மேலும் 30 நாரத பக்தி சூத்திர பொன்மொழிகள் -2026 ஜூன்  மாத காலண்டர் (Post.15,809)

Written by London Swaminathan

Post No. 15,809

Date uploaded in London –31 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சென்ற மே மாதத்தில் 30 நாரத பக்தி சூத்திர பொன்மொழிகளைக்  கண்டோம்; இங்கு மேலும் 30 பொன்மொழிகளைக் காண்போம்:

2026 ஜூன் மாத பண்டிகைகள் :- 21-சர்வதேச யோகா தினம்

முகூர்த்த நாட்கள் -4, 7, 17, 18, 24

அமாவாசை -14; பெளர்ணமி -29; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-11,25.

***

Following Sanskrit version is taken  from Sanskritdocuments.com;thanks

न तेन राजा परितोषः क्षुच्छान्तिर्वा । ३२ – २.०८

तस्मात् सैव ग्राह्या मुमुक्षुभिः । ३३ – २.०९

          तृतीयोऽध्यायः

          भक्तिसाधनानि

तस्याः साधनानि गायन्त्याचार्याः । ३४ – ३.०१

तत्तु विषयत्यागात् सङ्गत्यागात् च । ३५ – ३.०२

अव्यावृत्तभजनात् । ३६ – ३.०३

लोकेऽपि भगवद्गुणश्रवणकीर्तनात् । ३७ – ३.०४

मुख्यतस्तु महत्कृपयैव भगवत्कृपालेशाद् वा । ३८ – ३.०५

महत्सङ्गस्तु दुर्लभोऽगम्योऽमोघश्च । ३९ – ३.०६

लभ्यतेऽपि तत्कृपयैव । ४० – ३.०७

तस्मिंस्तज्जने भेदाभावात् । ४१ – ३.०८

तदेव साध्यतां तदेव साध्यताम् । ४२ – ३.०९

दुस्सङ्गः सर्वथैव त्याज्यः । ४३ – ३.१०

कामक्रोधमोहस्मृतिभ्रंशबुद्धिनाशकारणत्वात् । ४४ – ३.११

तरङ्गायिता अपीमे सङ्गात् समुद्रायन्ते । ४५ – ३.१२

कस्तरति कस्तरति मायाम् यः सङ्गं त्यजति यो महानुभावं सेवते निर्ममो भवति । ४६ – ३.१३

यो विविक्तस्थानं सेवते यो लोकबन्धमुन्मूलयति निस्त्रैगुण्यो भवति योगक्षेमं त्यजति । ४७ – ३.१४

यः कर्मफलं त्यजति कर्माणि संन्यस्स्यति ततो निर्द्वन्द्वो भवति । ४८ – ३.१५

यो वेदानपि संन्यस्यति केवलमविच्छिन्नानुरागं लभते । ४९ – ३.१६

स तरति स तरति स लोकांस्तारयति । ५० – ३.१७

          चतुर्थोऽध्यायः

          प्रेमनिर्वचनम्

अनिर्वचनीयं प्रेमस्वरूपम् । ५१ – ४.०१

मूकास्वादनवत् । ५२ – ४.०२

प्रकाशते क्वापि पात्रे । ५३ – ४.०३

गुणरहितं कामनारहितं प्रतिक्षणवर्धमानं अविच्छिन्नं सूक्ष्मतरं अनुभवरूपम् । ५४ – ४.०४

