Written by London Swaminathan
Post No. 15,832
Date uploaded in London –5 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திராவிட அரைவேக்காடுகளுக்கு அவ்வப்போது ஒரு ஐயப்பாடு எழும் ; அந்தணர் என்பவர் பிராமணாளா அல்லது சன்யாசியா என்று. உண்மையைச் சொல்லப்போனால் இருவரும் ஒருவரே ; ஏனெனில் இருவரும் அறநெறிப்படி வாழ்பவர்கள்; மாமிசம், கள் சாப்பிடாதவர்கள் ; பொருளைச் சேர்த்து வைக்காதவர்கள் ; ஊர் ஊராகப் போய் பிழைப்பவர்கள் ; யாசகம் மூலம் உணவு பெறுவோர்; ஆயினும் துறவிகளுக்கு இல்லற வாழ்வு கிடையாது; அது ஒரு பெரிய வேறுபாடு; இதனால் அந்தணர் என்ற சொல்லை எல்லோரும் துறவிகளுக்கும் பிராமணர்களுக்கும் பயன்படுத்தினர்.
எச்சரிக்கை ; இதெல்லாம் அந்தக் கால பிராமணர் பற்றிய வருணனை !
கபிலர் என்ற புலவர் இன்னா நாற்பது என்று இன்னல் தரும் 40 விஷயங்களைப் பாடினார்; உடனே அவருக்கு எதிரொலியாக இன்பம் தரும் 40 விஷயங்களைப் பூதன் சேந்தனார் பாடினார். இந்த இரண்டு நூல்களும் சங்க காலத்துக்குப் பின்னர் சுமார் நான்கு அல்லது ஐந்தாவது நூற்றாண்டுகளில் தோன்றியவை; பூதன் சேந்தன் என்ற பெயரே சங்க காலப் பெயர் .
அவர் அந்தணர் என்ற சொல்லை இரண்டு இடங்களில் ஐயம் திரிபற பிராமணர்களுக்குப் பயன்படுத்துகிறார்
1
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.– இனியவை நாற்பது [23]
விளக்கம்:
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
(சன்யாசிகளுக்கு அந்தக் காலத்தில் யாரும் பசுவும் தங்கமும் தானமாகத் தருவது இல்லை)
2
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. . . . .[07]
விளக்கம்:
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்று,பாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது
***
சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த அற நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு என்று நம் முன்னோர்கள் பிரித்துவைத்தனர் அதில் ஒன்றுதான் ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் என்பதும் ; கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் எழுதினார்கள்.
ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது சிலப்பதிகார நிகழ்ச்சிகள் நடந்தது சங்க காலத்தில்தான்; அதே போல தொல்காப்பியம் சொல்லும் விதிகளும் சங்க கால விதிகள்தான்; அதை யாரோ ஒருவர் தொகுத்த காலம் பிற்காலம் என்பதை எளிய நடையும் ஸம்ஸ்ருதச் சொற்களும் பல புதிய வழக்கங்களும் காட்டிவிடும்; எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் நாரதர் வருகிறார்; வீணை வருகிறது. சங்க கலத்தல் இதைக் காணமுடியாது; லிங்கம், கணபதி சிவன் என்ற சொற்களைக் காண முடியாது இவை பிற்காலத்தில் வந்தவை ; இளங்கோ கூட சிவகதி நாயகன் என்பவற்றை சமணர்க்குதான் பயன்படுத்துகிறார் சிவ பெருமானுக்கு அல்ல.
இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்; ஒரு பொருளை ஒருவர் சொல்லாததால் அது அக்காலத்தில் இல்லவே இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்; அதை வழக்கில் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
பிராமணர்களுக்கு அளிக்கப்படும் 16 தானங்களில் பசுவும் தங்கமும் முக்கியம் ; இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூல வர்மன் கல்வெட்டும் பூரண வர்மன் கல்வெட்டும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளனர் அவரின் காலம் 1600 ஆண்டுகளுக்கு முன்! போர்னியோ தீவில் இருந்த கல்வெட்டுகள் இப்போது மியூசியங்ககளில் உள்ளன.
***

Pictures சதீசன் மோடி துலாபாரம் கொடுத்தது

செங்குட்டுவனிடம் 70 கிலோ தங்கம் வாங்கிய பிராமணன்
சிலப்பதிகாரத்தில் பிராமணன் மாடல மறையோன் என்பவன்தான் முக்கிய கதாபாத்திரம் கண்ணகி கோவலன் செங்குட்டுவன் வரலாறுகளை இணைக்கும் சங்கிலி இவன் ; அவனுடைய பங்கினை அகற்றிவிட்டால் சிலப்பதிகாரம் துண்டு துண்டாகத் தோன்றும்; செங்குட்டுவனை ஊக்குவித்து போர் செய்ய வைத்தவன் இறுதியில் யாக யக்ஞங்கள் செய் என்று அறிவுறுத்துகிறான்; இதற்காக அவனுக்கு செங்குட்டுவன் எடைக்கு எடை துலாபாரத்தில் தங்கம் கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் செப்பும்!
அன்மையில் புதிதாக கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற கங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சதீசன் எடைக்கு எடை வெண்ணெய் கொடுத்தார் அவருடைய எடை 71 கிலோ ; செங்குட்டுவனுக்கு 70 அல்லது 80 கிலோ இருந்திருப்பான் ஆகையால் அந்த பிராமணனுக்கு – மாடல மறையோனுக்கு அடித்தது லக்கி பிரைஸ்— Lucky Prize ! 80 கிலோ தங்கம் !
***
துலாபாரம் பிரதமர் மோடி முதல் எல்லோரும் இன்றுவரை செய்யும் சடங்கு ; குருவாயூர் மட்டுமின்றி தமிழ் நாட்டின் பல கோயில்களிலும் துலாபாரம் ‘துலா’க்களை– அதாவது தராசுகளைக் –காணலாம்.
–subham — Lucky Prize
Tags-பிராமணர், அந்தணர், துலாபாரம் இனியவை நாற்பது, பசு தங்கம் தானம், பூரண வர்மன், மூல வர்மன் கல்வெட்டுகள் இந்தோனேஷியா, பூதன் சேந்தன் புத்திமதி, செங்குட்டுவன், மாடல மறையோன்