Written by London Swaminathan
Post No. 15,825
Date uploaded in London –3 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவண்பரிசாரம் / திருப்பதிசாரம்
Part 43
திருவண்பரிசாரம் (அல்லது திருப்பதிசாரம்) என்பது 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
மூலவர் திருவாழ்மார்பன் ; திருக்குறளப்பன்
நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். லட்சுமி தேவி எப்போதும் இவரின் திருமார்பில் நித்திய வாசம் செய்வதால் இந்தத் திருநாமம் ஏற்பட்டது.
தாயார் கமலவல்லி நாச்சியார்
.தீர்த்தம் & விமானம்: லட்சுமி தீர்த்தம்
இந்திர கல்யாண விமானம்
ப்ரத்யக்ஷம் – விந்தை, காரி, உடையநங்கை, கருடன்.
குலசேகர ஆழ்வாரின் வெண்குதிரை காணாமல் போனபோது, அதனை பெருமாளின் சோம லட்சுமி தீர்த்தக் கரையில் கண்டெடுத்தார். எனவே இத்தலம் திருவெண்பரிசாரம் என்று அழைக்கப்படுகிறது; ”பரி’ என்றால் குதிரை
நம்மாழ்வார் தொடர்பு: நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இத்தலத்திற்கு அருகில் உள்ள திருக்குருகூர் (ஆழ்வார்திருநகரி) நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகவும், திருவண்பரிசாரம் அவரது தாயார் பிறந்த ஊராகவும் போற்றப்படுகிறது
ஸ்தல வரலாறு :
சினம் தணிந்த நரசிம்மர் பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, ‘திரு’வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார். எனவே, இத் தலம் ”திருப்பதிசாரம்” ஆனது வரலாறு
” வருவார் செல்வார் பரிவாரதிருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்
செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒரு பாடுழல்வான் ஓரடியானுமுள னென்றே
என்று நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் ;
108 திவ்ய தேசங்களில் திருவண்பரிசாரம் ஒன்றாகும்
இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது.
ஆனந்த மண்டபத்தை அடுத்து மூலவர் சன்னதி. மூலவரான ”திருவாழ்மார்பன்” நான்கு கைகளுடனும், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம்‘ என்ற கூட்டினால் உருவாக்கப்பட்டதாம் (கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்று சொல் வார்களாம்) அதனால் மூலவருக்கு அபிஷேகமோ, அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாது புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறுகிறது
இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். இவரின் மகள்,உடையநங்கைக்கும், திருக்குறுங்குடியை சேர்ந்த ”காரி” என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது. இல்லறம் இனிதே நடந்தது. ஆனால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில் 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார்..
நம்மாழ்வார் பிறந்த கதை
திருப்பதிசாரத்தில் உடையநங்கை என்ற பெண் விஷ்ணு பக்தையாகி குருகூரில் காரி என்ற விஷ்ணு பகத்ருக்கு பத்தினியானார் ; அவர்கள் இந்த ஸ்தலத்தில் 41 நாள் விரதமிருந்து ஆவணி சுக்ல ஏகாதசியான வாமநஜயந்தி தினம் ஊஞ்சலுத்ஸவம் நடத்திய பின்னர் , உடையநங்கை கர்ப்பவதியானார்; கலி- 43 –வது நாள், வைகாச விசாகத்தன்று, நம்மாழ்வார் அவதரித்தார்;குருகூரில் ஆதிநாதன் ஸந்நிதியில்விட, அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது.
வடநாட்டில் தோன்றிய ஒரு தெய்வீக ஜோதியைப் பின்தொடர்ந்து வந்த மதுரகவி ஆழ்வார் தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய் மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம்.கூறும்
ஹநுமார் பிரார்த்தனைக்கிணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாக ஸ்தலவரலாறு சொல்கிறது குலசேகர மஹாராஜன் மண்டப கோபுர பிரகாரங்களை நிர்மாணம் செய்து வாகனங்களையும் செய்து ப்ருஹ்மோத்ஸவம் செய்து வைத்தாக ஸ்தல வரலாறு. சொல்கிறது.
அமைவிடம் :
இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 3 மைல் தூரத்தில் உள்ளது. திருவாட்டாற்றிலிருந்து தொடுவெட்டி வந்து, பஸ்மாறி, நாகர்கோயில் திருநெல்வேலி பஸ் மார்க்கத்தில் நாகர்கோவில் வந்து, அங்கிருந்து 3 மைல் தூரம் வடக்கே சென்று இவ்வூரை அடையவேண்டும்.
-subham—
Tags- நம்மாழ்வார் பிறந்த கதை, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-43; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவண்பரிசாரம், திருப்பதிசாரம்