तत्प्राप्य तदेवावलोकति तदेव श‍ृणोति तदेव भाषयति तदेव चिन्तयति । ५५ – ४.०५

गौणी त्रिधा गुणभेदाद् आर्तादिभेदाद् वा । ५६ – ४.०६

उत्तरस्मादुत्तरस्मात् पूर्व पूर्वा श्रेयाय भवति । ५७ – ४.०७

अन्य मात् सौलभं भक्तौ । ५८ – ४.०८

प्रमाणान्तरस्यानपेक्षत्वात् स्वयं प्रमाणत्वात् । ५९ – ४.०९

शान्तिरूपात् परमानन्दरूपाच्च । ६० – ४.१०

लोकहानौ चिन्ता न कार्या निवेदितात्मलोकवेदत्वात् । ६१ – ४.११

न तत्सिद्धौ लोकव्यवहारो हेयः किन्तु फलत्यागः तत्साधनं च । ६२ – ४.१२

स्त्रीधननास्तिकचरित्रं न श्रवणीयम् । ६३ – ४.१३

अभिमानदम्भादिकं त्याज्यम् । ६४ – ४.१४

ஜூன் 1 திங்கட் கிழமை

ராஜகுமாரன் அரசனானதும், பசித்தவன் திருப்தியுற்றதும் வெறும் விஷய ஞானத்தினால் மட்டுமல்ல.

***

ஜூன் 2 செவ்வாய்க் கிழமை

எனவே, மோட்சம் அல்லது விடுதலையை விரும்புவோர், அதையே, மேலான பக்தி மார்க்கத்தையே கடைப்பிடிக்க வேண்டும்.  ஞானம் முடியுமிடத்தில்தான் பக்தியும் முடிகின்றது.

***

ஜூன் 3 புதன் கிழமை

பக்திக்கான சாதனங்களை ஆச்சாரியர்கள் பாடியிருப்பதை இனிவரும் சில சூத்திரங்கள் விளக்குகின்றது.

***

ஜூன் 4 வியாழக் கிழமை

எல்லா சிற்றின்பங்களையும் ( இந்திரிய சுகங்களையும் ) இந்திரிய விஷயங்களில் பற்றுதலையும் விட்டு விடுவதால் பராபக்தி கிடைக்கிறது.

***

ஜூன் 5 வெள்ளிக் கிழமை

இடைவிடாத வழிபாட்டால், பூசனையால் பக்திப் பயிற்சியில் வெற்றி கிடைக்கும்.

***

ஜூன் 6 சனிக் கிழமை

உலகில் சாதாரண விவகாரங்களில், செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது கூட, பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய பேச்சுக்களை சிரவணம் செய்வதாலும் ( கேட்பதாலும் ) கீர்த்தனை செய்வதாலும் பக்தி வளரும்.

***

ஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை

ஆனால் பக்தியென்பது முக்கியமாகச் சான்றோர்களின், மகான்களின் கிருபையாலும், ஓரளவு இறையருளாலும்தான் கிடைக்கும்.

***

ஜூன் 8 திங்கட் கிழமை

ஆனால், மகாத்மாக்களுடைய உறவு கிடைப்பது கடினம், அணுக இயலாதது, அதன் சக்தி அல்லது விளைவோ தோல்வியற்ற நிச்சயமானது

***                    

ஜூன் 9 செவ்வாய்க் கிழமை

மகான்களுடைய சத்சங்கம் அல்லது உறவு இறைவனது அருளால்தான் கிட்டும்.-40

***

ஜூன் 10 புதன் கிழமை

ஏனெனில் இறைவனுக்கும், அவனது பக்தனுக்குமிடையே வேற்றுமை கிடையாது.

***

ஜூன் 11 வியாழக் கிழமை

அது மட்டுமே அடையப்படட்டும், அது மட்டுமே அடையபடட்டும்.

***

ஜூன் 12 வெள்ளிக் கிழமை

எங்கும், எப்போதும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு தீயோர் நட்பை விலக்கப்பட வேண்டும்.

***

ஜூன் 13 சனிக் கிழமை

ஏனெனில் காமம், கோபம், மோகம், நினைவு தவறுதல், நல்லறிவை இழத்தல் போன்றவை அனைத்து இழப்புக்கும் காரணமாகும்.

***

ஜூன் 14 ஞாயிற்றுக் கிழமை

இவைகள் ஆரம்பத்தில் சிற்றலைகளைப் போல எழுந்தாலும், தீயவர் நட்பால் பெருங்கடலாக மாறிவிடுகின்றது|| 45 ||

***

ஜூன் 15 திங்கட் கிழமை

மாயையைக் கடப்பது யார்? மாயையைக் கடப்பது யார்? இந்திரிய விஷயங்களில் உள்ள தொடர்பைத் துறப்பவன், ஒரு மகானுக்குத் தொண்டாற்றுபவன், இது எனதென்ற எண்ணமில்லாதவன் எவனோ அவனே மாயையை கடக்கின்றான்.

