
Written by London Swaminathan
Post No. 15,819
Date uploaded in London –2 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்நாடக மாநிலத்தில் கொப்பல் என்னும் இடத்தில் இசை பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ; 740 ஆண்டுகளுக்கு முன்னர் இசைக்க கலைஞர்களுக்கு கிடைத்த ஆதரவையும் கெளரவத்தையும் இந்தக் கல்வெட்டு புலப்படுத்துகிறது ;இது பற்றி ஆர்கனைஸர் வார இதழ் ஆங்கிலத்தில் வெளியிட்ட தகவல் இதோ:
கொப்பல் மாவட்டத்தில் தலக்கல் என்ற இடத்தில் இந்தக் கல்வெட்டு கிடைத்தது; கிராமத்திலுள்ள உடச்சலம்மா கோவிலில் உள்ள இந்தக் கல்வெட்டு பற்றி Dr. Sharanabasappa Kolkar கல்வெட்டு அறிஞர் டாக்டர் சரணபசப்பா விளக்கினார் . சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் கலாசார, சமூக நிலைமை எப்படி இருந்தது என்பதை இந்தக் கல்வெட்டு காட்டுகிறது; பருவ நிலைக் கோளாறினாலும் கவனிப்பின்மையாலும் கல்வெட்டின் சில பகுதிகள் அழிந்து போயின. ஆயினும் முக்கியத் தகவல்களை அப் படியே உள்ளன; சங்கீதக் கலைஞர்களுக்கு செய்யப்பட பண உதவி மற்றும் நில தானம் ஆகியவற்றைக் கல்வெட்டு சொல்கிறது.
கல்வெட்டில் இருபது வரிகள் இருக்கின்றன ; அதற்கு மேல் திரிசூலம் தாங்கிய கோவில், குதிரை , வாள், சாமரம் ஆகிய சுப சின்னங்கள் காணப்படுகின்றன . இவை மத்திய காலத்தில் பிரபலமாக இருந்த மைலாரலிங்கேஸ்வர சம்பிரதாயத்தின் சின்னங்கள் ஆகும் . அக்கழக் கல்வெட்டுகளை போலவே கணபதி சரஸ்வதி , சிவபெருமான் அகியோரைப் போற்றி கல்வெட்டு துவங்குகிறது சக வருடம் 1201ல் ஏற்பட்ட கிரகணத்தைக் குறிப்பிடுவதால், 1279 CE என்று இதன் காலத்தைத் துல்லியமாகச் சொல்ல முடிந்தது.
அங்கு வேத விற்பன்னர்கள் வாழ்ந்த அக்ரஹாரம் பற்றிய செய்தியும் கிடைக்கிறது உதவி பெற்ற கலைஞர்களில் மஹேஸ்வரி என்ற பெண்ணுக்கு 12 பணம் கொடுக்க உத்த்ராவாகியிருக்கிறது ; அவருடைய சங்கீதப் புலமையைப் பாராட்டி இது அளிக்கப்பட்டது ஜோகன என்பவரின் பாடல் திறமையைப் பாராட்டி அவருக்கும் 12 பணம் தரப்படுகிறது கேமண்ணா என்பவருக்கு இரண்டு பணமும் 12 ஹொன்னு(பொன்னு)ம் தரப்படுகிறது
(கன்னடத்தில் ப என்பதை ஹ என்று மாற்றி உச்சரிப்பார்கள் பத்து- ஹத்து, பள்ளி- ஹல்லி , பொன்- ஹொன்னு ).
அக்காலத்தில் எல்லாக் கல்வெட்டுகளிலும் நிலத்தனம் பற்றி வருகையில் அதன் நான்கு எல்லைகளைக் குறிப்பார்கள் இதன் மூலம் அந்த ஊரின், வட்டாரத்தின் புவியியல் செய்திகளும் கிடைக்கின்றன .
இப்போது இந்தக் கல்வெட்டினை கோவில் சுவருக்கு அருகில் ஒரு மேடை எழுப்பி அதில் பாதுகாப்பாக நிறுவியுள்ளனர் .
இந்தக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பும் பஹூகாப்பிலும் ஈடுபட்ட பெரியோர்களின் பெயரையும் ஆர்கனைஸர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
–Subham—
Tags- கர்நாடகத்தில் ,இசை , கல்வெட்டு ,கண்டுபிடிப்பு