது. உணவைப் பார்த்தவுடன் ஒருவன் சந்தோஷப்பட வேண்டும். இனிமையாக நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

உன்னதமான வளம் மிக்க வாழ்க்கையை ஒருவன் விரும்பினால் அவன் தனியாகச் சாப்பிடக் கூடாது. இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். 

ஒரு நாளின் பகல் நேரத்தில் எட்டாம் பகுதி வரும் போது சூரியனின் வெப்பம் தணிகிறது. இரவு நேரம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை உணர்ந்து அப்போது உணவருந்தக் கூடாது.

தான் அருந்திய எச்சில் உணவை ஒருவன் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதை வைத்திருந்து பின்னர் தானும் சாப்பிடக் கூடாது. அதிகமாக உணவை சாப்பிடக் கூடாது. உணவை மிச்சம் வைத்து விட்டும் ஒருவன்         போகக்கூடாது.

பூஜிக்கப்பட்ட உணவு நிச்சயம் வலிமையையும் சக்தியையும் தரும். பூஜிக்கப்படாத உணவைச் சாப்பிடுவது கெடுதியைத் தரும். வலிமையையும் சக்தியையும் தராது.

**

Healthcare ஏப்ரல் 26 இதழில் வெளியான கட்டுரை!

சரகர் தெரிவிக்கும் உண்மை வைத்தியரின் குணாதிசயங்கள் என்ன?

இதோ நூறே வார்த்தைகளில் பார்க்கலாம்!

ச. நாகராஜன்

ஆயுர்வேதத்தை உலகுக்கு அளித்த சரகர் தனது சரக சம்ஹிதாவில் யார் உயிரைக் காப்பாற்றும் வைத்தியர் என்று தெரிவிக்கிறார்.

உடலில் உள்ள இரண்டு நெற்றிப் பொட்டுகள், மர்மத்ரயம் எனப்படும் தலை, இதயம், நீர்ப்பை, ஆகிய மூன்று, தொண்டை, இரத்தம், விந்து, ஓஜஸ், குதம் ஆகிய பத்து இடங்களே உயிரின் ஆதார இடங்களாகும்.

ஒரு நல்ல வைத்தியர் இந்த இடங்களைப் பற்றி அறிவதோடு  புலன்கள், நுண்ணறிவு, வியாதிகள் வருவதற்கான மூல காரணங்கள், அவை தோன்றுவதற்கான அறிகுறி, அவற்றை சிகிச்சை மூலம் அகற்றும் வழி, ஆகியவை பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

 ஆயுர்வேத விஞ்ஞானத்தை முழுதுமாக அறிந்திருப்பதோடு அதை வரிசையாகச் சொல்லத் தெரிய வேண்டும். 

அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்த நூலறிவோடு கூட,. மருந்துகளைப் பற்றிய அறிவு, நினைவாற்றல்,  ஆகியவற்றைப் பெற்றிருப்பதோடு இதில் நல்ல அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

**

Leave a comment

Leave a comment