உண்மையை மறைத்து, தோன்றி மறையும் கணநேரப் புலன் இன்பங்களில் உன்னை திருப்பிவிடுவது இறைவனின் மாயை.  மாயை மிக நுட்பமானது, அதைக் கண்டறிவது மிகக்கடினம். எனவே சாதகன் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மகாத்மாவின் உறவால், ஒருவன் பற்றின்மையை எய்துகிறான்.  அவனுக்கு வைராக்கியம் பிறக்கிறது.  பற்றின்மையால் மோகத்தை வெல்லுகிறான்.  மோகத்தை வென்ற நிலையில் மனம் அமைதியுற்று ஒருமுனைப்பட்டு, தன் ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதன் பிறகு ஒருவன் முக்தி அல்லது விடுதலை பெறுகிறான். || 46 ||

***

ஜூன் 16 செவ்வாய்க் கிழமை

எவன் ஏகாந்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு இருக்கின்றானோ; எவன் உலக பாசங்களை வேரோடு களைகின்றானோ, எவன் முக்குணங்களையும் தாண்டிச் செல்லுகின்றானோ, எவன் சேர்ப்பதையும், காப்பதையும் விட்டு விடுகின்றானோ அவனே மாயையை கடக்கின்றான்.

***

ஜூன் 17 புதன் கிழமை

கர்ம பலனைத் துறப்பவன், கர்மங்களையே துறப்பவன் எவனோ, அவன் இருமைகளைக் கடந்து செல்கிறான்.

***

ஜூன் 18 வியாழக் கிழமை

எவன் வேதங்களையும், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளையும் கூட விட்டு விட்டு, இறைவன் பால் தூய, கலப்பற்ற, இடையறாத அன்பை எய்துகிறானோ

*** || 50  ||

ஜூன் 19 வெள்ளிக் கிழமை

அவனே மாயையைக் கடக்கின்றன், பிறவிப்பெருங்கடலையும், பிற தளைகளையும்) அவனே கடக்கிறான். மனித சமூகத்திர்கும் கடக்க உதவுகிறான்.

***

ஜூன் 20 சனிக் கிழமை

இறைவன் பால் கொள்ளும் பிரேமை அல்லது அன்பின் இயல்பு சொற் கடந்தது..

அநிர்வசனீயம் – சொற்களை கடந்த்து, வார்த்தைகளால் துல்லியமாக வர்ணிக்க முடியாதது.

***

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை

ஊமை சுவைத்த அனுபவம் போல.

***

ஜூன் 22 திங்கட் கிழமை

பக்தி எங்கோ ஓரிடத்தில், எப்போதாவது ஒரு தகுந்த பாத்திரத்தில் ஒளிவீசுகிறது.

***

ஜூன் 23 செவ்வாய்க் கிழமை

பக்தி குணங்களற்றது, விருப்பங்களற்றது, கணத்திற்குக் கணம் விரிவடைவது, இடையறாது தொடர்வது, மிக நுட்பமானது,உன் அநுபவ இயல்பானது.

குணரஹிதம் – குணங்களற்றது,

காமனாரஹிதம் – விருப்பங்களற்றது

ப்ரதிக்‌ஷண – ஒவ்வொரு கணமும்,

வர்திமானம் – வளருவது,

அவிச்சின்னம் – இடையறாத ஒழுக்கு,

ஸூக்‌ஷமாதரம் – மிக மிக நுட்பமானது,

அநுபவரூபம் – உள்ளுணர்வு இயல்புடையது.

****|| 55 ||

ஜூன் 24 புதன் கிழமை

அதை ( அந்த அன்பின் அனுபவத்தை ) பெற்றபின் பக்தன் தன் அன்புக்குரிய இறைவனை மட்டுமே காண்கிறான், அவனைப் பற்றி மட்டுமே கேட்கிறான், அவனைப் பற்றி மட்டுமே பேசுகிறான், அவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான்.

***

ஜூன் 25 வியாழக் கிழமை

இரண்டாம் நிலை பக்தி சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களுக்கேற்ப மூவகைப்படும் அல்லது மூவகை பக்தர்களுடைய தேவைகளையொட்டி (துன்பமுற்றவர்கள், ஞானத்தை விரும்புபவர்கள், பயனை வேண்டுபவர்கள்) அமையும்.

***

ஜூன் 26 வெள்ளிக் கிழமை

ஒவ்வொரு முந்தைய பக்தி நிலையும் அதனையடுத்து வரும் நிலையை விட, மேலான நன்மையை அடைய அதிகம் பயனுள்ளது.

முதல் நிலை சத்வ பக்தி, இரண்டாவது ரஜோ பக்தி, மூன்றாவது தமோ பக்தி.

தமஸ் என்பது இருள், செயலற்ற சோம்பல், ரஜஸ் அதிகாரம், அந்தஸ்து, இன்பத்தை விரும்பும் நிலை. சத்வமோ ஒருமை, இணக்கம், அமைதி, ஒளி. இவற்றுள் தமஸை விட ரஜஸ் சிறந்தது. ரஜஸை விட சத்வம் சிறந்தது.  சத்வமே மிக மேலான நிலை. தமஸோ அனைத்தினும் கடைப்பட்ட நிலை தன் மனம் எந்த நிலையிலிருக்கிறது என்பதை சாதகன் விழிப்போடு கவனித்து, சத்சங்கம், ஜபம், கீர்த்தனை, தியானம் வழிபாடு முதலியவற்றால் சத்வத்தை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும்.

***

ஜூன் 27 சனிக் கிழமை

உய்வுக்கு பிற வழிகளைக் காட்டிலும் பக்தி கடைப்பிடிக்க எளிதானது.

***

ஜூன் 28 ஞாயிற்றுக் கிழமை

ஏனெனில் அதற்கு பக்தி வேறொரு சான்று தேவையில்லை, பக்தியே பக்திக்குச் சான்று.  பக்தி நிலையில் இறைனோடு நேர்த் தொடர்பு பக்தனுக்கு கிடைத்து விடுகிறது.

***  || 60 ||

ஜூன் 29 திங்கட் கிழமை

அமைதி வடிவாகவும் பேரானந்த வடிவாகவும் அது பக்தி இருப்பதால், பக்தி வழி எளிது.

பக்தியைக் கடைப்பிடித்தால் அது உடனேயே மன அமைதியையும், பேரின்பத்தையும் அளிக்கும்.  வேறு சான்றுக்கு என்ன தேவை? பக்தியே மன அமைதியாகவும், பேரின்பமாகவும் அனுபவிக்கப்படுகிறது.

***

ஜூன் 30 செவ்வாய்க் கிழமை

உலகத் துன்பங்களைப்பற்றி பக்தன் கவலை கொள்வதில்லை; ஏனெனில் அவன் தன்னையும், உலகையும், வேதங்களையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டான்

***

BONUS QUOTES

பக்தி எய்துவதற்காக ஒருவன் உலக விவகாரங்களை தன் கடமைகளை விட்டுவிடக் கூடாது.  அவற்றை நிச்சயமாகச் செய்ய வேண்டும். அவற்றின் பலனை மட்டுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விடவேண்டும்.

***

பெண்கள், செல்வம், நாஸ்திகர், பகைவன் ஆகியோர் வரலாறு, வர்ணனைகளைக் கேட்கக் கூடாது.

***

அகந்தை, கபடம் அல்லது போலித்தனம், மற்றைய தீய பண்புகளைத் தொலைக்க வேண்டும்.

–SUBHAM—

TAGS- மேலும் 30, நாரத பக்தி சூத்திர, பொன்மொழிகள் ,2026 ஜூன்  மாத, காலண்டர்

Leave a comment

Leave a comment